21.7.06

மு.கவுடன் சந்திப்பு (நகைச்சுவை)

கவுண்டரும் செந்திலும் முதலமைச்சரை பேட்டி காண தயாரகிறார்கள்.

கவு: டேய்.. போன வாரம் அந்தம்மாவ இண்டர்வ்யூ பண்ண போனப்ப சொதப்புனா மாதிரி சொதப்புனே, மவனெ அங்கயே வச்சி பொலி போட்ருவேன் (காலை உயர்த்தி மிதிப்பதுபோல் பாவனை செய்கிறார்)

செந்: (தன்னைச் சுற்றி தரையில் வைத்திருந்த ஸ்டில் காமரா, மைக், டேப் ரிக்கார்டர் பலானவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிவிட்டு நெற்றியை தன் சுட்டுவிரலால் தட்டிக்கொண்டு) என்னைத்தையோ மறந்தாப்பல இருக்கே.. ஏன்ணே.. ஒங்களுக்கு ஞாபகம் வருதா?

கவு: (தன்னுடைய டையை சரி செய்துக்கொண்டு ஆளுயர கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கிறார்) டேய், உண்மையிலயே நமக்கு வயசாருச்சிறா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) ஹெஹ்ஹே.. யண்ணே.. நமக்குன்னு சொல்லாதீங்க. ஒங்களுக்குன்னு சொல்லுங்க. கன்னமெல்லாம் டொங்குழுந்து போயிருச்சின்னே.. என்னைய பாருங்க.. தோளுக்கு மேல வளர்ந்த பசங்க ரெண்டு பேர் இருக்காங்க.. இருந்தாலும் (நெஞ்சை நிமிர்த்தி புஜங்களை உயர்த்தி காட்டுகிறார்) எத்தனெ இளசா.. காலேஜ் பையன் மாதிரி..

கவு: (ஒரக்கண்ணால் செந்திலை பார்க்கிறார்) யாரு.. நீயி? டேய்.. வேணாம். போற நேரத்துல மூட கெடுக்காத. சரி.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியாடா?

செந்: (தன் நெற்றியை தட்டிக்கொண்டு) அதான்ணே.. ஏதோ ஒன்ன மறந்தாப்பலருக்கு.. ஒங்களுக்கு ஞாபகம் வருதான்னு பாருங்கன்ன்னேன்.. நீங்க என்னடான்னா வயசு, கியசுன்னு சொல்லி..

கவு: (எரிச்சலுடன்) டேய்.. ஒன் மனசுலருக்கறத நான் எப்படிறா.. நா என்ன ஞானியா? நான் ஒன்னொன்னா கேக்கேன்.. இருக்கு, இல்லன்னு  சொல்லு.. என்ன ரெடியா?

செந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் மறு காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)

கவு: (அவருக்கே உரிய பாணியில் நெஞ்சை ஒரு சைடாக சாய்த்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் முன்னும் பின்னும் டுகிறார்) ஸ்டில் காமரா?

செந்: இருக்கு

கவு: மைக்?

செந்: இருக்கு

(இப்படி பேட்டி எடுக்க தேவையான எல்லா பொருட்கள¨யும் ஒவ்வொன்றாக கவுண்டர் கூற செந்தில் இருக்கு, இருக்கு என்கிறார்)

கவு: சரிடா.. ஏறக்குறைய எல்லாமே இருக்கு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் உரத்த குரலில்) டேய், அவருக்கு மஞ்சள் துண்டுன்னா ரொம்ப புடிக்குமேன்னு எடிட்டர் சொன்னாரே.. அத வாங்கிட்டியா?

செந்: (கேலியாக சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க? அத மறப்பனா? இங்கருக்கு பாருங்க. (மஞ்சள் கலர் துவாலையை எடுத்து காட்டுகிறார்) எப்படி என் செலக்ஷன்?

கவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க? பட்டுல வேணும்டா பட்டுல..

செந்: (சலிப்புடன்) அட போங்கண்ணே. எடிட்டர் குடுத்த காசுல இத வாங்கறதுக்கே பெரும்பாடா போயிருச்சி. பட்டுக்கு எங்க போறது? அதுக்கெல்லாம் அஞ்சாயிரமாவது வேணும்னே.. ஒங்கக்கிட்டருந்தா குடுங்க.. வாங்கிரலாம்..

கவு: (எரிச்சலுடன்) டேய் என்ன நக்கலா? ஏதோ சினிமாவுலருந்து தொரத்திவுட்டதுக்கு இதாச்சும் கெடச்சுதேன்னு கிடச்ச வரைக்கும் போறும்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. இதல்லாம் ஒரு கால் ஷீட்டாடா.. ஒரு காலத்துல நம்ம கால்ஷீட்டுக்காக லட்ச கணக்குல கையிலயும் பையிலயும் வச்சிக்கிட்டு தவமா தவமிருந்தான்க.. இப்ப என்னடான்னா..

செந்: (கேலியுடன் சிரிக்கிறார்) என்னண்ணே நீங்க. கால்ஷீட்டு  கை ஷீட்டுன்னுக்கிட்டு.. இதுக்கு பேரு அசைன்மெண்ட்டுன்ணே.. (தனக்குள்) ஒங்களுக்கெங்க தெரிய போவுது? நீங்களே அஞ்சாம்ப்பு.. அதுவும் மூனுதடவ பெயிலு..

கவு: (எரிச்சலுடன்) என்ன பெரிய அசைன்மெண்ட்டு.. பெப்பர்மிண்ட்டு.. எல்லாத்தையும் எடுத்து வெளிய கொண்டு வச்சிட்டு எவனாச்சும் ரிக்ஷ¡ நிக்கறான்னு பார்றா, கூட கூட பேசிக்கிட்டு... (செந்தில் நகர) டேய்.. போன வாரம் மாதிரி ஒரு லொட லொட வண்டியையும் லொக்கு, லொக்கு கெளவனையும் கூட்டியாந்துராத.. அந்தாளு இருமி, இருமியே எனக்கு காச நோய் வந்துருமோன்னு பயந்துட்டேன்.. நல்லா ஆளா கூட்டியா போ.. (தனக்குள்) இந்த காலத்து எளசுங்க என்னென்னத்தையோ ஓட்டுதுங்க இந்த மாதிரி ரிக்ஷ¡வையும் ஓட்டக்கூடாது? ச்சை..  

(அடுத்த நொடியில் செந்தில் உள்ளே வருகிறார்)

கவு: (வியப்புடன்) என்னடா அதுக்குள்ள கூட்டியாந்துட்டியா? என்ன அதே ரிக்ஷவா?

செந்:(சிரிக்கிறார்) இல்லண்ணே.. நம்ம எடிட்டர் இந்த தடவ ஒரு காரையே அனுப்பியிருக்கார்ணே. நாம புடிக்க போறது முதலமைச்சராச்சே..

கவு: (திடுக்கிட்டு) டேய்.. புடிக்கிறேன், கிடிகிறேன்னு சொல்லாதேன்னு போன வாரமே சொன்னேன்ல?

செந்: (பின்னந்தலையில் தட்டிக்கொள்கிறார்) சாரின்ணே.. இப்பல்லாம் அடிக்கடி இந்த கிட்னி வேல செய்ய மாட்டேங்குதுண்ணே.. அதான் அப்பப்போ தட்டி குடுக்குத்துக்கறேன்.

கவு: (சலிப்புடன்) பாத்துறா.. நீ தட்டுற தட்டுல தலையிலருக்கற கிட்னி வயித்துக்கு வந்துரப்போவுது.. சரி.. சரி நீ முன்னால போ..

(அவர்களுடைய வாகனம் கோபாலபுரத்திலுள்ள முதலமைச்சரின் வீட்டை நெருங்க காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். ஒரேயொரு அதிகாரி  காருக்குள் தலையை விட்டு பார்க்கிறார். ஏற்கனவே கவுண்டரையும் செந்திலையும் ஒரு சேர பல படங்களில் பார்த்திருந்தாலும் வேண்டுமென்றே இருவரையும் அலட்சியத்துடன் பார்க்கிறார். ‘யார் மேன் நீங்க?’ என்கிறார் அதிகாரத்துடன்.)

கவு: (அடிக்குரலில்) பாத்தியாடா நம்ம நெலமைய.. பேசாம அஞ்சு நிமிச கால்ஷீட் கெடச்சா போறும்னு சினிமாவுலயே தலையோ வாலோ எதையாச்சும் காட்டிக்கிட்டு இருந்துருக்கலாம். இப்ப பார்.. எவனெவனோ நம்மள பாத்து யாருங்கறான்.. ஹ¥ம் நம்ம நேரம்டா (அதிகாரியைப் பார்த்து முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரிக்கிறார்) என்ன ச்சார் கேட்டீங்க? நான் கவுண்டபெல், சாரி, கவுண்டமனி இவன் பறட்டை தலையன், சாரி செந்தில்.. முதலமைச்சர பேட்டியெடுக்க வந்திருக்கோம். இங்க பாருங்க.. அவரோட கன்பர்மேசன்.. (சட்டைப் பாக்கெட்டிலிருந்து முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்திருந்த பேட்டிக்கான அனுமதி கடிதத்தை காட்டுகிறார். அதை அலட்சியமாக படித்து முடித்த அதிகாரி, ‘சரி, சரி.. ஒங்கள பாத்தா எங்கயோ பாத்த மாதிரிவேற இருக்கு.. போய்ட்டு வம்பு பண்ணாம சீக்கிரம் வந்துருங்க’ என்றவாறு வாகனத்தை மேலே செல்ல அனுமதிக்கிறார்)

கவு: (நொந்துபோய்) பாத்தியாடா அந்த போலீஸ்காரன் நக்கல.. நம்மள எங்கயோ பாத்திருக்கானாம்.. பண்ணிப்பய.. டேய், நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொறஞ்ச பட்சம் ஒரு நூறு நூத்தம்பது படத்துல காமடி பண்ணிருக்க மாட்டோம்..? கடைசியில நம்ம நெலமைய பாத்தியாடா..

செந்: விட்டுத் தள்ளுங்கண்ணே.. வாங்க, வீடு வந்துருச்சி.. கேள்விய நீங்க கேக்கறீங்களா..

கவு: டேய், இந்த நக்கல்தான வேணாங்கறது? எறங்குடா..

(செந்தில் தான் கொண்டு வந்திருந்த காமார, மைக், ரெக்கார்டர் கியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடைய கேபிள்களை தன் கழுத்தில் சுற்றுகிறார்)

கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. --------------- தலையா. இன்னைக்கும் அத கழட்டமுடியாம அண்ணே, நொண்ணேன்னு கத்த போறியா?  கையில அப்படியே சுத்தி புடிடா.. நீயெல்லாம் எங்கிட்ட அடி வாங்கிக்கிட்டே இருந்தாத்தான் ஒளுங்காருப்பே.. இப்பல்லாம் அத நிறுத்திட்டேம் பாரு.. அதான்..

செந்: (செல்லத்துடன் கவுண்டரை தோளில் குத்துகிறார்) கோச்சிக்காதீங்கண்ணே..

கவு: சரி, சரி.. பாத்து எறங்கு.. வாசல்ல நிக்கானுங்க பாரு.. கானா பூனா காரங்க.. (அவர்களைக் கூர்ந்து பார்க்கிறார்) டேய்.. இவனுங்கள பாத்தா போனவாரம் அந்தம்மா வீட்ல பாத்தவனுங்கள மாதிரியே இல்ல?

செந்:(சிரிக்கிறார்) நீங்க வேறண்ணே.. எல்லா பயலுவளுக்கும் கருப்பு ட்ரெஸ்லருக்கறதுனால அப்படி தெரியுதுண்ணே.. நீங்க பயப்படாம வாங்க.. நா இருக்கேன்ல?

கவு: (முறைக்கிறார்) யாரு? நீயி? எல்லாம் என் நேரம்டா..

(கவுண்டர் இறங்கி முதலமைச்சரின் வீட்டு வாசலை நெருங்க கானா பூனா படையினர் அவரை வழிமறிக்கின்றனர். அவருக்கு பின்னால் காமரா, மைக் சகிதம் வந்துக்கொண்டிருந்த செந்தில் விரைந்து சென்று தப்பு தப்பான ஹிந்தியில் ஏதோ பேசுகிறார். கானா பூனா ட்கள் விளங்காமல் விழிக்கின்றனர்)

கவு: (கோபத்துடன் திரும்பி) டேய்.. நீ இப்ப எதுக்கு ஹிந்தியில பேசின? இவனுங்க மூஞ்ச பாத்தா ஹிந்திகாரன்க மாதிரியாடா தெரியுது? ஒன்னைய மாதிரி கரிச்சட்டி மூஞ்சிய வச்சிக்கிட்டு நிக்கற இவனுங்களாடா வடக்கத்தியாளுங்க? இவனுங்க மூஞ்சிய பாத்தா குடியாத்ததுலருந்து புடிச்சிக்கிட்டு வந்தா மாதிரி தெரியது.. நீ வேற.. (தன் சட்டை பையிலிருந்து சற்று முன் காவல் அதிகாரியிடம் காட்டிய கடிதத்தை எடுத்து விறைப்புடன் நீட்டுகிறார். அது அங்கிருந்த கானா பூனா குழுவினருள் எவருக்கும் விளங்காமல் நிற்க அப்போதுதான் முதலமைச்சர் வீட்டிலிருந்து வெளியே வரும் தயாநிதி மாறன் புன்னகையுடன் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்கிறார்.)

நாளை நிறைவு பெறும்..

11 comments:

G.Ragavan said...

ஆகா....தொடங்கீட்டீங்களா....சூப்பருங்க சூப்பரு...ஜெயலலிதாவுக்கு ஒரு பாகந்தான்...கருணாநிதிக்கு ரெண்டு பாகமா...ம்ம்ம்...இருக்கட்டும் இருக்கட்டும்...அப்ப வைகோ, ராமதாசு, ஜி.கே.வாசன், இளங்கோவனுக்கெல்லாம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

வைகோ, ராமதாசு, ஜி.கே.வாசன், இளங்கோவனுக்கெல்லாம். //

அட! ஐடியா நல்லாருக்கே.. இத வச்சே ஒரு நாலுவாராம் ஓட்டிரலாம்..

வைக்கொ, இ.கோ ஓக்கே.. ஆனா டாக்டர வச்சி வம்பு செஞ்சா தர்ம அடி கிடைக்குமோன்னு பயமாருக்கே?

G.Ragavan said...

அதெல்லாம் கெடைக்காது. பயப்படாதீங்க. நம்ம மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இன்னும் நெறையாவே இருக்கு. தினமும் பேப்பரப் பாத்தாலே தெரியலையா...

siva gnanamji(#18100882083107547329) said...

பாவங்க முதல்வர்; வயசான காலத்திலே இவங்ககிட்டே மாட்டிகிட்டாரே

போகட்டும்;அவருக்கும் சிரிக்க கொஞ்சம் நேரம் வேணுமில்லே

டிபிஆர்.ஜோசப் said...

தினமும் பேப்பரப் பாத்தாலே தெரியலையா//

ஹா..ஹா..ஹா.. சூப்பர் ஜோக்:))

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

பாவங்க முதல்வர்; வயசான காலத்திலே இவங்ககிட்டே மாட்டிகிட்டாரே..//

அதானே..

போகட்டும்;அவருக்கும் சிரிக்க கொஞ்சம் நேரம் வேணுமில்லே //

அதான..

கைப்புள்ள said...

செம காமெடி சார். படிக்கிறதுக்கு ஜாலியா இருந்துச்சு.

//கவு: (திடுக்கிட்டு) டேய்.. இது துண்டில்லடா டவல். டேய்.. பாத்ரூம் டவலையாடா ஒரு சீஃப் மினிஸ்டருக்கு போத்துவாங்க? பட்டுல வேணும்டா பட்டுல..//

படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.
:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கைப்புள்ள,

படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.//

ஐய்யோ பாத்துங்க.. அடி கிடி படலையே.. நாளைய பதிவையும் படிக்கணுங்க.. பார்த்து:)

நன்மனம் said...

சார்,

//செந்: ஹ¥ம்.. சொல்லுங்கண்ணே.. (ஒரு காலை முன்னும் மறு காலை பின்னும் வைத்துக்கொண்டு ரெடியாகிறார்)//

அப்படியே கற்பனை குதிரையை ஓட விட்டுரிகீங்க...

அருமை:-)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க நன்மனம்,

அப்படியே கற்பனை குதிரையை ஓட விட்டுரிகீங்க...
//

இந்த தளத்தோட பேரே கதையுலகம்தானே.. கற்பனை குதிரையில சவாரி செய்யாம எப்படி:)

Hariharan # 03985177737685368452 said...

கற்பனைக் காமடி நல்லாயிருக்கு சார்.

நகைச்சுவையோடு "Nothing is indispensable" என்பதும் நினைவுக்கு வந்தது.


வலைப்பூவிலும் நீங்கள் மூத்தவர். அடியேன் 28நாள் குழந்தை. எனது வலைப்பூவிற்கும் வருகை தரவும்
www.harimakesh.blogspot.com

அன்புடன்,

ஹரிஹரன்