4.9.09

முதல் பார்வையில் 18

நளினி - I don't want to go through with this Bhaskar...

பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்துகிறான்.

நளினி அவனை பார்க்காமல் சாலையையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். அவளுடைய மனதில் இருந்த குழப்பத்தை அவனால் உணர முடிகிறது.

பாஸ்கர் - ஏன் நளினி? டாக்டர் ரூம்ல Whatever you say Doctor, I am in your handsனு சிரிச்சிக்கிட்டே நீ சொன்னப்போ நீ இதுக்கு சம்மதிச்சேட்டுன்னு நினைச்சேன்..

நளினி பதில் பேசாமல் அமர்ந்திருக்கிறாள்.

பாஸ்கர் - ஆப்பரேஷன் சக்சஸ் ஆகும்ங்கறது என்ன நிச்சயம்னு கேக்கறியா?

நளினி கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் அவனைப் பார்க்கிறாள். - அப்படி நடக்காதுன்னு என்ன நிச்சயம் பாஸ்கர்? டாக்டருக்கே அத ஷ்யூரா சொல்ல முடியலையே. நா அந்த ஏமாற்றத்த தாங்கிக்கறேனோ இல்லையோ மல்லிகாவால நிச்சயம் முடியாது.

பாஸ்கர் எப்படி சொல்லி அவளை நம்பிக்கைக் கொள்ள வைப்பது என புரியாமல் அமர்ந்திருக்கிறான்.

சிறிது நேரம் சாலையில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்தவாறு இருவரும் அமர்ந்திருக்கின்றனர்.

குரல் - சார் இங்க நிக்க கூடாது... வண்டிய எடுங்க...

பாஸ்கர் திடுக்கிட்டு வாகனத்தை கிளப்பி போக்குவரத்துடன் கலக்கிறான். சிறிது தூரம் வரை சென்றதும் திரும்பி நளினியைப் பார்க்கிறான்.

பாஸ்கர் - இப்ப எங்க போகணும் நளினி?

நளினி - மெல்லிய குரலில் - வீட்டுக்கே போகலாம்....I want to be also for some time...

பாஸ்கர் - மல்லிகா கிட்ட இப்ப சொல்ல வேணாமா? இன்னைக்கி இங்க வந்தது கூட அவங்களுக்கு தெரியாது போலருக்கே?

நளினி - It's OK... நா சொல்லிக்கறேன்.... நீங்க வீட்டு வாசல்ல ட்ராப் பண்ணிட்டு போங்க..

நளினி இருந்த மனநிலையில் அவளுடன் பேசுவதில் பயனிருக்காது என்ற நினைப்புடன் பாஸ்கர் சரியென்று தலையை அசைத்தவாறு வாகனத்தின் வேகத்தை கூட்டுகிறான்...

நளினியின் வீட்டை அடைந்ததும் அவள் இறங்கி அவனை பார்த்து லேசாக புன்னகை செய்கிறாள் - தாங்ஸ் பாஸ்கர்... I will call you later in the night... பை...

அவள் வாசற்கதவைத் திறந்து உள்ளே செல்லும் வரை காத்திருந்துவிட்டு பாஸ்கர் புறப்படுகிறான்...

....

பின் மாலை - நளினியின் வரவேற்பறை - நளினியும் மல்லிகாவும் எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர்.

மல்லிகா - இங்க பார் நளினி இந்த அட்டெம்ப்ட் வேணுமா, வேணாமாங்கறத நீதான் டிசைட் பண்ணணும்... எனக்கும் இது ஆரம்பத்துல தேவைதானான்னு தோனிச்சி. ஆனா சங்கர் நேத்ராலயான்னதும் ட்ரை பண்ணா என்னன்னு நினைச்சேன்...

நளினி - நம்மால இத afford பண்ண முடியுமாக்கா? அத பத்தி யோசிக்கவேயில்லையே?

மல்லிகா நெருங்கி தங்கையின் கரங்களை ஆதரவாக பற்றுகிறாள் - இங்க பார் நளினி - வேணுங்கற பணத்த எப்படியாச்சும் புரட்டிறலாம் - போறலைன்னா என் flat இருக்கவே இருக்கு, மார்ட்கேஜ் பண்ணிறலாம்.

நளினி சோகத்துடன் சிரிக்கிறாள் - அத்தான் வேணாம்.. ஆனா அவர் சம்பாத்தியத்துல வாங்குன வீடு மாத்திரம் வேணும்... என்ன அக்கா நியாயம் இது?

மல்லிகா கோபத்துடன் - இங்க பார்... அந்தாளுக்கு பத்துவருசமா சமைச்சி போட்டுருக்கேன்... அது மட்டுமா என் சம்பளத்த முழுசும் குடுத்துருக்கேன்... அவருக்கு அந்த வீட்டுல என்ன உரிமையிருக்கோ அந்த அளவுக்கு எனக்கும் உரிமையிருக்கு... சரி அது எதுக்கு இப்போ? பணத்துக்காகத்தான் நீ தயங்குறன்னா அந்த வீட்ட விக்கவோ அடகு வைக்கவோ நா தயார்... சொத்து எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம் நளினி...

நளினி - சரி... ஒருவேளை ஆப்பரேஷன் சக்சஸ் ஆகலன்னா?

மல்லிகா பதிலளிக்காமல் சிந்தனையில் ஆழ்கிறாள்

நளினி - என்னக்கா பதிலையே காணம்?

மல்லிகா - மெல்லிய குரலில் - விதின்னு நினைச்சிக்க வேண்டியதுதான்... சுவர்க் கடிகாரத்தை பார்த்துவிட்டு எழுந்து நிற்கிறாள் - டைம் ஆகுது நளினி - அதுங்க ரெண்டும் தேடிக்கிட்டு இருக்கும்... நா கெளம்பறேன்... நீ பாஸ்கருக்கு ஃபோன் பண்ணி காலையில வந்து பிக்கப் பண்ண சொல்லு... மாணிக்கம் அண்ணன என் வீட்டுக்கு ஒரு பத்து மணிக்கி வரச் சொல்லு... நா இதுங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியாருக்கேன்... என்ன?

நளினி - சலிப்புடன் - என்னக்கா நீ.... எல்லாத்தையும் நீயே டிசைட் பண்ணிட்டா ஆச்சா?

மல்லிகா நளினியை நெருங்கி அவள் தோளை தொடுகிறாள் - இங்க பார் நளினி நீ வேற நா வேறயா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது... பாஸ்கர் மேல நம்பிக்கையிருக்கோ இல்லையோ எனக்கு அந்த ஹாஸ்ப்பிடல் மேல நம்பிக்கை இருக்கு... நம்ம பக்கது வீட்டு ஆண்ட்டி கூட அதான் சொன்னாங்க... தைரியமா செய் மல்லிகான்னு...

நளினி - கேலியுடன் - ஓ! இத எல்லார்கிட்டயும் சொல்லியாச்சா?

மல்லிகா பதிலளிக்காமல் வாசலை நோக்கி நடக்கிறாள் - டேபிள்ல எல்லாத்தையும் எப்பவும் போலவே வச்சிருக்கேன் - சும்மா மனச போட்டு அலட்டிக்காம சாப்டுட்டு படு - காலையில மறந்துபோயி காப்பிய குடிச்சிறாத - வெறும் வயித்துலதான் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க - நா வீட்டுக்கு போயி ஃபோன் பண்றேன்...

மல்லிகா வாசற்கதவை மூடிக்கொண்டு செல்ல நளினி சோபாவில் இருந்து சரிந்து தரையில் அமர்ந்து அருகில் கிடந்த ஸ்வீட்டியை தடவியவாறு நேரம் போவதே தெரியாமல் அமர்ந்திருக்கிறாள்.

செல்ஃபோன் ஒலிக்கிறது... பாஸ்கர் காலிங் என்ற குரல்

நளினி அதை பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கிறாள் - ஆனால் செல்ஃபோன் விடாமல் ஒலிக்கிறது - ஸ்வீட்டியும் எழுந்து நின்று அவளை பார்த்து குலைக்கிறது அதை எடுத்து பேசேன் என்பதுபோல - வேறு வழியின்றி அதை எடுத்து - சொல்லுங்க பாஸ்கர் என்கிறாள் மெல்லிய குரலில்...

பாஸ்கரின் குரல் எதிர் முனையிலிருந்து ஒலிக்கிறது - காலையில ஆறு மணிக்கெல்லாம் நா அங்க இருப்பேன் நளினி...

நளினி பதிலளிக்காமல் அமர்ந்திருக்கிறாள்...

பாஸ்கரின் குரல் - ரெடியாயிரு... ஒன்னும் யோசிக்காத... நாளைக்கி வெறும் டெஸ்ட் மட்டுந்தானே... ரிசல்ட்டையெல்லாம் பாத்துட்டு டிசைட் பண்லாம், சரியா?

நளினி - மெல்லிய குரலில் - சரி..

பாஸ்கர் - குட்நைட்.

நளினி பதிலளிக்காமல் இணைப்பு துண்டித்துவிட்டு எழுந்து தன் அறையை நோக்கி நகர்கிறாள் - கவனக்குறைவால் காலடிகளை கணக்கிடாமல் சென்று டைனிங் டேபிளில் மோதிக்கொள்கிறாள் - மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கூஜா சாய்ந்து விழ ஸ்வீட்டி குறைக்கிறது.

.......


காலை - மருத்துவமனை - வரவேற்பறையில் பாஸ்கர் அமர்ந்திருக்கிறான் - அருகில் மல்லிகா

மல்லிகா - இன்னும் டெஸ்ட் முடியலையா?

பாஸ்கர் - காலையில வந்ததும் Fastingல எடுக்க வேண்டிய ப்ளட் சாம்பிள் எல்லாம் எடுத்தாச்சி.... அதுக்கப்புறம் இங்கவே அவளுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் குடுத்தாங்க... ஒன் ஹவர் ஆகுது - அதுக்கப்புறம் எடுக்க வேண்டிய ப்ளட் சாம்பிள்ஸ் எடுப்பாங்களாம் - சுகர் லெவல் பார்ப்பாங்க போலருக்கு - அதில்லாம இன்னும் விஷன் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்கன்னு டாக்டரோட அசிஸ்டெண்ட் சொன்னாங்க... பகல் ஆயிரும் போலருக்கு..

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே முந்தைய தினம் அவன் சந்தித்த மருத்துவர் மோகன் அவனை நோக்கி வருவதை பார்த்த பாஸ்கர் எழுந்து நிற்கிறான்.

அவர் நெருங்கியதும் மல்லிகாவை காட்டி - இவங்கதான் நளினியோட எல்டர் சிஸ்டர் - இவங்கதான் நளினிக்கி எல்லாமே.

மோகன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கை குவிக்கிறார் - வாங்க ரூமுக்கு போகலாம்.

மூவரும் மருத்துவரின் அறைக்குள் நுழைய அவர் கதவை மூடிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்கிறார்.

மோகன் - மல்லிகாவை பார்க்கிறார் - டெஸ்ட எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிரும்... அதுக்கு முன்னால உங்கக்கிட்ட சில கேள்விங்கள கேக்கலாமா?

மல்லிகா - கேளுங்க டாக்டர்..

மோகன் - நளினியோட இப்போதைய ப்ராப்ளம் பார்வை இல்லை... அவங்களோட ஆட்டிட்யூட்தான்... அவங்களுக்கு இதுல அவ்வலவா நம்பிக்கையில்லைன்னு நினைக்கிறேன் - பேஷண்ட்டுக்கு இஷ்டமில்லாத ஒரு அட்டெம்ப்ட்ட நாம பண்ணணுமான்னுதான் நா யோசிக்கிறேன்... என்ன சொல்றீங்க?

மல்லிகா சலிப்புடன் பாஸ்கரைப் பார்க்கிறாள் - எல்லாம் உன்னாலதான் என்பதுபோல்...

பாஸ்கர் - நீங்க சொல்றது உண்மைதான் டாக்டர்... But I will talk to her tonight. She will definitely agree..

மோகன் - Maybe... ஆனா உங்களோட கம்பல்ஷனுக்காக ஒத்துக்கிட்டா போறாது மிஸ்டர் பாஸ்கர் - அவங்களுக்கே நமக்கு பார்வை கிடைக்கணும்னு ஒரு ஆசை வரணும்... அவங்களோட hundred precent cooperation இருந்தத்தான் நா என்ன திறமையா ஆப்பரேட் பண்ணாலும் அது சக்சஸ் ஆகும் - மல்லிகாவை பார்க்கிறார் - நீங்க சொல்லுங்கம்மா - நளினிக்கி சரியா எத்தன வயசுல பார்வை மங்க ஆரம்பிச்சது?

மல்லிகா - மூனு வயசு இருக்கும் டாக்டர்... அதுக்கு முன்னாலயே இந்த deficiency இருந்துருக்கலாம்...

மோகன் - ட்ரீட்மெண்ட் I mean சர்ஜரி ஏதாச்சும் செஞ்சீங்களா?

மல்லிகா - சர்ஜரி எதுவும் பண்ணல டாக்டர்.. ஆனா அப்பா அவள நிறைய டாக்டர்ஸ் கிட்ட கொண்டு போனாங்க - பெரும்பாலும் கவர்ண்மெண்ட் ஆஸ்பிட்டல்ஸ்தான்.

மோகன் - I see - சரியா டயாக்னைஸ் பண்ணிருந்தா அப்பவே ஈசியா செஞ்சிருக்கலாம்...

மல்லிகா - எரிச்சலுடன் பாஸ்கரை பார்க்கிறாள் - என்ன பாஸ்கர் இப்படி சொல்றார் டாக்டர்? அப்ப இப்ப முடியாதா?

மோகன் - சிரிக்கிறார் - அப்படி நா சொல்ல வரலை.

மல்லிகா கண்டிப்புடன் - டாக்டர் முடியுமா முடியாதாங்கறத தெளிவா சொல்லிருங்க - முடியாத விஷயத்துக்கு மறுபடியும் நளினிய கஷ்டப்படுத்த நா விரும்பல.

பாஸ்கர் - மல்லிகா ப்ளீஸ் - உணர்ச்சிவசப்படாதீங்க..

மல்லிகா கோபத்துடன் எழுந்து நிற்கிறாள் - பாஸ்கர் இது எங்க லைஃப் விஷயம். உங்களுக்கு சொன்னாலும் புரியாது. நா நளினிய கூட்டிக்கிட்டு போறேன் (பாஸ்கர் எழுந்து அவளை தடுக்க முயல்கிறான். ஆனால் மல்லிகா அவனுடைய கையை விலக்கிவிட்டு வெளியேறுகிறாள்)

பாஸ்கர் - What is this Doctor? You could have been little more tactful....

மோகன் - I agree Bhaskar - I am sorry - I never thought she would react this way.

பாஸ்கர் - Don't worry Doctor I'll passify her...

பாஸ்கர் எழுந்து அறைக்கதவை திறந்துக்கொண்டு ரிசெப்ஷனை நோக்கி விரையும் மல்லிகாவின் பின்னால் ஓடுகிறான்.

ரிசெப்ஷனை நெருங்கும் மல்லிகா - இங்க லேப் எங்கங்க இருக்கு?

ரிசெப்ஷனில் இருக்கும் பெண் பதிலளிப்பதற்கு முன் மல்லிகாவை நெருங்கும் பாஸ்கர் - மல்லிகா வாங்க நா காமிக்கிறேன் என்றவாறு அவளை வற்புறுத்தி அழைத்து செல்கிறான். -

அவர்கள் இருவரும் பரிசோதனை கூடத்தை நெருங்கவும் நளினியை சக்கர நாற்காலியில் அமர்த்தி ஒரு நர்ஸ் வெளியில் வரவும் சரியாக இருந்தது.

நளினி புன்னகையுடன் - நீ எப்ப வந்தே?

மல்லிகா - அவளுடைய கரத்தை பற்றி - போறும் நளினி - வா போலாம்.

நளினி திகைப்புடன் பாஸ்கரை பார்க்கிறாள்.. அவன் ஒன்றுமில்லை பதறாதே என சாடை காட்டுகிறான்.

நளினி புன்னகையுடன் மல்லிகாவின் கரங்களை பற்றுகிறாள் - வாக்கா.. டென்ஷனாகாத - டெஸ்ட் எல்லாம் முடிஞ்சிருச்சி - மோகன் சார் கிட்ட சொல்லிட்டு போக வேண்டியதுதான் - நர்சை பார்க்கிறாள் - என்ன சிஸ்டர் இன்னும் ஏதாவது டெஸ்ட் இருக்கா?

நர்ஸ் - யெஸ் மேடம் - கண்ண Xray அப்புறம் scanning எடுக்க சொல்லியிருக்கார்.

மல்லிகா - எரிச்சலுடன் - அதெல்லாம் ஒன்னும் வேணாம்.

நளினி - சிரிக்கிறாள் - என்னக்கா நீ... இவ்வளவு நேரம் எல்லாத்தையும் செஞ்சிட்டு.... என்ன சிஸ்டர் ஒரு அரை மணி நேரம் ஆவுமா இந்த ரெண்டுக்கும்?

நர்ஸ் - அஞ்சி நிமிஷம்தான் ஆவும்...

நளினி - பார்த்தியா? அதயும் முடிச்சிட்டு போயிருவோம்... நீ பாஸ்கர் கூட பேசிக்கிட்டிரு... வந்துடறேன்... பாஸ்கரை பார்க்கிறாள் - Talk to her Bhaskar.

நர்ஸ் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு அருகிலிருந்த அறைக்குள் நுழைந்து கதவை மூட மல்லிகா கதவை தட்டுகிறாள்..

பாஸ்கர் - மல்லிகா வாங்க ப்ளீஸ் - எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க பாருங்க...

மல்லிகா - எரிச்சலுடன் - நா இங்கயே இருக்கேன், நீங்க போங்க.

பாஸ்கர் சிறிது நேரம் தயங்கி நிற்கிறான். பிறகு அவனும் சற்று தள்ளி சுவரில் சாய்ந்தவாறு நிற்கிறான்.

.தொடரும்..........

No comments: