2.12.05

குஷ்பு - நகைச்சுவை கழுத்தறுப்பு!!

குஷ்பு - நகைச்சுவை கழுத்தறுப்பு!!

நிறைவு பகுதி

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டி.ஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

நடு: (ஜனகராஜை பார்க்கிறார்) வாங்கய்யா.. நீங்க என்ன சொல்றீங்கன்னு பாக்கலாம்.

ஜன: (எழுந்து சென்று மைக் முன்னே நின்று அரங்கத்தை ஒருமுறை பார்க்கிறார். பிறகு தனக்கே உரிய பாணியில் வாயை கோணிக்கொண்டு சிரிக்கிறார்) ஹெஹ்ஹெஹ்ஹே.. எல்லாருக்கும் வணக்கம்ங்கோ.. (தங்கவேலு, பாலையாவை பார்க்கிறார்) டணாலய்யா, பாலையா ஐயா.. உங்களுக்கு தனி வணக்கம்ங்கோ..

கவு: (செந்திலிடம்) என்னாடா நமக்கெல்லாம் வணக்கம் சொல்லமாட்டானா இவன்?

செந்: ஆமா இப்ப மட்டும் வாய் கிழிய பேசுங்க.. மேடைல பேசச் சொன்னா சொதப்புங்க.. கடுப்பேத்தாம வாய பொத்திக்கிட்டு சும்மா கேளுங்கண்ணே..

கவு: டேய் என்னா வாய் நீளுது.. படவா.. நீ என்னத்ததான் பேசி கிளிக்கறேன்னு பாக்கறேன்..

செந்: அப்புறமா பாருங்க. இப்ப வாய மூடிக்கிட்டு கேளுங்க.

(வடிவேலு பார்த்திபனை பார்க்கிறார். அவர் இவர் பக்கம் திரும்பாமல் ஜனகராஜையே ஒரு விஷம புன்னகையுடன் பார்க்கிறார்.)

வடி: (தனக்குள்) என்னமோ பெரீசா கிளிச்சிட்டவன்போல பாக்கறான் பார்..

பார்: (திரும்பாமலே) டேய்  என்ன முனவுற.. பேசாம கேள்றா.. இல்லன்னா அந்தாளு மாதிரி நீயும் பே பேன்னு முளிச்சிக்கிட்டு நிக்கப் போற..

வடி: (தனக்குள்) ஆமா.. நீ பேசி கிளிச்சிட்டயாக்கும்? நீ வெளிய போறப்போ பொம்பளைங்க கூட்டம் விளக்குமாறு, செருப்போட நிக்காம இருந்தா சரிதான்.

பார்: டேய், உனக்கும் சேர்த்துத்தான்டா அடி விழும்.

வடி: (திடுக்கிட்டு பார்த்திபனை பார்க்கிறார்) (தனக்குள் புலம்புகிறார்) நம்ம மனசுக்குள்ள நினைக்கறதெல்லாத்தையும் கேட்டுப்புடறானே.. என்ன மாய்மாலம் பண்றான்னே விளங்க மாட்டேங்குதே..

ஜன: (அவருக்கே உரிய ஸ்டைலில் குரல் நடுங்குகிறது) அய்யா நடுவர்ர்ர்ர் அவர்களே.. எனக்கு முன்னால பேசின நண்பர் பார்த்திபன் குஸ்(வாயிலிருந்து சொல்லோடு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ற காற்றும் வருகிறது)பு வுக்கு ஆதரவா பேசினாரு.. கவுண்டமனி அண்ணன் எதிர்த்து பேசினாரு.. அதனால நா இன்னாத்த பேசறதுன்னு திரியாம முளிச்சிக்கினு நிக்கறேன்யா.. (அவர் பாணியில் உரக்க சிரிக்க அரங்கமே நடுவரோடு சேர்ந்து சிரிக்கிறது..)

நடு: (சிரித்துக்கொண்டே) நீங்களும் உங்க பங்குக்கு திட்டுங்க இல்லன்னா ஆதரிங்க.. அவ்வளவுதானே..

ஜன: அதாங்கய்யா நான் செய்யப் போறேன்.. நடிகவேள் எம்.ஆர் அய்யா பேசும்போது சொன்னாகளே..(நடிகவேளை மிமிக்ரி செய்கிறார்.) இந்தம்மா தமிழச்சியே இல்லே அப்புறம் ஏன்டா அவ சொல்றத எதுக்குறீங்கோ.. (அவருடைய மிமிக்ரி அப்படியே அச்சாய் நடிகவேளை பிரதிபலிக்க அரங்கமே கரஒலியால் அதிர்கிறது). அத்தையேதான் நான் பாலிஷா சொல்றேங்கோ.. குஷ்பு சொன்னத வுட்டுத்தள்ளிட்டு  வேற ஏதாச்சும் ஜோலி இருந்தா பாருங்கோ... என்னா தலைவர்.. சாரி, நடுவர் அவர்களே..

நடு: (சிரிக்கிறார்)என்னை தலைவராக்கிறாதீங்க.. சொல்லுங்க..

செந்: (கவுண்டமனியை பார்க்கிறார்) பாத்தீங்களாண்ணே.. அண்ணன் என்ன போடு போடறார் பாருங்க.. நீங்களும் இருக்கீங்களே.. சே.. மானத்த வாங்கிட்டீங்கண்ணே..

கவு: டேய் வாண்டாம். அப்புறம் எதுனாச்சும் நாஸ்தியா சொல்லிரப் போறேன்.

செந்: (கேலியுடன்) அதான் உங்க கைவந்த கலையாச்சே.. புதுசா எதாச்சும் இருந்தா பேசுங்க.. இல்லன்னா..

கவு: (கடுப்புடன்) இல்லன்னா.. என்னடா பண்ணுவே.. ஜாங்கிரி தலையா..

செந்: (எச்சரிக்கிறார்) அண்ணே வேணாம்.. பேசாம அவர் பேசறத கேளுங்க.. சொல்லிட்டேன்.

கவு: போடா.. நீ வேணா கேளு.. அவன் கேவலமா மிமிக்ரி பண்றான்.. இவனுங்க என்னமோ இல்லாத்தத பாத்தா மாதிரி கைதட்டுறானுங்க.. அய்யா மாதிரி தில்லா பேசறானாடா இவன்?

செந்: ஹெஹ்ஹஹ்ஹே.. நீங்க! தில்லா பேசனீங்க!! அட ஏன்ணே, சத்தமா சொல்லிறாதீங்க சிரிக்க போறாங்க.. தில்லா பேசினாராம் தில்லா..

(செந்திலின் திடீர் சிரிப்பொலியை கேட்டு நடுவர் உட்பட எல்லோரும் இருவரையும் பார்க்கின்றனர். ஜனகராஜும் திரும்பி பார்க்க இருவரும் தலையை குனிந்து கொள்கின்றனர்)

கவு: (அடிக்குரலில்) நீ செஞ்சத பாத்தியாடா டன்லப் தலையா?  இதவிடவா மானம் போவணும்?

(ஜனகராஜ் ஒன்றும் நடக்காததுபோல் தனக்கே உரிய பாணியில் பெண் குரலில் சிரிக்கிறார். அரங்கமும் அவருடைய சிரிப்புடன் கலந்து கொள்கிறது)

வடி: (பார்த்திபனிடம் அடிக் குரலில் பேசுகிறார்) பார்த்திபா பாத்தியா இவன.. மிமிக்ரி பண்ணியே எல்லாரையும் கவுத்துட்டான்.. நீயும் பேசினியே.. பராசக்தி சிவாஜி மாதிரி, எவனாவது சிரிச்சானா..

பார்: (எரிச்சலுடன்) டேய்.. மூடிக்கிட்டு இருடா.. எத்தன தடவை சொல்றது.. அடுத்த தடவ சொல்ல மாட்டேன். செஞ்சிருவேன்..

வடி: என்னாத்த?

பார்: உன் வாயையும் அதையும் இழுத்து வச்சி தச்சிருவேன்.

வடி: அதையும்னா? ஏன் அதையும்தான் சொல்லேன்.. கேப்போம்..

நடு: (இருவரையும் பாத்து) என்னய்யா நீங்க ஜோடி மாத்தி, ஜோடி பேசிக்கிட்டேருந்தா நான் எப்படிய்யா இத நடத்துறது.. சின்ன பிள்ளைங்களே தேவலாம் போலருக்குதேய்யா.. (ஜனகராஜை பார்த்து) நீங்க சொல்ல வந்தத சொல்லியாச்சாய்யா?

ஜன: (ஜிப்பா கையை சுருட்டிக்கொண்டு ஒரு விரலை உயர்த்தி காட்டுகிறார்) ஒன்னே ஒன்னு இருக்குய்யா..

நடு: (சிரிக்கிறார்) ஒன்னு  என்ன ரெண்டு வேணும்னாலும் சொல்லுங்க.. (எல்லோரும் சிரிக்கின்றனர். ஜனகராஜும் சிரிப்பில் கலந்துகொள்கிறார்)

செந்: பாத்தீங்களாண்ணே அவரும் சேர்ந்து சிரிக்கிறார் பாருங்க. நீங்க கோச்சிக்கிட்டீங்களே..

கவு: டேய் வாண்டாம்.. சும்மாயிரு..

செந்: ஆமா (நக்கலுடன் இழுக்கிறார்) எது சொன்னாலும் இந்த ஒரு வார்த்தைய சொல்லி வாய அடைச்சிருங்க..

ஜன: நடுவர் அவர்களே.. குஷ்பு சொன்னது தப்புன்னே வச்சுக்குவம்..

நடு: (சிரிக்கிறார்) சரி. வச்சிக்குவம்..

ஜன: அதுக்குன்னு.. இவங்க செய்யறதும் சரியில்லை இல்லையாய்யா?

நடு: (குழப்பத்துடன்) யாரை சொல்றீங்க?

ஜன: அதான்யா.. இந்த தமிழ் பொம்பளைங்க..

நடு: ஓஹோ..

ஜன: செருப்பெல்லாமாய்யா தூக்கி தூக்கி காட்டுறது? நல்லாயில்லீங்க நடுவரய்யா.. அப்புறம் அளுகுன முட்டை.. கொடும்பாவி பண்ணி செருப்பால அடிக்கறது, தீ வச்சி கொளுத்தறது.. இதெல்லாம் ரொம்ப தப்புங்கய்யா.. என்ன சொல்றீங்கய்யா?

நடு: நீங்கதான் சொல்லிட்டீங்களே.. தப்புத்தான்.

ஜன: அதான்யா.. நா சொல்ல வந்ததும். ரெண்டு சைடுலயும் தப்பு இருக்குய்யா.. விஷயத்த கொஞ்ச நாள் ஆறப்போடுறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு நினைக்கறேன். போறுமாய்யா?

நடு: (சிரிக்கிறார்) போறும்யா.. போய் உக்காருங்க.. (அவர் இருக்கையில் அமரும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்) ரொம்ப நல்லா நகைச்சுவை கலந்து சொன்னார்யா நம்ம ஜனகராஜ். ரெண்டு சைடுலயும் தப்பு இருக்கறதுனால கொஞ்ச நாளைக்கு இத ஆறப்போட்டா தீர்வு தானா கிடைச்சுரும்.. ரொம்ப சரின்னுதான் நான் நினைக்கறேன். (செந்திலை பார்க்கிறார்) என்னய்யா நிங்கதானே அடுத்த சீனியர்? வாங்க.. நீங்களும் பேசிட்டீங்கன்னா நம்ம வடிவேலு அய்யாவும் பேசிடுவார்.. முடிச்சிரலாம்.. வாங்க..

(ஜனகராஜ் அவருடைய இருக்கைக்கு திரும்பும் முன் அரங்கத்தினுள் ஒரு பெரிய கூட்டம் கைகளில் ‘பலான’, ‘பலான’ பொருட்களுடன் நுழைந்து பார்த்திபனை நோக்கி பாய கலந்துரையாடலில் கலந்து கொள்ள வந்திருந்த அனைத்து நடிகர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அரங்கத்தை விட்டு ஓடுகிறார்கள். காமராக்கள் அணைக்கப்பட்டு ஒளிபரப்பு துண்டிக்கப்படுகிறது. சிறிது நேரம் கழித்து அறிவிப்பாளர் தோன்றி கலந்துரையாடல் கைவிடப்படுவதாக வருத்தம் தெரிவிக்கிறார்)

முற்றும்!!

பின்னூட்டங்கள்

நம்ம முத்து என்ன சொல்றார்னா:

சூப்பரா இருந்திச்சி தலைவா (சொல்லாதது) என்னடா வர வர தொடர் அறுவையாயிகிட்டே போவுதே தலைவர்கிட்ட எப்படி சொல்றதுன்னு நினைச்சேன். அவரே புரிஞ்சிக்கிட்டு முற்றும் போட்டுட்டார். வாழ்க தலைவா.

நம்ம துளசி கோபால் என்ன சொல்றார்னா:

என்ன ஜோசப்? நல்லாத்தானே இருந்திச்சி?  சரி அலுக்கறதுக்கு முன்னால முடிச்சிரலாம்னு பாத்தீங்க போலருக்கு. நல்லதுக்குத்தான். (சொல்லாதது) நேத்து அவரு மூளைய காணோம்னு சொன்னப்பா சும்மா காமடி பண்றார்னு நினைச்சேன். நிஜம்தான் போலருக்கு. பாவம். சந்தரவதனா கிட்ட சொல்லி ஏதாவது ஒரு ஹெல்த் டிப்ஸ் குடுக்க சொல்லணும்.

நம்ம சம்பத்!! என்ன சொல்றார்னா:

சார் பாத்ரூம் போயிருந்தேன் சார். அதான் முதல் பின்னூட்டத்த போட முடியலை.. நானும் சொல்லணும்னுதான் நினைச்சேன். பார்த்திபன் பேசுனதுக்கு கண்டிப்பா உதை விழும்னு.. நல்ல பதிவை இப்படி பாதியில நிறுத்துறாப்பல ஆயிருச்சே (சொல்லாதது) அப்பாடா. இந்தாளோட தொல்லை விட்டது. இனி நிம்மதியா நம்ம வேலைய பாக்கலாம். இனியும் எத்தன வவுச்சார் செக் பண்ண வேண்டியிருக்குது. சே. இந்த துணை மேலாளர் வேலையே வேணாம்னு ஓடிரலாமான்னு இருக்குது.. இதுல இந்த ஆள் வேற பின்னூட்டம் போடு மன்னூட்டம் போடுன்னு.

நம்ம ஜோ என்ன சொல்றார்னா

வாழ்த்துக்கள் சார். (சொல்லாதது) நம்ம ஊர் பக்கத்தூர்காரராச்சேன்னு சும்மா இடை இடையில வாழ்த்துக்கள் சொன்னா.. இப்படியா.. சை!

டி.பி.ர். ஜோசஃப் Says

எதுக்கு ஜோ? முற்றும்னு போட்டதுக்கா? (சொல்லாதது) நம்ம பக்கத்தூர் பையன் பாவம். போட்டும், விட்டுரலாம்)

நம்ம கோ.ராகவன் என்ன சொல்றார்னா

சார், நேத்து படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சதுல கை கால்லல்லாம் சிராய்ப்பு சார்.  அதான் பின்னூட்டம் போட லேட்டாயிருச்சி. (சொல்லாதது) ஏதோ நம்ம ஊரு மாப்பிள்ளையாச்சேன்னு ரெண்டு நாள் நல்லாருக்கு சார்னு சொன்னேன். அதுக்குன்னு இப்படியா இழுக்கறது? ரம்பம்டா.

நம்ம ரஜினி ராம்கி என்ன சொல்றார்னா

நான் சொன்னாமாதிரியே ரெண்டு பக்கத்துக்குள்ளேயே எழுதிறீங்க சார். வாழ்த்துக்கள். . (சொல்லாதது)நான் ‘சார் ரெண்டு பக்கத்துக்கு மேல எழுதாதீங்க’ன்னு முன்னாலயே சொன்னது எவ்வளவு நல்லதா போச்சி? சார் பாட்டுக்கு ஒவ்வொரு பதிவையும் அஞ்சாறு பக்கத்துக்கு  எழுதியிருந்தா என்னாத்துக்காவறது? நம்மள்ல நெறைய பேர் ரஜினிசார் ரசிகர்ங்கறதுனால தப்பிச்சாங்க. அவரோட அறுவைய பாத்து பாத்து நாம எல்லரும்தான் இம்யூன் ஆயிட்டமே!!

நம்ம காசி என்ன சொல்றார்னா

சொல்றாப்பல.. எல்லாருடைய அங்க அசைவுகளையும் விவரிச்சி.. கொன்னுட்டீங்க சார் (சொல்லாதது) இனி இவரோட பதிவுல பின்னூட்டம் போடவே மாட்டேம்பா.

நம்ம டோண்டு ராகவன் (புகைப்படம் இல்லை)என்ன சொல்றார்னா (

சார். நான் அன்னைக்கே சொன்னேன். நீங்க தலித்துதானே. நீங்கல்லாம் எழுதுனா மனசுல ஒன்ன வச்சிக்கிட்டு வெளிய ஒன்னுதான் சார் சொல்வான்ங்க. இதே ஒரு பாப்பான் எழுதட்டும் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு பின்னூட்டம் என்ன முன்னூட்டமே போடுவான்க. விட்டுத்தள்ளுங்க சார்.

நம்ம Anonymous என்ன சொல்றார்னா

என்ன சார் ‘சோ’வை ரொம்ப பிடிக்கும்னு சொன்னீங்க? அவரையும் வச்சி எழுதிட்டு முடிச்சிருக்கலாம்லே (சொல்லாதது) இதையும் உண்மைன்னு நினைச்சிக்கிட்டு முடிஞ்ச சீரியல ஆரம்பிச்சிருவாரா, தெரியலையே. கடவுளே காப்பாத்து!!

நம்ம டோண்டு ராகவன் (புகைப்படத்துடன்) என்ன சொல்றார்னா

ஜோசப் சார். உங்கள போய் நான் அப்படியெல்லாம் சொல்வேனா? அது நான் இல்லங்கறது  என் புகைப்படம் இல்லங்கறத வச்சி போலின்னு தெரிஞ்சிக்கிட்டிருப்பீங்கன்னு நம்பறேன். உங்களுக்கு தனியா ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேனே பாத்தீங்களா? (சொல்லாதது) இப்பத்தான் நம்ம போலி உருப்படியா ஒரு காரியம் பண்ணியிருக்கான். எப்படியோ சார் நிறுத்திட்டார். அது போதும்.

நம்ம தருமி என்ன சொல்றார்னா

நகைச்சுவையில் சுவை குறைந்து நகைப்புக்கு ஆளாவறதுக்கு முன்னாலயே முடித்துவிட்டீர்கள்.  வாழ்த்துக்கள். என்ன ரொம்ப சுத்த தமிழ்ல எழுதிட்டேனோ? நீங்கதானே  ஒரு பின்னூட்டத்துல சொன்னீங்க மதுரை தமிழ் பிடிக்கும்னு. (சொல்லாதது) இதுக்கு நீங்க அந்த காலத்துல வாங்குன லாம்பி ஸ்கூட்டரே பத்தியே ஒரு நாலு பதிவு எழுதியிருக்கலாம். இல்லன்னா இருக்கவே இருக்கு ஆதாமை விட ஏவாளுக்கு ஒரு விலா எலும்புன்னு சொல்லி பெண்களை மட்டம் தட்டலாம். நல்ல ஆளுய்யா. அடுத்த தடவை சென்னைக்கு போறப்போ அந்த மனுஷன பார்த்து சொல்லணும் வயசுக்கேத்தா மாதிரி எழுதுங்கன்னு.

நம்ம நிலா என்ன சொல்றார்னா

கவுண்டமனி-செந்தில் காம்பினேஷன் நல்லா வருது சார் (சொல்லாதது) நான் சொன்னத உண்மைன்னு நம்பிட்டார் போலருக்குது. இந்த மட்டுக்கும் விட்டாரே.

நம்ம Anonymous என்ன சொல்றார்னா

நான் நேத்து ‘உங்க ப்ளாக் போர் அடிக்குது சார்’னு பின்னூட்டம் போட்டேன். அத ரிமூவ் பண்ணிட்டீங்க. ஆனா சொன்னத புரிஞ்சிக்கிட்டு ‘முற்றும்’னு போட்டுட்டீங்கல்லே.. அது..

டி.பி.ர். ஜோச·ப் Says

இந்த சீரியலை தொடர்ந்து வாசிச்சி பின்னூட்டம் இட்டு வாழ்த்திய நண்பர்களுக்கும். அநாமதேயங்களாய் வந்து காலை வாரியவர்களுக்கும், நக்கல் செய்தவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

ரஜினி ராம்கி!  நீங்க சொன்ன ரெண்டு பக்கத்துக்குள்ள முடிக்க முடியலீங்க. கடைசி பகுதியில பின்னூட்டம் இட்டவங்களுக்கு நன்றி சொல்லுணும்ல அதான். கோச்சிக்காதீங்க.  

நீங்கல்லாம் சொல்லாததுன்னு எழுதனல்லாம் மனசுல வச்சிக்காதீங்க.

ரெண்டு, மூனு நாளைக்கு இந்த ப்ளாக்ல உங்க யாருக்கும் என்ட்ரி இல்லை..

அப்புறமா இதே பதிவில என்னை தலைவான்னு கூப்பிடுகிற என் சிஷ்யன்! முத்து ஒரு அருமை(வை!!)யான காமடி சீரியல்  எழுதுவார்.  அவருக்கு உங்களுடைய அமோக தரவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.








35 comments:

G.Ragavan said...

அருமையாக வைப்பதும் நல்ல பந்தியே. அதை அளவுக்கு மீறாமல் வைப்பதும் நல்ல பந்தியே. அந்த வகையில் ஜோசப் சார், இந்த நகைச்சுவைத் தொடர் ஒரு அறுசுவைப் பந்தியே (சரியா ஆறு பாகந்தான போட்டிருக்கீங்க.) என்னுடைய வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

பின்னூட்டமெல்லாம் எப்ப்டிப் போகுமுன்னும் சொல்லி ஜமாய்ச்சுட்டீங்க( சொல்லாதது)
இன்னும் கொஞ்சநாள் படிச்சுட்டுச் சிரிக்கலாமுன்னு பாத்தா இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டீரே)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன். நன்றி.


என்னங்க உங்க பின்னூட்டத்த பத்தி ஒன்னுமே கமென்ட் பண்ணல? கோச்சுக்கிட்டீங்களா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க துளசி. நன்றி. உங்க பதிவோட லிங்க் போட்டுட்டேன். பாத்தீங்களா? அதுக்கு ஒரு நன்றி.

இன்னும் கொஞ்சநாள் படிச்சுட்டுச் சிரிக்கலாமுன்னு பாத்தா இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டீரே

உண்மையிலேயே இதுதான் சொல்லாம விட்டதா?

Anonymous said...

:-((((((((((((((((((

சட்டுன்னு முடிச்சிட்டீங்களேன்னு சோகமா இருக்கேன் சார்.எவனோ ஒருத்தன் பேர் போடாம போரடிக்குதுன்னு சொன்னான்னு ஏன் சார் நல்ல தொடரை முடிச்சிட்டீங்க? வடிவேலுவோட பேச்சை கேக்கறதுக்கு ஆவலோட இருந்தேன் சார். இப்படி பண்ணிட்டீங்களே.

Anonymous said...

இன்னா சார் கப்புன்னு முடிச்சிட்டே. இன்னா சோக்கா காமடி பண்ணிக்கினு இருந்தே. கடோசி பகுதின்னு நீ போட்டத பாத்தப்போ பக்குன்னு ஆயிருச்சிபா. இருந்தாலும் நீ பின்னூட்டம்னு போட்டு கலாய்ச்சிகீறிய சூப்பர்பா? அடுத்த ஜீரியல் எப்போ? சீக்கிரம் போட்ரு, இன்னா?

G.Ragavan said...

// என்னங்க உங்க பின்னூட்டத்த பத்தி ஒன்னுமே கமென்ட் பண்ணல? கோச்சுக்கிட்டீங்களா? //

அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க. அந்தப் பின்னூட்டத்த நாந்தான் எழுதுனேன்னு நெனச்சு, அதுக்குப் பின்னூட்டம் போடாம விட்டுட்டேன். ஹி ஹி.

டிபிஆர்.ஜோசப் said...

சட்டுன்னு முடிச்சிட்டீங்களேன்னு சோகமா இருக்கேன் சார்.எவனோ ஒருத்தன் பேர் போடாம போரடிக்குதுன்னு சொன்னான்னு ஏன் சார் நல்ல தொடரை முடிச்சிட்டீங்க? //

யாராயிருந்தாலும் அவரும் வாசகர்தானே. அவருக்காக மட்டுமில்லை. அருமை அறுவையாவறதுக்குள்ள முடிச்சிரலாமேன்னுதான். ஆனா சீக்கிரமே வேறொரு அறுவையோட வருவேன். கபர்தார்!!

டிபிஆர்.ஜோசப் said...

ராகவன்,

கோச்சிக்கல இல்ல, அப்ப சரி.

ஆனா ஒன்னு நான் எழுதனதையே உங்க பின்னூட்டமான்னு நினைச்சேன்னு பொடி வச்சீங்க பாருங்க அங்கதான் நிக்கிறீங்க. சும்மா தமாஸ்.

தருமி said...

புரியுது..புரியுது...நம்ம 'ஜாவா மகாத்மியம்' பதிவை வச்சி காலை வார்ரீங்க..செய்யுங்க..செய்யுங்க..

டிபிஆர்.ஜோசப் said...

என்ன தருமிசார் மதுரைக்கு போய் சேந்துட்டீங்களா? நீங்க சென்னையிலதான இருப்பீங்க படிக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். அதான் தமாஸ்னு மன்னிச்சிக்குங்கன்னு கடைசியில சொல்லிட்டேன்ல?

ஜெ. ராம்கி said...

Keep it up!

One more All rounder ready! :-)

Muthu said...

தலைவா .. தமிழ் மணத்தின் . காமெடி கிங் என்று உங்களை கூறலாம்.அதுவும் அந்த
(டோண்டு வித் போட்டோ அண்ட் டோண்டு வித்தவுட் போட்டோ )...கலக்கீட்டிங்க

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராம்கி. நன்றி,

சரிங்க உங்க ரஜினி நடிப்பைப் பத்தி ஏதோ எழுதியிருந்ததா ஞாபகம். அதப்பத்தி உங்க கமென்ட் ஒன்னுமில்லையா?

நீங்க கோபபட்டு ஏதாவது வம்பு பண்ணுவீங்கன்னு பாத்தா புஸ்சுன்னு போயிருச்சே.. தனியா எதுவும் பதிவு போடறதா உத்தேசம் இருக்கா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க முத்த, நன்றி.

அதுசரி நீங்க ஒரு காமடி சீரியல் எழுதப் போறதா ஒரு Announcement பண்ணியிருந்தேனே ஒன்னுமே சொல்லலை?

ரெண்டு பேரும் சேர்ந்து எழுதலாமா? ஒரு புதுமையா இருக்குமே.

என்ன சொல்றீங்க?

டிபிஆர்.ஜோசப் said...

அடுத்த ஜீரியல் எப்போ? சீக்கிரம் போட்ரு, இன்னா? //

ஒருவாரம், பத்துநாள் போட்டும். பாக்கலாம்.

Muthu said...

ரெண்டு பேரும் சேர்ந்தா.... கேட்க நல்லா புதுமையா இருக்கு .ஆனா.....

நீங்க கொஞ்சம் ஸ்பீடு சார்( வாரத்துல ஏழு பதிவு சாதாரணமா போடறீங்க)..எனக்கு அது ஒத்துவருமா?

அப்புறம் நீங்க வடிவேலு மாதிரி அசால்ட்டா காமெடி பண்றீங்க...எனக்கெல்லாம் அது கஷ்டம்.

சீரியல் என்று இல்லாமல் சிறிய கட்டுரை அல்லது கதை என்ற அளவில் கண்டிப்பா செய்வோம் சார்.

dondu(#11168674346665545885) said...

"தலைவா .. தமிழ் மணத்தின் . காமெடி கிங் என்று உங்களை கூறலாம்.அதுவும் அந்த
(டோண்டு வித் போட்டோ அண்ட் டோண்டு வித்தவுட் போட்டோ )...கலக்கீட்டிங்க"

அப்படியே வழிமொழிகிறேன். (சொல்லாததில் சொல்லப்பட்டதைத் தவிர)

அன்புடன்
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

என்ன பயந்துட்டீங்களா முத்து?
சும்மா தமாஷ்தான் பண்ணேன். உங்களாலயும் காமடி எழுத முடியும்னுதான் ஒரு செய்தியும் பின்னூட்டங்களும்கற பதிவில காட்டிட்டீங்களே, அப்புறம் என்ன?

சரி இப்ப வேணாம். கொஞ்ச நாள் போட்டும் பாக்கலாம். சரியா.

நான் ராத்திரி பத்து மணிக்கு மேல வீட்டுலருந்துதான் பதிவுகளை எழுதுவேன். ஆஃபீஸ் நேரத்துல பின்னூட்டம் மட்டும்தான்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார், நன்றி.

நீங்க சொல்லாதத்தானே சொல்லாததுல சொன்னதா எழுதியிருக்கேன். அப்புறம் ஏன் நீங்க சொல்லாததுல சொன்னத தவிரன்னு விளக்கும் குடுக்கறீங்க. என்ன பார்த்திபன் டைலாக் மாதிரி இருக்குன்னு பாக்கறீங்களா. இன்னும் ரெண்டு மூனு நாளாவது ஆகும் நான் பழையபடி டிபிஆர் ஜோசப்பா மாற.

டிபிஆர்.ஜோசப் said...

நாலு பரிந்துரை செய்தவங்கள்ல யாரோ ஒரு புண்ணியவான் -வ் குத்தி அஞ்சிலருந்து மூனாக்கிட்டாரு. யார் அந்த புண்ணியவான்? யாராயிருந்தாலும் நல்லா இருக்கட்டும். வாழ்த்துக்கள்!!என் மேல கோவமா? தெரியலை.

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

இதுக்கா கவலை..வாங்கிக்கீங்க நம்ம குத்து ஒண்ணூ!

Sundar Padmanaban said...

அவசரமாக முடித்தது போல இருக்கிறது இறுதிப் பாகம்.

கவுண்டமணி செந்தில் நன்றாக வந்திருந்தாலும் சற்று அளவுக்கு அதிகமாகவே 'வாயை மூடு' 'சும்மா இரு' போன்ற வசனங்கள் வருகிறது.

பாராட்டுகள்.

அன்புடன்
சுந்தர்.

டிபிஆர்.ஜோசப் said...

தருமி சார்,

உங்க +வ் குத்துக்கு நன்றி. இப்பல்லாம் எதுக்கு கவலைப்படணும் எதுக்கு கவலைப் படக்கூடாதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போயிருச்சி. என்ன பண்றது :-()

அதாவது சிரிகிறதா அழறதான்னு தெரியலை!

டிபிஆர்.ஜோசப் said...

பாத்தீங்களா சுந்தர் உங்களுக்கும் சில வசனங்கள் அதிகமா தெரிஞ்சிருக்கு. அதுக்கு காரணம் தொடர் கொஞ்சம் நீளமா போனதுதான் காரணம். என்னுடைய இரண்டாவது மகள்தான் என்னோட முதல் ரசிகை. அவளுக்கே கொஞ்சம் அலுப்பு தட்டிபோச்சி. போறும்பா இந்த எபிசோடோட நிறுத்திக்குங்க சொன்னதுனால ஸ்டுடீயோக்குள்ள கும்பல் புகுந்து கலாய்ச்சிட்டதா திடீர் ஒரு கற்பனைய பண்ணி முடிச்சிட்டேன். ஆனாலும் ஜனகராஜ் சொன்னதுபோல இந்த குஷ்பு விஷயத்த கொஞ்ச காலத்துக்கு ஆறப்போடறது நல்லதுதானே. என்ன சொல்றீங்க.

உங்க பாராட்டுக்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

யாரோ ஒருத்தர் பின்னூட்டம் போட்டு டெலீட் பண்ணா மாதிரி இருக்கு! யார்யா நீங்க? சொல்ல வந்தத சொல்ல வேண்டியதுதானே. இன்னையோட இந்த அநானிமஸ்சுக்கு இந்த ப்ளாக்குலருந்து 144!!

sai said...

Really I am confused who said what

dondu(#11168674346665545885) said...

"நீங்க சொல்லாதத்தானே சொல்லாததுல சொன்னதா எழுதியிருக்கேன். அப்புறம் ஏன் நீங்க சொல்லாததுல சொன்னத தவிரன்னு விளக்கும் குடுக்கறீங்க."

சொன்னது, சொல்லாதது என்று பத்திரிகைகளில் சாதாரணமாகக் குறிக்கும்போது, "சொல்லாதது" என்பதன் பொருளே மனதில் நினைத்து வெளியில் சொல்லாதது என்பதாகத்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு உதாரணத்துடன் விளக்குவேன். குமுதத்தில் வந்தது. அதாவது ஒரு டுபாக்குர் நிறுவனத்தின் ஒரு விழாவுக்கான விளம்பரத்தில் சொன்னது: "நிர்வாகியின் தேதி அடுத்த மாதம் பத்தாம் தேதிதான் கிடைக்கும். ஆகவே விழாவும் அன்றுதான் நடக்கும்".

சொல்லாதது: :ஏனெனில் அன்றுதான் அவருக்கு வேலூர் ஜெயிலிலிருந்து விடுதலை".

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சாய்,

இப்ப நீங்க சொல்றதுதான் புரியல.

கற்பனை பின்னூட்டத்த சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அது முழுசும் என் கற்பனை.

டிபிஆர்.ஜோசப் said...

நல்லா ஜோக்கடிக்கிறீங்க டோண்டு சார். நீங்களும் ஒரு காமடி சீரியல் எழுதலாம். எழுதுங்க. சீரியசா எழுதறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. காமடி எழுதறதுக்குத்தான் ஆள் இல்லை.

doondu said...

சார் நீங்க மெய்யாலுமே தலித்தில் இருந்து மாறிய கன்வர்ட்டடு கிறிஸ்டியர்தானே? நங்கநல்லூருக்கு வந்தால் எனது நண்பர்களிடம் சொல்லி உங்களையும் எங்கள் பார்ப்பன ஜமாத்தில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

doondu said...

ஜோசப் சார்,

இப்போது நான் எழுதிக் கொண்டிருப்பதே பெரிய ஜோக்தான். புதிதாக வேறு ஜோக் அடிக்க வேண்டுமா என்ன?

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்,என்ன ஆச்சி? நீங்களும் ஜாதிய பத்தி கேக்கறீங்க?

நான் தலித்தும் இல்லை. கன்வர்ட்டட் கிரிஸ்டியனும் இல்லை. பல நூறு ஆண்டுகளாய் கத்தோலிக்க கிறீஸ்துவர்கள் மதத்தை தழுவிய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவியிருக்கும் பரவர் சமுதாயத்தை சார்ந்தவன். ஆனால் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் இந்த ஜாதி, குலம், கோத்திரத்தைப் பற்றியெல்லாம் என் பெற்றோர்கள் எங்களுக்கு எடுத்துரைத்ததே இல்லை. Fernando, Gomez, Rayan என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். என் குடும்பப் பெயர் Fernando. ஆனால் எந்னுடைய பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் வெறும் Indian Christian என்று மட்டும்தான் இருக்கும்.எனக்கு திருமணம் என்ற பேச்சு எழுந்தபோதுதான் முதன் முதலாக ஜாதியை பற்றிய பேச்சே எழுந்தது. அப்போதும் என்னைப் பொறுத்தவரை அதை பொருட்டாகவே படவில்லை. நான் தூத்துக்குடி கிளைக்கே மேலாளராக மாற்றலாகி சென்றபோதுதான் இந்த ஜாதி பின்னணியில் அப்பாவி மக்களை பிரித்து கேவலமான அரசியல் நடத்திவந்த பண முதலைகளையும்,ஏன் சில மத குருமார்களையும் சந்திக்க நேர்ந்தது. அதைப் பற்றி சமயம் வரும்போது நிச்சயம் எழுதுவேன்.

தப்பா நினைச்சிக்கலேன்னா ஒன்னு சொல்றேன் டோன்டு சார். நீங்க சொன்னீங்கன்னு இக்ரிசாட் பிரகாஷுக்கு நீங்க நடத்தறதா இருக்கற ப்ளாக்கர்ஸ் மீட்டிங்குக்கு வரலாமான்னு ஒரு மெய்ல் அனுப்பினேன். பதிலே வரவில்லை. இந்த மறைமுக புறக்கணிப்பை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியாமல் நொந்து போனேன். பிராமின்ஸ், செட்டியார், முதலியார், தலித், இதெல்லாம் நாம வச்சிக்கிட்ட ஒரு தேவையாத முள் வேலிங்கறது என் அபிப்பிராயம். என் பிள்ளைகளையும் அதே எண்ணத்தில்தான் வளர்த்திருக்கிறேன்.

I am sorry Dondu Sir, don't mistake me but I am not interested in joing any forum based on caste, colour & creed. I am really sorry to say this. எனக்கு இதப்பத்தி ஒரு தனி பதிவே எழுதணும்னு தோனுது.

If I have hurt your sentiments in anyway by writing like this, I am sorry.

டிபிஆர்.ஜோசப் said...

இப்போது நான் எழுதிக் கொண்டிருப்பதே பெரிய ஜோக்தான். புதிதாக வேறு ஜோக் அடிக்க வேண்டுமா என்ன?//


அப்படியில்லை சார். உங்க பதிவுகள்ல எத்தனையோ சீரியசான விஷயம் இருக்கு? என்ன நீங்க? உங்கள இமிடேட் பண்ணி உங்க பேரை கெடுக்கறதுக்குன்னே எழுதறானே போலி, அவன் எழுதறதுதான் ஜோக்கு.