18.1.06

மீண்டும் சூரியன்!!

இன்றைய பதிவிற்காக நளினி எழுதியது போல் ஒரு கவிதையை எழுதித் தருகிறீர்களா என்று நம் 'சோம்பேறி பையன்' அவர்களிடம் கேட்டிருந்தேன்..

அவருடைய கவிதை வருவதற்கு தாமதமானதால் நானே ஒரு அமெச்சூரிஷ் கவிதையை சேர்த்து இன்றைய பதிவை போட்டுவிட்டேன்..

அவருடைய அழகான கவிதை இப்போதுதான் மின்னஞ்சலில் வந்தது..

இதோ..
அவ்ருக்கு நன்ரிகளுடன்..


சூரியன் முகம் பார்க்காதுதாமரை மலராது தெரியுமாஉன் முகம் பார்க்காமல் நான் மலர மாட்டேன், தெரியுமா ?
தலைவனும், தலைவியும்ஊடலோடு காதல் புரியும்அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..எதையேனும் தெரிந்திருப்பாயா ?
தெரிந்திருந்தால்என்னை முழுமையாய்புரிந்திருப்பாயோ ??
விளையாட்டாய் புரிந்த செயல்வினையாய் முடிந்த வருத்தத்தில்மனதார கேட்கிறேன், மன்னிப்புமலர்வாயா, மறப்பேன் என் தப்பு !
தலைவன் ஊரிலில்லாத பொழுதுபசலை நோயில் ஏங்கும் தலைவிபோல், ஏங்குகிறேன் நான்உன் புறக்கணிப்பால்...
உன்னைக் காட்டிலும் எனக்குஉன் திறமை பிடிக்கும்...உன் கர்வம் பிடிக்கும்..உன் திமிர் பிடிக்கும்..உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..உன் கோபம் பிடிக்கும்..இத்தனையும் மீறி உன்நற்குணம் பிடிக்கும்...
இத்தனையும் பிடித்ததாலேயேஉன்னை எனக்கு பிடித்தது...உன்னையே எண்ணி தவிக்கும்என்னை பிடிக்குமா, உனக்கு

3 comments:

G.Ragavan said...

சோம்பேறிப் பையன் நல்லாவே எழுதியிருக்காரு. பிரமாதம். யாரங்கே....ஆயிரம் பொற்காசுகளை சோம்பேறிப் பையனுக்காக தரையெங்கும் விசுறுங்கள். (ஏந்தெரியுமா? அப்பதான் சோம்பேறிப் பையன் பொறுக்கச் சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு காசெல்லாம் விட்டுட்டுப் போயிருவாரு. ஹி ஹி)

பழூர் கார்த்தி said...

ராகவன், பொற்காசுகளா, ஏங்க நீங்க வேற.. :-)
ஜோசப் சார்,
கவிதை, சரியான வரியமைப்புடன்...
*****

சூரியன் முகம் பார்க்காது
தாமரை மலராது தெரியுமா
உன் முகம் பார்க்காமல்
நான் மலர மாட்டேன், தெரியுமா ?

தலைவனும், தலைவியும்
ஊடலோடு காதல் புரியும்
அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..
எதையேனும் தெரிந்திருப்பாயா ?

தெரிந்திருந்தால்
என்னை முழுமையாய்
புரிந்திருப்பாயோ ??

விளையாட்டாய் புரிந்த செயல்
வினையாய் முடிந்த வருத்தத்தில்
மனதார கேட்கிறேன், மன்னிப்பு
மலர்வாயா, மறப்பேன் என் தப்பு !

தலைவன் ஊரிலில்லாத பொழுது
பசலை நோயில் ஏங்கும் தலைவி
போல், ஏங்குகிறேன் நான்
உன் புறக்கணிப்பால்...

உன்னைக் காட்டிலும் எனக்கு
உன் திறமை பிடிக்கும்...
உன் கர்வம் பிடிக்கும்..
உன் திமிர் பிடிக்கும்..
உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..
உன் கோபம் பிடிக்கும்..
இத்தனையும் மீறி உன்
நற்குணம் பிடிக்கும்...

இத்தனையும் பிடித்ததாலேயே
உன்னை எனக்கு பிடித்தது...
உன்னையே எண்ணி தவிக்கும்
என்னை பிடிக்குமா, உனக்கு ?

டிபிஆர்.ஜோசப் said...

ஆமாம் சோ.பையன்,

இப்படி படிச்சாத்தான் நல்லாருக்கு..

நன்றி..