12.12.12

12-12-12 (சிறுகதை)


சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கிய உள்நாட்டு விமானத்திலிருந்து இறங்கிய சுரேஷ் தன்னுடைய கைப்பேசியை 'ஆன்' செய்தான். இரண்டு smsகள் காத்திருந்தன. 

ஒன்று, அவன் சென்னையில் தங்கவிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் அனுப்பியிருந்த வாகன ஓட்டி விமானதளத்தில் காத்திருப்பதாக.... 

இரண்டாவது மாதவனிடமிருந்து.... பல ஆண்டுகள் கழித்து அவன் சந்திக்கவிருந்த அவனுடைய கல்லூரி நண்பன்: மாதவன்...

சரியாக சொல்ல வேண்டுமென்றால் பதினோரு வருடங்கள் கழித்து...

கடைசியாக 01-01-01 அன்று  புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்தது... 

சென்னை விவேகானந்தாவில் பி.ஏ. எக்கானமிக்ஸ். மூன்று வருட ஹாஸ்டல் வாழ்க்கையில் மாதவனும் அவனும் மிகவும் நெருக்கமாகிப்போனார்கள். அவர்களுடைய பள்ளித் தோழர்கள் பலரும் என்ஜினியரிங், மெடிசின் பிரிவுகளை தேர்வு செய்ய, வசதி இல்லாத காரணத்தால் மாதவனும்   +2வில் மிக சாதாரணமான மதிப்பெண்கள் பெற்றிருந்த காரணத்தால் சுரேஷும் விவேகானந்தாவில் சேர வேண்டிய கட்டாயம். 

மாதவன் கேரள மாநில பாலக்காட்டைச் சார்ந்தவன். நடுத்தர குடும்பம். பார்க்க செக்கச்செவேலென்று சினிமா ஹீரோ மாதிரி இருப்பான். நல்ல உயரம். நடந்து வரும்போதே ஒரு கம்பீரம் தெரியும், படிப்பிலும் படுசுட்டி. ஃபைனல் இயரில் மூன்று பேப்பர்களில் தங்கம் என கல்லூரியின் முதல் ஹீரோ அவன்தான்.. சுரேஷ்  அவனுக்கு நேர் எதிர். மாநிறத்திற்கும் சற்று கீழ்... 160 செ.மீ உயரம்தான். சற்றே குண்டான உடல்வாகு. படிப்பிலும் சுமார் ரகம். 

அப்போதெல்லாம் கலைக்கல்லூரிகளில் ப்ளேஸ்மென்ட் வசதிகள் இருக்கவில்லை. ஆகவே இருவருமே படித்து முடித்ததும் வேலை தேடும் படலத்தில் ஆறு மாதங்களை சென்னையிலேயே கழித்தனர். வேலை கிடைத்தபாடில்லை. இனியும் சென்னை லாட்ஜில் தங்கி பணத்தை செலவழிக்க வசதி இல்லாத மாதவன் பாலக்காட்டுக்கு திரும்புவதென முடிவெடுத்தான். சுரேஷ் சென்னைவாசி.அவனுடைய வேலை தேடும் படலம் தொடர்ந்தது...

சுரேஷின் கைப்பேசி சிணுங்கியது.

'ஹல்லோ..' 

'டேய், எப்படி இருக்கே?'

'மாதவன்?'

'ஆமாடா... என் sms கிடைச்சிதா? எப்ப, எங்க மீட் பண்லாம்?'

'என்ன மாதவன் புதுசா கேக்கறே? அதே எடத்துலதான்... என்.எம். ரோட் கார்னர் பங்க்லதான்... அங்கதான் மீட் பண்றதா டிசைட் பண்ணோம்? ஏன் ஐய்யா க்ரேடு ரொம்ப ஒசந்துருச்சோ...?'

'சேச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லை... அங்க எப்படி?'

'நம்ம கிரேடுக்கு அது கொஞ்சம் கீழதான்... இருந்தாலும்  பரவால்லை... நாம அன்னைக்கி போட்ட டீல் ஆச்சே...'

'சரி அப்படியே செஞ்சிரலாம்... சரியா ராத்திரி 11.59க்கு அங்க இருப்பேன்....'

'OK.....அது சரி.... ஒன்னெ எப்படி ஐடி பண்றது.? பதினோரு வருசமாச்சே.... அப்பியரன்ஸ்ல எதுவும் சேஞ்ச் இருக்கா? உன் facebook pageல ஒன்னெ பத்தி ஒன்னுமே இல்லையே... ஃபோட்டோ கூட காணம்?'

எதிர்முனையில் மாதவன் சிரித்தான். 'அங்க மட்டும் என்ன வாழுதாம்? அப்பியரன்ஸ்ல பெரிசா எதுவும் சேஞ்ச் இருக்காது.. மார்க்கண்டேயன் மாதிரி... நீ எப்படி...?'

'இன்னும் கொஞ்சம் ரவுண்டா.... பாட் பெல்லியோட...' சுரேஷ் உரக்க சிரித்தான். 'சின்னதா ஒரு ஃப்ரெஞ்ச் பியர்ட்... வாயில ஒரு பைப்... ஒரு குட்டி டான் மாதிரி இருப்பேன்னு வச்சிக்கயேன்...'

மாதவனும் சிரித்தான். 'அப்புறம் என்ன, நீ என்னெ ஐடி பண்றியோ இல்லையோ நான் ஒன்னெ புடிச்சிருவேன்.'

இடையில் வேறொரு அழைப்பு வருவதை பார்த்த சுரேஷ் 'ரைட் மாதவன், ஃப்ளைட்லருந்து இப்பத்தான் இறங்கினேன்... ஓட்டல் டிரைவர் கூப்டறான்.. நைட் மீட் பண்லாம்... பை..'

'பை.. சீ யூ..'

****

மாதவன் கைப்பேசி இணைப்பை துண்டித்தான். மேசை மீதிருந்த இன்டர்காம் ஒளிர்ந்தது. திரையில் தெரிந்த எண்ணைக் கண்டதும் அவனையும் அறியாமல் விரைப்புடன் எழுந்து நின்றான். 'coming Sir'. காபினிலிருந்து வெளியேறி எதிரில் அமைந்திருந்த மற்றொரு விசாலமான காபின் கதவைத் தட்டிவிட்டு நுழைந்தான். 

'வாங்க மாதவன்... என்ன பிசியா?'

'இல்ல சார்.. ஒரு பழைய ஃப்ரென்ட்... கூப்ட்டுருந்தான்...'

அவனுடைய பதிலில் அக்கறையில்லாமல் 'உக்காருங்க, ஒரு அர்ஜன்ட் கேஸ்' என்றவாறு ஏசி தன் முன் நீட்டிய காகிதத்தை வாங்கி படித்தான். படித்து முடித்துவிட்டு திருப்பி கொடுத்தான்.

'என்ன பண்ணலாம்?' என்றார் சென்னை சைபர் க்ரைம் ப்ராஞ்ச் (சிசிபி) ஏசி செல்வராஜ்.

'முதல்ல இதே அக்யூஸ்ட் மேல இங்கயும் ஏதாச்சும் கம்ப்ளைன்ட்ஸ் ரிஜிஸ்டர் ஆயிருக்கான்னு பாக்க சொல்றேன் சார்.'

'நா ஏற்கனவே பாஸ்கர் கிட்ட சொல்லிட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் டிஸ்கஸ் பன்ணி இந்தாள எப்படி trapப் பண்லாம்னு ப்ளான் பண்ணுங்க...'

மாதவன் பதிலளிக்காமல் யோசித்தான். 

'என்ன தயங்கறீங்க மாதவன்? Any problem?'

'ஆமா சார்... இன்னைக்கி சென்னைக்கி வர்றான்னு மட்டும்தான் சொல்லியிருக்காங்க... ஆனா ரீசென்ட் ஃபோட்டோ எதுவும் இல்லாம...'

'யூ ஆர் ரைட்... நா ஏற்கனவே பாஸ்கர் கிட்ட சொல்லி மும்பை சிசிபிக்கு மெய்ல் அனுப்பினேன்... ஆனா அதுலயும் ஒரு ப்ராப்ளம் இருக்காம்... ரிப்ளை வந்துருக்கு.'

'என்ன சார்?'

'இந்த மெய்ல மென்ஷன் பண்ணியிருக்கற பேர் எப்படி அவனோட பல அலையஸ்ல ஒன்னோ அதே போலதான் அவனோட உருவமுமாம். பல கெட்டப்ல  வருவானாம்... அதனாலதான் இத்தன வருஷமா மும்பை போலீஸ்க்கே டிமிக்கி குடுத்துக்கிட்டு வந்துருக்கான். இங்க எந்த கெட்டப்ல இருப்பான்னு சொல்ல முடியாதுல்ல..?'

'இருந்தாலும் எல்லா faceக்கும் சில basic features இருக்கும் இல்ல சார்... அது தெரிஞ்சா சில கெட்டப்ல sketch  பண்ணி பாத்துரலாமே... அவங்க filesல இருக்கற லேட்டஸ்ட் ஃபோட்டோ ஒன்னெ அனுப்ப சொல்லி மெய்ல் அனுப்புனா நல்லதுன்னு நினைக்கிறேன்...'

'சரி செஞ்சிரலாம்... நீங்களே பாஸ்கர் கிட்ட சொல்லிருங்க... இன்னைக்கி இந்த centuryயோட ஸ்பெஷல் டேயாம்... அதனால சிட்டியில இருக்கற எல்லா ஸ்டார் ஓட்டலும் மிட்நைட் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்காங்கன்னு நியூஸ் வந்துருக்கு.... Total number of credit, debit card transactions மட்டுமே லட்சத்த தாண்ட சான்ஸ் இருக்காம்... அதுல ஒரு ten percent கார்ட்ஸ skim பண்ணாக்கூட டூப்ளிக்கேட் கார்ட்ஸ் மூலமா hotels and merchantsக்குஏற்படப்போற losses பயங்கரமா இருக்குமாம்...இன்னைக்கி விட்டா அப்புறம் new year day அன்னைக்கித்தான் இந்த volumeல transactions இருக்குமாம்...அதுக்குள்ள பட்ச்சி பறந்துடறதுக்கு சான்ஸ் இருக்கு.... என்ன சொல்றீங்க?'

'I understand Sir. நா பாஸ்கர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு உங்ககிட்ட பேசறேன்.'

தன்னுடைய அறைக்கு திரும்பிய மாதவன் சிறிது நேரம் யோசித்தான். இன்னைக்கின்னு பார்த்தா இந்த மெசேஜ் வரணும்? சுரேஷ வேற மீட் பண்றேன்னு சொல்லிட்டேன். பாத்து எத்தன வருசம் ஆச்சி? பேசறதுக்கு எவ்வளவோ இருக்கே! எல்லா வீக் என்ட்லயும் அந்த ரோட்டோர பங்க்ல ஒக்காந்து டீ அடிச்சிக்கிட்டே எத்தன கதை பேசியிருப்போம்! அத எல்லாம் ரீலிவ் பண்ணிட்டு... அப்படியே பனகல்பார்க் பக்கத்துலருக்கற பார் எதிலாச்சும் கூலா ஒரு பீர் அடிச்சிட்டு.... ச்சே ஒன்னும் நடக்காது போலருக்கே... பேசாம சுரேஷ கூப்ட்டு postpone பண்ணி நாளைக்கி சாவகாசமா மீட் பண்லாம்னு சொல்லலாமா?

தன்னுடைய அறைக்கதவு தட்டப்படும் ஓசையை கேட்டதும் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு உள்ளே நுழைந்த பாஸ்கரைப் பார்த்தான். 

'வாங்க பாஸ்கர்... ஒக்காருங்க... இந்தாள் பேர்ல இங்க ஏதாச்சும் complaints register ஆயிருக்கா?'

'credit card fraud complaints சிலது இன்னும் செட்டில் ஆகாம இருக்கு சார்... ஆனா இந்தாள் பேர் எந்த investigationsலயும் வந்தா மாதிரி தெரியல. ஒருவேளை இந்தாள் man behind the showவா இருக்கலாம்.'

'அப்படீன்னா?'

'இந்தாள் வெறும் facilitatoரா இருக்கலாம் சார்.'

'புரியல.'

'சார், இந்த credit card fraudsல basic activity கார்ட் டீடெய்ல்ஸ கலெக்ட் பண்றதுதான். அதுக்கு இப்ப பாக்கெட் சைஸ் skimmers நிறைய இருக்கு. இப்பல்லாம் பல பெரிய ஷாப்பிங் மால்ஸ்ல  கஸ்டமர்சுக்கு எந்த டவுட்டும் வராம கார்ட swipe பண்ற machines பக்கத்துலயே இந்த பாக்கெட் சைட் skimmerஐயும் வச்சிக்கிட்டு skim பண்ணி கார்ட் டீட்டெய்ல்ஸ் முழுசயும் கலெக்ட் பண்ணிடறாங்க. யாராச்சும் கஸ்டமர்ஸ் ஏன் ரெண்டு மெஷின்ல swipe பண்றீங்கன்னு கேட்டா இது டூப்ளிக்கேட் கார்ட்ஸ கண்டுபுடிக்கிற machineனு சொல்லி சமாளிச்சிருவாங்க.'

'Is it?'

'ஆமா சார். போன தீப்பாவளி சீசன்ல நம்ம டிநகர் ஸ்டேஷன்ல ஒரு complaint register ஆயிருக்கு. உஸ்மான் ரோட்லருக்கற ஒரு பெரிய டெக்ஸ்ட்டைல் ஷோரூம்ல இந்த மாதிரி ஒரு skimmer வச்சிக்கிட்டு யூஸ் பண்ணிக்கிட்டு இருந்துருக்காங்க. ICICI பாங்க்ல பெரிய பொசிஷன்ல இருக்கற ஒருத்தர் அவரோட கார்ட skim பண்றத பார்த்துட்டு எதுக்கு ரெண்டு ரீடர்ல swipe பண்றீங்கன்னு கேட்டுருக்கார். அதுக்கு இது போலி கார்ட் டிடெக்ட்டர்னு கவுன்டல இருந்தவர் சொல்லியிருக்கார். இவரும் அதே பேங்க்ல அதிகாரியா இருக்கறதால சந்தேகம் வந்து வெளியே வந்ததும் அவரோட ஐ.டி சென்டர்க்கு கூப்ட்டு நம்ம பாங்க்லருந்து இப்படி ஒரு instruction merchantsக்கு போயிருக்கான்னு கேட்டுருக்கார். அவங்க இல்லேன்னு சொன்னதும் பக்கத்துலருக்கற ஸ்டேஷனுக்கு போயி complaint பண்ணி உடனே வந்தீங்கன்னா கையும் களவுமா புடிச்சிரலாம்னு சொல்லியிருக்கார். ஆனா வழக்கம் போல நம்ம ஆளுங்க அதெல்லாம் முடியாது சார். complaint எழுதி குடுத்துட்டு போங்க, enquiry பண்றோம்னு சொல்லிட்டாங்களாம்.'

'அப்படியா?' என்றான் மாதவன் எரிச்சலுடன். 'அதுக்கப்புறம் அந்த ஷாப்ல enquire பண்ணாங்களா இல்லையா?'

'ரெண்டு மூனு நாள் கழிச்சி ஒரு PCய அனுப்பி enquire பண்ணதுல அந்த மாதிரி எதுவும் நம்ம கடையில நடக்கல சார்னு சொல்லிட்டாங்களாம். அதோட ஃபைல மூடிட்டாங்க.'

'இடியட்ஸ்...' என்று முனுமுனுத்த மாதவன். 'சரி பாஸ்கர், இதுல இந்தாளோட ரோல் என்னவாருக்கும்?'

'அநேகமா இவர்தான் team leaderஆ இருக்கணும் சார். அதாவது merchant sourceலருந்து skim பண்ண கார்ட் டீட்டெய்ல்ஸ கலெக்ட் பண்ணி கார்ட் production centresக்கு எடுத்துக்கிட்டு போயி print பண்ணி user teamலருக்கற membersக்கு distribute பண்ற ஆளா இருக்கணும். சாதாரணமா skim பண்ண கார்ட் டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் அந்தந்த merchant sourceலயே pen driveல காப்பி பண்ணி வச்சிருவாங்க. இவரோட டீம் ஆளுங்க வேல skim பண்ண ஆளுங்களுக்கு குடுக்க வேண்டியத குடுத்துட்டு அந்த pen drivesச கலெக்ட் பண்ணி இந்தாள் கிட்ட குடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன். இது என்னோட assumptionதான்.'

'கரெக்ட், இருக்கலாம். New yearக்கு இன்னும் மூனு வாரம் இருக்கு. அதுக்கிடையில இந்த மாதிரி நூறு வருசத்துக்கு ஒரு தடவை வர்ற ஸ்பெஷல் டேயும் வந்துருச்சி. இன்னைக்கி சிட்டியிலருக்கற பெரிய ஹோட்டல்ஸ், பார்ஸ்ல நிறைய கார்ட் transactions நடக்கும்கறதால இந்த dateஎ செலக்ட் பண்ணி சென்னைக்கு வந்துருக்கான்னு நினைக்கிறேன்.'

'கரெக்ட் சார்...'

தன்னுடைய அறைக்கதவு தட்டப்படும் ஓசையே கேட்ட மாதவன் 'come in' என்றான். 

கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த பாஸ்கரனின் உதவியாளர் 'சார் இந்த ஃபேக்ஸ் இப்பத்தான் வந்துது.' என்று பாஸ்கரனிடம் கொடுக்க அவன், 'சரி நீங்க போங்க' என்று அவரை அனுப்பிவிட்டு ஃபேக்சை பார்த்தான்.... 'யூஸ்லெஸ்' என்று உதட்டை பிதுக்கியவாறு மாதவனிடம் அதை நீட்டினான். 

'2004ல எடுத்த டிரைவிங் லைசென்ஸ் ஃபோட்டோவ போயி அனுப்பியிருக்காங்க சார்... இத வச்சிக்கிட்டு என்ன பண்றது? இப்ப எப்படி இருப்பானோ?'

ஃபேக்சில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த மாதவன் தன்னுடைய கைப்பேசியை எடுத்தவாறு பாஸ்கரனை பார்த்து புன்னகைத்தான். 'one second Bhaskar.. I want to confirm one more thing.'

மறுமுனையில் குரல் கேட்டதும் கைபேசி ஸ்பீக்கரை ஆன் செய்து... 'டேய் சுரேஷ்.... மாதவன்... இன்னைக்கி மீட் பண்ண முடியாது போலருக்கே... ஒரு முக்கியமான வேலை வந்துருச்சி... நாளை பகல் லஞ்சுக்கு எங்கயாச்சும் மீட் பண்லாமா?' என்றான்.

'சாரி மாதவன்... நாளைக்கி மார்னிங் ஃப்ளைட்ல சிங்கப்பூர் போறேன். திரும்பி வர ஒரு வாரமாச்சும் ஆவும்..'

'அப்படியா? சரி எந்த ஓட்டல்ல ரூம் போட்டுருக்கே சொல்லு ஒரு அரை மணியில வந்து பாக்கறேன்.'

'ரெசிடன்சி டவர்ல... ஆனா நா இப்ப வேற ரெண்டு, மூன் கெஸ்ட்டோட இருக்கேன்டா... பிசினஸ் விஷயமா... எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆவுமே..'

'அப்படியா? சரிடா.. ராத்திரி 11.30, 11.45 வந்தா பரவால்லையா? கொஞ்சம் இப்படி அப்படி ஆனாலும் ஆவும்.. வெய்ட் பண்ணு.. எப்படியும் வந்துருவேன்.'

'ஓக்கே பை..'

இணைப்பை துண்டித்துவிட்டு தன்னை குழப்பத்துடன் பார்த்த பாஸ்கரை பார்த்து புன்னகைத்தான் மாதவன். 'என்ன பாஸ்கர் அப்படி பாக்கறீங்க?'

'இல்ல... யார் அது ஃபோன்ல...? எதுக்கு ஸ்பீக்கர்ல போட்டீங்க? வாய்சும் ஏதோ வெத்தலை போட்டுக்கிட்டு பேசறாப்பல இருந்துச்சி.... உங்களுக்கு இப்படியொரு ஃப்ரென்டா?'

'அது வெத்தில இல்லை பாஸ்கர்... வாய்ல பைப் வச்சிக்கிட்டு பேசியிருக்கான்... என்னோட பழைய காலேஜ்மேட்... காலேஜ் டேய்ஸ்ல நெல்சன் மாணிக்கம் ரோட்லருக்கற டீக்கடை பங்க் ஒன்னுல மீட் பண்ணி ராத்திரியெல்லாம் பேசிக்கிட்டிருப்போம்... 2001 நியூ இயர் டே அன்னிக்கும் அங்கதான் இருந்தோம். அடுத்த நாள் நா பாலக்காட்டுக்கு திரும்பணும்... அப்ப திடீர்னு ஒரு ஐடியா... டேய் இன்னைக்கி தேதிய பாத்தியா மாசம், நாள் வருஷம் எல்லாம் ஒன்னு, ஒன்னுன்னு வருதுன்னு சொன்னான் அவன். எனக்கும் அப்பத்தான் தோனுச்சி... இதே மாதிரி இன்னும் பன்னென்டு நாள் வரும்டா... அதாவது 02-02-02, 03-03-03ன்னு.. ஒவ்வொரு வருசமும் அந்த நாள்ல இதே பங்க்ல மீட் பண்லாமா, என்ன சொல்றேன்னு கேட்டான்... நானும் பாக்கலாம்னு சொன்னேன்... ஆனா அடுத்த நாளே நா பாலக்காட் போயிட்டேன்... அதுக்கப்புறம் டச்சே இல்லை... அப்புறம் ரெண்டு மாசத்துக்கு முன்னால திடீர்னு ஒரு நாள் அவங்கிட்டருந்து facebookல friend ரிக்வெஸ்ட் ஒன்னு வந்துது... அதுக்கப்புறம் எப்பவாச்சும் என் பேஜ்ல வந்து 'ஹை'ன்னு சொல்லுவான். ரெண்டு வாரத்துக்கு முன்னால அவனோட செல்ஃபோன் நம்பர அனுப்பி கூப்பிடுறான்னு சொன்னான். நாம அன்னைக்கி சஜ்ஜஸ்ட் பண்ணாப்பல வர்ற டிசம்பர் 12ம் தேதி சென்னையில மீட் பண்லாமான்னு கேட்டான்... நா ஏதோ விளையாட்டா சொல்றான்னு நினைச்சேன். ஆனா நேத்தைக்கி நைட் ஃபோன் பண்ணி இன்னைக்கி சென்னைக்கி புறப்பட்டு வர்றேன் நைட் மீட் பண்லாம்னு சொன்னான்.. நானும் சரின்னு சொல்லிட்டேன்....'

'ஆனா இன்னைக்கி மீட் பண்ண முடியாதுங்கறா மாதிரி சொன்னீங்களே ஏன்? ஒரு அஞ்சி நிமிஷம் பாத்துட்டு வந்துருங்களேன்..'

'பாத்துரலாம்....அதுக்கு முன்னால எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.  இந்த ஸ்கிம் பண்ண கார்ட் டீடெய்ல்ஸ எங்க எடுத்துக்கிட்டு போயி duplicate cards produce பண்ணுவாங்க?'

'நிச்சயமா அதுக்கு இந்தியாவுல facility இல்ல சார்... ஏசியாவுலன்னு பார்த்தா சிங்கப்பூர்லதான்... '

மாதவன் புன்னகையுடன் தன் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்தான். 'அப்போ நா நினைக்கறது சரிதான்.'

'என்ன சார் சொல்றீங்க? உங்க ஃப்ரென்ட்தான்....'

'நீங்க முதல்ல இந்த ஃபோட்டோவ போஸ்ட் கார்ட் சைசுக்கு ப்ளோ பண்ண சொல்லுங்க... அப்புறம் நம்ம ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் கிட்ட சொல்லி இந்த ஆள் இப்போ ஒரு நூறு கிலோ வெய்ட் இருந்தா face எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி முகத்த கொஞ்சம் bloat பண்ணுங்க. அப்படியே  ஒரு குட்டி ஃப்ரெஞ்ச் பியர்ட், அதுக்கேத்தா மாதிரி மீசை வரைஞ்சி கொண்டு வாங்க.. பாத்துட்டு சொல்றேன்.' 

அவனிடமிருந்து புகைப்படத்தை பெற்றுக்கொண்ட பாஸ்கர் குழப்பத்துடன் எழுந்து செல்ல.... மாதவன் மேலும் ஒரு cyber crime caseஐ solve செய்த திருப்தியுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்..... 

ஆனாலும் மனதில் லேசாக ஒரு நெருடல்... 

பத்து, பதினோரு வருடங்கள் கழித்து சந்திக்கும் நெருங்கிய நண்பனை 'you are under arrest' என்று எப்படி.....

*********
'I see... நீங்க சொல்றபடி பார்த்தா இன்னைக்கி இவர் சென்னைக்கி வந்த purpose