4.7.06

சூரியன் 102

வங்கியின் பயிற்சிக் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சி சின்னதாக, அழகாக நடந்து முடிய மாதவன் திருப்தியுடன் மேடையிலிருந்து இறங்கி தன்னை பின் தொடர்ந்து வந்த சேவியரை திரும்பி பார்த்தார்.

‘என்ன சேவியர் என்னையிலருந்து கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் ஆனீங்க? சும்மா பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் செஞ்சி அசத்திட்டீங்க.. I really envy you.. Highly computerized Bankல பிரசிண்டெண்டா இருந்தேன்னுதான் பேரு. லாப்டாப்ல வேர்ட் ஃபைல் எழுதறத தவிர எனக்கு வேற ஒன்னும் தெரியாது.’ என்றார் புன்னகயுடன்.

சேவியருக்கு அவருடைய புகழ்ச்சி சற்று அதிகமாகவே தோன்றினாலும், ‘தாங்க்யூ சார்..’ என்றார் அடக்கத்துடன்..

‘சார், இவர் பிரின்சிப்பலா வந்தப்புறம்தான் நம்ம ட்ரெய்னிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் க்ளாசசே ஒரு பாரலல் சேனலா நடத்த ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்கு நம்ம ஸ்டாஃப் எல்லார்கிட்டருந்துமே நல்ல வரவேற்பு இருக்கு..’ என்றார் ஃபிலிப் சுந்தரம்..

‘யெஸ் சார்.’ என்று ஆமோதித்தார் சுந்தரலிங்கம்..

இந்த உரையாடலில் தனக்கு பங்கில்லை என்பதுபோல் ஒதுங்கி நின்ற சேதுமாதவனை பார்த்தார் மாதவன்.

அவரை சற்று சீண்டி பார்த்தால் என்ன என்று தோன்றியது.

‘மிஸ்டர் சேது, நீங்களும் ஒரு காலத்துல இங்க பிரின்சிப்பலா இருந்திருக்கீங்க இல்லே..?’ என்றார்..

உதடுகளில் கவ்வியிருந்த மேலை நாடு பைப்பை உறிஞ்சிக்கொண்டே தூரத்தில் தெரிந்த கடலை ரசித்துக்கொண்டிருந்த சேதுமாதவன் தன்னுடைய பெயரை அழைப்பதைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பி மாதவனையும் அவரைச் சுற்றி நின்றுக்கொண்டிருந்தவர்களையும் பார்த்தார்..

மாதவனுடைய கேள்வி தன் செவிகளில் விழுந்தும் வேண்டுமென்றே ‘என்ன சேர்மன் கேட்டீங்க?’ என்றார்.

மாதவன் சிரிப்புடன் இல்லையென்று தலையை அசைத்தார். அவருக்கும் சேதுமாதவன் வேண்டுமென்றே எதிர் கேள்வி கேட்பதன் மர்மம் புரியவே மேலே தொடரவிரும்பாமல் சேவியரைப் பார்த்தார்.

‘மிஸ்டர் சேவியர்.. I think you should arrange a two day refresher course on computers for all the senior executives including me..’

‘Yes Sir.. I will discuss with our H.R. and finalise the programme.’

சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவரைப்போன்று மாதவன் சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். ‘இந்த மாதிரி ஃபங்க்ஷனுக்கு எச்.ஆர். ஹெட்ட கூப்பிட மாட்டீங்களா? ஏன் அவர் இங்க வரலை?’

சுந்தரலிங்கம் சங்கடத்துடன் ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார். அவர், ‘மிஸ் வந்தனாத்தான் எச். ஆர் ஹெட்.. ஆனா அவங்களுக்கு திடீர்னு உடல்நிலை சரியில்லாம போயி நேத்து ஆஸ்ப்பிடலைஸ் செய்ய வேண்டி வந்திருச்சி. அதான்...’ என்றார்.

மாதவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன.. ‘மிஸ். வந்தனா do I know her? என்ன சேவியர், நான் இருந்தப்போ அவங்க இருந்தாங்களா?’

சேவியர், ‘Yes Sir. She was a junior officer at that time.. She joined the bank as a direct officer.. You must know her.. She came first in the University and our Chairman invited her to join the bank...’ என்று அவருக்கு நினைவுபடுத்த பிரகாசமடைந்தார், ‘Yes I remember.. She is the H.R. Head now.. Mr. Philip what grade she is in now?’

‘She is a GM sir..’ என்றார் சுந்தரலிங்கம் அவசரமாக. அவருக்கு இவர் எங்கே வந்தனாவை தன்னுடைய காரியதரிசியாக கேட்டுவிடுவாரோ என்ற பயம்..

வந்தனா பெயரைக் கேட்டாலே சுந்தரலிங்கத்துக்கு அவருடைய கூரிய நாக்குதான் நினைவுக்கு வரும்.. மனதில் பட்டதை பளிச்சென்று முகத்திலடித்தாற்போல் சொல்வதில் வந்தவனாவுக்கு நிகர் அவரேதான் என்பது அவருக்கு தெரியும்..

சேதுமாதவனையே கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர் அவர்..

அவரைப் போய் சேர்மனின் காரியதரிசியாக்கினால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்தார்.

ஏதோ யோசனையுடன் சுந்தரலிங்கத்தின் பதிலைக் கேட்டு, ‘I see..’ என்றவாறு அவரைப் பார்த்தார் மாதவன்.. ‘OK.. Shall we go?’

அவருடைய கேள்வி அருகிலிருந்த எல்லோரையும் பரபரப்படையச் செய்தது. ‘Yes Sir.’ என்றவாறு சுந்தரலிங்கமும், ஃபிலிப் சுந்தரமும் அவருக்கு முன்னே செல்ல பயிற்சி வகுப்புகளுக்கு அழைக்கப்பட்டிருந்த இளம் அதிகாரிகள் உட்பட எல்லோரும் எழுந்து நின்று அவரை வழியனுப்பி வைத்தனர்.

சேதுமாதவன் மட்டும் அவருடன் செல்லாமல் தயங்கி நின்றார். அதைக் கண்டுக்கொள்ளாமல் மாதவனும் அவருடன் வந்திருந்த அதிகாரிகளும் வெளியேற மாதவனை வழியனுப்பிவிட்டு திரும்பிவந்த சேவியரை தடுத்து நிறுத்தி, ‘என்ன மேன் சேர்மன்கூட வேல செஞ்சிருந்தேன்னு ஷோ காமிக்கறயா? Let me tell you one thing. If you want to continue in this position for some more time.. don’t do this again..’ என்றார் உரத்த குரலில்..

அவருடைய குரல் அரங்கத்திலிருந்த எல்லோருடைய செவிகளிலும் விழ பயிற்சிக்கு வந்திருந்த அதிகாரிகள் திடுக்கிட்டுப் போய் அவர்கள் இருவரையும் நோக்கி திரும்பினர்.

சேவியர் அவமானம் தாங்காமல் மறுபதில் பேசாமல் தலையைக் குனிந்துக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கி நகர சேதுமாதவன், ‘லோ கேஸ்ட் பாஸ்டர்ட்..’ என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறு கையிலிருந்து பைப்பை உதடுகளுக்கிடையில் சொருகிக்கொண்டு அரங்கத்திலிருந்த எல்லோரையும் ஒருமுறை ஆணவத்துடன் பார்த்துவிட்டு லிஃப்ட்டை நோக்கி நடந்தார்..

பயிற்சிக்கல்லூரியில் ஒரு வேலையிருந்ததால் மாதவனுடன் செல்லாமல் அரங்கத்தில் நின்றிருந்த அவருடைய காரியதரிசி சேதுமாதவன் லிஃப்ட்டில் ஏறி மறைந்ததும் சேவியரின் அறையை நோக்கி விரைந்தான்.

மூடியிருந்த கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தவனை, ‘கமின்’ என்ற சேவியரின் குரல் அழைக்க கதவைத் திறந்துக்கொண்டு நுழைந்து, ‘Sorry to disturb you Sir.’ என்றான் பணிவுடன்.

‘சொல்லுங்க மிஸ்ரா.. என்ன விஷயம்? நீங்க சேர்மனோட போகலையா? You want something?’

'ஆமா சார்.. நீங்க இப்போ காட்டுன பி.பி பிரசண்டேஷனை சார் வாங்கிட்டு வரச்சொன்னார்.. அதனாலதான் போகலை..’

சேவியர் புன்னகையுடன், ‘Is it? Wait for a second.. I will copy it in a floppy and give it to you..’ என்றவாறு அமர்ந்து அடுத்த சில நொடிகளில் தன்னுடைய லாப் டாப்பிலிருந்த பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளை ஒரு புது ஃப்ளாப்பியில் பகர்த்தி அவனிடம் நீட்டினார்.

அதைப் பெற்றுக்கொண்ட மிஸ்ரா வியப்புடன், ‘You have done it yourself Sir! I thought you would ask your assistants to do that.. Thank you so much Sir..’ என்றவாறு தயங்கி நிற்க..

‘என்ன மிஸ்ரா? வேற ஏதாவது வேணுமா?’ என்றார் சேவியர்..

‘Sir, I am really sorry for the way our M.D. spoke to you just a while ago.. I was really shocked Sir..’

சேவியர் புன்னகையுடன் தன் மேசையை சுற்றி வந்து அவனுடைய தோளை தட்டிக்கொடுத்தார்.. ‘Not at all.. இது ஒன்னும் பெரிசில்லை.. I have faced several such insults in the past.. Don’t worry..’

‘Ok.. Sir.. I just wanted you to know my feelings.. that’s why..’ என்று மிஸ்ரா இழுக்க..

‘I understand.. thankyou for that..’ என்றார் சேவியர். ‘One more thing Misra.. இங்க நடந்தது சேர்மனுக்கு தெரியக்கூடாது..’

சேதுமாதவனைப் போன்ற வில்லன்கள் இருக்கும் இந்த வங்கியில் இப்படியும் ஒருவரா என்று நினைத்தவாறு வாயிலை நோக்கி விரைந்தான் மிஸ்ரா..

அன்று முழுவதும் நடக்கவிருந்த கமிட்டிகளுக்கு சேர்மனை தயார் செய்யவேண்டிய அலுவல் நினைவுக்கு வர லிஃப்ட் கட்டடத்தின் தரை தளத்தை அடைந்தவுடனேயே வெளியேறி ஓட்டமும் நடையுமாய் தான் வந்திருந்த வாகனத்தை நோக்கி ஓடினான்.

*********

குளித்து முடித்து புறப்பட தயாரான நளினி ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றவாறு தன்னுடைய செல் ஃபோனில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்த நந்தக்குமாரைப் பார்த்தாள்..

யார்கிட்ட இவ்வளவு நேரமா பேசிக்கிட்டிருக்கார். அதுவும் கோபத்தோட.. மறுபடியும் அந்த முரளியாருக்குமோ?

மெள்ள அவனை நெருங்கி அவன் பேசுவதை கவனித்தாள்..

‘எடோ.. நான் வந்தது இதுக்கில்ல.. எனக்கு முதல் வேலையா மாணிக்க வேல் சார போய் பாக்கணும்.. நளினிக்கு வந்தனா மேடத்த பாக்கணும்.. அப்புறந்தான் ஒன் ப்ரோக்ராம் எல்லாம்.. புரிஞ்சிதா?’  

மறுமுனையிலிருந்து வந்த பதில் அவனுடைய கோபத்தை மேலும் கூட்டுவதை கவனித்தாள்..

‘இங்க பார் முரளி.. நீ சொல்றது சரியாயிருக்கலாம்.. ஆனா அதுக்கு நீ தேர்ந்தெடுத்த நாள்தான் சரியில்லை.. இன்னைக்கித்தான் புதுசா அவர் ஜாய்ன் செஞ்சிருக்கார். இன்னைக்கே இந்த பிரச்சினைய பெரிசுபடுத்தி லஞ்ச் ஹவர் டெமோங்கறது கொஞ்சம் ஜாஸ்தியா தோணலை? வேணாம்.. நா சொல்றத கேளு.. ரெண்டு நாள் போட்டும்.. அவர்கிட்ட ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் கேப்போம்.. அவர் குடுக்க மாட்டேன்னு சொன்னா அப்புறம் ஒன் ஐடியா படியே செய்யலாம்.. இன்னைக்கி வேணாம்..’

நான் நெனச்சது சரியாத்தான் இருக்கு.. அந்த முரளிதான்.. அதென்ன லஞ்ச் ஹவர் டெமோ... என்ன ப்ராப்ளம்.. நேத்தைக்கி காலைல இவர் சொன்ன கல்கத்தா ப்ராபளமாருக்குமோ..

அந்த முரளிக்கு எதையாச்சும் காரணமா வச்சிக்கிட்டு வில்லங்கமா எதையாச்சும் செஞ்சிக்கிட்டே இருக்கணும்.. இல்லன்னா தூக்கம் வராது..

இதுக்கு இந்த நந்து ஒரு கூட்டு.. பேசி முடிக்கட்டும் வச்சிக்கறேன் என்று கறுவியவாறு அவனை நெருங்கினாள் நளினி..

இணைப்பைத் துண்டித்துவிட்டு திரும்பிய நந்து தனக்கு மிக அருகில் நின்றிருந்த நளினியைப் பார்த்து திடுக்கிட்டு பின்வாங்கினான் கோபத்துடன்.

‘ஏய் என்ன ஒட்டு கேட்டியா?’

அவனுடைய கோபத்தை முற்றிலும் எதிர்பாராத நளினி அவனுடைய கோபத்தை தணிக்க தன்னுடைய அழகான பற்கள் தெரிய சிரித்தாள். ‘எதுக்கு நான் ஒட்டு கேக்கணும்.. அதான் நீங்க பேசறது இந்த ஓட்டலுக்கே கேக்குதே..’

நந்தக்குமார் அவளுடைய சிரிப்பைப் பார்த்துமே கோபம் தணிந்துபோய் இறங்கிவந்தான்..

‘அந்த முரளிதான் நளினி.. இன்னைக்கி லஞ்ச் ஹவர்ல எச்.ஓவுக்கு முன்னால டெமோ பண்லாம்னு இருக்கோம்.. நீ கண்டிப்பா வரணும்னான்..’

‘டெமோவா.. எதுக்காம்?’

‘அதான் அந்த கொல்கொத்தா சமாச்சாரம்.. ஆ தமிழன் மேனேசர் போய்ட்டு போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தில்லே..’

நளினிக்கு இந்த விபரம் தெரியாததால் அதிர்ச்சியுடன், ‘போலீஸ் கம்ப்ளெய்ண்டா.. எந்தா நந்து பறையன?’ என்றாள் அவனுடைய கரம் பற்றி..

நந்து சுவாரஸ்யமில்லாமல் அவளைப் பார்த்தான். ‘எதுக்கு நளினி.. நாம வந்துருக்கறது அதுக்கு இல்லையில்லையா? நாம டிஃபன் செஞ்சிட்டு தாம்பரம் போய்ட்டு அப்படியே அப்போல்லோ போய்ட்டு வரலாம்.. நான் பல்லாவரம் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஜோவை ரூம் ஃபோன்லருந்து கூப்ட்டு வழி கேட்டுக்கிட்டு வரேன்.. நீ கீழ ரெஸ்டாரண்டுக்கு போ.. செல்லுலருந்து செஞ்சா அனாவசியமா ரோமிங் சார்ஜ் வரும்.. நீ போ.. அஞ்சு நிமிஷத்துல வரேன்..’

எதுக்கு இப்ப இவன் நம்மள கீழ விரட்றான்.. ஏதும் ரகசிய திட்டம் இருக்குமோ.. என்று எண்ணியவாறு அவனை சந்தேகத்துடன் பார்த்தாள் நளினி..

அவளுடைய பார்வையிலிருந்த சந்தேகத்தை உணர்ந்த நந்து சிரித்தவாறே.. ‘சரி, சரி, அப்படி பாக்காதே.. நானும் உன் கூடவே வரேன்.. ரோமிங் ஆனா ஆய்ட்டுபோவுது.. போற வழியிலருந்து செஞ்சிக்கலாம்..’ என்றாவாறே அறையை பூட்டிக்கொண்டு அவளை பின் தொடர்ந்தான்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"low caste bastard"இப்படிப்பட்ட சொல் ஏன் வந்தது என்று புரிந்து கொள்ள சேதுவின் family map ஐப்
பார்க்கவேண்டும்
காதலிக்கும் பாத்திரங்கள் இல்லாமல் 102 பதிவுகள் என்பது ஒரு சாதனை
அதை அவ்வப்பொழுது ஈடுசெய்வபர்கள்
நந்து&நளினி,ரவி&மஞ்சு தான்....
சீனியும் மையும் இன்னும் அந்த
கட்டத்தை எட்டவில்லை

டிபிஆர்.ஜோசப் said...

வருக ஜி வருக!

நம்முடைய தமிழ்நாட்டைப் போலவேதான் கேரளமும்..

நம்முடைய முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் பதவியேற்றதையே கேரளத்துக்கு அவமதிப்பாக நினைத்தார்கள் நாயர்கள், மேனன்களும்..

சாதியை விடுங்கள் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களையும் கூட நம்முடைய சேதுமாதவனைப் போன்ற ஆட்கள் கேவலமாக நடத்தியதை நான் பார்த்திருக்கிறேன்..

காதலிக்கும் பாத்திரங்கள் இல்லாமல் 102 பதிவுகள் என்பது ஒரு சாதனை//

காதல்ங்கறது கல்யாணத்துக்கு முன்னாலதானா.. சுந்தரலிங்கம்+கனகா ஜோடிக்கிடையில் இருந்தது காதல்தானே.. காலைல எழுந்து ஆஸ்துமாவுல அவஸ்தை பட்டுக்கிட்டிருக்கற மனைவிக்கு இஞ்சிய சீவி ஆவி பறக்கற காப்பிய கொண்டு படுக்கையிலயே கொடுத்து..

அதுக்கு பேர் என்னது காதல் இல்லாம?

அப்புறம் ரவியோட முட்டாத்தனத்தையெல்லாம் மறந்து அவங்கூட மறுபடியும் ஒரு புள்ளைய தத்தெடுத்து வளக்கலாம்னு நினைக்கறதும் காதல்தானே..

சீனியும் மைதிலியும் நட்பு எது காதல் எதுன்னு தெரிஞ்சிக்காம குழம்பிப் போயிருக்காங்களே..

நளினி+நந்து வுக்கும் நடுவில நடக்கற ஈகோ பிரச்சினைதான் இன்னைய இளம் தலைமுறையினருடைய பிரச்சினை..

திருமணம் சந்தோஷமான தாம்பத்தியமா மாறாம இருக்கறதுக்கு இந்த ஈகோதான் காரணமே..

அத களையணும்னு ரெண்டு பேருமே முயற்சி செய்யறாங்கங்கறது உண்மைதான் ஆனா அதுல ஜெயிப்பாங்களாங்கறது போக, போகத்தான் தெரியும்..