8.11.06

சூரியன் 139

மாணிக்கவேல் ஒரே நாளில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்த வந்தனாவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

எத்தனை கம்பீரமாக அலுவலகத்தில் வலம் வருபவர் மேடம் என்ற நினைப்புடன் படுக்கையில் ஆயாசத்துடன் கண்களை மூடியவாறு படுத்திருந்த மெலிந்த உருவத்தைப் பார்த்த மாணிக்கத்தின் கண்கள் அவரையுமறியாமல் பனித்தன.

‘மேடம் கொஞ்ச நேரம் முன்னால வரைக்கும் பேசிக்கிட்டுத்தான் இருந்தாங்க மாணிக்கம் சார்.. நாந்தான் பேசினது போதும் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னேன்.. லேசா கண்ணெ மூடுனவங்கதான் அப்படியே தூங்கிட்டாங்க.. வேணும்னா எழுப்பலாம்..’ என்ற நளினியை பார்த்தார். வேண்டாம் என்று தலையை அசைத்தார்.

‘எம் பொண்ணு கமலியும் மேடமும் பயங்கர க்ளோஸ்.. அதான் அவளோட திடீர் மரணத்த இவங்களால தாங்கிக்க முடியல.. ஆனா நீங்களும் நந்து சாரும் வந்தது ரொம்ப நல்லதா போச்சின்னு நினைக்கேன்..’

நளினி புன்னகையுடன் அவரைப் பார்த்தாள். ‘உண்மைதான் சார்.. மேடம் சிக்குன்னு கேள்விப்பட்டதுமே எனக்கும் நந்துவோட கெளம்பி வரணும்னு தோனிச்சி.. நாங்க சரியான நேரத்துல ஹாஸ்பிட்டலுக்கு போனதால வீட்டுக்கு அனுப்ப முடியாதுன்னு சொன்ன டாக்டர கன்வின்ஸ் பண்ணி கொண்டு வர முடிஞ்சது. ஹாஸ்ப்பிட்டல்லருந்து வந்ததுமே மேடத்துக்கு தைரியம் வந்திருச்சின்னு நினைக்கேன்.. முகத்துல மறுபடியும் பழைய களை வந்திருச்சி.. இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா I think she will be back to normal.. அதுவரைக்கும் நானும் நந்துவும் கூடவே இருக்கறதா ப்ளான்..’

மாணிக்கம் உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்தவாறு எழுந்து நின்றார். ‘ஓக்கே நளினி.. நா கெளம்பறேன்.. மேடம் எழுந்தா நா வந்துபோனேன்னு சொல்லுங்க.. மேடம் என்னவோ எங்கிட்ட பேசணும்னு வந்து வேண்டாம்னு ஃபோன வச்சிட்டதாலத்தான் நா வந்தேன்.. அங்க சந்தோஷ் மட்டுந்தான் இருக்கான்.. அதனால நா இப்பவே கெளம்புனாத்தான்..’

நளினி பரபரப்புடன் எழுந்து நின்றாள்.. ‘சார் நீங்க வந்ததும் எதாச்சும் குடிக்க குடுக்கணும்னு எழுந்தேன்.. பேச்சு வாக்குல மறந்தே போய்ட்டேன்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரேயொரு நிமிஷம்.. இதோ வந்துடறேன்..’

மாணிக்கம் தடுத்து நிறுத்தியும் கேட்காமல் நளினி சமையலறைக்குள் சென்று மறைய வாசலில் அழைப்பு மணி அடித்த ஓசை கேட்டது.

‘சார், கொஞ்சம் யாருன்னு பாருங்களேன்.. நந்துவாத்தான் இருக்கும்’ என்ற நளினியின் வேண்டுகோளுக்கு பணிந்து மாணிக்கவேல் கதவைத் திறந்தார். நளினியின் கணவன் நந்தகுமார் கையில் பெட்டியுடன் நிற்க மாணிக்கவேல் புன்னகையுடன், ‘வாங்க சார்..’ என்றவாறு வரவேற்றார்.

நந்தக்குமாருடைய முகத்தில் அவரை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை என்ற வியப்பு தெளிவாகவே தெரிந்தது. வீட்டிற்குள் நுழைந்து கையிலிருந்த பெட்டிகளை தரையில் வைத்துவிட்டு அவரைப் பார்த்தான்.

‘என்ன சார்.. இங்க ஒங்கள எதிர்பார்க்கவேயில்லை.. மேடத்த பார்த்துட்டு போலாம்னு வந்தீங்களா? ஒங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்புலயும் நீங்க மத்தவங்களப் பத்தி நினைக்கணும்னா.. You are really great Sir..’

மாணிக்கவேல் புன்னகையுடன் அவனுடைய தோள்களில் கையை வைத்தார். ‘இழப்பு எல்லாருக்கும் ஏற்படறதுதானே நந்து சார்.. அதனால பாதிக்கப்பட்டவங்கள்ல மேடமும் ஒருத்தராச்சே.. எப்படி கவலைப்படாம இருக்க முடியும், சொல்லுங்க.’

சமையலறையிலிருந்து கையில் பழச்சாற்றுடன் வெளி வந்த நளினியின் பார்வை கட்டிலில் படுத்திருந்த வந்தனாவின் மீது படிந்தது. ‘சார் மேடம் முளிச்சிட்டாங்க..’ என்றாள் உடனே..

மாணிக்கவேலும், நந்தகுமாரும் வந்தனா படுத்திருந்த இடத்தைப் பார்த்தனர்.. வந்தனா மெல்லிய புன்னகையுடன் மாணிக்கவேலைப் பார்த்தார்.

‘என்ன மாணிக்கம் எப்ப வந்தே.. ஏன் என்னெ எழுப்பல?’

மாணிக்கவேல் அவர் படுத்திருந்த கட்டிலை நெருங்கி இருக்கையில் அமர்ந்தார். ‘நீங்க நல்லா தூங்கிக்கிட்டிருந்தா மாதிரி இருந்தது மேடம். டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னுதான்..’

வந்தனா நளினியை நோக்கி தன் கைகளை நீட்ட நளினி கையிலிருந்த பழச்சாற்றை அருகிலிருந்த குறு மேசையைல் வைத்துவிட்டு அவரை கைத்தாங்கலாகப் பிடித்து எழுப்பி அமர்த்தினாள்.

நந்தக்குமாரும் நளினியும் அடுத்திருந்த படுக்கையறையை நோக்கி நகர மாணிக்கவேல், ‘எப்படி இருக்கீங்க மேடம்.. நீங்க சட்டுன்னு மயக்கம் போட்டு விழுந்ததும் எனக்கு மொதல்ல என்ன பண்றதுன்னே தெரியலை.. நல்லவேளையா ஜோ அந்த நேரம் பார்த்து வந்தார்..’ என்றார் தங்கத்துடன்..

‘உண்மைதான் ஜோ.. தங்கமான பையன்.. You must be really lucky to have him as your assistant.. Nice boy..’

மாணிக்கவேல் ஆமாம் என்று தலையை அசைத்துவிட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தார்.

‘என்ன யோசிக்கே மாணிக்கம்?’

மாணிக்கவேல் தயக்கத்துடன் வந்தனாவைப் பார்த்தார்.. ‘நீங்க கடைசியா ஃபோன்ல எதையோ சொல்ல வந்துட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொன்னீங்களே..?’

வந்தனா பதிலளிக்காமல் நளினி சென்ற படுக்கையறையைப் பார்த்தார். பிறகு, ‘அது... இப்ப வேணாமே மாணிக்கம்.. நீ இப்ப இருக்கற மனநிலையில..’ என்று தயங்க..

‘எதுவாருந்தாலும் கேளுங்க மேடம்..’ என்றார் மாணிக்கவேல்..

வந்தனா மவுனமாய் மாணிக்கவேலை பார்த்தார்.

‘ராணி எப்படி இருக்கா? என் மேல இன்னமும் கோபமாத்தான் இருக்காளா?’

‘இதத்தான் நீங்க கேக்க வந்தீங்களா மேடம்... இல்ல...?’

இல்லை என்று தலையை அசைத்தார் வந்தனா.. ‘அது இருக்கட்டும்.. சொல்லு.. ராணி இப்பவும் எம்மேல கோபமாத்தான் இருக்காளா?’

‘அவ கெடக்கறா மேடம்.. அவ கொணம் நாய் வால் மாதிரி.. எந்த நேரத்துல என்ன செய்வா, எப்படி பேசுவான்னு யாராலயும் பிரடிக்ட் பண்ண முடியாது.. அதுக்கும் நீங்க கேக்க நினைச்சதுக்கும் என்ன சம்பந்தம்.. புரியல மேடம்..’

வந்தனா ஆயாசத்துடன் கண்களை மூடினார். சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, ‘இருக்கு மாணிக்கம்..’ என்றார்.

மாணிக்கவேல் வியப்புடன் வந்தனாவைப் பார்த்தார். ‘அப்படியா? அப்படி என்ன கேக்கப் போறீங்க?’

‘ஒன்னெ கொஞ்ச நாளைக்கு சென்னையிலருந்து மாத்தலாமான்னு பாக்கேன்.. ஒனக்கும் கொஞ்ச நாளைக்கு அந்த வீட்ட விட்டு மாறி இருந்தா கமலியோட நெனப்பு போகும் இல்லையா?’

மாணிக்கவேல் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லையென்பதை அவருடைய முகம் போன போக்கிலிருந்து வந்தனாவால் உணரமுடிந்தது.

‘என்ன சொல்றீங்க மேடம்..? அப்பா படுத்த படுக்கையா கெடக்கற இந்த நேரத்துல.. கமலியோட திடீர் மரணம் எனக்கு ஒரு பெரிய இழப்புதான்.. ஆனா அது முடிஞ்சிப் போன கதை.. முடியுதோ முடியலையோ தாங்கிக்கிட்டுத்தான் ஆகணும்.. ஆனா அப்பாவோட நிலமை அப்படியில்லை மேடம்.. அவருக்காக நான் இங்க இருந்துதான் ஆகணும்.. அதனால...’

வந்தனா சரி என்பதுபோல் தலையை அசைத்தார். ‘எனக்கு தெரியும் மாணிக்கம்.. அதான் அப்புறமா பாத்துக்கலாம்னு ஃபோன்ல சொன்னேன்..’

மாணிக்கவேலுக்கு வந்தனா தன்னிடமிருந்து எதையோ மறைப்பதுபோல் தோன்றவே ‘நான் ஒன்னு கேக்கட்டுமா மேடம்..?’ என்றார் தயக்கத்துடன்..

வந்தனா கண்களை மெள்ள திறந்து அவரைப் பார்த்தார். ‘என்ன? சொல்லு..’

‘ஒங்களுக்கு என் நிலமை நல்லா தெரிஞ்சும் இப்படியொரு யோசனைய சொல்றதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணும்.. அத தெரிஞ்சிக்கதான் கேக்கேன்.. சொல்லுங்க.. என்ன காரணம்?’

வந்தனா இல்லையென்று தலையை அசைத்தார்.. பிறகு நளினி இருந்த அறையை நோக்கி கண்களால் சாடை காட்டியவாறு ‘பெரிசா ஒன்னுமில்ல மாணிக்கம்.. நளினியும் நந்துவும் கொஞ்ச நாளைக்கு சென்னையிலருந்து டாக்டர யாரையாச்சும் கன்ஸல்ட் பண்ணா குழந்தை பிறக்குமான்னு ஒரு ஐடியா.. அதான் உன்னெ அவளோட பிராஞ்சுக்கும் அவள ஒன்னோட பிராஞ்சுக்கும் ம்யூச்சுவலா டிரான்ஸ்ஃபர் பண்லாமான்னு ஒரு யோசனை.. ஒனக்கு அப்பாவ விட்டுட்டு போமுடியாதுன்னு தெரியும்.. அதான் ராணிக்கு ஆட்சேபனையில்லன்னா நா அப்பாவ இங்க கொண்டு வந்து வச்சி பாத்துக்கலாமேன்னு.. யோசிச்சேன்.. ஆனா அது சரி வராதுன்னு அப்புறமா தோனிச்சி.. சரி.. அப்புறமா வேற ஏதாச்சும் செஞ்சிக்கலாம்னு..’

மாணிக்கவேல் மவுனமாக யோசித்தார்.. அவருக்கும் இந்த யோசனை ஒருவகையில் பிடித்திருந்தது.. அப்பாவ ஏன் நம்மளோடயே கூப்ட்டுக்கிட்டு போயிரக்கூடாது? சந்தோஷ் ராணியோட இருக்கட்டும்.. இப்பவும் நாள் முழுக்க அப்பாவ ராணிய நம்பி விட்டுட்டு போகணுமே.. வேலைக்கு வர்ற நர்ஸ எந்த அளவுக்கு நம்ப முடியும்? அதுவும் ராணி வீட்டுல இருக்கறப்ப?

கேரளாவுக்கு கொண்டுபோய் ஏதாச்சும் நாட்டு வைத்தியமும் பாக்கலாமே.. அங்க யாராச்சும் நர்ஸ் கிடைக்காமயா போயிருவா? ஏன் நாம முயற்சி செஞ்சி பாக்கக் கூடாது?

‘நான் ரெடி மேடம்.. அப்பாவையும் கூடவே கூட்டிக்கிட்டு போயிடறேன்.. நீங்க சொன்னா மாதிரி அப்பாவுக்கும் இந்த சேஞ்ச் ஒருவேளை ஆறுதலாருக்கலாமில்லையா?’ என்றார் தன்னையுமறியாமல்..

இதை எதிர்பார்க்காத வந்தனா திடுக்கிட்டு கட்டிலில் இருந்து எழ முயன்று.. முடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழ மாணிக்கவேல் பதறிப் போய் நளினையை அழைத்தார்..

அடுத்த அறையில் இருந்த நளினி ஓடிவந்து வந்தனாவை அணைத்து எழுப்பி அமரச் செய்தாள்..

வந்தனா ஆயாசத்துடன் மாணிக்கவேலைப் பார்த்தார். ‘நல்லா யோசிச்சிதான் சொல்றியா?’

‘ஆமாம் மேடம்.. இது கடவுள் ஒங்க வழியா எனக்கு காட்டற வழின்னு நினைக்கேன்.. எனக்கு ஒரு மாசம் டைம் குடுங்க.. அதுக்குள்ள இங்கருக்கற சில பர்சனல் வேலையை எல்லாம் முடிச்சிக்கறேன்..’

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு வந்தனா சரி என்று தலையை அசைக்க மாணிக்கவேல் எழுந்து நின்றார்..

அவர் புறப்படுவதை உணர்ந்த நளினி நந்தக்குமாரை அழைக்க மாணிக்கவேல் விடைபெற்று கிளம்பினார்..

தகுந்த சமயத்தில் வந்தனா மூலம் தனக்கு ராணியிடமிருந்து கிடைக்கவிருந்த விடுதலையை எண்ணியவாறே வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினார்..

ஆனால் கடவுள் வேறொன்றையல்லவா நினைத்திருந்தார்!

தொடரும்..

12 comments:

dondu(#11168674346665545885) said...

"ஆனால் கடவுள் வேறொன்றையல்லவா நினைத்திருந்தார்!"
வந்தனா மேடத்தையே ட்ரான்ஸ்ஃபர் பண்ணதைத்தானே கூறுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன் சார்,

வந்தனா மேடத்தையே ட்ரான்ஸ்ஃபர் பண்ணதைத்தானே கூறுகிறீர்கள்?//

இல்லைன்னு மட்டும் சொன்னா போறுமா:)

siva gnanamji(#18100882083107547329) said...

ப்ரொபஷனல் ரைட்டர் ஆய்ட்டீங்க
ஒவ்வொரு பதிவு முடிவிலும் சஸ்பென்ஸ்
ஆனாலும் 'இன்னிக்கு சூரியன் வருமா இல்லெ வராதா' னு யோசிக்க வைக்கிறீங்களே...அதான் பெரிய
சஸ்பென்ஸ்

siva gnanamji(#18100882083107547329) said...

என்ன, வந்தனா மேடத்திற்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் இஷ்யூ செஞ்சீட்டது மாதிரியே பேசறீங்க!
நாடார் விட்டுடுவாரா?

krishjapan said...

டோண்டு சாருக்கான மறுமொழியில் சிரிப்பானா..அழுவானில்லை போட்டிருக்க வேண்டும்...ஓ, அது தொலைநோக்கும்போது,,,சரிதானோ...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ப்ரொபஷனல் ரைட்டர் ஆய்ட்டீங்க//

அட! அப்படியா?

ஒவ்வொரு பதிவு முடிவிலும் சஸ்பென்ஸ்//

ஓ! இத சொல்றீங்களா?

ஆனாலும் 'இன்னிக்கு சூரியன் வருமா இல்லெ வராதா' னு யோசிக்க வைக்கிறீங்களே...அதான் பெரிய
சஸ்பென்ஸ் //

அதென்னவோ சரிதான்.. மழைக்காலத்துல சூரியன் வர்றது டவுட்டுதான சார்:)

டிபிஆர்.ஜோசப் said...

என்ன, வந்தனா மேடத்திற்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் இஷ்யூ செஞ்சீட்டது மாதிரியே பேசறீங்க!
நாடார் விட்டுடுவாரா? //

இந்த கேள்வி யாருக்கு ஜி! எனக்கா இல்ல ராகவன் சாருக்கா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

டோண்டு சாருக்கான மறுமொழியில் சிரிப்பானா..அழுவானில்லை போட்டிருக்க வேண்டும்...//

யார்.. நா அழுவறா மாதிரியா?

ஓ, அது தொலைநோக்கும்போது,,,சரிதானோ...//

இதான் புரியலை.. அப்படின்னா?

dondu(#11168674346665545885) said...

இல்லைன்னு மட்டும் சொன்னா போறுமா:)

இப்போதைக்கு போதும், ஏன்னாக்க இந்த ட்ரான்ஸ்ஃபர் ஒரு அழுகிணி ஆட்டமாகப் பார்க்கிறேன். மேடம் செயலற்று கிடந்தபோது அது செய்தது எனக்கு பொறுக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

இப்போதைக்கு போதும், ஏன்னாக்க இந்த ட்ரான்ஸ்ஃபர் ஒரு அழுகிணி ஆட்டமாகப் பார்க்கிறேன். மேடம் செயலற்று கிடந்தபோது அது செய்தது எனக்கு பொறுக்கவில்லை.//

இத அழுகிணி ஆட்டம்னு சொல்றதவிட சந்தர்ப்பவாதம்னு சொல்லலாம்..

இது ரொம்ப சகஜமா நடக்கக்கூடிய விஷயம்..

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு கேட்டிருப்பீர்களே அந்த ரகம்..

எனக்கெல்லாம் இந்த மாதிரி விஷயங்கள நிறையவே பார்த்திருக்கறதால பழகிப்போயிருச்சி.. இதனால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் கூட ஒருத்தந்தான்..

அதனாலதான் இப்படியொரு சம்பவத்த இங்க எழுதணுங்கற ஐடியாவே வந்தது..

இந்த இஷ்யூ இன்னமும் கூட சிக்கலாகப் போவுது.. பொறுத்திருந்து பாருங்க..

siva gnanamji(#18100882083107547329) said...

her transfer was discussed and tentatively finalised.Neither Vanthanaa nor her substitute were issued transfer orders...
there are many a slips between the cup and lips
i dont think Naadar will allow this order to be materialised

டிபிஆர்.ஜோசப் said...

her transfer was discussed and tentatively finalised.Neither Vanthanaa nor her substitute were issued transfer orders...//

என்ன ஜி! இது ஏதோ எங்க எச்.ஆர் கமிட்டி ரிப்போர்ட் மாதிரி இருக்கு?

என்னமோ நீங்க சொன்னா சரிதான்..

நாடார் ஒத்துக்குவாராங்கறது ஒரு கேள்விக்குறிதான்.. ஆனா அவருக்கு ஏதும் லாபம் இருந்தா யார் எங்க போனா நமக்கென்னன்னு இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாதில்லையா?