24.2.06

சூரியன் 30

விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து படுக்கையில் அமர்ந்த சேதுமாதவனின் தலை விண்னென்று வலித்தது..

முந்தைய நாள் மாலையில் அடித்த ‘வெள்ள’த்தின் பாதிப்புதான், வேறென்ன?

ஃபோன் பண்றேன்னு போய்ட்டு  ஆ -------- மவன் முரளி விளிச்சிட்டேயில்லல்லோ.. என்று முரளிதரனை நினைத்து வசைபாடினார்.

படுக்கை தலைமாட்டில் இருந்த மேலைநாட்டு அலங்கார டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்து என்றது..

ராத்திரியே என்னாச்சின்னு விளக்கமா ஃபோன்ல சொல்றேன்னு போனவன் ஏன் கூப்டவே இல்லை? ஒருவேளை அந்த சுந்தரத்துக்கு ஃபோன் பண்ணி சொல்லிருப்பானோ.. இருக்கும். அந்த முரளி என்ன வேணும்னாலும் செய்வான்..

அவன் செல்லுக்கு ஃபோன் பண்ணா என்ன? வேண்டாம்.. அவனாவே ஃபோன் பண்ணட்டும்...

படுக்கையில் படுத்து இன்னும் சிறிது நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட்டாலென்ன என்று நினைத்து அதையும் வேண்டாம் என்று தள்ளிவிட்டு படுக்கை அருகிலிருந்த இண்டர்காம்மை எடுத்து அவருடைய வேலையாள் திரு என்ற திருநாவுக்கரசுக்கு டயல் செய்தார்.

ஒரு அடி அடித்ததுமே எடுத்த திரு, ‘என்னய்யா.. சாயாத்தானே.. தோ, ஒரே நொடியில..’ என.. ‘அதே.. வேகம் கொண்டு வா..’ என்றார் மாதவன். அதுதான் திருநாவுக்கரசு. எள் என்பதற்கு முன்பு எண்ணையாக வந்து நிற்பவன்!

அவன் வருவதற்குள் பல் தேய்த்துவிட்டு வந்துவிடலாம் என்ற நினைப்புடன் எழுந்து அவருடைய பிரத்தியேக குளியலறைக்குள் நுழைந்தார்.

ஆமாம். அது அவருடைய பிரத்தியேகமான குளியலறைதான். அதனுள், சுத்தம் செய்ய வரும் ஆயாவைத்தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.. அவருடைய மனைவி மாயாதேவிக்கும் தான்.. அவரே மேற்பார்வையிட்டு பார்த்து, பார்த்து வடிவமைத்த குளியலறையாக்கும் அது..

அதென்ன அப்படி.. ஆஃப்டர் ல் ஒரு குளியலறை.. என்று நினைத்தீர்களானால் அது தவறு..

உள்ள போய் பாருங்கள், தெரியும்..

நுழை வாயில் கதவே ஒரு பிரத்தியேக டிசைனில் மாதவனின் டேஸ்டுக்கு ஏத்தாப்பல ‘செக்சியாக’ இருக்கும்.. புரியலையா? அப்ப விட்டுருங்க..

அதத் தாண்டி உள்ள வாங்க..

ஒரு குட்டி பெட் ரூம் சைசில் இருபதுக்கு இருபது என்று மொத்தம் நானூறு சதுர அடி. அறை முழுவதும் கரணம் தப்பினா மரணம்தான் என்பதுபோல் வழுக்கும் மார்பிள் .. ‘தண்ணி கீழ நிக்கறதே தெரிய மாட்டேங்குதுமா’ என தினமும் புலம்புவாள் ஆயா.. ஆனால் மாதவனுக்கு அது அத்துப்படி.. கால்ல ஸ்பாஞ்ச் வைத்து தைத்த  துணியாலான ஷ¤மாதிரியான ஒரு காலனியை அணிந்துக்கொண்டுதான் உள்ளே நுழைவார்.. வழுக்கும் என்ற பிரச்சினையே இல்லை..

அறை சுற்றுச் சுவர் முழுவதும் தரையிலிருந்து கூரை வரை பெல்ஜியம் கண்ணாடிகள்.. அறைக்குள் நுழைந்ததுமே எதிரே, இடது, வலது என எல்லா பக்கங்களிலிருந்தும் பிம்பங்கள் அவரை நோக்கி வருவதைப் பார்ப்பதே அவருக்கு ஒரு த்ரில்.. தினம் தினம் பார்த்தாலும் அதில் லயித்து போய் ஒரு நொடி நின்று ரசிப்பார்..

‘அம்மா, உங்க வீட்டுக்காரர் பாத்ரூமுக்குள்ள போறதுக்கே எனக்கு பயமா இருக்கு. யாரோ பக்கத்துலருந்து நம்மளையே பாக்கறா மாதிரி..’ என்ற சுத்தம் செய்யும் ஆயாவைப் பார்த்து ‘போடி பிராந்தி’ என்று சிரிப்பாள் மாயாதேவி..

பத்தடி நீளமுள்ள பெரிய பாத் டப் அலங்கார பைப் ஃபிட்டிங்குகளுடன் அறையின் இடது பக்கம் முழுவதையும் பிடித்துக்கொண்டிருந்தது.. நேர் எதிரில் மூன்றடி நீளத்திற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாரி நிறுவனத்தின் வாஷ் பேசின்.. கையை நீட்டியவுடன் தானாக திறந்து, மூடிக்கொள்ளும் அலங்கார சுடுநீர், குளிர் நீர் குழாய்களுடன். அதற்கருகில் வலப்பக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அரை அங்குல ஆழமுள்ள பூத்துவாலைகளைத் தாங்கி நிற்க ஒரு அழகான முழு நிர்வாண வீனஸ் சிலை.. (சே! என்ன மனுஷன் இவர் என்ற முனகலுடன் சுத்தம் செய்ய வரும் ஆயா அறைக்குள் நுழைந்ததும் ஒரு துணியால் மூடுவது அந்த சிலையைத்தான்.)..

வாஷ் பேசினுக்கு இடப்பக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று ப்ளேடுகளைக் கொண்ட மின்சார ஷேவர், குட்டியாய் கைக்கு அடக்கமான ஹேர் கட்டிங் இயந்திரம், ஷேவிங் க்ரீம் மற்றும் ஆஃப்டர் ஷேவ் லோஷன், மாதவனின் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தேவையான ஸ்ப்ரே பாட்டில்கள்..

அறையின் மூலையில் அலங்காரமான இருக்கையைப் போன்ற கைப்பிடியுடன்(!) வடிவமைக்கப்பட்ட கழிப்பிடம், அதையொட்டி, தியேட்டர்களில் இருப்பது போன்ற உபயோகித்தவுடன் தானாக திறந்து சுத்தம் செய்துக்கொள்ளும் வசதியுடனான  யூரினல் க்யூபிக்கிள்..

அதற்கு பக்கவாட்டில் சுவரில் பொருத்தப்பட்ட குறு மேசை.. அதன் மேல் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் லாப்டாப், தினசரி தாள்களை பொருத்தக்கூடிய க்ரிஸ்டல் ஸ்டாண்ட், தொலைப் பேசி, இண்டர்காம்.. இத்யாதிகள்..

கமலஹாசன் ஒரு போட்டியில் கூறினாராம்.. இங்க இருக்கும்போதுதான் பிரமாதமான ஐடியாஸ் வரும்.. அப்ப உடனே ஒர் நோட் பேட்ல குறிச்சி வச்சிக்குவேன் என்று.. அவருக்கு ஒரு சாதாரண குறிப்பேடு இருந்தால் போதும்.. நம் சேது சாருக்கு ஒரு லாப்டாப்!

அப்ப்ப்ப்ப்ப்பா.. அந்த அறையில் இருப்பதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்..

சேது மாதவன் ஒரு சரியான டிவி பைத்தியம்.. அதுவும் லாஸ் வேகஸ், டினாஸ்டி, ஹாலிவுட் ஸ்டார்ஸ்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை முறைப்பற்றியும் வரும் தொலைக்காட்ட்சி டாக்கு சினிமாக்கள் என்றால் கொள்ளைப் பிரியம்..

அவருடைய படுக்கையறை, குளியலறை, ஸ்டடி அறை.. இவை எல்லாமே ஆங்கில படங்களையும், தொலைக்காட்சி தொடர்களில் வந்தவற்றையும் காப்பியடித்து வடிவமைக்கப்பட்டவைகளே..

சரி.. இதற்கெல்லாம் எங்கிருந்த பணம் வந்தது என்று கேட்காதீர்கள்..

Amassing assets disproportionate to known source of income என்று வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் வெற்றிதான்..

ஆனால் ஒன்று. சேது மாதவனின் மனைவி மாயாதேவியின் தந்தை கேரளத்தில் பரம்பரை பரம்பரையாகவே சாராயக்கடை, மதுபானக் கடைகளை ஏலம் எடுத்து நடத்திய குடும்பத்தில் வந்தவர்..

கணக்கிட முடியாத கறுப்புப் பணத்தில் புரண்டவர்.. மாயாதேவியையும் சேர்த்து அவருக்கு நான்கு புதல்விகள்.. புதல்வர்கள் இல்லை.. ஆகவே அவருடைய அபிரிதமான ஐந்தாறு கோடி ரூபாய் சொத்திற்கு நான்கில் ஒரு பங்குக்கு மாயதேவி பிறகு அவளுக்கு கணவர் என்ற முறையில் சேது மாதவனும் ஒரு வாரிசு என்பது உண்மைதான்..

ஆனாலும் சேது மாதவனுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு அவருடைய மாமனாருடைய கையை எதிர்பார்த்ததே இல்லை..

சேதுமாதவனுக்கு பல வழிகளிலுமிருந்து வருமானம் வரும்.. அவருக்குக் கிடைத்த ஆறிலக்க மாத சம்பளம் வெறும் கண்துடைப்புக்குத்தான்..

ஆனால் சேதுமாதவன் கேடுகெட்ட வழியில் சம்பாதித்த கணக்கிடமுடியாத சொத்துக்கு அவருடைய மாமனாரின் பரம்பரைப் பணக்கார வம்சாவழி ஒரு சவுகரியமான போர்வை என்பதென்னவோ உண்மை..

***

சேதுமாதவன் பல் தேய்த்துவிட்டு வரவும் ஆவி பறக்கும் ஏலக்காய் கலந்த டார்ஜ்லிங் தேயிலையில் (தேயிலை அவருடைய வங்கியின் அஸ்ஸாம் கிளை வாடிக்கையாளருடைய கைங்கரியம்) தயாரிக்கப்பட்ட சாயாவை ஒரு அழகான சைனா பீங்கான் குவளையில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தருவதைப் போல் திரு கொண்டுவந்து கட்டிலுக்கருகில் இருந்த குறு மேசையில் வைத்துவிட்டு நின்றான்.

‘எடோ.. தாம் மாத்திரம் இல்லங்கில் ஞான் எந்தாவும்?’ என்று புன்னகையுடன் கூறிய முதலாளியைப் பார்த்து முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், பதில் ஏதும் பேசாமல் நின்றான் திரு..

ஐயா புகழ்றார்னு சந்தோஷப்படவும் மாட்டான், திட்டறாரேன்னு கவலைப்படவும் மாட்டான், கடந்த பதினைந்து வருடங்களாக அவருடைய வீட்டில் அவருக்கு எல்லாமாக இருந்து வரும் திருநாவுக்கரசு..

அவனுடைய பெயரை அழைத்து எங்கே தன்னுடைய நாக்கு சுளுக்கிக் கொள்ளுமோ என்று அதை திரு என்று சுருக்கியவர் அவரே..

நல்ல வேளை திருடான்னு கூப்டாம விட்டாரே என்று நக்கலடிப்பான் டிரைவர். ‘அப்படி கூப்டாலும் அது சரியாத்தான் இருக்கும்.’ என்பான் திரு பதிலுக்கு. ‘திருடனுக்கு திருடந்தான்யா லாயக்கு. ஐயா ஊர கொள்ளையடிக்கிறார். நா அவர கொள்ளையடிக்கிறேன். அவர் வீட்டுச் சொத்தா போவுது? ’

ஆமாம். திருநாவுக்கரசு அந்த வீட்டிலிருந்து சகட்டுமேனிக்கு சுருட்டும் அநியாயம் சேது மாதவனுக்கும் தெரியுமோ என்னவோ ஆனால் அவன் வெளியே இருப்பதைவிட தன்னுடன் இருப்பதே நல்லது என்று நினைக்குமளவுக்கு அவருடைய தில்லுமுல்லுகளையும் மாயாதேவி ஊரில் இல்லாத நேரத்தில் அவர் விளையாடும் காம லீலைகளையும் அறிந்து வைத்திருந்த ஒரே ஆள் திரு தான்.

சாயாவை சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துவிட்டு கோப்பையை திருவிடம் கொடுத்துவிட்டு, ‘மாயா எத்தற மணி ஃப்ளைட்லா வரனே திரு?’ என்றார்.

‘சாயந்திரம் ஏழு மணிக்கு சார். டிரைவர போகச்சொல்லிட்டேன். சாருக்கு சேர்மன பாக்க போணுமே.’

சட்டென்று நினைவுக்கு வந்ததுபோல் நிமிர்ந்தார் மாதவன். ‘எடோ தான் ஒரு காரியம் செய்யி. தாழ போயி எண்ட கார் டாஷ் போர்ட்ல கருத்த நிறத்துல ஒரு ச்செறிய டைரி உண்டாவும். அத கொண்டுட்டு வேகம் வா.’

திரு காலியான கூஜாவையும் கோப்பையையும் எடுத்துக்கொண்டு விரைந்து ஓடினான்.

தொடரும்..

6 comments:

G.Ragavan said...

கக்கூஸ்லயே கலையலங்காரமா.....சரி...இருக்குறவுக...வெச்சுக்கிறாக...இருக்கட்டும் இருக்கட்டும்...

அதென்ன ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒவ்வொரு ஸ்பிரே.....மொத்தமா ஒரு செண்டு போட்டா பத்தாதா...

தனக்குதானே தலைமுடி வெட்டிக்கிருவாராக்கும்....அதெப்படி முடியும்...கோணையும் மாணையுமா ஆயிராதா?

இவ்வளவு வெச்சாரே கக்கூஸ்ல ஜக்கூஸி வெக்க மறந்து போனாரே!

அது சரி...நம்ம நாலே நாலா ஏதோ நாலா படிக்கலையா....நீங்கதான இழுத்து விட்டீங்க...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நம்ம நாலே நாலா ஏதோ நாலா படிக்கலையா//

ஐயையோ, படிக்கலையே..

எப்படி மிஸ் பண்னேன்..

தோ.. ஒரே நொடி..

dondu(#11168674346665545885) said...

கஷ்ட காலம் சாரே. மாதவன் வேறு சேதுமாதவன் வேறு என்பது இந்த அத்தியாயத்தில்தான் பிடிபட்டது. இப்படி ஒரே மாதிரியான பெயர்கள் குழப்பி விட்டன.

கதையில் நிறைய கேரக்டர்கள் வந்தாலே இப்படித்தான். ஏதோ ஆர்தர் ஹெயிலி கதை படிப்பதுபோல இருக்கிறது.

அதர் ஆப்ஷன் உங்களிடம் இல்லாததால், for a change, இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய வேறுபதிவில் போட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதற்கான முதல் இரண்டு சோதனைகளை செய்து பார்த்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
(சரியான ப்ளாக்கர் எண் மற்றும் ஃபோட்டோ).
அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்..

இப்படி ஒரே மாதிரியான பெயர்கள் குழப்பி விட்டன. //


நீங்க சொல்றது சரிதான். ரெண்டு மாதவன் மாதிரி ரெண்டு சுந்தரமும் இருக்கு.. ஒன்னு கிறிஸ்துவர் ஒருத்தர் இந்து..

இந்த பெயர் குழப்பம் காரணமாத்தான். அத சொன்னா சஸ்பென்ஸ் போயிரும்..

ஒரே மூச்சுல புத்தகமா உக்காந்து படிச்சா கன்ஃப்யூஷன் வராது.. தொடரானதுனால படிக்கறவங்க எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சிக்கறதும் கொஞ்சம் கஷ்டம்தான்..

எல்லா எப்பிசோடுக்கும் லிங்க் குடுத்தா நல்லாருக்கும். சோம்பேறித்தனம்..

சார் அப்புறம் போலிக்கெல்லாம் பயப்பட்ட காலம் போயிருச்சே.. நீங்க ஞாபகப்படுத்தாம இருந்தா சரி..

பழூர் கார்த்தி said...

// எல்லா எப்பிசோடுக்கும் லிங்க் குடுத்தா நல்லாருக்கும். சோம்பேறித்தனம்.. //

என்னுடைய தனி உரிமைச் சொத்தை (சோம்பேறித்தனம்) நீங்கள் அபகரிக்க முயற்சிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் !!!

*****

சேதுமாதவன் பாத்ரூமே இவ்வுளவு நல்லா / அலங்காரமா கட்டியிருக்காருன்னா.. எவ்ளோ பணம் புரளும் ?? ஹூம்.. 'வீடு வரை மனைவி.. வீதி வரை உறவு.. காடு வரை பிள்ளை.. கடைசி வரை யாரோ ???' என்ற வரிகள் அவருடைய ஞாபகத்திற்கு வரவில்லை போலும்....

****

என்ன, தனக்குத்தானே முடி வெட்டிப்பாரா ?? கஷ்டம்தான்.. கலிகாலம்தான்....

டிபிஆர்.ஜோசப் said...

ஏங்க சோ.பையன், உங்களுக்கு முன்னால பேர் வச்சிக்கிட்டு மொத்த சோம்பேறித்தனமும் உங்களுடையதுன்னு காப்பி ரைட் போட்டுட்டா எப்படி?

என்ன, தனக்குத்தானே முடி வெட்டிப்பாரா ?? //

அதுக்குத்தான் ஆல் இன் ஆல் திரு இருக்காரே.. சேது மாதவனுடைய் குடுமி இப்ப அவர் கையிலதானே..