‘நம்ம பிலிப் சார கூப்ட்டு ஹெல்ப் கேக்கணும்னு சொல்லியிருந்தீங்களே.. மறந்துட்டீங்களா?’ என்ற மஞ்சுவைப் பார்த்தான்..
‘ஆமா மஞ்சு மறந்தே போய்ட்டேன். இன்னைக்கி புது சேர்மன் சார்ஜ் எடுக்கற நாள் வேற.. சார் வீட்லருந்து புறப்படறதுக்கு முன்னாலயே புடிச்சாத்தான் முடியும்..’ என்றவாறு பிலிப் சுந்தரத்தின் செல் ஃபோனுக்கு டயல் செய்தான் ரவி..
நல்ல வேளையாக அவர் வீட்டில் இருந்தார்..
ரவி பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்ட ஃபிலிப் சுந்தரம், ‘Don’t worry Ravi.. I will speak to the BM immediately after reaching my office.. இன்றைக்கு புது சேர்மன் சார்ஜ் எடுக்கறது ஒங்களுக்கு தெரியுமில்லே.. அவருக்கு சின்னதா ஒரு லாபி ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம்.. அது முடிஞ்சதும் நான் கூப்ட்டு பேசறேன்.. நீங்க ஒரு பதினோரு மணிக்கு பிராஞ்சுக்கு போங்க.. He will help you. All the best.’ என்று இணைப்பை துண்டித்தார்.
‘என்ன ரவி சொல்றார்?’ என்ற மஞ்சுவை பார்த்தான் ரவி.
‘இன்னைக்கி புது சேர்மன் வர்ற நாள். அதான் அவர ரீசிவ் பண்ணிட்டு நான் பிராஞ்சுக்கு ஃபோன் பண்றேன்.. நீங்க பதினோரு மணிக்கு மேல போங்கன்னு சொல்றார்.’
ரவியின் குரலிலிருந்த அவநம்பிக்கையைப் புரிந்துக்கொண்ட மஞ்சு தரவாக அவனைப் பார்த்து புன்னகை செய்தாள். ‘எதுக்கு ரவி ஒர்றி பண்றீங்க. அவர் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார். நான் ரெண்டு, மூனு தடவ மீட் பண்ணியிருக்கேனே.. He is a gem of a person..’
நீ எப்போ, எந்த சூழ்நிலையில அவர போயி பாக்க வேண்டி வந்ததுன்னு எனக்குதான் தெரியுமே மஞ்சு.. நான் போற போக்கு சரியில்லேன்னு சொல்லத்தானே.. அப்போ ஒன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்.. நாந்தான் புரிஞ்சிக்க முடியாத முட்டாளா இருந்தேனே..
‘என்ன ரவி அப்படி பாக்கீங்க? ப்ளாஷ் பேக்கா?’ என்று மென்மையாக சிரித்தவாறு எழுந்து நின்றாள் மஞ்சு..
சேச்சே என்று தலையை அசைத்தான் ரவி..
‘சரி நீங்க எழுந்து போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுங்க.. நாம போற வழியில கோயிலுக்கு போய்ட்டு போலாம். என்னதான் மனுஷாளுங்க நமக்கு இருந்தாலும் தெய்வம்னு ஒன்னு இருக்குல்ல.. எல்லாம் நல்லபடியா முடியும்.. நா போயி அடுத்த வீட்டு வக்கீல் மாமாவையும், மாமியையும் பார்த்து இன்னைக்கி பிராஞ்சுக்கு போற விஷயத்த சொல்லிட்டு வந்துடறேன்..’
வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறிய மஞ்சுவையே பார்த்துக்கொண்டு நின்ற ரவி அவள் சென்று மறைந்ததும் அவசர அவசரமாக உடை மாற்றி முடித்து தான் அலுலகத்திலிருந்து என்னென்ன தஸ்தாவேஜுகளை நகல் எடுத்து கொண்டு வரவேண்டும் என்று முந்தைய தினம் குறித்துவைத்திருந்த பட்டியலை ஒருமுறை சரிபார்த்தான்.
அடுத்த கால்மணியில் மஞ்சு புன்னகையுடன் திரும்பி வர இருவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினர்.
****
‘Yeah.. that’s what your cell phone’s IMEI number. If you report this to your service provider.. they would immediately find out from which corner of the City the phone is being used.. without that.. no use..’ என்று உதட்டைப் பிதுக்கியவனையே பார்த்தாள் மைதிலி..
வாகனம் சயான் சந்திப்பைக் கடந்து பாந்த்ராவை நோக்கி திரும்ப சயான் ரயில் நிலையத்திலிருந்து சாரை சாரையாக வெளியேறிய ஜனக்கூட்டத்தைப் பார்த்து மலைத்தான் சீனிவாசன்..
‘என்ன சீனி புதுசா பாக்கறா மாதிரி பாக்கறே.. இந்த கூட்டத்துலதான நீயும் நானும் தினம் தினம் ட்ராவல் பண்றோம்?’ என்றாள் மைதிலி..
சீனிவாசன் பதில் பேசாமல் எதிர்புறம் திரும்பி பேருந்து நிறுத்தத்தில் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்தவர்களைப் பார்த்தான்..
சயான் குன்றின்மீது கம்பீரமாக நின்றிருந்த அந்த கிறித்துவ தேவாலயம், அதன் முன்னே அணிவகுத்து நின்ற பள்ளி சிறார்கள் கூட்டம், அதனையடுத்து அமைந்திருந்த கூடைப் பந்து கோர்ட்டில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவிகளின் குதூகலம், சாலையோரத்தில் நடைபாதையை அடைத்துக்கொண்டு விரிந்திருந்த சில்லறை ப்ளாஸ்டிக் பொருட்கள்..
‘Mumbai is a colourful place.. Is it not?’ என்றான்.
காலில் கட்டு.. இன்னும் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது எங்கும் நகர முடியாத நிலை, வீட்டிலுள்ள எல்லோரும் சென்னையில்.. இனி அடுத்து என்ன செய்வது என்பது தெரியாத ஒரு நிலையற்றத்தனம்..
இந்த சூழ்நிலையிலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் மனம் லயித்துபோயிருக்கும் இவனுடைய குழந்தைத்தனத்தை என்னவென்று சொல்வது?
‘இப்ப என்ன பண்றதா ப்ளான் சீனி?’
சீனிவாசன் திடுக்கிட்டு திரும்பி அவளைப் பார்த்தான்.
‘What do you mean? எதுக்கு திடீர்னு இந்த கேள்வி?’
‘இல்ல சீனி.. இன்னும் ரெண்டு வாரத்துக்கு நீ எங்கயும் போமுடியாது.. ஆண்ட்டிக்கிட்ட என்ன சொல்லப்போறே?’
‘என்ன சொல்லணும்னு நீ சஜ்ஜஸ்ட் பண்ணேன்?’
‘எனக்கு தெரியலை. நீயே சொல்லு..’
சீனிவாசன் திரும்பி சாலையைப் பார்த்தான்.. அம்மாகிட்ட கால ஒடச்சிக்கிட்டேன்னு சொல்ல முடியாது. ஒடனே அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. அப்புறம் அம்மா வந்துட்டா இவளையும் ஃப்ரீயா மீட் பண்ண முடியாது.. வீட்ல யாரும் இல்லாத இந்த ரெண்டு வாரத்துல இவ மனசுல எனக்கு என்ன எடம் இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்..
என்னை வெறும் ஃப்ரெண்டா மட்டுமே இன்னும் நினைச்சிக்கிட்டிருக்கேன் சீனின்னு சொல்லிட்டான்னா இனிமேலும் இவள நினைச்சிக்கிட்டிருக்கறதுல அர்த்தமே இல்லே..
I will have to carry on with my life.. with or without her.. அவ அப்பா சொல்றதுலயும் தப்பில்லையே.. ‘எனக்கு மைதிலிய விட்டா யாரும் இல்லேங்கறது ஒனக்கு தெரியுந்தான சீனி.. நீ ஏன் எங்களுக்காக அவள விட்டுறக்கூடாது’ன்னு கேட்டப்போ I couldn’t answer, no?
‘கால ஒடச்சிக்கிட்டேன்னு சொல்லப் போறதில்லை..’
‘பின்னே?’
‘சும்மா ஒரு மூனு வாரத்துக்கு தனியா இங்கயே இருக்கேன்.. I need this time to sort out my lifeனு சொல்லப் போறேன்..’
மைதிலி வியப்புடன் அவனைப் பார்த்தாள்.. என்ன சொல்ல வரான் இவன்? Sort outன்னா? என்னெ மறந்துரப்போறேங்கறானா? முடியுமா இவனால?
‘நீ என்ன சொல்றே சீனி.. ஒங்க வீடு வரப்போவுது.. ஒங்க வீட்டு மாமி முன்னால கேக்க முடியாது.. சொல்லு.. sort outனா?’
சீனிவாசன் பதில் பேசாமல் தன் முன்னே தெரிந்த தன் வீட்டைப் பார்த்தான்..
அவர்களுடைய வாகனம் மூடியிருந்த கேட் முன்னால் நிற்க உள்ளிருந்து ஓடி வந்த காவலாளி கேட்டின் மறுபுறத்திலிருந்து, ‘கோன் ஹை பாய்..’ என்று குரலெழுப்பினான்.
சீனிவாசன் கார்கதவைத் திறந்து எட்டி அவனைப் பார்க்க, ‘ஹை சாப், அபி குல்த்தா ஹ¤ங்..’ என்றவாறு கேட்டை திறக்க அவர்களுடைய வாகனம் வீட்டினுள் பிரவேசித்து போர்ட்டிகோவை அடைந்து நின்றது..
மைதிலி பரபரப்புடன் எழுந்து சுற்றிக்கொண்டு கதவை திறக்கும் முன் கஷ்டப்பட்டு கதவைத் திறந்து இறங்கி நின்றான் சீனிவாசன்.
‘ஏய்.. why do you struggle.. நாந்தான் வந்துண்டே இருக்கேன்ல?’
‘It’s ok I will have to carry on alone from now on.. no?’
அவனைத் தாங்கிப் பிடிக்க நீட்டிய கையை சடக்கென்று இழுத்துக்கொண்டு சட்டென்று பொங்கி வந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள் மைதிலி..
அவளை பொருட்படுத்தாமல் காரிலிருந்து இறங்கி நின்ற வாகன ஓட்டுனரை சாடை காட்டி அழைத்து அவனுடைய தோள்களைப் பற்றிக்கொண்டு வீட்டு படியேறி உள்ளே நுழைந்தவனையே பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்றாள்..
வாகனம் வந்து நின்ற சப்தம் கேட்டு வீட்டினுள் வேலையாயிருந்த சிவகாமி மாமி கைகளை சேலை தலைப்பில் துடைத்தவாறே அவனை நோக்கி ஓடிவந்து மருகி நிற்கும் மைதிலியையும் காலை ஊன்ற முயன்று வேதனையில் முகம் சுளித்தவாறு நின்ற சீனிவாசனையும் மாறி, மாறி பார்த்தாள்..
அவனை ஹாலிலிருந்த சோபாவில் கொண்டு அமர்த்திவிட்டு நிமிர்ந்த ஓட்டுனரை காட்டி, ‘மாமி இவங்கிட்ட டாக்சி பணத்த குடுத்து அனுப்பிட்டு எனக்கும் மைதிலிக்கும் ஒரு காப்பி கொண்டாங்களேன்..’ என்றான் சீனிவாசன்..
குடுகுடுவென்று ஓட்டமும் நடையுமாய் அடுக்களையை நோக்கி விரைந்த மாமி அடுத்த நொடியே கையில் பர்சுடன் வந்து ஓட்டுனர் கேட்ட தொகையை கொடுத்தனுப்பிவிட்டு அப்போதும் வாசலில் நின்றுக்கொண்டிருந்த மைதிலியை பார்த்தாள்..
‘அவோ ஏண்டா அங்கயே நிக்கிறா? த்துக்குள்ள கூப்ட வேண்டியதுதான.. நீ பாட்டுக்கு வந்து ஒக்காந்துட்ட?’
‘நீங்களே கூப்டுங்க மாமி.. I am tired.. ..’
என்ன இவன்.. அந்த பொண்ணு மொகத்த பார்த்தா அழுதா மாதிரி தெரியுது.. வெவஸ்த கெட்டவன்.. எதையாச்சும் சொல்லி அந்த பொண்ண அழ வைக்கறதே இவனுக்கு வேலையா போச்சு..
சிவகாமி மாமி வாசலுக்கு விரைந்து, ‘ஏண்டிம்மா இங்கயே நிக்கறே.. உள்ற வாயேன்?’ என்றாள் மைதிலியை பார்த்து.
‘இல்ல மாமி.. நேக்கு ஆஃபீசுக்கு போணும்.. நா இந்த வண்டியிலயே போய்க்கறேன்.. நீங்க அவனெ பாருங்கோ..’
மைதிலி வாகனத்தை நோக்கி நகர சிவகாமி பதற்றத்துடன் அவளை நோக்கி சென்று அவளுடைய கரத்தை பற்றினாள். ‘அவன் ஏதாச்சும் சொல்லியிருந்தா மனசுல வச்சிக்காத மைதிலி. அவனெ பத்தித்தான் நோக்கு தெரியுமே.. இந்த டாக்சி இல்லன்னா வேற டாக்சி கிடைக்காமயா போயிரும்? நீ ஆத்துக்கு வந்துட்டு செத்த இருந்துட்டு போடீம்மா.. நேத்துதான் ஃபோன்ல சட்டுன்னு பேசிட்டு வச்சிட்டே.. இவனுக்கு எப்படி இப்படியாச்சி.. என்ன மருந்தெல்லாம் குடுக்கணும் செத்த வந்து சொல்லிட்டு போப்படாதா.. மாமி சொல்றேனோல்லியோ.. வா..’ என்றவாறு அவளை தடுத்து நிறுத்தி ஓட்டுனரைப் பார்த்து, ‘நீ போடாப்பா..’ என்றாள்..
அவனுக்கு என்ன புரிந்ததோ பதில் பேசாமல் புன்னகையுடன் காரில் ஏறி புறப்பட்டுச் செல்ல மைதிலி மாமியை பின்தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தாள்..
தொடரும்..
2 comments:
மஞ்சு ஏன் தத்தெடுப்பது பற்றி பேசுகிறாள்?
மை-சீனியில் ப்ரொபோஸ் செய்யாமலிருந்தே கெடுத்துக்கப்போறாங்களா?
ப்ரபோஸ் செய்து கெடுத்துக்கப்போறாங்களா?இல்லே
இப்படியே ஊசலாட்டத்தில் விட்டு
கடைசியில் இருவரையும் தனித் தனியே நடக்கவிட்டு,
"ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள்;
அல்லும் பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள்;
பாசத்திலே பலனைப் பறி கொடுத்தாள்"
னு பாட்டைப் போட்டுடுவீங்களா?
வாங்க ஜி!
நேத்து இனிமே ரெண்டு வரி பின்னூட்டந்தானா கேட்டதுக்காக பெரிசா போட்டுட்டீங்களா:)
மஞ்சு ஏன் தத்தெடுப்பது பற்றி பேசுகிறாள்? //
இந்த எப்பிசோடுலயா? இல்லையே?
ஆனாலும் இது நியாயமான சந்தேகம்தான்.. சமயம் வரும்போது தீர்த்து வைக்கிறேன்.
மை-சீனியில் ப்ரொபோஸ் செய்யாமலிருந்தே கெடுத்துக்கப்போறாங்களா?//
நிறைய காதல் கருகிப்போறதுக்கு காரணமே இதுதானே..
ப்ரபோஸ் செய்து கெடுத்துக்கப்போறாங்களா?//
இப்படி முறிந்துபோன காதல்களும் இருக்கத்தான் செய்யிது..
கடைசியில் இருவரையும் தனித் தனியே நடக்கவிட்டு..//
சஸ்பென்ஸ் ஒடஞ்சிருமேன்னு பாக்கேன்..
யதார்த்த வாழ்க்கையில இந்த சூழ்நிலையில ரெண்டு இளம் காதலர்கள் என்ன முடிவெடுக்கணும்னு நினைக்கறீங்க?
அதத்தான் ரவியும் மைதிலியும் எடுப்பாங்க..
Post a Comment