6.4.06

சூரியன் 56

‘நீ என்ன சொல்றே சீனி.. நீயும் சென்னைக்கு போறியா?’

பின்ன என்னை என்ன பண்ண சொல்றே? என்பதுபோல் அவளையே பார்த்தான் சீனிவாசன்..

‘என்ன சீனி, நான் கேட்டதுக்கு பதிலையே காணோம்?’

‘What do you want me to say My? அம்மாவும் அப்பாக்கூட போறதுக்கு சம்மதிச்சதுக்கப்புறம் நா மட்டும் இங்கருந்து என்ன பண்றது? That’s why...’

மைதிலி தன் கையிலிருந்த செல் ஃபோன் பொத்தான்களை வெறுமனே தட்டிக்கொண்டு என்ன சொல்வதென தெரியாமல் மவுனமாயிருந்தாள்.

‘காலைல உன் டாட் பேசினத கேட்டதுக்கப்புறம் நான் இதப்பத்தி நிறைய யோசிச்சேன் மை.. I’ve been thinking about our relationship, rather friendship.’

மைதிலி சட்டென்று நிமிர்ந்து அவனையே பார்த்தாள். ‘என்ன சொல்றே நீ? அப்பா என்ன சொன்னார்?’

‘நீ நெனச்சிக்கிட்டிருக்கறது நடக்கறதுக்கு சான்சே இல்லைன்னார். நீ என் பொண்ண மறந்துட்டு சென்னைக்கி போய் ஒரு புதுவாழ்க்கைய தொடங்கறதுதான் உனக்கு நல்லதுன்னார். Maybe he is right. He also said he doesn’t have anyone else but you.. That's why... What else you want me to do, My..?’ குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை வெகு சிரமப்பட்டு அவன் சரிசெய்ய முயல்வதைப் பார்த்த மைதிலி அவனை நெருங்கி அவனுடைய கரங்களைப் பிடித்து மெல்ல ஆறுதலாக அழுத்தினாள்.

சிறிது நேரம் இருவரும் பேசாமல் அடுத்த அறையில் ஒரு சிறு குழந்தை வலியில் ‘அம்மாஆஆஆ..’ என்ற அழுகுரலைத் தவிர அந்த சிறிய மருத்துவமனை அறை அமைதியாக இருந்தது.

மைதிலி தன்னுடைய கண்களில் திரண்டு நின்ற கண்ணீர் துளிகளை சுண்டியெறிந்துவிட்டு அவனைப் பார்த்தாள்.

‘So that is the reason. அப்போ அப்பா சொல்றத கேட்டுட்டு இந்த ரிலேசன்ஷிப்பிலிருந்து விலகிறதுன்னு டிசைட் பண்ணிட்டே.. இல்லே சீனி?’

சீனிவாசன் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து தன்னுடைய காலில் இன்னும் ஈரத்துடன் இருந்த பிளாஸ்டரையே பார்த்தான். இன்னும் எத்தனை நாள் ஆவுமோ தெரியலை.. இத எப்போ அவிழ்த்து எப்போ நான் மெட்றாஸ் போயி.. அவனையுமறியாமல் ஹூம் என்ற ஒரு பெருமூச்சு வெளிவர..

‘தெரியலை மைதிலி.. I simply don’t know.’ என்றான்.

தன்னை எப்போதும் மை.. மை என்று அவளைச் செல்லமாய் அழைத்துக்கொண்டிருந்தவன் இப்போது தன்னுடைய முழுப்பெயரை உச்சரித்ததை உணர்ந்த மைதிலி, ‘என்ன சீனி, அப்பா சொன்னாரேங்கறதுக்காக என்னோட ஒப்பீனியனையும் கேக்காம நீயே ஒரு முடிவுக்கு வந்திருவியா?’ என்றாள் லேசான கோபத்துடன். ‘சரி.. என்னெ நீ மறந்துட்டு வேற ஒரு வாழ்க்கைய தொடங்கிருவியா? உன்னால முடியுமா சீனி?’

‘As I said, I don’t know.’

‘அப்படீன்னா?’

மைதிலியின் குரலில் தொணித்த எரிச்சலைப் புரிந்தும் புரியாதவன்போல்.. ‘நா இதுக்கு மேல இதப்பத்தி பேசவேணாம்னு நினைக்கிறேன். Just let us not talk about that. நீ போய் டாக்டர்கிட்ட நாம போலாமான்னு கேளேன். ப்ளீஸ். I want to go home and be alone for some time.’ என்றான்.

மைதிலி சட்டென்று எழுந்து அறைவாசலை நோக்கி நடந்தாள். வாசல்வரை சென்றவள் மீண்டும் திரும்பி வந்து அவனருகில் நெருங்கி நின்று அவனுடைய தோளில் கைவைத்து, ‘வேணாம் சீனி. ப்ளீஸ்.. நாம ரெண்டு பேரும் இதப்பத்தி அப்புறமா டிஸ்கஸ் பண்ணி ஒரு டிசிஷனுக்கு வருவோம். அதுவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இரேன்.’ என்று கெஞ்சினாள்.

சீனிவாசன் அவளுடைய முகத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு வாசலுக்கு வெளியே வந்து நின்று தங்களையே பார்த்துக்கொண்டிருந்த சுமார் மூன்று வயது பெண் குழந்தையைப் பார்த்து புன்னகைத்தான். இதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால அழுதிருக்கும் போலருக்கு. இப்ப பார் அத மறந்துட்டு இங்க வந்து நிக்கறத? இதே மாதிரி என்னாலயும் இவள மறந்துட்டு சென்னைக்கு போயிரமுடியுமா? ஏன் முடியாது? முடியணும்.. இவள நா இத்தன நாள் நேசிச்சது உண்மைன்னா இனியும் இவ வாழ்க்கைக்கு இடைஞ்சலா நா இருக்கக் கூடாது.

சீனிவாசனின் பார்வை சென்ற திசையில் பார்த்த மைதிலி வாசலில் நின்ற குழந்தையைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தாள். அவளுடைய  புன்னகையால் கவரப்பட்டு அந்த குழந்தையும் இதழ்விரித்து வெண்பற்கள் தெரிய அழகாய் புன்னகைத்தது. சித்த நேரத்துக்கு முன்னால இதுதான் அழுதிருக்கும் போலருக்கு. இப்ப பார் சிரிக்கறத? இந்த வயசுலயே நாமளும் நின்னுபோயிருந்தா எத்தன ஈசியா இருக்கும்? இந்த காதல் கத்தரிக்காய்னு மாட்டிண்டு முழிக்க வேணாமே..

நா சீனிய கேட்ட கேள்விய நானே என்னெ கேட்டுண்டா? என்னால மட்டும் அவன மறந்துட்டு அப்பா சொன்னாரேன்னு முன்னெ பின்னே தெரியாத ஒருத்தன கட்டிக்கிட்டு நிம்மதியா இருந்துர முடியுமா? Is it possible to forget this relationship? Is it a simple friendship.. ? இது அதுக்கும் மேல போயாச்சே.. இப்போ எப்படி வேணான்னுட்டு பிரிஞ்சி போறது?

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவாளோட வயாசான காலத்துல சந்தோஷம் தரணுங்கறது சரிதான். ஆனா அதுக்காக என்னோட சந்தோஷத்த விட்டுகுடுத்துருன்னா அது எந்த விதத்துல நியாயம்? Or rather, why should I? அவா ரெண்டு பேருந்தான் வாழ்ந்து முடிச்சிட்டாளே? நான் இனிமேத்தானே வாழணும்?

‘நா மட்டும் ஒங்கப்பாவ விரும்பியாடி கட்டிக்கிட்டேன்? இந்த கருப்பு பாப்பாந்தானாடி நோக்கு கிடைச்சான்னு எங்காத்து மனுஷாளெல்லாம் என்னெ கேலி செஞ்சப்போ.. இந்த பூசாரி அப்பனால இத விட வேற ஒரு நல்ல எடத்துல ஒன்னெ கட்டிக்குடுக்க முடியாதும்மான்னு எங்க அப்பா சொன்னாரேன்னுட்டுதானடி கட்டிண்டேன்? அதோ இதோன்னு இருபத்தியாறு வருஷம்.. குப்பைய கொட்டியாச்சி.. ஒன்னையும் ஒரு நல்ல எடத்துல கட்டிக்குடுத்துட்டா காசி, ராமேஸ்வரம்னு இந்த மனுஷன கூட்டிண்டு போயிருவேன்..’

அம்மாவுக்கென்ன.. ஒருவேளை அதுவே அவளுக்கு தலையெழுத்தாயிருந்திருக்கும். 'பம்பாய் மாப்ளைடி.. பிடிப்பெல்லாம் போயும் கையில சுளையா ஐந்நுறு ரூவா கிடைக்குதாம். இத விட ஒனக்கு மாப்ளை அமைஞ்சிருமாக்கும்? பேசாம இந்த தரித்திரம் பிடிச்ச வாழ்க்கை போறும்னு மனசுல நினைச்சுண்டு போய்ச் சேருன்னு எங்கம்மா சொன்னாளேன்னுதான்டி  ஒங்கப்பாவ கட்டிக்கிட்டேன்னுதான்' அம்மாவே சொல்லியிருக்காளே.. தெனத்துக்கு ஒரு வேள சோத்துக்கே அல்லாடிண்டுருந்தவளுக்கு மாசா மாசம் ஐந்நூறு ரூபா கையில வரும்கறது ஒரு பெரிய காரியம்தானே.. அதான் கண்ண மூடிண்டு ஒத்துண்டிருப்பா..

அவளும் நானும் ஒன்னா?

‘நீ போய் கேட்டுட்டு வா மைதிலி.. என்னை நீ ஒரு டாக்சியில  ஏத்திவிட்டா போறும். நா போய்க்குவேன். உன் வீடு இங்கருந்து பக்கத்துலதான?’

நினைவுகள் கலைய, மைதிலி திடுக்கிட்டு திரும்பி சீனிவாசனைப் பார்த்தாள். ‘என்ன சொன்னே சீனி?’

சீனிவாசன் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்தான். ‘நா வீட்டுக்கு போறேன்னேன்.’

‘அப்போ நா?’

‘What do you mean? உன் வீடு செம்பூர்லதானே? நீ எதுக்கு பாந்த்ரா வந்துட்டு.. எனக்கு ஒரு டாக்சி பிடிச்சி குடுத்துட்டு போ.. நா போய்க்கறேன். இப்போ நீ போய் டாக்டர்கிட்ட கேட்டுட்டு வாயேன்.’

‘சரி.. ஆனா நானும் உன் வீடு வரைக்கும் வருவேன்.. உன்ன விட்டுட்டு திரும்பி வந்துக்கறே...’ அவள் முடிக்கும் முன்பே அவளுடைய செல் ஃபோன் சிணுங்க.. 'ஐயோ அப்பா..' என்ற முனுமுனுப்புடன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.. மணி 2.45!

மூனு மணிக்கு திரும்பி வந்துடறேம்ப்பா என்று தான் காலையில் கூறியது நினைவுக்கு வர.. செல் ஃபோனைப் பார்த்தாள்.

‘Your Dad, No?’

ஆமாம் என்று தலையை அசைத்தாள். பிறகு செல் ஃபோனை பதிலளிக்காமல் தன் கைப்பைக்குள் வைத்தவாறு அறை வாசலை நோக்கி நடந்தாள்.

‘You are not going to answer the phone?’ என்ற சீனிவாசனின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் அறையை விட்டு வெளியேறி மருத்துவரின் அறையை நோக்கி நடந்தாள்.

சீனிவாசன் ஒரு விரக்தி புன்னகையுடன் தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.

****

வாசலில் நின்ற நால்வரையும் சந்தோஷத்துடன் பார்த்த நாராயண சாமி ‘வாங்கோ, எங்க எங்காத்துக்காரி தன்னோட மிஷன்ல தோத்துறுவாளோன்னு பயந்தே போனேன்.’ என்றார்.

வரவேற்பறையில் நின்றுக்கொண்டிருந்த ரவி அவருடைய வார்த்தைகளிலிருந்த பொருளை உணர்ந்து திகைப்புடன் தன் மனைவியையும் அவருடன் உள்ளே புகுந்த அந்த இளைஞனையும் அவனுடன் வந்திருந்த இளம் பெண்ணையும் பார்த்தான். பிறகு  மஞ்சுவின் கரத்தைப் பற்றியிருந்த அந்த பெண்.. அவர் நாராயண சாமியின் மனைவியாயிருக்க வேண்டும். இதற்கு முன்பு ஓரிரு முறை பார்த்திருக்கிறான், ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை..

‘என்ன மிஸ்டர் ரவி.. என்னையும் எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்குமே.. அடுத்த ஃபாளாட்டுலருந்துண்டு என்னையே புதுசா பாக்கறா மாதிரி இவர் பாக்கறத பாரு மஞ்சு..’

நாரயணசாமி உரக்க சிரித்தார். ‘அடியே.. அவருக்கு என்னையே நம்மாத்து பால்கணியில பார்த்ததால சரி, அடுத்தாத்து மாமான்னு தெரிஞ்சிருக்கும். இதுல ஒன்னெ எங்க பார்த்திருக்கப் போறார்? சரி.. அவர் இப்ப பாக்கறதுக்கு ஹேண்ட்சம்மா இல்ல? எல்லாம் என் ஐடியாத்தான்.’

மஞ்சுவும் அவளுடன் இருந்த மூவருமே அவனை பார்ப்பதைப் பார்த்ததும் தலையைக் குனிந்துக்கொண்டான் ரவி.

மஞ்சு அவனை நெருங்கி அவன் கரத்தைப் பற்றி, ‘ஆமா ரவி. இப்பத்தான் நீங்க என்னோட பழைய ரவி மாதிரி இருக்கீங்க?’ என்றாள் மெல்லிய குரலில்.

ரவி தன்னுடைய கையை விடுவித்துக்கொண்டு, ‘I am sorry Manju.. I.. I...’ மேலே பேச முடியாமல் தடுமாற அவனுடைய கையை மீண்டும் பிடித்துக்கொண்டாள் மஞ்சு.. ‘வேணாம். நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். அப்படி பாக்கப் போனா உங்களுக்கு துணையா  ஆறுதலா இருக்க வேண்டிய நேரத்துல ஒங்களவிட்டு போனேனே.. நீங்கதான் என்ன மன்னிக்கணும்.’

நாராயணசாமி உரக்க சிரித்தவாறு.. ‘சரி, சரி.. அப்புறம் உங்க பாவ அறிக்கையை படிக்கலாம். இப்போ எங்களையும் கொஞ்சம் பாருங்கோ.’ என்றார். பிறகு, மஞ்சுவுடன் வந்திருந்த தம்பதியரை பார்த்தார். ‘மஞ்சு நேத்துதான் ஒங்க ரெண்டு பேரையும் பத்தி சொல்லிண்டிருந்தா. Thankyou so much.’

‘Yes.. I should also thank you..’ என்ற ரவியை மேலே பேச விடாமல் அவனுடைய செல் ஃபோன் ஒலித்தது. ரவி எடுத்து திரையில் தோன்றிய எண் தனக்கு பரிச்சயமில்லாததாக தோன்றவே துண்டிக்க போனான்.

‘No Ravi. Don’t disconnect it. ஏதாச்சும் முக்கியமான காலாருக்கப் போறது. பேசுங்கோ.’ என்றார் நாராயணசாமி.

ஒரு லேசான புன்னகையுடன் அவரைப் பார்த்த ரவி சரி என்பதுபோல் தலையை அசைத்தவாறு செல் ஃபோனில், ‘Yes Ravi, here.’ என்றான் தயக்கத்துடன்.

எதிர் முனையிலிருந்த வந்த குரலும் பழக்கமில்லாமல் ‘யாரு? ஜோ..? எந்த ஜோ..?’ என்று குழம்பியவன் சட்டென்று நினைவுக்கு வர.. ‘ஜோ.. நீங்களா? என்ன விஷயம்?’ என்றான்.

அடுத்த நிமிடம் அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்த மஞ்சு ‘யாருங்க? என்ன விஷயமாம்?’ என்றாள்..

‘சரி.. ஜோ.. தோ ரெண்டு நிமிஷத்துல புறப்பட்டு வரேன்.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு மஞ்சுவை பார்த்தான்.

அவன் பேச முடியாமல் தடுமாறுவதைப் பார்த்த நாராயண சாமியின் மனைவி ஓடிப்போய் ஒரு தம்ளரில் குடிக்க நீர் கொண்டு வர அதை வாங்கி மடக்மடக்கென குடித்துவிட்டு, ‘தாங்ஸ்ங்க’ என்று திருப்பிக் கொடுத்தான்.

‘என்னங்க.. என்ன விஷயம்? யாருக்கும் ஏதாச்சுமா? யாருங்க?’ என்ற மஞ்சுவின் கரத்தைப் பற்றிய ரவி.. ‘நம்ம மாணிக்க வேல் சாரோட மகள் கமலின்னு பேரு.. பதினஞ்சி வயசுதான்.. அந்த பொண்ணு திடீர்னு இன்னைக்கி காலைல இறந்து போச்சாம்.. நாம ரெண்டு பேரும் ஒடனே போணும். வரியா?’ என்றான்..

மஞ்சு என்ன பதில் பேசுவதென தெரியாமல் நாராயண சாமியையும் அவருடைய மனைவியையும் பார்க்க, ‘போய்ட்டு வாம்மா.. என்ன யோசிக்கறே? ரவி அழைச்சிண்டு போங்கோ.. இவாள நான் வழியனுப்பிக்கறேன்..’ என்றார்..

மஞ்சு தன்னுடன் வந்திருந்த இளம் தம்பதியரை நன்றியுடன் பார்த்து புன்னகைத்து ‘திருப்பி வந்ததும் கூப்டறேன்.’ என்றவாறு ரவியுடன் வாசலை நோக்கி நடந்தாள்..


தொடரும்..



2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

KANGAI INNUM VATRIVIDAVILLAI:
may be written by asokamithran
published in DEEPAM(OR KALKI?)
one line treatment:main character is facing a crisis...in climax, the character does not yield pressure but stick on to the moral and cultural values of this soil.
sorry. i cannot recollect the individual details of a story which i have read some 35 years ago.but the caption strikes me even today

டிபிஆர்.ஜோசப் said...

Thanks Ji for sharing.