14.8.06

சூரியன் 116

அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்த ஃபிலிப் சுந்தரம் தன் கையிலிருந்த கோப்புகளை அவரிடம் கொடுத்துவிட்டு சேர்மனின் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்தார்.

‘வாங்க ஃபிலிப்.. உக்காருங்க.’ என்ற மாதவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த ஃபிலிப் அருகில் அமர்ந்திருந்த நாடாரை தயக்கத்துடன் பார்த்தார்.

‘முதல்ல ஒக்காருங்க சார்.. அதான் சேர்மனே சொல்லிட்டாரில்லே’ நாடாரின் குரலில் இருந்த மிகுதியான மரியாதை அவரை குழப்பத்தில் ஆழ்த்த தயக்கத்துடன் அமர்ந்தார்.

‘என்ன மிஸ்டர் நாடார் நீங்களே சொல்றீங்களா இல்லை நான்..’ என்றார் மாதவன்.

நாடார் ஏளனத்துடன் சிரித்தவாறு ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார். ‘நீங்களே சொல்லுங்க.. அப்பத்தான் இவர் கேப்பார். நாங்கல்லாம் என்னதான் கரடியா கத்தினாலும் கேக்க மாட்டார். என்ன சார் நா சொல்றது சரிதானே..?’

ஃபிலிப் சுந்தரம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார்.

மாதவன் தனக்கெதிரில் அமர்ந்திருந்த இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ஃபிலிப் சுந்தரம் நாடாரின் வலது கரம் என்று காலையில் சுபோத் அவரிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் கேள்விப்பட்டதற்கு நேர் மாறாக இருந்தது நாடாரின் நடவடிக்கையும் பேச்சும். ஒருவேளை இதுவும் ஒரு நாடகமோ?

‘மிஸ்டர் ஃபிலிப், மிஸ்டர் நாடாருக்கு ஒரு சந்தேகம். அதாவது, டாக்டர் சோமசுந்தரம் மிஸ்டர் பாபு சுரேஷ எச்.ஆர். ஹெட்டா கொண்டுவர்றதுக்கு என்ன காரணம்னு ஒங்களுக்கு தெரியுமோன்னு.. Is it correct?’

இப்படியொரு கேள்வி வரும் என்று ஃபிலிப் எதிர்பார்த்ததுதான். இதற்குரிய பதிலாக எதை சொன்னாலும் தனக்கு பிரச்சினைதான் என்பதையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

‘காரணம் ஒன்றும் இல்லை என்றாலோ அல்லது எனக்கு தெரியாது’ என்றாலோ ‘அப்ப எதுக்கு அவர நீங்கதான் ப்ரொப்போஸ் பண்ணீங்கன்னு டாக்டர் சொல்றார்னு’ கேள்வி வரும்.

‘ஆமாம் காரணம் இருக்கு.’ என்றாலோ ‘அப்ப எதுக்கு நீங்க எங்கக்கிட்டருந்து மறைச்சீங்கன்னு’ கேள்வி வரும்.

ஆக, என்ன மாதிரி சொன்னாலும் பிரச்சினைதான். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தார்.

‘என்ன சார்? இந்த சிக்கல்லருந்து தப்பிக்க என்ன வழின்னு யோசிக்கிறீங்க போலருக்கு?’ என்றார் நாடார் கேலியாக.

ஃபிலிப் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். ‘இல்ல சார்..’

‘அப்ப சொல்லுங்க. ஒங்களுக்கு தெரியாம இருக்கறதுக்கு சான்ஸ் இல்ல. என்ன காரணம்?’

ஃபிலிப் மாதவனைப் பார்த்தார். அவர் கோ அஹெட் என்பதுபோல் பார்க்க இதிலிருந்து விடுபட தனக்கு வழியில்லையென்பதை உணர்ந்து சற்று முன் பாபு சுரேஷ் கூறியதை சுருக்கமாக கூறினார்.

மாதவனுடைய முகத்தில் வியப்பின் ரேகை லேசாக தெரிந்தது. ஆனால் நாடாரின் முகத்திலோ கோபத்தின் உக்கிரமம் தெளிவாக தெரிந்தது.

‘இது ஒமக்கு எப்போ தெரியும்?’ என்று உறுமினார் ஃபிலிப்பைப் பார்த்து. அவருடைய கோபம் மாதவனையே ஒரு கணம் திடுக்கிட வைத்தது.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான்..’

‘அப்படீன்னா? கரெக்டா சொல்லும்யா’

‘எம்.சிக்கு அப்புறம்.’

‘உண்மையத்தான் சொல்லுதீரா.. இல்லே.. பழுவடியும் பொய்தானா?’

மாதவனுக்கு நாடாருடைய பேச்சில் குறைந்திருந்த கண்ணியம் சற்றே எரிச்சலைத் தந்தது. ஒரு சி.ஜி.எம் என்ற மரியாதையில்லாமல் ஃபிலிப் சுந்தரத்திடம் நாடார் பேசிய விதத்தில் தனக்கு ஒப்புதல் இல்லையென்பதை அவருக்கு கோடிட்டு காட்டினாலென்ன தோன்றவே, ‘மிஸ்டர் நாடார் நீங்க பேசற விதம் சரியில்லைன்னு தோனுது.. என்ன இருந்தாலும் அவர் சி.ஜி.எம் ராங்க்லருக்கற ஒரு சீனியர் ஆஃபீசர்.’ என்றார்.

நாடார் இதை எதிர்பார்க்கவில்லையென்பது அவர் முகம் போன போக்கிலிருந்தே மாதவனுக்கும் ஃபிலிப் சுந்தரத்திற்கும் விளங்கியது. பொங்கி வந்த கோபத்தைக் கட்டுபடுத்த அவர் முயல்வதும் தெரிந்தது.

‘மன்னிச்சிருங்கய்யா.. தப்புத்தான்.. ஆனா நா நம்ம ஃபிலிப் சார அப்படி மட்டும் நினைக்கலையா? அவர் என் கூட பிறக்காத தம்பி மாதிரி. அவர்கிட்ட கோபப்படறதுக்கு எனக்கு உரிமை இருக்குன்னு நினைச்சித்தான்..’

அவர் சட்டென்று கோபம் தணிந்து மன்னிப்பு கேட்டது மாதவனுக்கும் சங்கடமாகிப்போகவே, ‘இல்லை மிஸ்டர் நாடார்.. ஒங்களுக்கும் மிஸ்டர் ஃபிலிப்புக்கும் நெருக்கம் இருந்தாலும் நா புது ஆள் இல்லையா? என் முன்னால வச்சி அவர நீங்க இப்படி பேசறது அவர ஒருவேளை..’ என்றவாறு ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார்.

ஃபிலிப் சுந்தரம் ஒரு தர்மசங்கடமான புன்னகையுடன் இருவரையும் பார்த்தார். ‘ பரவாயில்லை சார். நாடார் இப்படி பேசறது ஒன்னும் புதுசில்லை.. நானும் அதை சாதாரணமாத்தான் எடுத்துக்கிறுவேன்.. It’s ok.’ என்றார் நிலைமையை சீராக்கும் நோக்கத்துடன்.

நாடார் சிறிது நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்த கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இந்த சேர்மன் பய நாம நெனச்ச மாதிரி சாது இல்லை.. முன்னைய ஆளவிட கில்லாடியாருப்பான் போல.. இவன் கிட்ட சாக்கிரதையாத்தான் இருக்கணும்.. பார்ப்போம் எதுலயாவது வளுக்காமயா போயிருவான்.. காத்துக்கிட்டு இருந்து கப்புன்னு புடிச்சி.. அப்ப இருக்கு இவனுக்கு.. இப்ப வேணாம்.. முதல்ல அந்த டாக்டர் பயல போர்ட்லருந்து வெட்டி விடணும்.. அதுக்கு இன்னைக்கி வந்த ஃபேக்ஸ் ஒன்னே போறும்.. அதுக்கப்புறம் இந்த பயல பார்த்துப்போம்.. டாக்டருக்கு பதிலா யார் வர்றான்னு பார்த்துட்டுத்தான் எல்லாம் செய்யணும்..

இன்றைக்கு இது போதும்.. டாக்டர் பய இன்னைய போர்ட் மீட்டிங்கு அப்புறம் நிக்கானான்னு பாப்பம்.. அவனே போனப்புறம் அவன் திட்டம் மட்டும் நிக்கவா போவுது?

மேற்கொண்டு பதிலேதும் பேசாமல் எழுந்து நின்ற நாடாரைப் பார்த்து திடுக்கிட்டு மாதவனும் ஃபிலிப் சுந்தரமும் எழுந்து நின்றனர்.

‘என்ன மிஸ்டர் நாடார் கிளம்பிட்டீங்க?’ என்றார் மாதவன்.

நாடார் கோபம் தணியாத முகத்துடன் அவர்களைப் பார்த்தார். நாம கோவிச்சிக்கிட்டு போய்ட்டதாவே இவனுங்கக் கிட்ட காட்டிக்குவம். அப்பத்தான் ரெண்டு பயலும் போர்ட் மீட்டிங்ல வால சுருட்டிக்கிட்டு இருப்பானுங்க.

மாதவனுடைய கேள்வியைப் பொருட்படுத்தாமல் வேகமாய் அறையை விட்டு நாடார் வெளியேற மாதவனும் ஃபிலிப் சுந்தரமும் பேச்சற்று நின்றனர்.

நாடார் வெளியேறியதும் என்ன செய்வதென விளங்காமல் சற்று நேரம் குழம்பிய மாதவன் சுதாரித்துக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

‘உக்காருங்க மிஸ்டர் ஃபிலிப்.. I need some time to recover before my first board meeting.. My!!! This has been one hell of a first day so far.. First the Fax against the Doctor and now this... Please sit down for a moment..’

Fax against the Doctor... ஃபிலிப் சுந்தரத்திற்கும் அது என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான்.. ஆனால் அதை எப்படி இவரிடம்..

மாதவன் இப்போது இருக்கின்ற மனநிலையில் அதை எப்படி கேட்பதென தெரியாமல் தவித்தவாறு அமர்ந்திருந்தார்..

‘மிஸ்டர் ஃபிலிப் Can I ask you something?’

தனக்குள்ளேயே யோசனையில் ழ்ந்திருந்த ஃபிலிப் திடுக்கிட்டு மாதவனைப் பார்த்தார். ‘கேளுங்க சார்.’

மாதவன் தயக்கத்துடன் மேசையில் கிடந்த ஃபேக்ஸ் நகலை எடுத்து ஒரு முறை படித்துவிட்டு, ‘டாக்டருக்கும் நாடாருக்கும் இடையில ஏதாவது பிரச்சினை இருக்கா மிஸ்டர் ஃபிலிப்?’ என்றார்.

எப்படி பதிலளிப்பதென தெரியாமல் சற்று தயங்கிய ஃபிலிப் சுந்தரம், ‘அப்படியொன்னும் எனக்கு தெரிய வரலை சார்.’ என்றார் பட்டும் படாமலும். ‘எதுக்கு கேக்கீங்கன்னு நா தெரிஞ்சிக்கலாமா சார்?’

‘அதிருக்கட்டும். உங்களுக்கும் மிஸ்டர் நாடாருக்கும் இடையில ஏதாச்சும் ஸ்பெஷல் உறவு இருக்கா? அவர் ஏதோ நீங்க அவரோட தம்பி மாதிரின்னு சொன்னாரே?’

மாதவனுடைய கேள்வியின் உள்நோக்கம் தெரியாமல் சற்று நேரம் தயங்கினார் ஃபிலிப் சுந்தரம். ‘நானும் அவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவங்க சார். அத்தோட நாங்க ரெண்டு பேரும் ஒரே சர்ச்சுக்குத்தான் போறோம். நாலஞ்சு வருசமா சர்ச் கவுன்சில் தலைவரா இருந்தவர் நாடார். அவருக்கப்புறம் அந்த பதவிக்கு என்ன¨ சிபாரிசி செஞ்சி எலெக்ட் செய்ய வச்சதும் அவர்தான். அதான்... அதனால அவரோட ரைட் ஹேண்ட் நான்னு இங்க ஒரு எண்ணம் இருக்கு.. அதுல உண்மை இருக்கா இல்லையாங்கறது நீங்க போகப் போக தெரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கறேன்..’

மாதவனுடைய உதடுகளின் ஓரம் மேல் நோக்கி வளைந்ததிலிருந்து அவருக்கு தான் கூறியதில் அவ்வளவாக திருப்தியில்லை என்பதை உணர்ந்த ஃபிலிப் சுந்தரம் இனியும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்று நினைத்து எழுந்து நின்றார்.

‘சார்.. I will have to gather the files for my department's agenda item for the Board Meeting. Shall I go?’

மாதவனும் எழுந்து நின்றார். ‘மிஸ்டர் ஃபிலிப்’ என்று வெளியேறவிருந்தவரை அழைக்க அவர் நின்று திரும்பிப் பார்த்தார். ‘Yes Sir?’

‘நீங்க எம்.சி யில டாக்டரையும் நாடாரையும் ஹேண்டில் பண்ண விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. I thought I could depend on you for tackling similar situations in the coming years.. But unless..’

இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்காமல் குழம்பிய ஃபிலிப் திரும்பி மாதவனுடைய மேசையை நோக்கி திரும்பிச் சென்றார். ‘I don’t understand Sir.. If you have anything in your mind please come out with it..’

மாதவன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து தனக்கு முன் இருந்த இருக்கையைக் காட்டினார். ‘Please sit down..’ என்றார்.

ஃபிலிப் சுந்தரம் அமரும் மட்டும் காத்திருந்த மாதவன், ‘would you like to know about this?’ என்றார் தன் முன் கிடந்த ஃபேக்ஸ் நகலை சுட்டிக்காட்டியவாறு..

ஃபிலிப் சுந்தரம் ஃபேக்ஸ் நகலையும் மாதவனையும் பார்த்தார். ‘If you want..’

மாதவன் பதில் பேசாமல் qபேக்ஸ் நகலை நீட்ட qபிலிப் சுந்தரம் வாங்கி நிதானமாக படித்தார்.

Man proposes God disposes என்பது எத்தனை சரி!

சற்று முன் பாபு சுரேஷ் தன்னிடம் கூறியதை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தார்.

அதற்கு முன்பு மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்தில் பாபு சுரேஷை தான் எச்.ஆர் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்ததாக அபாண்டமாக கூறிய சோமசுந்தரத்தின் எதிர்காலம் இவ்வளவு விரைவில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை..

இதற்குப் பிறகும் சோமசுந்தரம் இயக்குனர் குழுவில் நீடிப்பது சிரமம்தான் என்று நினைத்தார்..

இந்த திடீர் திருப்பத்தால் இன்னும் என்னவெல்லாம் குழப்பங்கள் ஏற்படப் போகிறதோ என்றும் அவருடைய சிந்தனை ஓடியது..

தயக்கத்துடன் ஃபேக்ஸ் நகலை மாதவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘You wanted to ask me something Sir?’ என்றார்.

மாதவன் ஃபேக்ஸ் நகலை திரும்பப் பெற்று மீண்டும் ஒருமுறை அதை நிதானமாக வாசித்தார். ‘I want you to investigate and find out whether anyone is behind this leak.. I mean from our Bank..’

ஃபிலிப் சுந்தரம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தார். ‘Why do you think so Sir?’

‘I am not sure. Something tells me that it is being purposefully leaked out to ensure that the Doctor is eased out of the Board.. It could be someone who is aware of his motive behind the recruitment plan.. Please find out ..’ என்றவாறு எழுந்து நின்றார் மாதவன்.. ‘Come.. Let’s go to the Board Room..’

தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் அறை வாசலை நோக்கி நடந்த மாதவனையே பார்த்துக்கொண்டிருந்த ஃபிலிப் சுந்தரம் வேறு வழியில்லாமல் அவரை பிந்தொடர்ந்து வெளியேறி வழியில் மாதவனுடைய காரியதரிசியிடம், ‘சுபோத்.. Please call the Company Secretary and inform him that Chairman is going to the Board Room.. Ask him to gather all the board members.. They may be waiting in their parlour.. quick..’ என்று கூறிவிட்டு அவரிடம் ஒப்படைத்திருந்த தன்னுடைய இலாக்கா கோப்புகளை திருப்பி பெற்றுக்கொண்டு இயக்குனர் கூட்டம் நடைபெறவிருந்த அறையை நோக்கி வேகமாக நடந்தார்..

தொடரும்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ஒரு வார விடுமுறைக்குப் பிறகு.....
முதல் நாளின் முற்பகலே களை கட்டி
விட்டது...பிற்பகல் விளையாட்டுகள்
ஜோராயிருக்குமே.......

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஒரு வார விடுமுறைக்குப் பிறகு.....
முதல் நாளின் முற்பகலே களை கட்டி
விட்டது...பிற்பகல் விளையாட்டுகள்//

ஆமாங்க.. நாளைக்கே போட்டுருவேன்.. சஸ்பென்ஸ் வச்சா எனக்கே தூக்கம் வராது:)

dondu(#11168674346665545885) said...

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், மறுபடி தர்மம் வெல்லும் என்பது நிஜ வாழ்க்கையில் நடக்கவும் தவறி விடுவதைப் பார்க்கும்போது ஒரு வித கையாலாகாத்தனம் நமக்குள் வந்து அமர்ந்து விடுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், மறுபடி தர்மம் வெல்லும் என்பது நிஜ வாழ்க்கையில் நடக்கவும் தவறி விடுவதைப் பார்க்கும்போது ஒரு வித கையாலாகாத்தனம் நமக்குள் வந்து அமர்ந்து விடுகிறது.//

ஆமா சார். நாம ஒரு கதைய கற்பனை செய்யறப்போ எதாவது ஒரு கதாபாத்திரம் தில்லுமுல்லு செஞ்சா கதை முடியறதுகுள்ள ஒரு தண்டனைய அதற்கு கொடுத்து கெட்டவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற நியதியை நிலைநாட்ட முடியும்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடப்பது இறைவன் கையில் அல்லவா உள்ளது? அவந்தான் பொருமையின் சிகரமாயிற்றே.. என்றாவது மனிதன் திருந்துவான், திருந்துவான் என்று காத்திருப்பவராயிற்றே.. அதனால்தான் நம்மில் பலருக்கும் நல்லவனுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை தீயவன் வெற்றிக்கு மேல் வெற்றி அடைகிறானே என்ற ஒரு சோர்வு மனதில் ஏற்பட்டுவிடுகிறது..