30.7.09

முதல் பார்வையில் 7

பாஸ்கரின் அறை -

பாஸ்கர் குளியலறையிலிருந்து இடுப்பில் துவாலையுடன் வெளியில் வரவும் அவனுடைய செல்ஃபோன் அடிக்கிறது.

பாஸ்கர் - இது ஒரு தொல்லை ... (திரையில் அவனுடைய அலுவலக காரியதரிசியின் எண்!) என்ன பாபு...நேத்துத்தான கூப்ட்டே
வெக்கேஷன்ல வந்தாலும் விடமாட்டீங்க போலருக்கே...

இடைவெளி

பாஸ்கர் - யார் சேர்மனா? எதுக்காம்?

இடைவெளி

பாஸ்கர் - என்னங்க இது அக்கிரமம்? இந்த மாசம்தான் ஏற்கனவே கமிட்டி கூடியாச்சே?

இடைவெளி

பாஸ்கர் - எது? என் மேல சந்தேகமா? என்ன சொல்றீங்க?

இடைவெளி

பாஸ்கர் - (கோபத்துடன்) ஜி.எம் என்ன வேணும்னா சொல்லட்டும் I don't care.. நான் இல்லாத நேரமா பார்த்து என்னெ பத்தி சேர்மன்கிட்ட போட்டுக்குடுத்துருப்பான் போலருக்கு...

இடைவெளி

பாஸ்கர் - மீட்டிங் எங்க வச்சிருக்கு, ஹெட் ஆஃபீஸ்லயா?

இடைவெளி

பாஸ்கர் - சரி வரேன் வேற வழி?

இடைவெளி

பாஸ்கர் - பாபு நீங்களே புக் பண்ணிட்டு ஈ.டிக்கெட்ட மெய்ல நம்ம அடையார் பி.எம்முக்கு அனுப்புங்க.. அவர் யார் கிட்டயாவது குடுத்தனுப்பிருவாரு நீங்க என்னெ பிக்.அப் பண்ண வண்டிய மட்டும் ஏர்போர்ட்டுக்கு அனுப்புனா போறும்...

இடைவெளீ

பாஸ்கர் - ஆமா I would like to return on the same day.. Late night ஃப்ளைட்டானாலும் பரவால்லை.. பை..

..........

நளினியின் வீடு - வாசற்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து சாவியை கதவுக்கருகில் இருந்த கொக்கியில் மாட்டுகிறாள்.. ஆனால் அது தவறி தரையில் விழுகிறது..... அதை குனிந்து எடுக்க மனமில்லாமல் சோர்வுடன் சோபாவை நோக்கி நடக்கிறாள் - கவனக்குறைவால் காலடிகளை கணக்கிடாமல் சென்று சோபாவில் இடித்துக்கொள்கிறாள் - அவளுடைய செல்ல நாய் அவளைப் பார்த்து குழப்பத்துடன் குலைக்கிறது -

நளினி - I am disturbed Sweety.... once again....மறுபடியும், மறுபடியும் அதே தப்ப பண்றேன்....

ஸ்வீட்டி பதிலுக்கு இரு முறை குலைத்துவிட்டு அவளுடைய காலடியில் சென்று படுத்து அவளுடைய பாதங்களை நக்குகிறது - கண்களில் நீர் ததும்பி நிற்க அதை அப்படியே எடுத்து மடியில் கிடத்துகிறாள்...

Flashback

நளினியும் முகம் தெரியாத ஒரு ஆணும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது நிழலாக தெரிகிறது -

ஆண் - I never said that I am in love with you...

நளினி - அப்ப என்னெ எதுக்கு சுத்தி சுத்தி வந்து டிஸ்டர்ப் பண்ணீங்க?

ஆண் - ஓ! அதுவா... (கேலி சிரிப்பு) அது உன் மேல இருந்த ஒரு அனுதாபத்தால....

நளினி - நான் குருடிங்கற அனுதாபம்... அதானே...

ஆண் - வச்சிக்கலாம்...

நளினி - அப்போ, வார்த்தைக்கி வார்த்தை நீ அழகாருக்கேன்னு சொன்னது?

ஆண் - (கேலியுடன்) அது உன்னை சந்தோஷப்படுத்த...

நளினி - (கோபத்துடன்) இல்லை.. நா உண்மையான காரணத்த சொல்லட்டுமா?

ஆண் - (கேலியுடன்) என்னத்த சொல்லப்போறே... You wanted to use me... I mean sexually... அதானே...

நளினி (கேலியுடன்) அதானே உண்மை?

ஆண் - ஆமாடி... அதான் உண்மை... ஆனா நீதான் அதுக்கு ஒத்துக்கவே இல்லையே... அப்புறம் என்ன... That's why I thought there is no need to continue this.... I mean... போலியான ஒரு.... I mean...

நளினி - (கோபத்துடன்) சொல்ல முடியல இல்ல? ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஷிப்... அப்புறம்... லவ்... அப்புறம் செக்ஸ்.... அது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கப்புறம்... இந்த உறவுக்கு என்ன அர்த்தம்னே சொல்ல முடியல இல்ல.... ஆண்வர்க்கம் எல்லாமே இதுக்குத்தான அலையறீங்க... Get out and get lost.... (முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள்)

flashback ends

நளினியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதைக் கண்ட அவளுடைய செல்ல நாய் ஸ்வீட்டி சோகத்துடன் அவளையே பார்க்கிறது...அவளுடைய முகத்தை நக்குவதற்கு முனைகிறது -

நளினி - எனக்கு நீ உனக்கு நான்னு நாம ரெண்டு பேர்தாண்டா.... I don't need anybody between us -  நமக்கு நடுவுல யாரும் வேணாம்...

(முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்து நிற்கிறாள். மனதை ஒருமுனைப்படுத்த முனைகிறாள். எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அறையை சுற்றி வரும் அவள் எந்த திசையில் என்ன இருக்கிறது என்பதை நிதானிக்க முடியாமல் திணறுகிறாள் - அவளுடைய தடுமாற்றத்தை உணர்ந்த ஸ்வீட்டி அவளுடைய கால் சட்டையைப் பிடித்து இழுத்து குலைக்கிறது...)

வாசற்கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது - நளினி உடனே சுதாரித்துக்கொள்ள முயல்கிறாள் - முகத்தை இரு கைகளாலும் அழுந்த துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி திரும்புவதாக நினைத்துக்கொண்டு திரும்பி அருகிலிருந்த டைனிங் டேபிள் மீது மோத அதன் மீது வைக்கப்பட்டிருந்த ஃப்ளாஸ்க் அவளுடைய கை பட்டு கீழே விழுந்து அதிலிருந்த காப்பி சிதறுகிறது...கதவைத் திறந்து உள்ளே வந்த மல்லிகா ஓடிச் சென்று அவளை பிடித்துக்கொள்கிறாள்...

நளினி - I am sorryக்கா...

மல்லிகா - (சட்டென்று நளினியின் முகத்தைப் பார்க்கிறாள்) ஏன் ஒரு மாதிரி இருக்கே - பார்லர்ல ஏதாச்சும் பிரச்சினையா? அதனாலதான் அத வேணாம் மூடிருன்னு சொல்றேன். நீதான் கேக்க மாட்டேங்குறே... சொல்லு, மறுபடியும் எவனாச்சும் வாலாட்னானா?

நளினி - இல்லக்கா...  அதெல்லாம் ஒன்னுமில்லை...

மல்லிகா - அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?

நளினி - நம்ம ப்ளைண்ட் ஸ்கூல் பிள்ளைங்களோட ஈ.சி.ஆர் விசிட் போயிருந்தோங்க்கா.. அதான் கொஞ்சம் டயர்டா இருந்துச்சி, வந்துட்டேன்..

மல்லிகா - சரி... நைட்டுக்கு என்ன பண்ணட்டும்...

நளினி - எதையாவது பண்ணுக்கா...

மல்லிகா அவளுடைய குரலிலிருந்த விரக்தியை கவனிக்கிறாள். ஒரு நிமிடம் நளினியை பார்த்தவாறே நிற்கிறாள்.

மல்லிகா - எதுக்கு என்னமோ மாதிரி பேசறே? வர்ற வழியில ஃப்ரெஷா மீன் கிடைச்சிது.. ஒனக்கு புடிக்குமேன்னு வாங்கிட்டு வந்துருக்கேன். ஃப்ரை பண்ணிரட்டுமா? இல்ல குழம்பு வச்சிரவா?

நளினி வெறுமனே உச் கொட்டிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்கிறாள்...

சமையலறையை நோக்கி நடந்த மல்லிகா நின்று திரும்பி நளினியை நெருங்குகிறாள்

மல்லிகா - இன்னைக்கி என்னமோ ஆயிருக்கு... இல்லன்னா இப்படி பிஹேவ் பண்ணமாட்டே.. இப்படி உக்கார்...

நளினியின் கரங்களைப் பற்றி சோபாவில் அமர்த்தி அவளும் எதிரில் அமர்கிறாள்.

மல்லிகா - சொல்லு... என்னாச்சி...

நளினியின் கண்கள் கலங்குகின்றன... ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறாள்...

நளினி - ஒன்னும் கேக்காதக்கா...  கொஞ்ச நேரத்துல சரியாயிருவேன்... என்னெ கொஞ்சம் தனியா விடேன்...ப்ளீஸ்...

மல்லிகா - தனியா விடு, தனியா விடுன்னு சொல்லித்தானே போனதரம் ஒரு தரங்கெட்டவனோட பழகிட்டு உன்னை நீயே காயப்படுத்திக்கிட்டே... மறுபடியும் அதே மாதிரி ஏதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்கிறுவியோங்கற பயத்துலதான் கேக்கேன்... சொல்லும்மா..

நளினி மவுனமாக அமர்ந்திருக்கிறாள்...

மல்லிகா சிறிது நேரம் மவுனமாக அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். பிறகு ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து சமையலறையை நோக்கி நகர்கிறாள்...

நளினியின் செல்ஃபோன் ஒலிக்கிறது...

மல்லிகா உடனே விரைந்து சென்று அதை எடுக்கிறாள். 'யாருங்க?'

இடைவெளி

மல்லிகா - நீங்க யாரு, அத சொல்லுங்க... இந்த நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சிது?

இடைவெளி

மல்லிகா - சாரிங்க... அவங்கக் கூட நீங்க பேச முடியாது...

இடைவெளி

மல்லிகா - நா யாருங்கறது ஒங்களூக்கு தேவையில்லாத விஷயம்... வச்சிருங்க... இனிமேயும் ஃபோன் பண்ணி அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க... ப்ளீஸ்

இணைப்பை துண்டித்துவிட்டு நளினியை பார்க்கிறாள்... பிறகு செல்போனை தன் கைப்பைக்குள் வைத்துவிட்டு நளினியினருகில் சென்று அமர்கிறாள்... அவளுடைய கரங்களை எடுத்து தன் கைக்குள் பொதிந்துக்கொண்டு...

மல்லிகா - வேண்டாம் நளினி ப்ளீஸ்... மறுபடியும் ஒருமுறை நீ ஏமாந்து நிக்கிறத பாக்கற சக்தி எனக்கில்லடா... (நளினியின் கரங்களில் தன்னுடைய முகத்தை புதைத்துக்கொண்டு  அழுகிறாள்....)

நளினி கண்களை மூடியவாரு மவுனமாக அமர்ந்திருக்கிறாள்... ஸ்வீட்டி சோஃபா மீது ஏறி நளினியை நெருங்கி குலைக்கிறது... நளினி அதை அப்படியே அணைத்துக்கொள்கிறாள்...

.......

No comments: