1.11.06

சூரியன் 137

சேதுமாதவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

அன்று காலையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவருக்கு ஏற்பட்ட தோல்விகளும், ஏமாற்றங்களூம் அவரை நிலைதடுமாற வைத்திருந்தது.

முதலில் அந்த முரளி..

காலையில் மாதவன் காரில் வந்து இறங்கும் நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு வராதிருந்தது.

பிறகு அவருக்கு தலைமையலுவலக ஊழியர்கள் வரவேற்பளித்தபோது வந்து கலவரம் உண்டாக்காததுடன் அவனுடைய அசிஸ்டெண்ட்டையனுப்பி அவருக்கு வரவேற்புரையாற்ற வைத்தது.

அடுத்து அவருக்கு தெரியாமல் பாபு சுரேஷ் வந்தனாவின் பதவிக்கு நியமிக்கப்பட்டது..

தனக்கு சாதகமாக இருந்த இயக்குனர் சேதுமாதவன் தன்னுடைய போர்ட் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தது.

இத்தனை போறாதென்று தனக்கு சற்று முன் வந்த தொலைபேசி செய்தி.

‘சார்.. எங்கள புடிச்சி வச்சிருந்த அந்த தனபால்சாமி எஸ்.பி ஒங்க சேர்மன பாக்கறதுக்கு வந்திருக்கார் சார்..’ அவருடைய அடியாட்களுள் ஒருவனான பத்மநாபன்.

சேதுமாதவன் அதிர்ந்து போனார். ‘எந்தாடா பறயனெ? அயாளோ.. ஒனக்கெப்படி தெரிஞ்சிது?’ என்று இறைந்தார். பிறகு சுதாரித்துக்கொண்டு ‘சரி.. ஞான் நோக்கிக்கோளாம்.. பேடிக்கேண்டா.’

ச்சை.. நேத்து அந்த பாபு சுரேஷோட பொண்ணெ எப்போ தேடி குடுக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணி நம்ம ஆளுங்கள அனுப்புனமோ அப்போ புடிச்ச சனி.. இன்னும் விடமாட்டேங்குது..

நேத்தைக்கே மினிஸ்டரோட பி.ஏவை கூப்ட்டு பேசினோமே.. பிறகெப்படி?

உடனே இண்டர்காமை எடுத்து சேர்மனுடைய காரியதரிசியை அழைத்தார்.

மறுமுனையில் சுபோத் எடுத்ததும் எரிந்து விழுந்தார். ‘ஏய் மிஸ்டர்.. Chairman is free?’

சுபோத்துக்கு அன்று போர்ட் ரூமில் வைத்து தன்னுடைய முகத்தைக் கண்டதும் எரித்துவிடுவதுபோல் சேதுமாதவன் பார்த்திருந்ததிலிருந்தே கலங்கிப் போயிருந்தான். இப்போது சேர்மனைப் பார்த்து தன்னைப் பற்றி ஏதாச்சும் புகார் கூறப்போகிறாரோ என்று அஞ்சினான். ஆகவே சேர்மன் தற்சமயம் ஒரு போலீஸ் அதிகாரியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்று கூறினால் நம்புவாரா என்று குழம்பி ஒரு நிமிடம் என்ன சொல்வதென யோசித்தான்.

ஆனால் ‘என்ன மேன்.. நேத்தைக்கி மாதிரி இன்னைக்கிம் ஏதாச்சும் பொய் சொல்லி நான் சேர்மன மீட் பண்ண விடாம இருக்கலாம்னு ப்ளான் பண்றியா? தொலைச்சிருவேன்.. Is he free or not?’ என்று சேது எதிர்முனையிலிருந்து மிரட்ட வேறு வழியில்லாமல், ‘Sir.. there is a Policer officer in his cabin.. He told me not to allow anyone till...’

‘Ok..Ok.. Call me when he is free..’ So.. அந்த பத்மநாபன் சொன்னது சரிதான் ..

இப்ப என்ன செய்யறது? எதுக்காக வந்திருப்பான்.. பத்மநாபனையும், அந்த நம்பியாரையும் பிடிச்சதப் பத்தியாருக்குமோ..

இல்ல அந்த கோயம்புத்தூர் பார்ட்டிய புடிச்சி ரெண்டு நாள் அடைச்சி வச்சிருந்தோமே அதப்பத்தி இருக்குமோ..

எதுவாருந்தா என்ன? Why should I be afraid of anyone.. I did not do anything illegal.. I don’t think anyone could connect me personally to these two incidents..

தைரியமிருந்தா மாதவன் நம்மள கூப்ட்டு கேக்கட்டுமே..

சரி.. இப்ப சோமசுந்தரத்தோட ரிசிக்னேஷன்.. அதான் முக்கியம்.

எப்படி கரெக்டா போர்ட் நடக்கற நேரம் பார்த்து அந்த ஃபேக்ஸ் வந்தது? யார் அனுப்பியிருப்பா? இன்னைக்கி சாயந்தரமோ.. அல்லது நாளைக்கு காலைலயோ வரப்போற நியூஸ் எப்படி அதுக்குள்ள ஃபேக்ஸ் மூலமா வந்தது?

அந்த சுபோத் பயல ரூமுக்கு கூப்ட்டு மிரட்டுனா என்ன? மரியாதையா சொல்லிரு.. சொன்னா நேத்தைக்கி நீ சொன்ன பொய்ய மறந்துடறேன்.. இல்லே மவனே நீ தொலைஞ்சேன்னு ரெண்டு போட்டா கக்கிரமாட்டான்..?

அவனெ மெரட்டி வேற யாரும் தெரிஞ்சிக்கறதுக்கு முன்னால நாம கண்டுபிடிக்கணும்..

மீண்டும் இண்டர்காமை எடுத்து சேர்மனின் காரியாரியாலயத்தை அழைக்க ரிங் போய்க்கொண்டேயிருந்தது..

எரிச்சலுடன் ஒலிவாங்கியை ஓங்கியறைந்ததும் அது உடனே ஒலிக்க எடுத்த, ‘ஹலோ’ என்று உறுமினார்.

‘சார்.. சேர்மன் ஈஸ் லீவிங்.. எல்லா எக்ஸ்க்யூட்டிவ்சும் லாபியில அவர வழியனுப்பறதுக்கு நிக்கிறாங்க.. நீங்க..’ அவருடைய பி.ஏ.

அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘So what? Don’t disturb me for such silly things hereafter.’ என்று பாய்ந்தார்.

Idiots.. கூஜா தூக்கிப் பசங்க.. இவன் என்ன பெரிய இவனா? இவன் வரும்போதும் போம்போதும் போய் நிக்கறதுக்கு?

வச்சிக்கறேண்டா.. மாதவன்.. வச்சிக்கறேன்.. எண்ணி ஒரு வாரம் தாங்கறியான்னு பாக்கறேன்..

புறப்பட்டு வீட்டுக்குப் போய் நன்றாக குடித்து இன்றைய தோல்விகளை மறக்கவேண்டும் என்று நினைத்தவாறு எழுந்தார்..

****

‘என்ன டாட்.. ஏதோ யோசனையா இருக்காப்லருக்கு.. நா வந்து ஒங்க முன்னால பத்து நிமிஷத்துக்கும் மேல ஒக்காந்திருக்கேன்.. நா வந்தத கூட நோட் பண்ணாம அப்படியென்ன யோசனை டாட்?’

சோமசுந்தரம் திடுக்கிட்டு நிமிர்ந்து தன் எதிரில் புன்னகையுடன் அமர்ந்திருந்த தன் மகள் பூர்னிமாவைப் பார்த்தார்.

‘ஒன்னுமில்ல பூர்னி.. I am little tired.. I was in fact dozing off.. அதான் நீ வந்தத கவனிக்கலை.. சொல்லும்மா.. இன்னைக்கி ஹாஸ்ப்பிட்டல்ல ப்ராப்ளம் ஏதும் வரலையே..’ என்றவன் தன் மகளின் முகம் போன போக்கைப் பார்த்து சட்டென்று, ‘வராதுன்னு தெரியும்.. சும்மா கேட்டேன்.. Everything went smoothly, No?’ என்றார் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்தவாறு..

பூர்னிமா தன் தந்தையையே பார்த்தாள். ‘Come out with it Dad.. What’s bothering you? ஆடிட்டர் அங்கிள் கூட நா எதிர்ல வர்றதையும் கவனிக்காம போறார்? Is there anything serious? Is it the loan at that finance company? Are they pressing you to repay that?’

எப்படி எப்பவும் மாதிரி இதையும் கரெக்டா சொல்றா? Does she know mind reading too? இவளுக்கு தெரியாததுன்னு ஏதாச்சும் இருக்கா என்ன? இவளிடம் மறைத்து பயனில்லை என்று நினைத்தார். ஒருவேளை இவளே அதற்கு ஒரு தீர்வும் சொல்லலாமே..

ஆமாம் என்றவாறு தலையை அசைத்தார் மெதுவாக. ‘It is more serious than you think Poorni. It has come out in the papers..’

பூர்னிமா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்துவிட்டு அவருடைய மேசையின் மீது கிடந்த கடிதம் போன்ற ஒரு காகிதத்தைப் பார்த்தாள்.

அவளுடைய பார்வையின் பாதையை கவனித்த சோமசுந்தரம் அன்று பகல் வங்கி சேர்மன் அலுவலகத்திற்கு வந்த ஃபேக்சின் நகல¨ அவளிடம் நகர்த்தினார்.

பூர்னிமா அதை முழுவதுமாக படித்து முடித்து தன் தந்தையிடமே நகர்த்திவிட்டு அவரைப் பார்த்தாள். ‘So.. this is it.. As you said.. it is indeed serious Dad..’ என்றவள் மெள்ள எழுந்து அறைக்கு எதிர் புறத்திலிருந்த ஜன்னல் வழியாக பத்து மாடிக்கு கீழே மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களைப் பார்த்தாள்..

தூரத்தில் மாலைச் சூரியன் முழு வட்ட வடிவத்தில் மேகங்களிலிருந்து அடிவானத்தில் அழகாக விழுந்துக்கொண்டிருந்தது..

சோமசுந்தரம் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து அறையைக் கடந்து அவளருகில் சென்று நின்றார்.

‘என்ன பூர்னி யோசிக்கறே.. You have any solution ?’

பூர்னிமா திரும்பி தன் தந்தையை பார்த்தாள்.

‘நீங்க இதுக்கப்புறமும் போர்ட்ல கண்டினியூ பண்றது சரியாருக்காதே டாட்..’

சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்து ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார். ‘I know.. I resigned in the afternoon..’ என்றார் மிருதுவாக..

பூர்னிமா தன் தந்தையை நெருங்கி அவருடைய தோள்களில் தன் தலையை சாய்த்தாள்.. இடக்கரத்தை தன் தந்தையின் இடுப்பைச் சுற்றி வளைத்து.. ‘You did the right thing Dad.. You had no choice.. did you?’ என்றாள் மெல்லிய குரலில்..

சோமசுந்தரம் பதிலளிக்காமல் தூரத்தில் சாலையில் பொட்டுக்களாய் தெரிந்த வாகன விளக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.. இதுவே சம்மராருந்தா வெய்யில் இன்னும் இறங்கியிருக்காது.. அக்டோபர் கூட இன்னும் முடியல அதுக்குள்ள ஆறு மணிக்கெல்லாம் எப்படி இருட்டிப் போயிடுது?

‘What are you planning to do Dad? I mean the vacancy in the Board.. You have any names in your mind?’

ஆமாம் என்றவாறு தலையை அசைத்த சோமசுந்தரம் திரும்பி தன் இருக்கையை நோக்கி நடந்தார். பூர்னிமாவும் அவரைத் தொடர்ந்து சென்று அவரெதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்தாள்..

சில நொடி நேர மவுனத்திற்குப் பிறகு..

‘Is my name there in your list Dad?’

சோமசுந்தரம் திடுக்கிட்டு நிமிர்ந்து தன் மகளைப் பார்த்தார்..

‘Are you really serious.. Poorni?’

‘Why not?’

‘I don’t know Poorni, I really don’t know..’ என்ற சோமசுந்தரம் சட்டென்று சினுங்கிய தன் செல்ஃபோனைப் பார்த்தார்..

பாபு சுரேஷ்.. இவன் எங்க இந்த நேரத்துல என்ற எரிச்சலுடன், ‘Yes.. But I am sorry Mr.Babu.. I am little busy.. Can you call me in the morning?’ என்றவாறு இணைப்பைத் துண்டித்தார்..

தொடரும்..

10 comments:

நன்மனம் said...

சார் இதுல

//தனக்கு சாதகமாக இருந்த இயக்குனர் சேதுமாதவன் தன்னுடைய போர்ட் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தது.//

சோமசுந்தரம்னு இருக்கனும்னு நினைக்கிறேன். சரியா.

நல்ல விருவிருப்பா இருக்கு... பூரணி "எண்டரி" நல்ல திருப்பமா இருக்கும்னு யூகிக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க நன்மனம்,

சோமசுந்தரம்னு இருக்கனும்னு நினைக்கிறேன். சரியா.//

ரொம்ப சரி. நன்றி:)

siva gnanamji(#18100882083107547329) said...

//அவருக்குத் தெரியாமல் பாபு சுரெஷ்
வந்தனாவின் இடத்திற்கு அமர்த்தபட்டது//
?????????

//இயக்குனர் சேதுமாதவன் ...ராஜிநாமா செய்தது//
???????????

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இரண்டாவது கேள்விக்கு பதில் ஏற்கனவே நன்மனம் பின்னூட்ட பதிலில் அளித்தாகிவிட்டது.

முதல் கேள்வி? சேதுமாதவனை கலந்தாலோசிக்காமல்தானே பாபு சுரேஷை சோமசுந்தரத்தின் பரிந்துரைபேரில் நியமிக்கப்பட்டார்?

பேசாம ஒரு ப்ரொஃபஷனல் எடிட்டர வச்சிக்கலாம்னு பாக்கேன்.. நீங்க ரெடியா?

அருண்மொழி said...

சார், கதைய தொடர்ந்து எழுதினால் இந்த குழப்பங்கள் வராது :-)

டிபிஆர்.ஜோசப் said...

கதைய தொடர்ந்து எழுதினால் இந்த குழப்பங்கள் வராது //

உண்மைதான் அருண்மொழி,

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இதற்கென நேரம் ஒதுக்க இயலவில்லை..

இன்னும் இரண்டு வாரங்களுக்கு இப்படி விட்டுவிட்டுத்தான் வரும்..

பொறுத்துக்குங்க..

siva gnanamji(#18100882083107547329) said...

கொஞ்சநாளக்கி திரும்பிப் பார்க்காமெ
இருக்க இப்படி பீல்டுவொர்க்கா?

krishjapan said...

புரியுதுங்க சார். அடுத்தது எப்பன்னு நாங்க நச்சரிப்பது, உங்க எழுத்தின் ஈர்ப்பால்தான் என்பதை, தாங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஓய்வாய் இருக்கும்போதும், இளைப்பாற வேண்டும் என நினைக்கும்போதும் எமக்கு சூரியனைத் தாருங்கள். (ஆக, என்னுலகம் இன்னும் தள்ளிப் போகும் என்பது என் கணிப்பு...)

டிபிஆர்.ஜோசப் said...

கொஞ்சநாளக்கி திரும்பிப் பார்க்காமெ
இருக்க இப்படி பீல்டுவொர்க்கா? //

என்ன பண்றது சார்? பொளப்பும் நடக்கணுமே..:(

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

ஓய்வாய் இருக்கும்போதும், இளைப்பாற வேண்டும் என நினைக்கும்போதும் எமக்கு சூரியனைத் தாருங்கள்.//

இப்பொழுதெல்லாம் இரவில் வீடு திரும்பவே ஒன்பது மணி ஆகிவிடுகிறது. அதன் பிறகு எழுத என் மனைவி விடுவதில்லை.

ஞாயிற்றுக் கிழமைகளில் லாப் டாப்பைத் திறந்தாலே மகள் சண்டைக்கு வந்துவிடுவாள்..

எல்லாம் அந்த சிக்ககுனியாவால்தான்.. மனைவியும் மகளும் எனக்கு வார்டன்களாகிவிட்டார்கள்.. சூழ்நிலைக் கைதி என்பார்களே அந்த நிலைதான்..