3.7.06

சூரியன் 101 (பாகம் இரண்டு)

மாதவனுடைய வாகனம் போர்டிகோவில் சென்று நின்றதுமே ‘வெல்கம் சார்’ என்று கோரசாக தன்னை வரவேற்றவாறு நின்றிருந்த தன்னுடைய அதிகாரிகளை வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தார் அவர். ‘தாங்க் யூ சோ மச்.. இத நான் எதிர்பார்க்கலை..’

தாற்காலிக சேர்மன் சுந்தரலிங்கம் புன்னகையுடன் நீட்டிய மலர்கொத்தைப் பெற்றவாறு வங்கியின் பரந்த வரவேற்பறைக்குள் நுழைந்து அங்கு குழுமியிருந்த அதிகாரிகளை பார்த்து வணக்கம் தெரிவித்தார்.

‘Welcome Sir’ என்று அறைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த வண்ண பேனர், எளிமையாக அதே சமயம் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த வரவேற்பறை எல்லாவற்றையும் கவனித்த மாதவன், ‘எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி.. நான் ஒன்னும் நம்ம பேங்குக்கு புதுசில்லையே.. என்ன மிஸ்டர் சேது..’ என்றவாறு சற்று தள்ளி நின்றிருந்த சேது மாதவனை பார்த்தார்.

அவர் முகத்தில் பெரிதாக எந்தவித சந்தோஷமும் தெரியவில்லையென்றாலும் வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் முன்வந்து மாதவனின் கையைப் பற்றி குலுக்கினார். ‘No Sir.. I only suggested this idea of giving a formal reception to you.. All the HO executives up to the AGM’s level are here.. and Mr. Babu Suresh, who is likely to be transferred to HO shortly..’

மாதவன் அவர் சுட்டிக்காட்டிய பாபு சுரேஷைப் பார்த்தார். ‘Welcome to HO Mr. Babu Suresh.. Where are you now?’

தேவையில்லாமல் தன்னை அறிமுகப்படுத்தி சங்கடத்தில் சிக்க வைத்துவிட்டாரே என்று மனதுக்குள் அவரை சபித்த பாபு தான் தலைமையேற்றிருந்த கிளையின் பெயரை கூறினார் தயக்கத்துடன்..

ஆனால் மாதவன் அவருடைய பதிலை காதில் வாங்காததுபோல் சுந்தரலிங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற அதிகாரிகளை நோக்கி திரும்ப பாபு நிம்மதியாய் ஒதுங்கி நின்றுக்கொண்டார். அவரை தலைமை அலுவலகத்திற்கு மாற்றவிருக்கும் விஷயத்தை இப்படி பொதுவில் போட்டு உடைத்துவிட்டாரே என்ற கோபமும்.. இது சோமசுந்தரத்திற்கு தெரியவந்தால் தன்னை ஏதும் கூறுவாரோ என்ற பயமும் அவருக்கு..

எல்லா அதிகாரிகளையும் அறிமுகப்படுத்தி முடித்தவுடன் மாதவன் எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். ‘என்னால் இயன்றவரை நம்முடைய வங்கியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.. அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.. இன்னும் ஒரு வாரத்திற்குள் உங்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்திப்பேன்.. அவரவர் தலைமை தாங்கும் இலாக்காவைப் பற்றி சுருக்கமாக ஒரு அறிக்கையை தயார் செய்து என்னுடைய காரியதரிசியிடம் அடுத்த இரு தினங்களுக்குள் கொடுத்துவிடுங்கள்.. பிறகு நான் ஒவ்வொருவராக அழைக்கிறேன்.. நன்றி.. பிறகு பார்க்கலாம்..’

வரவேற்பறையில் குழுமியிருந்த அதிகாரிகள் கலைந்து செல்ல மாதவன், சேதுமாதவன், சுந்தரலிங்கம் ஆகிய மூவரும் வங்கித்தலைவருக்கென இருந்த பிரத்தியேக லிஃப்ட்டிற்குள் நுழைய அதி நவீன லிஃப்ட் ஓசைப்படாமல் வங்கியின் பத்தாவது மாடியை நோக்கி விரைந்தது..

*********

வங்கித் தலைவரின் அறைக்கதவில் பொருத்தப்பட்டிருந்த தன்னுடைய பெயர் பலகையை பார்த்து புன்னகைத்த மாதவன் திரும்பி சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். ‘முன்னேற்பாடா எல்லாத்தையும் செஞ்சிருக்கீங்க போலருக்கு.. குட்.. I am impressed..’

சேதுமாதவனின் முகம் போன போக்கைப் பார்த்து உள்ளுக்குள் ரசித்த சுந்தரலிங்கம் வேண்டுமென்றே, ‘எல்லாம் நம்ம எம்.டியோட ஐடியாதான் சார்..’ என்றார்..

அவருக்கு கீழே வரவேற்பறையில் கொடுத்த வரவேற்பு தன்னுடைய உத்திதான் என்று சேதுமாதவன் கூறியதில் இருந்த கோபம் இப்படி வெளிவந்தது. உண்மையில் சொல்லப் போனால் அதற்கும் சேதுமாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அங்கு குழுமியிருந்த எல்லோருக்கும் தெரிந்துதானிருந்தது..

மாதவன் எளிமையான, ஆனால் அதே சமயம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த தன்னுடைய அறையை ஒருமுறை சுற்றி பார்த்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வரின் நேர்காணலுக்காக வந்திருந்தபோது கண்டதுதான் என்றாலும் அப்போது அவர் இருந்த மனநிலையில் அறையின் வடிவமைப்பைப் பற்றி  சிந்திக்க தோனவில்லை..

‘கேபினோட டிசைன்ல ஏதாவது சேஞ்ச் செய்யணும்னா செஞ்சிரலாம் சார்..’ என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். ‘நோ.. நோ.. I like this.. It’s simple.. This is enough..’

சேதுமாதவனுக்கு சுந்தரலிங்கத்தின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லையென்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது..

‘After all.. ஒரு மூனு மாசம் சேர்மன் சீட்ல ஒக்காந்ததுக்கே இந்த பேச்சாடா?’ என்று மனதுக்குள் கருவிக்கொண்டே.. ‘Mr. Madhavan, if you want to discuss anything with me.. please call me when you are free.. Now I’ve got some urgent work to do..’ என்று அவருடைய பதிலுக்கு காத்திராமல் வாசலை நோக்கி நடந்தவரை பார்க்காமலே, ‘Ok.. that would be fine..’ என்றார் மாதவன்..

சுந்தரலிங்கத்துக்கு அவர் போனால் போதுமென்றிருந்தது.. அவர் சென்றதும் அறைக்கதவை சாத்திவிட்டு வந்தவர் மாதனவைப் பார்த்து புன்னகைத்தார்.

‘சார்.. நான் போன மூனு மாசத்துல எடுத்த முடிவுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், உடனே எடுக்க வேண்டிய பாலிசி முடிவுகள், நம்முடைய வர்த்தக நோக்கம், இலக்கு இத எல்லாத்தையும் டீடெய்லா உங்க டேபிள்லருக்கற ஃபைல்ஸ்ல தனித்தனி அறிக்கையா தயாரிச்சி வச்சிருக்கேன்.. I’ve already briefed your PA.. நீங்க இதையெல்லாம்  சாவகாசமா படிச்சிட்டு தேவைப்பட்ட கூப்டீங்கன்னா டிஸ்கஸ் பண்ணலாம்..’ என்றார்.

அவர் சுட்டிக்காட்டிய கோப்புகளை மேலோட்டமாக பார்த்த மாதவன் ‘ஓக்கே.. இட் கேன் வெய்ட்.. இன்னைக்கி என்னோட ப்ரோக்ராம் என்ன மிஸ்டர் மிஸ்ரா?’ என்று அதுவரை ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றிருந்த தன்னுடைய காரியதரிசியைப் பார்த்தார்..

அவர் பரபரப்புடன், ‘சார், இன்னும் அரை மணியில நம்ம வங்கியோட ட்ரெய்னிங் காலேஜ் துவங்கி இருபத்தஞ்சி வருஷ சில்வர் ஜூப்ளி ஃபங்ஷன துவக்கி வச்சி நீங்க பேசணும்.. இங்கருந்து ஒரு பத்து நிமிஷ ட்ரைவ்.. இன்னும் அரை மணி நேரத்துல ஃபங்ஷ ஸ்டார்ட் ஆயிரும்.. துவக்கி வச்சிட்டு திரும்பி வந்ததும் நீங்க ஹெட் பண்ற கமிட்டி மீட்டிங்ஸ் இருக்கு.. அந்த மீட்டிங்ஸ் முடியறதுக்கு மாலை நாலு மணி யிரும்.. ஈவினிங் அன்சி மணிக்கு எச்.ஓவுலருக்கற எல்லா ஸ்டாஃபும், அதிகாரிகளும் கொடுக்கற வரவேற்பு நம்ம கான்ஃப்ரன்ஸ் ஹால்ல இருக்கு.. அதுக்கப்புறம் நீங்க ஃப்ரீதான் சார்..’ என்றார் தன்னுடைய நாட்குறிப்பைப் பார்த்தவாறு..

அவர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்ட மாதவன்.. ‘ஓக்கே மிஸ்டர் மிஸ்ரா.. நீங்க போய் கார்கிட்ட இருங்க.. நானும் சி.ஜி.எம்மும் வந்திடறோம்..’ என்றார்..

அவர் அறையைவிட்டு வெளியேறியதும், ‘மிஸ்டர் சுந்தரலிங்கம்.. I want one thing to be done immediately.. எனக்கு ஏ.ஜி. எம் லெவல்ல ஒரு பி.ஏவை நியமிங்க.. நேத்து ஏர்போர்ட்ல நடந்ததுக்கு இவர கண்கானாத ஊருக்கு மாத்தணும்னு டாக்டர் கிட்ட சேது சொல்லியிருக்கார். அவர் நான் ஆஃபீஸ் வந்துக்கிட்டிருக்கறப்போ ஃபோன் பண்ணி எங்கிட்ட சொல்லி சிரிக்கிறார். நீங்க இவரோட நேட்டிவ் ப்ளேஸ் எங்கன்னு பார்த்து நியரஸ்ட் ப்ராஞ்சில அவருடைய கிரேடுக்கு ஏத்த போஸ்டிங் குடுத்துருங்க.. Let this be between us for the time being...’ என்றார்..

இதை முன்பே எதிர்பார்த்திருந்தார் சுந்தரலிங்கம்.. இருப்பினும் ஒரு ஏ.ஜி.எம் நிலையில் யாரை தேடிப்பிடிப்பது என்று குழம்பினார்..

அவருடைய குழம்பிய முகத்தைப் பார்த்த மாதவன் ‘பார்த்து சொல்லுங்க.. ரெண்டு மூனு நாளைக்குள்ள ஒரு மூனு பேர் அடங்கிய பேனல் ரெடி பண்ணுங்க.. I would like to interview all of them and select one from them.. Come, let us go to the Training College..’ என்றவாறு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து நின்ற மாதவன், ‘சேதுவ கூப்டணுமா? எப்படி ஒங்க ஃபார்மாலிட்டி?’ என்றார்..

விழாவை ஏற்பாடு செய்தபோது சுந்தரலிங்கத்துக்கும் சேதுவை  அழைக்க வேண்டுமா என்று யோசனை இருந்தது..  ஆனாலும் புதிய சேர்மன் முதல்முதலாக தலைமையேற்றி நடத்தும் விழாவுக்கு அவரை அழைக்காமல் போனால் வேறு வினையே வேண்டாம் என்று ஃபிலிப் சுந்தரம் பரிந்துரைக்கவே எதற்கு வம்பு என்று நினைத்து அவருடைய பெயரையும் அழைப்பிதழில் சேர்த்திருந்தார்.

அது நினைவுக்கு வரவே தன் கோட் பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து மாதவனிடம் நீட்டினார்.. ‘அவருடைய தலைமியிலதான் சார் விழா நடக்குது.. you will be the chief guest..’ என்றார்..

மாதவன் அழைப்பிதழை மேலோட்டமாக பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்தார்.. ‘Ok.. That’s it then.. Tell him that I am ready to leave..’

சுந்தரலிங்கம் தயக்கத்துடன், ‘Sir, as the President of the function he will come to your cabin to formally invite you.. I’ll just inform him that you are ready to leave. I will wait in the lobby for you two..’ என்றவாறு பரபரப்புடன் வெளியேறினார்.

அடுத்த சில நிமிடங்களில் அறைக்குள் நுழைந்த சேது மாதவன் பந்தாவாக கைகளை நீட்டியவாறு, ‘Sir I have come to officially invite you as a special guest for the silver jubilee function of our Training College..’ என்று அவரை நெருங்க ‘எதுக்குய்யா இந்த வெட்டி பந்தா?’ என்று தனக்குள் நினைத்தவாறு அவருடைய கைகளைப் பற்றி பதிலுக்கு குலுக்கினார் மாதவன்.. “My pleasure..’

இருவரும் அறையை விட்டு வெளியேறி வராந்தாவிலிருந்த லிஃப்ட்டை நோக்கி நடக்க தன்னுடைய இருக்கைக்கு அருகில் நின்றிருந்த மாதவனுடைய பிரத்தியேக காரியதரிசி தன்னுடைய நாட்குறிப்பை கையிலெடுத்துக்கொண்டு அவர்கள் பிறகு ஓடினான்..

********

தன்னிடம் சுந்தரலிங்கம் அறிமுகப்படுத்திய கல்லூரி முதல்வரைப் பார்த்ததும் ‘I think I know him. You are Fernando, No?’ என்ற மாதவன் சேவியர் ஃபர்னாந்துவின் தோளில் கைவைத்து, ‘எப்படி மேன் இருக்கே..?’ என்று தோழமையுடன் வினவ அடுத்திருந்த அதிகாரிகள் அனைவரும் வியப்புடன் இருவரையும் பார்த்தனர்.

சேவியருடைய பெயரைக் கேட்டாலே கொதித்துபோகும் சேது மாதவன் பொறாமையுடன் இருவரையும் பார்த்தார்.

இதை பார்த்து ரசித்த ஃபிலிப் சுந்தரம் ஒரு மெல்லிய புன்னகையுடன் மாதவனை அணுகி, ‘Sir he has done a wonderful job in the College.. I can say that he has totally revolutionized the entire set up..’ என்றார் வேண்டுமென்றே..

சேதுமாதவனுக்கு சேவியரை பிடிக்காதது அவரை கல்லூரியில் நடக்கும் எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் அவரை அழைக்காதது மட்டுமல்ல.. அவர் முதல்வராக பணிபுரிந்த கல்லூரியை சேவியர் தலைகீழாக மாற்றி வங்கியிலிருந்த சகல இடைநிலை, கடைநிலை அதிகாரிகளின் மதிப்பையும் பெற்றுவிட்டாரே என்ற காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்பது ஃபிலிப் சுந்தரத்திற்கு நன்றாக தெரியும்..

சுந்தரலிங்கம் எத்தனை கடவுள் பக்தி நிறைந்தவராக இருந்தாலும் அவரால் இந்த சாதி விஷயத்தில் மட்டும் விட்டுக்கொடுக்க முடியாமல் சேவியரை தள்ளியே வைத்திருந்ததும் பிலிப் சுந்தரத்திற்கு தெரிந்துதானிருந்தது..

ஆனால் மும்பை, தில்லி, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் இருபது வருடங்களுக்கும் கூடுதலாக பணிபுரிந்திருந்த மாதவனுக்கு இந்த விஷயம் ஒரு பெரிய பொருட்டாக தென்படாதென்று அவர் ஊகித்திருந்தார்..

அதை நிரூபிக்கும் விதமாக சேவியரின் தோள்களை அணைத்தவாறு அவருடன் பேசிக்கொண்டே சென்ற மாதவனைப் பார்த்த சுந்தரம் தயக்கத்துடன் சுந்தரலிங்கத்தையும் சேதுமாதவனையும் ஒரக்கண்ணால் பார்த்தார்..

சுந்தரலிங்கத்தின் முகத்தில் எந்தவித உணர்வும் தெரியவில்லை.. ஆனால் சேதுமாதவனின் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது..

தொடரும்..



4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"ஆடல் காணீரோ-திருவிளை
யாடல் காணீரொ..."

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நீங்க நேத்தைக்கு போட்ட பின்னூட்டத்துக்கு இன்னைக்கி பதில் போடறேன்.. எவ்வளவு ஸ்பீடு பாருங்க..

ஆடல் காணீரோ-திருவிளை
யாடல் காணீரொ..."//

இனிமே எல்லா பின்னூட்டமுமே ரெண்டு வரிதானா:)

அத போடறதுக்கே ஆள் இல்லையேங்கறீங்களா? அதுவும் சரிதான்..

Unknown said...

மிகவும் நன்றாக உள்ளது. I did not know you write so well.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டெல்ஃபின்,

மிகவும் நன்றாக உள்ளது.//

நன்றிங்க..

I did not know you write so well. //

Now you know:) Please come regularly..