தன்னுடைய அறைக்கு திரும்பிய ஃபிலிப் சுந்தரம் வாயிலில் ஜோ பதற்றத்துடன் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.
அட! இங்க இருக்கற பிரச்சினையில இவர மறந்தே போய்ட்டேனே? தூரத்திலிருந்து பார்த்தபோதே ஜோவின் முகம் களையிழந்து காணப்பட்டதைக் கவனித்தார். அவன் சென்ற காரியம் பலிதமாகவில்லை போலிருக்கிறது என்று நினைத்தவாறு அவனை நெருங்கி, ‘என்னாச்சி ஜோ.. அந்த எஸ்.ஐ ஏதாவது பிரச்சினை பண்றாரா?’ என்றார் ஆறுதலாக. ‘வாங்க.. உள்ள போயி பேசலாம். இங்க இருக்கற பிரச்சினையில ஒங்க விஷயம் மறந்தே போயிருச்சி. சொல்லுங்க.. என்ன நடந்தது?’
ஜோ அவர் தன்னுடைய இருக்கையில் அமரும்வரை காத்திருந்தான்.
அவன் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்த ஃபிலிப் சுந்தரம் புன்னகையுடன், ‘ஒக்காருங்க ஜோ.. You look terrible.. Sit down for a while..’ என்று தனக்கு முன்னாலிருந்த இருக்கைகளில் ஒன்றை சுட்டிக் காட்டினார்.
ஜோ இருக்கையில் அமர்ந்ததும் இண்டர்காம் வழியாக சுபோத்தை அழைத்தார் ஃபிலிப் சுந்தரம். ‘சுபோத் என் கேபினுக்கு உடனே வாங்க.’
‘நேத்து நம்ம சேர்மன பாக்க வந்த போலீஸ் ஆபீசர் என்ன ராங்க்ல இருக்கறவர்னு தெரிஞ்சிக்கிட்டா அவர் மூலமா ட்ரை பண்ணலாம்னு பாக்கேன். சேர்மன் திடிர்னு கிளம்பி மும்பை போய்ட்டார். திருப்பிவர எத்தன நாளாகும்னு தெரியல. சுபோத் வரட்டும் கேக்கலாம்.’
ஜோ சரி என்று தலையை அசைத்துவிட்டு மவுனமாய் அமர்ந்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் சுபோத் அறைக்குள் நுழைந்து ஜோவைப் பார்த்து சிநேகிதமாய் புன்னகைத்தான், ஜோவும் அவனும் பேட்ச் மேட்ஸ் என்பதால்..
‘சிட் டவுன் சுபோத். You must know Joe.. Am I right?’ என்றார் ஃபிலிப்.
‘Yes Sir.. We are from the same batch..’ என்றான் சுபோத் பணிவுடன். சற்று முன் சேதுமாதவன் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாய் கேட்டு பெற்ற சேர்மனின் நிரூபர் கூட்டத்திற்கான அறிக்கையைப் பற்றி கூறலாமா வேண்டாமா என்று சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான்.
‘மிஸ்டர் சுபோத்.. Yesterday evening some one from the Police Department came to meet our Chairman, no?’
எதற்கு இந்த கேள்வி என்பதுபோல் அவரைப் பார்த்தான் சுபோத். அதுவும் இதற்கு சம்பந்தமில்லாத ஜோ இருக்கும் நேரத்தில்!
‘Yes Sir.. His name is Dhanapal or something like that.. He is a SP Sir.’ என்றான் தயக்கத்துடன்.
‘I see..’ என்ற ஃபிலிப் சுந்தரம் தொடர்ந்து, ‘Do you have his contact number Subodh.. It should be there in his visiting card.. Could you please check up and tell me?’ என்று வினவ சுபோத் குழப்பத்துடன் இருவரையும் பார்த்தான்.
‘I did not keep it Sir.. I handed over the card he gave me to our Chairman.. I may have to check in his cabin.’
ஃபிலிப் சுந்தரம் யோசனையுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார். ‘Please Subodh.. நீங்க போய் சேர்மன் சாரோட கேபின செக் பண்ணிட்டு சொல்லுங்க.. I need those numbers urgently..’
சுபோத் எழுந்து வாசலை நோக்கி விரைந்தான்.
‘மிஸ்டர் மாணிக்கவேலுவோட மிசஸ்க்கு என்ன ஆச்சின்னு சொன்னீங்க?’
‘அந்த எஸ்.ஐ எதையுமே ஒழுங்கா சொல்ல மாட்டேங்கறார் சார். மேடம் ஜீப்லருந்து குதிச்சி ஒடனப்போ எதிர்ல வந்த பஸ்சுல அடிபட்டு கோமா ஸ்டேஜ்ல இருக்காங்களாம். ஆனா எந்த ஹாஸ்ப்பிட்டல்னு சொல்ல மாட்டேங்கறார். அவங்க இதுவரைக்கும் கம்ப்ளெய்ண்ட்னு எதுவும் குடுக்கலேன்னு மட்டும் தெரியுது.’
ஃபிலிப் சுந்தரம் அவன் பேசியதை நம்பாதவர்போல் அவனையே பார்த்தார். ‘என்ன சொல்றீங்க ஜோ? எதுக்கு அவங்க அந்த மாதிரி இறங்கி ஓடணும்?’
‘அதான் சார் தெரியல. மேடம் வெறும் விட்னெஸ் மட்டும்தான். அப்படியிருக்கறப்ப எதுக்கு தப்பிக்க நினைச்சாங்கன்னு வக்கீலும் கேக்கறார். இதுல ஏதோ இருக்குன்னு மிஸ்டர் சபரியும் ஃபீல் பண்றார் சார்.’ என்றான் ஜோ சலிப்புடன். ‘இதுல இன்னைக்கி மும்பையில நடந்த பாம்ப் ப்ளாஸ்ட்ட சாக்கா வச்சி சார ரிமாண்ட் பண்றதுக்கும் சான்ஸ் இருக்குன்னு சொல்றார் நம்ம லாயர். டிஎஸ்பி, எஸ்.பி லெவல்ல மூவ் பண்ணி சார இதுவரைக்கும் அரெஸ்ட் பண்லன்னா என்க்வயரிக்கு கூட்டிக்கிட்டு வந்ததா சொல்லி அவர திருப்பி அனுப்ப சொல்லி அந்த எஸ்.ஐ.க்கு ப்ரெஷர் குடுக்கலாம்னு சொல்றார். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன் சார்.’
ஃபிலிப் சுந்தரம் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தார். மாணிக்கவேலின் மீது எத்தனை பரிவும் பாசமும் இவருக்கு இருந்தால் இன்று நாள் முழுவதும் இதற்காக அலைந்திருப்பார். நாமும் எதையாவது செய்ய வேண்டும்.
அவருடைய இண்டர்காம் சினுங்கவே எடுத்தார். ‘என்ன சுபோத்.. கார்ட் கிடைச்சிதா?’
‘....’
‘இல்லையா? நல்லா பார்த்தீங்களா?’
‘.....’
‘சாருக்கா? நோ, நோ.. வேணாம்.. இந்த நேரத்துல அவர டிஸ்டர்ப் பண்ண வேணாம்..’ என்ற ஃபிலிப் சட்டென்று நினைவுக்கு வந்தவராய், ‘மிஸ்டர் சுபோத்... நம்ம ரிசப்ஷன்ல கூப்ட்டு அவர் அங்க ஏதாச்சும் கார்ட விட்டுட்டு போயிருக்காரான்னு கேளுங்க.. Some people do that.. Please find out.. பார்த்துட்டு உடனே என்னெ கூப்பிடுங்க..’
ஜோவுக்கு அவர் கூறாமலே விளங்கியது. எல்லாம் சாரோட நேரம்.. இல்லன்னா ஒரேயொரு வாரத்துல சாரோட மொத்த குடும்பமுமில்லே பாதிக்கப்பட்டிருக்கு.. முதல்ல கமலியோட எதிர்பாராத சாவு, அப்புறம் சாருக்கு உயிருக்குயிரா இருந்த அப்பாவோட கொலை.. அத பார்த்துட்டதால சந்தோஷ¤க்கு ஏற்பட்ட மனமுறிவு.. இப்போ மேடத்தோட ஆக்சிடெண்ட்.. வந்தா எல்லாம் ஒன்னாத்தான் வரும்போலருக்கு..
‘என்ன ஜோ யோசிக்கறீங்க?’
ஜோ நினைவுகளிலிருந்து மீண்டு அவரை நோக்கினான். ‘இல்ல சார்.. மாணிக்கம் சார் எனக்கு கூடப் பொறக்காத சகோதரன் மாதிரி எனக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிருக்காங்க.. எனக்கு மட்டுமில்ல சார்.. எங்க ப்ராஞ்சிலருக்கற எல்லாருக்குமே சார்னா கடவுள் மாதிரி சார்.. அவங்களுக்கு போயி இப்படியொரு நிலமையான்னு யோசிச்சேன்.. மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு சார்.’
ஜோ ஆதரவாய் புன்னகைத்தார். ‘Don’t worry Joe.. உங்களுக்குத்தான் தெரியுமே, கர்த்தருக்கு யார ரொம்ப இஷ்டமோ அவங்களத்தான் அதிகமா சோதிப்பார்னு.. பார்ப்போம்.. இவர் இல்லன்னா வேற யாரும் இல்லாமயா போயிருவாங்க? யாருமே கிடைக்கலைன்னா நேரா கமிஷனர் ஆஃபீசுக்கு போவோம்.. There will be somebody to help us out.. ஒரு கதவை அடைத்த கர்த்தரே இன்னொரு கதவைத் திறப்பார்னும் பைபிள்ல இருக்கே.. Don’t lose hope..’
அவர் பேசி முடிக்கும் முன்பே சுபோத் பரபரப்புடன் கையில் ஒரு சிறிய அட்டையுடன் அறைக்குள் நுழைந்து கையிலிருந்ததை அவரிடம் நீட்டினான். ‘You are right Sir.. He has left this with the receptionist.’
ஃபிலிப் சுந்தரம் புன்னகையுடன் ஜோவைப் பார்த்தார். ‘பாத்தீங்களா ஜோ.. நா சொல்லி வாய மூடலை.. வழி திறந்திருச்சி பாருங்க.. நீங்க இந்த கார்ட எடுத்துக்கிட்டு நேரா நம்ம வக்கீல கூட்டிக்கிட்டு போங்க.. நா ஃபோன்ல பேசி அவர் அறிமுகமில்லாதவராச்சேன்னு நினைச்சி நோன்னு சொல்லிட்டா அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது. நேரா போய் பார்த்து பேசறதுதான் நல்லது. நீங்க நம்ம சேர்மன் ஆஃபீஸ்லருந்துதான் இந்த கார்ட் கிடைச்சிதுன்னு சொல்லுங்க.. அவர் முடியாதுன்னு சொல்லிட்டா மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்.. நம்பிக்கையோட போங்க.. ஆல் தி பெஸ்ட்.’ என்றவாறு அவனிடம் அந்த அட்டையை நீட்ட ஜோ எழுந்து நன்றி கூறிவிட்டு விடைபெற்றான்.
***
மும்பை பெருநகர காவல்துறையின் டிஜிபி வின்செண்ட் ரெபேரோ கோவாவைச் சார்ந்த கத்தோலிக்கர். காவல்துறையில் அவருக்கு அளித்திருந்த் பிரம்மாண்டமான பங்களாவை மறுத்து தன்னுடைய வயது முதிர்ந்த தாயுடன் வசிக்கவேண்டுமென்பதற்காகவே புறநகர் செம்பூரில் காலங்காலமாக வசித்து வருபவர். கட்டை பிரம்மச்சாரி. பக்திமான். கண்டிப்பானவர். நேர்மையானவர். எந்த அரசியல்வாதியின் தயவும் இல்லாமல் டிஜிபி பதவிக்கு உயர்த்தப்பெற்றவர். ஆகவே எவருடைய சிபாரிசுக்கோ உத்தரவுக்கோ செவிகொடாமல் இதுவரை தன்னுடைய பதவிக்கு கவுரவத்தை ஏற்படுத்தியவர்.
அவர் பதவியிர்லிருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் அவருக்கு சவாலாக அமைந்தன அன்றைய குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள். முதன் முதலில் வயர்லெஸ் மூலமாக அதைக் குறித்து கேள்விப்பட்டதுமே அவர் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தரிசிக்கும் அன்னை மேரியை மனதில் நினைத்துக்கொண்டு.. Help me to solve this case within 24 hours Mother.. என்று மனதிற்குள் பிரார்த்திக்கொண்டு தன்னுடைய துணை அதிகாரிகளுக்கு இட்ட முதல் கட்டளை.. ‘Find out whether there has been any information about the blast.. Someone would have called our control room.. I need that information.. Fast..’
அவர் நினைத்திருந்தது போலவே அடுத்த அரை மணியில் அவர் தேவைப்பட்டிருந்த தகவல் அவருடைய மேசையை அடைந்தது. மும்பையில் பிரபலமாயிருந்த மொபைல் தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனத்தின் துவக்க எண்ணைப் பார்த்தவர், ‘Find out from the Company the full address of this caller.. Quick..’ என்றார் கோபத்துடன்.. ‘We should pick up the person in the next half hour.. Inform the nearest police point over our secret lines.. His identity should not be revealed to anyone else.. Especially the Press.. Do you understand what I mean?’
அவருடைய கோபத்தை நன்றாகவே அறிந்திருந்த உதவியாளர்கள் அடுத்த அரைமணிக்குள்ளாகவே சீனிவாசனின் விலாசத்தைக் கண்டுபிடித்து அவனை அள்ளிக்கொண்டு அவர் குறிப்பிட்டிருந்த விலாசத்தை அடைந்தனர்.
தொடரும்..
2 comments:
இன்னிக்கும் நான் தான் first... ரொம்ப விறுவிறுப்பா போகுது சார்..
வாங்க மீனாப்ரியா,
இன்னிக்கும் நான் தான் first... //
இன்றைக்கு மட்டுமல்ல கடந்த ஒரு வார காலமாகவே firstம் lastம் நீங்கதான்:(
Post a Comment