சாதாரணமாக வந்தனா அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப இரவு எட்டு மணிக்கு மேலாகிவிடும்.
சோர்வுடன் வீடு வந்து சேர்ந்ததுமே முகம், கை, கால் கழுவிக்கொண்டு முதலி ஸ்டவ்வைப் பற்ற வைத்து சூடாக ஒரு ஸ்ட்ராங் காப்பியைக் குடித்துவிட்டு அன்றைய இரவு எட்டு மணி சன் நீயூசைப் பார்ப்பது வழக்கம். அதற்குப் பிறகு அன்று காலையில் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்தவற்றை எடுத்து மைக்ரோ வேவில் சூடாக்கி பேருக்கு கொறித்துவிட்டு குளித்து முடிப்பார்.
மீண்டும் படுக்கைக்குச் செல்லும் முன்பு ஆங்கிலச் செய்தி. தலைப்புச் செய்திகளை மட்டும் கேட்டால்தான் தூக்கம் வரும்..
இதுதான் வந்தனா மேடத்தின் டெய்லி ரொட்டீன்..
ஆனால் அது அலுவலகத்திற்கு செல்லும் நாட்களில்..
கடந்த மூன்று நாட்களாகத்தான் அவர் வீட்டிலேயே அடைந்துக்கிடக்கும்படி ஆகிப்போனதே..
இருப்பினும், 'ஒங்கள இங்கருந்து டிஸ்சார்ஜ் பண்றதே ஒங்க ஃப்ரெண்ட்ஸ் ஒங்கள பாத்துக்கறேன்னு சொன்னதாலத்தான்.. ஒங்க ப்ரெஷர் லெவல் மறுபடியும் நார்மலா வர்ற வரைக்கும் எந்த காரியத்துக்கும் எக்சைட் ஆகக் கூடாது.. இதுல எந்த எக்ஸ்க்யூசும் கிடையாது. அதனால நா சொல்ற வரைக்கும் டி.வி பக்கம் போகவே கூடாது.. பேப்பர் கூட படிக்காம இருந்தா நல்லது. இன்னைக்கி நாட்டுல நடக்கற விஷயங்களப்பத்தி தெரிஞ்சிக்காம இருக்கறதே நல்லது.. அதுவும் ஒங்கள மாதிரி ட்ரீட்மெண்ட்ல இருக்கறவங்களுக்கு.. புரியுதா? ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் லிக்விடா எதையாச்சும் சாப்ட்டுட்டு எட்டு மணிக்கெல்லாம் இந்த ஸ்லீப்பிங் டாப்ளட்ச போட்டுக்கிட்டு தூங்க போயிரணும்.. வர்ற ஒரு வாரத்துக்கு எவ்வளவு தூங்க முடியுமோ அவ்வளவு தூங்குங்க.. நா வேணாம்னு சொல்ற வரைக்கும் இந்த டாப்ளெட்ச யூஸ் பண்ணுங்க.. And don't worry about anything or anybody.. Am I clear? ' என்ற மருத்துவரின் ஆலோசனையை வேறு வழியின்றி கடைப்பிடிக்க வேண்டியிருந்ததால் வந்தனா அன்றும் இரவும் எட்டு மணிக்கே வந்தனாவை உறங்க வைத்துவிட்டுத்தான் இரவு சமையல் வேலையை கவனித்தாள் அவளுடன் தங்கியிருந்த நளினி.
அதுவும் நல்லதாய் போய்விட்டது என்று நினைத்தனர் இரவு எட்டு மணிக்கு NDTV செய்தியைக் கேட்ட நளினியும் நந்துவும். 'எந்தா நளினி இது.. மாதவன் சாரோட மகனா.. எனிக்கி விசுவசிக்கானே பற்றில்லா..' என்றான் நந்து டிவியிலிருந்த கண்ணெடுக்காமல்.
நளினி உதடுகளில் விரலை வைத்து எச்சரித்தாள். 'நந்து மெதுவா.. மேடம் முளிச்சிக்கப் போறாங்க.. சார் வந்து சார்ஜ் எடுத்த நேரம் சரியில்லையா இல்ல நம்ம பேங்குக்குத்தான் போறாத காலமா? இப்ப என்ன பண்ணுவாங்க?'
நந்தக்குமார் குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தான். 'யார சொல்ற? சேர்மனையா?'
'இல்லீங்க. இந்த பையனத்தான் சொல்றேன்.. அவந்தான் போலீசுக்கு ஃபோன் பண்ணான்னு சொல்றாங்க. ஆனா எப்படி? ஃபோன் பண்ணியா? அது ஒரு பெரிய குத்தமா? எங்கயாவது யாராவது பேசிக்கிட்டிருந்தத கேட்டிருப்பான். ஒடனே நல்ல பிள்ளையாட்டம் பொறுப்பா போலீசுக்கு ஃபோன் பண்ணியிருப்பான்... அது ஒரு பெரிய குத்தமா?'
நந்தக்குமார் டிவியை அணைத்துவிட்டு தன் மனைவியைப் பார்த்தான். 'குத்தமில்லதான். ஆனா அப்படி சொன்னா போலீஸ் நம்பணுமே.. அந்த பையனும் அந்த டெரரிஸ்ட் கேங்க்ல ஒருத்தன்னுதான் போலீஸ் நினைக்கும்.. அதான் நடக்குது. இதுல சம்பந்தப்பட்டிருக்கற பையன நமக்கு தெரியுங்கறதுனால நாம இதுல இவன் சம்பந்தப்பட்டிருக்க மாட்டான்னு நினைக்கறோம்.. ஆனா போலீசுக்கு இவனும் ஒரு கல்ப்ர்ட்ங்கற எண்ணம்தான் இருக்கும்.. என்ன பண்றது.. இவன் என்பேர்ல எந்த குத்தமும் இல்லேன்னு நிரூபிக்கணும்.. அதுவரைக்கும் கஸ்டடியிலருந்து தப்பிக்க முடியாதுன்னு நினைக்கேன். இதுல நம்ம சார் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்ங்கறது இனிமேத்தான் தெரியும்.. சாரும் அவங்க ஃபேமிலியும் திடீர்னு மும்பை கெளம்பி போயிருக்காங்கன்னு நா முரளிய பாத்துட்டு திரும்பி வந்துக்கிட்டிருக்கறப்பத்தான் கேள்விப்பட்டேன். அப்போ என்ன ஏதுன்னு தெரியலை.. இதப்பத்தி கேட்டுட்டுத்தான் போயிருக்கார் போலருக்கு.. அவ்வளவு சீக்கிரம் அவர் திரும்பி வருவார்னு எனக்கு தோனலை.. சரி வா சாப்ட்டு படுப்போம்.. நாளைக்கு காலைல என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.. நீ வந்தனா மேடத்துக்கிட்ட எதையும் சொல்லிராத.. என்ன?'
நளினியும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றாள். 'இதுல நம்ம விஷயமும் சிக்கலாயிரும் போலருக்கே.'
நந்தக்குமார் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். 'நம்ம விஷயமா? அப்படீன்னா?'
'என்னங்க நீங்க.. இந்த கன்ஃப்யூஷன்ல நம்ம டிரான்ஸ்ஃபர பத்தி யார் கவலைப்படப் போறா?'
'ஓ அதுவா? அது நடக்கறப்போ நடக்கட்டும்.. அதுவுமில்லாம நா இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் முரளி ஃபோன் பண்ணான்.' என்றவாறு நந்தனா படுத்திருந்த அறை மூடியிருக்கிறதா என்று பார்த்தார்.
'என்னங்க? என்ன புதிர் போடறீங்க?'
நந்தக்குமார் நளினியை அருகில் வருமாறு கூறினான். 'நம்ம மாணிக்கவேல் சார் இருக்காரில்லே?'
'ஆமாம். அவருக்கென்ன?'
'குறுக்கே பேசாம பொறுமையா கேளு. இன்னைக்கி காலைல அவரோட அப்பாவ அவரே கொலை பண்ணிட்டாராம்.'
நளினி தன்னையுமறியாமல் உரக்க 'ஐயையோ.. என்னங்க.. குண்ட தூக்கிப் போடறீங்க?' என்றாள்.
'ஏய்.. ஏய்.. சத்தம் போடாத.. மேடத்துக்கு மட்டும் கேட்டுது வேற வெனையே வேணாம்.. இதுக்குத்தான் ஒங்கிட்ட சொல்லாம இருந்தேன்..'
'சரி.. சரி.. கத்தலை.. சொல்லுங்க.. சாரும் அவங்கப்பாவும் ரொம்ப க்ளோஸ்னு கேள்விப்பட்டிருக்கேனேங்க.. நாம வீட்டுக்கு போயிருந்தப்போ கூட என் அப்பாவப்பத்தித்தான் கவலையாருக்குன்னுல்லாம் சொன்னாரேங்க?'
'உண்மைதான்.. ஆனா அவரோட ஒய்ஃபே போலீஸ்ல இந்த மாதிரி ஸ்டேண்ட்மெண்ட் குடுத்துருக்காங்களாமே..?'
நளினி நம்பமுடியாமல் நந்துவையே பார்த்தாள். 'எனக்கென்னமோ அந்த மேடம் மேலயே சந்தேகமாருக்கு நந்து. நாம போன அன்னைக்குக்கூட அவங்க மேல எனக்கு பச்சாதபமே வரல.. சாரையும் அவரோட சன் இருக்காரே அவரையும் பார்த்தப்போ மனசுல ஏற்பட்ட துக்கம் அந்த மேடத்த பார்த்தப்போ வரல.. ஏன்னு தெரியலை.. ஆனா அதான் உண்மை..'
நந்து வியப்புடன் அவளைப் பார்த்தான். 'ஏன் அப்படி சொல்றே?'
நளினி மலையாளிகளுக்கே உரிய பாணியில் தோள்களை குலுக்கினாள். 'ஏன்னு சொல்ல முடியல.. ஆனா.. அப்படியொரு ஃபீலிங்.. சாரோட அப்பா கொலையில கூட எனக்கு அந்தம்மா மேலதான் சந்தேகப்பட வைக்கிது. அதுவும் அந்தம்மாவே சார் மேல குத்தம் சொல்றத பார்த்தா.. சார் ரொம்ப பாவம்க.. ஒரே வாரத்துல மகளையும் அளவுக்கதிகமா நேசிச்ச அப்பாவையும் இழந்து.. ச்சே.. நாம என்னமோ நமக்கு நடந்தத பெரிசா நினைச்சிக்கிட்டிருக்கோம்..' என்றவள் நந்தக்குமாரை நெருங்கி வந்து, 'நந்து இது வந்தனா மேடத்துக்கு நாளைக்கொரு நா தெரிய வந்தா நம்ம ரெண்டு பேரையும் தப்பா நெனைக்க மாட்டாங்களா?' என்றாள்.
'நீ சொல்றதும் சரிதான். ஆனா அவங்க இப்ப இருக்கற நிலையில எப்படி நளினி..? அப்புறம் அவங்களுக்கு மறுபடியும் ஏதாவது ஆயிருச்சின்னா? வேணாம்.. இப்போதைக்கு அவங்களுக்கு தெரிய வேணாம்.. நீயும் ரெண்டு மூனு நாளைக்கு டி.விய போடாத.. பார்ப்போம்.. நல்லதா முடிஞ்சா சொல்லலாம்..'
நளினி அப்போதும் தயங்கினாள். 'இருந்தாலும் மாணிக்கவேல் சாரோட அப்பா இறந்தத.. எப்படீங்க?'
நந்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று தோன்றினாலும்... 'இல்ல நளினி.. இப்ப வேணாம்.. அப்புறம் பாக்கலாம்.. நீ போ.. ஊண் எந்தெங்கிலும் இண்டாக்கிட்டுண்டோ..' என்றான் பேச்சை மாற்றி..
நளினிக்கும் அவனுடைய யுக்தி புரிந்தது.. என்ன இருந்தாலும்.. இந்த சென்னை விஜயம் தனக்கும் நந்துக்கும் இடையிலிருந்து தூரத்தை வெகுவாக குறைத்திருந்ததை நினைத்துப் பார்த்தாள். மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பரவ.. 'அதே நந்து.. இதோ ஒரு மினிட்டு.. விளம்பாம்..(பரிமாறுகிறேன்).. நந்து ட்ரெஸ் சேஞ்ச் செய்துட்டு வா.. பொக்கோ..’
தொடரும்
6 comments:
ஹை! நான் தான் பர்ஸ்ட்டா?
வாங்க ஜி!
ஹை! நான் தான் பர்ஸ்ட்டா? //
இந்தாங்க புடிங்க நூறு பொற்காசுகள்:)
விளம்பினதுக்கு நன்றி....
சார், கதய windup பண்றார்....
வாங்க கிருஷ்ணா,
நல்லவேளை நீங்க வந்தீங்க.. இல்லன்னா ஜீயே முதலும் கடைசியுமா ஆயிருப்பார். நூறு காசு போறாதுங்கன்னுருப்பார். தப்பிச்சேன்:)
சார், கதய windup பண்றார்.... //
இன்னும் இருபதுக்கு மேல இருக்கே..
ஆனா நா குறிப்பு எழுதி வச்சது முழுசையும் போடணும்னா இன்னுமொரு 100 எப்பிசோட் போவும்..
இன்னொரு கரு மனசுக்குள்ள இருந்துக்கிட்டு நிர்பந்திக்கிறதுனாலதான்..
அது முடிஞ்சதும் இதுக்கு மறுபடியும் வந்தாலும் வருவேன்..
டி.பி.ஆர் சார்,
100 எபிசோட் இருந்தாலும் எழுதுங்க. 3 னாள் கதைய 1 வருஷம் வரைக்கும் சொல்லுறது கின்னஸ் சாதனை. அதும் சுவாரசியமா சொல்றது இன்னும் பெரிய விஷயம். இது வரைக்கும் உங்களுக்கு கமெண்ட் போடாட்டியும். டெய்லி படிக்குறேன்.
வாங்க நால்ரோடு,
நன்றிங்க..
என் மனசுலருக்கற புது தொடர் இன்றைய இளைய தலைமுறையைப் பற்றியது என்பதால் இப்போதைய தொடரை தாற்காலிகமாக நிறுத்திவைப்பதாய் முடிவு செய்திருக்கிறேன்.. இது ஒரு suspensionதான்.. முடிவு அல்ல..
Post a Comment