பிற்பகல் - நளினியின் வீடு - பாஸ்கரும் நளினியும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். நளினியின் முன்பு அவளுடைய மடிக்கணினி.
பாஸ்கர் - It's really amazing. உன்னால எப்படி லாப்டாப்ப இவ்வளவு ஈசியா யூஸ் பண்ண முடியுது?
நளினி சிரிக்கிறாள் - கீ போர்ட்ல 'F' & 'J' லெட்டர் கீய்ஸ் மேல ஒரு சின்ன கோடு - டேஷ் மாதிரி - இருக்குது பாருங்க.
பாஸ்கர் டீப்பாய் மீது இருக்கும் மடிக்கணினி கீபோர்டை குனிந்து பார்க்கிறான் - ஆமா.
நளினி - டைப்பிங்கோட ஃபர்ஸ்ட் லெசன் என்ன? ஞாபகம் இருக்கா?
பாஸ்கர் சிரிக்கிறான் - நா One finger Operator -
நளினியும் சிரிக்கிறாள் - நா சொல்றேன். Left handல - asdfgf. அப்புறம் Right handல ;lkjhj. நா சொன்ன F அப்புறம் J கீய்ஸ்ல ரெண்டையும் அது மேலருக்கற கோட வச்சி identify பண்ணி எங்க ஆள்காட்டி விரல வச்சிக்கிட்டா போறும், entire keyboard keysஐயும் யூஸ் பண்ண முடியும். இப்ப பாருங்க. இந்த ரெண்டு கீய்ஸ்ல இருந்து abcde அடிச்சி காட்றேன்.
நளினியின் விரல்கள் கீபோர்ட் மீது நளினமாக ஓடுகின்றன. ஒரு சிறிய தவறும் இல்லாமல் திரையில் ஆங்கில எழுத்தின் 26 எழுத்துக்களும் அகர வரிசையில் பதிய பாஸ்கர் வியப்புடன் பார்க்கிறான்.
நளினி - உங்களால ஸ்க்ரீன்ல இருக்கறத பாக்க முடியும். ஆனா என் லாப்டாப்ல நா அடிக்க ஸ்க்ரீன்ல டைப் ஆகற எழுத்துகள என் லாப்டாப் ஸ்பீக்கர் வழியா என்னால கேக்க முடியும். இருங்க ஸ்பீக்கர சவுண்ட கூட்டறேன்.
நளினியின் இடது கை விரல்கள் F பட்டனிலிருந்து இரண்டு வரிகள் கீழே நகர்ந்து கீழ் வரிசையில் இருந்த fn பட்டனையும் வலது கை J பட்டனிலிருந்து இரண்டு வரிகள் மேலே சென்று ஸ்பீக்கரின் ஒலியை கூட்டும் function பட்டனை அழுத்துகின்றன. அதன் பிறகு அவள் ஒவ்வொரு பட்டனை அழுத்த, அழுத்த அதன் ஒலி ஸ்பீக்கர் வழியே கேட்கிறது.
நளினி புன்னகையுடன் பாஸ்கரை நோக்கி பார்க்கிறாள் - Simple, is it not? இதே மாதிரிதான் செல்ஃப்போன் பேட்லயும் '5' பட்டன் மேல ஒரு சின்ன கோடு இருக்கும். அத வச்சியே மொத்த நம்பரையும் ஆப்பரேட் பண்ணலாம்?
பாஸ்கர் - wonderful... சரி நீ லாப்டாப்ல அடிச்சத எப்படி ப்ரிண்ட் எடுக்கறே?
நளினி - எல்லாத்துக்கும் இப்ப software இருக்கு பாஸ்கர். ஸ்க்ரீன்ல இருக்கறத அப்படியே ப்ரெய்லா அடிக்கறதுக்கு ப்ரிண்டர் இருக்கு. அது கொஞ்சம் காஸ்ட்லி. அதனால நா லாப்டாப்ப எடுத்துக்கிட்டு ப்ளைண்ட் ஸ்கூலுக்கு போயிருவேன். அங்க இருக்கறவங்க கிட்ட குடுத்து நா அடிச்சத அப்படியே ப்ரெய்ல் பிரிண்ட் போட்டுறுவேன். இப்பல்லாம் ஆடியோ புக்ஸ் கூட நிறைய வந்துருச்சி. All you need is money.. என் மொபைல்ல கூட நிறைய ஆடியோ புக்ஸ் வச்சிருக்கேன். போர் அடிக்கறப்ப ஹெட் ஃபோன் வச்சிக்கிட்டு உக்காந்தா போறும். நேரம் போறதே தெரியாது. I am so used to darkness Bhasker.... (அவளுடைய குரல் சட்டென்று மாறுகிறது) This is my world... I mean the world of darkness, I don't need light anymore...
அவள் ஆங்கிலத்தில் கூறிய வாக்கியத்தை மடிக்கணினியில் அடிக்க கணினியில் இருந்து வந்த ஒலிவடிவம் அறையெங்கும் நிறம்புகிறது....
நளினியின் முகத்தில் தென்பட்ட ஒருவித வேதனை பாஸ்கரின் மனதை பிசைகிறது. அவளை நெருங்கி அவளுடைய கரங்களைப் பற்றுகிறான்.
பாஸ்கர் - I fully understand your feelings Nalini. ஆனா இதுவே போறும்னு நீ நினைக்கறத நினைச்சாத்தான்....
நளினி - I am comfortable with what I am Bhaskar... That's what I am trying to tell you...
பாஸ்கர் - நா இல்லேன்னு சொல்லல நளினி.. ஒருவேளை இப்ப இருக்கற மெடிக்கல் facility நீ சின்னவளா இருக்கறப்ப இருந்துருந்தா அப்பவே இத நல்லவிதமா ட்ரீட் பண்ணியிருக்க முடியுமே? வசதிகள் இருக்கறப்ப யாராச்சும் அத வேணாம்னு சொல்வாங்களா?
நளினி - But what's the guarantee? எனக்கு இப்ப அது தேவையில்லையே... I am comfortable as it is... ஏன்? எதுக்கு மறுபடியும் ஒரு சோதனை... அப்புறம் சக்சஸ் ஆகலன்னா... அதனால வேதனை... நா இப்படியே இருந்தடறேனே...
அவளுடைய குரல் தழுதழுக்க அவனையுமறியாமல் அவளை நெருங்கி அணைத்துக்கொள்கிறான்... நளினி அவன் தோள்மீது தலை சாய்த்து அழுகிறாள். பாஸ்கர் அவளை தட்டிக்கொடுத்தவாறு அவள் அழுது முடிக்கும்வரை காத்திருக்கிறான். ஸ்வீட்டி தலையை தூக்கி அவர்கள் இருவரையும் சோகத்துடன் பார்க்கிறது...
நளினி அழுது முடித்து நிமிர்ந்து அவனை விட்டு சற்று தள்ளி அமர்கிறாள்.
நளினி - I am sorry Bhaskar... I just lost control....
பாஸ்கர் அவளுடைய கரங்களை பற்றுகிறான் - It's OK...
சிறிது நேரம் இருவரும் மவுனமாக அமர்ந்திருக்கின்றனர்.
நளினி - எத்தன மணிக்கி போகணும் பாஸ்கர்?
பாஸ்கர் - இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருந்தா நல்லதுன்னு சுரேஷ் ஃபோன் பண்ணார். அநேகமா நீதான் இன்னைக்கி கடைசி பேஷண்ட்டுன்னு நினைக்கிறேன். அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருக்கறவங்களையெல்லாம் முடிச்சிட்டு நம்மள பாக்கறேன்னு சொல்லியிருக்காராம்...
நளினி எழுந்து நிற்கிறாள். - அப்ப கிளம்புங்க...
பாஸ்கரும் எழுந்து நிற்கிறான் - you are OK now?
நளினி புன்னகையுடன் அவனை பார்க்கிறாள் - Yes... let's go...
வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் வெளியேறுகிறார்கள். ஸ்வீட்டி தொடர்ந்து குறைப்பது வெளியில் கேட்கிறது...
......
மாலை - மருத்துவமனை - பாஸ்கரும் சுரேஷும் அமர்ந்திருக்கின்றனர்.
சுரேஷ் - He is one of the most popular eye surgeons in the Country Bhaskar. இவர் அகராதியில முடியாதுங்கற வார்த்தையே இல்லைன்னு சொல்லலாம். நா குடுத்த ஃபைல லேசா ஒருதரம் புரட்டி பார்த்தார். உடனே கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டார். அதனால....
மருத்துவரின் அறைக் கதவைத் திறந்துக்கொண்டு நர்ஸ் வந்து அவர்களை நெருங்குகிறாள் - மிஸ்டர் பாஸ்கர் யாரு?
பாஸ்கர் எழுந்து நிற்கிறான்.
நர்ஸ் - உங்கள டாக்டர் வரச் சொன்னார்.
பாஸ்கர் தன் நண்பனைப் பார்க்கிறான்.
சுரேஷ் - நீங்க போங்க பாஸ்கர்... I will wait here... தேவைப்பட்டா வரேன்...
பாஸ்கர் மருத்துவரின் அறைக்குள் நுழைகிறான்.
மருத்துவர் எழுந்து அவனை நோக்கி தன்னுடைய வலது கரத்தை நீட்டுகிறார். - I am Doctor Mohan
பாஸ்கர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அமர்கிறான். சற்று தள்ளி பரிசோதனை இருக்கையில் அமர்ந்திருக்கும் நளினியை பார்க்கிறான்.
பாஸ்கர் - சொல்லுங்க டாக்டர்...
மோகன் - She has grade4 posterior subscapular cataract Mr.Bhaskar... இத அவங்களோட சைட் போனவுடனேயே சரியா டையாக்னஸ் செஞ்சிருந்தா ட்ரீட் பண்ணியிருக்கலாம். ஆனா பதினஞ்சி வருசத்துக்கு முன்னால இந்த அளவுக்கு மெடிக்கல் ஃபீல்ட் அட்வான்ஸ் ஆயிருக்கலங்கறதும் உண்மை...
பாஸ்கர் - Is it now possible to treat her Doctor?
மோகன் பாஸ்கரைப் பார்த்து புன்னகை செய்கிறார் - I hope so... I may have to do some more tests and study the results... எல்லாத்தையும் செஞ்சிட்டு சொல்றனே... Don't lose hope... நளினியை திரும்பி பார்க்கிறார்... What do you say Nalini?
நளினி புன்னகையுடன் எழுந்து நிற்கிறாள் - Whatever you say Doctor.. I am in your hands now...
மோகனும் எழுந்து நிற்க பாஸ்கர் தயக்கத்துடன் எழுந்து நிற்கிறான்.
மோகன் - நாளைக்கி காலையில ஏழு மணிக்கெல்லாம் நளினி வந்து அட்மிட் ஆயிரட்டும்... I will leave a message at the reception...
பாஸ்கர் நளினியை பார்க்கிறான். அவளை நெருங்கி Can you wait outside Nalini? I'll talk to the Doctor and come..
நளினி புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டு நர்ஸ் துணையுடன் வெளியேறுகிறாள்..
பாஸ்கர் மோகனை பார்க்கிறான். - Hou much should I remit tomorrow Doctor?
மோகன் புன்னகையுடன் அவனை பார்க்கிறார். - I am not sure... இப்போதைக்கி ஒன்னும் கட்ட வேணாம்... That's what my Dean told me ... Not to discuss about charges with you.... உங்க Circle Manager அவரோட க்ளோஸ் ஃப்ரெண்டாம்... So let us not worry about that now... பாஸ்கரை நோக்கி தன் வலக்கரத்தை நீட்டுகிறார் Let us hope for the best... she would be given the best possible treatment Bhaskar Don't worry...
பாஸ்கர் புன்னகையுடன் அவருடைய கரத்தை குலுக்கிவிட்டு வெளியில் வந்து தன்னுடைய நண்பனிடம் மருத்துவர் கூறியதை விளக்கியவாறே நளினியை அழைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கிறான்.
அவனுடைய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந்ததும் நண்பனை நோக்கி பாஸ்கர் திரும்புகிறான்- Thankyou so much Bhaskar... நா நம்ம சர்க்கிள் மேனேஜர வீட்டுக்கு போயி கூப்பிடறேன்... நாளைக்கி நானே கூட்டிக்கிட்டு வந்துடறேன்... Don't trouble yourself... தேவைப்பட்டா கூப்பிடறேன்... பை...
நளினியை முன் இருக்கையில் அமர்த்திவிட்டு பாஸ்கர் வாகனத்தை கிளப்புகிறான். சற்று நேரம் வரை நளினி மவுனமாக அமர்ந்திருக்கிறாள். பாஸ்கரும் வாகனத்தை நெருக்கடி நிறைந்த சாலையில் செலுத்துவதில் கவனத்துடன் இருக்கிறான்...
நளினி - இப்ப வீட்டுக்குப் போனா மல்லிகா இருப்பா...
பாஸ்கர் திரும்பி அவளை பார்க்கிறான்... - நல்லதுதானே நளினி அவங்களோடயும் டாக்டர் சொன்னத சொல்லலாம் இல்ல?
நளினி பதில் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்..
பாஸ்கர் - என்ன நளினி....
நளினி - I don't want to go through with this Bhaskar...
பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்துகிறான்.
தொடரும்...
No comments:
Post a Comment