22.7.09


Outdoor - Late evening - நளினி தன்னுடைய கைப்பையிலிருந்த வீட்டுச் சாவியை எடுத்து கதவைத்திறந்து உள்ளே நுழைய அவளுடைய செல்ல நாய் அவள் மீது பாய்கிறது.

நளினி - ஹாய் ஸ்வீட்டி - இரு, இரு, மேல விழாத - ஷூவ கழட்டிக்கிறேன்...

சிறிய  ஆனால் அழகிய வரவேற்பறை - நளினி காலணிகளை உதறிவிட்டு சோபாவில் சாய்கிறாள் - காலடியில் வந்து படுத்த ஸ்வீட்டியை குனிந்து கோதிவிடுகிறாள் - How was your day Sweety?

சமையலறையிலிருந்த வந்த மணத்தை முகர்கிறாள் - சமையலறையை நோக்கி அவளுடைய முகம் திரும்புகிறது.

நளினி - ஹாய் அக்கா!

Midshot - எழுந்து சமையலறையை நோக்கி நகர்கிறாள் - அவளை தொடர்ந்து சென்ற ஸ்வீட்டி இரண்டு முறை குறைக்கிறது.

Voice over - ஏய்.. நா பாத்ரூம்ல இருக்கேன் - இப்பத்தான் சமைச்சி முடிச்சேன் - நீ வர்றதுக்குள்ள குளிச்சிரலாம்னு....

Midshot - நளினி சமையலறையிலிருந்து திரும்பி தன்னுடைய காலடிகளை அளந்தவாறு  பாத்ரூமை நோக்கி நகர்கிறாள் - Dont't worry அக்கா, Take your time - இன்னைக்கி கொஞ்சம் லேட்டாயிருச்சி..

voice over - டீ போட்டு வச்சிருக்கேன் ஃப்ளாஸ்க்ல இருக்கு - கப்பும் பக்கத்துலயே வச்சிருக்கேன். ஊத்திக் குடி. தோ வந்துட்டேன்.

Midshot - நளினி தன்னுடைய நடையை அளந்தவாறு டைனிங் டேபிளை நெருங்கி, ஃப்ளாஸ்க்கை திறந்து அருகிலேயே இருந்த கப்பில் ஊற்றி குடிக்கிறாள் -

நளினி - (புன்னகையுடன்) எப்பவும் போலவே சூப்பர்.

Voice over - இன்னைக்கி சந்தோஷமாருக்காப்ல இருக்கு! ஏதாச்சும் விசேஷமா?

நளினி குரல் வந்த திசையை நோக்கி திரும்புகிறாள் - இல்லையே, ஏன் கேக்கறே?

Voice over - உன் குரல்லயே தெரியுதே - ஒன்னுமில்லன்னா சரி..

Midshot - பாத்ரூம் கதவு திறக்கிறது. தலையில் துவாலையுடன் நளினியின் மூத்த சகோதரி மல்லிகா ஒரு வெளியே வருகிறாள்.

மல்லிகா - நைட்டுக்கு ஃப்ரைடு ரைசும், சிக்கன் க்ரேவியும் செஞ்சிருக்கேன் - வர்ற வழியில ரெடி டு ஈட் பரோட்டா ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்தேன் - ஃப்ரிட்ஜ்ல இருக்கு. வேணும்னா சாப்டறப்போ ஓவன்ல சூடு பண்ணிக்கோ. பேசியவாறே படுக்கையறையை நோக்கி செல்கிறாள் - வேணும்னா சூடு பண்ணி ஹாட் பேக்ல வச்சிரட்டுமா?

நளினி - வேணாம் - எல்லாத்தையும் டேபிள்ல வச்சிட்டு போயிருக்கா - நா பாத்துக்கறேன்.

Midshot - மல்லிகா உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்து  சமையலறையிலிருந்த உணவு பாத்திரங்களை எடுத்து வந்து மேசையில் வைக்கிறாள்.

மல்லிகா - எப்பவும் வைக்கற டைம் ஸ்லாட்லயே எல்லாத்தையும் வச்சிருக்கேன்.

நளினி - சரிக்கா.

மல்லிகா - சரி.. அப்ப நா கெளம்பறேன்.. சோபாவில் கிடந்த தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள் - வாயிலை நோக்கி நடந்தவளை நெருங்கி கட்டி அணைத்துக்கொள்கிறாள் நளினி - தாங்ஸ்க்கா -

மல்லிகா - ஏய்.. என்ன இது புதுசா - என்னைக்கிம் செய்யிறதுதான?

நளினி - நீ எனக்காகவே உன் வாழ்க்கையையும் இழந்துட்டு நிக்கறத பார்த்தா - I am extremely sorryக்கா -

மல்லிகா - சட்டென்று முகம் மாறி கலங்கிய கண்களை துடைத்துக்கொள்கிறாள் - ச்சீய் லூசு... ஒனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல - அவருக்கு இது ஒரு சாக்கு, அவ்வளவுதான் - சரி பழசெல்லாம் எதுக்கு இப்ப - நா கிளம்பறேன் - நாளைக்கு சின்னதுக்கு மந்த்லி டெஸ்ட்டாம் - நா இல்லன்னா ரெண்டும் டிவிய விட்டு நகராதுங்க - பைம்மா - நா பூட்டிக்கிட்டு போறேன். நாளைக்கி ஈவ்னிங் பாக்கலாம் -
- வாசற்கதவை பூட்டிக்கொண்டு செல்ல நளினி ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து அருகில் இருந்த ரிமோட்டை கையில் எடுக்கிறாள் - வலது புற சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டீரியோவை நோக்கி பட்டனை அமர்த்த அடுத்த நொடியில் அறையெங்கும் மெல்லிய இசை சூழ்ந்துக்கொள்கிறது - கண்களை இறுக மூடியவாறு சோபாவில் சாய்கிறாள்.

*******

Indoor - பாஸ்கரின் படுக்கையறை - அறைக்குள் நுழைந்து விளக்கை தட்டிவிடாமல் நிற்கிறான். - வெளியே சாலையின் எதிர்புறத்தில் அமைந்திருந்த தெரு விளக்கின் மெல்லிய ஒளி ஜன்னல் திரையுனூடே - கண்களை சிறிது நேரம் மூடி இருட்டுக்கு பழகிக்கொண்டு மெள்ள திறக்கிறான்.

very dim lighting tight shot on Bhaskar's face - கால்சட்டை பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து கண்களின் குறுக்கே கட்டிக் கொள்கிறான் - கைகள் இரண்டையும் முன்னே நீட்டியவாறு நடக்கிறான் - one, two, three ஏதோ இடிக்கிறது - தடவிப் பார்க்கிறான் - அவனுடைய கணினி வைக்கப்பட்டிருந்த மேசை - So at the third step, the table அடுத்தத பாக்கலாம் -  one, two, three எதன் மீதோ ஏறி வழுக்கி விட தரையில் விழுகிறான் - தலை டீப்பாயில் மோதுகிறது - ouch என்ற முனகலுடன் கண் மறைப்பை அவிழ்த்து பார்க்கிறான் - காலையில் அவன் கழற்றி விட்ட வாக்கிங் ஷூ தரையில் கிடப்பதை பார்க்கிறான் - அருகில் இருந்த மேசை விளக்கை தட்டிவிட அறையில் மெல்லிய ஒளி பரவுகிறது. பாத்ரூமை நோக்கி விரைந்து விளக்கொளியில் தன் நெற்றியை பார்க்கிறான் -

(tight close up on the mirror image of his face - சற்று ஆழமாகவே கீறி ரத்தம் வடிவது தெரிகிறது  - Shit - வாஷ் பேசனின் மேலே இருந்த ஷெல்ஃபை திறக்கிறான் - முதலுதவி பெட்டி தெரிகிறது - திறந்து பஞ்சை எடுத்து டிஞ்சரை தொட்டு காயத்தின் மீது வைக்க எரிச்சலில் தன்னையுமறியாமல் அலறுகிறான் -

'என்னாது சார்?'  Guest House பணியாளனின் குரல் கீழிருந்து கேட்கிறது. -

'ஒன்னுமில்லைய்யா... உன் வேலைய பார்' - பாஸ்கர் அருகில் இருந்த பேண்ட் எய்டை எடுத்து சிலுவை வடிவத்தில் காயத்தின் மீது இடுகிறான் - ச்சை... குளிக்க முடியுமான்னு தெரியலையே... டாக்டர பாத்துரலாமா?

துவாலையை வாஷ் பேசன் பைப்பில் நனைத்து முகத்தையும் உடம்பையும் துடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து உடை மாற்றிக்கொண்டு கீழே விரைகிறான்.

Indoor - Guest House Reception - 'யோவ் கபாலி.. இங்க பக்கத்துல டாக்டர் யாரும் இருக்காங்களா?'

Bhaskar's POV shot - கபாலி சீருடையில் சமையலறையிலிருந்து வருகிறான். பாஸ்கரின் நெற்றியை பார்க்கிறான். (Tight Close up on Bhaskar's forehead) என்னா சார்... இடிச்சிக்கிட்டீங்களா?

பாஸ்கர் (எரிச்சலுடன்) ஆமாய்யா... ஒரு இஞ்செக்ஷன் போட்டுக்கலாம்னு பாக்கேன்... பக்கத்துல டாக்டர் இருக்காரா... இல்ல அடையார் போவணுமா?

கபாலி - இருக்கார் சார் - மூனாவது வீட்ல - இருங்க இருக்காரான்னு பாத்துட்டு வரேன். அவர் இல்லன்னா மாதா கோயிலாண்ட சந்தோஷ் ஆஸ்பத்திரி இருக்குது - அங்க எந்நேரமும் ஆள் இருப்பாங்க - இருங்க வரேன்... (வெளியேறுகிறான்)

......

தொடரும்....

No comments: