29.11.05

குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்!! - 2

இத்தொடரின் முதல் பதிவைப் படிக்காதவர்களுக்கு:

இது முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் என் கற்பனையில் உருவான கலந்துரையாடல். இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் சம்பந்தப்பட்ட நடிகர்களுடையதல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த பதிவில் காலம் சென்ற நடிகவேள் எம்.ஆர். தெரிவித்த கருத்துக்களும் அப்படியே. அவர் கூறுவதாக எழுதப்பட்ட வசனங்கள் அவருடைய அந்தஸ்த்தை எந்த அளவுக்கும் தரம் தாழ்த்த எழுதப்பட்டவையல்ல.

இனி இன்னைக்கு மறைந்த நடிகர் டி.எஸ். பாலையா அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ர்.ராதா (எம்.ஆர்)
டி.ஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

நடு: (பாலையாவை பார்க்கிறார்) சொல்லுங்கய்யா.

பா: வீட்லருந்து வர்றப்பவே எங்க வீட்டம்மா ஒன்னு சொன்னாங்க.. இங்க அத சொல்லலாங்களா?

நடு: (சிரிக்கிறார்) என்னய்யா? எங்க வீட்டாளு சொல்லியனுப்பிச்சதத்தான அங்கயும் சொல்லியிருப்பாங்க. என்ன சரிதானே? தாராளமா சொல்லுங்க.

வடி: (தன்னருகே அமர்ந்திருந்த பார்த்திபனின் காதை கடிக்கிறார்) என்னத்த சொல்லியிருக்க போறாக, ஏதாச்சும் ஏடாகூடமா பேசினீங்க பொறவு வீட்டுப்படி ஏத்தமாட்டேன்னு சொல்லியிருப்பாக.. என்ன பார்த்திபா, அப்படித்தானே?

பார்: (திரும்பிபார்த்து முறைக்கிறார்) டேய் பொத்திக்கிட்டிரு.. அதென்ன ஏடா கூடமா?

வடி: (தனக்குள்) இவன்கிட்ட வாய் குடுத்துட்டு பேச்சு வாங்கி கட்டிக்கறதே எனக்கு பொளப்பா போயிருச்சி. (பார்த்திபனை பார்க்கிறார். அவர் வேண்டுமென்றே நேரே மேடையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்) பெரீய இவன்னு நினைப்பு. வச்சிக்கறேன்.

பா: அந்த பொண்ணு சொன்னது சரிதான்னு சொல்லிட்டு வீட்டுக்கு வரமுடியும்னு நினைச்சிருந்தீங்கன்னா அத இப்பவே மறந்திருங்கன்னாங்க.. அதான்.. (நடிகவேளை பார்க்கிறார்) அண்ணே நான் இப்ப சொல்லப் போறத உங்களுக்கு எதிரா பேசறதா எடுத்துக்கப்படாது...

(நடிகவேள் எகத்தாளமாக உரக்க சிரித்தவாறே கவுண்டமனியை பார்க்கிறார்.)

எம்.ர்: (பிறருக்கு கேட்கும் வண்ணம்) பொண்டாட்டிக்கு பயந்த பயக.. (பாலையாவை பார்க்கிறார்) பேசு, பேசு.. என்ன பேசப் போறே.. பாக்கறேன்..

பா: (பயந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு நடுவரை பார்க்கிறார்) அய்யா..

நடு: (சிரிக்கிறார்) தைரியமா சொல்லுங்க.. நடிகவேளை பாக்காதீங்க.. என்னை பாருங்க, அவர் இருக்கற பக்கமே பாக்காமத்தானே இருக்கேன்? அதே மாதிரி அவர பாக்காம சும்மா உங்க கருத்த சொல்லுங்கய்யா..

பா: எனக்கும் பொண்ணு பிள்ளைங்கன்னு இருக்காங்கய்யா.. அதனால சொல்லுறேன்.. அந்த பொண்ணு அப்படி சொன்னது, தப்புத்தான், தப்புத்தான்.. ஆனா அதுக்காக இவங்க செஞ்சது சரியாய்யா.. அதுவும் தப்புத்தான், தப்புத்தான்.

எம்.ர்: (உரக்க சிரிக்கிறார்) டேய் பாலு.. எதனாச்சும் ஒன்னு சொல்லு.. அதென்ன முல்லா நசருதீன் மாதிரி இவன் சொல்றதும் சரி, அவன் சொல்றதும் சரிங்கறே..

நடு: (நடிகவேளை மேலே பேசவிடாமல் குறுக்கிடுகிறார்) அய்யா.. உங்க முறை முடிஞ்சிருச்சிய்யா.. மத்தவங்களும் பேசணுமில்ல..?

கவு: (எழுந்து நிற்கிறார்) அதானே.. இவரே பேசிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? (செந்திலை கிள்ளுகிறார்) டேய் தகரடப்பா தலையா, சொல்லேண்டா..

எம்.ஆர்:(கோபத்துடன் எழுந்து நின்று கவுண்டமனியை முறைக்கிறார்) டேய்.. என்னா.. பெரியவன், சின்னவங்கற மரியாதையில்லாம.. உக்கார்றா..

கவு: (கோபத்துடன் நடுவரைப் பார்க்கிறார்) ஐயா.. இது நல்லால்ல.. இந்த ஆளு பேசி முடிச்சிட்டாருல்ல.. சும்மா இருக்க சொல்லுங்க..இல்லன்னா..

வடி: (பார்த்திபனிடம்) இல்லன்னா இவன் என்ன பண்ணிருவான்னு கேளு பார்த்திபா..

பார்: (முறைக்கிறார்) டேய் வாய பொத்திக்கிட்டு சும்மாயிரு..

நடு: (என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்) (தனக்குள்) இதெல்லாம் எனக்கு தேவையா.. பாட்டிகள் முக்கியமா, தாத்தாக்கள் முக்கியமாங்கற தலைப்புல சன் டிவியில பட்டிமன்றம் நடத்த கூப்பிட்டாங்களே அதுக்கே போயிருக்கலாம் போலருக்குது.. கொடுமைடா.. (அகண்ட சிரிப்புடன் நடிகவேளைப் பார்க்கிறார்) அய்யா.. (கவுண்டமனியை காட்டுகிறார்) அவர் சொல்றது சரிதான்.. உங்க முறை முடிஞ்சிருச்சில்ல.. உக்காருங்கய்யா..

(நடிகவேள் கோபத்துடன் எழுந்து எல்லோரையும் ஒருமுறை பார்க்கிறார். பிறகு நடுவரை பார்க்கிறார்)

எம்.ஆர்: (எகத்தாளமாய்) அய்யா.. உங்க தீர்ப்பை ஒத்துக்க மாட்டேன்.. இந்த எச்ச (நடுவர் தடுப்பதற்கு முன்பு கெட்ட வார்த்தை வந்து விழுந்துவிடுகிறது. நடுவர் தலையில் அடித்துக்கொள்கிறார்.) பயலுகளோட ஒக்காந்திருக்கணும்னு எனக்கொன்னும் தலையெழுத்தில்லைய்யா.. நான் போறேன்.. நீங்களே நடத்தி என்ன எளவு (நடுவர் முகம் சுளிக்கிறார்) தீர்ப்பையும் சொல்லிக்கங்க.. நான் வெளிநடப்பு செய்யறேன். (நடுவர் அவரை நோக்கி ‘அய்யா, அய்யா.. நில்லுங்க’ என்று கூப்பிடுவதை உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறுகிறார்)

(வடிவேலு தனக்கு முன்னால் அமர்ந்திருந்த தங்கவேலுவை தோளில் தட்டுகிறார். அவர் ‘என்ன’ என்பதுபோல் திரும்பி பார்க்கிறார்.)

வடி: (ரகசிய குரலில்) இவரு செட்டுலயும் இப்படித்தான் பந்தா பண்ணுவாருங்களாய்யா?

தங்: (சிரிக்கிறார்)அமா, ஆமா. ஆனா அங்க யாரும் இவரை கண்டுக்கிடவே மாட்டாங்க.. முக்கியமா சிவாஜியும், எம்.ஜிஆரும் செட்டுல இருந்தா வாய்ல ஒரு பீடிய வச்சிக்கிட்டு வாலை சுருட்டிக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்திருப்பாரு..

வடி: (பார்த்திபனை சீண்டுகிறார்) பாத்தியா பார்த்திபா.. சார் சொல்றத..

(பார்த்திபன் அவர் கையை தட்டிவிட்டு முறைக்கிறார். மேடையை நோக்கி சைகை செய்கிறார்)

வடி: (தனக்குள்) இவனும் பந்தா பார்ட்டிதானே.. அதான் குத்துது..

பார்: டேய்.. வாயை பொத்துறியா இல்ல உன் கக்கூஸ் வண்டவாளத்த எடுத்து விடவா?

(வடிவேலு வாயைப் பொத்திக்கொண்டு கப்சிப்)

கவு: (செந்திலிடம்) பார்த்தியாடா.. இந்த ஆளு நான் போட்ட போடுல பயந்து ஓடறான்..

செந்: ஆமாண்ணே.. உங்கள பாத்துட்டு பயந்து ஓடாத ஒரே ஆளு நாந்தண்ணே...

கவு: டேய் தார் டப்பா மாதிரி இருக்கற உன்ன பாத்து நான் பயந்து ஓடாம இருக்கேனே அதுக்கென்ன என்ன சொல்றே?

செந்: சரிண்ணே. ஆரம்பிச்சிராதீங்க.. அங்க பாருங்க.. பாலய்யா ஐயா என்ன சொல்றதுன்னு தெரியாம முளிக்கிறார் பாருங்க.. பாவம்ணே அவர்.

கவு: ஆமாடா.. நம்ம வீட்டம்மாவே மேலு போலருக்குது..

செந்: உங்க முறை வரும்ல அப்ப பாக்கலாம்.

கவு: எனக்கென்னடா பயம்?

செந்: வேண்டாம்ணே, அக்காவுக்கு கேட்டுரப்போவுது..

கவு: சரிடா.. டென்ஷனாகாத.. அங்க ஐயாவ பாரு.. ஏதோ சொல்ல வராற்னு நினைக்கறேன்.

பா: அய்யா.. நா என்ன சொல்ல வரேன்னா..

நடு: அதான் எல்லா கலாட்டாவும் முடிஞ்சிருசில்லய்யா.. நீங்க தைரியமா சொல்லுங்க..

பா: அந்த பொண்ணு பாவம் என்ன அர்த்தத்துல சொல்லுச்சோ.. அதே அர்த்தத்துல பாத்திருந்தா வெணையே இருந்துருக்காது, இருந்துருக்காது.. அத வுட்டுட்டு .. இதெல்லாத்தயும் விட பெருசா.. நாட்டுல நெறய இருக்குதுய்யா, இருக்குது.. அத பாத்தா நல்லாருகும்யா.. நல்லாருக்கும். அம்புடுதேன்.. போறுங்களா?

கவு: (செந்திலிடம்) என்னடா இவர் நம்மள போறுமான்னு கேக்கறார்? நீ என்ன சொல்றே.. போறும்ங்கற?

செந்: பாவம்ணே.. இத சொல்றதுக்குள்ளயே அவருக்கு எப்படி வேர்த்து போயிருச்சி பாருங்க..

கவு: (மேடையை பார்க்கிறார்) ஆமாம்டா..

நடு: (சிரிக்கிறார்) போறும்யா.. நல்லா நறுக்குன்னு சொல்லிட்டீங்க.. (அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களை பார்க்கிறார்) பாலைய்யா அய்யா சொன்ன கருத்தைதான் இன்னைக்கி வெளியில எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. (தங்கவேலுவை பார்க்கிறார்) என்னய்யா சரிதானே.. வாங்க உங்க கருத்தை சொல்லுங்க..

தொடரும்

22 comments:

Anonymous said...

என்ன ஜோசப் சார் புதுசா விளக்கமெல்லாம் குடுத்திருகீங்க. யாராவது நடிகவேளோட லாங்க்வேஜ் மோசமாயிருக்குன்னு சொன்னாங்களா? இந்த பதிவுலயும் அப்படியிருக்குதே. விட்டுத்தள்ளுங்க. தமாஷ்தானே.

Anonymous said...

இன்றைய பதிவும் நல்லாருக்கு சார். குறிப்பா கவு & செந் அப்புறம் பார் & வடி இடையில நடக்குற டையலாக் ரொம்ப நல்லாருந்திச்சி.

Anonymous said...

சார் வசவுகள கொஞ்சம் இலைமறைவு காய் மறைவா சொல்லுங்களேன். தமாஷ்தான்னாலும் படிக்கும்போது என்னவோ மாதிரியிருக்கு. தப்பா சொல்லலை. ஒரு சஜ்ஜஷன்தான். மத்தபடி இன்னைக்கும் சூப்பரா எழுதியிருக்கீங்க.

Anonymous said...

Super comedy!!!

Continue

Anonymous said...

:-))))))))))))
:-)))))))))))))
:-))))))))))))))
:-)))))))))))))))
:-))))))))))))))))

புரியுதுங்களா?

அன்பு said...

எப்படித்தான் வெளியே கேட்காம சிரிச்சாலும்...

இந்தவரி,

வடி: (தனக்குள்) இவனும் பந்தா பார்ட்டிதானே.. அதான் குத்துது..

வரும்போது சிரிப்பு பொத்துக்கிட்ட்டு வந்திருச்சு... கலக்கல்.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி சம்பத்,
என்னுடைய பதிவுகளில் முதலாவதாக பின்னூட்டம் இடுவதில் சாதனை புரிகிறீர்கள். ஆனால் உங்களுடைய உண்மையான பெயர் என்னவென்றுதான் தெரியவில்லை.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அவ்வளவுதான்.

மன்னியுங்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

குறிப்பா கவு & செந் அப்புறம் பார் & வடி இடையில நடக்குற டையலாக் //

பொதுவாகவே பாலையா அவர்கள் பொது இடங்களில் பேசுவதை முடிந்தவரை தவிர்ப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இடை இடையே செந்தில்-கவுண்டமனி, வடிவேல்-பார்த்திபனின் வசனங்களையும் சேர்த்தேன்.

டிபிஆர்.ஜோசப் said...

சார் வசவுகள கொஞ்சம் இலைமறைவு காய் மறைவா சொல்லுங்களேன்//

செய்யறேன். சில சமயங்களில் காரக்டரைசேஷனுக்கு இவை தேவைப்படுகிறது.

அதனால்தான். வேண்டுமென்றே செய்வதில்லை.

அவர் நேரில் பேசி நான் கேட்டிருக்கிறேன். சகட்டுமேனிக்கு யாரை வேண்டுமானாலும் கெட்ட வார்த்தைகளால் ஏசிவிடுவார்.

நான் எழுதியது பத்தில் ஒரு பங்குதான்.

டிபிஆர்.ஜோசப் said...

Super comedy!!!

நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

புரியுதுங்களா?

நல்லாவே புரியுதுங்க. நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

மிக்க நன்றி அன்பு.

சும்மா சத்தம்போட்டு சிரிங்க. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்பாங்க.

G.Ragavan said...

இந்த வாட்டியும் +வ் ஓட்டு போட்டுட்டேன். :-)

Anonymous said...

ஜோஸப் சார், feedback கொறைஞ்சுமோன்னு கவலைப்படாமே நாகேஷ், சோ, உசிலைமணி, விசு, மௌலி இவுங்கள பத்தியும் தமாஷா எழுதுங்க.

டிபிஆர்.ஜோசப் said...

நாகேஷ், சோ, உசிலைமணி, விசு, மௌலி இவுங்கள பத்தியும் தமாஷா எழுதுங்க. //


இப்போ எழுதிக்கிட்டிருக்கறத முடிச்சிட்டு முடிஞ்சா எழுதறேன். முக்கியமா எனக்கு நாகேஷ், சோ, மளலி இவங்கள ரொம்ப பிடிக்கும்.அதுல சோவை ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...

இந்த வாட்டியும் +வ் ஓட்டு போட்டுட்டேன். :-)

ரொம்ப நன்றி ராகவன். உங்க ஊர் மருமகன்கறதுனாலயா..

சும்மா தமாஷ். தூத்துக்குடிகாரங்கள அவ்வளவு சீக்கிரமா கவுக்க முடியாதுன்னு தெரியும்.

Anonymous said...

ஜோஸப் சார் சோ நாகேஷ் விசு மௌலிய சேத்துக்கிறதுக்கு தாங்க்ஸ். அப்படியே டிஆர் ராமசந்திரனையும் எஸ் வி சேகரையும் க்ரேஸி மோகனையும் காத்தாடி ராமமூர்த்தியையும் சேத்துக்குங்க. ஔஅவுங்கள இண்டர்லெக்சுவல் காமெடியன்களா காட்டிடுங்க. இப்போ வந்துக்கிட்டுகிற feedback கொறையாது.

டிபிஆர்.ஜோசப் said...

அப்படியே டிஆர் ராமசந்திரனையும் எஸ் வி சேகரையும் க்ரேஸி மோகனையும் காத்தாடி ராமமூர்த்தியையும் சேத்துக்குங்க. //


இதென்னமோ நக்கல் பண்றா மாதிரியிருக்கே? என் ஊகம் சரிதானா?

Anonymous said...

ஜோசஃப் சார் கரெக்ட். மொதல்லையும் அததான் செஞ்சேன். நீங்க சீரியசா எடுத்துக்கிட்டீங்களோன்னு தோணிச்சு.பின்ன என்னங்க? உங்களுக்கு feedback குடுத்திருக்குற ஒருத்தராச்சும் இவுங்களில சோவோட டயலாக்குல பேசிருந்தா + குடுப்பாங்களான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கவுண்டரோட டயலாக்கும் வடிவேலோட டயலாக்கும் அவுங்க ஸ்டைல்ல இயபுங்க. அத கிண்டல் செஞ்சா என்னங்க மொறை?

Sundar Padmanaban said...

கலக்கலா இருக்கு ஸார். தொடருங்க.

//எனக்கு நாகேஷ், சோ, மளலி இவங்கள ரொம்ப பிடிக்கும்//

சோ பிடிக்குமா? கிழிஞ்சது.

எதுக்கும் எதிர்பாராத விமர்சனங்களையும் எதிர்பாருங்க! ;)

டிபிஆர்.ஜோசப் said...

கவுண்டரோட டயலாக்கும் வடிவேலோட டயலாக்கும் அவுங்க ஸ்டைல்ல இயபுங்க. அத கிண்டல் செஞ்சா என்னங்க மொறை?

ஐயையோ, இது சத்தியமா கிண்டல் இல்லீங்க. ஒரு இமிடேஷன். மிமிக்ரின்னு வச்சிக்கங்களேன்.

டிபிஆர்.ஜோசப் said...

சோ பிடிக்குமா? கிழிஞ்சது.


ஏங்க? அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் என்பதாலா. நகைச்சுவை அதற்கெல்லாம் அப்பாற்பட்டதாச்சே.

அவர இமிடேட் பண்றதுகூட ஒரு சாலஞ்ச் ஆச்சே.