ரவி தயாரித்து வைத்திருந்த அறிக்கையை வழக்கறிஞர் நாராயணசாமி படித்து முடிக்கும்வரை அமைதியாக அவருடைய வீட்டு அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் ரவி.
மஞ்சுவும் நாராயணசாமியின் மனைவியும் சமையலறையில் இரவு சமையலில் ஈடுபட்டிருக்க வீடே அமைதியாக இருந்தது.
ரவி தன்னெதிரில் அறிக்கையை வாசிப்பதில் கவனமாயிருந்த வழக்கறிஞரையே பார்த்தான்.
தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருப்பவைதான் தன்னுடைய வாழ்க்கையின் போக்கையே தீர்மானிக்கவிருக்கின்றன என்பதை அவன் அறிந்திருந்தான்.
நாராயணசாமியின் வாதத்திறமை வேண்டுமானால் அவனுக்கு கிடைக்கவிருந்த தண்டனையின் தீவிரத்தைக் குறைக்கலாம். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து முழுவதுமாக விடுபட முடியுமா என்பது சந்தேகமே என்றும் அவன் அறிந்திருந்தான்.
அறிக்கையைப் படித்து முடித்து தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசையின் மீது வைத்துவிட்டு வலப்புறம் இருந்த ஜன்னல் வழியே தெரிந்த கருநீல வானத்தைப் பார்த்தார் நாராயணசாமி.
அமாவாசை இரவு. வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட தெரியாமல் முழுவதும் கருநீலமாக இருந்தது..
ரவியும் வாழ்க்கையைப் போல என்று ஒரு நொடி தனக்குள் நினைத்துக்கொண்டார்..
ரவியின் புத்திச் சாதுர்யம் அவன் தயாரித்திருந்த அறிக்கையில் தெளிவாக தெரிந்ததை எண்ணிப் பார்த்தார். இத்தனை திறமையுள்ள மனுஷன் இந்த நேரம் எங்கயோ போயிருக்கணுமே..
கொள்கையற்ற பார்வை, செயல்பாடு, தேவையற்ற சிந்தனைகள்.. இவைதான் இவனுடைய இன்றைய நிலைக்குக் காரணம் என்பது அவருக்கு விளங்கியது.
But he deserves one more chance.. At least to correct himself if not to get the recognition for what he has achieved so far.. till he landed himself in this mess..
ஜன்னலிலிருந்து தன்னுடைய பார்வையை ரவியை நோக்கி திருப்பினார். ‘ரொம்ப அருமையா.. கோர்வையா எழுதியிருக்கீங்க ரவி.. It is really good.. ஒரு நல்ல வக்கீலா ஷைன் பண்ணியிருக்கலாம் நீங்க..’ என்றார் புன்னகையுடன்.
ரவி சங்கடத்துடன் நெளிந்தான். ‘தாங்ஸ் சார்.. ஆனா..’
‘இதுவே ஒங்கள இந்த விசாரனையிலிருந்து விடுவிச்சிருமான்னு கேக்கறீங்க?’
ரவி ஆம் என்று தலையை அசைத்தான்.
நாராயணசாமி தனக்கு இடப் புறத்தில் மேசையின் மீதிருந்த கோப்பைத் திறந்து சில நொடிகள் அவற்றில் இருந்தவற்றை ராய்ந்தார்.
அவர் விரும்பியது கிடைத்ததும் அதன் மீது இரு கைகளையும் வைத்தவாறு ரவியைப் பார்த்தார்.
‘இந்த குற்ற அறிக்கையை மறுபடியும் ஒவ்வொன்னா பாக்கலாமா ரவி?’
‘சரி சார்’
நாராயணசாமி கோப்பிலிருந்த குற்ற அறிக்கையிலிருந்ததை உரக்க வாசித்தார்.
1. நீங்கள் --------- நிறுவனத்திற்கு கீழ்காணும் கடன்களை வழங்கியிருக்கிறீர்கள்.
அ) நிலப்பத்திரத்திற்கு எதிராக நீண்டக் காலக் கடன்: ரூ.20 லட்சம்
ஆ) இயந்திரங்கள் வாங்க நீண்டக் காலக் கடன்: ரூ.15 லட்சம்
இ) நிறுவனத்தின் அன்றாட தேவைக்கான ஓவர்டிராஃப்ட்: ரூ.10 லட்சம்.
இதில் காணப்பட்டுள்ள குறைபாடுகள்:
அ) இவை யாவுமே உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறியவை
ஆ) நிறுவனம் துவங்கப்படுவதற்கு முன்பே, அதாவது தொழிற்சாலை எழுப்பப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இயந்திரங்களை வாங்குவதற்கும், தொழிற்சாலையின் அன்றாட தேவைக்கான ஓவர்டிராஃப்ட்டையும் வழங்கியிருக்கிறீர்கள்.
இ) கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டிருக்கும் நிலப்பத்திரங்கள் ஃபோர்ஜரி என்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களில் உங்களுடைய செயல்பாடுகள் தலைமையகம் விதித்திருந்த நியதிகளுக்கு புறம்பாக இருந்துள்ளது:
அ) இறக்குமதி செய்த பொருட்களுக்கான Airway Billsகளை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை வசூலிக்காமலே ரிலீஸ் செய்திருக்கிறீர்கள்.
ஆ) ஏற்றுமதிக்கென கொடுக்கப்பட்டிருந்த Packing Credit கடன்களை சரியான ஏற்றுமதி உத்தரவுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறாமலே வழங்கியிருக்கிறீர்கள்.
இ) அத்தகைய வாடிக்கையாளர்கள் ஒரு வருட காலத்திற்குள் ஏற்றுமதி செய்யாமலிருந்தபோதும் வேறொரு கடனிலிருந்து வழங்கப்பட்டிருந்த தொகையை உபயோகித்து காலாவதியான கடன்களை வசூலித்திருக்கிறீர்கள்.
இதன் மூலம் வங்கிக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.00 கோடி.
3. பல கடன்களிலும் தலைமையகமும் உங்களுடைய வட்டார அலுவலகமும் அனுமதித்திருந்த அதிகபட்ச தொகைக்கும் கூடுதலான தொகையை மேலதிகாரிகளுடைய அனுமதியின்றி வழங்கியிருக்கிறீர்கள்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உங்களுடைய தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லை. ஆகவே உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமையகம் தீர்மானித்து ----- வங்கி அதிகாரிகளின் சர்வீஸ் நியதி 2(1அ)வின் படி மேற்கூறிய குற்றச்சாட்டுகளின் மீது பாரபட்சமற்ற விசாரனையை வரும் நவம்பர் மாதம் --- தேதி நம்முடைய சென்னை ------ கிளையில் துவங்கி விசாரனை முடியும் வரை நடக்கவிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் நீங்கள் பங்குபெறாமலிருக்கும் பட்சத்தில் வங்கியின் சார்பில் தன்னிச்சையான முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்..
நாராயணசாமி படித்து முடித்துவிட்டு நிமிர்ந்து ரவியைப் பார்த்தார்.
‘இனி இந்த மூனு அலிகேஷனுக்கும் நீங்களும் மஞ்சுவும் பேங்க்லருந்து கலெக்ட் பண்ணியிருக்கற எக்ஸிபிட்ச பாக்கலாம்னு நெனக்கேன்.. ஆர் யூ ரெடி ரவி?’
‘Yes Sir.. எல்லாத்தையும் அதே ர்டர்ல அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கோம்..’ என்றவாறு கையோடு கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவரிடம் கொடுக்க அடுத்த இரண்டு மணி நேரங்கள் இருவரும் அதில் ஆழ்ந்து போயினர்.
*****
சேதுமாதவனின் நண்பரும் சட்ட ஆலோசகருமான விஷ்வன்
எனப்படும் விஸ்வநாதன் வந்துசேர சற்று தாமதமாகவே இடைப்பட்ட நேரத்தில் இரண்டு, மூன்று பெக்குகளை Rawவாகவே உள்ளே தள்ளியிருந்த சேது பொறுமையிழந்து தன் முன்னர் போலி பவ்யத்துடன் நின்றிருந்த திருநாவுக்கரசைப் பார்த்தார்.
‘எந்தாடா திரு இது.. விஷ்வன் சார காணுநில்லல்லோ.. தான் ஒடன் விளிச்சி பறஞ்சில்லே..?’
‘ஆமா சார்.. நீங்க ஃபோன் செஞ்சதுமே ஃபோன் பண்ணி சொல்லிட்டேங்க..’
‘எந்து ஃபோன் செஞ்சி? வெறதே பறயாதே.. ஷரி.. அது போட்டே.. பப்பன் எவ்விட போயி? அயாள விளிச்ச்ச்ச்ச்ச்சில்லே தான்?’
திரு எரிச்சலுடன் அவரைப் பார்த்தான்.. மூனுதான் உள்ள போயிருக்கு.. அதுக்குள்ள நா கொளறுது.. நடுராத்திரிக்குள்ள என்ன ஆவுமோ.. ‘கூப்ட்டு சொல்லியாச்சி சார்.. அந்தாளு எங்கயோ ஆவடி வரைக்கும் போயிருக்காராம்.. வர்றதுக்கு கொஞ்ச நேரமாவும்னு சொன்னார்..’
‘எல்லாருக்கும்.. அவரவர் ஜோலி.. ஷரி.. அது போட்டே.. மாயா வந்நோ..?’
‘மேடம் வந்துட்டாங்க.. கீழே அவங்க ரூம்ல இருக்காங்க..’
‘திரு.. நான் வந்நுன்னு சேதுவிடத்து பறயேண்டா கேட்டோ.. எனிக்கி கொறச்செ பெர்சனல் ஃபோன் ச்செய்யானுண்டு.. அது சேதுவிண்டெ மும்பிலெ வச்சி செய்யான் பற்றில்லா.. அது கொண்டு...’ என்று திருநாவுக்கரசுவிடம் கூறிவிட்டுத்தான் தன் அறைக்குள் சென்றிருந்தாள் மாயா.. ஆயினும் அவள் வீட்டிலிருக்கும்போது தான் அவள் வீட்டிலில்லை என்று சேதுமாதவனிடம் கூறி.. பிறகு அது உண்மையல்ல என்று தெரிந்தால் அவருடைய வசுவுகளைக் காது கொடுத்து கேட்க முடியாது என்பதும் அவனுக்கு தெரியும்..
‘ரூம்ல அவளெந்தா செய்யினெ.. இவ்விட வறாம் பறயி..’ என்றார் சேதுமாதவன் அடுத்த பெக்கை உள்ளே தள்ளிக்கொண்டே..
திருநாவுக்கரசு, ‘சரி சார்..’ என்றவாறு கீழே இறங்கிச் செல்லவும் வாசற் கதவைத் திறந்துக்கொண்டு பத்மநாபன் உள்ளே நுழையவும் சரியாயிருந்தது.
ஆயினும் ‘சார்.. மோள்லெ உண்டோ..?’ என்ற அவனுடைய கேள்விக்கு மாடியை நோக்கி விரலை மட்டும் காட்டிவிட்டு சமையல்கட்டை நோக்கி நடந்தான் திரு..
பத்மநாபனைப் போன்ற ஆட்களுடைய சவகாசம்தான் தன்னுடைய முதலாயின் இந்த இழி நிலைக்குக் காரணம் என்று நினைத்தான் அவன்..
வாசற்கதவு திறக்கப்படுவதையும் கீழே பத்மநாபன் கேட்ட கேள்வியையும் செவியுற்ற சேதுமாதவன் சோபாவிலிருந்து எழ முயன்று முடியாமல் அப்படியே அமர்ந்து அவன் வரும்வரைக் காத்திருந்தார்.
‘சாரி சார்.. கொறச்சே லேட்டாயி..’ என்று பின்னந்தலையைச் சொறிந்தவாறு வந்து நின்ற பத்மநாபனைப் பார்த்ததும் சீறிக்கொண்டு வந்த கோபத்தை அடக்க முடியாமல் பிரசுரிக்க இயலாத வார்த்தைகளால் அவனை அர்ச்சித்தார் சேதுமாதவன்.
பத்மநாபன் இத்தகைய வார்த்தைகளை அவர் வாயால் பல முறைக் கேட்டிருந்ததால் ஒரு அசட்டுப் புன்னகையுடன் நின்றிருந்தான் மனதுக்குள் அதே வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தவாறு..
தொடரும்..
8 comments:
//மனதுக்குள் அதே வார்த்தைகளால்
அவரை அர்ச்சித்தவாறு//
verygood mindreading...
வாங்க ஜி!
verygood mindreading...
//
பாலசந்தர் படத்துல ஒரு சீன். முதலாளிகிட்ட மேனேஜர் லீவு கேப்பார்.
பணிவுடன்: சார் ஒரு அரை நாள் லீவு வேணும்..
மனதுக்குள்: டேய்.. இன்னைக்கி லீவு வேணும்..
முதலாளி: எதுக்கு?
பணிவுடன்: சார் ஒரு சின்ன வேலை..
மனதுக்குள்: டேய்.. லீவு கேட்டா குடுறா.. என்னமோ கேள்வியெல்லாம் கேக்கறே?
இதுமாதிரி நம்முடைய நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுதானே.
சேதுக்கிட்ட அதிகாரம் இருக்கு, பணம் இருக்கு வெளிப்படையா திட்டறார்.. பத்மன் கிட்ட அதுஇல்ல.. அதுக்காக திட்டாம இருக்க முடியுமா? அதான் மனசுக்குள்ள திட்டி தீர்த்துக்குறார்..
என்ன சொல்றீங்க.. நீங்களும் சாரி நாமளூம், மாணவப் பருவத்துல அப்படி செஞ்சவங்கதானே..:)
//..மாணவப் பருவத்திலே..//
அப்படீனா இப்ப இல்லேங்கறீங்களா?
//..மாணவப் பருவத்திலே..//
அப்படீனா இப்ப இல்லேங்கறீங்களா? //
ஓ! அதுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கில்லே..
இப்பவும் அப்படித்தான்னு பிலிப் சுந்தரம், நாடார் கிட்ட பேசறப்போ அடிக்கடி முனகுறதுலருந்தே தெரியுதே..
நாம மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன?
ஜோசப் சார்...நடுவுல கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல இந்தக் கதைய விட்டுட்டேன். இனிமே தொடர்ந்து படிக்கிறேன். :-)
வாங்க ராகவன்,
நடுவுல கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல இந்தக் கதைய விட்டுட்டேன். இனிமே தொடர்ந்து படிக்கிறேன்.//
அப்படியா? சந்தோஷம்.. உங்க கருத்து ரொம்பவும் உதவியா இருக்கும்..
ஆர்க்கைவ்ஸ் சேர்ச்சும் குடுத்துருக்கேன்.. படிக்க வசதியா இருக்கும்..
என்ன சார், நேயர் விருப்பம் மாதிரி ரவிய பத்தி கேட்டதும் ரவி வந்து விட்டார். மிக்க நன்றி.
வாங்க அருண்மொழி,
என்ன சார், நேயர் விருப்பம் மாதிரி ரவிய பத்தி கேட்டதும் ரவி வந்து விட்டார்.//
ஏற்கனவே புதன் கிழமை போடறதுக்கு எழுதி வச்சிருந்தேன். ஒங்க ரிக்வெஸ்ட் வந்ததும் எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்திச்சி.. டெலிபதியோ என்னவோ..
Post a Comment