26.10.06

சூரியன் 135

சிவகாமி மாமி ஒலிவாங்கியின் வாயைப் பொத்தியவாறு சீனியைப் பார்த்தாள்.

‘டேய் சீனி, சரோஜா ரொம்பவும் கோபமா இருக்கா. நீ பேசலேன்னுட்டாருக்கும். நீயும் கோபமா பேசி காரியத்த கெடுத்துராத. ஒடனே கெளம்பி வந்தாலும் வந்துருவோ.. அதனால ஜாக்கிரத.. ஒன் கால் பிரச்சினையை சொல்றதும், சொல்லாம இருக்கறதும் ஒன் இஷ்டம்.. ஆனா நிதானமா பேசு..’

சீனிவாசன் சரி மாமி என்றவாறு ஒலிவாங்கியை வாங்கி, ‘ஹாய்.. மம்மி..’ என்றான் வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன்.

எதிர் முனையிலிருந்து சரோஜா சரமாரியாக கேள்விகளைக் கேட்க சீனி நிதானத்துடன் பதிலளித்ததைப் பார்த்து மைதிலியும் சிவகாமி மாமியும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.

‘It is not like that Mom.. நான் காலையிலருந்து வீட்டுல இல்ல.. என் ஃப்ரெண்ட்சையெல்லாம் பார்த்து சொல்ல போயிருந்தேன்.. இப்பத்தான் வந்தேன்..’

‘எல்லாரையும் பார்த்து சொல்லியாச்சுன்னா இன்னும் எதுக்குடா அங்க தனியா இருக்கணும்.. நாளைக்கே பொறப்பட்டு வந்துரேன்..’

சரோஜாவின் உரத்த குரல் ஒலிவாங்கியைத் தாண்டி அருகில் நின்றிருந்த மைதிலிக்கும் கேட்டது. அவள் புருவங்களை உயர்த்தி சீனிவாசனைப் பார்த்தாள். நான்கு விரல்களை காட்டினாள்.

‘இல்ல மம்மி.. எல்லாரையும் பாக்க முடியல.. இன்னும் நாலஞ்சு நாள்.. இனி எப்போ இங்க வரப்போறேன்.. Let me be here till this week end.. நான் கமிங் சண்டே பொறப்பட்டு வந்துடறேன்.. மாமிய ட்ரெய்ன்ல ஏத்தி அனுப்பிட்டு.. .. அப்புறம் சென்னைதான்.. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் மம்மி..  ப்ளீஸ்..’

எதிர்முனையில் அம்மா அப்பாவிடம் பேசுவது கேட்டது. அப்பா சாதாரணமாக நள்ளிரவுக்கு முன்பு வந்து அவனுக்கு நினைவில்லை. மணியைப் பார்த்தான்.. ஆறு மணி!

Dad has changed.. I should also.. I should land a job as soon as I reach Chennai.. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே.. மைதிலிய கல்யாணம் செஞ்சிக்கணும்னா எனக்கு ஒரு வேல வேணும்.. Or I should start a venture of my own..  

மைதிலியைப் பார்த்தான்.. என்ன என்பதுபோல் அவள் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தான் சீனி..

சிவகாமி இதை கவனியாதவள்போல் ‘இனி இவாளே சமாளிச்சிப்பா ..’ என்று தனக்குள் பேசியவாறே சமையலறையை நோக்கி நடந்தாள் புன்னகையுடன்..

சற்று நேர இடைவெளிக்குப் பிறகு எதிர்முனையில் தன் தந்தை பேசுவதை உணர்ந்த சீனிவாசன்.. ‘ஹாய் டாட்.. First day in the office.. எப்படி இருந்தது?’ என்றான்.

மைதிலி வியப்புடன் புருவங்களை உயர்த்தினாள். ஹேய்.. பரவால்லையே என்று உதடுகளை அசைத்தாள் ஒலி வராமல்.. சீனி தன் தந்தையைப் பார்த்தாலே விலகிச் சென்றுவிடுவான் என்றுதான் அவள் கேள்விப்பட்டிருந்தாள். Dad hates me like anything என்று சீனியே அடிக்கடி சொல்லி அலுத்துக்கொள்வதையும் கேட்டிருக்கிறாள்..

எதிர்முனையிலிருந்து என்ன பேசினாரோ சீனியின் முகமெல்லாம் மலர்ந்துபோனதை வியப்புடன் பார்த்தாள்.

‘ஆமா டாட்.. மைதிலியையும் பார்த்து பேசணும்.. தாங்ஸ் டாட்.. Yes.. Dad.. I didn’t expect this from you.. Dad.. Thanks..’ உணர்ச்சி மிகுதியால் சீனிவாசனின் உதடுகள் நடுங்குவதைக் கண்ட மைதிலி அவனுடைய கரத்தை ஆதரவாக பற்றினாள்..

அடுத்த சில நிமிடங்களில் இணைப்பைத் துண்டித்துவிட்டு மைதிலியின் உதவியுடன் ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்த சீனிவாசன் முகத்தை கைகளில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருக்க மைதிலி அவனை தொந்தரவு செய்யாமல் அவனெதிரில் அமர்ந்தாள்..

சற்று நேரம் கழித்து நிமிர்ந்து மைதிலியைப் பார்த்தான். ‘You know what Dad said?’

‘என்ன?’

‘ஒன்னைய பார்த்து பேசிட்டு வரச் சொன்னார்.’

‘என்னன்னு? என்னெ சுத்தமா மறந்துருன்னுட்டா?’

சீனி சில நொடிகள் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.. பிறகு இல்லையென்று தலையை அசைத்தான்.

மைதிலி எழுந்து அவனருகில் சென்றமர்ந்தாள்.. ‘என்ன சீனி சொல்றே? அங்கிள் சரின்னுட்டாரா?’

‘இல்ல.. அப்படியில்ல..’

‘பின்னே..?’

‘நாம ரெண்டு பேரும் ஆற அமர ஒக்காந்து பேசணுமாம்.. நம்ம ரெண்டு பேருடைய லைஃப பத்தி.. அதனால பாதிக்கப்படப் போறவங்கள பத்தி..’

மைதிலி அவனை நெருங்கி அமர்ந்து அவனுடைய கரங்களை எடுத்து தன்னுடைய கரங்களுக்கு பொதிந்துக்கொண்டாள்..

‘I did not expect this Sreeni.. Of all the people.. from Uncle..’ என்றாள்.. கண்களில் கண்ணீருடன்..

சீனிவாசன் சிவகாமி மாமி கையில் காப்பி கோப்பைகளுடன் தங்களை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தன்னுடைய கரங்களை விடுவித்துக்கொண்டு சற்று தள்ளியமர்ந்தான்.

‘என்னடா என்ன சொல்றா ஒங்கம்மா? ஒடனே பொறப்பட்டு வந்தாத்தான் ஆச்சுங்கறாளா?’ என்றவாறு வந்த மாமி ஒரு கோப்பையை அவனிடமும் இன்னொரு கோப்பையை மைதிலியிடமும் கொடுத்துவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திராமல் திரும்பி நடந்தாள்..

‘இல்ல மாமி.. இந்த வாரக் கடைசியில ஒங்களையும் கூட்டிக்கிட்டு வரேன்னு சொன்னேன். அம்மா, அப்பா ரெண்டு பேருமே சரின்னுட்டாங்க..’

சிவகாமி சட்டென்று நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். ‘அப்படியா.. பேஷ்..’ என்றவள் மைதிலையைப் பார்த்தாள். ‘ஏண்டிம்மா.. இவனுக்கு அதுக்குள்ள கட்டு பிரிச்சிருவாளா என்ன?’

மைதிலி யோசனையுடன் இருவரையும் பார்த்தாள். ‘ஆமாம் மாமி.. நேக்கும் அதான் யோசனையாருக்கு.. டாக்டர் அங்கிள்கிட்டதான் நாளைக்கு கேக்கணும்.. நானும் ஏதோ யோசனையில நாலுன்னு விரல காட்டுனேன்.. இவனும் நாலு நாள்னு கணக்கு போட்டு இந்த வீக் எண்டுன்னு சொல்லிட்டான்.. ஹேர் லைன் க்ராக்னுதானெ சொன்னார் மாமி.. பிரிச்சிருவார்னு நினைக்கேன்.. மாட்டேன்னு சொன்னார்னா அப்படியே போயிரவேண்டியதுதான்.. என்ன சீனி?’

சீனிவாசன் கையிலிருந்த காலி கோப்பையை மாமியிடம் நீட்டினான். ‘இனிமேலும் மம்மிக்கிட்ட பொய் சொல்ல முடியாது மாமி.. கட்டோடயே போயிர வேண்டியதுதான்.. இல்லன்னா மம்மியே பொறப்பட்டு வந்தாலும் வந்துருவாங்க..’ என்றவாறு அவன் மைதிலியை நோக்கி திரும்ப மாமி புரிந்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள்..

‘நீ என்னமோ சொல்ல வந்தியே.. மை..?’

மைதிலி அவனை நெருங்கியமர்ந்தாள். ‘அங்கிள் சொன்னத யோசிச்சி பார்த்தேன் சீனி.. அவர் அம்மா அப்பாவத்தான் மீன் பண்ணித்தான சொன்னார்?’

ஆமாம் என்பதுபோல் தலையையசைத்தான் சீனி. ‘அப்படித்தான் நானும் நெனக்கிறேன். அப்பா பேசன டோன்லருந்து I think he has realised the intensity of our friendship.. He has changed.. My.. I am unable to believe that he could change his attitude towards so dramatically.. I just can’t believe this.. I knew that he was totally against my friendship with you till last week..’

அவன் கூறியதை ஆமோதிப்பதுபோல் தலையை அசைத்த மைதிலி எழுந்து நின்றாள். ‘நான் கெளம்பறேன் சீனி.. இப்ப கெளம்பினாத்தான் எட்டு மணிக்காச்சும் வீடு போய் சேரமுடியும்.. Don’t worry.. I will talk to அம்மா.. அவோ அப்பாக் கிட்ட பேசி சம்மதிக்க வைப்பான்னு நினைக்கறேன்.. நீ ரிலாக்ஸ் பண்ணு.. ரெண்டு நா கழிச்சி நல்ல நியூசோட ஃபோன் பண்றேன்.. நான் ஒன்னெ கூப்டற வரைக்கும் நீ என் மொபைலுக்கு பண்ணாத.. I need some time to think about this.. I mean the shift to Chennai.. I’ll have to talk to my boss.. my friends and like.. ரெண்டே நாள்.. பை..’ என்றவள் சமையலறைக்குள் சென்று.. ‘மாமி நா வரேன்.. நாழியாயிருச்சி.. சீனிய பாத்துக்குங்கோ.. ஏதாச்சும் வேணும்னா என் மொபைலுக்கு ஃபோன் பண்ணுங்கோ.. சீனியாண்ட என் நம்பர் இருக்கு..’ என்று விடைபெற்றுக்கொண்டு திரும்பும் வழியில் சீனியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு விடுவிடுவென வாசலை நோக்கி நடந்தாள்..

*******

‘இங்க பார்த்தியாடி ஒங்கப்பாவ. நா அப்பவே சொல்லல ,இவர் நம்மள மறந்தே போயிருப்பார்னு.. நீதான் கேக்க மாட்டேன்னுட்டே..’

ஹாலிலிருந்த சோபாவில் சாய்ந்து கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த பாபு சுரேஷ் திடுக்கிட்டு விழித்து வீட்டிற்குள் நுழைந்த தன் மனைவியையும் மகளையும் பார்த்தார்..

‘என்னப்பா நீங்க.. ஆஃபீஸ்லருந்து வந்ததும் ஃபோன் பண்றேன்னு சொன்னீங்க?’ என்ற ரம்யா அவருடைய முகத்தைப் பார்த்துவிட்டு சோபாவில் தன் தந்தையின் அருகில் அமர்ந்தாள். ‘என்ன டாட், எதுவும் பிரச்சினையா?’ என்றாள் மிருதுவாக..

சூசீந்தராவும் அப்போதுதான் தன் கணவனின் முகத்தைக் கவனித்தாள். அதில் அன்று காலையில் காணாத ஒருவித கலக்கம் தென்பட அவளும் கையிலிருந்த பொருட்களை தரையில் வைத்துவிட்டு அவரருகில் அமர்ந்தாள். ‘என்னங்க.. என்ன என்னவோ மாதிரி இருக்கீங்க?’

பாபு இருவரையும் பார்த்தார். இன்னைக்கி வரைக்கும் ஆஃபீஸ் விஷயத்த இவங்க ரெண்டு பேர்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணதேயில்லையே.. இன்னைக்கி மட்டும்... ஒருவேளை நடந்த விஷயத்த இவங்ககிட்ட சொல்றதுனால ஒருவேளை தன்னுடய பாரம் குறைஞ்சாலும் குறையலாமே..

‘என்ன டாட்.. ஆஃபீஸ்ல ஏதும் ப்ராப்ளமா? எங்ககிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..’

பாபு தன் மகளைப் பார்த்தாள். அவளுடைய முகத்திலிருந்த பாசத்தை இதற்கு முன் அவர் பார்த்ததே இல்லை.. ‘ஆமாம்மா.. கொஞ்சம் சீரியசான விஷயம்தான்..’

‘என்னங்க.. சொல்லுங்களேன்.. புது சேர்மன் ஜாய்ன் பண்றார்னு கேள்விப்பட்டேனே.. அதுவா?’ என்றாள் சுசீந்தரா?

அட! என்ற வியப்பு மேலோங்க தன் மனைவியைப் பார்த்தார். ‘அதுவுந்தான்.. அது சரி ஒனக்கெப்படி சேர்மன் இன்னைக்கி ஜாய்ன் பண்றார்னு தெரியும்?’

நளினிதான் இன்னைக்கி கடைக்கி போற வழியில சொன்னா.. ஹிண்டுல போட்டிருந்திச்சாமே..

‘ஆமா டாட்.. நாந்தான் சொன்னேன்.. அதிருக்கட்டும்.. அதுக்கும் ஒங்க டென்ஷனுக்கும் என்ன சம்பந்தம் டாட்?’

‘எங்க போர்ட்லருந்து ஒரு சீனியர் டைரக்டர் போட்லருந்து ராஜிநாமா செஞ்சிட்டார்மா.. அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி.. அவருக்காக நான் சில முட்டாள்தனமான காரியம்லாம் செஞ்சிருக்கேன்.. என்னெ எப்படா பழிவாங்கலாம்னு துடிச்சிட்டிருக்கற சில எக்ஸ்யூட்டிவ்ஸ் அவர் இல்லாத இந்த நேரத்துல ஏதாச்சும் செஞ்சிருவாங்களோன்னு...’

ரம்யா தன் தந்தையை கரங்களை ஆதரவுடன் தொட்டாள். ‘டாட்.. நடக்க இருக்கறது நடக்கத்தான் செய்யும்.. ஒங்களுக்கு என்ன ஆனாலும் நாம மூனு பேரும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்.. Why do you worry? இந்த நேரத்துல இந்த கல்யாணத்த நடத்தறது சரியில்லைன்னு பட்டா.. தள்ளி வச்சிரலாம் டாட்.. may be for two, three months.. குமார் வீட்டுல ஒத்துக்கிட்டா சரி.. இல்லன்னா வேற எடம் பாத்துக்கலாம்.. I am not too concerned about my marriage..’

சூசீந்தரா அதிர்ச்சியுடன் தன் மகளைப் பார்த்தாள். ‘ஏய் என்ன பேசறே? மாப்பிள்ளை வீட்டுல போயி இவருக்கு பிரச்சினைன்னு சொல்ல சொல்றீயா? வேற வெனையே வேணாம்.. எதுக்கு இந்த சம்பந்தம்னு வெலகிறுவாங்க.. நீ சும்மா இரு.. அபசகுணமா ஏதாச்சும் சொல்லிக்கிட்டு.. அப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்.. ஏங்க.. நா போயி சூடா ஒரு காப்பி போட்டு கொண்டு வாரேன்.. நீங்க அத குடிச்சிட்டு போய் குளிங்க.. என்னைக்கோ நடந்தத நெனச்சி டென்ஷனாவுறதுல எந்த பிரயோசனமும் இல்ல.. நடக்கறது நடக்கட்டும்.. ஏய் நளினி.. நீ எழுந்து ஒன் ரூமுக்கு போய் இந்த சாமானையெல்லாம் சரிபார்த்து பீரோவில வச்சிட்டு குளிச்சிட்டு கிச்சனுக்கு வா..’ என்றவாறு எழுந்து அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் சமையலறையை நோக்கி மிடுக்காக நடந்த தன் மனைவியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் பாபு சுரேஷ்..

‘பாத்தியாடா ஒங்கம்மாவ.. எவ்வளவு க்ளியரா திங்க் பண்றா? யெஸ்.. அப்பா கொஞ்ச நேரம் ஒக்காந்து யோசிச்சா இதுக்கு ஆன்சர் கிடைச்சுரும்னு நினைக்கேன்.. அதுக்காக கல்யாணத்தையெல்லாம் நிறுத்த வேணாம்.. நா குளிச்சிட்டு அந்த டைரக்டர் கிட்ட பேசறேன்.. I think there is point in what your mom says.. she may be correct..’ என்ற தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்தாள் நளினி..

‘ஆமா டாட்.. அம்மா நீங்க நெனக்கறா மாதிரி இல்லை.. பயங்கர Shrewd.. இன்னைக்கி அவங்க ஷாப்பிங் பண்ண ஸ்டைல பார்த்து நானே அசந்துட்டேன்.. இவ்வளவு நா பார்த்த அம்மாவான்னு நெனச்சேன்.. நான் ரூமுக்கு போய்ட்டு வரேன் டாட்.. வேணும்னா டின்னர் சாப்பிடறப்போ பேசலாம்.. பை..’

நளினி டீப்பாயிலும் தரையிலும் சிதறிக்கிடந்த பைகளை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கிச் செல்ல பாபு சுரேஷ் எழுந்து சமையலறையை நோக்கி நடந்தார்..

தொடரும்..

7 comments:

krishjapan said...

அந்தப் பதிவைப் படித்ததும், அலுவலகத்தில் ஏதோ டென்ஷனோன்னு நினைத்தேன். சுமுகமான நிகழ்வுகளால் இன்றைய சூரியன கொண்டுபோனதப் பார்த்தா, பிரச்சினை சரியாயிடுச்சி போலிருக்கே...

மெமோ கொடுத்துடலாமான்னு நினைச்சிட்டுருக்கும் போது, பதிவப் போட்டு தப்பிச்சிட்டீங்க...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

அந்தப் பதிவைப் படித்ததும்,//

எந்த பதிவு.. காலைல போட்டதா?

அலுவலகத்தில் ஏதோ டென்ஷனோன்னு நினைத்தேன். //

என்னைக்கித்தான் டென்ஷனில்ல? அதுபாட்டுக்கு இருக்கு.. ஆஃபீஸ் டென்ஷனுக்கு இன்றைய காலை பதிவுக்கும் சம்பந்தமில்ல..

krishjapan said...

இன்னும் 4 நாள்தான் சார். ஞாபகம் வெச்சுக்குங்க. எந்த சால்ஜாப்பும் ஒத்துக் கொள்ள முடியாது.

அலுவலக பிரச்சினைகளை வேற டிபிஆர் சார் கவனிச்சுக்க்குவார்னு தெரியும். சும்மானாச்சிக்கும் .....

டிபிஆர்.ஜோசப் said...

இன்னும் 4 நாள்தான் சார். ஞாபகம் வெச்சுக்குங்க. //

ஓ! தி.பா தொடரா? ஞாபகமெல்லாம் இருக்கத்தான் செய்யிது.. ஆனா இனியும் ஒரு ரெண்டு வாரம் வேணுமே..

கடைசி நேரத்துல சொல்லலாம்னு நினைச்சேன்.. நீங்க முந்திக்கிட்டீங்க.. நவம்பர் 15வது ஆகும்னு நினைக்கேன்..

நான் எடுத்துக்கிட்ட ஒரு அசைன்மெண்ட்ட முடிச்சிக் குடுத்துட்டு வரேன்..

siva gnanamji(#18100882083107547329) said...

ட்டிபிஆர்:"எந்த பதிவு.. காலைலே
போட்டதா?"

எந்த பதிவு?சூரியன் 134 16/10ல் பிறகு 135 இப்போ.
எந்த பதிவுனா எனக்குப் புரியல்லே

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

எந்த பதிவு?சூரியன் 134 16/10ல் பிறகு 135 இப்போ.
எந்த பதிவுனா எனக்குப் புரியல்லே //

டெய்லி ஒரு பதிவு என் உள்ளத்திலிருந்துன்னு போடறனே நீங்க பாக்கலையா?

சரி போட்டும்.. நாளைலருந்து பாருங்க..

அப்புறம் ஒங்க முந்தைய பின்னூட்டம் என்ன பண்ணாலும் பப்ளிஷ் ஆகமாட்டேங்குது. ஏதாச்சும் பாம் வச்சிருக்கீங்களோ?

அப்புறம் அந்த பேர் குழப்பம்.. அது ரம்யாதான்.. நளினி இல்லை..

இதுக்குத்தான் இத்தன பாத்திரங்கள வச்சிக்கக்கூடாதுங்கறது.. சொன்னா கேட்டாத்தானே..

ஜெயஸ்ரீ said...

ரொம்ப நாள் காக்க வெச்சிட்டீங்களே ...