26.8.09

முதல் பார்வையில் 15

15


பகல் - நளினியின் மசாஜ் பார்லர் - பாஸ்கரும் நளினியும் மசாஜ் அறையில் அமர்ந்திருக்கின்றனர்

பாஸ்கர் - You were really great today Nalini...முதல் நாள விட இன்னைக்கி உன்னோட கையிலருக்கற மாஜிக்க நல்லாவே உணர முடிஞ்சது, தாங்ஸ்... உடம்ப மட்டுமில்லாம மனசையும் நீ மசாஜ் பண்ணிவிட்டா மாதிரி லேசா இருக்கு...

நளினி லேசான புன்னகையுடன் - You are welcome... I think I am really happy inside, maybe after a long time... இன்னைக்கி வந்த எல்லாருமே நீங்க இப்ப சொன்னதத்தான் சொன்னாங்க... நீங்கதான் இன்னைக்கி என்னோட லாஸ்ட கஸ்டமர்... மதியான அஞ்சு மணி வரைக்கும் நா ஃப்ரீதான்.

பாஸ்கர் - Is it? அப்ப எங்கயாச்சும் லஞ்சுக்கு போலாமா? I mean if you don't mind...

நளினி வாய்விட்டு சிரிக்கிறாள் - நமக்குள்ள எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி பாஸ்கர் - எழுந்து நிற்கிறாள் - வாங்க போலாம் - நீங்க எப்படி வந்துருக்கீங்க?

பாஸ்கர் - கார்லதான் - அன்னைக்கி ஸ்கேட்டிங் ரிங்க்ல விழுந்ததுலருந்து டூவீலர கிக் ஸ்டார்ட் பண்ண முடியல. கால்ல லேசா பெய்ன். அதான் வாடகைக்கு கார் எடுத்துருக்கேன்...

நளினி - Then It's OK. இன்னைக்கி மாணிக்கம் அண்ணா வரலை... ஒடம்புக்கு முடியலையாம்... ஆட்டோவுலதான் வந்தேன்... அக்கா வந்து ட்ராப் பண்ணிட்டு போனா.. லஞ்ச் முடிஞ்சி நீங்கதான் வீட்ல ட்ராப் பண்ணிட்டு போணும்...

பாஸ்கர் புன்னகையுடன் - கண்டிப்பா... வா போலாம்...

நளினி - நீங்க முன்னால போய் கார வாசலுக்கு கொண்டுவாங்க..

பாஸ்கர் புறப்பட்டுச் செல்ல நளினி தன் உதவியாளர் துணையுடன் பார்லரை மூடிக்கொண்டு வாசலுக்கு செல்கிறாள்.

...........

பிற்பகல் - பாஸ்கரும் நளினியும் உணவகத்தில் -

பாஸ்கர் - ரொம்ப நல்ல செலக்ஷன் நளினி - It was a wonderful experience - வெறும் சாலட்லயே ஃபுல் லஞ்சையும் முடிச்சிக்க முடியும்கறது ஆச்சரியமான விஷயம்தான்... நிறைய தடவ இங்க வந்துருக்கே போலருக்கு .. இங்க இருக்கற எல்லாருக்குமே உன்னெ தெரிஞ்சிருக்கே?

நளினி புன்னகையுடன் - ஆமா.. Once in a week லஞ்சுக்கு இங்கதான் - Mostly தனியா - எப்பவாச்சும் என் அசிஸ்டெண்ட்சோட - எனக்கு ஃப்ரெண்ட்சுன்னு சொல்லிக்கறா மாதிரி யாரும் இல்லை - அக்காவ தவிர...

நளினியின் குரலில் இருந்த சோகம் அவனை தாக்குகிறது - மேசையின் மீதிருந்த நளினியின் கரங்களை ஆதரவாய் பற்றுகிறான். - நா அந்த சர்க்கிள்ல இன்னும் வரலையா?

பாஸ்கரின் மிருதுவான குரலில் இருந்த பாசம் நளினியை நிலைகுலைய வைக்கிறது - அவளையுமறியாமல் கண்கள் குளமாகின்றன - பாஸ்கர் கரங்களை பற்றி பிசைகிறாள் - You are Bhaskar, you are... ஆனா அக்காவுக்குத்தான் ஒங்க மேல....

பாஸ்கர் - தெரியும் - இன்னைக்கி காலையில அவங்களையும் நீலாவையும் தற்செயலா சந்திச்சேன்.... ஏன்னு தெரியல என்னெ அவாய்ட் பண்றா மாதிரி ஃபீல் பண்ணேன்....

நளினி - தெரியும் - அக்கா ஃபோன் பண்ணா..

பாஸ்கர் - அவங்க உன் மேல வச்சிருக்கற பாசத்தோட வெளிப்பாடுதான் என் மேல இருக்கற சந்தேகம்... அத நா பெரிசா எடுத்துக்கல... I think she is still suspicious... maybe இதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கலாம் - ஒரு கசப்பான அனுபவம் - Am I right?

நளினி சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு - You are right... எங்க ரெண்டு பேரையுமே பாதிக்கிறா மாதிரி கசப்பான அனுபவங்கள் நிறையவே இருக்கு பாஸ்கர் - She had a miserable marriage - I made several wrong choices, I mean of friendships.... அத்தான், I mean, நீலாவோட அப்பா - என்கிட்ட.... இப்ப அதப்பத்தியெல்லாம் பேசி.... Let us not spoil our mood.... இன்னைக்கி எனக்கு மனசுல இருக்கற சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்... என்ன சொல்றீங்க பாஸ்கர்...

பாஸ்கர் புன்னகையுடன் - You're right - கசப்பான அனுபவங்கள் இல்லாத வாழ்க்கையே இல்லை - என்னுடைய சில இழப்புகள மறக்க நினைச்சித்தான் இந்த வெக்கேஷனுக்கே வந்தேன் - நா கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சது மனசுக்கு ஆறுதலா இருக்கு... சந்தோஷமா இருக்கு...

நளினி தயக்கத்துடன் - நா ஒன்னு கேக்கலாமா பாஸ்கர்?

பாஸ்கர் புன்னகைய்டன் - நீ என்ன கேக்கப் போறேன்னு தெரியும் - மல்லிகா நா சொன்னத உன்கிட்ட சொல்வாங்கன்னு தெரியும்.... ஆமா நளினி - I had to shift from our Besant Nagar Guest house - அத்தோட ஆஃபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் - I am under some kind of cloud... என்னோட Integrityய சந்தேகப்படறா மாதிரி சில டைரக்டர்ஸ் பேசினதால சேர்மன் நா சொல்ற வரைக்கும் லீவ்ல இருங்கன்னு சொல்லிட்டார் - என்னோட பதினஞ்சி வருஷ கெரியர்ல இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல இதுவரைக்கும் நா இருந்ததில்ல - I should have been down and out - I mean emotionally - ஆனா உன்னோட ஃப்ரெண்ட்ஷிப் - I am able to get over these emotional setbacks now only because I have someone to listen to me, to share my anxiety...

நளினி - I fully understand your feelings Bhaskar - அக்காவோட சைட்லருந்து பாக்கறப்போ அவளோட ஆக்ஷன்ஸ் நியாயமா பட்டாலும்... அவ சார்புல நா மன்னிப்பு கேட்டுக்கறேன் பாஸ்கர் - She doesn't mean to hurt your fellings... but...

பாஸ்கர் - மன்னிப்புங்கறதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை நளினி - நீ சொல்றா மாதிரி மல்லிகாவோட சைட்லருந்து பாக்கறப்போ அவங்களோட சந்தேகம் ரொம்பவே நியாயமானதுதான்

சில நிமிடங்கள் மவுனத்தில் கரைகின்றன -

பாஸ்கர் - Let us forget it Nalini - எழுந்து நிற்கிறான் - போலாமா? ஒங்கள வீட்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்..

நளினியும் எழுந்து நிற்கிறாள் - நீங்க சொல்றது சரிதான் பாஸ்கர் - Let us forget what has happened...

இருவரும் வெளியேறி காரில் ஏற அடுத்த அரை மணி நேரத்தில் நளினியின் வீட்டை அடைகின்றனர்...

வீட்டு வாசலில் இறங்கியதும் நளினி அவனிடமிருந்து விடைபெறும் நோக்குடன் அவனை நோக்கி தன்னுடைய கரத்தை நீட்டுகிறாள் - மறுபடியும் எப்போ பார்க்கலாம்?

பாஸ்கர் காரிலிருந்து இறங்கி சற்று தயங்குகிறான் - Can I ask you a personal question Nalini?

நளினி சிரிக்கிறாள் - என்ன திடீர்னு பெர்மிஷன் கேக்கறீங்க? அப்படி என்ன கேக்கப் போறீங்க?

பாஸ்கர் மீண்டும் தயங்குகிறான்

நளினி - சும்மா கேளுங்க...

பாஸ்கர் - Can we go inside?

நளினி - சரி... நீங்க தயங்கறதா பார்த்தா ரொம்ப சீரியசான விஷயமாத்தான் இருக்கும் போலருக்கு... வாங்க...

நளினியின் வீட்டுக்கதவை திறக்க பாஸ்கர் சாவியை கேட்கிறான். ஆனால் நளினி புன்னகையுடன் மறுத்துவிட்டு தானே கதவைத் திறந்து உள்ளே நுழைய பாஸ்கர் அவளைத் தொடர்ந்து ஹாலுக்குள் நுழைகிறான். - நளினி சோபாவில் அமர்ந்து பாஸ்கரை நோக்கி திரும்புகிறாள்- சோபாவில் படுத்திருந்த ஸ்வீட்டி வாலை ஆட்டிக்கொண்டு அவளுடைய காலடியில் அமர்கிறது - நளினி அதை பாசத்துடன் தடவுகிறாள் -

நளினி - உக்காருங்க பாஸ்கர்.

பாஸ்கர் நளினிக்கு எதிரே அமர்கிறான் - சீரியசா ஒன்னுமில்ல... உன்னோட மெடிக்கல் ஹிஸ்டரி இருந்தா பாக்கலாமேன்னுதான்...

நளினியின் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை பார்த்த பாஸ்கர் - தப்பா நினைக்காதே நளினி - I just thought...

நளினி - சோகத்துடன் அவனை நோக்கி திரும்புகிறாள் - அவளுடைய முகத்தில் ஒருவித வேதனை தெரிவதைப் பாஸ்கர் பார்க்கிறான்

நளினி - வேணாம் பாஸ்கர் - இன்னைக்கி நா ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்... Don't spoil that -

பாஸ்கர் மெள்ள எழுந்து நிற்கிறான் - I understand... It's OK... அப்போ நா வரேன்... பை...

நளினியும் எழுந்து நிற்கிறாள் - அவனை நெருங்கி அவனுடைய கரத்தைப் பற்றுகிறாள் - பிறகு மெள்ள நெருங்கி அவனை அணைத்துக்கொள்கிறாள் - இதை எதிர்பாராத பாஸ்கர் செய்வதறியாது நிற்கிறான் -

சில நிமிடங்கள் இருவரும் அணைத்தபடியே நிற்கின்றனர் - தரையில் படுத்திருந்த ஸ்வீட்டி அவர்களை சோகத்துடன் பார்க்கிறது

பிறகு நளினி அவனிடமிருந்து பிரிந்து தன்னுடைய காலடிகளை கணக்கிட்டவாறே தன் அறைக்குள் நுழைகிறாள் - பாஸ்கர் வெளியேறுவதா, வேண்டமா என்ற தயக்கத்துடன் வாசலை நோக்கி நகர்கிறான் - one second Bhaskar என்ற நளினியின் குரல் அவனை தடுத்து நிறுத்துகிறது..

ஒரு சில நிமிடங்களில் அறையை விட்டு வெளியில் வரும் நளினி அவனை நெருங்குகிறாள் - அவள் வரும் பாதையில் இருந்த எந்த பொருளிலும் இடித்துக்கொள்ளாமல் தன்னை நோக்கி வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நிற்கிறான் பாஸ்கர்...

நளினி அவனை நெருங்கியதும் பாஸ்கர் ஆச்சரியத்துடன் - It's amazing Nalini - You walk like a ballet dancer - எப்படி நளினி?

நளினி புன்னகையுடன் அவனை நெருங்கி தன் கையில் இருந்த ஒரு கோப்பை அவனிடம் நீட்டுகிறாள் - பாஸ்கர் தயக்கத்துடன் அதை பெற்றுக்கொள்கிறான்...

நளினி - தாங்ஸ் பாஸ்கர் - இதுதான் என்னோட உலகம். இந்த வீட்டோட ஒவ்வொரு மூலையும், முடுக்கும் எனக்கு அத்துப்படி, எல்லாமே ஒரு மெஷர்மெண்ட்தான். ஹால்லருந்து டைனிங் டேபிள், அத சுத்தி இருக்கற சேர்ஸ், அங்கருந்து ஃப்ரிட்ஜ், அப்புறம் கிச்சன், என் பெட்ரூம், எல்லாத்தையும் அளந்து வச்சிருக்கேன். என்னோட ஸ்டெப்ஸ்ல ஒன்னு மிஸ் ஆனாலும் I will go bang on the wall or trip on something. அதே மாதிரிதான் என்னோட பார்லர்லயும், ஸ்கேட்டிங் ர்ங்க்லயும். எனக்கு பழக்கமில்லாத இடத்துக்கு போறப்ப மட்டுந்தான் என்னோட ஸ்டிக்க யூஸ் பண்ணுவேன்...

பாஸ்கர் - நீ சொல்றப்ப ஈசியா இருக்கு. ஆனா ஒருதரம் நானும் அப்படி ட்ரை பண்ணியிருக்கேன். கால் தடுக்கி விழுந்து நெத்தியில அடிப்பட்டதுதான் மிச்சம்.

நளினி சிரிக்கிறாள் - அப்படியா? ஏன் என் கிட்ட சொல்லல? இப்ப எப்படி இருக்கு?

பாஸ்கர் - நோ, நோ, சின்ன காயம்தான்.. ஒரே நாள்ல சரியாயிருச்சி

நளினி - சரி... இந்த ஃபைல வச்சி என்ன பண்ண போறீங்க பாஸ்கர்?

பாஸ்கர் தயக்கத்துடன் தன் கையிலிருந்த கோப்பை புரட்டுகிறான் - I am not sure.. சென்னையில இருக்கற நேத்ராலயா டாக்டர்ஸ் சிலபேர எனக்கு நல்லா தெரியும்னு என்னோட கொல்லீக் ஒருத்தர்

நளினி - கோபத்துடன் இடைமறிக்கிறாள் - அப்ப என்னெ பத்தி நீங்க அவர்கிட்ட டிஸ்கஸ் செஞ்சிருக்கீங்க? அதாவது என்னோட பர்மிஷன் இல்லாம - I did not expect this from you Bhaskar..

அவளுடைய முகத்திலும் குரலிலும் தெறித்த கோபத்தில் ஒரு கணம் திகைத்துப்போனான் பாஸ்கர்.

பாஸ்கர் - I am really sorry Nalini.... இது உங்கள இந்த அளவுக்கு பாதிக்கும்னு நா.... I just wanted to solve your problem...

நளினி - நா ப்ராப்ளத்துல இருக்கேன்னு யார் ஒங்ககிட்ட சொன்னது?

பாஸ்கர் - எப்படி பதிலளிப்பதென தெரியாமல் திகைத்து நிற்கிறான். பிறகு சமாளித்துக்கொண்டு கையிலிருந்த கோப்பை சோபாவில் வைக்கிறான். - I am once again sorry Nalini. நீங்க குடுத்த ஃபைல சோபாவில வச்சிட்டேன். இன்னொரு நாளைக்கி என் மனசுல இருக்கறத சொல்றேன் - Don't be upset - நா வறேன் - பை.

பாஸ்கர் வாசலை நோக்கி நகர்வதை உணர்ந்த நளினி அவனை நோக்கி விரைகிறாள் - ஸ்வீட்டியும் திடீரென உணர்ச்சிவசப்பட்டு எழுந்து பாஸ்கரை நோக்கி குரைத்தவாறே அவனை நெருங்குகிறது - இதை உணராத நளினி அதன் மீது மோதி நிலைதடுமாறி விழ பாஸ்கர் அவளை நெருங்கி பிடித்துக்கொள்கிறான்.

நளினி அவன் மீது சாய்ந்தவாறே அழுகிறாள் - பாஸ்கர் செய்வதறியாது திகைத்து நிற்கிறான் - ஸ்வீட்டி தொடர்ந்து குரைக்கிறது..


தொடரும்...

25.8.09

என் கடவுள், உன் கடவுள்.. (சிறுகதை)

'என்னப்பா நா சொல்லிக்கிட்டேயிருக்கேன் நீங்க ஒன்னும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க?'

ராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'நா என்ன சொல்லணுங்கறே?'

'உங்களுக்கு இந்த வீட்ல நடக்கற விஷயத்துல ஏதாச்சும் அக்கறை இருக்கா இல்லையா?'

'இல்லாம என்ன?'

'அப்ப ஏதாச்சும் சொல்லுங்க.'

'என்னத்த சொல்ல சொல்றே? நீ ராணிய வீட்ட விட்டு போகச் சொன்னத சரின்னு சொல்ல சொல்றியா? இல்ல நேத்து அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அவள தள்ளி வச்சிரலாம்னு முடிவு பண்ணீங்களே அத சரின்னு சொல்ல சொல்றியா?'

'அப்ப ரெண்டுமே தப்புன்னு சொல்றீங்களா?'

ராமனாதன் மவுனமாக இருந்தார்.

'என்னப்பா பதிலையே காணம்?'

'மவுனம் ஆமாங்கறதுக்கு அறிகுறி. நீ இதுவரைக்கும் செஞ்சது எல்லாமே தப்பு மட்டுமில்ல. முட்டாள்தனம், சிறுபிள்ளைத்தனம் இன்னும் என்னென்னவோ சொல்லலாம். ஆனா நீயும் ஒத்துக்க மாட்டே... ஒங்க அம்மாவும் ஒத்துக்க மாட்டா. அதான் வாயிருந்தும் ஊமையா இருக்கேன்.'

மணி தன் தந்தையை எரித்துவிடுவதுபோல் பார்த்தான்.

'என்னடா அப்படி பாக்கறே? சரி.. அத விடு. நா ஒன்னு கேக்கறேன். என்ன திடீர்னு ஒனக்கு கடவுள் மேல பக்தி?'

'என்ன உளர்றீங்க?'

'நா உளர்றனா? அந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு முன்னால நீ என்னைக்காவது கோயிலுக்கு போயிருக்கியாடா? நா அப்பா மாதிரி. கடவுள் எல்லாம் தேவை இருக்கறவங்களுக்கு மட்டுந்தான், எனக்கு எதுவும் தேவையில்ல. அதனால கோயிலுக்கு போயிதான் சாமி கும்புடணும்னு இல்லைன்னு ஒங்கம்மாக்கிட்ட லெக்சர் அடிப்பியே... இப்ப என்ன திடீர்னு..'

அவருடைய கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மவுனமாக அமர்ந்திருந்தான் மணி.

'ஒன்னால பதில் சொல்ல முடியாதுடா... ஏன்னா நீ ஒரு முடவாதம் புடிச்சவன். அந்த பொண்ணு ஒரு கிறிஸ்துவ பொண்ணுன்னு தெரிஞ்சதுமே இது நமக்கு சரிவராதுன்னு சொன்னேன். அது மட்டுமில்லாம அது கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு நுனி நாக்குல இங்ககிலீஷ் பேசிக்கிட்டிருக்கற பொண்ணு. அவங்க குடும்பமும் அப்படித்தான். படிக்காத தற்குறிங்கறதால என்னையும் ஒங்கம்மாவையும் அவிங்க மதிக்கமாட்டாங்கன்னு நா சொன்னப்ப அவ என்னெ மதிச்சா போறும்னு எவ்வளவு திமிரா சொன்னே? இருந்தாலும் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்த இந்த ஒரு வருசத்துல என்னைக்காவது என்னையும் ஒங்கம்மாவையும் மதிக்காம இருந்துருக்காளாடா? நமக்காக அவ சுத்த சைவமா கூட மாறிட்டாளேடா... சரி... அதையும் விடு... பூஜை ரூம் சுவர் தெரியாம ஊர்லருக்கற சாமி படத்தையெல்லாம் ஒங்கம்மா மாட்டி வச்சிருக்கா. ஆனா ஒரே ஒரு ஜீசஸ் படத்த ஒங்க ரூம்ல மாட்டிக்கறேங்கன்னு அந்த பொண்ணு சொன்னப்ப நீயும் ஒங்கம்மாவும் சேந்துக்கிட்டு என்ன குதி குதிச்சீங்க? அதையும் பெரிசு பண்ணாம விட்டுட்டு சகஜமா பழகிக்கிட்டிருந்த பொண்ணுதானடா அது? வீட்டுக்கு வந்த முதல் வாரமே ஒங்கம்மா அவள கோவிலுக்கு கூப்டப்போ 'சாரி மாமி மன்னிச்சிருங்க'ன்னு சொன்னத நீயும் கேட்டுக்கிட்டுத்தான இருந்தே? 'அவளுக்கு இஷ்டமில்லன்னா விட்டுருங்கம்மான்னு நீயுந்தான சொன்னே?' இப்ப திடீர்னு நம்ம சாமீ மேல நம்பிக்கையில்லாதக் கூட குடும்பம் நடத்தி பிரயோஜனம் இல்லேன்னு பல்டி அடிக்கறே? சாமியே இல்லைன்னு சொன்னவனுக்கு திடீர்னு என்னடா நம்ம சாமி, உங்க சாமின்னு....'

தந்தையின் சரமாரியான குற்றச்சாட்டை எதிர்பார்க்காத மணி வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான்.

'இங்க பார்றா... காதலிச்சப்பவும் கல்யாணம் பண்ணிக்கறப்பவும் தெரியாத கடவுள் இப்ப ஏன் புதுசா வந்துருக்குன்னு நா கேக்கேன், ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாள்... அவ கலரும், அழகும் ஒனக்கு புடிச்சிருந்தப்ப அவ யாரா இருந்தாலும் பரவால்லைன்னு தோனிச்சி. இப்ப அதையே ஒரு வருசமா அனுபவிச்சாச்சு இப்ப கழட்டி விட்டுட்டா என்னன்னு தோணுது...'

'உளறாதீங்கப்பா...'

'டேய் குரல ஒசத்தி கத்துனா நா சொல்றது இல்லேன்னு ஆயிருமா... நா சொல்றது பொய்யின்னு நீ நிரூபி.'

'எப்படி?'

'போயி அவளோட குடும்பம் நடத்து.'

'அது மட்டும் முடியாது.'

'அப்ப நா சொல்றது சரின்னு ஒத்துக்க.'

மணி எழுந்து நின்றான். 'இங்க பாருங்கப்பா... அம்மா ஊர்ல இல்லேங்கற தைரியத்துலதான இப்படியெல்லாம் லெக்சர் அடிக்கறீங்க? நாளைக்கு அவங்க ஊர்லருந்து வரட்டும், பேசிக்கலாம்.'

ராமனாதன் சிரித்தார். 'போடா முட்டாள். ஒங்கம்மாவுக்கு பயந்துக்கிட்டு நா வாய் மூடிக்கிட்டு இருக்கல... வீட்ல பிரச்சினை பண்ண் வேண்டாமேன்னுதான் பேசாம இருக்கேன். ஊர்லருக்கற நிறைய பொம்பளைங்க ஒங்கம்மா மாதிரிதான். ஆம்பிளைங்க வாய மூடிக்கிட்டு இருந்தா அவங்களுக்கு பயந்துக்கிட்டிருக்காங்கன்னு நினைக்கறாங்க. ஆனா குடும்பத்துல நிம்மதி இருக்கணும், குடும்பச் சண்டை சந்திக்கி வந்துறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துலதான் ஆம்பிளைங்க பெரும்பாலும் சண்டித்தனம் பண்ற பொம்பிளைங்க சகிச்சிக்கிறாங்கறத புரிஞ்சிக்கறதுல்ல.. சரி ஒங்கம்மா எதுக்கு ஊருக்கு கிளம்பி போயிருக்கான்னு தெரியுமா?'

'எதுக்கு?'

'தெரிஞ்சிதான் கேக்கியா? இல்ல உண்மையிலயே ஒனக்கு தெரியாதா?'

'என்னப்பா கிண்டலா? எனக்கு உண்மையிலயே தெரியாது.'

'ஒனக்கு பொண்ணு பாக்கத்தான் போயிருக்கா.'

மணி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான். 'என்னப்பா சொல்றீங்க? எனக்கு பொண்ணு பாக்கவா?'

'ஆமாடா... அதுமட்டுமில்ல... ஒனக்கு கல்யாணம் ஆனத ஊர்ல யாருக்கும் சொல்ல வேணாம்னு ஒங்கம்மா சொன்னது நினைவிருக்குல்ல?'

'ஆமா..'

'அது இதுக்குத்தான். என்னைக்கிருந்தாலும் எம்மவன் அந்த கிருஸ்துவ சிறுக்கிய விட்டுப்போட்டு வந்துருவான் நீங்க வேணும்னா பாருங்கன்னு நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்லருந்தே ஒங்கம்மா சொல்லிக்கிட்டேதான் இருந்தா... இப்ப அத நடத்திக்காட்டலாம்கற முடிவோட போயிருக்கா.'

மணி என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தான்.

'என்னடா பதிலையே காணம்?'

மணி தயக்கத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். 'இல்ல... ராணிய டைவர்ஸ் பண்ணாம இன்னொரு கல்யாணம் எப்படின்னு....'

'அடப்பாவி அதான் ஒன் தயக்கத்துக்கு காரணமா? அப்ப அந்த பொண்ண தள்ளி வைக்கறதுன்னே தீர்மானம் பண்ணிட்டியா?'

'என்னப்பா தள்ளி வைக்கறதுன்னு அசிங்கமா சொல்றீங்க? நா அவள விவாகரத்து பண்ணிறலாம்னுல்ல சொல்றேன்?'

'அதுக்கு கோர்ட்டுக்கு போணும்ல?'

'ஆமா...'

'அங்க என்ன காரணம்னு கேப்பாங்களே, என்ன சொல்லப் போற?'

தன் மனதிலுள்ளதை எப்படி சொல்வதென தெரியாமல் அவரை பார்த்தான்... சொன்னா இவர் எப்படி ரியாக்ட பண்ணுவாருன்னு தெரியலையே என்று யோசித்தான்.

'அவ கிறிஸ்ட்டினு நா ஹிந்து, ஒத்துவரலைன்னு சொன்னா கோர்ட்ல ஒத்துக்குவாங்களா? இல்ல நேத்து ஒங்கம்மா ஒரு யோசனை சொன்னாளே அதுமாதிரி சொல்லப் போறியா?'

மனுஷனுக்கு பாம்பு காது... நேத்து ராத்திரி நாம பேசிக்கிட்டிருந்ததையெல்லாம் ஒட்டுக்கேட்டுட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி கேள்விக் கேக்கறதப் பாரு... எல்லாம் அம்மா இல்லங்கற தைரியம்... 'அதான் கேட்டுட்டீங்க இல்ல. பிறகென்ன கேள்வி?'

ராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'டேய் நா கேட்ட கேள்விக்கு ஆமா இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு. ஒங்கம்மா சொன்னமாதிரிதான் சொல்லப் போறியா?'

'ஆமான்னுதான் வச்சிக்குங்களேன்.'

'ஒங்கூட ஒரு வருசமா குடும்பம் நடத்துன ஒரு பொண்ணெ நடத்த கெட்டவன்னு கூசாம ஒங்கம்மா சொல்லச் சொல்றா அதுக்கு நீயும் சரின்னு ஒத்துக்கறே. படிச்சவந்தானே நீ? வெக்கமாயில்ல? சரி... இப்ப நா சொல்றத கொஞ்சம் கேளு.. காலையில சித்த வெளிய போய்ட்டு வரேன்னு சொலிட்டு போனேனே எங்க போனேன்னு தெரியுமா?'

'ஆமா... கேட்டா அப்புறம் சொல்றேன்னு சொன்னீங்க? சரி நமக்கென்ன வந்துதுன்னு விட்டுட்டேன்...'

'இப்ப சொல்றேன்.. ராணி வீட்டுக்குத்தான் போயிருந்தேன்.'

மணி எரிந்து விழுந்தான். 'அங்க எதுக்கு போனீங்க? அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆவும்னு தெரியுமா?'

ராமனாதன் சிரித்தார். 'ராணி முழுவாம இருக்காளாம். அர்ஜண்ட கொஞ்சம் வாங்க மாமான்னு அவதான் ஃபோன் பண்ணியிருந்தா.. அதான் போய் பார்த்துட்டு வந்தேன். இப்ப என்னப் பண்ணுவா ஒங்கம்மா?'

மணி அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தான். 'உண்மையாவா சொல்றீங்க?'

'ஏன் அதிர்ச்சியா இருக்கா? இன்னொன்னையும் கேளு.'

'என்ன?'

'சம்பந்தியம்மாவுக்கு ராணிய மறுபடியும் உங்கூட வாழவைக்க முடியுங்கற நம்பிக்கையில்லையாம். அதனால....'

'அதனால? நாங்களே டைவர்ஸ் பண்ணிருவோம்னு மிரட்டறாங்களா?'

'இல்லடா முட்டாள். கர்ப்பத்த கலைச்சிருன்னு ராணிய சம்பந்தியம்மா நிர்பந்திக்கிறாங்களாம். என்னால முடியாது நீங்க கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லுங்க மாமான்னு அழுவுது அந்த பொண்ணு. என்னைக்காவது நீ மனசு மாறி அவள ஏத்துப்பேன்னு அந்த பொண்ணு நினைச்சிக்கிட்டிருக்கு... நீ என்னடான்னா..'

'..........'

'என்னடா பதிலையே காணம்? அவ புள்ளைய பெத்து எடுக்கறவரைக்கும் விவாகரத்து கிடைக்காது, தெரியுமில்ல?'

மணி பரிதாபமாக தன் தந்தையைப் பார்த்தான்.

'என்னடா... அப்படி பார்த்தா என்ன அர்த்தம்?'

'இப்ப என்னப்பா பண்றது?'

'அப்படி கேளு... ஆனா நா சொல்றாப்பல நீ செய்யிறதா இருந்தா சொல்லு... இல்லன்னா அந்த பொண்ணு கர்ப்பத்த கலைக்கறத தவிர வேற வழியில்ல. என்ன சொல்றே?'

'..........'

'சரி... நீ சைலண்டா இருக்கறதே சரிங்கறா மாதிரிதான். இப்பவே கிளம்பு.'

'எங்க?'

'நா வீட்டுக்கு வர்ற வழியிலயே தரகர் ஒருத்தர பார்த்து சின்னதா ஒரு வீட்ட பேசி முடிச்சிட்டுத்தான் வந்தேன். சம்பந்தியம்மாக்கிட்ட கூட பேசி சம்மதம் வாங்கிட்டேன். ராணிக்குக் கூட விஷயம் தெரியாது.'

'அதெப்படிப்பா. அவ நாம கும்பிடற சாமிய ஏத்துக்கமாட்டா. அப்புறம் நான் மாத்தறம் எதுக்காம்?'

'டேய் அதுக்கு காரணம் இருக்கு. கிறிஸ்தவங்களுக்கு அவங்க கும்புடற கடவுள்தான் உண்மையான கடவுள்ங்கற நினைப்பு. அதனால மத்த தெய்வங்கள கும்புடக்கூடாது, அவங்க கோவில்களுக்கு போகக் கூடாதுன்னு நினைக்கறாங்க. ஆனா நாம அப்படியில்ல. எல்லா சாமியும் ஒன்னுதான்னு நினைக்கோம். அதனாலதான் நம்மளால எல்லா கோவிலுக்கும் போகவும் முடியுது, சாமிய கும்புடவும் முடியுது. இன்னைக்கி இந்துக்க பெரும்பாலானவங்க வாழற நம்ம நாட்டுல மத்த மதத்த சேர்ந்தவங்களும் நிம்மதியா வாழறாங்கன்னா அது இந்துக்களுடைய இந்த எல்லா தெய்வங்களையும் ஏத்துக்கற குணம்தாண்டா. அந்த குணம் ஊர்ல மட்டுமில்ல வீடுகள்லயும் இருக்கணும். நம்ம நாட்ல மனுஷங்கள பிரிக்கிறதே இந்த தெய்வ நம்பிக்கைதாண்டா. அதுக்காகத்தான் அப்படிப்பட்ட அந்த கடவுளே நமக்கு தேவையில்லைன்னு என்னெ மாதிரி சிலபேர் தூக்கி வீசிட்டோம். அதனாலதான் சொல்றேன் நீ ராணிய தள்ளி வைக்கறதுக்கு நீ கும்புடற சாமி மேல பழிய போடாத. அவ எந்த சாமிய கும்புடறாங்கறதுல்ல இப்ப முக்கியம் உங்கிட்ட அன்பா, அனுசரனையா நடந்துக்கறாளாங்கறதுதான் முக்கியம். அந்த விஷயத்துல ராணி ஒரு அப்பழுக்கில்லாத பொண்ணுடா. வாயும் வயிறுமா இருக்கற ஒரு பொண்ண தள்ளி வைக்கணும், விவாகரத்து பண்ணனும் நினைக்கறது பாவம்டா.'

'அதெல்லாம் சரிப்பா... ஆனா அம்மா வந்து ஏதாச்சும் பிரச்சினை பண்ணா?'

ராமனாதன் எரிச்சலுடன். ' ஒங்கம்மாவ நா பாத்துக்கறேன்.. ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துருச்சுன்னா ஒங்கம்மா அடங்கிருவா. நீ கொஞ்ச நாளைக்கி ஒங்கம்மாவ விட்டு பிரிஞ்சி இருக்கறதுதான் நல்லதுன்னு நா நினைக்கேன். நீ இருக்கற விட்டு விலாசம் கூட ஒங்கம்மாவுக்கு இப்போதைக்கி தெரிய வேணாம். ஒனக்கு இப்பத்தைக்கி என்னென்ன சாமான், செட்டு வேணுமோ எடுத்துக்கோ. நா போயி ஒரு வண்டிய புடிச்சாறன்.' என்று கூறிவிட்டு எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடக்க அவர் தெருக்கோடியில் சென்று மறையும் வரை வாசலில் நின்றிருந்த மணி தன் அறைக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த ஆடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.

********

21.8.09

முதல் பார்வையில் 14

மாலை - நளினியின் வீடு - வரவேற்பறை - பாஸ்கர் சோபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது தன் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறான் - சற்று தள்ளி நளினி - பின்புறத்தில் மெல்லிய இசை

பாஸ்கர் - அம்மா இறக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலதான் எனக்கும் ரேவதிக்கும் டைவர்ஸ் ஆயிருந்தது... அத தடுக்கறதுக்கு அம்மா எவ்வளவோ ட்ரை பண்ணாங்க, ஆனா ரேவதிக்கிட்ட அவமானப்பட்டதுதான் மிச்சம். அவங்களால எங்க டைவர்ச டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியல கடைசி வரைக்கும் - அத்தோட என் மூனு வயசு டாட்டரும் அவங்களும் ரொம்பவும் க்ளோசா இருந்தாங்க - அவள இனி பாக்கவே முடியாம போயிருமோங்கற ஏக்கம் வேற அவங்கள ரொம்பவே பாதிச்சிருச்சின்னு நினைக்கறேன்...

நளினி எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் மவுனமாயிருக்க பாஸ்கர் தொடர்கிறான்...

பாஸ்கர் - என்னோட பேரண்ட்ஸ் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பொருத்தமில்லையோ அதே மாதிரிதான் நானும் ரேவதியும்.

நளினி - ஏன் அப்படி சொல்றீங்க?

பாஸ்கர் - She is highly ambitious... தோல்விய ஏத்துக்கவே முடியாத அளவுக்கு ambitious - நானும் அவளும் ஒரே பேட்ச்மேட்ஸ் - அதாவது ஒரே டேட்ல ப்ரொபேஷனரி ஆஃபீசர்சா பேங்க்ல சேர்ந்தோம் - அவளோட பேச்சுத் திறமைய பார்த்து, மயங்கி லவ் பண்ணி என் அப்பாவ எதிர்த்துக்கிட்டு போயி அவள ரிஜிஸ்தர் மேரேஜ் செஞ்சிக்கிட்டேன் - It was a huge emotional blow for my Dad - He just could not accept the fact that someone in his own family could challenge him - அடுத்த ரெண்டு நாள்லயே இதே நினைப்புல கார ஓட்டிக்கிட்டு போயி ஒரு மேஜர் ஆக்சிடெண்ட்ல ஸ்பாட்லயே....

நளினி - கலக்கத்துடன் - போறும் பாஸ்கர் - I never thought you would have gone through so much of pain in your life - நாந்தான் இந்த உலகத்துலயே பெரிய துரதிர்ஷ்டசாலின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்...

பாஸ்கர் - துரதிர்ஷ்டசாலின்னு இந்த உலகத்துல யாரும் இல்ல நளினி - யாருக்கு வேணும்னாலும் நல்லதும் நடக்கலாம் கெட்டதும் நடக்கலாம் - நல்லது நடக்கறப்ப நாம அதிர்ஷ்டசாலின்னோ இல்ல கெட்டது நடக்கறப்ப துரதிர்ஷ்டசாலின்னோ நினைச்சி நம்மள நாமளே தேத்திக்கிறோம் - That's quite natural - அதுமாதிரிதான் நீ சொல்றதும் - Let me complete what I started, I mean if you are still interested..

நளினி - என்ன பாஸ்கர் இப்படி கேட்டுட்டீங்க - Of course I am interested... நீங்க சொல்லுங்க...

பாஸ்கர் - தாங்ஸ் - எனக்கும் ரேவதிக்கும் மேரேஜ் நடந்ததே ஒரு விபத்து மாதிரிதான் - எதிரெதிர் துருவங்க ஒன்னா சேந்தது மாதிரி - அப்பாவோட சடன் டெத் எங்க ரெண்டு பேரையுமே ஒரு உலுக்கு உலுக்கத்தான் செஞ்சிது - தனியா இருக்க வேணாம் அம்மா கூட சேர்ந்து இருப்போம்னு நா சொன்னப்ப சரின்னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்துட்டா - அம்மாவுக்கும் அவளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்லன்னா கூட எல்லா குடும்பத்துலயும் நடக்கறதுதானேன்னு நா பெரிசா எடுத்துக்கல - எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கூட அப்பப்ப difference of opinion வந்துக்கிட்டேதான் இருக்கும் ஆனா அதுவும் கூட எல்லா குடும்பத்துலயும் நடக்கற சின்ன, சின்ன சச்சரவுங்கதான். அவ எம்.பி.ஏ (எச்.ஆர்)ங்கறதால ஆரம்ப முதலே எங்க ஹெட் ஆபீஸ்ல இருக்கற எச்.ஆர். செல்லதான் இருந்தா - ஆனா நா எம்.பி.ஏ (ஃபைனான்ஸ்). அதனால என்னோட கெரியர்ல பாதிக்கும் மேல பிராஞ்சஸ்லதான் இருந்தேன் - ஆனா லக்கிலி என்னுடைய போஸ்டிங்ஸ் எல்லாமே மும்பை சிட்டி, இல்லன்னா பக்கத்துலருக்கற பூனேன்னு We were never separated. ரேவதி highly career mindedஆ இருந்ததால ஒரு குழந்தை வேணுங்கற எண்ணமே அவளுக்கு இருக்கல - மேரேஜ் ஆயி ஏறக்குறைய பத்து வருசம் கழிச்சிதான் ஷாலிமா பொறந்தா - பேருக்குத்தான் ரேவதி அம்மாவே தவிர அவள வளர்த்தது என்னோட அம்மாதான் - ரேவதிக்கு எங்க எச்.ஆர் டிபார்ட்மெண்டோட டாப் பொசிஷன ரீச் பண்ணனுங்கறதுதான் ஒரே ஏய்ம். அதுக்காக எதையும் இழக்க அவ தயாராயிருந்தா - அவளோட அந்த வெறிய பாக்கறப்போ எனக்கு பயமா இருக்கும் - ஏஜிஎம் லெவல் வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல ப்ரொமோஷன் கிடைச்சதையே அவளால ஜீரணிச்சிக்க முடியல. she somehow felt that I was being promoted only because I am her husband - எனக்கு மட்டும் ப்ரொமோஷன் குடுத்துட்டு உங்களுக்கு குடுக்கலன்ன நம்ம குடும்பத்துல பிரச்சினை வந்துரும்னு நினைச்சித்தான் உங்களுக்கும் ப்ரொமோஷன் குடுக்கறாங்க தெரியுமான்னு வெளிப்படையாவே கிண்டல் பண்ணுவா - I knew what I am. அதனால அவளோட tauntsஐ நா பெரிசா எடுத்துக்கறதில்ல - ஆனா கடைசியா டிஜிஎம் ப்ரோமஷன் இண்டர்வியூவுக்கு கால் லெட்டர் வந்தப்ப முதல்ல ரேவதி 'நா இண்டர்வியூவுக்கு வரலை பாஸ்கர்னு' சொன்னா. நான் கம்பெல் பண்ணி அட்டெண்ட் பண்ண வச்சேன். அதான் நா செஞ்ச தப்பு. இண்டர்வியூல எனக்கு ப்ரொமோஷன் ஆச்சி. அவளுக்கு ஆகல. அப்புறந்தான் தெரிஞ்சது அவளுக்கு அந்த வருஷத்து இண்டெர்னல் ரிவியூவில அவளோட பாஸ் வேணும்னே மார்க்க குறைச்சிட்டார்னு - அதுவே எங்களோட ரிலேஷன்ஷிப்ல விரிசல் விழறதுக்கு காரணமாயிருச்சி. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆர்க்யூமெண்ட்ஸ்னு ஆரம்பிச்சி, அம்மா கூட இருக்க பிடிக்கல நா வேணும்னா என்னோட வாங்க இல்லன்னா நீங்க ஒங்க அம்மா கூடவே இருந்துக்குங்க நா போறேன்னு சொல்லிட்டு என் டாட்டர தூக்கிக்கிட்டு வீட்ட விட்டு போய்ட்டா - சரி போகட்டும் கோபம் குறைஞ்சதும் வருவான்னு நினைச்சி நானும் அம்மா கூடவே இருந்துட்டேன் - அவ வரவேயில்ல - ஒரு மாசம் கழிச்சி டைவர்ஸ் நோட்டீஸ்தான் வந்துது

வாசற் கதவைத் திறந்துக்கொண்டு மல்லிகா நுழைகிறாள் - சோபாவில் அமர்ந்திருந்த பாஸ்கர் டீப்பாயிலிருந்த கால்களை இறக்கிக்கொள்கிறான் - சோபாவிலிருந்து எழுந்து மல்லிகாவைப் பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் நிற்கிறான் - மல்லிகா அவனைக் கண்டுக்கொள்ளாமல் விலகியிருந்த டீப்பாயை அதன் பழைய இடத்தில் வைத்துவிட்டு முனுமுனுக்கிறாள் - 'தயவு செஞ்சி எந்த பொருளையும் அது இருக்கற இடத்துலருந்து மாத்தாதீங்க'

அவளுடைய குரலில் இருந்த எரிச்சலை எதிர்பாராத பாஸ்கர் திடுக்கிட்டு 'சாரி மேடம்... I didn't realise it.' என்கிறான்.

நளினிக்கும் மல்லிகாவின் குரலிலிருந்த கோபம் பிடிக்கவில்லை என்பது அவளுடைய முகம் போன போக்கிலிருந்தே தெரிகிறது - என்னக்கா நீ வந்ததும் வராததுமா.. அவர் என்ன வேணும்னா செஞ்சார்?

மல்லிகா - இங்க பார் நளினி நா மனசுல பட்டத சொன்னேன் - அவருக்கு தெரியலங்கறத தெரிஞ்சிக்கிட்டுத்தான் சொன்னேன்.

பாஸ்கர் - It's Ok Nalini - இதுதான் நா கத்துக்க வேண்டிய முதல் பாடம் - Don't move things - தாங்ஸ் மேடம்.

மல்லிகா ஒரு லேசான புன்னகையுடன் பாஸ்கரை பார்க்கிறாள் - (தனக்குள்) இவன் பயங்கரமான ஆள்... அடிபட்டாலும் சிரிக்கிற ஆள். ஜாக்கிரதையா இருக்கணும் - என்னெ நீங்க மல்லிகான்னே கூப்பிடலாம், மேடம்னு சொன்னா என்னவோ மாதிரி இருக்கு -

பாஸ்கர் புன்னகையுடன் - சரி மல்லிகா - நீங்களும் என்னெ பாஸ்கர்னே கூப்பிடலாம் - நளினியை பார்க்கிறான் - ஓக்கே பை நளினி - நாளைக்கி நானும் பார்லர்ல அப்பாய்ண்ட்மெண்ட் எடுத்திருக்கேன் அங்க வச்சி பாக்கலாமா?

நளினி - சரி பாஸ்கர் - பை..
...........

பகல் - ஸ்பென்சர் சூப்பர் மார்க்கெட், கோடம்பாக்கம்

பாஸ்கர் அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டிருக்கிறான்.

அதே கடையில் மல்லிகாவும் அவளுடைய இளைய மகள் நீலாவும்... பாஸ்கர் அவர்களை கவனிக்கவில்லை.

மல்லிகா பாஸ்கரைப் பார்த்தும் பார்க்காததுபோல் ஷெல்ஃபில் இருந்த பொருட்களை பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறாள். நீலா பாஸ்கரைப் பார்த்ததும் 'அம்மா அங்க பார் அந்த அங்கிள்' என்று கிசுகிசுக்கிறாள் 'ஏய் தெரியும்... சும்மா இரு' என்று அதட்டுகிறாள் மல்லிகா. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பாஸ்கரிடம் ஓடுகிறாள்.

நீலா - ஹாய் அங்கிள்... என்னெ தெரியுதா?

பாஸ்கர் - திடுக்கிட்டு அவளைப் பார்க்கிறான் - ஹாய் நீலா... சுற்றிலும் பார்க்கிறான் - நீ தனியாவா வந்தே?

நீலா - இல்லையே அம்மா அங்க நிக்கிறாங்க - (குரலை தாழ்த்தி) ஆனா ஒங்கள பார்த்தும் பாக்காத மாதிரி நடிக்கிறாங்க பாருங்க (சிரிகிறாள்) - அவங்களூக்கு ஒங்கள அவ்வளவா பிடிக்கல அங்கிள்.

பாஸ்கர் புன்னகையுடன் - அதெப்படி ஒனக்கு தெரியும்?

மல்லிகா அப்போதுதான் அவனைப் பார்த்ததுபோல் அவர்களை நெருங்கி தன் மகளை பார்த்து முறைக்கிறாள்.

பாஸ்கர் - நீங்க எங்க இங்க....

மல்லிகா - அது நா கேக்க வேண்டிய கேள்வி. நாங்க இங்கதான் குடியிருக்கோம்...

நீலா - உடனே கடகடவென - யூ.ஐ.காலனி 2ண்ட் மெயின் ரோட்.. அப்சரா அப்பார்ட்மெண்ட்ஸ் ஃப்ளேட் நம்பர் 10 2ண்ட் ஃப்ளோர்.

மல்லிகா - ஏய்... ஒன்னெ அவர் கேட்டாரா?

பாஸ்கர் - நானும் இங்கதான் ஃபர்ஸ்ட் மெய்ன் ரோட்... சன் ரைஸ் ஆப்ஸ்... நேத்து ஈவ்னிங்ல இருந்து...

மல்லிகா - நீங்க பெசண்ட் நகர்லன்னுல்ல நளினி சொன்னா?

பாஸ்கர் - ஆமா... அது எங்க பேங்க் கெஸ்ட் ஹவுஸ்... ரெண்டு வாரத்துக்குன்னு வந்ததால அங்க இருந்தேன்... ஆனா இப்போ ஒரு மாசத்துக்கு மேல இருக்கறதா ப்ளான்... இதுவும் பேங்கோடதுதான்...

மல்லிகா - (தனக்குள்) இவன் என்னவோ திட்டத்தோட வந்துருக்கான் போலருக்கு - சரிங்க... எனக்கு வீட்ல வேல இருக்கு - நீலா வா...

பாஸ்கருடைய பதிலுக்கு காத்திராமல் மல்லிகா நீலாவை இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்க சற்று நேரம் அவர்களைப் பார்த்தவாறு நிற்கிறான்...

...........

தொடரும்...

20.8.09

முதல் பார்வையில் 13

காலை -

பாஸ்கரும் மோகனும் காரிலிருந்து இறங்கி தங்கள் கண் முன் விரிந்த பிரம்மாண்டமான குடியிருப்புகளை நிமிர்ந்து பார்க்கின்றனர்..

மோகன் - Your flat is in the 2nd floor - டாக்குமெண்ட்ஸ் ரிஜிஸ்தர் பண்ண அன்றைக்கு பார்த்ததுதான் - ஃபர்னிஷிங் பண்ணதுக்கப்புறம் பாக்கவே இல்லை - கம்...

மோகன் முன்னே செல்ல பாஸ்கர் கைப்பெட்டியுடன் அவரை பிந்தொடர்ந்து லிஃப்ட்டில் ஏறி அவனுக்கென்று ஒதுக்கியிருந்த குடியிருப்பை அடைகின்றனர்

குடியிருப்பைச் சுற்றி பார்க்கின்றனர் -

மோகன் - What do you feel? Like it?

பாஸ்கர் - புன்னகையுடன் - Beggars have no choice... But I like it... நல்லா செஞ்சிருக்காங்க...

மோகன் - good... ஒங்களுக்கு தேவையான எல்லாம் இருக்குன்னு நினைக்கேன் - ஆனா கெஸ்ட் ஹவுஸ் போல இங்க ஹெல்ப்புக்கு யாரும் இல்ல - பில்டிங்ல யாராச்சும் ஹெல்ப் இருப்பாங்க - You can use them...

பாஸ்கருக்கு இதுவும் நல்லதுக்குத்தான் என்று தோன்றியது - I can have privacy என்று முனுமுனுத்தான்...

மோகன் - But you can have privacy - அதுவுமில்லாம பெசண்ட்நகரவிட இது நல்ல லொக்காலிட்டிதான் - You will only miss the Beach - காலையில முழிச்சதும் சன் ரைஸ் பாக்கறதுக்கு ஈடு எதுவும் இல்லை - என்ன சொல்றீங்க?

பாஸ்கர் - Yes you are right - அதானாலதான் சொன்னேன் Beggars have no choiceனு...

மோகன் உரத்த குரலில் சிரித்தவாறு கையை நீட்டுகிறார் - Ok, Bhaskar I will take leave - Committee members வர்றதுன்னாலே தலைவலிதான் - இங்கருந்து ஏர்போர்ட் போயி அவங்கள பிக்கப் பண்ணி, தாவு தீந்துரும்... இன்னைக்கி ஹோல்டே வேஸ்டாயிரும்...

பாஸ்கர் - சிரித்தவாறு மோகனின் கையைப் பற்றி குலுக்கி விடையளிக்கிறான் - I know - உங்களுக்காவது எப்பாவாச்சும்தானே இந்த தலைவலி - ஹெட் ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு மாசம் பூராவும்.... பை மோகன்... Thanks for all this..

மோகன் - It's a pleasure - ஃப்ரீயாருக்கும் போது சொல்லுங்க, ரெண்டு பெக் அடிக்கலாம் - பை...

மோகனை வழியனுப்பிவிட்டு வீட்டை வலம் வருகிறான் - விசாலமான இரு படுக்கையறைகள், ஹால் கம் உணவறை, கிச்சன், நீச்சல்குளத்தை பார்த்தவாறு அமைந்த பால்கணி என சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு அவனை மிகவும் கவர்கிறது - beautiful என்று முனுமுனுத்தவாறு ஹாலில் இருந்த வசதியான சோபாவில் அமர்கிறான்..

.........


பகல் - தாஜ் ஹோட்டல் - நளினி பார்லரில் - இறுதியாக வந்த வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு தனியாக அமர்ந்திருக்கிறாள் -

அவளுடைய செல்ஃபோன் - பாஸ்கர் காலிங் என்ற மெல்லிய குரல் ஒலிக்கிறது - புன்னகையுடன் டயல் பேடை தடவி - ஹாய் பாஸ்கர் என்கிறாள்.

இடைவெளி

நளினி - ஆமா... இப்பத்தான் லாஸ்ட் கஸ்டமர் - But I could not do justice to my work today... disappointed almost all of them...

இடைவெளி

நளினி - தெரியல பாஸ்கர் - I am just unable to concentrate..

இடைவெளி

நளினி - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - இன்னைக்கி ஈவ்னிங் ஃப்ரீயா?

இடைவெளி

நளினி - மீட் பண்லாமா?

இடைவெளி

நளினி - சிரிக்கிறாள் - நேத்து ஒங்கள வீட்ல ட்றாப் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு அதுவும் ஒரு காரணம்னு வச்சிக்குங்களேன்...

இடைவெளி

நளினி - ஓக்கே - பை..

இணைப்பை துண்டித்துவிட்டு எழுந்து நிற்கிறாள் - உடனே அவளுடைய உதவியாளர் ஒருவர் வந்து நிற்க அவருடைய தோளைப் பற்றியவாறு வெளியேறுகிறாள் - ரிசெப்ஷனை கடக்கும்போது அவளுடைய தோழி அவளை நெருங்குகிறாள்...

தோழி - ஹாய் நளினி..

நளினி - ஹாய்....

தோழி - இன்னைக்கி மூட்ல இல்ல போலருக்கு..

நளினி - ஏன்... யாராச்சும் ஏதாவது...

தோழி - பர்ட்டிகுலரா ஒன்னும் சொல்லலை... But I can feel it from their faces...

நளினி -சாரி.... I could not concentrate today....

தோழி - நீ தப்பா நினைக்கலன்னா நா ஒன்னு சொல்லட்டுமா?

நளினி - சலிப்புடன் - அட்வைசா? Please don't.... நாளைக்கி பாக்கலாம்..

தன் கைகளை உதறிவிட்டு வாசலை நோக்கி நடந்த நளினியை பார்த்தவாறே நிற்கிறாள் தோழி...

..........

மாலை - நளினியின் வீடு - வரவேற்பறை - பாஸ்கர் சோபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது தன் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறான் - சற்று தள்ளி நளினி - பின்புறத்தில் மெல்லிய இசை

பாஸ்கர் - .......அம்மா ரொம்பவும் டொசைல் டைப்... அப்பா என்னதான் மோசமா பேசினாலும் தப்பு நம்ம மேலதான் போலருக்குன்னு பேசாம எல்லா இன்சல்ட்டையும் சகிச்சிக்குவாங்க. ஏம்மா இப்படி இருக்கீங்கன்னு கேட்டா இதெல்லாம் ஒனக்கு தெரியாதுடான்னு சொல்லி மழுப்பிருவாங்க. அதனாலயே எனக்கு லேடீஸ்னாலே எனக்கு ஒரு சிம்பதி வந்துருச்சி....

நளினி - அம்மா இப்ப எங்க இருக்காங்க?

பாஸ்கர் - இறந்து ஒரு வருசமாகுது..

நளினி திடுக்கிட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்த பாஸ்கரை நெருங்கி அவனுடைய கரங்களைப் பற்றுகிறாள்... I am sorry Bhaskar... I didn't know...

பாஸ்கர் - It's OK..

நளினி - எப்படி?

பாஸ்கர் - Massive attack - நான் ஆஃபீஸ்லருந்து வர்றதுக்குள்ளயே - அம்மா குடும்பம் ஒரு பெரிய குடும்பம் - நாலு அண்ணா - அப்பா, அம்மா, தாத்தா, பாட்டின்னு ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்துல பிறந்து வளர்ந்தவங்க - நாலு அண்ணனுங்களுக்கு ஒரே தங்கையா செல்லமா இருந்தவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் - ஆனா கொஞ்சம் கூட பொருத்தமில்லாத கல்யாணத்துனால யார் கூடயும் டச் இல்லாம கடைசி நேரத்துல யாருமே கூட இல்லாம - Her life was a huge tragedy -

நளினி - கேக்கறதுக்கே ரொம்ப கஷ்டமாருக்கு பாஸ்கர்

பாஸ்கர் - இதுக்கு ஒருவகையில நானும் காரணமா இருந்துட்டேனோன்னு பலதரம் நினைச்சிருக்கேன்..

நளினி - ஏன்?

தொடரும்

19.8.09

முதல் பார்வையில் 12

12
இரவு - நளினியின் வீடு.

மல்லிகா வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய அவளைப் பிந்தொடர்ந்து நளினி மற்றும் ராஜி, நீலா ஆகியோர் நுழைகின்றனர்.

மல்லிகா - ராஜி, நீலா ரெண்டு பேரும் போய் படுங்க. காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும். ஆறு மணிக்கு வந்து எழுப்புவேன் ஒடனே எழுந்திருச்சிரணும், சொல்லிட்டேன்.

ராஜி - சரிம்மா... சித்தி அந்த அங்கிள எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு ....

மல்லிகா - கோபத்துடன் ராஜியைப் பார்த்து முறைக்கிறாள் - ஏய்... ஒன்னெ யாரும் கேட்டாங்களா? நீலாவ கூட்டிக்கிட்டு ஒங்க ரூமுக்கு போ....

ராஜி - சாரிம்மா.... குட்நைட் சித்தி.. ஏய் நீலா இங்கேயே தூங்கிறாத வா நம்ம ரூமுக்கு போலாம் (தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நீலாவின் தோள் மீது கைவைத்து தள்ளிக்கொண்டு செல்கிறாள்)

நளினி சோபாவில் அமர்கிறாள்.

மல்லிகா ஹால் விளக்கை தவிர மற்ற விளக்குகளை அணைத்துவிட்டு மாடியில் இருந்த தன் அறைக்கு செல்ல மாடிப்படிகளை நோக்கி நகர்கிறாள்.

நளினி - என்னக்கா கோபமா?

மல்லிகா - எதுக்கு?

நளினி - பின்னே எதுக்கு ராஜி மேல எரிஞ்சி விழுந்தே?

மல்லிகா பதிலளிக்காமல் மாடிப்படியை நோக்கி செல்கிறாள்.

நளினி - கோபமாத்தான் இருக்கே... அதான் பதில் சொல்லாம போற..

மல்லிகா திரும்பி தன் தங்கையை பார்க்கிறாள்.- நாம போன மாதிரியே திரும்பி வந்துருக்கலாம்லே... எதுக்கு பாஸ்கர ட்ராப் பண்ணச் சொன்னே...

நளினி என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருக்கிறாள்...

மல்லிகா - நா சொல்றேன்.. பாஸ்கருக்கு இந்த வீட்ட காட்டணும்... அதானே....

நளினி - என்னக்கா நீ... நா சாதாரணமா செஞ்சதுக்கு நீ என்னென்னமோ கற்பனை செய்யிறே...

மல்லிகா - இல்ல நளினி, நா ஒத்துக்கமாட்டேன்... நீ பாஸ்கர் வர்றதுக்கு முன்னாலயே நம்ம டிரைவர போகச் சொல்லிட்டே.. சரிதானே?

நளினி - ஆமாம் என்பதுபோல் தலையை அசைக்கிறாள்...

மல்லிகா வேதனையுடன் புன்னகை செய்கிறாள்.... திரும்பி வந்து சோபாவில் அமர்கிறாள்..

மல்லிகா - எதுக்கு நளினி... அப்படியென்ன பாஸ்கர்கிட்ட ஸ்பெஷலா... போன தடவை ஏற்பட்ட கசப்பான எக்ஸ்பீரியன்சுலருந்து நீ மீண்டு வர்றதுக்கே ஆறு மாசத்துக்கு மேல ஆச்சே... இப்ப எதுக்கு மறுபடியும்?

நளினி மல்லிகாவின் தோள்மீது சாய்கிறாள் - தெரியல... சத்தியமா தெரியலக்கா.... ஏனோ இந்த பாழாப்போன மனசு மறுபடியும் கிடந்து அடிச்சிக்குது... பாஸ்கர் எப்படி இருப்பார்னு கூட எனக்கு தெரியல.. ஆனா அவரோட அந்த குரல்.... ரொம்ப நாள் பழகுனாப்பல.... இன்னைக்கி கூட அவர் ராஜி, நீலா கூட எவ்வளவு ஜாலியா, அன்னியோன்யமா... ஒரு நல்ல அப்பா மாதிரி.... அத்தான் கூட அப்படியொரு பாசத்தோட பிள்ளைங்கக் கிட்ட பேசி நா கேட்டதில்ல... நீ என்ன சொல்ற?

மல்லிகாவும் அவள் கூறியதில் இருந்த உண்மை புரிகிறது. இருந்தும் மவுனமாக அமர்ந்திருக்கிறாள்...

நளினி - என்னக்கா பதிலயே காணம்?

மல்லிகா - எனக்கு பயமாருக்கு...

நளினி - யார பத்தி?

மல்லிகா - தெரியாத மாதிரி நடிக்காத நளினி - ஒன்னெ பத்தித்தான்...

நளினி - சிரிக்கிறாள்...

மல்லிகா கோபத்துடன்- எதுக்கு சிரிச்சே?

நளினி - நீ ஆக்சுவலா பயப்படறது... எங்க ராஜியையும் நீலாவையும் பாஸ்கர் கவர் பண்ணிருவாரோன்னு... அப்படித்தானே...

மல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள்... குட்நைட் நளினி... போய் படு...

நளினி - சிரிக்கிறாள் - நீ கோபப்படுறதுலருந்தே நான் சொன்னது சரிதான்னு தோனுது....

மல்லிகா தன்னைவிட்டு அகல்வதைப் புரிந்த நளினி எழுந்து அவளுடைய தோள்களை பற்றுகிறாள்.

நளினி - அக்கா... கோபப்படாத... பாஸ்கர ஒனக்கும் புடிச்சிருக்கு.. ஆனா ஒத்துக்க மாட்டேங்கறே... எங்க உங்கிட்டருந்து என்னெ பிரிச்சிருவாரோன்னு பயப்படறே... இல்லக்கா.... ஒன்னோட எடத்த யாராலயும் புடிச்சிற முடியாது.... என்னெ ஒரு தாய் மாதிரி இருந்து பாத்துக்கிட்டவக்கா நீ... பாஸ்கர ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தான் பாக்கறேன்... எந்த ஒரு சூழ்நிலையிலயும் அந்த எல்லைய விட்டு தாண்டாம பாத்துக்குவேன்.... என்னெ நம்பு...

மல்லிகாவின் கண்களின் துளிர்ந்து நின்ற கண்ணீர் வழிந்து நளினியின் கரங்களில் பட்டு சிதறுகிறது... நளினியை இறுக அணைத்துக்கொள்கிறாள்....

மல்லிகா - நீ சொல்றது சரிதாண்டி... பாஸ்கர் மேல எனக்கு லேசா பொறாமைதான்... வந்து ஒக்கார்ந்த அரைமணி நேரத்துலயே இந்த ரெண்டு குட்டிகளையும் வளைச்சி போட்டுட்டானே....எல்லாரையும் எடுத்தெறிஞ்சி பேசற இந்த நீலா குட்டி கூட அந்தாள் மேல சாஞ்சி, சாஞ்சி.. ஏதோ ரொம்ப நாள் பழகுனாப்பல.... ஒங்க மூனு பேரையும் யார்கிட்டயும் இழந்துறக்கூடாதுங்கற பயம்... இப்ப கொஞ்சம் ஜாஸ்தியாவே.....

நளினி - யாரும் யாரையும் இழக்கப் போறதில்லைக்கா.... பகிர்ந்துக்கப் போறோம்... அவ்வளவுதான்... நீ கவலைப்படாம போய் தூங்கு...

மல்லிகா - சரி பார்ப்போம். காலையில எழுந்து நானே பூட்ட்க்கிட்டு போறேன். நீ எழுந்து வரவேணாம்... ப்ரேக்ஃபாஸ்ட் எதுவும் செஞ்சி வைக்கவா?

நளினி - வேணாம்.. எப்பவும்போல நானே செஞ்சிக்கறேன்... குட்நைட்...

மல்லிகா படியேறி மாடிக்கு செல்ல நளினி சோபாவில் அமர்ந்து கேசட் ப்ளேயரை ரிமோட்டால் ஆன் செய்கிறாள்...

அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் I am falling for you அறையை நிறப்ப கண்களை மூடி சோபா மீது சாய்கிறாள்...

I don’t know but
I think I maybe
Fallin’ for you
Dropping so quickly
Maybe I should
Keep this to myself
Waiting ’til I
Know you better
I am trying
Not to tell you
But I want to
I’m scared of what you’ll say
So I’m hiding what I’m feeling
But I’m tired of
Holding this inside my head

......

இரவு - பாஸ்கரின் அறை -

பாஸ்கர் அறைக்குள் நுழைந்து பெட்டியை கட்டிலில் வீசிவிட்டு அமர்கிறான். முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது... . செல்ஃபோன் ஒலிக்கிறது. எடுத்து பார்க்கிறான்.. அவனுடைய வங்கி சர்க்கிள் மேலாளரின் எண்... இவருக்கு என்ன வேணும் இப்போ... என்று முனுமுனுத்தவாறு - சொல்லுங்க மோகன்... ஏதாச்சும் அர்ஜண்டா?

எதிர்முனையிலிருந்து பேசுபவரின் உரத்த குரல் பாஸ்கரின் முகத்தை சுளிக்க வைக்கிறது.. செல்ஃபோனை சற்று தள்ளி பிடிக்கிறான்... செல்ஃபோன் வழியாக குரல் அறையை நிரப்புகிறது..- சாரி பாஸ்கர்... I was out of station... அதான் நீங்க சென்னைக்கி வந்ததும் கூப்ட முடியல..

பாஸ்கர் - பரவால்லை... சொல்லுங்க..

மோகன் - ஒரு சின்ன விஷயம்... அதான் கூப்ட்டேன்... கொஞ்சம் டெலிகெட்டான விஷயமும் கூட... நேர்ல போய் சொல்லுங்கன்னு சேர்மன் சொன்னார்.... இப்பவே வரலாமான்னு கேக்கத்தான் கூப்ட்டேன்...

பாஸ்கர் வியப்புடன் செல்ஃபோனை பார்க்கிறான் - மறுபடியும் பிரச்சினையா? என்று முனுமுனுக்கிறான்... - You are always welcome Mohan....ஆனா அதுக்கு அவசியமே இல்லை... சும்மா சொல்லுங்க...

மோகன் - Don't mistake me Mohan... - நாளைக்கு ஐ.டி. கமிட்டி மெம்பர்ஸ் இங்க வராங்களாம்... அதனால...

பாஸ்கர் - இங்கயா? ஏன்?

மோகன் - Frankly சேர்மனுக்கே ஏன்னு தெரியலையாம்.... They want to occupy the guest house...

பாஸ்கர் - எரிச்சலுடன் - என்ன புதுசா? This is supposed to be executives' guest house no?

மோகன் - அதான் நானும் சேர்மன்கிட்ட சொன்னேன்... I think this was suggested by our GM Operations...

பாஸ்கர் - (முனுமுனுக்கிறான்) ராஸ்கல்... எல்லாம் அந்தாள் வேலைதானா? So you want me to vacate?

மோகன் - ஆமா பாஸ்கர்.... But Chairman has asked me to make alternative arrangements for your stay...

பாஸ்கர் - கோபத்துடன் - No need... நானே பாத்துக்கறேன்...

மோகன் - அவசரமாக - இல்ல பாஸ்கர்... Don't do that.... கோடம்பாக்கத்துல நம்ம பேங்க் ஃப்ளாட் ரெண்டு ரெண்டு மாசமா யாருக்கும் அலாட்டாகாம இருக்கு... New flats - fully furnished - எல்லா வசதியும் இருக்கு - அதுல ஒன்னுல ஒங்கள அக்காமடேட் பண்ண சேர்மன் சொல்லிட்டார் - நா ஏற்பாடும் பண்ணிட்டேன் - காலையில ஒரு எட்டு மணி போல நானே வரேன் - I will take you there. என்ன சொல்றீங்க?

பாஸ்கர் - சலிப்புடன் - எதுக்கு மோகன்? I was asked to extend my leave, you know that, no?

மோகன் - அதுவும் தெரியும், அதுக்கு பின்னால யார், யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியும்... but our sympathies are with you Bhaskar - all our executives are with you except you know who!

பாஸ்கர் - தாங்ஸ் மோகன்... நேத்தைக்கி மும்பையிலருந்து திரும்புறப்போ எதுக்கு இன்னும் கண்டினியூ பண்றது... பேசாம ரிசைன் பண்ணா என்னான்னு கூட யோசிச்சேன்... பேசாம இங்கயே ஏதாச்சும் ஓப்பனிங் இருக்கான்னு பாக்கலாம்னு கூட தோனிச்சி... என் டாட்டருக்காகத்தான் பாக்கறேன்...

மோகன் - don't do that Bhaskar... அதத்தான அந்தாளும் எதிர்பாக்கறான்... You should not fall in to his trap...

பாஸ்கர் - ஓக்கே... மோகன்... இப்பத்தான் ஏர்போர்ட்லருந்து வந்தேன்... I am dead tired...காலையில பாக்கலாம்...

இணைப்பைத் துண்டித்துவிட்டு உடை மாற்றி குளித்து படுக்கையில் விழுகிறான்... அன்று மாலை நளினியை சந்தித்தது நிழலாய் கண் முன் விரிகிறது....

........

தொடரும்...

14.8.09

முதல் பார்வையில் 11

சென்னை விமான நிலையம் - பாஸ்கர் இறங்கி அவனுக்காக காத்திருந்த காரில் ஏறியதும் தன் செல்ஃபோனை எடுத்து ஒரு எண்ணை சுழற்றுகிறான். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும்..

பாஸ்கர் - ஹை...

இடைவெளி...

பாஸ்கர் - எப்படி இருக்கே...

இடைவெளி

பாஸ்கர் - நான் அர்ஜண்டா மும்பை போயிருந்தேன்... I am back .....

இடைவெளி

பாஸ்கர் - ஏர்போர்ட்லருந்து என் ரூமுக்கு...

இடைவெளி

பாஸ்கர் - ஆமா.. இறங்குனதும் ஒன் ஞாபகம்தான்.. நேத்தைக்கி புறப்படறப்போ ஃபோன் பண்ணேன்.... யாருன்னு தெரியல...

இடைவெளி

பாஸ்கர் - ஓ.. அக்காவா... ரிலேட்டிவாத்தான் இருக்கும்னு நினைச்சேன்...

இடைவெளி

பாஸ்கர் - சேச்சே... அவங்க குரல்ல உன் மேலருக்கற அன்பு தெரிஞ்சது அதனால நேச்சுரலா ஏற்படற சந்தேகம்... நா தப்பாவே எடுத்துக்கல... நாந்தான் நேரம் காலம் தெரியாம ஃபோன் பண்ணி.... I am really sorry Nalini... அத சொல்லத்தான் நான் ஃபோன் பண்ணேன்....

இடைவெளி

பாஸ்கர் - It's OK.... நா அத அப்பவே மறந்துட்டேன்... மறுபடியும் எப்ப சந்திக்கலாம், I mean if it is ok with you...

இடைவெளி

பாஸ்கர் - (புன்னகையுடன்) இப்பவேவா.... எங்க?

இடைவெளி

பாஸ்கர் - ஒங்க சிஸ்டருக்கு ஓக்கேவா... ஏன் கேக்கறேன்னா... அது ஒரு ஃபேமிலி கெட் டுகெதர் மாதிரி தெரியுதே... அதான்...

இடைவெளி

பாஸ்கர் - I will be there in another thirty minutes... Thanks... bye...

பாஸ்கர் இணைப்பைத் துண்டித்துவிட்டு டிரைவரிடம்... தாஜ் போங்க...

.........

தாஜ் ஹோட்டல் - உணவகத்தில் நளினி, மல்லிகா மற்றும் மல்லிகாவின் இரண்டு மகள்கள்.

நளினி - என்னக்கா பேசாம ஒக்காந்துருக்கே... பாஸ்கர கூப்ட்டது ஒனக்கு புடிக்கலன்னா சொல்லியிருக்கலாம்லே...

மல்லிகா - சேச்சே... அப்படியெல்லாம் இல்ல நளினி... எல்லாம் ரொம்ப ஃபாஸ்டா நடக்குதோங்கற ஒரு சின்ன கவலை...

நளினி புன்னகையுடன் மல்லிகாவின் கரங்களை பற்றுகிறாள்... நீ ஃபோன்ல கோபப்பட்டதப் பத்தி அவர் என்ன சொன்னார் தெரியுமாக்கா.. நீ கோபப்பட்டது என்மேலருக்கற ப்ரொடக்டிவ்னஸ் ஆல ஏற்பட்ட சந்தேகமாம்... என்ன அழகான வார்த்தை பாருக்கா... அதாவது என்னெ பாதுகாக்கணுமேன்னு நீ நினைக்கறதால, எந்த புது மனுஷங்களையும் என்கிட்ட நெருங்கவிடக்கூடாதுன்னு நீ நினைக்கறதால, ஏற்படற சந்தேகம்... ஒரே நிமிஷத்துல உன் உள்மனசுல இருக்கற பாசத்த அவரால புரிஞ்சிக்கமுடியும்னா... அவர் ரொம்ப நல்லவராத்தான் இருக்க முடியுங்க்கா...

மல்லிகா - கேலி புன்னகையுடன் - இல்லன்னா கைதேர்ந்த நடிகனாருக்கணும்...

நளினி - அக்கா ப்ளீஸ்... அப்படியே உனக்கு அவர புடிக்கலைன்னாலும் அவர் முன்னால அத காட்டாதெயேன் ப்ளீஸ்... இன்னைக்கி மட்டும்..

மல்லிகாவின் மூத்த மகள் ராஜி- யார பத்தி பேசறீங்க சித்தி... இப்ப ஃபோன் பண்ணவங்களா?

மல்லிகா - ஏய்... ஒனக்கு அது தேவையில்லாத விஷயம்... பெரியவங்க பேசறப்ப ஒட்டு கேக்காதேன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்...

நளினி - அக்கா ப்ளீஸ்.... பக்கதுல பாக்கறாங்க பார்... மெதுவா...

மல்லிகா - அதுக்குத்தான் இந்த இடம்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்...

நளினி - ஓக்கே.. ஓக்கே... வந்தது வந்தாச்சு... நீ கொஞ்சம் கோபப்படாம இரு... அவர் வந்ததும் நா பேசி அனுப்பிடறேன்.. சரியா... என்னக்கா?

மல்லிகா - சீச்சி... அதெல்லாம் ஒன்னும் வேணாம்... எனக்கும் அவர பாக்கணுமில்ல....

நளினி - என்ன ராஜி... அம்மா திட்டிட்டாங்கன்னு டல்லாய்ட்டியா.... வரப்போறது சித்தியோட ஃப்ரெண்ட்... இப்பத்தான் ரெண்டு நாளாத்தான் பழக்கம்... வரட்டுமான்னு கேட்டார் சரின்னு சொல்லிட்டேன்... ஒனக்கு ஓக்கேதானே....

ராஜி மல்லிகாவை பார்க்கிறாள் - எனக்கு ஓக்கேதான்... (மேசைக்கு குறுக்கே குணிந்து) பில்ல அந்த அங்கிள் தலையில கட்டிறலாம் சித்தி

நளினி - உரக்க சிரிக்கிறாள் - சீ... நாட்டி...

இளையவள் நீலா - ராஜியிடம் - ஏய்.. நீ என்ன சொன்னே...

ராஜி நீலாவின் காதுகளில் கூறுகிறாள்... நீலா - நல்ல ஐடியாடி...

மல்லிகா - போலி கோபத்துடன் - ரெண்டு பேரும் என்னடி சொல்றீங்க சித்திகிட்ட...

நீலா (சீரியசாக) இல்லம்மா யாரோ அங்கிள் வறாராமே இன்னைக்கி பில்ல அவர் தலையில கட்டிறாலாம்னு...

நளினி - சிரித்தவாறு - ஏய் பசங்களா... சும்மாருங்க... அந்த அங்கிள் வந்துறப்போறாரு....

பாஸ்கர் - சிரித்தவாறு - நா வந்துட்டேனே.... (ராஜி, நீலாவை நோக்கி தன் வலது கரத்தை நீட்டுகிறான்) ஹாய் கேர்ல்ஸ்... I am Bhaskar (மல்லிகாவை நோக்கி வணக்கம் செலுத்துகிறான்) வணக்கம் மேடம்... நளினியிடம் Hi Nalini...

நால்வர் முகங்களிலும் அசடு வழிகிறது...

நளினி எழுந்து அவனை நோக்கி திரும்புகிறாள் - Hi Bhaskar

பாஸ்கர் - Hi... (ராஜி, நீலா இருவர் அருகில் அமர்கிறான்) - Have you placed orders?

நளினி - இன்னும் இல்லை.. We just had fresh juice...

பாஸ்கர் - புன்னகையுடன் - நல்லதாப் போச்சு....நீலா சொன்னா மாதிரி let this be my treat...

நளினி மறுப்பதுபோல் தலையை அசைக்கிறாள் - ஆனால் நீலா உடனே - Thanks Uncle...

அடுத்த அரை மணி நேரம் அவர்கள் உணவருந்துகிறார்கள்... பாஸ்கர் இரு குழந்தைகளுடன் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்கிறான் - இரு சிறுமிகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள் - நளினியின் முகத்தில் சந்தோஷம் - மல்லிகாவின் முகத்தில் பொறாமை - உணவருந்தி முடித்ததும் நளினி எத்தனை தடுத்தும் கேளாமல் பாஸ்கர் உணவுக்கான பணத்தைன் கொடுக்கிறான் - நால்வரும் உணவு விடுதியிலிருந்து வெளியில் வருகிறார்கள் - ரிசெப்ஷனை கடக்கும் போது நளினியின் சிநேகிதி அவளை நெருங்குகிறாள்.

சிநேகிதி - நாளைக்கி வருவியா நளினி - our guests missed you today... Your assistants could not satisfy them...

நளினி - மல்லிகாவை நோக்கி கையை நீட்டுகிறாள் - (புன்னகையுடன்) என்னக்கா நாளைக்கி பார்லருக்கு போலாம்லே...

மல்லிகா - உன் இஷ்டம்...

நளினி - சிநேகிதியிடம் - I will be there.... but not more than five guests in the morning session.. I will not be there in the evening...பரவால்லையா?

சிநேகிதி - OK... பை..

நளினி - பாஸ்கர்

பாஸ்கர் - அவளை நெருங்கி - Yes?

நளினி - Can you drop us at home?

பாஸ்கர் - Of course..

எல்லோரும் பாஸ்கரின் காரில் ஏறி செல்கின்றனர்..

தொடரும்..

13.8.09

முதல் பார்வையில் 10

பாஸ்கரின் வாகனம் அந்தேரியில் அமைந்திருந்த ஒரு பெரிய குடியிருப்பின் வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கர் இறங்கி வாயிலில் இருந்த பொத்தானை அமுக்குகிறான்...

கதவைத் திறக்கும் பாஸ்கரின் முன்னாள் மனைவி ரேவதி உறக்க சிரிக்கிறாள்... என்ன பாஸ்கர் சார்... ஆச்சரியமா இருக்கு... எங்க இந்த பக்கம்.

பாஸ்கர் - ஷாலிமாவ எங்கூட அனுப்பு.... I will drop her back in two hours...

ரேவதி - எதுக்கு? ஃப்ரைடேதானே கூப்டுக்கிட்டு போனீங்க... வாரம் ஒரு நாள்னா இந்த ஃப்ரைடே இன்னும் வரலையே.... ஓ... அங்க புது கேர்ள் ஃப்ரெண்ட் வெய்ட் பண்றாங்களோ.... இன்னைக்கே திரும்பி வரேன் டார்லிங்னு சொல்லிட்டு வந்திருப்பீங்க....

பாஸ்கர் - (கோபத்துடன்) என் பொறுமைய சோதிக்காத... before I create a scene... please send her with me...

ரேவதி - (போலி வியப்புடன் அவனைப் பார்க்கிறாள்...) Sceneஆ... என்ன சீன்? I don't care how you feel... You are allowed a visit only once a week... It is not due till next Friday... I am sorry... கதவை அடைக்க முயல்கிறாள்... ஆனால் பாஸ்கர் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிறான்... தன்னுடைய மகளின் அறையை நோக்கி விரைகிறான்... ஷாலிமா... are you there? டாடி வந்துருக்கேன்...

பாஸ்கரின் குரலைக் கேட்டதும் ஒரு அறையிலிருந்து அவனுடைய மகள் ஓடி வந்து அவனைக் கட்டிக்கொள்ள அவளை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு திரும்புகிறான்...

ரேவதி வாயிலை அடைத்துக்கொண்டு நிற்கிறாள்...

பாஸ்கர் - வழிய விடு ரேவதி... I will take her to the nearest park... get her an ice cream and drop her back... நாலு மணி ஃப்ளைட்ல நா திரும்பணும்... உங்கிட்ட சண்டை போட்டுக்கிட்டிருக்க எனக்கு நேரமில்லை....I will not disturb you at least for another one month...

ரேவதி உறக்க சிரிக்கிறாள்... ஏன்... லாங் லீவ்ல போங்கன்னு சொல்லிட்டாரா சேர்மன்?

பாஸ்கர் பதிலளிக்காமல் தன் மகளுடன் விளையாடுகிறான்...

ரேவதி - அவர்தான் ஒங்க பெஸ்ட் சப்போர்ட்டராச்சே... என்னாச்சி... அவரும் ஒங்க எனிமி ஆய்ட்டாரா? என்னெ மாதிரி?

பாஸ்கர் தன் மகளுடன் விளையாடுவதிலேயே குறியாயிருக்கிறான்... ஷாலிமா கலகலவென சிரிக்கிறாள்...

ரேவதி - என்ன பதிலையே காணம்? என்னெ விரோதிச்சிக்கிட்டு நீங்க நல்லா இருக்க முடியாதுங்கறத இப்ப உணர்றீங்களா?

பாஸ்கர் ரேவதியை பார்க்கிறான் - கோபப்படுவதில் பயனில்லை என்பதை உணர்கிறான் - Yes... உங்கிட்ட தோத்துட்டேங்கறத ஒத்துக்கறேன்.... Can I take her out now?

பாஸ்கரின் உடனடி ஒப்புதலை எதிர்பாராத ரேவதி வியப்புடன் அவனை பார்க்கிறாள்... பிறகு வாயிலை விட்டு ஒதுங்கி நிற்கிறாள். பாஸ்கர் மகளை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான்...

அவன் மகளுடன் காரில் ஏறி செல்வதை பார்த்தவாறு ரேவதி நிற்கிறாள்...

........


நளினியின் வாசற்கதவு திறக்கப்படுகிறது. மல்லிகா தன் மகள்கள் இருவருடன் நுழைகிறாள். ஹாலில் படுத்துக்கிடக்கும் ஸ்வீட்டி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு பாய்ந்து சென்று மல்லிகாவின் குழந்தைகள் மீது மோதுகிறது. இருவரும் அப்படியே தரையில் அமர்ந்து அதை அணைத்துக்கொள்கின்றனர்.

மல்லிகா ஹாலுக்குள் நுழைந்து தன் கைப்பையை சோபாவில் எறிந்துவிட்டு டீப்பாய் மீது கிடந்த பூங்கொத்தை பார்க்கிறாள். பிறகு திரும்பி நளினியின் அறையை நோக்கி நடக்கிறாள்... நளினி படுக்கையில் படுத்து கிடப்பது தெரிகிறது...

மல்லிகா பதற்றத்துடன் நுழைந்து அவளுடைய நெற்றியில் கைவைத்து பார்க்கிறாள்... என்னடா உடம்புக்கு ஏதும் பண்ணுதா? எதுக்கு இந்த நேரத்துல படுத்து கிடக்கே...

நளினி எழுந்து அமர்கிறாள்... ஒன்னும் இல்லக்கா... சும்மாத்தான்... போரடிச்சுது...

மல்லிகா - இன்னைக்கி பார்லர் இல்லையா?

நளினி வியப்புடன் மல்லிகா இருந்த திசையில் பார்க்கிறாள்.. என்னக்கா நீதான ரெண்டு நாளைக்கி பார்லருக்கெல்லாம் போவேணான்னு சொன்னே....

ஸ்வீட்டியுடன் அறைக்குள் நுழையும் இரு மகள்களும் படுக்கையில் அமர்ந்து நளினியை கட்டிக்கொள்கின்றனர். ஹாய் ஆண்ட்டி... ஹவ் ஆர் யூ?

நளினி புன்னகையுடன் ஐ ஆம் ஃபைன்... நேத்து நீங்க ரெண்டு பேரும் அம்மாவ டென்ஷனாக்கிட்டீங்க அப்படித்தானே...

மல்லிகா சொல்ல வேண்டாம் என்று கண்சாடை கேட்டுகிறாள்..

இளையவள் நீலா - ஏன் சொல்ல வேணாங்கறே?

நளினி (புன்னகையுடன்.) அம்மா சொல்ல வேணாம்னு சொல்றாங்களா?

நீலா - ஆமா சித்தி... நா சொல்றேன்... நேத்து அப்பா வந்து பாட்டி வந்துருக்காங்க ஒங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு சொல்றாங்க, வறீங்களான்னு கேட்டாங்க... நாங்க சரின்னு சொல்லிட்டு அவங்க கூட போனோம்.. அம்மா அத தப்பா புரிஞ்சிக்கிட்டு போலீஸ்ல போயி சொல்லி அவங்க அப்பா வீட்டுக்கு வந்து எங்களையும் அப்பாவையும் புடிச்சி ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க... போலீஸ் அப்பாவை நல்லா திட்டி எங்கள அம்மா கூட அனுப்பி வச்சிட்டாங்க... இதான் நடந்தது...

நளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள்... இவ்வளவுதானா...நேத்து ஒங்கம்மா பதறிக்கிட்டு ஓடினப்போ நா என்னவோன்னு பயந்துட்டேன்... சரி நீங்க ரெண்டு பேரும் ஸ்வீட்டிய கூட்டிக்கிட்டு போயி டெரஸ்ல விளையாடுங்க...

இரு சிறுமிகளும் மாடிப்படிகளை நோக்கி ஓடுகின்றனர். ஸ்வீட்டியும் குலைத்துக்கொண்டே பின் செல்கிறது..

மல்லிகா அறையிலிருந்து வெளியில் செல்கிறாள்.

நளினி - கொஞ்சம் இருக்கா...

மல்லிகா - (கோபத்துடன்) என்ன சொல்ல போறே? எதுக்கு இப்படி இருக்கே, அதானே...

நளினி மல்லிகாவின் தோள்களை பற்றிக்கொண்டு அறையிலிருந்து வெளிவந்து டைனிங் டேபிளில் அமர்கிறாள். - நீயும் ஒக்காருக்கா..

மல்லிகா விருப்பமில்லாமல் அவளருகில் அமர்கிறாள்.

நளினி - எதுக்குக்கா போலீஸ் எல்லாம்?

மல்லிகா - ஒனக்கு தெரியாது நளினி... அந்தாள் செஞ்சதையெல்லாம் மறந்துட்டியா?

நளினி - அது என்னாலதான?

மல்லிகா - எது உன்னால? உன்னோட டிசெபிளிட்டிய தனக்கு சாதகமா ஆக்கிக்க பார்க்க ஒரு ராஸ்கல்டி அந்தாளு...

நளினி - இருக்கலாம்க்கா... அது முடிஞ்ச போன கதை...

மல்லிகா - அதுக்காக? அத மறந்துற முடியுமா?

நளினி - சரி... உனக்கு அவர் வேணாம்னு டிசைட் பண்ணிட்டே... ஆனா பிள்ளைங்க? அவங்களுக்கு அவர் அப்பாதான?

மல்லிகா - அது ஊருக்கு...

நளினி - போலீஸ் அவங்க வீட்ல போயி பெரிய ரகளை ஏதும் பண்ணிட்டாங்களா?

மல்லிகா - அதெல்லாம் ஒன்னுமில்லை... மரியாதையாத்தான் நடந்துக்கிட்டாங்க... அந்தாளும் பிரச்சினை ஏதும் பண்ணாம கூப்ட்டதும் வந்து ஜீப்ல ஏறிட்டார்..

நளினி - அவங்க அம்மா?

மல்லிகா - (கேலியுடன் )அதுதான் வாசல்ல வந்து நின்னு நீ நாசமா போயிருவேடின்னு சாபம் விட்டுது..

நளினி - இது தேவையாக்கா... அக்கம்பக்கத்துல எல்லாரும் பாத்துருப்பாங்க இல்ல?

மல்லிகா சலிப்புடன் எழுந்து நிற்கிறாள்... இந்த பேச்ச விடு நளினி... என்னோடது முடிஞ்சி போன கதை... டீப்பாய்ல கிடக்குதே ஒரு பொக்கே அத அனுப்புன ஆள்தான நேத்து ஃபோன் பண்ணது?

நளினி எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து டீப்பாயில் கிடந்த பூங்கொத்துக்கு அருகில் தடவிப் பார்க்கிறாள்..

மல்லிகா என்ன வேணுமாம், அந்தாளுக்கு.. ஒன் ஃப்ரெண்ட்ஷிப்பா இல்ல....?

நளினி - சோர்வுடன்... மறுபடியும் ஆரம்பிச்சிராதக்கா...

மல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள் - சரிம்மா... கேக்கலை... எல்லா ஆம்பிளைங்களும் ஒரே மாதிரிதான். அத மட்டும் மறந்துறாத...

நளினி - அக்கா ப்ளீஸ்... இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான்... அவர பார்த்தா அந்த மாதிரி தெரியல..

மல்லிகா வியப்புடன் தன் தங்கையை பார்க்கிறாள் - பார்த்தா தெரியலையா?

நளினி சட்டென்று திரும்பி அவளுடைய கரத்தை பற்றுகிறாள் - அக்கா நீயுமா?

மல்லிகா - தன் தவறை உணர்ந்து - சாரிடா... நா அந்த அர்த்தத்துல சொல்லல...

நளினி - வேதனையுடன் புன்னகை செய்கிறாள் - பரவால்லைக்கா. நா அவர் கிட்ட பேசினத வச்சி சொல்றேன்... ஒருத்தர் கிட்ட கொஞ்ச நேரம் பேசினால அவங்கள பத்தி ஓரளவுக்கு புரிஞ்சிக்கற சக்தி எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இருக்குங்கறது ஒனக்கு தெரியுமில்ல?

மல்லிகா - ஒத்துக்கறேன்... ஆனா ஆம்பிளைங்கள அதுல சேர்க்காத... அவனுங்க நடிப்பானுங்க...

நளினி - உன்னுடைய கசப்பான அனுபவத்தால அப்படி சொல்றே?

மல்லிகா - எரிச்சலுடன் ஏன்? ஒனக்கு மட்டும் அப்படி ஒரு அனுபவம் இல்லையா?

நளினி - இருக்கலாங்க்கா... ஆனா எல்லா ஆண்களுமா அப்படி இருப்பாங்க.. எனக்கென்னவோ இவர் அப்படி பட்டவர் இல்லைன்னு தோனுது...

மல்லிகா - எழுந்து நிற்கிறாள். சரி நளினி... நா இனிமே ஒன்னும் சொல்றதுக்கில்லை.... நீ படிச்ச பொண்ணு... நாலு ஆம்பளங்களோட பழகுறதால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது... இந்த ஃப்ரெண்ட்ஷிப்பால ஒனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்னா.... செய்யி... நா இனி ஒன்னும் சொல்ல மாட்டேன்.... சமையல பாக்கறேன்...

நளினி அவளுடையை கரங்களைப் பற்றி இழுக்கிறாள்... இன்னைக்கி எங்கயாச்சும் வெளியில போயி சாப்பிடலாங்க்கா... பிள்ளைங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்லே... இன்னைக்கி என்னோட ட்ரீட்டா வச்சுக்கலாமே...

மல்லிகா புன்னகையுடன் தன் தங்கையை அணைத்துக்கொள்கிறாள் - ரொம்ப நாளைக்கப்புறம் உன் முகத்துல உண்மையான சந்தோஷத்த பாக்க முடியுதுடி... அதுவும் நீ ட்ரீட் குடுக்கறேன்னு சொல்றப்ப... (சிரிக்கிறாள்)

நளினியும் சிரிக்கிறாள் - அதானே பாத்தேன்... ஓசின்னா ஒடனே ஓக்கேன்னு சொல்லிறுவியே...

மல்லிகா எழுந்து உரக்க - ஏய் பிள்ளைங்களா.. இறங்கி வாங்க... சித்தி ட்ரீட் தறாளாம்..

இருவரும் சிரிக்க பிள்ளைகள் ஸ்வீட்டியுடன் படிகளில் தடதடவென இறங்கி வந்து... என்னது ட்ரீட்டா? என்கின்றனர் மகிழ்ச்சியுடன்...

மூத்தவள் ராஜி - சித்தி ஒங்க ஹோட்டலுக்கே போலாம்... முடியாதுன்னு மட்டும் சொல்லிறாதீங்க...ப்ளீஸ்

நளினி - இருவரையும் நோக்கி கைகளை நீட்டுகிறாள். அவர்கள் ஆளுக்கு ஒரு கை பற்றிக்கொள்ள நளினி இருவரையும் இழுந்து அணைத்துக்கொள்கிறாள்... சரி.. அங்கேயே போலாம்... சித்தி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வந்துடறேன்...

மல்லிகா - என்ன நளினி நீ? அதுங்கதான் கேக்குதுன்னா? அங்க ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே...

நளினி - என்னக்கா தெரியாத மாதிரி... அங்கதான் எனக்கு 25% டிஸ்கவுண்ட் இருக்கே.... இல்லன்னாலும் என்னைக்காவதுதான?

தன் அறையை நோக்கி செல்ல மல்லிகா தன் குழந்தைகளை முறைத்து பார்க்கிறாள்.....

தொடரும்...
.........

12.8.09

முதல் பார்வையில் 9

வங்கி சேர்மனின் அறையில் சேர்மனுடன் பாஸ்கர் அமர்ந்திருக்கிறான்.

சேர்மன் - சாரி பாஸ்கர் எனக்கு வேற வழி தெரியல...

பாஸ்கர் - (கோபத்துடன்) சார்... நீங்க என்னெ டவுட் பண்றீங்களா?

சேர்மன் - நிச்சயமா இல்ல பாஸ்கர்...

பாஸ்கர் - அப்புறம் எதுக்கு சார் என்னெ லீவ எக்ஸ்டெண்ட் பண்ண சொல்றீங்க?

சேர்மன் - Pressure Bhaskar... Committee members insist that you should not participate in this tendering process...

பாஸ்கர் என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருக்கிறான். முகத்தில் கோபம்...

சேர்மன் - They feel that you are not above suspicision...

பாஸ்கர் - எதுக்கு சார்?

சேர்மன் - யாரோ ஒங்கள பத்தி மோசமா அவங்கக்கிட்ட சொல்லியிருக்காங்க....

பாஸ்கர் - மோசமான்னா...

சேர்மன் - தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து நிற்கிறார்... - விடுங்க பாஸ்கர்... என்னெ அவங்க சொன்னதையெல்லாம் சொல்ல வைக்காதீங்க... Rubbish.... அதுக்கும் நம்ம ப்ரொஃபஷனுக்கும் என்ன சம்பந்தம்னு கூட எனக்கு சொல்ல தெரியல... They say your personal life is also questionable...

பாஸ்கர் கோபத்துடன் எழுந்து நிற்கிறான்... What nonsense.... அதுக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சார் சம்பந்தம்?

சேர்மன் - தன் மேசையை சுற்றி வந்து பாஸ்கரின் தோள்களைப் பற்றி இருக்கையில் அமர்த்துகிறார். Don't get excited Bhaskar... எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு... அதுதான் முக்கியம்... கமிட்டி மெம்பர்ஸ் சொல்றா மாதிரி நீங்க இந்த டெண்டர் ப்ராசஸ்லருந்து விலகி இருங்க...

பாஸ்கர் - அதுக்கு எதுக்கு சார் நா லீவ எக்ஸ்டெண்ட் பண்ணணும்? என்னெ வேற டிப்பார்ட்மெண்டுக்கு மாத்திருங்களேன்...

சேர்மன் (புன்னகையுடன்) I appreciate your offer Bhaskar... ஆனா ஒங்களோட Expertiseஐ நா இழக்க விரும்பலை... இந்த டெண்டர் ப்ராசஸ் முடிஞ்சி பி.ஓ இஷ்யூ பண்ற வரைக்கும் நீங்க லீவ்ல இருங்க... இந்த ப்ராஜக்ட நல்லவிதமா முடிக்க உங்களாலதான் முடியும்.......அதனால உங்கள டிப்பார்ட்மெண்ட்ட விட்டு மாத்தற முட்டாள்தனத்த நா பண்ண மாட்டேன்... I need you in this department...

பாஸ்கர் எழுந்து நின்று தன்னுடைய கைப்பெட்டியை எடுத்துக்கொள்கிறான்... OK Sir... Thank you for your support.... நீங்க எப்ப வரணும்னு சொல்றீங்களோ அப்ப வரேன்... போறுமா?

சேர்மன் புன்னகையுடன் அவனுடைய கரத்தை பற்றுகிறார் - Thanks for your coming Bhaskar... இத ஃபோன்லயே உங்ககிட்ட சொல்லியிருக்க முடியும்... ஆனா அதுக்கு எனக்கு இஷடமில்லை... நேர்ல பார்த்து இந்த டிசிஷன் எதுக்குன்னு சொல்லணும்னு ஆசைப்பட்டேன்...

பாஸ்கர் - It's Ok Sir... It also gives me a chance to meet my daughter.... (வாசலை நோக்கி நடக்கிறான்)

சேர்மன் - ஒரு நிமிஷம் பாஸ்கர்...

பாஸ்கர் நின்று திரும்பி பார்க்கிறான்.

சேர்மன் - நீங்க ஒங்க டாட்டர்னு சொன்னதும்தான் எனக்கு ஒன்னு சொல்லணும்னு தோனிச்சி...

பாஸ்கர் - சொல்லுங்க சார்...

சேர்மன் - நா இப்ப சொன்ன விஷயத்துக்கு பின்னால யாரோ இருக்காங்கன்னு சொன்னேனே.... அது ஒருவேளை உங்க Ex....

பாஸ்கரின் முகம் கோபத்தில் சிவந்து போகிறது... புரியுது சார்...

சேர்மன் - Though she has aleady gone on VRS... I am told that she is still in touch with some of your senior colleagues...

பாஸ்கர் - Thanks for the information Sir... Bye... விறுவிறுவென்று நடந்து வெளியேறுகிறான்...

........

பாஸ்கர் அவனுடைய தலைமை அலுவலக கட்டிடத்திலிருந்து வெளியேறி தனக்கென காத்திருந்த வாகனத்தை நெருங்குகிறான். அவனுக்கு பின்னால் யாரோ அவனுடைய பெயரை அழைப்பதைக் கேட்டு திரும்புகிறான்... அவனுடைய காரியதரிசி பாபு.... பாஸ்கர் நிற்கிறான்...

பாபு - சார்... உடனே திரும்புறீங்களா... ஃப்ளைட் ஈவ்னிங்தான?

பாஸ்கர் - எனக்கு முக்கியமான வேலையிருக்கு பாபு... ஏதும் அர்ஜண்டா இல்லைன்னா அப்புறம் பேசலாம்... I am in a hurry...

பாபு - சாரி சார்.... (தயக்கத்துடன்) ஒரேயொரு பெர்சனல் விஷயம்... சொல்லலாம்னா சொல்றேன்...

பாஸ்கர் - வியப்புடன் ... என்னுடையதா ஒங்களுடையதா...

பாபு - குழப்பத்துடன்... என்ன சார்?

பாஸ்கர் - Forget it... சொல்லுங்க... என்ன விஷயம்...

பாபு - மேடம் ஃபோன்ல கூப்ட்டாங்க....

பாஸ்கர் - கோபத்துடன் - எப்போ...

பாபு - இப்பத்தான் அஞ்சு நிமிஷம்...

பாஸ்கர் - என்னவாம்?

பாபு - நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டாங்க?

பாஸ்கர் - வேற ஏதாச்சும் சொன்னாங்களா?

பாபு - நீங்க வந்துட்டீங்க.. சேர்மன் ரூம்ல இருக்கீங்கன்னு சொன்னேன்... சம்பந்தமில்லாம சிரிச்சிட்டு தெரியுமேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க...

பாஸ்கர் பதில் பேசாமல் வாகனத்தில் ஏறி அமர்கிறான் - அந்தேரி ஜானா...

........

நளினியின் வாசற்கதவு மணி ஒலிக்கிறது... ஹாலில் படுத்துக் கிடக்கும் நாய் குலைக்கிறது...

படுக்கையில் படுத்துக்கிடக்கும் நளினி மெள்ள எழுந்து தன்னுடைய நடையை அளந்தவாறு ஹாலை அடைகிறாள்... யாருங்க? என்கிறாள் உரத்த குரலில்...

குரல் - குரியர் மேடம்...

நளினி - இருங்க வரேன்... இடைவெளி - கம் ஸ்வீட்டி... என்றவாறு தன்னுடைய நாயை அணுகுகிறாள் அது எழுந்து அவளுக்கு முன்னே வாசலை நோக்கி செல்கிறது.

நளினி கதவை மெள்ள திறக்கிறாள்... யெஸ்... என்ன வேணும்...

குரியர் - அவளுக்கு பார்வை தெரியவில்லை என்பதை உணர்கிறான். தன் கையிலிருந்த பூக்கொத்தை அவள் கைகளைப் பிடித்து கொடுக்கிறான். - மேடம் உங்களுக்கு ஒரு பொக்கே வந்துருக்கு... யாரோ உங்க நண்பராம்...

நளினி - வியப்புடன் பூங்கொத்தை பெற்றுக்கொள்கிறாள்... அட்றஸ் சரியா பாத்தீங்களா? நளினின்னு போட்டுருக்கா?

குரியர் - ஆமாம் மேடம் - விலாசத்தை படித்து காட்டுகிறான் - இது உங்க அட்றஸ்தான?

நளினி புன்னகையுடன் ஆமா... யார் அனுப்பியிருக்கான்னு போட்டுருக்கா?

குரியர் - இல்ல மேடம்... ஒரு ஃப்ரெண்டுன்னு மட்டுந்தான்...

நளினி - அப்படியா... சரி.... தாங்ஸ்... சிக்னேச்சர் ஏதும் போடனுமா?

குரியர் - அவளுடைய கையைப் பற்றி காட்டுகிறான்.. இங்க போடுங்க மேடம்...

நளினி அவன் காட்டிய இடத்தில் ஒப்பிட்டுவிட்டு வாசற்கதவை மூடுகிறாள்...

பூக்களின் வாசத்தை முகர்ந்தவாறு நடந்து சோபாவில் அமர்கிறாள்... முகத்தில் அவளையுமறியாமல் ஒரு மெல்லிய புன்னகை.... Must be Bhaskar...

தொடரும்..

11.8.09

தாத்தா போறும்.. (சிறுகதை)



வீட்டுவாசலில் வேன் வந்து நின்றதிலிருந்தே பரபரப்பானாள் மனோ.

'சுரேஷ் வேன் வந்துருச்சி. நீங்க கீழ போயில் வேன் பக்கத்துலயே நில்லுங்க. கன்னாபின்னான்னு அடுக்கி ஃபர்னிச்சர்ஸ ஒடச்சிறாம பாத்துக்குங்க. நா இங்க பாத்துக்கறேன். மேக்சிமம் அரை மணி நேரத்துல லோட் பண்ணி முடிச்சாத்தான் நல்ல நேரம் முடியறதுக்குள்ள நாம அங்க போயி சேர முடியும்.'

'சரி' என்று மட்டும் கூறிவிட்டு படியிறங்கி வாசலுக்கு சென்றான் சுரேஷ்.

கடந்த ஒரு வாரமாகவே தனிக்குடித்தனம் செல்வதில் உறுதியாயிருந்தாள் மனோ. சுரேஷ் எத்தனை எடுத்துக் கூறியும் அவள் மசிவதாயில்லை.

சுரேஷ் தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவனுடைய தந்தை மனோகரன் ஒரு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் என்பதால் சற்று கண்டிப்பானவர்.

மனோ சற்று வசதிப்படைத்த குடும்பத்திலிருந்து வந்ததுடன் அவளும் தன் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பதால் சுதந்திரத்துடன் வளர்ந்தவள். இன்றைய தலைமுறைக்கே உரித்தான நள்ளிரவில் உறங்கி காலை எட்டு மணிக்கு மேல் எழுவது, விடுமுறை நாட்களிலும் தோழிகளுடன் ஊர் சுற்றுவது, காசை தண்ணீராக செலவழிப்பது என அவளுக்கு இல்லாத 'நல்ல' பழக்கங்களே இல்லை எனலாம்.

இளம் வயதில் தாய் சொல்லே மந்திரம் என்று பிள்ளையாக இருந்த சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு  தாரம் சொல்லே மந்திரம் என்னும் அளவுக்கு மாறிப் போயிருந்தான். இளைய பருவத்தில் குழந்தைகளை சுயமாக சிந்திக்க அனுமதிக்காத பெற்றோர்களுக்கு முதிர்ந்த வயதில் கிடைக்கும் தண்டனைதான் சுரேஷின் பெற்றோருக்கும் இப்போது கிடைத்தது.

நிறைய தாய்மார்களுக்கு 'என் பிள்ளை நான் சொன்னா தட்டவே மாட்டான்' என்று பீற்றிக்கொள்வதில் பயங்கர பெருமை.. ஆனால் அத்தகைய ஆண் திருமணமானதும் தங்களுடைய மனைவியின் சொல்லையும் தட்டவே மாட்டான் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.

சுரேஷின் தந்தை ஒய்வு பெற்றதிலிருந்தே 'என்னால முன்னே மாதிரி ஃப்ரீயா இருக்க முடியலைங்க. பாபுவும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் தாத்தா, தாத்தான்னு அவர் சொல்றதத்தான் கேக்கறானே தவிர என்னெ சட்டை பண்றதே இல்லை. நாம தனியா போயிரலாம். நா சொன்னா அப்பா ஒரு ஃப்ளாட்ட நமக்காக வாங்கி குடுத்துருவார். நீங்க மட்டும் சரின்னு சொன்னா போறும்.' என்று நச்சரிக்க துவங்கியிருந்தாள்.

'கொஞ்சம் பொறுத்துக்கயேன்.. நாம ரெண்டு பேரும் காலைல போனா ராத்திரிதான் வறோம். நம்மளவிட பாபு கூட ஜாஸ்தி டைம் ஸ்பெண்ட் பண்றது அப்பாதான... அதான் தாத்தா, தாத்தான்னு ஒட்டிக்கறான். அதுவும் ஒரு வகையில நமக்கு நல்லதுதான?'

'இல்லைங்க... எனக்கென்னமோ ஒங்கப்பா அவனெ நம்மகிட்டருந்து பிரிச்சிருவாரோன்னு தோனுது. அத நா அலவ் பண்றதா இல்ல. நா ஏற்கனவே அப்பாகிட்ட சொல்லியாச்சி. அப்பா ஃப்ளாட்ட ரெடி பண்ணிட்டார். நல்ல நாள் பார்த்து வேன் வரைக்கும் ரெடி பண்ணிட்டேன்னு நேத்துதான் அப்பா ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணார். வர்ற புதன் கிழமை நாள் நல்லாருக்காம். காலையிலயே வேன் வந்துரும். நாம ஷிப்ட் பண்றோம்...'

சாதாரணமாக தினமும் மனோகரன் காலையில் ஆறு மணிக்கு வாக் போவதற்கு இறங்கினால் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு திரும்பி வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். கனகம் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பதால் குளிர்காலத்தில் காலை எட்டு மணிக்கு முன் எழமாட்டாள்.

'மாமா வாக் போய்ட்டு திரும்பி வர்றதுக்குள்ள திங்சையெல்லாம் பேக் பண்ணி வண்டில ஏத்திட்டா அவங்களால ஒன்னும் பண்ண முடியாது...' என்பது மனோவின் ஐடியா. இந்த ஐடியாவில்  சுரேஷுக்கு அவ்வளவாக சம்மதம் இல்லையென்றாலும் மனோவை எதிர்த்து பேசும் தைரியம் அவனுக்கு இல்லை.

வேன் வந்தாயிற்று. சாமான்களை ஏற்றுவதில் சுரேஷ் மும்முரமாக இருந்தான். ஆனால் மனோவின் திட்டம் முழுமையாக நிறைவேறுவதற்கு முன் என்றும் இல்லாத வழக்கமாக மனோகரன் வாக் சென்ற அரை மணி நேரத்திலேயே திரும்பி வந்தார்.

வீட்டு வாசலில் வேன் நிற்பதையும் அதில் வீட்டு சாமான்கள் ஏற்றப்படுவதையும் கண்ட மனோகரன் முந்தைய தினம் இரவு தன் நண்பன் தன்னிடம் கூறியது சரிதான் என்று உணர்ந்துக்கொண்டார். ஆயினும் மனோகரிடம் ஒன்றும் கேட்காமல் வீட்டுக்குள் நுழைந்து அன்றைய செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு வழக்கமாக தான் அமரும் ஈசிச் சேரில் அமர்ந்தார். வீட்டிற்குள் நுழைய தைரியமில்லாத சுரேஷ் தன் செல்ஃபோன் வழியாக மாடியிலிருந்த மனோவை அழைத்து, 'மனோ அப்பா திரும்பி வந்துட்டார். இதுவரைக்கும் எங்கிட்ட ஒன்னும் கேக்கல. இப்ப என்ன பண்ணப் போற?' என்றான்.

'எல்லாம் நா பாத்துக்கறேன். நீங்க போயி ஒங்கப்பா ரூம்ல தூங்கிக்கிட்டிருக்கற பாபுவ எழுப்பி ட்றெஸ் பண்ணுங்க. இன்னிக்கி அவன் ஸ்கூலுக்கு போகாட்டியும் பரவால்லை.'

இதென்னடா புதுப் பிரச்சினை என்று நினைத்தான் சுரேஷ். 'நம்ம ப்ளான்ல பாபுவை மறந்துப்போனோமே... அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவானோன்னு ப்ரெடிக்ட் பண்ண முடியாதே' என்ற எண்ணத்துடன் ஹாலில் அமர்ந்திருந்த தன் தந்தையைக் கடந்து அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்தான். பாபு அவன் நினைத்திருந்ததற்கு மாறாக எழுந்து ஸ்கூல் யூனிஃபார்முடன் எதையோ மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான்.

சுரேஷ் அறைக்குள் நுழைந்ததை கண்டவுடன் 'என்னப்பா அதிசயமா இங்க வந்து நிக்கறே... டெய்லி நா ஸ்கூலுக்கு போனதுக்கப்புறந்தானே அம்மாவும் நீயும் எழுந்திரிப்பீங்க?' என்றான் சற்று நக்கலாக.

'டேய் அதிகப்பிரசங்கி. இன்னைக்கி நீ ஸ்கூலுக்கு போக வேணாம். யூனிஃபார்ம கழட்டிட்டு வேற டிரஸ் போட்டுக்கோ... தாத்தா, பாட்டிக்கிட்டு சொல்லிட்டு கிளம்பு.' என்றான் சுரேஷ் எரிச்சலுடன்.

'என்னது, ஸ்கூலுக்கு போவேணாமா? என்னப்பா விளையாடறியா இன்னைக்கி என்ன டே தெரியுமா?'

'என்ன டேவாயிருந்தா என்னடா... போக வேணாம்னு சொல்லிட்டேன் இல்ல. அம்மா டென்ஷனாகறதுக்குள்ள டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு கிளம்பு.'

'எங்க?'

'நாம வேற வீட்டுக்கு போகப் போறோம்.'

'நாமன்னா?'

'நீ, நான், அம்மா...'

'அப்ப தாத்தா, பாட்டி?'

'அதான் இந்த வீடு இருக்கே?'

'ஓ! அதான் விஷயமா? இரு தாத்தாக்கிட்ட கேட்டுட்டு வரேன்.' என்றவாறு எழுந்த பாபு 'தள்ளிக்க..' என்று வழியில் நின்றிருந்த தந்தையை ஒரு கையால் விலக்கிவிட்டு ஹாலுக்குள் நுழைந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த மனோகரின் அருகில் வந்து நின்றான். 'தாத்தா நா இன்னைக்கி ஸ்கூலுக்கு போவேணாமாம். நேத்து நாம ப்ரிப்பேர் பண்ணதெல்லாம் வேஸ்ட்'

மனோகரன் தன் பேரனைப் பார்த்தார். 'இன்னைக்கி என்ன டேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்றதுதான?' என்றார்.

'கேட்டேன் தாத்தா... என்ன டேவாயிருந்தா என்னடா... அதான் போக வேணாம்னு சொன்னேனேங்கறார்.'

'அப்ப போகாத'

பாபு கோபத்துடன் அவரைப் பார்த்தான். 'என்ன தாத்தா வெளையாடறியா? ஹாஃப் இயர்லி எக்ஸாமுக்கு யாராச்சும் ஏதாவது சாக்கு சொல்லி லீவ் போட்டீங்க... அடுத்த வருசமும் இதே க்ளாஸ்தான்னு டீச்சர் சொன்னாங்கன்னு நேத்துதான் ஒங்கிட்ட சொன்னேன்.'

'அத ஒங்கப்பன் கிட்ட சொல்லு. அவனுக்கு நீ என்ன க்ளாஸ் படிக்கறயான்னு தெரியுமோ என்னவோ?'

'எதுக்கு தேவையில்லாம அவன்கிட்ட எதையாச்சும் சொல்லி கன்ப்யூஸ் பண்றீங்க மாமா?'

கோபத்துடன் தன் எதிரில் வந்து நின்ற மருமகளை பார்த்தார் மனோகர். பிறகு திரும்பி தன் பேரனை பார்த்தார். 'பைடா பாபு... சமர்த்தா ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு இவங்களோட போ.... என்னால ஒன்னும் செய்ய முடியாது..'

'டேய் கிளம்புடா..' என்றவாறு தன் மகனை நெருங்கினாள் மனோ...

பாபு இரண்டடி பின்னால் நகர்ந்தான். 'முடியாதும்மா... நா எங்கயும் வரலை... நா இங்கயே இருந்துக்கறேன்.'

மனோ திகைப்புடன் சுரேஷைப் பார்த்தாள். 'நா சொன்னப்போ நம்ப மாட்டேன்னீங்களே இப்ப பாருங்க...'

'என்னப்பா இதெல்லாம்?' என்றான் சுரேஷ் எரிச்சலுடன்..

'அதான் நானும் கேக்கேன்... என்ன இதெல்லாம்? நீ தனியா போறேன்னு சொன்னா நா சம்மதிக்க மாட்டேனு நினைச்சி சொல்லாம இருந்தியா?' என்றார் மனோகர்

'அவர ஏன் கேக்கீங்க... நாந்தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்.'

மனோகர் திரும்பி தன் மருமகளைப் பார்த்தார். 'ரொம்ப தாங்ஸ்ம்மா... தாராளமா போய்ட்டு வாங்க...நா தடுக்கல... பாபு வரேன்னு சொன்னா அவனையும் கூப்டுக்கிட்டு போங்க... ஆனா ஒரு கண்டிஷன்... அவனெ கம்பெல் பண்ணி தூக்கிகிட்டு போகக்கூடாது..'

'ஏன்? எதையாவது சொல்லி அவனெ ப்ரெய்ன்வாஷ் பண்ணி வச்சிருக்கீங்களா?'

மனோகர் வேதனையுடன் சிரித்தார். 'அத பாபு கிட்டயே கேளேன்.'

மனோ தன் மகனை நெருங்கி அவன் முகத்தை பற்றினாள். 'டேய் பாபு அம்மா சொன்னா செய்வே இல்ல...'

பாபு அவளுடைய கரத்தை தட்டிவிட்டான். 'நான் வரலை... இன்னைக்கி ஸ்கூலுக்கு போகாம இருக்க முடியாது.'

'ஏண்டா.. இன்னைக்கி என்ன அப்படி விசேஷம்..'

பாபு கோபத்துடன் தன் தாயைப் பார்த்தான். 'இதாம்மா உங்கிட்ட பிரச்சினை... இன்னைக்கி என்ன விசேஷம்னு கேட்டீயே... அதாலதான் சொல்றேன்... நா வரலை... நா இங்கயே இருந்துக்கறேன்...

மனோ எரிச்சலுடன் 'என்னடா பெரிய மனுசன் மாதிரி பேசறே... சொல்லித்தான் தொலையேன்... இன்னைக்கி என்ன?'

'எனக்கு இப்ப ஹாஃப் இயர்லி எக்ஸாம் நடக்குது... மண்டேலருந்து.. இன்னைக்கி மாத்ஸ்... நேத்து ராத்திரி பத்து மணி வரைக்கும் தாத்தா எல்லா சம்சையும் போட்டு காட்டுனார்...  நாளைக்கி எக்ஸாம்ல செண்டம் கண்டிப்பா கிடைக்கும்டான்னு சொன்னார்.. நீ என்னடான்னா இன்னைக்கி என்னான்னு கேக்கறே..'

'ஆமா... பெரிய ஐ.ஏ.எஸ் படிக்கறே... அடுத்த வருசம் இந்த ஸ்கூல்லயே படிக்கப் போறதில்ல... எல்லாம் காச குடுத்தா ஹாஃப் இயர்லி இல்ல ஃபைனல்லயே பாஸ்சுன்னு எழுதிக் குடுத்துருவாங்க... நீ கிளம்பு...'

'எனக்கு வேற ஸ்கூலும் வேணாம்.. வேற வீடும் வேணாம்... எனக்கு  தாத்தாவையும் ஃப்ரெண்ட்சையும் விட்டுட்டு வர முடியாது... நீ வேணும்னா நீ போ....'

இதுவரை மவுனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் தன் தந்தையை நெருங்கி 'நீங்க சொன்னா அவன் கேப்பான்... சொல்லுங்கப்பா.'

'நீ மொதல்ல தாத்தா சொல்றது கேளு... அதுக்கப்புறம் நீ சொல்றத நா கேக்கறேன்.' என்ற பாபுவை மனோகரே அதிர்ந்துபோய் பார்த்தார்.

'பாபு அப்படியெல்லாம் அப்பாக்கிட்ட பேசாத... தப்பு...' என்றார்.

மனோ உரக்க சிரித்தாள். 'அடடா... செய்யிறதையும் செஞ்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறத பாரு... சுரேஷ் இப்படி பேசிக்கிட்டிருந்தா சரி வராது... நீங்க அவன தூக்கிக்கிட்டு போயி வேன்ல ஒக்காருங்க... சாமான் ஏத்துன வரைக்கும் போறும்... மீதிய அப்புறமா வேன் வந்து ஏத்திக்கட்டும்... நீங்க கெளம்புங்க..'

சுரேஷ் தன் தந்தையைப் பார்த்தான். 'அப்பா ப்ளீஸ்... Don't make this difficult.... அவன்கிட்ட சொல்லுங்களேன்.'

மனோகர் தன் மகனை வேதனையுடன் பார்த்தார். 'நா அவன் கிட்ட சொல்லணும்னு நீ ஏண்டா எதிர்பார்க்கறே... என்னால மட்டும் அவன விட்டுட்டு இருக்க முடியும்னு நினைக்கறியா? இல்ல... ஒங்கம்மாவால உன்னெ விட்டு பிரிஞ்சி இருக்க முடியும்னு நினைக்கறியா? எங்களுக்கு ஒன்னெ விட்டா யார்றா இருக்கா? இங்க ஒனக்கு என்ன பிரச்சினை?'

சுரேஷ் பதிலளிக்காமல் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான்.

மனோகர் தன் மகனின் முகத்தைப் பற்றி தன் வசம் திருப்பினார். 'எதுக்குடா அவள பாக்கறே? இங்க இருக்கறதுல ஒனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா? என் முகத்த பார்த்து சொல்லு..'

சுரேஷ் பதிலளிக்காமல் தலைகுனிந்தான்.

வாசலில் பாபுவின் பள்ளி வேன் வந்து நின்றது... பாபு யார் அனுமதிக்கும் காத்திராமல் வாசலை நோக்கி ஓடினான். 'தாத்தா பை... திரும்பி வர்றப்ப நீதான் வரணும்... சரியா?'

சுரேஷ் அதிர்ந்துபோய் அப்படியே நின்றான். மனோ சுதாரித்துக்கொண்டு பாபுவின் பின்னால் ஓடினாள். ஆனால் பாபு வேகமாக ஓடிச் சென்று வேனில் ஏறிக்கொள்ள அது புறப்பட்டுச் சென்றது.

மனோ அதே வேகத்தில் ஹாலுக்கு திரும்பி, 'இப்ப உங்களுக்கு திருப்திதானே... ஆனாலும் ஒங்க ப்ளான் சக்சஸ் ஆகாது மாமா.. நானும் இவரும் வேன்ல போறோம்... சாய்ந்தரம் இவர் போயி அவனெ ஸ்கூல்லருந்து கூப்டுக்கிட்டு வந்துருவார்... அப்ப என்ன பண்றீங்கன்னு பார்ப்போம்...' என்று இறைந்தாள். 'சுரேஷ் கிளம்புங்க...'

'என்னடா சொல்றா... எங்க கிளம்புறீங்க?'

சுரேஷ் சட்டென்று திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தான்... கனகம் மேல் மூச்சு வாங்க நடக்க முடியாமல் தள்ளாடியவாறு தன் அறையை விட்டு வெளியே வர மனோகர் பதற்றத்துடன் அவளை நோக்கி சென்றார். 'ஒன்னெ யாரு வரச் சொன்னா... இன்னம் ஒரு அரை மணி நேரம் படுக்கையிலயே கிடக்கறதுதான... போ... படு... நா காப்பி போட்டு கொண்டு வரேன்...'

கனகம் அவருடைய கையை தட்டிவிட்டாள். 'சுரேஷ் சொல்லுடா.... எங்க கிளம்புறீங்க?'

'அவங்க தனியா போறாங்களாம்..' என்றார் மனோகர்.. 'நீ போ... நீ சொல்லி ஒன்னும் அவன் ஐடியாவ மாத்திக்கப் போறதில்லை.... ஒரு மகன் இருந்தான்.. இப்ப இல்லைன்னு நினைச்சுக்க...'

'என்னங்க சொல்றீங்க... அப்ப பாபு? அவனெ பாக்காம எப்படீங்க இருப்பீங்க?' உணர்ச்சி பெருக்கீட்டால் மூச்சுவிட முடியாமல் தடுமாறிய தன் மனைவியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தி அறைக்கதவை சாத்தினார்.

சுரேஷ் செய்வதறியாது நின்றான்...

'என்ன மசமசன்னு நிக்கிறீங்க... கிளம்புங்க...' என்றவாறு தன் அருகில் வந்து நின்ற தன் மனைவியை பார்த்தான்...

'ஐ ஆம் சாரி மனோ... நா வரலை...'

'அப்ப ஏத்துன சாமான்...'

'எறக்கி வைக்க சொல்லு....'

திகைத்து நின்ற தன் மனைவியை பொருட்படுத்தாமல் தன் தாயின் அறை கதவை தட்டினான் சுரேஷ்... 'நீ டென்ஷனாகதம்மா... நா எங்கயும் போகலை....'

***********

இன்றைய இன்ஸ்பிரேஷன்

7.8.09

முதல் பார்வையில் 8

பாஸ்கரின் அறை - ஒரேயொரு மேசை விளைக்கைத் தவிர அறை இருளில் மூழ்கியிருக்கிறது...

துண்டிக்கப்பட்ட செல்ஃபோன் திரையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்...

Tight closeup - முகத்தில் சோகத்தின் ரேகை......

மேசை மீதிருந்த விமான பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு எழுந்து படுக்கை மீதிருந்த பயணப் பையை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறுகிறான்...

........

நளினியின் வரவேற்பறை

நளினி தன்னுடைய செல்ல நாயுடன் சோபாவில் அமர்ந்திருக்கிறாள். மல்லிகா சமையலறையில் இருப்பது தெரிகிறது.

உணவு மேசையில் வைக்கப்பட்டிருந்த  செல்ஃபோன் சிணுங்குகிறது.

மல்லிகா - நீ அப்படியே இரு.. நா பாத்துக்கறேன்... அதே ஆளா இருந்தா உண்டு இல்லேன்னு ஆக்கிடறேன்...

நளினி - (புன்னகையுடன்) அக்கா அது ஒன் செல்ஃபோன்...

மல்லிகா சமையலறையிலிருந்து வந்து மேசை மீதிருந்த தன் கைப்பையை திறந்து தன்னுடைய செல்ஃபோனை எடுக்கிறாள்.. தன்னுடைய அண்டை வீட்டு தோழியின் எண்ணைப் பார்க்கிறாள்.

மல்லிகா - என்ன ரேணு... எதுக்கு கூப்டறே... பசங்க ஏதாச்சும்.... இடைவெளி (பதற்றத்துடன்) என்னது, எப்போ? ஐயையோ... இதோ இப்பவே வறேன்... (செல்ஃபோனை துண்டித்துவிட்டு ஓடிப்போய் ஸ்டவ்வை அணைக்கிறாள்...

நளினி - என்னக்கா... என்ன விஷயம்... பசங்க ஏதாச்சும் பண்ணிக்கிட்டாங்களா?

மல்லிகா - (இவளிடம் சொல்வதா வேண்டாமா என தயங்குகிறாள். பிறகு வேண்டாம் என முடிவு செய்கிறாள்) ஆமாடா... சின்னது சொன்ன பேச்ச கேக்காம தகராறு பண்றாளாம்... நீ அப்செட் ஆகாத ரேணு எப்பவுமே இப்படித்தான் சின்னதுக்கெல்லாம் டென்ஷனாயிருவா... ஒனக்கு ராத்திரிக்கி வேண்டியத சமைச்சி வச்சிருக்கேன்.... நா போயி கூப்பிடறேன்.... வரேன்... (கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை துடைத்தவாறே வாசலை நோக்கி ஓடுகிறாள்.)

.......

காவல் நிலையம் - ஆய்வாளர் முன்னிலையில் பதற்றத்துடன் மல்லிகாவும் அவளுடைய தோழி ரேணுகாவும்..

ஆய்வாளர் - இங்க பாருங்கம்மா - டென்ஷனாகாம சொல்ல வந்தத தெளிவா சொல்லுங்க... அப்பத்தான் எங்களாச ஆக்ஷன் எடுக்க முடியும்.. உங்க டாட்டர்ஸ கூட்டிக்கிட்டு போனது ஒங்க ஹஸ்பெண்ட் அத எப்படி கடத்தல்னு சொல்றீங்க?

மல்லிகா தன் கையிலிருந்த கோப்பை அவரிடம் நீட்டுகிறாள் - சார் இது நா என் ஹஸ்பெண்ட டைவோர்ஸ் செய்தப்ப கோர்ட் குடுத்த ஆர்டர். இதுப்படி அவர் வாரத்துக்கு ஒருநாள்தான் குழந்தைகள பாக்க முடியும். அதுவும் நா இருக்கறப்ப என் வீட்டுக்கு வந்து... தேவைப்பட்டா வெளியில கூட்டிக்கிட்டு போகலாம்... என் பெர்மிஷனோட.... அது கூட காலையில ஒன்பது மணியிலருந்து சாயந்தரம் ஆறு மணி வரைக்கும்தான் அவர் என் டாட்டர்ஸ சந்திக்கலாம்...பேசலாம்... ஆனா இன்னைக்கி அவர் நா வீட்ல இல்லாத நேரத்துல என் பெர்மிஷன் இல்லாம கூட்டிக்கிட்டு போயிருக்கார்.

ஆய்வாளர் - மல்லிகாவின் கோப்பிலிருந்த நீதிமன்ற உத்தரவை வாசிக்கிறார். சரி மேடம்.. நீங்க ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக்குடுத்துட்டு போங்க... நா விசாரிக்கிறேன்..

மல்லிகா - சாரி சார். நீங்க இப்பவே ரெண்டு கான்ஸ்டபிள்ச என்னோட அனுப்புங்க  அவரோட வீடு வரைக்கும் போய் பார்த்தா எல்லாம் தெரிஞ்சிரும்..

ஆய்வாளர் - (எரிச்சலுடன்) என்னம்மா எங்களுக்கு வேற வேலையே இல்லையா? நாந்தான் விசாரிக்கிறேன்னு சொல்றேனில்ல?

மல்லிகா - சார்... என் மூத்த பொண்ணுக்கு வயசு 13... வயசுக்கு வந்த பொண்ணு... சின்னதுக்கு ஒன்பது வயசு... ராத்திரி நேரத்துல ஒரு ஆள் வீட்டுக்கு வந்து கடத்திக்கிட்டு போயிருக்கார்னு சொல்றேன்.. நீங்க சாவகாசமா விசாரிக்கிறேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம்? ஒடனே நீங்க ஆக்ஷன் எடுக்கலைன்னா நா வந்த ஆட்டோவுலயே கமிஷனர் ஆஃபீசுக்கு போவேன்... அப்புறம் ஒங்க இஷ்டம்...

ஆய்வாளர் - (எரிச்சலுடன்) என்னம்மா மிரட்டறீங்களா?

மல்லிகா - இல்ல சார்... உண்மையத்தான் சொல்றேன்... என் பொண்ணுங்க இந்த ராத்திரி நேரத்துல எங்க இருக்காங்களோன்னு நா தவிக்கிற தவிப்பு எனக்குத்தான சார் தெரியும்.... இதுவே ஒங்க பிள்ளைங்களாருந்தா....

ஆய்வாளர் - சரிம்மா... சரி... ஒங்க டென்ஷன் எனக்கு தெரியாம இல்ல.... இருங்க... (தன் உதவி ஆய்வாளரைப் பார்க்கிறார்) சார்.. ரெண்டு கான்ஸ்டபிள்ச கூட்டிக்கிட்டு இவங்களோட போய்ட்டு வாங்க சார்... அந்தாள் அங்க இருந்தா இங்க கூட்டிக்கிட்டு வாங்க...

.........

காவல்துறையினரின் ஜீப் ஒரு சந்தில் நுழைகிறது...

மல்லிகா - இங்க தான்... இதான் அவரோட வீடு...

வாகனம் நின்றவுடன் மல்லிகா இறங்கி வாசலை நோக்கி ஓடுகிறாள். உள்ளேயிருந்து தன்னுடைய மகள்களின் குரலைக் கேட்டதும் திரும்பி தன்னுடன் வந்த உதவி ஆய்வாளரை நோக்கி ஓடுகிறாள்.

மல்லிகா - சார்.. என் டாட்டர்ஸ் இங்கதான் இருக்காங்க சார்.. உள்ள குரல் கேக்குது..

ஆய்வாளர் - சரிம்மா... நீங்க ஜீப்ல போய் ஒக்காருங்க... நாங்க பாத்துக்கறோம்... (தன் காவலர்களிடம்) யோவ் உள்ள போய் அந்தாள இழுத்துக்கிட்டு வாங்கய்யா...

காவலர்கள் இருவரும் வீட்டினுள்ளே ஓடுகின்றனர்...

........

பாஸ்கரின் வாகனம் விமான நிலைய வாசலில் சென்று நிற்கிறது. பாஸ்கரும் அவருடன் ஒருவரும் இறங்கி நிற்கின்றனர்...

பாஸ்கர் - (தன் நண்பரிடம் ) நாளைக்கி ஈவ்னிங் திரும்பிருவேன்... நீங்க வரணும்னு இல்லை.. டிரவைர மட்டும் அனுப்புங்க.... இடைவெளி - அப்புறம் ஒரு பெர்சனல் ஹெல்ப்...

நண்பர் - சொல்லுங்க சார்...

பாஸ்கர் தன் பர்சிலிருந்து ஒரு அட்டையை எடுத்து அவரிடம் நீட்டுகிறான்.... இதுலருக்கற அட்றசுக்கு ஒரு சின்ன பொக்கே வாங்கி அனுப்பிருங்க....

நண்பர் - உங்க பேர மென்ஷன் பண்லாமா சார்...

பாஸ்கர் - ஒரு நொடி தயங்குகிறான்... வேணாம்... A friend..னு மட்டும் மென்ஷன் பண்ணிருங்க போறும்....

நண்பர் - சரி சார்... safe journey Sir... பை...

நண்பர் கிளம்பி செல்ல பாஸ்கர் கைப்பையுடன் விமான நிலையத்திற்குள் நுழைகிறான்...

.........

காவல் நிலையம்...

ஆய்வாளரின் மேசையை சுற்றி மல்லிகா, அவளுடைய குழந்தைகள் இருவர், மல்லிகாவின் தோழி ரேணுகா, மல்லிகாவின் முன்னாள் கணவர் ஆகியோர்...

ஆய்வாளர் -  மிஸ்டர்... உங்க டாட்டர்ஸ் முகத்த பார்த்து உங்க மேல ஆக்ஷன் ஏதும் எடுக்காம விடறேன்... உங்க டாட்டர்ச மீட் பண்றதுக்கு கோர்ட் என்ன டைரக்ஷன்ஸ் குடுத்துருக்கோ அதும்படித்தான் நீங்க நடந்துக்கணும்... இல்லன்னா கம்ப்டெம்ட் ஆஃப் கோர்ட்டுன்னு உங்க மேல ரிப்போர்ட் பண்ண வேண்டியிருக்கும்...

கணவர் - (கோபத்துடன்) சார்... விஷயம் தெரியாம பேசாதீங்க... எங்க மதர் ஊர்லருந்து வந்து பேரப்பிள்ளைங்கள பாக்கணும்னு சொன்னாங்க... இவள கூப்ட்டா இவ வீட்ல போன் அடிச்சிக்கிட்டே இருக்கு... வீட்டுக்கு வந்து பாத்தா பிள்ளைங்க ரெண்டும் பக்கத்து வீட்டுல விட்டுட்டு இந்தம்மா எங்கயோ ஊர் சுத்த போயிருந்தாங்க... பிள்ளைங்கள உங்க பாட்டி வந்துருக்காங்க வறீங்களாம்மான்னு கேட்டேன்.. சரிப்பான்னு வந்துருச்சுங்க.... இது ஒரு குத்தமா சார்... இவதான் ஏதோ கம்ப்ளெய்ண்ட் குடுத்தான்னா நீங்களும் வீடு வரைக்கும் வந்து அசிங்கம் பண்ணிட்டீங்களே சார்...

ஆய்வாளர் - என்னம்மா ஒங்கப்பா சொல்றது சரிதானா? நீங்களா விரும்பித்தான் போனீங்களா?

சிறுவர்கள் இருவரும் பயத்துடன் பதில் பேசாமல் தன் தாயைப் பார்க்கின்றனர்...

கணவர் - பாத்தீங்களா சார்... பதில் பேசாம நிக்கறதுலருந்தே தெரியல.... எங்க அம்மா திட்ட போறாங்களோன்னு பயப்படறத பாருங்க... கோர்ட் என்னடான்னா அம்மாவாலத்தான் பிள்ளைங்கள பாத்துக்க முடியும்னு சொல்லுது... இவ பாத்துக்கற லட்சணத்த பார்த்தீங்களே...எங்க போயி ஊர் சுத்திக்கிட்டிருந்தான்னு கேளுங்க சார்...

ஆய்வாளர் - இங்க பாருங்க சார்... அது எங்க வேலையில்லை... நீங்க இனிமே கோர்ட் ஆர்டர மீறாதீங்க.... அவ்வளவுதான் சொல்ல முடியும்... பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு போங்கம்மா...

.......

தொடரும்...

3.8.09

பாசமில்லாத பணம் எதுக்கு? (சிறுகதை)

'அம்மா ஏகாம்பரம் வந்துருக்கேன்.'



எப்போதும் போலவே வாசற்கதவு திறந்துதானிருந்தது.



கண்களை மூடியவாறு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த விசாலாட்சி சிரமப்பட்டு எழுந்து வாசலைப் பார்த்தாள். மாதம் ஒருமுறை வரும் ஏகாம்பரம், அந்த ஏரியா போஸ்ட்மேன்.



'என்னடாப்பா, மறுபடியும் செக் வந்துருக்கா?' விசாலாட்சியின் குரலில் ஒருவித சலிப்பு தொனிப்பதை ஏகாம்பரம் உணராமல் இல்லை. 'பிரிச்சி பாரேன், இந்த தடவையாவது ஏதாச்சும் கடுதாசி வச்சிருக்கானான்னு பாரு.'



ஒவ்வொரு மாதமும் கேட்கும் அதே சலிப்பு. ஏகாம்பரத்திற்கே சலிப்பு தோன்றியது. கையில் இருந்த உறையைப் பிரித்து வாயை ஊதி பார்த்தான். ஊஹும்.. கடிதம் ஏதும் தென்படவில்லை. பெருமூச்சுடன் காசோலையை உருவி ஒருமுறை பார்த்துவிட்டு விசாலாட்சியை பார்த்தான். 'இந்த தடவை பத்தாயிரத்துக்கு வந்துருக்கும்மா.'



'கடுதாசி எதுவும் இல்லையா?' விசாலாட்சிக்கு அப்படி ஏதும் இருக்காது என்று தெரியும். இருந்தும் ஆற்றாமை....



'இல்லம்மா...' இதே பதிலை மாதா மாதம் சொல்லி அவனுக்கே அலுத்துவிட்டது. பரிதாபமாய் எதிரில் நின்றவளைப் பார்த்தான். அவனால் அனுதாபப்பட மட்டுமே முடிந்தது. 'போற வழியில பேங்குல போட்டுட்டு போயிரட்டுமா?'



விசாலாட்சி அலுப்புடன் திரும்பி நடந்தாள். 'வேற என்னச் செய்ய? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எடுத்ததே இன்னும் இருக்கே. இரு பாஸ் புஸ்தகத்த கொண்டு வாரன்.'



ஏகாம்பரம் வாசல் திண்ணையில் அமர்ந்து காத்திருந்தான்.



அவன் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் விசாலாட்சி அம்மாளை பழக்கம். ஆறு மாதம் முன்பு வரை மாதம் ஒருமுறை அவளுடைய மகன் வெளிநாட்டிலிருந்து அனுப்பிய காசோலையை கொண்டு சென்று கொடுப்பதுடன் அவர்கள் இருவருடைய பரஸ்பர பரிச்சயம் நின்று போயிருந்தது.



சில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு மாதம் விசாலாட்சியின் மகன் அனுப்பியிருந்த காசோலை உறையுடன் விசாலாட்சியின் வீட்டு வாசலில் நின்று 'அம்மா ஏகாம்பரம் வந்துருக்கேன்.' என்று குரல் எழுப்பினான்.



சாதாரணமாக ஒரு சில நிமிடங்களிலேயே, 'என்னடாப்பா சுந்தரத்துக்கிட்டருந்து கடுதாசி வந்துருக்கா?' என்றவாறு வாசலுக்கு வந்துவிடும் விசாலாட்சி அன்று ஐந்து நிமிட நேரத்திற்கும் மேலாக காணாததால் ஏகாம்பரம் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.



பழைய காலத்து பாணியில் வீடு விசாலமாக இருந்தது. வாசலில் இருமருங்கிலும் இருந்த நீள் வடிவ திண்ணையைக் கடந்தால் பத்தடி நீள வராந்தாவிற்குப் பிறகு மீண்டும் ஒரு விசாலமான வாசல். பர்மா டீக்கில் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த கதவுகளை திறப்பதற்கு ஏகாம்பரம் சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. கதவுகளை மூடிவிட்டால் உள்ளிருந்து பெருங்குரல் எடுத்து அழைத்தாலும் சாலையில் கேட்காது என்று நினைத்தான்.



கதவைத் திறந்தால் நீஈஈஈண்ட வாணம் பார்த்த முற்றம். முற்றத்தைச் சுற்றி மூன்று பக்கங்களில் 'ப' வடிவத்தில் அமைந்திருந்த வீடு எவ்வித சலனமுமில்லாமல், மனித அரவமே இல்லாமல்... 'அம்மா... அம்மா...' என்றான் ஏகாம்பரம் சற்று உரத்த குரலில்.



பதிலில்லை.



அவனையுமறியாமல் கலவரமடைந்தான். 'ஒடம்பு கிடம்பு சரியில்லையோ....' என்ற முனுமுனுப்புடன் முற்றத்தில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான்.

வாணம் பார்த்த முற்றத்தை ஆக்கிரமித்திருந்த சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைய மனமில்லாததுபோல்..... வீட்டை இருள் கவ்வியிருந்தது. கண்களை இடுக்கியவாறு ஹாலின் கோடியிலிருந்த அறையை பார்த்தான். கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. சற்று நெருங்கியதும் அறைக்குள் மின்விசிறி சுற்றும் ஓசை தெளிவாக கேட்டது. 'இங்கதான் இருக்கணும்' என்று நினைத்தவாறு கதவை திறந்துக்கொண்டு எட்டிப் பார்த்தான். கட்டிலில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. அவனுக்கு தெரிந்தவரை அந்த வீட்டில் விசாலாட்சியைத் தவிர வேரு யாரும் இருக்கவில்லை.



கிட்டே நெருங்கி பார்த்தால் மட்டுமே அடையாளம் தெரியும் அளவுக்கு இருட்டு... சுவர்களில் துழாவி மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்தான். பளிச்சென்ற குழலொலியில் கட்டிலில் கிடந்தது விசாலட்சி அம்மாள்தான் என்பது தெரிந்தது. நெருங்கி மூக்கு நுனியில் வைத்துப் பார்த்தான்.. சீரான மூச்சு வந்துக்கொண்டிருந்ததை உணர்ந்து சமாதானமடைந்தான். ஆனால் நினைவிழந்து கிடப்பது நன்றாகவே தெரிந்தது.



அப்படியே திரும்பி வாசலுக்கு வந்து இருமருங்கிலும் பார்த்தான். தெருக்கோடியில் ரிக்ஷா ஒன்று நிற்பது தெரிந்தது. ஓட்டமும் நடையுமாய் சென்று விசாரித்தான். 'யார்யா அந்த துபாய் அம்மாவா?' விசாலாட்சியை அந்த தெருவிலுள்ள அனைவருக்குமே அப்படித்தான் தெரிந்திருந்தது.

'ஆமாய்யா.. வெரசா வா... டவுண்ல அந்தம்மா போற டாக்டரய்யா வீடு ஒனக்கு தெரியுமா?'



'ஏன் தெரியாது? நீங்க போங்க.. ஒரு நொடியில வந்து நிக்கேன்...'



இருவருமாக அப்படியே தூக்கி ரிக்ஷாவில் வைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டுக்கருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். 'நல்லவேளைய்யா.. இரத்த அழுத்தம் ஜாஸ்தியாயிருக்கு. அதான் மயக்கம் போட்டு விழுந்துருக்காங்க... இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தா கோமா ஸ்டேஜுக்கே போயிருப்பாங்க.'



ஒரு வாரம். குணமாகி வீடு திரும்பும் வரை ஏகாம்பரமும் அவனுடைய வீட்டாரும்தான் பார்த் துக்கொண்டனர்.



'நீ மாத்திரம் அன்னைக்கி வரலைன்னா என் கதி என்னடா ஆயிருக்கும்? ஹூம்... கண்காணா தேசத்துலருந்து மாசா மாசம் கைச்செலவுக்கு பணம் அனுப்புனா போறும்னா அவன் நெனைக்கான்... ஆனா அவன் அனுப்புற பணத்த செலவழிக்க இந்த அம்மா இருக்கணுமேங்கற நெனப்பு அவனுக்கு இல்ல.. ஊர வுட்டு போயி வருசம் அஞ்சாவுது... இதோ வரேன், அதோ வரேன்னுட்டு.. இந்த அம்மா உயிரோட இருக்கறப்ப வந்தா உண்டு.... இல்லன்னா....'



'என்ன பெரிம்மா நீங்க... அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது... நம்ம தம்பி வந்துரும்.. நீங்க உயிரோட இருக்கறப்பவே... என்ன தபாலய்யா நீங்களே சொல்லுங்க...' ரிக்ஷா பெருசு சொல்வதும் சரிதான் என்பதுபோல் தலையை அசைத்தான் ஏகாம்பரம்.



அன்றிலிருந்து ஏகாம்பரம்தான் விசாலாட்சிக்கு எல்லாம்.



துபாயிலிருந்த மகனிடமிருந்து மாதா மாதம் வரும் காசோலையை வங்கியில் செலுத்துவது, விசாலாட்சிக்கு தேவையான தொகையை வங்கியிலிருந்து அவ்வப்போது எடுத்து வருவது, வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை, மருந்து வாங்குவது என ஏகாம்பரத்தை ஏவாத வேலையே இல்லை எனலாம்.



'இந்தாடா... இந்த புஸ்தகத்துல வரவு வச்சி கொண்டாந்துரு...'



ஏகாம்பரம் திடுக்கிட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டான். 'சரிம்மா சாயந்தரம் வர்ற வழியில ஏதாச்சும் வாங்கி வரணுமா?'



விசாலாட்சி பதில் பேசாமல் ஒரு வறட்டு புன்னகையுடன் திண்ணையில் ஏறி அமர்ந்தாள். 'டேய் நா ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே?'



ஏகாம்பரம் வியப்புடன் அவளைப் பார்த்தான். 'என்னம்மா ஏதோ பீடிகை போடறீங்க? என்ன கேக்க போறீங்க?'



'அந்த பொஸ்தகத்துல எவ்வளவு இருக்குன்னு போட்டுருக்கு?'



ஏகாம்பரம் வங்கி பாஸ் புத்தகத்தை புரட்டி பார்த்தான். 'ரெண்டு லட்சத்து சொச்சம் இருக்கும்மா?'



'இப்பிடியே மாசா, மாசம் அஞ்சாயிரம் எடுத்தேன்னு வச்சுக்க இன்னும் எத்தன மாசத்துக்கு வரும்?'



'நாப்பது மாசம்.. எதுக்கு கேக்கீங்க?'



விசாலாட்சி கண்களை இடுக்கிக்கொண்டு கணக்கு போட்டாள். 'அதாவது இன்னும் மூனு வருசம்...'



'நாலு மாசம் கூட... அது சரி.. எதுக்கும்மா இந்த கணக்கு?'



'சொல்றேன்....இன்னைக்கி வந்துதே அந்த கவர்ல எம்புள்ள விலாசம் இருக்கா பாரு.'



ஏகாம்பரம் உறையின் பின்புறத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தான். 'இருக்கும்மா.'



'சரி... அவனுக்கு ஒரு கடுதாசி எழுதணும்... நீ வர்ற வழியில அவனுக்கு அனுப்புறாப்பல ஒரு கவர் வாங்கிக்கிட்டு வா..'



ஏகாம்பரம் குழுப்பத்துடன் விசாலாட்சியின் முகத்தைப் பார்த்தான். அவள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு தெரிந்தது.. அது என்ன என்பதை கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் திண்ணையிலிருந்து இறங்கி நின்றான். 'சரிம்மா.. அப்படியே செஞ்சிடறேன்...' என்றவாறு தெருவில் இறங்கி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிச் செல்ல தெருக்கோடியில் அவன் சென்று மறையும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள் விசாலாட்சி...



மூனு வருசம்.... அவன் அனுப்பிக்கிட்டிருக்கற காச நா வாங்கி, வாங்கி வச்சிக்கிட்டேருந்தா அவனுக்கும் இங்க வரணும்னே தோனாது... புள்ளையே நம்மள வேணாம்னு இருக்கறப்ப அவன் அனுப்பற காசு மட்டும் நமக்கெதுக்கு? பெத்து வளத்ததுக்கு கூலியா? போறும்டா.... நீ அனுப்புன காசு போறும்.. ஒனக்கு அம்மா வேணும்னா உடனே பொறப்பட்டு வா.. இல்லையா, நீயும் வேணாம் ஒன் காசும் வேணாம்னு எழுதி போட்டுறணும்...



ஏகாம்பரம் ஒத்துக்கமாட்டான்... ஆனா பிடிவாதமா எழுத வைக்கணும்... இல்லையா, நீ இந்த வீட்டு பக்கமே வராதேன்னு சொல்லிறணும்... புள்ளையே இல்லேன்னு ஆனப்புறம்......



****************