30.11.05

குஷ்பு-நகைச்சுவை கலந்துரையாடல்!! - 4

கலந்துரையாடலின் நடுவர்: சாலமன் பாப்பையா

பங்கு கொள்வோர்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா (எம்.ஆர்)
டி.எஸ். பாலையா (பா)
தங்கவேல், (தங்)
கவுண்டமனி, (கவு)
செந்தில், (செந்)
ஜனகராஜ் (ஜன)
வடிவேல் & (வடி)
பார்த்திபன். (பார்)

--

நடு: (பார்த்திபனையும் கவுண்டமனியையும் மாறி, மாறி பார்க்கிறார்) என்னய்யா.. யார் பேசறதுன்னு தீர்மானிச்சிட்டீங்களா?

பார் & கவு: (ஒரே நேரத்தில்) அவரு பேசட்டும்.

(நடுவரோடு சேர்ந்து அரங்கத்தில் இருந்தவர் அனைவரும் சிரிக்கின்றனர்.)

நடு: அதான்யா வேணும். ஒருத்தர் இன்னொருத்தருக்காக விட்டு கொடுக்கறது.. எய்யா, பார்த்திபன் நீங்க வாங்க.. ஏன்னா இதுவரைக்கும் பேசினவங்க எல்லாம் காமடியாத்தான் பேசினாங்க.. பெருசா ஒன்னும் எடுபடல.. நீங்க சீரியசாவும் நடிச்சிருக்கீங்க.. (வடிவேலுவை காட்டி) இவரோட சேர்ந்து காமெடியும் பண்ணியிருக்கீங்க.. அதனால (கவுண்டமனியை காட்டி) அய்யா உங்களுக்கப்புறம் பேசட்டும். நீங்க வாங்க.

பார்: (கவுண்டமனியைப் பார்த்து ஒரு நன்றி பார்வையை வீசிவிட்டு மேடையேறுகிறார்) அய்யா நடுவர் அவர்களே நீங்கள் தலைமையேற்றி நடத்தியிருக்கின்ற நிறைய பட்டி மன்றங்களை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். உங்களுடைய தலைமையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் முதற்கண் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்களுக்கும் என் திரைப்பட நண்பர்களுக்கும் வணக்கம்.

வடி: (தனக்குள்) இவன் என்னா பெரிய பேச்சாளி மாதிரி ஆரம்பிக்கிறான்? நல்லா மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான் போலருக்குது. டீப்பா கேப்போம். அப்பத்தான் நம்ம டர்ன் வர்றப்போ பேசறதுக்கு வசதியா இருக்கும்.

கவு: (செந்திலிடம்) டேய் என்னாடா இவன் பெரிசா டைலாக்கெல்லாம் உடுறான்.

செந்: ஆமான்ணே.. உங்களால இப்படியெல்லாம் பேசமுடியுமாண்ணே, பாத்துக்குங்க, அப்புறம் மைக்கை புடிச்சிக்கிட்டு முளிக்காதீங்க?.

கவு: இவனை மாதிரி இவன்தான்டா பேசுவான். நான் எப்படி பேசறது?

செந்: என்னண்ணே ஜோக்கா? பேசாம அவரு பேசறத கேளுங்க.

பார்: நான் இப்போது பேச வந்திருக்கும் தலைப்பைப் பற்றி ஒரு நிமிடம். திருமதி குஷ்புவின் கருத்துக்கள் சரியா, தவறா என்பதல்ல நடுவர் அவர்களே முக்கியம். அவர் எந்த சூழலில் அப்படி பேசினார் என்பதையும் பார்க்க வேண்டும்.

நடு: (குறுக்கிட்டு) சரியா சொன்னார்யா. (தங்கவேலு, பாலையாவை பார்க்கிறார்) இந்த விஷயத்த கோட்டை விட்டுட்டீங்களேய்யா..(சிரிக்கிறார். தங்கவேலுவும், பாலையாவும் ஒருவரையொருவர் பார்த்துகொள்கிறார்கள்.)

பார்: ஆம் நடுவர் அவர்களே. வட இந்திய பத்திரிகையான இந்தியா டுடே.. அந்த பத்திரிகையின் பெயரைப் பாருங்கள். ‘இன்றைய இந்தியா’. அந்த பத்திரிகையில வருகிற கட்டுரைகள் எல்லாமே முற்போக்கான சிந்தனைகளை பரப்புகின்றவைகள்தாம். திருமதி குஷ்பு அவர்களை இன்று இந்தியாவில் மிகவும் கவலையளிக்கின்ற வகையில் பரவியிருக்கும் எய்ட்ஸ் நோய்க்கொல்லியைப் பற்றி பத்திரிகை நிரூபர் சில கேள்விகளைக் கேட்கின்றார். திருமதி குஷ்பு அவர்கள் அவற்றுக்கு பொருத்தமான பதில்களை அளிக்கிறார். சில பதில்கள் சர்ச்சைக்குரியதாகிப் போகிறது. மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று தமிழகத்திலுள்ள சில கட்சிகள் அவற்றை கொச்சைப்படுத்தி கொட்டமடிக்க துவங்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் தன்னிச்சையாக கட்சி சாரிபின்றி நடக்கிறதென்பதெல்லாம் காதில் பூச்சுட்டும் வேலை நடுவர் அவர்களே.

நடு: (சிரிப்புடன்) ஹாய்.. ஹாய்.. இப்பத்தான்யா சூடு பிடிக்கிது..

பார்: நடுவர் அவர்களே.. (குரலை உயர்த்தி) நம் நாட்டில் ஆண்டான்டு காலமாக கலாச்சாரம், கலாச்சாரம் என்ற ஒரு அழுக்குப் பிடித்த போர்வைக்கு பின்னால் சில பச்சோந்தி பகுத்தாளர்கள் ஒளிந்துகொண்டு நயவஞ்சக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜாதிப் பின்னணியுடன் அட்டூழியங்கள் செய்துக்கொண்டிருக்கும் கட்சிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

நடு:(குறுக்கிட்டு) எய்யா.. இதெல்லாம் தேவைதானா.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டு உங்களுக்கும் ஏதாவது..

பார்: (கோபத்துடன்) நடுவர் அவர்களே இக்கலந்துரையாடல் வெறும் வேடிக்கை பேசிவிட்டு செல்வதெற்கென்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் இது ஒரு நகைச்சுவை நடிகர்களின் கலந்துரையாடல் என்று தெரிந்திருந்தும் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். என் கருத்தை தெள்ளந்தெளிவாக கூறிவிட்டுத்தான் அமர்வேன். தயவு செய்து என்னை பேசவிடுங்கள் நடுவர் அவர்களே.. (உணர்ச்சிவசப்பட்டு கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீரை சுண்டிவிடுகிறார்)

கவு: (செந்திலிடம்) டேய் இவன் ஏதோ வசனம் எழுதிக்கிட்டு வந்து எடுத்துவிடறான்டா.. (செந்தில் மெய்மறந்து பார்த்திபனை பார்த்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார்) டேய்.. உன்னத்தாண்டா என்ன அப்படி வாய பொளந்துக்கிட்டு பாக்கறே.. ஈ, கீய் விழுந்துறப்போவுதுறா.. (அவர் கேட்காததுபோல் இருக்கவே) பார்றா.. கூப்டதுகூட காதுல விழல.. (சட்டையை பிடித்து இழுக்கிறார்) டேய்.. ஃபுட்பால் தலையா.. டேய்.. போறுன்டா அப்படியே போய் அவன் மேல ஒட்டிக்கப் போறே..

நடு: (கவுண்டமனியை பார்த்து சிரிக்கிறார்) எய்யா.. அவரை விட்டுருங்களேன்யா.. அவர்தான் மெய்மறந்து இருக்காருல்லே..

செந்: (திடுக்கிட்டு எழுந்து நிற்கிறார்) ஐயா.. கூப்டீங்களாய்யா..

கவு: அட கஷ்ட காலமே.. டேய், கண்ண திறந்துக்கிட்டே தூங்கறியா? அதான பார்த்தேன்.. உக்கார்றா.. பேச்ச கேளு.. என்னமா டயலாக் உடறான்டா..

பார்: (நடுவரைப் பார்க்கிறார்) நடுவர் அவர்களே நான் ஒன்று கேக்கறேன். எழுத்து சுதந்திரத்தை எத்தனையோ பத்திரிகைகள், குறிப்பாக தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளை சார்ந்துள்ள பத்திரிகைகள் தவறாக பயன்படுத்தியுள்ளன. உண்டா, இல்லையா?

நடு: (சங்கடத்துடன் இருக்கையில் நெளிகிறார்) அய்யா.. நீங்க எங்க வர்றீங்கங்கறது புரியுது.. ஆனா அதுக்கு இது இடமில்லேயேய்யா?

பார்: (பிடிவாதத்துடன்) இல்லை ஐயா. நான் கேட்டதற்கு பதில் கூறுங்கள். உண்டா, இல்லையா?

நடு: (சிரிக்கிறார்) விடமாட்டீங்க போலருக்குதே.. உண்டுய்யா.. அது எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாச்சே..

பார்: அப்படி எழுதுகிற பத்திரிகைகள எதிர்த்து இந்த கட்சிகள் என்றைக்காவது போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனவா?

நடு: (சிரித்து மழுப்புகிறார்)

பார்: இல்லையே. நடிகைகளைப் பற்றி நாள் தவறாமல் கேவலப்படுத்தி எழுதி வருகிறது ஒரு பத்திரிகை. குறிப்பாக அதனுடைய வார இதழில் நடிக, நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி கேவலமாக எழுதிக்கொண்டேதான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. கேட்டால் பொது வாழ்க்கையென்று வந்துவிட்டால் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார்கள். இதென்னய்யா நியாயம்?

கவு: (செந்திலிடம்) டேய்.. இவன் உண்மையிலேயே நல்லாத்தான் பேசறான். நம்மளால இந்த மாதிரி பேச முடியும்னு நினைக்கறே..

செந்: (பதிலில்லை)

கவு: டேய் மறுபடியும் தூங்கறியா?

செந்: (திடுக்கிட்டு திரும்புகிறார்) அண்ணே சும்மாருங்கண்ணே.. ஒரு நல்ல விஷயத்த கேக்க விடமாட்டீங்களே..

கவு: (சலிப்புடன்) சர்றா.. கேட்டுத் தொலை..

நடு: (சங்கடத்துடன்) அய்யா.. நீங்க சொல்றதும் நியாயமாத்தான் தெரியுது.. ஆனா..

பார்: அதப்பத்தியெல்லாம் பேசறதுக்கு இது ஏத்த இடமில்லேங்கறீங்க?

வடி: (எழுந்து நின்று பார்த்திபனை பார்க்கிறார்) ஏம்பா.. நடிகர் சங்கத்துல பேச வேண்டிய நேரத்துலயெல்லாம் பேசாம இருந்துட்டு இங்க வந்து எக்குத்தப்பா பேசறே?

பார்: (சிரிக்கிறார்) அய்யா.. என்னோட நண்பருக்கு இப்படி யாருக்கும் புரியாத பாஷையில் பேசுவதுதான் பிடிக்கும் (ஒரு கையால் முகத்தை நடுவரிடமிருந்து மறைத்துக்கொண்டு) டேய் உக்கார்றா..

கவு: (எழுந்து நிற்கிறார்) ஏம்பா அவரு கேக்கறது நியாயம்தானே.. உக்கார்றான்னா சரியாப் போச்சா.. (செந்திலிடம்) டேய் நீ என்னா சும்மாயிருக்கறே.. சொல்றா.. நம்ம சங்க கூட்டத்துல அந்த அம்மாவ பத்தி தீர்மானம் பாஸ் பண்ணப்ப இந்தாளு சும்மாத்தான இருந்தாரு?..

செந்: (கவுண்டமனியின் கையைப் பிடித்து அமரச் சொல்கிறார்) அண்ணே.. சும்மா இருங்கண்ணே.. நாமளே நமக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு.. பாருங்க.. எல்லாரும் நம்மளயே பாக்கறாங்க.. தயவு செஞ்சி உக்காருங்க..

பார்: (நடுவரை பார்த்து) இந்த இரு நண்பர்களும் கூறுவது சரிதான் நடுவர் அவர்களே.. நான் அன்று மெளனம் சாதித்தது உண்மைதான். அதற்காக வெட்கப்படுகிறேன். அது ஒரு கோழைத்தனமான செயல் என்பதை இப்போது உணர்கிறேன்.

கவு: பல்டியடிச்சிட்டான் பாத்தியா? பயங்கரமான ஆளுடா சாமி.

செந்: சரி விடுங்கண்ணே..

கவு: டேய் பின்ன என்ன பிடிச்சா வச்சிருக்க முடியும்? ஆனா ஒன்னுடா.. இவன் நம்ம சங்க மீட்டிங்க்ல வந்து இன்னைக்கி பேசினதுக்காக வெட்கப்படுகிறேன்னு சொன்னாலும் சொல்வான்.. பாத்துக்கிட்டேயிரு.

நடு: எய்யா பார்த்திபன். நீங்க சொல்லி முடிச்சாச்சாய்யா?

பார்: என்னுடைய கருத்து இதுதான் நடுவர் அவர்களே. குஷ்பு சொன்னது தப்பேயில்லை.. அவர்களுடைய உள் நோக்கம் நிச்சயம் எல்லா பெண்களும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல.. மாறாக அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதை அவர்கள் எடுத்து கூறிய முறையில் வேண்டுமானால் தவறு நேர்ந்திருக்கலாம். அதற்கு நிரூபரின் தவறான கேள்வி கேட்கும் உத்திகளும் முக்கிய காரணம் என்றுதான் நான் சொல்வேன்.

நடு: (குழப்பத்துடன்) புரியலையேய்யா.

பார்: நடுவர் அவர்களே அரசியலில் மிகவும் அனுபவமுள்ள தலைவர்களே கூட சில சமயங்களில் நிரூபர்களின் கேள்வியின் பின்னாலுள்ள பொருளை சரிவர புரிந்துகொள்ளாமல் பதில் கூறிவிட்டு பிறகு சர்ச்சைக்குள்ளாயிருப்பதைப் பார்த்திருக்கிறோம். இல்லையா?

நடு: (ஆமாம் என்பதுபோல் தலையாட்டுகிறார்)

பார்: அதே மாதிரிதான் குஷ்புவும். அதற்காக அவர்கள் கண்களில் நீர் மல்க பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை இப்படி நடுவீதிகளில் கொடும்பாவி எரித்தும், தமிழகத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்து அலைக்கழிப்பதும் அவமானப்படுத்துவதும் தேவைதானா? இதுதான் என் கருத்து. வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. வருகிறேன்.

(அரங்கத்திலிருந்த பார்வையாளர்களும், சக நடிகர்களும் (வடிவேலு, கவுண்டமனியை தவிர) கரஒலியெழுப்புகின்றனர்.

(செந்தில் தன்னை மறந்து கைதட்டுகிறார். கவுண்டமனி அவரை எரித்துவிடுவது போல் பார்க்கிறார்)

நடு: (சிரிக்கிறார்) சும்மா சொல்லக் கூடாது. பார்த்திபன் சும்மா விளாசிட்டார்யா.. நல்ல கருத்துடன் மட்டுமல்லாமல் நல்ல தமிழிலும் பேசினார். வாழ்த்துக்கள். இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண் இதைத்தான் பேசலாம் என்றுள்ள கட்டுப்பாடு அகல வேண்டும் என்பதை நானும் வழிமொழிகிறேன். (கவுண்டமனியை பார்க்கிறார்) அய்யா நீங்க என்ன சொல்ல போறீங்க.. வாங்கய்யா..

தொடரும்

பி.கு: தொலைக்காட்சியில் ஒலிபரப்பான கலந்த்ரையாடலை கண்ட சில கட்சித்தொண்டர்கள் தன்னிச்சையாக 'பலான' நிலையத்திற்கு முன் குழுமி கையில் 'பலான', 'பலான' பொருட்களுடன் கலந்துரையாடல் முடிந்து வெளியே வரும் பார்த்திபனை 'கவனிப்பதற்காக' காத்திருக்கிறார்கள். அக்கட்சிகளின் சட்ட ஆலோசகர்களும் தன்னிச்சையாக அவர்மேல் வழக்கு தொடரவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் த.நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள எல்லா வழக்காடு மன்றங்களின் விலாசங்களை தேடிப்பிடிக்கும் வேலையை மும்முரமாய் துவக்குகிறார்கள்

24 comments:

Anonymous said...

என்னாச்சி சார் திடீர்னு சீரியசாக்கிட்டீங்க. பார்த்திபன் சொல்றார்னு சொல்லிட்டு உங்க கருத்துகள ஆவேசமா சொல்லிட்டீங்க போலருக்குது. பொதுவா பார்த்திபன் ஊருக்குதான் உபதேசம் பண்ணுவாரு தன் சொந்த வாழ்க்கையில் பெண்களுக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கமாட்டார்னு ஒரு கருத்து இருக்கு.

ஆனா கடைசியிலருக்குற பி.கு சூப்பர் சார்

Anonymous said...

What is the meaning of 'PALANA'? Can you explain?

Anonymous said...

(உணர்ச்சிவசப்பட்டு கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீரை சுண்டிவிடுகிறார்)

கடைசியில அவர் வெறும் நடிகர்தான்ங்கறா மாதிரி காட்டிட்டீங்க. சீரியசா போனாலும் இடையில க.மணி கமென்ட்ஸ் நல்லாருக்கு. சிரிக்க, சிந்திக்க வைக்கிது இந்த பதிவு. Congrats sir.

டிபிஆர்.ஜோசப் said...

பொதுவா பார்த்திபன் ஊருக்குதான் உபதேசம் பண்ணுவாரு தன் சொந்த வாழ்க்கையில் பெண்களுக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கமாட்டார்னு ஒரு கருத்து இருக்கு.//


வாங்க சம்பத்! அது அவரோட பெர்சனல் விஷயம்னு நினைக்கறேன். தினமலர் வாரமலர் செய்யறதையே நம்மளும் செய்யணுமா என்ன? வேண்டாம். விட்டுருவோம்.

ஆனா ஒன்னு. மனுஷனுக்கு நிறைய நல்ல சிந்தனைகள் இருக்கு. ஒத்துக்கணும்.

டிபிஆர்.ஜோசப் said...

What is the meaning of 'PALANA'?
எப்படி சொல்றது? அதாவது ஏதாவது ஒரு விஷயத்தை வெளிப்படையா எழுத முடியலேன்னு வச்சிக்குவம். அத பத்தி சொல்றதுக்குத்தான் 'பலான'ங்கற வார்த்தைய போடறது. புரிஞ்சிதா? குழப்பிட்டேனோ. 'துடப்பம்', 'செருப்பு'ன்னு எழுதறதுக்கு பதிலான்னு வச்சிக்குங்களேன். அந்த பலான டி.வி. அதமட்டும் நான் சொல்ல மாட்டேன்.

டிபிஆர்.ஜோசப் said...

கடைசியில அவர் வெறும் நடிகர்தான்ங்கறா மாதிரி காட்டிட்டீங்க. //

ஐயையோ, கண்டிப்பா அது இல்ல என் நோக்கம். அப்படி தோனியிருந்தா சாரி. ஆனா பார்த்திபன் சாதாரணமாவே ரொம்ப உணர்ச்சிவசப்படுபவர். அதனால்தான் அப்படி எழுதினேன்.

நால்ரோடு said...

கலக்குறீன்களே அப்பு,
எப்டி இதெல்லாம்
தினமும் உன்க தொடரை படிக்காட்டி பொழுதே போக மாட்டேன்குது

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி நால்ரோடு!

துளசி கோபால் said...

பலான பலான விஷயத்தை எடுத்துக்கிட்டுப் பார்த்திபனை 'கவனிக்க' வர்றாங்களா? :-))))))

டிபிஆர்.ஜோசப் said...

பலான பலான விஷயத்தை எடுத்துக்கிட்டுப் பார்த்திபனை 'கவனிக்க' வர்றாங்களா? //

பின்னே. அதானே அவங்க வேலை? இருந்தாலும் இந்த நடிகர் சங்கம் இப்படி பயந்தாங்கொள்ளிகள் சங்கமா ஆயிருச்சே. என்ன சொல்றீங்க?

Anonymous said...

சார் பார்த்திபன் டையலாக்ஸ் சில இடங்கள்ல தூள் பறக்குது. அவரே இப்படி பேசியிருப்பாரான்னு கூட கேக்க தோனுது. நாளைக்கி மறுபடியும் காமெடியா?

Anonymous said...

சார் நான்தான் பேசறேன்.


நான் செருப்படி வாங்கணும்கறதுக்காகவே எழுதுனா மாதிரியிருக்கு. என் நண்பர் ஒருத்தர் எனக்கு ஃபோன் பண்ணி சொல்லித்தான் தெரிஞ்சிது.என்னை ஏன் சார் வம்புக்கு இழுக்கறீங்க. இப்பத்தான் உங்க பதிவுகள வாசிச்சேன்.எனக்கும் வவேலுக்கும் நடக்கறா மாதிரி வந்த பதிவு ரொம்பவே நல்லாருந்திச்சு. அப்படியே எழுதுங்க சார். எதுக்கு வீண் வம்பெல்லாம்?

G.Ragavan said...

ஜோசப் சார். பிடிங்க இன்னொரு +.

கலக்கல் போங்க. இதெல்லாம் எங்கருந்து வருது? அதுக்குதான் மூளைங்குறாங்க இல்ல.

டிபிஆர்.ஜோசப் said...

பார்த்திபனா? யார் சார் நீங்க? புனைப்பெயரா, நிஜப்பெயரா?

நீங்க உண்மையிலேயே நிஜம்னா நீங்க பாராட்டுனீங்களே அந்த சீனை உங்க படத்துல யூஸ் பண்ணிக்கிட்டு எனக்கு ஒரு லட்சம் குடுத்திருங்க?

சரியா சார்?

டிபிஆர்.ஜோசப் said...

அதுக்குதான் மூளைங்குறாங்க இல்ல.//


நீங்க வேற ராகவன். அதத்தான் நான் எங்கேயோ வச்சிட்டு மூனு மாசமா தேடிக்கிட்டிருக்கேன். நீங்க வேற நக்கல் பண்றீங்க.

உங்கள மாதிரி, ஜோ மாதிரி, குழலி மாதிரி, இளவஞ்சி மாதிரி, முகமூடி,முத்து, பத்ரி, ஏன் புதுசா வந்து கலக்கறாரே இன்னொரு முத்து உங்க எல்லாத்தையும் விடவா என்னோடது இருக்குது? நான் ஏதோ அப்பப்ப ரிலாக்ஸ் பண்றதுக்காக எழுதிக்கிட்டிருக்கேன்.

சும்மா தமாஷ் பண்ணாதீங்க. அப்புறம் அத நான் உண்மைன்னு நினைச்சிக்கிட்டு காலர தூக்கி விட்டுக்கப் போறேன்.

மணியன் said...

நீங்கள் நிச்சயம் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு மிமிக்ரியும் வருமோ ? பலகுரலில் பேசும் வண்ணமே எழுத்தில் விழுகிறதோ?
பார்த்திபன் சொன்னது பாரதிராஜா காதில் விழுந்தது போலிருக்கிறது. வம்பில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

நிலா said...

உங்களுக்கு கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் ரொம்ப நல்லா வொர்க் அவுட் ஆகுது

பார்த்திபனை மாட்டி விடுட்டீங்க, பாவம்

துளசி கோபால் said...

என்னங்க ஜோசஃப்,

//நீங்க வேற ராகவன். அதத்தான் நான் எங்கேயோ வச்சிட்டு மூனு மாசமா
தேடிக்கிட்டிருக்கேன். நீங்க வேற நக்கல் பண்றீங்க//

மூளையை மூணுமாசமாத் தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்றீங்க. நீங்க ப்ளொக்லே
எழுத ஆரம்பிச்சும் மூணுமாசம்தான் ஆகுது!

இது ரெண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கோ?:-))))

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி மணியன். மறந்துட்டேன். இதுல நம்ம பாரதிராஜாவையும் சேர்த்திருக்கலாம். அவர்தான் எல்லா பப்ளிக் Forumலயும் ஏடாகூடமா பேசிட்டு மாட்டிக்குவார். கலக்கலா இருந்திருக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி நிலா. பார்த்திபனுக்கு எப்பவுமே வாய்துடுக்கு அதிகம். மாட்டிக்கட்டுமே. நமக்கென்ன?

டிபிஆர்.ஜோசப் said...

அதத்தாங்க துளசி சூசகமா சொன்னேன். நீங்க மட்டுந்தான் புரிஞ்சிக்கிட்டீங்க. டீச்சர் இல்லையா?
அதான்.

டிபிஆர்.ஜோசப் said...

அதுசரி. துளசி உங்கள ஏன் டீச்சர்னு சொல்றாங்க? நீங்க டீச்சிங்க பண்றீங்களா,என்ன? அப்ப இன்ட்ரஸ்டிங்கான Flash backல்லாம் இருக்குமே. அத ஏன் எழுதக்கூடாது... சீசீசீசீரியலா?

G.Ragavan said...

//சும்மா தமாஷ் பண்ணாதீங்க. அப்புறம் அத நான் உண்மைன்னு நினைச்சிக்கிட்டு காலர தூக்கி விட்டுக்கப் போறேன்.//

தூக்கி விட்டுக்கோங்க...தப்பேயில்லை...பொழுது போக்க எழுதுறதே இப்படீன்னா.......நல்ல எழுத்து ஜோசப் சார். நிறைய எழுதுங்கள். உங்க அனுபவம் சொல்ற விஷயங்களும் நிறைய.

டிபிஆர்.ஜோசப் said...

ராகவன், நாளைய பதிவை தவறாம படிங்க.