26.11.05

குஷ்பு - நகைச்சுவை கலந்துரையாடல்!!

இரண்டு தினங்களுக்கு முன்பு சன் நியூஸ் சானலில் குஷ்பு விவகாரத்தைப் பற்றி ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அநேகமாய் எல்லா ண்களும் மிகவும் நகைச்சுவையாகவும் (கோமாளித்தனமாக மற்றும் கேவலமாக என்றும் கூறலாம்) பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் அவரவர் கருத்தை எடுத்து கூறினர். உரையாடல் சில சமயங்களில் இரு நடுவர்களாலும் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கீழ்த்தரமான (முக்கியமாய் ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு அரசியல்வாதியால்) லெவலுக்கு இறங்கியதும் உண்மை. இடை இடையே நடிகரின் பிரசங்கம் வேறு. மொத்தத்தில் ஒரு கதம்பமான, குழப்பமான விவாதமாயிருந்தது.

இதே கருத்தை மையமாக வைத்து அக்கால, இக்கால நகைச்சுவை நடிகர்கள் கலந்துகொள்ளும் ஒரு கலாட்டா கலந்துரையாடலை கற்பனை செய்திருக்கிறேன்.

ஒரு எச்சரிக்கை: பெண்மையைப் பற்றியும் பெண்ணியத்தை பற்றியும் ஒரு சில நடிகர்களுடைய கருத்து பெரும்பாலோருடைய கருத்துடன் ஒத்துபோகாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு நான் பொறுப்பல்ல. கலந்துரையாடலின் வேகத்தில் சில தவறான வார்த்தைகள் (சன் டிவி கலந்துரையாடலில் நடந்ததுபோல) வந்து விழ வாய்ப்புண்டு. நடுவர் அதை தடைசெய்தால் சந்தோஷம். இல்லையென்றால் கேட்டுக்கொள்ள, சாரி வாசிக்க, வேண்டியதுதான். பின்னூட்டமிட்டு என்னை திட்ட கூடாது!!

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா (மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா!)

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டி.ஸ். பாலையா (டி.எஸ்)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

நடுவர்: வாங்கய்யா, வாங்க. பெரிய பெரிய ஆளுங்கள்லாம் வந்திருக்கறத பாக்கும்போது சந்தோஷமா இருக்கய்யா. இன்னைக்கி என்னத்த பத்தி பேசப்போறோம்னு பாத்தா பயமாயிருக்குய்யா. நான் எக்குத்தப்பா என்னத்தையாவது சொல்லப்போயி எனக்கு எதிரா எங்க வீட்டாளும் சேந்துக்கிட்டு விளக்குமாத்த தூக்காம இருக்கணும். அதனால பாத்து பேசுங்கய்யா?

கவு: (அருகிலிருந்த செந்திலிடம்) டேய் சல்பேட் தலையா, இந்தாளுகூட வீட்டுலருக்கற ளுக்கு பயப்படுராறு பாத்தியா? என்ன சொல்றியே?

செந்: (ரகசிய குரலில் வாயை மறைத்துக்கொண்டு) அண்ணே அவரு என்னைக்காவதுதாண்ணே பயப்படுவாரு.. நீங்க தெனக்குமில்ல பயப்படுறீங்க?

கவு: (திரும்பி முறைக்கிறான்) டேய்.. வேணாம்.. எல்லாரும் இருக்காங்களே பாக்கறேன். வாயையும் அதையும் (சென்சாருக்கு பயந்துட்டார் போலருக்கு) மூடிக்கிட்டு இரு.

செந்: (வேண்டுமென்றே) வாயை சரி மூடிக்கறேன். என்னமோ அதையும்னீங்களே அதென்னண்ணே?

கவு: (செந்திலின் காதில் சொல்கிறார்)

செந்: அதான பாத்தேன். என்னடா அண்ணன் சுத்த தமிழ்ல பேசராறேன்னு.. வந்துருச்சு பாத்தீங்களா? அதான்ணே உங்க ஒரிஜினாலிட்டி.. அப்படியே இங்கயும் பேசுங்க.. எல்லரும் மெச்சிக்குவாங்க..

கவு: (ரகசியக்குரலில்) டேய் வேணாம்..

(நடிகவேள் இருவரையும் பார்த்து தன்னுடைய ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை திறந்து ஓரக்கண்ணால் முறைக்கிறார். இருவரும் கப்சிப்)

நடு: (நடிகவேளை பார்க்கிறார்) ஐயா.. இருக்கறவுகள்ல மூத்தவரே வாங்க.. வந்து உங்க கருத்த சொல்லுங்க..

எம்.ஆர்: (எழுந்து எல்லாரையும் ஒரு பார்வை பார்க்கிறார். மைக்கை பிடித்து இப்படியும் அப்படியும் ட்டிவிட்டு) எவன்டா அவன் இந்த மைக்கை வச்சது? என் குரலுக்கு இது ஒத்துவராதுன்னு தெரியாது.. மடப்பய மவன். (நடுவரை பார்க்கிறார்) என்னைய்யா இது.. இப்படீன்னு தெரிஞ்சா வந்திருக்கவே மாட்டேனே..

நடு: (அவரைப்பார்த்து தன் அகண்ட சிரிப்பு ஒன்றை உதிர்க்கிறார்) உங்க குரலுக்கு மைக்குன்னு ஒன்னு வேணுமாய்யா? தள்ளிவச்சிட்டு விஷயத்துக்கு வாங்கய்யா!

எம்.ஆர்: சரி.. நீங்க பெரியவங்களாச்சேன்னு ஒத்துக்கறேன். முதல்ல யார்றா இந்த பொம்பள? குஸ்புவா, கிஸ்புவா? அவ யாரு தமிழச்சியா? வெளியூருலருந்து வந்தவதானே, என்னத்தையோ சொல்லிட்டு போறான்னு விட்டுத்தள்ளாம நீங்க பண்றதல்லாம் சரியாடா? (பேசிக்கொண்டே கவுண்டமனியை பார்க்கிறார்)

கவு: (செந்திலிடம் ரகசிய குரலில்) டேய் இந்தாளு என்னா என்கிட்ட சொல்றாமாதிரி சொல்றான். நானா இந்த பொம்பளை சொன்னத பிடிச்சிக்கிட்டிருக்கே?

செந்: (வாயை மூடிக்கொண்டு) அண்ணே வேணாம். அந்த ஆளு ஏற்கனவே நம்மள பாத்து மொறச்சாரு.. சும்மா வாய மூடிக்கிட்டு கேளுங்க. சொல்லிட்டேன்.

எம்.ஆர்: (தனக்கே உரிய பாணியில் தோளை குலுக்கிக்கொள்கிறார்) டேய் இதெல்லாம் பெரிய விஷயமாடா? பாரின்லல்லாம் ..

கவு: (செந்திலிடம் ரகசிய குரலில்) ஆமா .. இவரு அப்படியே உலகம் முழுசும் சுத்திவந்திட்டாரு.. சென்னைய விட்டு வெளிய போயிருப்பானாடா இந்த ஆளு? வர்ற த்திரத்துல ஏதாவது பண்ணிருவனோன்னு பயமாயிருக்குடா. எதுக்கும் என்னை கெட்டியா பிடிச்சுக்கோ.. (செந்தில் அவருடைய கையை பிடித்துக்கொள்கிறார்)

எம்.ஆர்: (தொடர்கிறார்) அவனவன் சந்திரனுக்கு போலாமா.. சூரியனுக்கு போலாமான்னு ரிசர்ச் பண்ணிக்கிட்டிருக்கான்.. இவனுங்க என்னடான்னா (அரங்கத்திலிருந்த எல்லாரையும் சுட்டிக்காட்டுகிறார்.) ஒரு பொம்பள கல்யாணத்துக்கு முன்னாலயும் பின்னாலயும் எத்தன பேர் கூட வேணும்னாலும் படுக்கலாம்னு சொன்னத பெருசா எடுத்துக்கிட்டு.. டேய் (பெண்குரலில் உச்சஸ்தாயியில் பேசுகிறார்) தொடப்பக்கட்டய தூக்கிக்கிட்டு அலையறீங்களே.. உங்கள என்னன்னு சொல்றதுடா.. போக்கத்த பய மவனுவளா.. போங்கடா போய் வேலைய பாருங்க.. வந்துட்டானுங்க.. (கவுண்டமனியை பார்க்கிறார்) டேய்.. என்னா மொறைக்கிற? நேத்து பொறந்த பய.. ரெண்டு வாளப்பளத்த வச்சிக்கிட்டு ஒரு சொத்த சோக்கை சொல்லிட்டு.. என்னாடா.. பெரிய மனுஷன் மாதிரி நா பேசற எடத்துல நிக்கறதுக்கு ஒனக்கு யோக்கியத இருக்காடா? என்னா மொறக்கிற?

(கவுண்டமனி கோபத்துடன் எழுந்திருக்க செந்தில் ‘அண்ணே வேணாம்.’ என்றவாறு அவருடைய கையைப்பிடித்து அமர்த்துகிறார். சிறிது நேரம் அரங்கத்தில் கசமுசா சத்தம்.)

நடு: (தன் ட்ரேட் மார்க் புன்னகையுடன் குறுக்கிட்டு) அமைதி, அமைதி. நடிக வேள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டார்.. அவ்வளவுதான். (எம்.ர் ஐ பார்த்து) நீங்க தொடருங்கய்யா..

எம்.ஆர்: (அலட்சியத்துடன் எல்லோரையும் பார்க்கிறார்) என்னாங்கடா.. எல்லாருக்கும் நான் பேசறத பாத்தா கோபம் வருதா? யார்ரா இந்த பசங்கல்லாம்?

நடு: யாரையா சொல்றீங்க.. பிள்ளைங்க மிரள்துகள்ல?

எம்.ஆர்: (தன் பாணியில் கேலியுடன் வாயை கோணிக்கொண்டு தன் உடம்பு முழுவது குலுங்க உரக்க சிரிக்கிறார்) டேய் சின்ன பசங்களா! பயந்துட்டீங்களா? (அடிக்குரலில்) உங்கள இல்லடா.. (கைகளை தன் பின்னால் நீட்டி) தோ.. வெளியில அந்த பொம்பளைக்கி எதிரா கையில தொடப்பத்த வச்சிக்கிட்டு நிக்கறானுங்களே..

ஜன:(குறுக்கிடுகிறார்)ஐயா.. அவனுங்க, அவனுங்கன்னு சொல்லாதீங்கோ.. கோவம் வந்துறப்போவுது..

எம்.ஆர்: (குறுக்கே பேசியது பிடிக்காமல் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். ஜனகராஜை எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார். குரல் உயர்ந்து பெண் குரலாகிறது.) டேய்.. யார்ரா நீ? பேசிக்கிட்டிருக்கும்போதே குறுக்கால பேசுறே? கண் வேற உள்ள போய் உள்ள போய் வருது? நான் பேசி முடிச்சிட்டதுக்கப்புறம்தான் இங்க எல்லாரும் பேசணும். புரிஞ்சிதா.. தொலைச்சிப்புடுவேன், சாக்கிரதை (விரலை உயர்த்தி காட்டி எச்சரிக்கிறார். திரும்பி மிரண்டுபோய் அமர்ந்திருந்த நடுவரை பார்க்கிறார்.) ஐயா நடுவர் அவர்களே இந்த படுபாவி பய குறுக்கால பூந்ததுல நான் பேசிக்கிட்டிருந்ததையே மறந்துட்டேன். நான் என்னாய்யா சொல்லிக்கிட்டிருந்தேன்?

நடுவர்: (தயக்கத்துடன்) கையில தொடப்பம்..

எம்.ஆர்: ஆங்.. தொடப்பத்த வச்சிக்கிட்டு நிக்கறானுங்களே அவனுங்கள சொன்னேன்.. அவனுங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்.. டேய்.. போங்கடா போயி உம் பொண்டாட்டிங்க ஒளுங்கா இருக்கானுங்களான்னு பாருங்க.. (அடிக்குரலில் கண்ணடித்தவாறு) அவளுக எங்கங்க போறாளுகளோ யாரு கண்டா?

நடு: (தர்மசங்கடத்துடன் குறுக்கிடுகிறார்) ஐயா.. நாம பேசவேண்டியது குஷ்புவைப் பத்தின்னு நினைக்கிறேன்.

எம்.ஆர்: (தோள்களை உயர்த்தி, தலையை கவிழ்த்து நடுவரைப் பார்த்து கூழை கும்பிடு என்பார்களே அதுபோல் கும்பிடுகிறார்) மன்னிக்கணும் நடுவர் அவர்களே மன்னிக்கணும்.. கொஞ்சம் அதிகமா உணர்ச்சி (குரல் பெண் குரலாகிறது) வசப்பட்டுட்டேன் போலருக்குது.. இத்தோடு முடிச்சிக்கறேன்.. கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்யா..

நடு: உங்கள தடுப்பேனாய்யா.. சொல்லுங்க..

எம்.ஆர்: இந்த பொம்பள என்னாய்யா பேரு சொன்னீங்க.. கிஸ்புவா?

நடு: (தன்னுடைய ட்ரேட் மார்க் குரலில்) ஹாய்.. பாருய்யா.. பேரையே மறந்துட்டீங்க.. கிஸ்புன்னு சொல்லி வம்ப வெலைக்கி வாங்கிறாதீங்கய்யா? அவங்க பேரு குஷ்பு!

எம்.ஆர்: (அலட்சியத்துடன்) என்ன பேர் வச்சிக்கிறாளுகளோ.. பேர்லயே வில்லங்கம் இருக்குதே.. சரி.. ஏதோ ஒன்னு.. அந்த பொம்பள சொன்னது இந்த காலத்துக்கு ரொம்பவும் பொருத்தம்யா.. அதுல எந்த தப்பும் இல்ல.. (முழு உடலையும் ட்டிக்கொண்டு எல்லோரையும் பார்த்து கும்பிடுகிறார்) நா சொன்னதுல தப்பு இருந்தா, இருக்கும், கண்டிப்பா இருக்கும்.. மன்னிச்சிக்குங்க.. நா வரேன், நடுவர் அவர்களே..

(மேடையை விட்டு இறங்கி தன் இருக்கைக்கு செல்லும் வழியில் கவுண்டமனியையும் ஜனகராஜையும் முறைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து அலட்சியத்துடன் தன்னுடன் அமர்ந்திருந்த அனைவரையும் ‘எப்படி என் பேச்சு?’ என்பதுபோல் பார்க்கிறார். எல்லோரும் அவருடைய முகத்தை பார்க்க பயந்துகொண்டு எல்லோரும் நடுவரையே பார்க்கின்றனர்)

நடு: என்னா அருமையா பேசினார்யா நம்ம நடிகவேள். அவரு பேசுனத நா திருப்பி சொன்னா அது நல்லாருக்காதுய்யா. அது அவரோட கருத்துன்னு விட்டுருவோம்.. (தங்கவேலுவை பார்க்கிறார்) அடுத்த சீனியரய்யா நீங்க வாங்கய்யா..

(தொடரும்)

23 comments:

Anonymous said...

என்னாச்சி சார் உங்க பதிவில பின்னூட்டமே போடமுடியலை.
ஏதாவதுஏடாகூடமா பின்னூட்டம் வரும்னு கட் பன்னிட்டீங்களா?

உங்க பதிவுல முழுக்க முழுக்க காமடிதானே சார். எல்லாரும் நிச்சயமாஎஞ்சாய் பண்ணுவாங்க.கவலைப்படாதீங்க.
தொடர்ந்து ஜமாய்ங்க.

Anonymous said...

சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் உங்க பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போட்றதுக்கு ட்ரை பண்ணேன் முடியல.ஏன்?

Anonymous said...

:-))))))))))
;-)))))))))))
:-))))))))))))
:-)))))))))))))

படிப்படியா காமெடியின் தீவிரம் கூடிக்கிட்டே போவுதுங்க.

இப்படியே போனீங்கன்னா உங்களுக்கு காமெடி கிங்குன்னு பேர் வச்சிரலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி சம்பத்,

அலெக்ஸ் பாண்டியன் சொன்னதுக்கப்புறம்தான் தெரிஞ்சது.
என்னோட பதிவின் தலைப்பு ரொம்ப நீளமாம். அதான் காரணம்.


குறைச்சிட்டேன்.

டிபிஆர்.ஜோசப் said...

சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் உங்க பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போட்றதுக்கு ட்ரை பண்ணேன் முடியல.ஏன்? //

சம்பத்துக்கு தந்த பதில பாருங்க!

டிபிஆர்.ஜோசப் said...

படிப்படியா காமெடியின் தீவிரம் கூடிக்கிட்டே போவுதுங்க.


பட்டமெல்லாம் ஒன்னும் வேணாங்க. படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க. அதுவே போதும்.

Anonymous said...

Super Comedy. Keep it up.

Anonymous said...

நடிகவேளை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்திட்டீங்க. ஆனா கொஞ்சம் லாங்வேஜை மாடரேட் பண்ணியிருக்கலாம். நைசா முதல்லயே யாரும் திட்டி பின்னூட்டம் போடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க.

Anonymous said...

கலந்துரையாடலின் வேகத்தில் சில தவறான வார்த்தைகள் (சன் டிவி கலந்துரையாடலில் நடந்ததுபோல) வந்து விழ வாய்ப்புண்டு. "

அதெப்படி சார் நீங்கதானே வசனகர்த்தா? உங்கள மீறிக்கிட்டு உங்க பாத்திரங்கள் பேசமுடியுமாஎன்ன?

Anonymous said...

கலந்துரையாடலின் வேகத்தில் சில தவறான வார்த்தைகள் (சன் டிவி கலந்துரையாடலில் நடந்ததுபோல) வந்து விழ வாய்ப்புண்டு. /

எனக்கு முன்னால ஒருத்தர் கேட்டுட்டாலும் எனக்கும் அப்படித்தான் கேக்க தோணுது. தவறான வார்த்தைகள் நீங்க எழுதாம வருமா?

டிபிஆர்.ஜோசப் said...

முந்தைய இரண்டு பின்னூட்டங்களுக்கும் ஒரே பதில்தான்.

என்னுடைய நேற்றைய தங்கவேலுவின் பதிவையும் அதற்கு முந்தைய இரண்டு பதிவுகளையும் நீங்கள் படித்திருந்தால் ஒரு வித்தியாசம் தெரியும்.

வசனம் எழுதுபவர் அதை பேசும் பாத்திரங்களைப் பொறுத்துத்தான் எழுதுவார். முக்கியமாக நடிகவேளுடைய படங்களை பார்த்தாலே புரியும் நான் ஏன் அப்படி எழுதினேன் என்று. நடிகவேள் எழுத படிக்க தெரியாதவர் என்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் மேக்கப் போட்டுக்கொள்ளும் சமயத்தில் வசனத்தை ஒருவர் படிக்க அவர் அப்படியே கண்களை மூடி கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு அவருடைய பாணியில் வசனத்தை பேசி விடுவாராம். ஆகவே வசனகர்த்தா என்னஎழுதினாலும் அவருடைய வாயிலிருந்து அவருடைய பாணியில்தான் வரும்.

அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

Anonymous said...

கவு: (செந்திலிடம் ரகசிய குரலில்) டேய் இந்தாளு என்னா என்கிட்ட சொல்றாமாதிரி சொல்றான். நானா இந்த பொம்பளை சொன்னத பிடிச்சிக்கிட்டிருக்கே?

இடையில இடையில க.மணியும் செந்திலும் அடிக்கற கமென்ட்ஸ் கனகச்சிதமா இருக்கு சார்.

Anonymous said...

ஆகவே வசனகர்த்தா என்னஎழுதினாலும் அவருடைய வாயிலிருந்து அவருடைய பாணியில்தான் வரும்.

அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.//

நல்லா சாணக்கியத்தனமா சமாளிக்கிறீங்கங்க.

ஜமாய்ங்க. நல்லாருக்கு. நாளைக்கா, திங்க கிழமைக்கா? பாலையா இப்படி பேசமாட்டாருன்னு நினைக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

நாளைக்கா, திங்க கிழமைக்கா? பாலையா இப்படி பேசமாட்டாருன்னு நினைக்கிறேன். ""

திங்கள் கிழமைதான். பாலையா அப்படி பேசமாட்டார்னு நினைக்கிறேன். இப்ப சொல்ல முடியாது.

kirukan said...

nice comedy

-L-L-D-a-s-u said...

Good comedy .. enjoyed..

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி கிறுக்கன்,

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி LLB Dass.

உங்க லார்ட் லபக்குதாஸ் பேரு நல்லாயிருக்குது தாஸ்.

துளசி கோபால் said...

எம். ஆர். பேச்சு அப்படியே சூப்பர்.

கொன்னுட்டீங்க போங்க.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி துளசி.
என்னால முடிஞ்ச அளவுக்கு நகைச்சுவையா எழுதணும்னு ஆசை. அதை முடிஞ்ச அளவுக்கு செய்யறேன்.

பரஞ்சோதி said...

அண்ணா,

நகைச்சுவையில் உங்களை அடிக்க யாருமே இல்லை.

தனி ஆளாக நம்ம லாரா மாதிரி அடித்து கலக்குறீங்க. பாராட்டுகள்.

G.Ragavan said...

ஜோசப் சார். சூப்பர் சார். பிரமாதம் போங்க. வயித்து வலிதான்.

குமரன் (Kumaran) said...

இன்னைக்கு தான் இந்த கலந்துரையாடலைப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் சார். சூப்பரா இருக்குது. நடிகவேள் நல்லாவே வசனம் பேசுறார். :-)