29.11.05

(48)குஷ்பு- கலந்துரையாடல்!! - 3

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (ஏற்கனவே மன்னிப்பு கேட்டாகிவிட்டது!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டிஎஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

--

நடு: (தங்கவேலுவை பார்க்கிறார்) வாங்கய்யா. நீங்க என்ன சொல்றீங்கன்னு கேப்போம்.

தங்கவேலு: (தனக்கே உரிய பாணியில் ஒரு நக்கல் சிரிப்புடன் எல்லோரையும் பார்க்கிறார். ஒரு அரசியல்வாதியின் குரலில் துவக்குகிறார்) என் அருமை நடுவர் அவர்களே

நடு: (சந்தோஷத்துடன்) ஹாய், ஹாய். பாருய்யா..

தங்: (நடிகவேள் அமர்ந்திருந்த இருக்கையை காட்டி) முதலிலே அமர்க்களமாய் பேசிவிட்டு இடையிலேயே ஓடிப்போன என் அருமை அண்ணன் நடிகவேள் அவர்களே.. (பாலையாவை காட்டி) பேசுவதற்குக்கூட வீட்டில் பர்மிஷன் கேட்டுவிட்டு வந்து பேசுவதா வேண்டாமா என்று தவித்துப்போன என் அருமை நண்பர் பாலையா அவர்களே.. (பாலையா தனக்கே உரிய பாணியில் தலைய சடக்கென்று கவிழ்த்துக்கொள்கிறார்)

கவு: (செந்திலை பார்க்கிறார்) பார்றா இந்தாளோட லொள்ள..

தங்: (கவுண்டமனியை காட்டி) நான் பேசுவதை பார்த்து கமெண்ட் அடிக்கும் தம்பி கவுண்டமனி மற்றும் அவருடைய அடிதாங்கும் (குரலை ஒருகட்டை கீழிறக்கி) புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். தம்பி செந்தில் அவர்களே..

செந்: (கவுண்டமனியை நக்கலுடன் பார்க்கிறார்) இது உங்களுக்கு தேவையாண்ணே.. மாட்டிக்கிட்டீங்கல்லே.

கவு: (செந்திலை பார்க்காமல்) டேய்.. வேணாம்.. எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமில்லே.. அப்ப பாத்துக்கறேன் இந்தாள..

தங்: (பார்த்திபனை பார்த்து) கிறுக்கல் தம்பி பார்த்திபன் அவர்களே..

வடி: (நமட்டு சிரிப்புடன்) பார்த்திபா.. நீ ஏதோ கவிதை தொகுப்புன்னு கிறுக்கினியே அத்த சொல்றார் போலருக்குது..

பார்: (திரும்பாமல்) டேய், வேணாம் பொத்திக்கிட்டிரு.. அவரு யார்றா? பெரிய நகைச்சுவை மன்னன். அவர் சொல்லட்டுமே.. நீ ஏதாச்சும் இதுக்குமேல பேசுன? மவனே இங்கயே பொலி போட்ருவேன்.. மூடிக்கிட்டு சும்மாயிரு..

வடி:(தனக்குள்) ஆமா.. இங்கன பாஞ்சி என்னா பண்றது? கிளிஞ்சது லம்பாடி லுங்கில்ல..

பார்: டேய்.. என்ன முனவுற?

வடி: ஒன்னுமில்லப்பா. நீ நேரா பாரு.. அப்புறம் இதுக்கும் எதுனாச்சும் சொல்லிடபோறாரு.. (தங்கவேலுவை பார்த்து முப்பத்திரண்டு பற்களையும் காட்டுகிறார்)

தங்:என்னைக் குறித்து பேசுவதையெல்லாம் பேசிவிட்டு இப்போது பொய் சிரிப்பு சிரிக்கும் மதுரைக்கார தம்பி வடிவேலு அவர்களே.

(அரங்கில் இருக்கும் எல்லோரும் சிரித்துக்கொண்டே வடிவேலுவைப் பார்க்க அவர் அவமானத்தால் சிறுத்து தலையை குனிகிறார்)

பார்: வேணுன்டா உனக்கு.

தங்: ஜோடியில்லாமல் தனியே அமர்ந்திருக்கும் தம்பி ஜனகராஜ் அவர்களே..

ஜன: (தங்கவேலுவை பார்த்து கண்ணடிக்கிறார்) நாம எப்பவுமே ஒண்டிக்கட்டைதான்ணே..

தங்: (நடுவரை பார்க்கிறார்) யாரையாச்சும்யும் உட்டுட்டேனா நடுவர்ர்ர்ர் அவர்களே?

நடு:(சிரிக்கிறார்) ஹாய்.. இப்பத்தான்யா களை கட்டுது.. நீங்க இதே பாணியிலேயே பேசுங்கய்யா..

தங்: (சலித்துக்கொள்கிறார்) என்னத்தய்யா பேசச் சொல்றீங்க? இப்படித்தான் ஒரு நாள் நான் மேடையில பேசிட்டு அங்க போட்ட மாலையோட வீட்டுக்கு போனேன். வீட்ல நம்பலையே.. எங்கடா வாங்கிக்கிட்டு வந்தேன்னு கேட்டு காறித்துப்பிட்டாங்க.. அதுலருந்தே இந்த மேடை பேச்சுன்னாலேயே நமக்கு அலர்ஜிங்க (தன் பாணியில் தன் கண்களை உருட்டுகிறார். நடுவர் உட்பட எல்லோரும் சிரிக்கிறார்கள்).

நடு: அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சதாச்சே.. ‘நீங்க தட்டுறான் தட்டுறான் தட்டிக்கிட்டே இருந்தான்னு கைதட்டுனத சொல்வீங்க. உங்க வீட்டம்மா நக்கலா உங்க முதுகையாம்பாங்க.. அதத்தான சொல்ல வர்றீங்க? தெரியும்யா, எல்லாருக்கும் தெரியும்.

தங்:(ஆச்சரியத்துடன் நடுவரை பார்க்கிறார்) அதெப்படிய்யா எங்க வீட்டம்மா சொன்னத அப்படியே கிட்டருந்து கேட்டா மாதிரி சொல்றீங்க? இருந்தாலும் நீங்க அசகாய சூரன்தாங்க. ஒன்னா ரெண்டா, இதுமாதிரி எத்தன பாட்டி.. தப்பு தப்பு. பட்டி மன்றம் நடத்திறீங்க..

நடு: (உரக்க சிரிக்கிறார்) உங்க பாணியே தனிய்யா.. சந்தடி சாக்குல என்ன பாட்டி மன்றம் நடத்தவராக்கிட்டீங்க.. சரி விஷயத்துக்கு வாங்க. நேரமாவுதில்ல..

தங்: அட என்ன நடுவரய்யா? விஷயத்துக்கு வர பயந்துக்கிட்டுத்தானே இப்படி சுத்தி, சுத்தி வரேன்.

கவு: (செந்திலை பார்க்கிறார்) அப்படி போடு அறுவாள.. பாத்தியாடா இந்தாளோட லொள்ள?

செந்: (நேரே பார்த்துக்கொண்டு) அண்ணே வேனாண்ணே.. அவரு நம்ம ரெண்டு பேரையும்தான் பார்க்கிறாரு.. பேசாம பேச்ச கேளுங்க..

தங்: சரிய்யா.. நான் என்ன நினைக்கறேன்னா..

கவு: (தங்கவேலுவை பார்த்து) அதத்தானய்யா கேக்கறதுக்கு காத்துக்கிட்டிருக்கோம்.. அத வுட்டுட்டு..

தங்: (கவுண்டமனியை பார்த்து சிரிக்கிறார்) வரேன் தம்பி.. பொறுங்க.. (நடுவரை பார்க்கிறார்) அய்யா நான் என்ன சொல்ல வரேன்னா..

நடு: (எல்லோரையும் பார்த்து சிரிக்கிறார்) வாங்கய்யா.. சீக்கிரம் வாங்க.. வரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது?

தங்: அதாவது நடுவரய்யா.. அந்த புள்ள குஷ்பு நம்ம அண்ணன் நடிகவேள் சொன்னாமாதிரி..

கவு: (எரிச்சலுடன் பல்லைக்கடித்துக்கொண்டு ரகசிய குரலில் பேசுகிறார்) யோவ் நீ என்ன சொல்ல வரேன்னு கேட்டா நடிகவேள் சொன்னார் கடிகவேள் சொன்னார்னுட்டு.. (செந்திலை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

செந்: அண்ணே.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.. என்ன விட்டுருங்க..

தங்: அந்த புள்ள சொன்னதுல தப்பு இருக்கா இல்லையான்னு அவங்கவங்களா பார்த்து தப்புன்னா விட்டுருங்க.. சரின்னா அதமாதிரியே செஞ்சிட்டு போங்க.. அம்புடுதேன்.. இதுல நீங்களும் நானும் என்னத்த சொல்றது?

வடி: (பார்த்திபனை சீண்டுகிறார்) ஏம்ப்பா பார்த்திபா.. அவரு சொல்றது ஏதாவது புரிஞ்சிதா?

பார்: (திரும்பி முறைக்கிறார்) என்ன புரியல உனக்கு?

வடி: புரியாமத்தானப்பா கேக்கேன்? என்ன புரியலைன்னு என்னையே கேக்கே?

பார்: அதான்டா.. என்ன புரியலை.. தமிழ்லதானே சொன்னாரு?

வடி: (தனக்கே உரிய பாணியில் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு) உக்கும்.. பார்றா.. எளவு உனக்கும் புரியலையாக்கும். அப்படி சொல்லிற வேண்டியதுதானே. இந்த பம்மாத்து வேலதானே வேண்டாங்கறது?

பார்: அதென்னடா பம்மாத்து.. நாசமா போறவனே.. இந்த மாதிரி புரியாத பாஷையிலல்லாம் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது?

நடு: (அவர்கள் இருவரையும் பார்த்து சிரிக்கிறார்) என்ன தம்பிகளா, நீங்க தனியா எதாச்சும் பட்டி மன்றம் நடத்துறீங்களா? சொல்லுங்களேன் எல்லாரும் கேப்போம்..

(பார்த்திபனும் வடிவேலுவும் அசடு வழிகிறார்கள். கவுண்டமனியும் செந்திலும் ஒருவர் ஒருவரைப் பார்த்து கண்ணடிக்கிறார்கள்)

தங்: (கேலி சிரிப்புடன்) எங்க காலத்துல ஒவ்வொருத்தருக்கும் பொம்பள ஜோடி இருந்திச்சி.. இப்ப எல்லாம் ஆம்பளைங்கதான் ஜோடியாயிடறாங்க..

(நடுவர் பதறிப்போய் தங்கவேலுவை பார்க்கிறார். அரங்கத்தில் நிசப்தம்)

நடு: (தங்கவேலுவை பயத்துடன் பார்க்கிறார்) எய்யா.. இதென்ன குண்ட தூக்கி போடுறீங்க?

தங்: (உரக்க சிரிக்கிறார். பார்த்திபன் - வடிவேலு, கவுண்டமனி-செந்தில் ஜோடியை காட்டுகிறார்) நான் இவங்களையில்ல சொன்னேன்.

நடு: வயித்துல பால வார்த்தீங்கய்யா.. எங்க வெளியில ஒரு கூட்டத்த விளக்குமாத்தோட நிக்க வச்சிருவீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடியில்ல போயிட்டேன். சரிய்யா.. நீங்க சொல்ல வந்தத சொல்லி முடிச்சாச்சா?

தங்: தோ முடிச்சிட்டேன். அந்த புள்ள சொன்னதுல தப்பும் இருக்கு ரைட்டும் இருக்கு.

நடு: இதென்னவோ ஐயரை ரெண்டறைன்னு ஒரு படத்துல தமாஷ் பண்ணுவீங்களே அதுமாதிரியில்ல இருக்கு. தெளிவா சொல்லுங்கய்யா..

தங்: (தனக்கே உரிய பாணியில் கேலி கலந்த குரலில்) அதாவது நடுவரய்ய்ய்ய்ய்ய்ய்யா...

நடு: (சிரிக்கிறார்) ரொம்ம்ம்ம்ம்ப இழுத்துறாதீங்க கிழிஞ்சரப் போவுது..

தங்: (சிரிக்கிறார்) நீங்க எங்களவிட எமகாதன்யா..

நடு: (குழப்பத்துடன்) எதுலய்யா?

தங்: தமாஸ் பண்றதுல..

நடு: (நிம்மதியுடன்) அதான பார்த்தேன். நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். சொல்லுங்க.. எது சரி, எது தப்பு?

தங்: (குழப்பத்துடன்) என்னய்யா?

நடு: அதான்யா.. அந்த புள்ள சொன்னதுல ரைட்டும் இருக்கு ராங்கும் இருக்குன்னீங்களே.. அது..

தங்: ஆங். அதா. சொல்றேன். அந்த புள்ள கல்யாணத்துக்கு முன்னால என்னமோ பண்ணலாம்னு சொல்லிச்சே அது தப்பு..

நடு: சரிஈஈஈ (வேடிக்கையாக இழுக்கிறார்)

தங்: என்னமோ பாதுக்காப்பா எதையோ போட்டுக்கிட்டு வேணும்னா என்னமோ செய்யணும்னு சொல்லிச்சே அது சரி..

கவு: (செந்திலை பார்க்கிறார்) என்னடா சொல்றான் இந்தாளு.. ஒரு எளவும் புரியலை.. டேய் முள்ளம்பன்றித் தலையா.. என்னடா? எல்லாம் புரிஞ்சா மாதிரி உன் மட்காட் தலைய இந்த ஆட்டு ஆட்றே?

செந்: (நெற்றிப்பொட்டை தொட்டு) அதுக்கெல்லாம் இது வேணும்ணே..

கவு: எது.. நெத்தியா?

செந்: பாத்தீங்களா? சைகை காட்டியும் உங்களால புரிஞ்சிக்க முடியலே..

கவு: (பற்களைக் கடிக்கிறார்) டேய்.. புகாரித்தலையா.. மூளை நெத்திலயாடா இருக்கு? உன்னை.. மவனே, வெளியே வா பாத்துக்கறேன்.

தங்: என்னய்யா.. நான் சொல்றது சரிதானே.. அது வேணாம்னா விட்டுருங்க.. வேணும்னா பாதுகாப்பா இருந்துக்குங்க..

நடு: (சிரிக்கிறார்) நீங்க சினிமாலத்தான் தெளிவா பேசுவீங்க போலருக்குது.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு.. நன்றி. போய் உக்காருங்க.. (பார்த்திபனையும் கவுண்ட மனியையும் பார்க்கிறார்) உங்க ரெண்டு பேர்ல யாருய்யா சீனியர்? பின்னால டைட்டில் ப்ராப்ளம் வந்துரக்கூடாது பாருங்க. அதான் கேக்கேன்.

(பார்த்திபனும் கவுண்டமனியும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க அரங்கத்தில் எல்லோரும் சிரிக்கின்றனர்)

தொடரும்..

25 comments:

Anonymous said...

செந்: (நெற்றிப்பொட்டை தொட்டு) அதுக்கெல்லாம் இது வேணும்ணே..

கவு: எது.. நெத்தியா?

அப்படியே நெத்தியடி! கவுண்டபெல்லும் செந்திலும் பேசிக்கறா மாதிரியே இருக்கு. யாரோ ஒருத்தர் சொன்னாப்பல இன்னைக்கி ரொம்பவும் நல்லா அமைஞ்சிருக்கு.

--

Anonymous said...

தங்: (கேலி சிரிப்புடன்) எங்க காலத்துல ஒவ்வொருத்தருக்கும் பொம்பள ஜோடி இருந்திச்சி.. இப்ப எல்லாம் ஆம்பளைங்கதான் ஜோடியாயிடறாங்க..

(நடுவர் பதறிப்போய் தங்கவேலுவை பார்க்கிறார். அரங்கத்தில் நிசப்தம்)

நடு: (தங்கவேலுவை பயத்துடன் பார்க்கிறார்) எய்யா.. இதென்ன குண்ட தூக்கி போடுறீங்க?

எப்படி சார் இப்படியெல்லாம் எழுத முடியுது.. சிரிச்சி, சிரிச்சி கண்ல தன்னி வந்துருச்சு சார். கலக்கிட்டீங்க.

Anonymous said...

:-))))))))))))))
:-)))))))))))))))

கைவலிக்குது சார். இப்படி எல்லா பதிவுலயும் காமடி பண்ணீங்கன்னா என்ன பண்றது.

ஸ்மைலி அடிச்சி அடிச்சி கையும் வலிக்குது சிரிச்சி சிரிச்சி வயிறும் வலிக்குது

டிபிஆர்.ஜோசப் said...

அப்படியே நெத்தியடி! //


நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

எப்படி சார் இப்படியெல்லாம் எழுத முடியுது.. சிரிச்சி, சிரிச்சி கண்ல தன்னி வந்துருச்சு சார். கலக்கிட்டீங்க. //

நன்றி சம்பத். சட்டுன்னு தோனும். அப்பவே கணினில எழுதிக்குவேன். அப்புறம் கோர்வையா பதிவை எழுதுவேன்.

டிபிஆர்.ஜோசப் said...

ஸ்மைலி அடிச்சி அடிச்சி கையும் வலிக்குது சிரிச்சி சிரிச்சி வயிறும் வலிக்குது //

வலிச்சா மருந்து போட்டுட்டுங்க.

G.Ragavan said...

ஜோசப் சார். கலக்கிட்டீங்க போங்க. தூத்துக்குடி வாடை இன்னும் போலைன்னு நெனைக்கேன்.

இப்பல்லாம் ஆம்பளைங்க ஜோடியாயிர்ராங்கன்னு டணாலய்யா சொன்னதும் நடுவர் பதறிப் போறாரு பாருங்க......கீழ விழுந்து உருண்டு சிரிக்க இருந்தேன். ஆபீசாப் போச்சோ.....தப்பிச்சேன்.

அதே போல. சில சமயங்களில் காட்சிகள் கண்ணில் தெரிகின்றன. பாலையா தலை குனிவது. செந்தில் கிண்டுவது. வடிவேலு சிரிப்பது. சூப்பரப்பு.

டிபிஆர்.ஜோசப் said...

சிரிச்சிக்கிட்டே கீழ விழுந்து அடி கிடி பட்டுடப்போவுது.

சும்மா தமாஷ்.

உங்க வாழ்த்துக்கு நன்றி ராகவன்.

டிபிஆர்.ஜோசப் said...

வணக்கம்..

ஒவ்வொரு நாளும் இதான் சூப்பர்னு... சொல்ல வச்சு நகைச்சுவை கூடிட்டே போகுது....

நான்க படத்துல்ல பார்த்த நகைச்சுவையை திரும்ப அடுத்தவரிடம் சொல்லி
சிரிக்கவைப்பதே பெரும்பாடு.. ஆனால் உங்களுக்கு நகைச்சுவை அருமையா வருது.
நோய்விட்டுப்போக இன்று வாய்விட்டே சிரித்தேன்!

அப்புறம்:

தங்: தமாஸ் பண்றதுல..

தங்: (நிம்மதியுடன்) அதான பார்த்தேன். நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன்.
சொல்லுங்க.. எது சரி, எது தப்பு?

தங்: (குழப்பத்துடன்) என்னய்யா?

நடுவுல தங்: நடு: என்றிருக்கனும்தானே... நடு--வுள்ள வரதால மட்டுமில்ல:)

பி.கு:
பின்னூட்டம் இட இயலாததால் மின்னஞ்சல், நன்றி.

--

Warm Regards,
Anbu. S

நன்றி அன்பு,

பயங்கர அப்சர்வேஷன் பவர் இருக்கு உங்களுக்கு! நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட். கீழ கரெக்டட் வசனம்:

நடு: (நிம்மதியுடன்) அதான பார்த்தேன். நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன். சொல்லுங்க.. எது சரி, எது தப்பு?

ப்ளாக்கை கரெக்ட் பண்றது பெரிய தொல்லை. அதான் இதுலயே போட்டுட்டேன்.

Anonymous said...

இன்னைக்கும் சூப்பர்தான்.

நாளைக்கி யார் சார், பார்த்திபனா, ஜனகராஜா. பார்க்க போனா பார்த்திபன் காமெடி நடிகரேயில்லை. வடிவேலுகூட சேர்ந்துதான் காமெடி பண்ணவே ஆரம்பிச்சாரு.

Anonymous said...

உங்க முந்தைய இரண்டு பதிவையும் சேர்த்து இன்னைக்கித்தான் படிச்சேன்.
எம்.ஆரையும், டணாலையும் அப்படியே கண் முன்னால கொண்டு வந்திட்டீங்க. அத்தோட கவு-செந்தில், அப்புறம் பார்த்-வ.வேலு அவங்க இடையில இடையில அடிக்கற லூட்டி சூப்பரோ, சூப்பர். இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு சிரிப்பா சிரிக்கலாம்னு நினைக்கிறேன்.

Anonymous said...

சார் நல்ல டைமிங் சென்ஸ் இருக்குசார் உங்களுக்கு.

அதுவும் இந்த எக்சேஞ்ச் பிரமாதம்!

(கவு: (செந்திலை பார்க்கிறார்) என்னடா சொல்றான் இந்தாளு.. ஒரு எளவும் புரியலை.. டேய் முள்ளம்பன்றித் தலையா.. என்னடா? எல்லாம் புரிஞ்சா மாதிரி உன் மட்காட் தலைய இந்த ஆட்டு ஆட்றே?

செந்: (நெற்றிப்பொட்டை தொட்டு) அதுக்கெல்லாம் இது வேணும்ணே..

கவு: எது.. நெத்தியா?

செந்: பாத்தீங்களா? சைகை காட்டியும் உங்களால புரிஞ்சிக்க முடியலே..

கவு: (பற்களைக் கடிக்கிறார்) டேய்.. புகாரித்தலையா.. மூளை நெத்திலயாடா இருக்கு? உன்னை.. மவனே, வெளியே வா பாத்துக்கறேன்)

இந்த வசனங்கள யார் பேசினாலும் சிரிப்பு வந்துரும்.

அவ்வளவு நேச்சுரலா, காமடியா இருக்கு. வாழ்த்துக்கள்.

Anonymous said...

தங்: (சலித்துக்கொள்கிறார்) என்னத்தய்யா பேசச் சொல்றீங்க? இப்படித்தான் ஒரு நாள் நான் மேடையில பேசிட்டு அங்க போட்ட மாலையோட வீட்டுக்கு போனேன். வீட்ல நம்பலையே.. எங்கடா வாங்கிக்கிட்டு வந்தேன்னு கேட்டு காறித்துப்பிட்டாங்க.. அதுலருந்தே இந்த மேடை பேச்சுன்னாலேயே நமக்கு அலர்ஜிங்க (தன் பாணியில் தன் கண்களை உருட்டுகிறார். நடுவர் உட்பட எல்லோரும் சிரிக்கிறார்கள்).

நடு: அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சதாச்சே.. ‘நீங்க தட்டுறான் தட்டுறான் தட்டிக்கிட்டே இருந்தான்னு கைதட்டுனத சொல்வீங்க. உங்க வீட்டம்மா நக்கலா உங்க முதுகையாம்பாங்க.. அதத்தான சொல்ல வர்றீங்க? தெரியும்யா, எல்லாருக்கும் தெரியும்.


ஜோசப் ஐயா, இது கல்யாணப் பரிசு டைலாக்தானே.. கரெக்டா பொருத்தமான இடத்துல insert பண்ணியிருக்கீங்க. குபீர்னு சிரிப்பு வந்திருச்சி.

Anonymous said...

Romba nalla irunthichu thankavelu comedy.

டிபிஆர்.ஜோசப் said...

இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு சிரிப்பா சிரிக்கலாம்னு நினைக்கிறேன். //

உங்க நம்பிக்கைய காப்பாத்த முடியுமான்னு தெரியலையே.

டிபிஆர்.ஜோசப் said...

நாளைக்கி யார் சார், பார்த்திபனா, ஜனகராஜா. பார்க்க போனா பார்த்திபன் காமெடி நடிகரேயில்லை. வடிவேலுகூட சேர்ந்துதான் காமெடி பண்ணவே ஆரம்பிச்சாரு. //

நாளைக்கு பார்த்திபன் இல்லன்னா கவுண்டமனி. அப்புறம்தான் ஜனகராஜ்!

நீங்க சொல்றது சரிதான். பார்த்திபன் காமடியா பேசமாட்டார்னு நினைக்கிறேன். பார்த்துக்கிட்டேயிருங்க.

டிபிஆர்.ஜோசப் said...

ஜோசப் ஐயா, இது கல்யாணப் பரிசு டைலாக்தானே//

ஆமாங்க. இந்த டைலாக்கையும் அந்த காட்சி ஏற்படுத்தின சிரிப்பையும் இத்தன வருஷமாயும் என்னால மறக்கவே முடியல. அதான் இடையில யூஸ் பண்ணிக்கிட்டேன்.

டிபிஆர்.ஜோசப் said...

Romba nalla irunthichu thankavelu comedy.//

நன்றி

நிலா said...

எல்லாரோட ஸ்டைலும் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.
ஆனா, டயலாக்ஸ் சுமார்தான்.

NambikkaiRAMA said...

ha ha ha ha :)) Its really fun.

டிபிஆர்.ஜோசப் said...

எல்லாரோட ஸ்டைலும் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

நன்றி

ஆனா, டயலாக்ஸ் சுமார்தான்.

அப்படீங்களா. ஆளுக்கேத்தா மாதிரிதானே எழுத முடியும்?

சிரிப்பே வரலைங்கறீங்களா?

கவுண்டமனி Turn வரும்போ அதிகமா சிரிக்க வைக்க முயற்சி பண்றேன்.

டிபிஆர்.ஜோசப் said...

ha ha ha ha :)) Its really fun.//

நன்றி பாசிட்டிவ் ராமா?!

-L-L-D-a-s-u said...

ஐயோ!! இப்ப எல்லாம் என்னங்க காமெடி எழுதுறாங்க... இப்படி ட்ரெண்ட் வச்சு காமெடியாக எழுதும் வேறு யாராவது இருக்கிறார்களா என்ன? விவேக்கை காணோம் ஏங்க?

துளசி கோபால் said...

அட, நானும் நம்ம லபக்தாஸ் சொன்னதைத்தான் கேக்கணுமுன்னு வந்தேன்.
விவேக் எப்போ எண்ட்ரி?

இதே மாதிரி காமெடியிலே நடிகர்களுக்குப் பதிலா நம்ம வலைஞர்களைப் போட்டு எழுதுனா எப்படி இருக்கும்?

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி LLB.தாஸ்.

ஹலோ துளசி!

இப்பல்லா விவேக் வசனங்களை விட Body Languageல தான் காமெடி பண்றாரு. அதுவுமில்லாம வரவர அவருடைய வசனங்களில் விரச நெடி கொஞ்சம் அதிகமாகவே வீசுகிறது.

அதான் யோசிக்கிறேன்.

வலைஞர்களோட ஸ்டைலையெல்லாம் படிக்கணும். கொஞ்ச நாள் போட்டும், கலக்கிடலாம்.