17.7.09

முதல் பார்வையில்.... 3 (தொடர்)

Outdoor - Evening - Skating Rink - Mid shot - ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் ஸ்கேட்டிங் செய்துகொண்டிருப்பது தெரிகிறது.

அங்கிருந்து காமரா திரும்பி எதிரில் சாலையின் மறுபுறத்திலிருந்த கட்டடத்தின் பால்கணியில் நிற்கும் பாஸ்கரை பார்க்கிறது.

பாஸ்கரின் POV shot - முந்தைய தினம் நட்சத்திர விடுதியில் மசாஜ் செய்த பெண்ணை அழைத்துச் சென்ற அதே மாருதி வேன் வந்து நிற்கிறது. ஓட்டுனர் அவசரமாக இறங்கி முன்பகுதியை சுற்றிக்கொண்டு ஓடிச் சென்று கதவைத் திறந்து நிற்கிறான் -

VOICE OVER : பாஸ்கர் - சரியான பந்தா பார்ட்டியா இருப்பா போலருக்கே - வண்டியிலருந்து இறங்குறதுக்கு கூட டிரைவர் வந்துதான் கதவ தொறக்கணும் போலருக்கு -

காரிலிருந்து இறங்கிய பெண் ஸ்கேட்டிங் வளையத்துக்குள் நுழைய ஸ்கேட்டிங் சிறுவர்கள் அவளை சூழ்ந்துக்கொள்கின்றனர் - அந்த பெண்ணின் கண்களில் கருப்புக் கண்ணாடி -

Mid shot - நளினி - கமான் பாய்ஸ் - let us start - one, two, three கைகளை தட்டுகிறாள் - அணிவகுத்து நின்ற சிறுவர்கள் வளையத்தை சுற்ற துவங்குகின்றனர்.

Close up -  பாஸ்கர் கண்களில் நளினியை அடையாளம் கண்டுகொண்ட மகிழ்ச்சி - அவளேதான் - இங்க மாஸ்டர் அங்க மசாஜர் - கிரேட்.

பால்கணியிலிருந்து திரும்பி அறைக்குள் நுழைகிறான்.

Indoor - Dull lighting - பாஸ்கரின் அறை - Mid shot - பாஸ்கர் அறை வாசல் வழியாக வெளியேறுகிறான்.

Outdoor - Skating Rink - Mid Shot - பாஸ்கர் நளினியை நெருங்குகிறான்.

POV shot on Nalini - பாஸ்கரின் நடை சப்தத்தை கேட்டு அவனை நோக்கித் திரும்புகிறாள்.

பாஸ்கர் (தனக்குள்) நம்மள அடையாளம் தெரியாத மாதிரி பாக்கறா பார்.. பாத்து ரெண்டு மணி நேரம் கூட ஆவலை.. அதுக்குள்ள மறந்துருச்சா - எல்லாம் அழகாருக்கோங்கற திமிர்.

நளினி - (புன்னகையுடன்) நீங்க யாரு? ஏதாச்சும் சொன்னீங்களா?

பாஸ்கர் (தனக்குள்) ஆமா ஒனக்கு திமிர்னு...

நளினி - Excuse me?

பாஸ்கர் - நத்திங்... நீங்கதான தாஜ்ல ....

நளினி - ஆமா... நீங்க....

பாஸ்கர் (தனக்குள்) பார்றா - இடைவெளி - I came to you for massage today - ரெண்டு மணிக்கி...

நளினி (புன்னகையுடன்) ஓ... மிஸ்டர் பாஸ்கர்...

(ஸ்கேட்டிங் செய்துக்கொண்டிருந்த மாணவர்களின் பக்கம் அவளுடைய முகம் திரும்புகிறது. பாஸ்கரும் அந்த திசையை பார்க்கிறான்)

பாஸ்கரின் POV shot - மாணவர்களுள் ஒருவன் தன் முன்னால் சென்றுக்கொண்டிருந்தவனை வேண்டுமென்றே இடறிவிட அவன் விழுந்துவிடுகிறான். இடறிவிட்டவன் கண்டுக்கொள்ளாமல் செல்ல அவனுடன் வேடிக்கை பார்க்க வந்திருந்த சகாக்கள் உரக்க சிரிக்கின்றனர். பாஸ்கர் ஓடிச் சென்று அவனை தூக்கிவிடுகிறான். அவன் பாஸ்கரின் கைகளை தட்டிவிட்டுவிட்டு தன் பாதையில் செல்ல பாஸ்கர் திகைப்புடன் திரும்பி நளினியை பார்க்கிறான். நளினியின் முகத்தில் லேசான புன்னகை மட்டும் - (தனக்குள்) என்ன மாஸ்டர் இவ.. அவன் பாட்டுக்கு தள்ளிவிட்டுட்டு போறான் இவ கண்டுக்காம நிக்கிறா?

நளினி - என்ன மிஸ்டர் பாஸ்கர் இந்த பக்கம்? ஸ்கேட்டிங் பண்ண வந்தீங்களா?

Mid shot

பாஸ்கர் (அவளை நெருங்கி) I am going to be here only for about ten days... அதுக்குள்ள படிச்சிற முடியுமா?

நளினி (சிரிக்கிறாள்) அது ஒங்க ஆட்டிட்டியூட பொறுத்து இருக்கு...

பாஸ்கர் - அப்படீன்னா?

நளினி - உண்மையிலேயே உங்களுக்கு படிக்கணும்னு இருந்தா ஒரு வாரத்துலயே படிச்சிறலாம்..

பாஸ்கர் - அப்பன்னா நாளைக்கே சேந்துரலாமா?

நளினி (சிரிக்கிறாள்) ஏன் நாளைக்கி? இப்பவே சேந்துரலாமே - கேஷ் கொண்டு வந்திருக்கீங்களா? ஃபைவ் ஸ்டார் ஸ்பாவுக்கு போற ஆளாச்சே - கேஷுக்கு பஞ்சமாருக்குமா என்ன?

பாஸ்கர் - சிரிக்கிறான்..எவ்வளவு கட்டணும்?

நளினி - ரிங்கின் மறுபகுதியில் இருந்த சிறு அறையை காட்டுகிறாள்..

(பாஸ்கரின் POV Shot) நளினி காட்டிய திசையில் ஒரு சிறு அறையும் அதனுள்ளே ஒரு இளம் பெண் அமர்ந்திருப்பதும் தெரிகிறது..

நளினி - You can pay there -  ரெண்டு வாரம்னாலும் ஒரு மாச ஃபீ டெப்பாசிட் கேப்பாங்க - அப்புறம் ஸ்கேட்டிங் காஸ்ட் - சொந்தமா வாங்கிக்கலாம் - இல்லன்னா ஒரு மாச வாடகைக்கு எடுத்துக்கலாம் - உங்க சவுகரியப்படி...

பாஸ்கர் திரும்பி நளினியை பார்க்கிறான் - I will buy the skates. அந்த அறையை நோக்கி நடக்கிறான்.

.........

Outdoor - Late evening - Mid shot - ஸ்கேட்டிங் ரிங்க்கில் பாஸ்கரும் நளினியும் மட்டும் - பாஸ்கர் நாலடி எடுத்து வைப்பதற்குள் பல முறை விழுகிறான் -

நளினி (அவனருகில் நெருங்கி புன்னகையுடன்) எத்தனை தடவை விழுந்தாலும் கவலைப்படாம எழுந்து ட்ரை பண்றீங்க பாஸ்கர் -

பாஸ்கர் - ஆனா ஒருதரம் கூட நா கைகுடுத்து தூக்க மாட்டேன்னு பிடிவாதமா நிக்கிறீங்க..

நளினி (உரக்க சிரிக்கிறாள்) ஓ அதுக்குத்தானா? I didn't know.... (தன் வலது கையை நீட்டுகிறாள்) - கமான் ஹோல்ட் மை ஹாண்ட்...

பாஸ்கர் தன்னுடைய கரத்தை நீட்டுகிறான். ஆனால் நளினி அவனுடைய கரத்தை பற்றாமல் காற்றை துழாவ அவன் திகைப்புடன் அவளுடைய முகத்தை பார்க்கிறான்

பாஸ்கர் பார்வையில் POV Shot -  நளினி - (புன்னகையுடன்) Sorry Bhasker.. you will have to get hold of my hand... I can't see...

பாஸ்கர் (திகைப்புடன்) What do you mean you can't see?

நளினி (சிரிக்கிறாள்) As I said... என்னால பாக்க முடியாது... ஏன்னா I am Blind! (கருப்புக் கண்ணாடியை கழற்றுகிறாள்)  Tight Close up on her eyes  பார்வையற்ற ஆனால் அழகிய இரு கண்கள் திரை முழுவதும்...

..........

Outdoor - Night - Mid shot - பாஸ்கரின் விருந்தினர் மாளிகை - வரவேற்பறை - பாஸ்கரும் நளினியின் எதிரெதிரில் - நிசப்தம் - ஹாலில் இருந்த சுவர்க்கடிகார ஓசை மட்டும்...

பாஸ்கர் - (மெல்லிய குரலில்) என்னால இமாஜின் பண்ண முடியல மிஸ் நளினி... How can you?

Close up shot of Bhaskar and Nalini's faces - மாற்றி, மாற்றி...

நளினி (புன்னகையுடன்) How can I what?

பாஸ்கர் - I mean உங்களால எப்படீங்க மானேஜ் பண்ண முடியுது - மசாஜ் ஓக்கே - இடைவெளி - ஆனா ஸ்கேட்டிங்...

நளினி (புன்னகையுடன்) மனசிருந்தா எல்லாம் முடியும்.... மசாஜ்  மன நிறைவுக்கு - ஸ்கேட்டிங் பணத்துக்கு... ரெண்டுக்குமே பார்வை அத்தனை முக்கியமில்லைன்னு நினைக்கேன் - ரோடுல ஸ்கேட்டிங் போறதாருந்தாத்தான் கொஞ்சம் ரிஸ்க் - இங்க வளையத்துக்குள்ளவே சுத்துறதுக்கு அது தேவையில்லை...

பாஸ்கர் - But how do you coach your students?

நளினி - அதுக்கு ரெண்டு அசிஸ்டெண்ட்ஸ வச்சிருக்கேன் - காலையில ஒருத்தர், ஈவ்னிங்ல ஒருத்தர் - நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க...

பாஸ்கர் - (சிரிக்கிறான்) Yeah I was  watching only you. - இடைவெளி - அங்க ஒரு பையன் வேணும்னே இன்னொருத்தனோட கால தட்டிவிட்டத நீங்க கவனிக்காம விட்டப்ப என்ன மாஸ்டர் இவங்கன்னு நினைச்சேன் - இப்பத்தான் தெரியுது (தன் தவறை உணர்ந்த பாஸ்கர் நாக்கை கடித்துக்கொள்கிறான்) I am sorry..

நளினி (புன்னகையுடன்) Don't be... ஆனா அத நா கவனிச்சேன்...

பாஸ்கர் - (திகைப்புடன்) எப்படீங்க?

நளினி - நான் கவனிச்சேன்னுதான் சொன்னேன், பாத்தேன்னு சொல்லலை - கவனிக்கறதுக்கு பார்வை தேவையில்லை - உணர்வு இருந்தாலே போறும். அது என்னைய மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும்...

பாஸ்கர் - (புன்னகையுடன்) அப்படியா? அப்புறம் ஏன் அத கண்டுக்காம விட்டுட்டீங்க?

நளினி - அது ஒரு adolescent gameனும்பாங்களே அந்த மாதிரி - இந்த வயசுல அதெல்லாம் சகஜம் - அந்த பையன் தள்ளிவிட்டவுடனே நீங்க போயி தூக்கிவிட்டீங்களே அது அந்த பையனுக்கு புடிச்சிருக்காதே? Am I right?

பாஸ்கரின் ஒரு சின்ன Flashback - அந்த சிறுவன் தன்னுடைய கரங்களை தட்டிவிட்டுவிட்டு எழுந்து சென்றது தெரிகிறது - You are right.. ஆனா அத எப்படி உங்களால உணர முடிஞ்சது?

நளினி (புன்னகையுடன்) உணர முடியாது -- அந்த பையன் விழுந்த ஓசை - என் பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த நீங்க அவசரமா போன கால் ஓசை -  அந்த பையன நீங்க தூக்கிவிட்டப்போ சுத்தியிருந்த பசங்க சிரிச்சது - இத என்னால கேக்க முடியுமே - மத்தபடி அந்த வயசு பசங்க எப்படி ஃபீல் பண்ணுவாங்கங்கறது எக்ஸ்ப்ரீயன்சுல வந்ததுதான் - நாமளும் அந்த வயச கடந்துதான வந்திருக்கோம்!

பாஸ்கர் (தன்னையுமறியாமல் தன்னுடைய கரங்களை தட்டுகிறான்) Excellent Ms. Nalini - நீங்க சைக்காலஜி மேஜரா?

நளினி உரக்க சிரிக்கிறாள்.. பிறகு எழுந்து - உங்க காஃபிக்கி ரொம்ப தாங்ஸ் - நேரமாச்சு - என்னை வீட்ல கொண்டு விட்டுட்டு மாணிக்கம் போகணும்... He is staying in the suburbs... இப்பவே போனாத்தான் சரியாருக்கும்....

பாஸ்கர் (எழுந்து அவளை நெருங்கி) If you don't mind... நா ஒன்னு சொல்லலாமா?

நளினி - சொல்லுங்க...

பாஸ்கர் - உங்க டிரைவர அனுப்பிருங்க - I will drop you at home... I mean if it is ok with you..

நளினி - தப்பா நினைச்சிக்காதீங்க பாஸ்கர் - இன்னைக்கி வேணாம் - Maybe some other time... ரெண்டு வாரம் இங்கதான இருக்கப் போறீங்க?

வாசலை நோக்கி நடக்க பாஸ்கர் தன்னுடைய ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அவளை பிந்தொடர்கிறான்...

.........

தொடரும்...

No comments: