13.7.06

ஜெயுடன் ஒரு பேட்டி (காமடி)

ஒரு லொட, லொட சைக்கிள் ரிக்ஷ¡வில் கவுண்டரும் செந்திலும்..

செந்தில் கழுத்தில் கேபிள்கள் மாலையாக. வலது கையில் ஒரு மைக்.. இடது தோளில் ஒரு அரதப் பழசான காமரா.

கவுண்டர் கெத்தாக அருகில். டீக்காக உடையணிந்திருக்கிறார்.

ரிக்ஷ¡ போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் இன்னாள் எ.க. தலைவி (இந்த abbreviationஐ எக்குத்தப்பா நீங்க மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) செல்வி ஜெயலலிதா அவர்களுடைய பங்களாவிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர்கள் பதறியடித்து ரிக்ஷ¡வை நிறுத்துகிறார்கள்.

கவுண்டர் கெத்தாக இறங்கி அவர்களை துச்சமாக பார்க்கிறார். செந்தில் கழுத்திலிருந்த கேபிள்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் ‘அண்ணே.. அண்ணே.. காப்பாத்துங்க’ என்று அலறுகிறார்.

கவு: (எரிச்சலுடன்) டேய்.. டேய்.. ஒன்னெ அப்பவே சொன்னேன்.. நீ கேக்கல. இப்ப பார்.. என் மானத்த வாங்கறே.. சொன்னா என்னண்ணே, நொன்னண்ணேம்பே.. சரி இரு வரேன்..  

(செந்திலை நெருங்கி செந்திலுடைய கழுத்திலிருந்த கேபிள்களை வெடுக்கென்று பிடித்து இழுக்க அவர் அப்படியே தலைகுப்புற சாலையில் விழுகிறார். கேமரா ஒரு பக்கமும், மைக் ஒருபக்கமும் தெறித்து விழுகின்றன)

கவு: டேய்.. டேய் காமராடா... (உடைந்து சிதறிய கேமராவை எடுத்து திருப்பி, திருப்பி பார்த்துவிட்டு சாலையோரம் வீசுகிறார். கானா பூனா வீரர்கள் பதற்றத்துடன் அதை எடுத்து ஏதோ வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் அக்கு வேறு ஆணி வேராக பிரிக்க செந்தில் பதற்றத்துடன் அவர்கள் கையிலிருந்து அதை பிடுங்கி பார்க்கிறார். பிறகு வெறுப்புடன் ரிக்ஷ¡வில் எறிகிறார்.)

செந்: போய்யா.. இத எடுத்துக்கிட்டு போயி காயலாங்கடையில வித்து ரிக்ஷ¡ கூலிக்கி வச்சிக்க.. (கவுண்டரை பார்த்து) என்னண்ணே.. நீங்க இப்பிடி செஞ்சிபுட்டீங்க.. இப்ப அம்மாவ எப்படி புடிக்கிறது?

கவு: (கானா பூனா வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்கிறார்) டேய்.. டேய் பாத்துறா.. நீ பாட்டுக்கு புடிக்கிறது, கிடிக்கிறதுன்னு சொல்லிட்டு இவனுங்கக்கிட்ட மாட்டிவிட்டுறாத.. நாம அம்மாவ பேட்டி எடுக்கத்தான் வந்துருக்கோம்.. புடிக்கறதுக்கில்ல..

செந்: (சாலையில் கிடந்த மைக்கையும் அதிலிருந்து அனுமார் வால் போல ஆடிய கேபிளையும் கையில் எடுத்துக்கொள்கிறார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவர்போல கலக்கத்துடன்) அண்ணே..

கவு: (எரிச்சலுடன்) அட ஏண்டா.. நீ வேற.. நான் இவனுங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு எப்படிறா இந்த கோட்டைக்குள்ள பூருறதுன்னு (புகுவது) ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்.. எதுக்குடா அலற்னே இப்ப?

செந்: (தயக்கத்துடன்) மைக் எடுத்தேனேயொழிய டேப் ரிக்கார்டர எடுக்க மறந்துட்டேண்ணே..

கவு: (காலால் எத்துகிறார். செந்தில் லாவகமாக நகர்ந்துக்கொள்கிறார்) டேய், ஒனக்கு ஏதாச்சும் இருக்காடா? ஏற்கனவே எடிட்டர்கிட்ட ஐயா அம்மாவ பேட்டி எடுக்கற அசைன்மெண்ட எங்க ரெண்டு பேருக்கும் தாங்கய்யான்னு கேட்டப்ப ஒங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே அம்மா வெரட்டியடிச்சிருவாங்க. எதுக்குய்யா ஒங்களுக்கு இந்த விபரீத ஆசைன்னார். இப்ப போட்டாவும் எடுக்காம.. டேப்பும் இல்லாம நாம உண்மையிலயே பேட்டி எடுத்துக்கிட்டு போனாக்கூட அவர் நம்பமாட்டாரேடா.. (புலம்புகிறார்) ஒன்னைய போயி.. போடா டேய்.. என் கண் முன்னால நிக்காத..(காலால் மீண்டும் எத்துகிறார். இந்த முறை செந்திலின் பின்புறம் வகையாய் உதைக்க  கவுண்டர் உதைத்த வேகத்தில் அவர் கானா பூனா வீரர்களுடைய காலடியில் சென்று விழ அவர்கள் இவர் தற்கொலை படை வீரராயிருப்பாரோ என்ற ஐயத்தில் தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை அவரை நோக்கி நீட்ட செந்தில் ‘என்னைய காப்பாத்துங்கண்ணே...’ என்று அலருகிறார். அவருடைய அலறல் பால்கணியில் அமர்ந்து அன்றைய நமது எம்.ஜி.ஆர் தினத்தாளை வாசித்துக்கொண்டிருந்த எ.க. தலைவி ஜெயலலிதா மேடத்தின் செவிகளில் விழ ‘யார் மேன் அங்க?’ என்று உரத்த குரலில் கேட்கிறார். வாசலில் நின்றிருந்த கானா பூனா வீரர் ஒருவர் கவண்டரையும் செந்திலையும் காட்டி ‘மேடம், ஒங்கள பேட்டியெடுக்க வந்துருக்காங்க.’ என்கிறார். அவருக்கு கவுண்டரைவிட தரையிலிருந்து எழுந்து சட்டெயெல்லாம் மண்ணுடன் பரிதாபமாக நிற்கும் செந்திலை பிடித்துப்போக புன்னகையுடன் தன் கையிலிருந்த தினத்தாளைக் காட்டி இங்கருந்தா வரீங்க என்று சைகைக் காட்டுகிறார்.. )

கவு: (தனக்குள்) ஆம்மா.. பின்னே ஒங்கள என்ன பிபிசியிலருந்தா பேட்டியெடுக்க வருவாங்க?

செந்: (உற்சாகத்துடன்) ஆமாங்க மேடம் (என்பதுபோல் வாயசைக்கிறார்)

(தொலைக்காட்சியில் தூரத்தில் காட்டப்படும் மு.கவின் உதட்டசைவிலிருந்தே அவர் தன்னைத்தான் சாடுகிறார் என்று உறுதிசெய்து எதிரறிக்கை விட்டே பழகிப்போன ஜெ.. அவருடைய உதட்டசைவை புரிந்துக்கொண்டு ‘அவங்கள உள்ள அனுப்பு மேன்’ என்று சைகை காட்டுகிறார். கானா பூனா வீரர்கள் பிரம்மாண்டமான வாசற்கதவை திறக்கிறார்கள்.)

செந்: வாங்கண்ணே.. பாத்தீங்களா? நம்மள பாத்ததுமே மேடம் உள்ள விட்டுருவாங்கன்னு சொன்னப்ப போடா நீயும் ஒன் மூஞ்சும்னு சொன்னீங்களே இப்ப பாருங்க.. ஒங்களுக்கு எப்பவுமே கிட்னி வேலை செய்றதில்லண்ணே.. சொன்னா மட்டும் கோவம் பொத்துக்கிட்டு வந்துருது.. சரி.. சரி.. வாங்க..

கவு: (தனக்குள்) ஒன்னைய மாதிரி ஆளுங்களுக்கு எப்பவுமே கிட்னிதாண்டா வேலை செய்யுது.. ஹ¥ம்.. எல்லாம் காலம்டா காலம்.. (செந்திலிடம்) டேய்.. அங்க வந்து இந்த அளுக்கு பிடிச்ச சட்டையோடயா நிக்கப்போற?.. தட்டி விடறா.. என்னமோ மெடல் குத்திவிட்டாமாதிரி நிமித்திக்கிட்டு போற?

செந்தில் (குனிந்து பார்க்கிறார்..) ஐயையோ என்னண்ண இது ரத்த களறியாருக்கு?.. அவனுங்க துப்பாக்கியால குத்திப்பிட்டானுவ போலருக்கு.. (தொட்டு பார்க்கிறார்) ச்சை.. மண்ணு.. தண்ணியும் கலந்துருச்சா.. அதான் ரத்தோமோன்னு நினைச்சிட்டேன்.. மன்னிச்சிருங்கண்ணே.. நீங்க போங்க.. தோ இந்த பைப்புல களுவிக்கிட்டு வாரேன்.. (அருகிலிருந்த தோட்டத்து குழாயை திறக்க வெறும் காற்று மட்டும் வருகிறது. ஆனாலும் அதுவே போறும் என்ற நினைப்பில் அதில் பொருத்தியிருந்த பைப்பின் ஒரு முனையை தன்னை நோக்கி திருப்ப அவருடைய சட்டையில் அப்பியிருந்த மண் பறந்துபோய் கவுண்டரின் கண்களில் விழுகிறது ஆனால் செந்திலின் சட்டை சுத்தமாகிறது..) பாத்தீங்களாண்ணே.. இதுக்குத்தான் கிட்னி வேணுங்கறது.. பாருங்க.. (பெருமையுடன் தன்னுடைய நெஞ்சை நிமிர்த்தி காட்டுகிறார். )

கவு: (கண்களில் விழுந்த தூசியை சிரமப்பட்டு தட்டிவிட்டு செந்திலை மீண்டும் எட்டி உதைக்க நினைத்தவர் நிமிர்ந்து பால்கணியைப் பார்க்கிறார். ஜெ மேடம் புன்சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரிகிறது. உதைக்க தூக்கிய காலை உதறிவிட்டுகொள்கிறார்.) டேய்.. டேய்.. மானத்த வாங்காத. அந்தம்மா அங்கருந்து பாத்துக்கிட்டேயிருக்கு.. அதனால தப்பிச்சே. மூடிக்கிட்டு நடறா.. (செந்தில் புன்னகையுடன் ஜெ மேடத்தை பார்த்தவாறே முன்னே வேகமாக நடக்கிறார்) டேய், டேய்.. நில்றா.. உள்ற போயி ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சே.. மவனே ஒன்னெ கொன்னு பொதச்சிருவேன்..

செந்: என்னண்ணே நீங்க.. நா அப்படியெல்லாம் செய்வனா.. (சட்டென்று நின்று) சரிஈஈஈ.. கேள்விய நீங்க கேக்கறீங்களா இல்ல நா கேக்கட்டுமா?

கவு: (முறைத்தவாறே மீண்டும் காலை எத்துகிறார்..) டேய்.. என்ன நக்கலா? போனா போவுதுன்னு கூட்டியாந்தா.. நடறா.. ஏதோ கொஞ்சம் போட்டோ பிடிப்பானேன்னு கூட்டியாந்தேன்.. காமராவையும் போட்டு ஒடச்சாச்சி.. சரி அந்தம்மா சொல்றத டேப்பாவாவது செய்வேன்னு பாத்தேன்.. அதுவும் இல்லன்னு ஆயிருச்சி.. ஒன்னைய நம்பி கையில ஒரு நோட்டு கூட இல்லாம நிக்கறனடா.. அப்படியே ஓடிப்போயிரலாம்னு பாத்தா அந்தம்மா என்னடான்னா நம்மள பாத்து உள்ளார வாங்கன்னுருச்சி.. (செந்தில் குறுக்கிட்டு) நம்மள இல்லண்ணே.. என்னைய பார்த்து..

கவு: ஆமாண்டா.. இவரு பெரிய.. டேய் வேணாம். அப்புறம் வாய்ல வர்றத சொல்லிருவேன்.. மூடிக்கோ. சொல்லிட்டேன்..

(செந்தில் வாயில் கைவைத்தவாறு முன்னே செல்ல அவர்களை வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்த ஜெ மேடத்தின் இணைபிரியா தோழி ச.க மேடத்தைப் பார்த்து ‘ஹவ் டு யு டூ?’ என்றவாறு கையை நீட்ட ச.க. மேடம் புன்னகையுடன் விலகிச் செல்கிறார்.)

கவு: (அடிக்குரலில்) டேய், அவங்க ஒன்னைய கேட்டாங்களாடா.. எதுக்குடா எங்க போனாலும் கூடவே வந்து மானத்த வாங்கறே..

ஜெ. மேடம் மிடுக்குடன் காற்றில் மிதந்து வருவதுபோல் வந்து அவர்கள் முன் வந்து அமர்ந்து பேட்டியை துவங்கலாம் என்று மெஜஸ்டிக்காக கைகளை அசைக்கிறார்.

(கவுண்டர் வாயை திறக்கிறார்.. ஆனால் காற்று மட்டுமே வருகிறது.)

செந்: (நக்கல் சிரிப்புடன்.. அவருடைய காதில்) என்னண்ணே.. மேடத்த பார்த்ததும் வார்த்தையே வரமாட்டேங்குது.. கேள்விய நீங்க கேக்கறீங்களா.. இல்ல...

கவு: (அடிக்குரலில்) டேய்.. மூடிக்கிட்டு ஒக்காரு.. தள்றா டெய்லி குளிடான்னா கேட்டாத்தான?

ஜெ: (பெருந்தன்மையுடன்) நீங்க கேக்க இருந்த மொதல் கேள்விக்கு நானே பதில் சொல்றேன்..

செந்: (பெருமையுடன்) நீங்க சொல்லுங்க மேடம்.. இவருக்கு எப்பவுமே ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.. மொதோ ரெண்டு கேள்விக்கு இப்படித்தான் சொதப்புவார்.. அப்புறம் சரியாயிரும்.. நீங்க சொல்லுங்க.. (மேல் பாக்கெட்டை தடவுகிறார். கொண்டு வந்திருந்தால்தானே இருப்பதற்கு? அவருடைய முளியை புரிந்துக்கொண்டு ஜெ மேடம் மெஜஸ்டிக்காக திரும்பி வாயிலையொட்டி நின்ற தன் தோழியை பார்க்கிறார். உடன்பிறவா பிறப்பாயிற்றே.. அவருடைய பார்வையைப் புரிந்துக்கொண்டு ஒரு சிறிய நிரூபர் நோட்டையும் ஒரு பேனாவையும் கொண்டு வந்து செந்திலிடம் கொடுக்கிறார்) தாங்ஸ் மேடம் (என்றவாறு செந்தில் பெற்றுக்கொள்கிறார்.)

பேட்டி தொடர்கிறது..

ஜெ: இப்போதிருக்கும் சிறுபான்மை அரசு நான் பார்த்து இட்ட பிச்சை.. அது நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது கவிழ்ந்துவிடும்.. என்னுடைய ஆஸ்தான ஜோசியர் பணிக்கர்தான் நாள் குறித்து கொடுப்பார்.. அது கிடைத்ததும் ஆட்சி கவிழ்ப்பை துவங்க வேண்டியதுதான்..

கவு: (உற்சாகத்துடன்) அட்றா சக்கை.. (செந்திலிடம்) டேய் எளுதிக்கிட்டியா? (ஜெ மேடத்தைப் பார்க்கிறார்) அப்ப அடுத்த கேள்விக்கு போலாங்களா?

(மேடம் புன்னகையுடன் தலையை அசைத்தவாறே எப்படி என் பதில் என்ற தோரணையில் தன் தோழியைப் பார்க்க. அவர் பேஷ் பேஷ் என்று தலையை அசைக்கிறார்.)

(கவுண்டர் வாயை திறக்கிறார்.. மீண்டும் காற்றுதான் வருகிறது. ஆனால் மேடம் புரிந்துக்கொண்டு பதிலை அளிக்கிறார்)

ஜெ: உங்களைப் போல்தான் தமிழகத்திலுள்ள என்னுடைய கோடானுகோடி உடன்பிறப்புகளும் கேட்கிறார்கள். நீங்கள் உம் என்று சொல்லுங்கள்.. மரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று.. (குரலை இறக்கி) ஆனா தெரியாத்தனமா தற்கொல செஞ்சிக்கிட்டவுங்களுக்கு கொஞ்சம் பணத்த குடுத்து தொலைச்சிட்டேனே.. இப்படியே ஒவ்வொருத்தனும் செத்தா அவனுங்களுக்கு கொடுத்தே நா போண்டியாயிருவேன் போலருக்கே.. (செந்தில் அதையும் எழுதிக்கொள்ள மேடம் ஒரு முறை முறைக்கிறார். செந்தில் அரண்டு போய் இதுவரை எழுதியிருந்த பேப்பரை அப்படியே கிழித்து எறிகிறார். மேடம் தோழியை பார்க்க அவர் விரைந்து வந்து அந்த காகிதத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார்)

பேட்டி தொடர்கிறது..

(கவுண்டர் மீண்டும் வாயை திறக்கிறார் இப்போது வார்த்தைகள் வருகின்றன.. ஆனால் அவர் கேள்வியை முடிக்கும் முன்பே அவருடைய கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பதில் வருகிறது.. கவுண்டரும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விழிக்கின்றனர்.. இப்படியே நடக்கிறது ஒவ்வொரு முறையும். கவுண்டர் வெறுத்துப் போய் வாயை மூடிக்கொள்கிறார்.)

பேட்டியின் இறுதியில்..

மேடம்: (பெருந்தன்மையுடன்) இப்ப நீங்க கேளுங்க

கவு: (தனக்குள்) என்னத்த கேக்கறது? அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே.. (செந்திலைப் பார்க்கிறார்) டேய் ஏதாச்சும் கேளேன்.. மேடம் கேக்கறாங்கல்ல?

செந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....

(அவர் கேள்வியை முடிக்கும் முன்னரே ஜெ மேடத்தின் முகம் கோபத்தால் சிவந்து போக இருக்கையிலிருந்து எழுந்து அவரை அடிக்க கை ஓங்குகிறார்.. செந்திலும் கவுண்டரும் உயிர் பிழைத்தால் போதும் என்று குதிகால் பிடறியில் விழ வாசலை நோக்கி ஓடுகின்றனர். ச.க. மேடம் அவர்களை விரட்டிக் கொண்டு ஒடுகிறார். வாசலில் நிற்கும் கானா பூனா படை வாசற்கதவை சாத்திவிட இருவருக்கும் பொறியில் பிடிபட்ட எலிகளைப்போல விழிக்கின்றனர். )



நிறைவு..




********


27 comments:

துளசி கோபால் said...

என்னங்க பழைய கெத்து இல்லாதமாதிரி இருக்கே.

சிரிப்பு கொஞ்சூண்டு வந்துச்சு(-:

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க துளசி,

சிரிப்பு கொஞ்சூண்டு வந்துச்சு//

கொஞ்சூண்டாவது வந்துதே.. நான் அதுகூட வராதுன்னு நினைச்சேன்.

இத எழுத தூண்டிய விஷயமே வேற.. ஒரு அவசர கோலமா போயிருச்சி..

இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணிருக்கலாம்..

siva gnanamji(#18100882083107547329) said...

எல்லாம் ஆட்டோ பயம்தேன்...

அதென்ன "அதரக்" கேமரா?
கிக்கான கேமராவா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

அதரப்பழசுன்னா ரொம்ப பழசு.. காயலான் கடைக்கு போடறதுக்கு லாயக்கானது..

அது சரி.. ஆட்டோ பயம்னா என்னது..?

துளசி கோபால் said...

இந்த 'அதர ' விஷயத்தைத் தனிமடல் அனுப்பலாமுன்னு இருந்தென்.
அதுக்குள்ளே சிஜி போட்டு உடைச்சுட்டார்.

அதரம்= உதடுகள்

அரத = ரொம்பப் பழைய. நீங்க சொன்ன காயலான் கடை சமாச்சாரம்.

டிபிஆர்.ஜோசப் said...

அதுக்குள்ளே சிஜி போட்டு உடைச்சுட்டார்.//

அதைத்தான் ஏற்கனவே கவுண்டர் ஒடச்சிட்டாரே..

வார்த்தை பிசகி விட்டால் கண்ணம்மா..

கோவி.கண்ணன் said...

//செந்: (பெருமையுடன் காலரை சரி செய்துகொள்கிறார்) மேடம்.. நீங்க எந்த கடையில அரிசி..//

ஜோசப் அய்யா,
நீங்கள் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் செந்திலைக் கேட்கவைத்து ... ஓடஒட வெரட்டிடிங்களே... :)
ஜெ.. பற்றிய செய்திகள் குறைந்துவிட்டது... நீங்கள் சரி செய்துவிட்டீர்கள்.
நல்ல காமடி :))))

Muthu said...

சார்,

அந்த அரிசி சமாச்சாரமும் உடன்பிறவா தோழியை வெட்கப்பட்ட சமாச்சாரத்தையும் தவிர்த்திருக்கலாம்.

அரசியல் சமாச்சாரத்தை அதிகம் சேர்த்துவிடுங்கள்.மற்றபடி செந்தில் கவுண்டமணி வழக்கம் போல் உங்கள் டச் கலக்கல்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க முத்து,

அந்த அரிசி சமாச்சாரமும் உடன்பிறவா தோழியை வெட்கப்பட்ட சமாச்சாரத்தையும் தவிர்த்திருக்கலாம்.//

அதனாலதான் தலைப்புக்கு பக்கத்துலயே காமடின்னு போட்டேன்..

காமடி ட் ராக் எழுதும்போ இந்த மாதிரியான சுதந்திரம் தேவைப்படுதுங்க..

இருப்பினும் உங்களுடைய கருத்துக்கு நன்றி..

ஜயராமன் said...

ஜோசப் சார்,

ரொம்ப நன்றாக இருக்கிறது.

படித்து ஆபீஸில் நார்மலாக இருப்பது கஷ்டமாய் போனது.

கவுண்டரின் கலக்கல் பாணியை அப்படியே படித்து வைத்திருக்கிறீர்கள். நகைச்சுவை காட்சிகளில் ஒவ்வொரு இடக்கு மிடக்கையும் நுணுக்கமாக எழுதியது நன்றாக இருக்கிறது.

அருமையாக வந்திருக்கிறது.

இத்தனை நீளமாக எப்படித்தான் அயராமல் எழுதுகிறீர்களோ. அதற்கே உங்களை பாராட்டலாம்.

ஆனா, என்ன இப்படி அம்மாவை பர்ஸனலா தாக்கிட்டீங்க. நீங்க ஐயா கட்சிதானே??? :-)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜயராமன்,

ஆனா, என்ன இப்படி அம்மாவை பர்ஸனலா தாக்கிட்டீங்க. நீங்க ஐயா கட்சிதானே??? //

என்னங்க அப்படி கேட்டுட்டீங்க? இத வெறும் நகைச்சுவையா மட்டும் பாருங்க..

உங்களுடைய ஐயப்பாட்டை நீக்க அடுத்த வாரம் மு.க.வுடனான பேட்டி வருகிறது:)

ரவி said...

#@$@%$#%^%$^

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ரவி!


#@$@%$#%^%$^ //

இது ஏதாவது புதிரா?

G.Ragavan said...

காமெடி சூப்பரு. நல்லா சிரிக்க வெச்சீங்க. குறிப்பா கவுண்டமணி செந்தில். ஜெயை வெச்சு நானும் ஒரு காமெடி எழுதனும்னு பாக்குறேன். கரெக்ட்டா கீழ விழுந்துட்டேன். இது தற்செயல்தான்னு இன்னமும் நம்புறேன். கருணாநிதியை வெச்சு எழுதியாச்சு. கூடிய சீக்கிரம் ஜெதான்.

அப்புறம் ஒரு விஷயம் சார். தனிப்பட்ட தாக்குதலும் கிண்டலும் வேண்டாம். அந்த அரிசி மேட்டரைத்தான் சொல்கிறேன். ஒருவருடைய உருவத்தை வைத்துக் கிண்டல் செய்வது மிகப்பெரிய தவறு. ஏற்கனவே இது போன்ற தனிமனிதத் தாக்குதல்களால் அரசியலும் பொதுமன்றங்களும் நாறிக் கிடைக்கையில் உங்களைப் போன்றவர்கள் இப்படி எழுதுவது சரியல்ல.

அரசியல், கொள்கைக் கிண்டல் மிகச் சரி. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை, உருவம், பழக்க வழக்கங்களைச் சாடுவது தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அடுத்த கருணாநிதி பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

அரசியல், கொள்கைக் கிண்டல் மிகச் சரி. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை, உருவம், பழக்க வழக்கங்களைச் சாடுவது தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.//

எல்லாருமே இதப்பத்தி சொல்லும்போது தப்புதான்னு தோனுது..

இனிவரும் பதிவுகளில் இப்படி நேராமல் பார்த்துக்கொள்கிறேன்..

G.Ragavan said...

இனிவரும் பதிவென்ன...இதிலேயே மாற்றிக் கொள்ளலாமே....

டிபிஆர்.ஜோசப் said...

இனிவரும் பதிவென்ன...இதிலேயே மாற்றிக் கொள்ளலாமே//

செஞ்சிட்டேன்..

முத்து நீங்க சொன்னதையும் எடுத்தாச்சி.

துளசி நீங்க சொன்னதையும் திருத்தியாச்சி..

தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டிய எல்லோருக்கும் நன்றி..

இதுதான் உண்மையான நட்பு என்பது..

Muthu said...

//மேடம்.. நீங்க எந்த கூட்டணியில இப்ப இருக்கீங்கன்னு....//

அப்படி போடுங்க அரிவாளை:))

//முத்து நீங்க சொன்னதையும் எடுத்தாச்சி.//

ஹிஹி..என்ன சார் நமக்குள்ள?எனக்கும் ஆட்டோ பயந்தான்..உங்களை புடிச்சி அப்படியே என்னையும் பிடிக்க எவ்ளொ நேரம் ஆகும்? :))

(ராகவனையும் உஷாரா இருக்க சொல்லுங்க:))

டிபிஆர்.ஜோசப் said...

ராகவனையும் உஷாரா இருக்க சொல்லுங்க:)) //

அவர் பாவம் ஏற்கனவே கீழ விழுந்து கைய ஒடச்சிக்கிட்டு அவதிப்படறார்.

நீங்க வேற ஏன் அவர பயமுறுத்தறீங்க?

என்ன ராகவன் கை சரியாயிருச்சா?

G.Ragavan said...

// (ராகவனையும் உஷாரா இருக்க சொல்லுங்க:)) //

முத்து, இதெல்லாம் எனக்குத் தேவையா! மங்களூர்ல இருந்து நீங்க சொல்லீட்டீங்க. நானும் பெங்களூருக்கு அடுத்த மாசக் கடைசீல போனப்புறம் பாருங்க...என்னோட வீரதீரத்தக் காட்டுறேன். யாரு காதிலயும் விழலையே :-)))

ஏதோ செவனேன்னு ஆபீஸ் பஸ்சுல போயிட்டு வந்துட்டு இருக்கேன். ஆட்டோ கீட்டோன்னு பயமுறுத்தாதீங்கய்யா!

G.Ragavan said...

// tbr.joseph said...
ராகவனையும் உஷாரா இருக்க சொல்லுங்க:)) //

அவர் பாவம் ஏற்கனவே கீழ விழுந்து கைய ஒடச்சிக்கிட்டு அவதிப்படறார்.

நீங்க வேற ஏன் அவர பயமுறுத்தறீங்க?

என்ன ராகவன் கை சரியாயிருச்சா? //

ஆயிருச்சுன்னுதான் நெனைக்கிறேன். இப்போ கைத்தொட்டில் இல்லை. கையை முடிஞ்ச வரைக்கும் பயன்படுத்துறேன். ஆனா வெயிட் தூக்குறதோ இழுக்குறதோ தள்ளுறதோ இல்லை. ஒரு மாசத்துக்கு அதெல்லாம் கூடாதாம். அந்த ஒரு மாசம் முடிஞ்சதும் பெங்களூர்தான்.

அப்புறம் ஜூலை கடைசீல சென்னைச் சந்திப்பு இருக்குதா? ஏற்பாட்டத் தொடங்குங்க இப்பவே. நல்ல ஓட்டலாப் போயி மதியச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கட்டும்.

டிபிஆர்.ஜோசப் said...

யாரு காதிலயும் விழலையே :-)))//

அப்படித்தான் இருக்கணும்.. ஜாக்கிரதையா?

பகல்ல பக்கம் பார்த்து பேசணும்னு சும்மாவா சொன்னாங்க?

டிபிஆர்.ஜோசப் said...

அப்புறம் ஜூலை கடைசீல சென்னைச் சந்திப்பு இருக்குதா? ஏற்பாட்டத் தொடங்குங்க இப்பவே. நல்ல ஓட்டலாப் போயி மதியச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்கட்டும். //

கூட்டம் நிச்சயம் உண்டு..

ஆனா சாப்பாடு கூட்டம்.. அதுவும் மதியம்..

என்ன டோண்டு சார்.. கேக்குதா?

ரவி said...

இல்லை..கவுண்டமணி செந்திலை திட்டுறாரு...

நிலா said...

ஆரம்பமும் முடிவும் நல்லா இருந்துச்சி.
ச.க வுக்கு வெயிட்டான பாத்திரம் போங்க:-)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ரவி,

இல்லை..கவுண்டமணி செந்திலை திட்டுறாரு... //

அதாவது பிரசுரிக்க முடியாத வார்த்தைகளால்!

சூப்பர்:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க நிலா,

ச.க வுக்கு வெயிட்டான பாத்திரம் போங்க//

:))