9.9.09

முதல் பார்வையில் 19

பாஸ்கர், நளினி மற்றும் மல்லிகா மருத்துவர் மோகனின் அறையில் - மோகன் நளினியின் ஸ்கேனிங் மற்றும் எக்ஸ்ரே அறிக்கைகளை பார்வயிடுகிறார்.

மோகன் - I think there is a bright chance Nalini provided....

நளினி - Provided....?

மோகன் புன்னகையுடன் - You believe in me and my team...

பாஸ்கர் - நளினிக்கி நிச்சயமா அது இருக்கு டாக்டர்...

மோகன் - The question is... Does she really want to go through this... I mean அவங்க உங்களோட கம்பல்ஷனுக்காக இதுக்கு ஒத்துக்காம....

பாஸ்கர் நளினியை பார்க்கிறான் - என்ன நளினி, Did I compel you?

நளினி - இல்ல பாஸ்கர் I would never say that.... ஆனா...

மோகன் - சொல்லுங்க... மனசுல என்ன தயக்கம் இருந்தாலும் சொல்லிருங்க... Only then I can be sure of going ahead with this..

நளினி - இது ஒரு மேஜர் ஆப்பரேஷந்தானே டாக்டர்...?

மோகன் _ You can say that... Yes...

நளினி - அதான் யோசிக்கிறேன்....

மோகன் - இதுல என்ன யோசிக்க இருக்கு? மேஜர்னு தெரிஞ்சிதானே நானே இத சஜ்ஜஸ்ட் பண்றேன்...

நளினி - இதுக்கு ரொம்ப செலவாகுமேன்னு...

பாஸ்கர் குறுக்கிடுகிறான் - You need not worry about that Nalini...

மல்லிகா எரிச்சலுடன் குறுக்கிடுகிறாள் - நீங்க எதுக்கு பாஸ்கர் அவள ஒர்றி பண்ண வேணாம்னு சொல்றீங்க? நீங்க குடுக்க போறீங்களா?

மோகன் புன்னகையுடன் - Every one easy... பணம் ஒரு விஷயமேயில்ல மிஸ் நளினி... இது ஒரு Challenging and interesting case... in a way a new experiment as well... அதனால ஆப்பரேஷனுக்குன்னு ஒரு பைசா கூட எங்க ஹாஸ்ப்பிடல் சார்ஜ் பண்ணப் போறதில்லை.... But we would be taping the entire course of the operation as well as your post operation exercises.... அது கூட உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா.

நளினி புன்னகையுடன் - அதாவது என்னெ ஒரு guinea pig மாதிரி யூஸ் பண்ணப் போறீங்க?

மோகன் புன்னகையுடன் - ஒங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா..

நளினி புன்னகையுடன் மல்லிகா இருந்த திசையில் பார்க்கிறாள் - என்ன்னக்கா ஒனக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கா?

மல்லிகா எரிச்சலுடன் மோகனை பார்க்கிறாள் - அது இருக்கட்டும் டாக்டர் நளினிக்கி பார்வை திரும்ப வருமா இல்லையா அத தெளிவா சொல்லாம...

மோகன் - நா கடவுள் இல்லைம்மா... நளினிக்கி திருப்பி பார்வைய குடுக்க முடியும்கற நம்பிக்கை எனக்கு இருக்கு... என்னுடைய நம்பிக்கையை நீங்களும் நம்பணும்... அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்...

இதற்கு மேலும் இந்த பேச்சை தொடர விரும்பவில்லை என்பதுபோல் மோகன் எழுந்து நிற்கிறார்.

பாஸ்கரும் வேறு வழியில்லாமல் எழுந்து நிற்கிறான் - அப்ப ஆப்பரேஷன் என்றைக்கி வச்சுக்கலாம் டாக்டர்....

மல்லிகா குறுக்கிடுகிறாள் - அத அப்புறமா டிசைட் பண்ணிக்கலாம்...

நளினி - எப்ப வேணும்னாலும் வச்சிக்கலாம் டாக்டர் - நாளைக்கே வேணும்னாலும்....

மல்லிகா கோபத்துடன் அறையை விட்டு வெளியேறுகிறாள்...

மோகன் புன்னகையுடன் நளினியை நெருங்கி அவளுடைய கரங்களை பற்றுகிறாள் - That is the spirit... I will discuss with my team and let you know...

நளினி - தாங்ஸ் டாக்டர் - பாஸ்கர் போலாமா?

பாஸ்கர் - யெஸ் நளினி - தாங்ஸ் டாக்டர் I will keep in touch

பாஸ்கர் நளினியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான்....

மோகன் - one second Bhaskar, I would like to talk to you...

பாஸ்கர் தயக்கத்துடன் நளினியை பார்க்கிறான்....

நளினி புன்னகையுடன் - நீங்க பேசிட்டு வாங்க பாஸ்கர் I will wait outside...

.....

பாஸ்கர் மோகனின் அறையிலிருந்து வெளியில் வருகிறான் - நளினி மற்றும் மல்லிகாவை காணாமல் திகைத்துப்போய் வரவேற்பறையை நோக்கி நடக்கிறான் - அங்கும் அவர்கள் காணாமல் ஓட்டமும் நடையுமாக வாசலைக் கடந்து வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்தை நோக்கி செல்கிறான் - அங்கே மல்லிகா கோபத்துடன் ஏதோ கூற நளினியும் கோபத்தில் பதிலளிப்பதை காண்கிறான் - பாஸ்கர் அவர்களை நெருங்குகிறான்...

நளினி - இல்லக்கா - பாஸ்கர் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

மல்லிகா பதிலளிக்காமல் அவர்களை நெருங்கிய பாஸ்கரை எரிச்சலுடன் பார்க்கிறாள் - எங்கள கொஞ்ச நேரம் தனியா விடுங்களேன் ப்ளீஸ்...

பாஸ்கர் திகைப்புடன் அகல்கிறான்

நளினி கோபத்துடன் - என்னக்கா நீ டீசென்சியே இல்லாம - நீ சொல்றதையெல்லாம் கேட்டுட்டு பேசாம இருக்காரேங்கறதுக்காக - This is too muchக்கா...

மல்லிகா - ஆமாடி.... எனக்கு நீதான் முக்கியம் - இவர் யாரு? நேத்து வந்தவர்.... ரெண்டு வாரம் இருப்பார். அப்புறம் போயிருவார்... இந்த் ஆப்பரேஷனால ஒனக்கு ஏதாச்சும் ஆயிருச்சின்னா... - உணர்ச்சி மேலிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் - சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்த மாணிக்கம் (டிரைவர்) அவர்களை நோக்கி விரைகிறார் -

நளினியின் கண்களும் கலங்குகின்றன - மல்லிகாவை நெருங்கி அவளை அணைத்துக்கொள்கிறாள் - அக்கா ப்ளீஸ் - அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது - மிஞ்சிப்போனா பார்வை வராது - அவ்வளவுதானே....

மல்லிகா - அதுக்கில்லடி....

நளினி - எனக்கு பாஸ்கர் மேலயும் டாக்டர் மேலயும் நம்பிக்கை இருக்கு - எல்லாத்துக்கும் மேல கடவுள் மேல நம்பிக்கையிருக்கு....

மல்லிகா கண்களை துடைத்துக்கொண்டு தன் அருகில் நிற்கிற மாணிக்கத்தை பார்க்கிறாள் - வண்டிய எடுங்கண்ணே எங்க வீட்டுக்கு போயி சாப்ட்டுட்டு போலாம்.

நளினி மெல்லிய குரலில் - அப்ப பாஸ்கர்?

மல்லிகா - அவர போகச் சொல்லிரு - மல்லிகா காரில் ஏறி அமர்கிறாள் - நளினி பாஸ்கரை தேடுவதுபோல் அங்கும் இங்கும் பார்க்க சற்று தொலைவில் நின்றவாறு இவர்களையே கவனித்துக்கொண்டிருக்கும் பாஸ்கர் அவளை நெருங்குகிறான்...

பாஸ்கர் - I am here Nalini...

நளினி - மெல்லிய குரலில் - I am sorry Bhaskar - டாக்டர் ஏதும் சொன்னாரா?

பாஸ்கர் - ஆப்பரேஷன இந்த வீக் எண்ட்ல வச்சிக்கலாம்னு சொன்னார்...

நளினி - வச்சிக்கலாம் பாஸ்கர்... I want to see this through..... whatever happens...

பாஸ்கர் - நல்லதுதான் நடக்கும் நளினி... எனக்கு நம்பிக்கையிருக்கு.... நீ மல்லிகா கூட போ.... எனக்கு எங்க சர்க்கிள் ஆபீஸ் வரைக்கும் போகணும்....சாயந்தரமா நா ஃபோன் பண்றேன்...பை...

நளினி - தயங்குகிறாள் - அக்கா ஏதோ கோபத்துல... I am really sorry Bhaskar...

பாஸ்கர் புன்னகையுடன் குறுக்கிடுகிறான் - சேச்சே... நா அத அப்பவே மறந்துட்டேன்... நீ கெளம்பு...

நளினி - Thanks for everything - call me in the evening or night...

பாஸ்கர் - I will call you in the night... bye..

நளினி மாணிக்கத்தின் துணையுடன் காரில் ஏற கார் புறப்பட்டு செல்கிறது... அது சென்று மறைந்ததும் பாஸ்கர் தன் வாகனத்தை நோக்கி செல்கிறான்..

தொடரும்...

4.9.09

முதல் பார்வையில் 18

நளினி - I don't want to go through with this Bhaskar...

பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்துகிறான்.

நளினி அவனை பார்க்காமல் சாலையையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். அவளுடைய மனதில் இருந்த குழப்பத்தை அவனால் உணர முடிகிறது.

பாஸ்கர் - ஏன் நளினி? டாக்டர் ரூம்ல Whatever you say Doctor, I am in your handsனு சிரிச்சிக்கிட்டே நீ சொன்னப்போ நீ இதுக்கு சம்மதிச்சேட்டுன்னு நினைச்சேன்..

நளினி பதில் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்.

பாஸ்கர் - ஆப்பரேஷன் சக்சஸ் ஆகும்ங்கறது என்ன நிச்சயம்னு கேக்கறியா?

நளினி கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் அவனைப் பார்க்கிறாள். - அப்படி நடக்காதுன்னு என்ன நிச்சயம் பாஸ்கர்? டாக்டருக்கே அத ஷ்யூரா சொல்ல முடியலையே. நா அந்த ஏமாற்றத்த தாங்கிக்கறேனோ இல்லையோ மல்லிகாவால நிச்சயம் முடியாது.

பாஸ்கர் எப்படி சொல்லி அவளை நம்பிக்கைக் கொள்ள வைப்பது என புரியாமல் அமர்ந்திருக்கிறான்.

சிறிது நேரம் சாலையில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்தவாறு இருவரும் அமர்ந்திருக்கின்றனர்.

குரல் - சார் இங்க நிக்க கூடாது... வண்டிய எடுங்க...

பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை கிளப்பி போக்குவரத்துடன் கலக்கிறான். சிறிது தூரம் வரை சென்றதும் திரும்பி நளினியைப் பார்க்கிறான்.

பாஸ்கர் - இப்ப எங்க போகணும் நளினி?

நளினி - மெல்லிய குரலில் - வீட்டுக்கே போகலாம்....I want to be also for some time...

பாஸ்கர் - மல்லிகா கிட்ட இப்ப சொல்ல வேணாமா? இன்னைக்கி இங்க வந்தது கூட அவங்களுக்கு தெரியாது போலருக்கே?

நளினி - It's OK... நா சொல்லிக்கறேன்.... நீங்க வீட்டு வாசல்ல ட்ராப் பண்ணிட்டு போங்க..

நளினி இருந்த மனநிலையில் அவளுடன் பேசுவதில் பயனிருக்காது என்ற நினைப்புடன் பாஸ்கர் சரியென்று தலையை அசைத்தவாறு வாகனத்தின் வேகத்தை கூட்டுகிறான்...

நளினியின் வீட்டை அடைந்ததும் அவள் இறங்கி அவனை பார்த்து லேசாக புன்னகை செய்கிறாள் - தாங்ஸ் பாஸ்கர்... I will call you later in the night... பை...

அவள் வாசற்கதவைத் திறந்து உள்ளே செல்லும் வரை காத்திருந்துவிட்டு பாஸ்கர் புறப்படுகிறான்...

....

பின் மாலை - நளினியின் வரவேற்பறை - நளினியும் மல்லிகாவும் எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர்.

மல்லிகா - இங்க பார் நளினி இந்த அட்டெம்ப்ட் வேணுமா, வேணாமாங்கறத நீதான் டிசைட் பண்ணணும்... எனக்கும் இது ஆரம்பத்துல தேவைதானான்னு தோனிச்சி. ஆனா சங்கர் நேத்ராலயான்னதும் ட்ரை பண்ணா என்னன்னு நினைச்சேன்...

நளினி - நம்மால இத afford பண்ண முடியுமாக்கா? அத பத்தி யோசிக்கவேயில்லையே?

மல்லிகா நெருங்கி தங்கையின் கரங்களை ஆதரவாக பற்றுகிறாள் - இங்க பார் நளினி - வேணுங்கற பணத்த எப்படியாச்சும் புரட்டிறலாம் - போறலைன்னா என் flat இருக்கவே இருக்கு, மார்ட்கேஜ் பண்ணிறலாம்.

நளினி சோகத்துடன் சிரிக்கிறாள் - அத்தான் வேணாம்.. ஆனா அவர் சம்பாத்தியத்துல வாங்குன வீடு மாத்திரம் வேணும்... என்ன அக்கா நியாயம் இது?

மல்லிகா கோபத்துடன் - இங்க பார்... அந்தாளுக்கு பத்துவருசமா சமைச்சி போட்டுருக்கேன்... அது மட்டுமா என் சம்பளத்த முழுசும் குடுத்துருக்கேன்... அவருக்கு அந்த வீட்டுல என்ன உரிமையிருக்கோ அந்த அளவுக்கு எனக்கும் உரிமையிருக்கு... சரி அது எதுக்கு இப்போ? பணத்துக்காகத்தான் நீ தயங்குறன்னா அந்த வீட்ட விக்கவோ அடகு வைக்கவோ நா தயார்... சொத்து எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம் நளினி...

நளினி - சரி... ஒருவேளை ஆப்பரேஷன் சக்சஸ் ஆகலன்னா?

மல்லிகா பதிலளிக்காமல் சிந்தனையில் ஆழ்கிறாள்

நளினி - என்னக்கா பதிலையே காணம்?

மல்லிகா - மெல்லிய குரலில் - விதின்னு நினைச்சிக்க வேண்டியதுதான்... சுவர்க் கடிகாரத்தை பார்த்துவிட்டு எழுந்து நிற்கிறாள் - டைம் ஆகுது நளினி - அதுங்க ரெண்டும் தேடிக்கிட்டு இருக்கும்... நா கெளம்பறேன்... நீ பாஸ்கருக்கு ஃபோன் பண்ணி காலையில வந்து பிக்கப் பண்ண சொல்லு... மாணிக்கம் அண்ணன என் வீட்டுக்கு ஒரு பத்து மணிக்கி வரச் சொல்லு... நா இதுங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியாருக்கேன்... என்ன?

நளினி - சலிப்புடன் - என்னக்கா நீ.... எல்லாத்தையும் நீயே டிசைட் பண்ணிட்டா ஆச்சா?

மல்லிகா நளினியை நெருங்கி அவள் தோளை தொடுகிறாள் - இங்க பார் நளினி நீ வேற நா வேறயா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது... பாஸ்கர் மேல நம்பிக்கையிருக்கோ இல்லையோ எனக்கு அந்த ஹாஸ்ப்பிடல் மேல நம்பிக்கை இருக்கு... நம்ம பக்கது வீட்டு ஆண்ட்டி கூட அதான் சொன்னாங்க... தைரியமா செய் மல்லிகான்னு...

நளினி - கேலியுடன் - ஓ! இத எல்லார்கிட்டயும் சொல்லியாச்சா?

மல்லிகா பதிலளிக்காமல் வாசலை நோக்கி நடக்கிறாள் - டேபிள்ல எல்லாத்தையும் எப்பவும் போலவே வச்சிருக்கேன் - சும்மா மனச போட்டு அலட்டிக்காம சாப்டுட்டு படு - காலையில மறந்துபோயி காப்பிய குடிச்சிறாத - வெறும் வயித்துலதான் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க - நா வீட்டுக்கு போயி ஃபோன் பண்றேன்...

மல்லிகா வாசற்கதவை மூடிக்கொண்டு செல்ல நளினி சோபாவில் இருந்து சரிந்து தரையில் அமர்ந்து அருகில் கிடந்த ஸ்வீட்டியை தடவியவாறு நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருக்கிறாள்.

செல்ஃபோன் ஒலிக்கிறது... பாஸ்கர் காலிங் என்ற குரல்

நளினி அதை பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கிறாள் - ஆனால் செல்ஃபோன் விடாமல் ஒலிக்கிறது - ஸ்வீட்டியும் எழுந்து நின்று அவளை பார்த்து குலைக்கிறது அதை எடுத்து பேசேன் என்பதுபோல - வேறு வழியின்றி அதை எடுத்து - சொல்லுங்க பாஸ்கர் என்கிறாள் மெல்லிய குரலில்...

பாஸ்கரின் குரல் எதிர் முனையிலிருந்து ஒலிக்கிறது - காலையில ஆறு மணிக்கெல்லாம் நா அங்க இருப்பேன் நளினி...

நளினி பதிலளிக்காமல் அமர்ந்திருக்கிறாள்...

பாஸ்கரின் குரல் - ரெடியாயிரு... ஒன்னும் யோசிக்காத... நாளைக்கி வெறும் டெஸ்ட் மட்டுந்தானே... ரிசல்ட்டையெல்லாம் பாத்துட்டு டிசைட் பண்லாம், சரியா?

நளினி - மெல்லிய குரலில் - சரி..

பாஸ்கர் - குட்நைட்.

நளினி பதிலளிக்காமல் இணைப்பு துண்டித்துவிட்டு எழுந்து தன் அறையை நோக்கி நகர்கிறாள் - கவனக்குறைவால் காலடிகளை கணக்கிடாமல் சென்று டைனிங் டேபிளில் மோதிக்கொள்கிறாள் - மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கூஜா சாய்ந்து விழ ஸ்வீட்டி குறைக்கிறது.

.......


காலை - மருத்துவமனை - வரவேற்பறையில் பாஸ்கர் அமர்ந்திருக்கிறான் - அருகில் மல்லிகா

மல்லிகா - இன்னும் டெஸ்ட் முடியலையா?

பாஸ்கர் - காலையில வந்ததும் Fastingல எடுக்க வேண்டிய ப்ளட் சாம்பிள் எல்லாம் எடுத்தாச்சி.... அதுக்கப்புறம் இங்கவே அவளுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் குடுத்தாங்க... ஒன் ஹவர் ஆகுது - அதுக்கப்புறம் எடுக்க வேண்டிய ப்ளட் சாம்பிள்ஸ் எடுப்பாங்களாம் - சுகர் லெவல் பார்ப்பாங்க போலருக்கு - அதில்லாம இன்னும் விஷன் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்கன்னு டாக்டரோட அசிஸ்டெண்ட் சொன்னாங்க... பகல் ஆயிரும் போலருக்கு..

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே முந்தைய தினம் அவன் சந்தித்த மருத்துவர் மோகன் அவனை நோக்கி வருவதை பார்த்த பாஸ்கர் எழுந்து நிற்கிறான்.

அவர் நெருங்கியதும் மல்லிகாவை காட்டி - இவங்கதான் நளினியோட எல்டர் சிஸ்டர் - இவங்கதான் நளினிக்கி எல்லாமே.

மோகன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கை குவிக்கிறார் - வாங்க ரூமுக்கு போகலாம்.

மூவரும் மருத்துவரின் அறைக்குள் நுழைய அவர் கதவை மூடிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்கிறார்.

மோகன் - மல்லிகாவை பார்க்கிறார் - டெஸ்ட எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிரும்... அதுக்கு முன்னால உங்கக்கிட்ட சில கேள்விங்கள கேக்கலாமா?

மல்லிகா - கேளுங்க டாக்டர்..

மோகன் - நளினியோட இப்போதைய ப்ராப்ளம் பார்வை இல்லை... அவங்களோட ஆட்டிட்யூட்தான்... அவங்களுக்கு இதுல அவ்வலவா நம்பிக்கையில்லைன்னு நினைக்கிறேன் - பேஷண்ட்டுக்கு இஷ்டமில்லாத ஒரு அட்டெம்ப்ட்ட நாம பண்ணணுமான்னுதான் நா யோசிக்கிறேன்... என்ன சொல்றீங்க?

மல்லிகா சலிப்புடன் பாஸ்கரைப் பார்க்கிறாள் - எல்லாம் உன்னாலதான் என்பதுபோல்...

பாஸ்கர் - நீங்க சொல்றது உண்மைதான் டாக்டர்... But I will talk to her tonight. She will definitely agree..

மோகன் - Maybe... ஆனா உங்களோட கம்பல்ஷனுக்காக ஒத்துக்கிட்டா போறாது மிஸ்டர் பாஸ்கர் - அவங்களுக்கே நமக்கு பார்வை கிடைக்கணும்னு ஒரு ஆசை வரணும்... அவங்களோட hundred precent cooperation இருந்தத்தான் நா என்ன திறமையா ஆப்பரேட் பண்ணாலும் அது சக்சஸ் ஆகும் - மல்லிகாவை பார்க்கிறார் - நீங்க சொல்லுங்கம்மா - நளினிக்கி சரியா எத்தன வயசுல பார்வை மங்க ஆரம்பிச்சது?

மல்லிகா - மூனு வயசு இருக்கும் டாக்டர்... அதுக்கு முன்னாலயே இந்த deficiency இருந்துருக்கலாம்...

மோகன் - ட்ரீட்மெண்ட் I mean சர்ஜரி ஏதாச்சும் செஞ்சீங்களா?

மல்லிகா - சர்ஜரி எதுவும் பண்ணல டாக்டர்.. ஆனா அப்பா அவள நிறைய டாக்டர்ஸ் கிட்ட கொண்டு போனாங்க - பெரும்பாலும் கவர்ண்மெண்ட் ஆஸ்பிட்டல்ஸ்தான்.

மோகன் - I see - சரியா டயாக்னைஸ் பண்ணிருந்தா அப்பவே ஈசியா செஞ்சிருக்கலாம்...

மல்லிகா - எரிச்சலுடன் பாஸ்கரை பார்க்கிறாள் - என்ன பாஸ்கர் இப்படி சொல்றார் டாக்டர்? அப்ப இப்ப முடியாதா?

மோகன் - சிரிக்கிறார் - அப்படி நா சொல்ல வரலை.

மல்லிகா கண்டிப்புடன் - டாக்டர் முடியுமா முடியாதாங்கறத தெளிவா சொல்லிருங்க - முடியாத விஷயத்துக்கு மறுபடியும் நளினிய கஷ்டப்படுத்த நா விரும்பல.

பாஸ்கர் - மல்லிகா ப்ளீஸ் - உணர்ச்சிவசப்படாதீங்க..

மல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள் - பாஸ்கர் இது எங்க லைஃப் விஷயம். உங்களுக்கு சொன்னாலும் புரியாது. நா நளினிய கூட்டிக்கிட்டு போறேன் (பாஸ்கர் எழுந்து அவளை தடுக்க முயல்கிறான். ஆனால் மல்லிகா அவனுடைய கையை விலக்கிவிட்டு வெளியேறுகிறாள்)

பாஸ்கர் - What is this Doctor? You could have been little more tactful....

மோகன் - I agree Bhaskar - I am sorry - I never thought she would react this way.

பாஸ்கர் - Don't worry Doctor I'll passify her...

பாஸ்கர் எழுந்து அறைக்கதவை திறந்துக்கொண்டு ரிசெப்ஷனை நோக்கி விரையும் மல்லிகாவின் பின்னால் ஓடுகிறான்.

ரிசெப்ஷனை நெருங்கும் மல்லிகா - இங்க லேப் எங்கங்க இருக்கு?

ரிசெப்ஷனில் இருக்கும் பெண் பதிலளிப்பதற்கு முன் மல்லிகாவை நெருங்கும் பாஸ்கர் - மல்லிகா வாங்க நா காமிக்கிறேன் என்றவாறு அவளை வற்புறுத்தி அழைத்து செல்கிறான். -

அவர்கள் இருவரும் பரிசோதனை கூடத்தை நெருங்கவும் நளினியை சக்கர நாற்காலியில் அமர்த்தி ஒரு நர்ஸ் வெளியில் வரவும் சரியாக இருந்தது.

நளினி புன்னகையுடன் - நீ எப்ப வந்தே?

மல்லிகா - அவளுடைய கரத்தை பற்றி - போறும் நளினி - வா போலாம்.

நளினி திகைப்புடன் பாஸ்கரை பார்க்கிறாள்.. அவன் ஒன்றுமில்லை பதறாதே என சாடை காட்டுகிறான்.

நளினி புன்னகையுடன் மல்லிகாவின் கரங்களை பற்றுகிறாள் - வாக்கா.. டென்ஷனாகாத - டெஸ்ட் எல்லாம் முடிஞ்சிருச்சி - மோகன் சார் கிட்ட சொல்லிட்டு போக வேண்டியதுதான் - நர்சை பார்க்கிறாள் - என்ன சிஸ்டர் இன்னும் ஏதாவது டெஸ்ட் இருக்கா?

நர்ஸ் - யெஸ் மேடம் - கண்ண Xray அப்புறம் scanning எடுக்க சொல்லியிருக்கார்.

மல்லிகா - எரிச்சலுடன் - அதெல்லாம் ஒன்னும் வேணாம்.

நளினி - சிரிக்கிறாள் - என்னக்கா நீ... இவ்வளவு நேரம் எல்லாத்தையும் செஞ்சிட்டு.... என்ன சிஸ்டர் ஒரு அரை மணி நேரம் ஆவுமா இந்த ரெண்டுக்கும்?

நர்ஸ் - அஞ்சி நிமிஷம்தான் ஆவும்...

நளினி - பார்த்தியா? அதயும் முடிச்சிட்டு போயிருவோம்... நீ பாஸ்கர் கூட பேசிக்கிட்டிரு... வந்துடறேன்... பாஸ்கரை பார்க்கிறாள் - Talk to her Bhaskar.

நர்ஸ் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு அருகிலிருந்த அறைக்குள் நுழைந்து கதவை மூட மல்லிகா கதவை தட்டுகிறாள்..

பாஸ்கர் - மல்லிகா வாங்க ப்ளீஸ் - எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க பாருங்க...

மல்லிகா - எரிச்சலுடன் - நா இங்கயே இருக்கேன், நீங்க போங்க.

பாஸ்கர் சிறிது நேரம் தயங்கி நிற்கிறான். பிறகு அவனும் சற்று தள்ளி சுவரில் சாய்ந்தவாறு நிற்கிறான்.

.தொடரும்..........

3.9.09

முதல் பார்வையில் 17

பிற்பகல் - நளினியின் வீடு - பாஸ்கரும் நளினியும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். நளினியின் முன்பு அவளுடைய மடிக்கணினி.

பாஸ்கர் - It's really amazing. உன்னால எப்படி லாப்டாப்ப இவ்வளவு ஈசியா யூஸ் பண்ண முடியுது?

நளினி சிரிக்கிறாள் - கீ போர்ட்ல 'F' & 'J' லெட்டர் கீய்ஸ் மேல ஒரு சின்ன கோடு - டேஷ் மாதிரி - இருக்குது பாருங்க.

பாஸ்கர் டீப்பாய் மீது இருக்கும் மடிக்கணினி கீபோர்டை குனிந்து பார்க்கிறான் - ஆமா.

நளினி - டைப்பிங்கோட ஃபர்ஸ்ட் லெசன் என்ன? ஞாபகம் இருக்கா?

பாஸ்கர் சிரிக்கிறான் - நா One finger Operator -

நளினியும் சிரிக்கிறாள் - நா சொல்றேன். Left handல - asdfgf. அப்புறம் Right handல ;lkjhj. நா சொன்ன F அப்புறம் J கீய்ஸ்ல ரெண்டையும் அது மேலருக்கற கோட வச்சி identify பண்ணி எங்க ஆள்காட்டி விரல வச்சிக்கிட்டா போறும், entire keyboard keysஐயும் யூஸ் பண்ண முடியும். இப்ப பாருங்க. இந்த ரெண்டு கீய்ஸ்ல இருந்து abcde அடிச்சி காட்றேன்.

நளினியின் விரல்கள் கீபோர்ட் மீது நளினமாக ஓடுகின்றன. ஒரு சிறிய தவறும் இல்லாமல் திரையில் ஆங்கில எழுத்தின் 26 எழுத்துக்களும் அகர வரிசையில் பதிய பாஸ்கர் வியப்புடன் பார்க்கிறான்.

நளினி - உங்களால ஸ்க்ரீன்ல இருக்கறத பாக்க முடியும். ஆனா என் லாப்டாப்ல நா அடிக்க ஸ்க்ரீன்ல டைப் ஆகற எழுத்துகள என் லாப்டாப் ஸ்பீக்கர் வழியா என்னால கேக்க முடியும். இருங்க ஸ்பீக்கர சவுண்ட கூட்டறேன்.

நளினியின் இடது கை விரல்கள் F பட்டனிலிருந்து இரண்டு வரிகள் கீழே நகர்ந்து கீழ் வரிசையில் இருந்த fn பட்டனையும் வலது கை J பட்டனிலிருந்து இரண்டு வரிகள் மேலே சென்று ஸ்பீக்கரின் ஒலியை கூட்டும் function பட்டனை அழுத்துகின்றன. அதன் பிறகு அவள் ஒவ்வொரு பட்டனை அழுத்த, அழுத்த அதன் ஒலி ஸ்பீக்கர் வழியே கேட்கிறது.

நளினி புன்னகையுடன் பாஸ்கரை நோக்கி பார்க்கிறாள் - Simple, is it not? இதே மாதிரிதான் செல்ஃப்போன் பேட்லயும் '5' பட்டன் மேல ஒரு சின்ன கோடு இருக்கும். அத வச்சியே மொத்த நம்பரையும் ஆப்பரேட் பண்ணலாம்?

பாஸ்கர் - wonderful... சரி நீ லாப்டாப்ல அடிச்சத எப்படி ப்ரிண்ட் எடுக்கறே?

நளினி - எல்லாத்துக்கும் இப்ப software இருக்கு பாஸ்கர். ஸ்க்ரீன்ல இருக்கறத அப்படியே ப்ரெய்லா அடிக்கறதுக்கு ப்ரிண்டர் இருக்கு. அது கொஞ்சம் காஸ்ட்லி. அதனால நா லாப்டாப்ப எடுத்துக்கிட்டு ப்ளைண்ட் ஸ்கூலுக்கு போயிருவேன். அங்க இருக்கறவங்க கிட்ட குடுத்து நா அடிச்சத அப்படியே ப்ரெய்ல் பிரிண்ட் போட்டுறுவேன். இப்பல்லாம் ஆடியோ புக்ஸ் கூட நிறைய வந்துருச்சி. All you need is money.. என் மொபைல்ல கூட நிறைய ஆடியோ புக்ஸ் வச்சிருக்கேன். போர் அடிக்கறப்ப ஹெட் ஃபோன் வச்சிக்கிட்டு உக்காந்தா போறும். நேரம் போறதே தெரியாது. I am so used to darkness Bhasker.... (அவளுடைய குரல் சட்டென்று மாறுகிறது) This is my world... I mean the world of darkness, I don't need light anymore...

அவள் ஆங்கிலத்தில் கூறிய வாக்கியத்தை மடிக்கணினியில் அடிக்க கணினியில் இருந்து வந்த ஒலிவடிவம் அறையெங்கும் நிறம்புகிறது....

நளினியின் முகத்தில் தென்பட்ட ஒருவித வேதனை பாஸ்கரின் மனதை பிசைகிறது. அவளை நெருங்கி அவளுடைய கரங்களைப் பற்றுகிறான்.

பாஸ்கர் - I fully understand your feelings Nalini. ஆனா இதுவே போறும்னு நீ நினைக்கறத நினைச்சாத்தான்....

நளினி - I am comfortable with what I am Bhaskar... That's what I am trying to tell you...

பாஸ்கர் - நா இல்லேன்னு சொல்லல நளினி.. ஒருவேளை இப்ப இருக்கற மெடிக்கல் facility நீ சின்னவளா இருக்கறப்ப இருந்துருந்தா அப்பவே இத நல்லவிதமா ட்ரீட் பண்ணியிருக்க முடியுமே? வசதிகள் இருக்கறப்ப யாராச்சும் அத வேணாம்னு சொல்வாங்களா?

நளினி - But what's the guarantee? எனக்கு இப்ப அது தேவையில்லையே... I am comfortable as it is... ஏன்? எதுக்கு மறுபடியும் ஒரு சோதனை... அப்புறம் சக்சஸ் ஆகலன்னா... அதனால வேதனை... நா இப்படியே இருந்தடறேனே...

அவளுடைய குரல் தழுதழுக்க அவனையுமறியாமல் அவளை நெருங்கி அணைத்துக்கொள்கிறான்... நளினி அவன் தோள்மீது தலை சாய்த்து அழுகிறாள். பாஸ்கர் அவளை தட்டிக்கொடுத்தவாறு அவள் அழுது முடிக்கும்வரை காத்திருக்கிறான். ஸ்வீட்டி தலையை தூக்கி அவர்கள் இருவரையும் சோகத்துடன் பார்க்கிறது...

நளினி அழுது முடித்து நிமிர்ந்து அவனை விட்டு சற்று தள்ளி அமர்கிறாள்.

நளினி - I am sorry Bhaskar... I just lost control....

பாஸ்கர் அவளுடைய கரங்களை பற்றுகிறான் - It's OK...

சிறிது நேரம் இருவரும் மவுனமாக அமர்ந்திருக்கின்றனர்.

நளினி - எத்தன மணிக்கி போகணும் பாஸ்கர்?

பாஸ்கர் - இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருந்தா நல்லதுன்னு சுரேஷ் ஃபோன் பண்ணார். அநேகமா நீதான் இன்னைக்கி கடைசி பேஷண்ட்டுன்னு நினைக்கிறேன். அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருக்கறவங்களையெல்லாம் முடிச்சிட்டு நம்மள பாக்கறேன்னு சொல்லியிருக்காராம்...

நளினி எழுந்து நிற்கிறாள். - அப்ப கிளம்புங்க...

பாஸ்கரும் எழுந்து நிற்கிறான் - you are OK now?

நளினி புன்னகையுடன் அவனை பார்க்கிறாள் - Yes... let's go...

வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் வெளியேறுகிறார்கள். ஸ்வீட்டி தொடர்ந்து குறைப்பது வெளியில் கேட்கிறது...

......

மாலை - மருத்துவமனை - பாஸ்கரும் சுரேஷும் அமர்ந்திருக்கின்றனர்.

சுரேஷ் - He is one of the most popular eye surgeons in the Country Bhaskar. இவர் அகராதியில முடியாதுங்கற வார்த்தையே இல்லைன்னு சொல்லலாம். நா குடுத்த ஃபைல லேசா ஒருதரம் புரட்டி பார்த்தார். உடனே கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டார். அதனால....

மருத்துவரின் அறைக் கதவைத் திறந்துக்கொண்டு நர்ஸ் வந்து அவர்களை நெருங்குகிறாள் - மிஸ்டர் பாஸ்கர் யாரு?

பாஸ்கர் எழுந்து நிற்கிறான்.

நர்ஸ் - உங்கள டாக்டர் வரச் சொன்னார்.

பாஸ்கர் தன் நண்பனைப் பார்க்கிறான்.

சுரேஷ் - நீங்க போங்க பாஸ்கர்... I will wait here... தேவைப்பட்டா வரேன்...

பாஸ்கர் மருத்துவரின் அறைக்குள் நுழைகிறான்.

மருத்துவர் எழுந்து அவனை நோக்கி தன்னுடைய வலது கரத்தை நீட்டுகிறார். - I am Doctor Mohan

பாஸ்கர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அமர்கிறான். சற்று தள்ளி பரிசோதனை இருக்கையில் அமர்ந்திருக்கும் நளினியை பார்க்கிறான்.

பாஸ்கர் - சொல்லுங்க டாக்டர்...

மோகன் - She has grade4 posterior subscapular cataract Mr.Bhaskar... இத அவங்களோட சைட் போனவுடனேயே சரியா டையாக்னஸ் செஞ்சிருந்தா ட்ரீட் பண்ணியிருக்கலாம். ஆனா பதினஞ்சி வருசத்துக்கு முன்னால இந்த அளவுக்கு மெடிக்கல் ஃபீல்ட் அட்வான்ஸ் ஆயிருக்கலங்கறதும் உண்மை...

பாஸ்கர் - Is it now possible to treat her Doctor?

மோகன் பாஸ்கரைப் பார்த்து புன்னகை செய்கிறார் - I hope so... I may have to do some more tests and study the results... எல்லாத்தையும் செஞ்சிட்டு சொல்றனே... Don't lose hope... நளினியை திரும்பி பார்க்கிறார்... What do you say Nalini?

நளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள் - Whatever you say Doctor.. I am in your hands now...

மோகனும் எழுந்து நிற்க பாஸ்கர் தயக்கத்துடன் எழுந்து நிற்கிறான்.

மோகன் - நாளைக்கி காலையில ஏழு மணிக்கெல்லாம் நளினி வந்து அட்மிட் ஆயிரட்டும்... I will leave a message at the reception...

பாஸ்கர் நளினியை பார்க்கிறான். அவளை நெருங்கி Can you wait outside Nalini? I'll talk to the Doctor and come..

நளினி புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டு நர்ஸ் துணையுடன் வெளியேறுகிறாள்..

பாஸ்கர் மோகனை பார்க்கிறான். - Hou much should I remit tomorrow Doctor?

மோகன் புன்னகையுடன் அவனை பார்க்கிறார். - I am not sure... இப்போதைக்கி ஒன்னும் கட்ட வேணாம்... That's what my Dean told me ... Not to discuss about charges with you.... உங்க Circle Manager அவரோட க்ளோஸ் ஃப்ரெண்டாம்... So let us not worry about that now... பாஸ்கரை நோக்கி தன் வலக்கரத்தை நீட்டுகிறார் Let us hope for the best... she would be given the best possible treatment Bhaskar Don't worry...

பாஸ்கர் புன்னகையுடன் அவருடைய கரத்தை குலுக்கிவிட்டு வெளியில் வந்து தன்னுடைய நண்பனிடம் மருத்துவர் கூறியதை விளக்கியவாறே நளினியை அழைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கிறான்.

அவனுடைய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்ததும் நண்பனை நோக்கி பாஸ்கர் திரும்புகிறான்- Thankyou so much Bhaskar... நா நம்ம சர்க்கிள் மேனேஜர வீட்டுக்கு போயி கூப்பிடறேன்... நாளைக்கி நானே கூட்டிக்கிட்டு வந்துடறேன்... Don't trouble yourself... தேவைப்பட்டா கூப்பிடறேன்... பை...

நளினியை முன் இருக்கையில் அமர்த்திவிட்டு பாஸ்கர் வாகனத்தை கிளப்புகிறான். சற்று நேரம் வரை நளினி மவுனமாக அமர்ந்திருக்கிறாள். பாஸ்கரும் வாகனத்தை நெருக்கடி நிறைந்த சாலையில் செலுத்துவதில் கவனத்துடன் இருக்கிறான்...

நளினி - இப்ப வீட்டுக்குப் போனா மல்லிகா இருப்பா...

பாஸ்கர் திரும்பி அவளை பார்க்கிறான்... - நல்லதுதானே நளினி அவங்களோடயும் டாக்டர் சொன்னத சொல்லலாம் இல்ல?

நளினி பதில் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்..

பாஸ்கர் - என்ன நளினி....

நளினி - I don't want to go through with this Bhaskar...

பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்துகிறான்.

தொடரும்...

2.9.09

முதல் பார்வையில் 16

காலை - பாஸ்கரின் குடியிருப்பு - பாஸ்கர் மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கிறான் - அருகில் நளினியின் கோப்பு -

பாஸ்கர் Internet இணைப்பை தொடுத்து கூகுள் தேடுதலில் congenital cataract என்று அடிக்கிறான் - கூகுள் தேடி தந்த பட்டியலில் இருந்து

ஒவ்வொரு இணைப்பாக தேர்ந்தெடுத்து படிக்கிறான்.

செல்ஃபோன் ஒலிக்கிறது - செல்ஃபோன் திரையைப் பார்க்கிறான் - முந்தைய தினம் அவனுடன் பேசிய அலுவலக நண்பர்

பாஸ்கர் - ஹலோ சுரேஷ் சொல்லுங்க... என்ன கேட்டீங்களா?

இடைவெளி

பாஸ்கர் - ஆமா file வாங்கிட்டு வந்துருக்கேன் - ஆனா அதனால பெரிசா யூஸ் இருக்கும்னு தோனல - கடைசியா இருக்கற பேப்பரே பத்து

வருசத்துக்கு முந்தியுள்ளது.

இடைவெளி

பாஸ்கர் - ஆமா... சின்னவயசுலதான் - approximately மூனு வயசுல - congenital cataract - amblyopiaன்னுலாம் மென்ஷன் பண்ணியிருக்காங்க - கூகுள்ல அடிச்சி பார்த்தேன் - இருந்தாலும் நமக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது

இடைவெளி

பாஸ்கர் - வேணும்னா என் கையிலருக்கற fileஅ Just for referenceக்கு குடுத்தனுப்பறேன் - நீங்க ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குங்க.

இடைவெளி

பாஸ்கர் - யார் அவங்களா? ஊஹும் வருவாங்கன்னு தோனல... சாதாரணமா இந்த மாதிரி ஆளுங்க எப்படி ரெஸ்பாண்ட் பண்ணுவாங்களோ அது மாதிரிதான் - ட்ரீட்மெண்ட் செஞ்சி, செஞ்சி பாத்து அலுத்துப் போயிருக்காங்க - விருப்பமே இல்லாமத்தான் இந்த fileஐயே குடுத்தாங்க.

இடைவெளி

பாஸ்கர் - சேச்சே அப்படியெல்லாம் இல்லை - நீங்க இந்த ஃபைல கொண்டு போய் குடுங்க. அவர் ஹோப் ஏதாச்சும் குடுத்தார்னா அவங்கள எப்படியாவது சமாதானம் செஞ்சி நா கூட்டிக்கிட்டு வரேன்.

இடைவெளி

பாஸ்கர் - ஓக்கே... கேட்டுட்டு சொல்லுங்க - எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைச்சா பரவால்லை.

சரி, பை.

..........

முன்பகல் - பாஸ்கரின் குடியிருப்பு - பாஸ்கர் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வருகிறான் - வாசல் மணி ஒலிக்கிறது.

பாஸ்கர் கட்டிலில் கிடந்த வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு சென்று திறக்கிறான். - கோபத்துடன் நிற்கும் மல்லிகாவை பார்க்கிறான்.

மல்லிகா - நா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.

பாஸ்கர் - உள்ள வாங்க.

மல்லிகா - இல்ல... நா பக்கத்துலருக்கற பார்க்ல வெய்ட் பண்றேன்.

அவனுடைய பதிலுக்கு காத்திராமல் மல்லிகா செல்ல பாஸ்கர் அதிர்ச்சியுடன் அவளையே பார்த்தவாறு சற்று நேரம் நின்றுவிட்டு கதவை மூடிக்கொண்டு திரும்புகிறான். உடைமாற்றிக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்புகிறான்.

........

முன்பகல் - பூங்கா - பாஸ்கரும் மல்லிகாவும் புல்தரையில் அமர்ந்திருக்கிறார்கள் - சற்று தள்ளி நீலா விளையாடிக்கொண்டிருக்கிறாள் - பூங்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இளம் ஜோடிகளைத் தவிர யாரும் இல்லை.

இருவரும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்கள் -

பாஸ்கர் - நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. ஆனா ஏன்னுதான் தெரியல..

மல்லிகா - உண்மையிலயே தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?

பாஸ்கர் - ஓரளவுக்கு புரியுது. ஆனா நீங்க இந்த அளவுக்கு கோபப்படறாப்பல நா என்ன தப்பு செஞ்சேன்னுதான் புரியல.

மல்லிகா - நீங்க யாருங்க நளினிக்கு ட்ரீட்மெண்ட் பாக்கறதுக்கு? ஒரு வார பழக்கத்துல அவ மேல அவ்வளவு என்ன அக்கறை?

பாஸ்கர் - (சிரிக்கிறான்) ஓ! இதுதான் உங்க கோபத்துக்கு காரணமா?

மல்லிகா - இது சிரிக்கிற விஷயமில்ல மிஸ்டர் பாஸ்கர். பி சீரியஸ்.

பாஸ்கர் - I am sorry. நா உங்கள ஒன்னு கேக்கலாமா?

மல்லிகா - முதல்ல நா கேட்ட கேள்விக்கி பதில் சொல்லுங்க. நளினி உங்கள எனக்கு ட்ரீட்மெண்ட் வேணும்னு கேட்டாளா?

பாஸ்கர் - இல்ல. ஆக்சுவலா நாந்தான் அவங்க கேஸ் ஃபைல கேட்டேன்.

மல்லிகா - அதான் ஏன்னு கேக்கேன்?

பாஸ்கர் - நளினி மேல இருக்கற அக்கறையினாலன்னு வச்சிக்குங்களேன். நிச்சயமா அனுதாபம் இல்லை.

மல்லிகா - அப்படியென்ன அவ மேல அக்கறை? அதுவும் ஒரு வார பழக்கத்துல.

பாஸ்கர் சற்று நேரம் எப்படி இவளிடம் சொல்வதென தெரியாமல் சற்று தள்ளி விளையாடிக்கொண்டிருந்த நீலாவையே பார்க்கிறான்.

பாஸ்கர் - நளினிய ஒரு நல்ல ஃப்ரெண்டாத்தான் பாக்கறேன். அவங்க கூட பழக ஆரம்பிச்சி ஒரு வாரம்தான் ஆயிருக்குங்கறது உண்மைதான் . ஆனா ஏனோ அவங்கள மீட் பண்ணதுல இருந்து எனக்கு மனசுல ஒரு சந்தோஷம்.... நா சென்னைக்கி வந்தப்ப இருந்த மனநிலையில
இப்படியொரு நட்பு கிடைச்சது.... என் பெர்சனல் லைஃபுல கிடைச்ச தோல்வி, அவமானம் இதையெல்லாம் மறக்கறதுக்காகத்தான் ரெண்டு

வார லீவ்ல வந்தேன். முதல் நாள் காலைல நளினிய ஸ்கேட்டிங் ரிங்க்ல பாத்தப்போ அவங்களோட ஸ்கேட்டிங் ஸ்டைலதான் பாக்க முடிஞ்சது. அப்போ அவங்களுக்கு பார்வை இல்லேங்கறத புரிஞ்சிக்கில. அதுக்கப்புறம் ஹோட்டல் பார்லர்ல வச்சி சந்திச்சப்போ....
அவங்களோட கை என் உடம்ப மட்டுமில்ல மனசையும் சேர்த்து மசாஸ் பண்ணி அதுல இருக்கற ரணத்தோட வேதனைய கொஞ்சம் ..... அதுக்கப்புறம் அவங்கள பார்வையில்லாத குழந்தைகளோட ரிசார்ட்ல வச்சி பாத்தது... அவங்களோட நல்ல மனச புரிஞ்சிக்க வச்சிது...
இதெல்லாம்தான் அவங்ககிட்ட என்னெ attract பண்ணுச்சின்னு நினைக்கிறேன் - அதான் அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு ஏதாச்சும் செய்ய முடியுமான்னு....- மல்லிகாவை திரும்பி பார்கிறான் - இதுதாங்க காரணம்.

அவனுடைய குரலில் இருந்த வேதனை மல்லிகாவை பதில் பேச விடாமல் தடுக்க சற்று நேரம் அங்கே பறவைகளின் ஒலியைத்தவிர ஒரு ஆழ்ந்த அமைதி........

மல்லிகா - என்னெ மன்னிச்சிருங்க பாஸ்கர் நாந்தான் அவசரப்பட்டு உங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டேனோன்னு....

பாஸ்கர் புன்னகையுடன் அவளைப் பார்க்கிறான் - பரவால்லை மல்லிகா..

மல்லிகா - நளினிக்கி மறுபடியும் பார்வை கிடைக்கும்னா எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆனா மூனு வயசுல அவளுக்கு பார்வை போயி நாங்க பாக்காத டாக்டர் இல்ல, செய்யாத மருத்துவம் இல்ல. அந்த பிஞ்சு வயசுல ஒவ்வொரு டாக்டரும் வைத்தியம் பாக்கறேன்னு சொல்லி கண்ண போட்டு நோன்டி, நோன்டி அவள படுத்துன பாட்ட நேர்ல பாத்து சகிக்க முடியாம எங்க ரெண்டு பேரையும் அம்போன்னு விட்டுட்டு ஒரு கோழை மாதிரி ஓடிப்போய்ட்டார் எங்க அப்பா. நளினி பொறந்த உடனேயே எங்க அம்மா இறந்துபோனதால ஏற்கனவே அவ ஒரு துக்கிரின்னு சொல்லிக்கிட்டிருப்பார். அத்தோட அவளுக்கு இனி பார்வை திரும்ப சான்சே இல்லேன்னதும் அவரால தாங்கிக்க முடியல.... போனவர் போனவர்தான்... ஏறக்குறைய இருபது வருசம்... எனக்கு அப்ப பதினெட்டு வயசு.. அன்னையிலருந்து இன்னைக்கி வரைக்கும் அவளுக்கு ஒரு சிஸ்டரா, ஒரு அம்மாவா, ஒரு நல்ல ஃப்ரெண்டா... அவதான் எனக்கு எல்லாமே - அதனாலதான் அவகிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணார்ங்கற ஒரே காரணத்துக்காக என் ஹஸ்பெண்டையும் டைவர்ஸ் பண்ணேன் - என் பொண்ணுங்க கூட அவளுக்கப்புறந்தான் - நா வேற அவ வேறன்னு என்னால பிரிச்சி பாக்க முடியல பாஸ்கர் - ஏற்கனவே ஃப்ரெண்ட்ஷிப்புன்னு சொல்லிக்கிட்டு சிலர் வந்து அவள
புண்படுத்திட்டு போனதுலருந்து அவள கொஞ்ச நாளா அந்த பார்லரையே மூட வச்சேன் - இப்பத்தான் ஆறு மாசமா தொடர்ந்து அங்க போய்ட்டு வந்துக்கிட்டிருக்கா - மறுபடியும் அதே மாதிரி ஏதாச்சும் நடந்துறக்கூடாதுங்கற ஆதங்கத்துலதான் உங்கக்கிட்ட கோபப்பட்டேன்...

பாஸ்கர் - I fully understand - இருபது வருசத்துக்கும் மேல ஒரு தங்கைக்காக ஒங்க சந்தோஷத்தையே சாக்ரிஃபைஸ் செஞ்சி.... You are really great Mallika - உங்க தங்கை மேல நீங்க வச்சிருக்கற பாசத்துக்கு முன்னால என்னோட ஃப்ரெண்ட்ஷிப் ஒன்னுமில்ல - ஆனா ஒன்னு
மட்டும் சொல்றேன் - என்னால எந்த ஒரு சூழ்நிலையிலயும் நளினிக்கி எந்த ஆபத்தும் வராது... I can promise you that.

மல்லிகா அவனை புன்னகையுடன் பார்க்கிறாள் - அது போறும் பாஸ்கர் - எழுந்து நிற்கிறாள் - ஏய் நீலா விளையாடுனது போறும். வா போலாம்.

பாஸ்கரும் எழுந்து நிற்கிறான் - நீலா அங்கிள் என்று அழைத்தவாறு அவனை நோக்கி ஓடி வந்து அவனுடைய கால்களை கட்டிக்கொள்கிறாள்.

மல்லிகா புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்க்கிறாள் - அது என்னதான் செஞ்சீங்களோ தெரியல பாஸ்கர் இவ கூட எப்பவுமே ஒங்க பாடம்தான்.

பாஸ்கர் - அப்படியா நீலா? இந்த அங்கிள புடிக்குமா..

நீலா கைகளை விரித்து - ஆமா இவ்ளோ புடிக்கும்.

மல்லிகா - சரி, சரி... வா டைம் ஆவுது... அக்காவுக்கு லஞ்ச் கொண்டு போக வேணாமா?

நீலா - பை அங்கிள்... அப்புறம் மீட் பண்லாம்...

மல்லிகாவும் பாஸ்கரும் இணைந்து நடக்க நீலா குதித்தவாறு வாசலை நோக்கி நடக்கிறாள்.

மல்லிகா - நளினியோட ஃபைல யார்கிட்ட காட்ட போறீங்க?

பாஸ்கர் - சங்கர் நேத்ராலயால இருக்கற டாக்டர் ஒருத்தர் இந்த மாதிரி கேஸ்ல நிறைய சக்சஸ் பண்ணிருக்கார்னு கேள்விபட்டேன்.

மல்லிகா வியப்புடன் - அங்கயா? அங்க அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்கறதே ரொம்ப கஷ்டம்னு சொல்வாங்களே - ரொம்ப காஸ்ட்லியா கூட இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.

பாஸ்கர் புன்னகையுடன் அவளை பார்க்கிறான் - இருக்கலாம். ஆனா அந்த ஹாஸ்பிடலோட ரீசெண்ட் Expansionக்கு எங்க பேங்க்லதான் கடன் வாங்கியிருக்காங்க. எங்க பேங்கோட ஒரு extension counter கூட அந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கு. அதனால எங்க சர்க்கிள் ஆஃபீஸ் மூலமா அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கறதுல கஷ்டம் ஒன்னும் இருக்காதுன்னு என் ஃப்ரெண்ட் சொல்லியிருக்கார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்.

இருவரும் பூங்கா வாசலை நெருங்கியதும் மல்லிகா அவனிடமிருந்து விடைபெற்று செல்ல அவர்கள் இருவரையும் பார்த்தவாறு பாஸ்கர் நிற்கிறான்

தொடரும்....