29.11.06

சூரியன் 147

சேதுமாதவனின் வசவு வார்த்தைகள் அவருடைய கோபத்தை விட அவர் குடித்திருந்த மதுவின் தாக்கம்தான் என்பதைப் புரிந்துக்கொண்ட பத்மநாபன் பதில் ஏதும் பேசாமல் காத்திருந்தான்.

சேதுமாதவனின் குணம் பிடித்திருந்ததோ இல்லையோ அவர் ஏவும் வேலைகளுக்கு சற்று அதிகமாகவே அவர் அள்ளி வீசும் சன்மானம் அவனுக்கு மிகவும் பிடித்திருத்ததால்தானே அவரை இன்னமும் பொறுத்துக்கொண்டிருக்கிறான்? இல்லெங்கில் இயாளெ கொன்னு குவிக்கான் எத்தனெ மினிட்டு வேணும்.. பட்டி.. பிராந்தன்..

அவன் எதிர்பார்த்தது போலவே சற்று நேரத்தி சேதுமாதவனின் வேகம் குறைய, ‘எடோ எந்தா நோக்கி நிக்கனெ.. ரெண்டன்னம் எடுத்து வீசு.. தண்டெடுத்து பறயனோ..’ என்றவாறு குறுமேசையில் காலியாயிருந்த இரண்டு காலி தம்ளர்களில் ஒன்றைக் காட்டினார்.

‘இதான், இதான்.. சாரு.. தேஷ்யத்தோட சீத்த பறஞ்சாலும்.. இங்ஙனயும் கொடுக்கண்டல்லோ..’ என்று மனதுக்குள் அவரை புகழ்ந்தவாறு அவர் கூறுவதற்கென்றே காத்திருந்தது போல மணக்க, மணக்க மேலைநாட்டு சரக்கை சற்று தாராளமாகவே உற்றி சோடா கலந்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு வைத்தான். சூடாக தொண்டைக்குள் இறங்கிய மது அளித்த உற்சாக தலைக்கு ஏற கண்கள் சிவக்க சேதுமாதவனைப் பார்த்தான் பத்மநாபன்.

‘பறயு சார்.. ஞான் எந்தா ச்செய்யேண்டே..?’

சேதுமாதவன் அவன் விறைப்புடன் நின்ற தோரணையைப் பார்த்து வாய்விட்டு சிரித்தார். ‘எடோ பப்பா.. இதா, இதா, இதாண்ட வேண்டது..’ என்றவர் படு சீரியசானார். குரலை இறக்கி அவனை அருகில் வரும்படி அழைத்தார். நான்கு பெக்குகள் உள்ளே சென்ற தாக்கத்தில் நாக்கு குளறினாலும் கட்டுப்படுத்திக் கொண்டு பேசலானார்.

‘எடோ.. .. எஸ்.பி.. அயாள்டெ பேரெந்தான?’

பத்மநாபனுக்கு அவர் குறிப்பிட்ட எஸ்.பி முந்தைய தினம் தன்னை மடக்கிப்பிடித்த தனபால் சாராகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துக்கொள்ள முடிந்தது. ‘யாரா சாரே.. தனபாலான்னோ..’

‘அதே..ஆத் தெண்டியான.. அவன் இன்னு நம்மள்ட ஓஃபீசுக்கு வந்நிருந்நு..’

பத்மநாபனின் விழிகள் வியப்பால் விரிந்தன.. ‘எந்தா சாரெ பறயனெ? அத்தேஹம் எந்துனா..’

சேதுமாதவன் எரிச்சலுடன் அவனைப் பார்த்தார். ‘அத்தேஹமோ.. அவனெந்தா அத்தெறெ வெல்லிய ஆளானோ.. தனிக்கெந்தா அயாள்டெடுத்து அத்தெற ரெஸ்பெக்ட்டு.. அயாள்னு பறஞ்சா போறே?’

பத்மநாபனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.. ‘இல்ல சார்.. சாரி சார்..’

சேதுமாதவனின் கோபம் அப்போதும் குறையவில்லை. ‘எடோ தான் ஒரு தெண்டியான.. தனிக்கி வேணங்கிலு அயாளு வெலிதாவாம்.. எனிக்கி அவன் ஒரு புல்லா.. அறியோ..  எண்டெ லெவலுக்கு அயாளு ஒரு.. ஒரு.. எந்தா பறயா..’ மேற்கொண்டு தனபால் எஸ்.பியை அர்ச்சிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிவிட்டு சட்டென்று, ‘அது போட்டே.. தான் அயாள்டெடுத்து எண்டே பேரு பறஞ்சிண்டாயிருந்நோ..?’ என்றார்.

இந்த நேரடி தாக்குதலை முற்றிலும் எதிர்பார்த்திராத பத்மநாபன் சட்டென்று சமாளித்துக்கொண்டு, ‘ஞானா.. இல்லல்லோ சாரே..’ என்று பதிலளித்தான்..

சேதுமாதவன் அவனுடைய பதிலில் திருப்தியில்லாமல் அவனையே பார்த்தார். இவன் சொல்லியிருப்பான்.. ராஸ்க்கல்.. இவன் இல்லன்னா இவனோட லீடர் .. யாரவன்? பாஸ்கரன்.. கிடுக்கி பாஸ்கரன்..

‘தானில்லங்கில் தண்டெ நேத்தா உண்டல்லோ..  பாஸ்கரன்.. அவனானோ?’

சேதுமாதவனின் இத்தகைய விசாரனை உத்தி பத்மநாபன் அறிந்திருந்ததுதான். தன்னை தனியாக விசாரித்துவிட்டு அவன் அளிக்கும் பதிலைக் கொண்டே பாஸ்கரனிடமிருந்து பதிலை வரவழைக்கும் டெக்னிக் அவனுக்கு தெரியாதா என்ன?

‘இல்ல சார்.. யாரும் பறஞ்சில்லா..’ என்றான் உறுதியாக..

சேதுமாதன் நடுங்கும் கைகளுடன் அடுத்த பெக்கை ஊற்றுவதிலேயே குறியாயிருக்க பத்மநாபன் மீண்டும் இத்தகைய கேள்விகள் வந்தால் எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

‘ஷரி போட்டே.. எங்ஙனயோ.. அயாளு வந்நிருந்து..  ஆத்தெண்டி சேர்மனெ கண்டேச்சி போயி.. எந்தா சோய்ச்சிண்டாவும்? தனிக்கி எந்தெங்கிலும் தோனுனுண்டோ..?’

பத்மநாபன் உஷாராக, ‘அறியில்லா சார்..’ என்றான். நாமாக எதையாவது சொல்லப் போய் இந்தாளு மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டா நம்ம பாடு திண்டாட்டமாயிருமே என்ற நினைப்பு அவனுக்கு.

‘ஷரி.. எந்தெங்கிலும் பறஞ்சோட்டே... நமக்கு எந்து போயி.. ஞான் தன்னெ விளிச்ச காரியம் பறஞ்சேக்காம்..’ என்ற சேதுமாதவன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘எடோ தான் இவ்விட வந்து இருக்கி.. ஞான் பறஞ்சோட்டே..’ என்றவாறு தன்னுடைய காலடியைக் காட்ட பத்மனாபன் தன் தலைவிதியை நொந்துக்கொண்டு அவர் காலடியில் அமர்ந்தான்.

‘எடோ..  முரளியுண்டுல்லே..’ என்று ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்களில் அவர் இட்ட ஆணைகள் ஒரு நிமிடம் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

முரளியையா.. இந்தாளுக்கு ஏதாச்சும் பைத்தியம், கிய்த்தியம் பிடிச்சிருச்சா..

முரளி யாரு? நம்மள்டெ நாட்டுக்காரன்.. போறாததுக்கு ஒரு பேங்க்கோட யூனியன் லீடர். அவனெப் போயி..

இருப்பினும் மறுபேச்சு பேசாமல் அவர் சொல்லி முடிக்கும்வரை காத்திருந்தான். அவர் இறுதியில், ‘எந்தா ஞான் பறஞ்சது மனசாலாயோ?’ என்ற கேட்ட கேள்விக்கு பலமாக தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றான்.

அவன் பதிலளிக்க முயல்வதற்குள் வாசலில் மணியடிக்கும் ஓசை கேட்டது.

‘எடோ..  விஷ்வன் சாராயிருக்கும்.. தான் பொக்கோ.. ஞான் பறஞ்ச காரியம் நாளெ நடந்திருக்கணும்.. ஆத் தெண்டி நம்மள க்ராஸ் ச்செய்யான் நோக்குவா.. விடாம் பாடில்லா.. மனசிலாயோ..’

பத்மநாபனுக்கு அவர் கூறிய வேலையை முடிப்பதில் ஆர்வம் இல்லாவிடினும் வேறு வழியில்லாமல், ‘சரி சாரே..’ என்றவாறு கிளம்பினான்.

‘எடோ நிக்கு.. வேறொரு காரியம்..’ என்றார் சேதுமாதவன். ‘ஞான் இப்போ பறஞ்ச காரியம் பாஸ்கரன் அறியேண்டா.. கேட்டோ..’

பத்மநாபனுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. ‘சரி.. சார்.. பறயில்லா.’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டு படிகளில் வேகமாக இறங்க எதிரே வந்த விஸ்வநாதன் அவனை முறைத்தார். ‘இந்த பொறுக்கி எங்க இந்த நேரத்துல.. இவனுங்க சகவாசம் வேணாம்னு எத்தனெ தரம் சொன்னாலும் இவருக்கு புரிய மாட்டேங்குதே..’ என்று முனகியவாறு மேலே செல்ல கீழே ஹாலில் நின்றிருந்த திருவும் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்திருந்த மாயாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

திருவுக்கு பத்மநாபனை அடியோடு பிடிக்காதென்றால் மாயாவுக்கோ விஸ்வநாதனையும் பிடிக்காது.. ‘Parasites..’ என்று முனகியவாறு ஏஷியாநெட்டில் அடக்க மாட்டாமல் அழுதவாறே  சிரிவித்யா பேசும் டயலாக்கைக் கேட்பதில் கவனத்தைத் திருப்பினாள்..

********

‘என்னடா ஒன் தோஸ்த்துங்க ஒருத்தனையும் காணம்? வெளக்கு வச்சதும் டாண்ணு வந்து நின்னுருவாய்ங்க..? என்னாச்சி இன்னைக்கி? அப்பன் வந்திருக்கான்.. அதனால வெளியில வச்சிக்கலாம்னு சொல்லிட்டியோ?’

இன்னைக்கி தாகசாந்தி செஞ்சிக்க முடியாது போலருக்கே என்று கடுப்புடன் சோபாவில் அமர்ந்திருந்த ராசேந்திரன் எரிச்சலுடன் தன் தந்தையைப் பார்த்தான். மனுஷன் எங்கயாச்சும் வெளியில போவாரு நாம நடைய கட்டலாம்னு பார்த்தா நடக்காது போலருக்கே..

‘என்னடா என்ன யோசிக்கறே.. நா எங்கயாச்சும் வெளியில போனா தோஸ்த்துங்கள பாக்க போயிரலாமேன்னுதானே..’

ராசேந்திரன் அவருடைய பேச்சைத் தவிர்க்கும் நோக்கத்துடன் எதிரே இருந்த தொலைக்காட்சி பெட்டியை முடுக்கிவிட்டான்..

சன் டிவியில் யாரோ அழுதுக்கொண்டிருக்க, அடுத்த சானலுக்கு தாவினான்.. ஜெயாவில் குஷ்பு அழுதுக்கொண்டிருந்தார்.. அடுத்த சானல்.. அடுத்த சானல் என எல்லாவற்றிலும் யாராவது ஒருத்தர் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றுக்கொண்டிருக்க வெறுத்துப்போய் அணைத்துவிட்டு ரிமோட்டை தூர எறிந்தான்..

‘எலேய்.. அவளுங்களாவது துட்டெ வாங்கிக்கிட்டு அளுவறாளுங்க.. நீ செஞ்சி வச்சிருக்கற காரியத்துக்கு சீக்கிரமே விடிவு வரலைன்னு வச்சிக்கோ.. நானும் ஒங்கம்மாளும் சம்பளம் வாங்காமயே அளுவ வேண்டியதுதான்..’

இவர் வேற.. என்று மனதுக்குள் எரிச்சலுடன் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தான்..

‘என்ன ராசேந்திரா.. நா பேசறது வெளங்குதாலே. என் களுத்த பிடிச்சி நெரிச்சிரலாம்னு வருமே.’

அப்போதும் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான் ராசேந்திரன். அவன் பதில் பேசினால் நிச்சயம் அது வாக்குவாதத்தில் சென்றுதான் முடியும் என்று நினைத்தான்.

தனக்கு இப்படியொரு துர்பார்க்கிய நிலை ஏற்படும் என்று கடந்த மாதம் வரை நினைத்திருக்கவில்லை. ராசம்மாளை தான் புரிந்துக்கொள்ள தவறியதன் விளைவே இது என்று நினைத்தான்.

எல்லாம் அந்த செல்வத்தால வந்ததுதான். இருடா லேய்.. எப்படி என் பெஞ்சாதிய தூண்டிவிட்டு இந்த அளவுக்கு அவள வளத்துவிட்டியோ அதே மாதிரி ஒம்பொஞ்சாதியையும் பண்றேன்.. அவளும் படிச்சவதான..

ராசம்மா என்னெ பளிவாங்கணும்னு எறங்க ஆரம்பிச்சா அதுக்கு ஒன் தொனையில்லாம முடியாதுன்னும் அதுக்காக வேண்டி நீ இங்கயே வந்து செட்டிலாவேன்னும் எனக்கு தெரியும்லே.. நீ இங்கன இருக்கறப்போ நா அங்க போறேன்.. ஒம்பொஞ்சாதி மனச மாத்தறேன்.. ஒன்னால முடிஞ்சது என்னால முடியாதாக்கும்..

‘என்னலே பலமா யோசிக்கற போலருக்கு? ராசம்மா நம்மள  மாட்டிவிட்ட சுத்தல்லருந்து எப்படி தப்பிக்கலாம்னா.. இல்ல இன்னைக்கி பொளுது குடிக்க முடியாம போயிருச்சேன்னா..’

இவர் வேற. இடைக்கிடையில. அசரீரி மாதிரி.. பேசாம ஊர்லயே கிடக்க வேண்டியதுதானே.. என்னமோ தனக்குத்தான் எல்லாந் தெரியுங்கறா மாதிரி.. போவீயளா..

என்ன நினைத்தாரோ ரத்தினவேல் சட்டென்று எழுந்து நின்றார். ராசேந்திரன் அவரை நிமிர்ந்து பார்த்தான் என்ன என்பதுபோல்..

‘நா போயி ஒன் வக்கீல பார்த்துட்டு வரேன்.. காலையில போன பய.. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட கூப்ட்டு சொல்லலே.. அந்த சேட்ட பாத்துட்டு அப்படியே பேங்குக்கு போய்ட்டு வரேன்னுதானே ரெண்டு பேரும் பொறப்பட்டு போனானுவ?’

ராசேந்திரன் அவர் புறப்பட்டு போனால் போறும் என்று நினைத்தான். ‘சரிப்பா.. நீங்க போய் பார்த்துட்டு வாங்க..’

ரத்தினவேல் உரக்கச் சிரித்தார்.. ‘அதான பார்த்தேன்.. அண்ணன் எப்ப சாவான்.. திண்ணை எப்ப காலியாவுங்கறா மாதிரிதானெ நீ சிந்திக்கே.. அப்பன் இந்த பக்கம் போனதும்.. நாம எளுந்து நம்ம பசங்கள பாக்க போயிரணும்.. அதான ஒன் நெனப்பு?’

‘ஆமா அதுக்கென்ன இப்போ..? என்றான் ராசேந்திரன் எரிச்சலுடன்..எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ்தான் முக்கியம்.. அவன்களோட ஒரு அஞ்சு நிமிசம் பேசினா எனக்கு ஏதாச்சும் ஐடியா கெடைக்கும்..’

‘அது என்னமோ சரிதான்..’ என்றார் ரத்தினவேலு கேலியுடன்.. ‘சரக்க உள்ள தள்ளினாத்தானல்லே வண்டி ஓடும்.. போ.. தாராளமா போய்ட்டு வா..’

விட்டால் போதும் என்று நினைத்த அவர் மீண்டும் மனம் மாறுவதற்குள் புறப்படும் நோக்கத்துடன் டீப்பாயில் கிடந்த தன்னுடைய கார் சாவையை எடுத்துக்கொண்டு எழுந்தான்..

‘ஆனா ஒன்னுலே..’ என்று ரத்தினவேல் குறிக்கிட என்ன என்பதுபோல் எரிச்சலுடன் பார்த்தான்.

‘நீ திரும்பி வரும்போது ஒங்கப்பன் போயிருப்பான்.. அப்புறம் நீயாச்சும் ஒம்பொஞ்சாதியாச்சி.. ஒன் பிரச்சினையில இந்தப்பன் தலையிடமாட்டாங்கறது மட்டுமில்ல.. இவன் என் பிள்ளையே இல்லேன்னு காலையில பத்திரிகையில வராமாதிரி செஞ்சிருவேன்.. அப்புறம் ஒன் இஷ்டம்..’

ராசேந்திரனுக்கு இது கேட்டு, கேட்டு புளித்துப் போயிருந்தது. இதையே சொல்லி, சொல்லி இந்த மனுசன் எத்தனெ வருசத்துக்குத்தான் மிரட்டுவாரு.. போய்யா நீயும் ஒன் சொத்தும்னு போய்ட்டா என்ன? என்று சிந்தித்தான்..

ஆனால் அடுத்த நொடியே அடுத்த வேளை குடிக்க என்ன சாப்பாட்டுக்கே வழியிருக்காதே என்ற நினைப்பு வர சுருதியிறங்கி, ‘இப்ப என்ன பண்ணணும்னு சொல்றீங்க? அதையாவது சொல்லுங்க.’ என்றான்.

நாடார் சிரித்தார். ‘அப்படி வாடா மவனே.. போயி.. கார எடு.. நாம ரெண்டு பேருமாவே போயி பாத்துட்டு வருவோம்..’

ராசேந்திரன் தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டே கையில் சாவியுடன் வாசலை நோக்கி நடக்க ரத்தினவேல் தனக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் நடந்தார் வீட்டைப் பூட்டிக்கொண்டு.

தொடரும்..








     

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மலையாளத்தில் சம்சயிக்றத ஞான்
அறிஞ்சில்லா,,,ஷம்மிக்கணும்..தமிழ்லே ப்ராக்கெட்லே போட்டா வசதியா இருக்கும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

மலையாளத்தில் சம்சயிக்றத ஞான்
அறிஞ்சில்லா,,,ஷம்மிக்கணும்..//

இந்தத் தடவ கொஞ்சம் ஜாஸ்தியாவே ஆயிருச்சி போல.. அதான்..

மொதல்ல ஒங்க பின்னூட்டத்துலருக்கறதும் மத்தவங்களுக்கு புரியணுமில்லே..

சம்சயிக்கறதுன்னா சந்தேகப்படறது..

நீங்க சொல்ல வந்தது சம்சாரிக்கறது.. சரிதானே..

ஷம்மிக்கணும்னா குடிச்சிட்டு சொல்றா மாதிரி இருக்கு.. ஷெமிக்கணும்னா மன்னிச்சிக்கோன்னு சொல்றது..

சரி இனி மலையாள-தமிழ் டிக்ஷனரி:

கொன்னு குவிக்கான் - கொலை பண்ணணும்னா..

பட்டி: பெண் நாய்..

பிராந்தன்: பைத்தியக்காரன்

எந்தா நோக்கி நிக்கனெ: என்னடா பாத்துக்கிட்டு நிக்கறே

ரெண்டன்னம் எடுத்து வீசு: ரெண்டு பெக் அடிடா..

தண்டெடுத்து பறயனோ: இதுக்கெல்லாம் ஒனக்கு சொல்லணுமா?

தேஷ்யத்தோட சீத்த பறஞ்சாலும்: கோபமா திட்டுனாலும்

இங்ங்னயும் கொடுக்கண்டல்லோ: ஊத்தியூம் குடுக்கறாரே:)

தெண்டி: இது வேணாம்.. கெட்ட வார்த்தை..

அத்தேஹம் - அவர்கள் என்று மரியாதையுடன் அழைக்க உபயோகிப்பது

அயாள்: கொஞ்சம் மரியாதை குறைவான சொல்..

சாதாரணமாக நமக்கு அறிமுகமில்லாதவர்களை இப்படி அழைப்பார்கள். பழக்கமான சற்று பெரிய பதவியிலோ அல்லது நம்மைவிட வயதில் பெரியவர்களோ என்றால் அத்தேஹம் என்பார்கள்.

அத்தறெ வெல்லிய ஆளோனா: அந்த ஆள் என்ன பெரிய இவனா?

எனிக்கி அவன் புல்லா: எனக்கு அவன்.. இதுவும் ஒரு மாதிரி கெட்ட வார்த்தைதான்.. அதனால் வேண்டாம்..

சோய்ச்சிண்டாவும்: கேட்டிருப்பான்..


எந்தெங்கிலும் தோனுனுண்டோ: ஒனக்கு ஏதாவது தோனுதா?

நம்மளெ க்ராஸ் செய்யான் நோக்குவா: அவன் நம்மள ஏமாத்தலாம்னு பாக்கான்.


போறுமா ஜி.. மீதியிருக்கறதெல்லாம் சின்ன, சின்ன வார்த்தைகள்தான்..

மனசிலாயோ.. அப்படின்னா புரிஞ்சிதான்னு அர்த்தம்..

பிராக்கெட்ல தமிழ்ல போட்டா சுவை குறைஞ்சிருமேன்னு பார்த்தேன்..

இனிமே மலையாளம் ஜாஸ்தி வராம பாத்துக்கறேன்..

Meenapriya said...

//தெண்டி: இது வேணாம்.. கெட்ட வார்த்தை..

Vali gave the meaning in parthale paravasam...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனா,

Vali gave the meaning in parthale paravasam... //

அப்படியா.. அப்ப சரி:)