11.7.06

சூரியன் 106

பயிற்சிக் கல்லூரியிலிருந்து திரும்பியதும் நேரே தன்னுடைய காபினுக்கு சென்ற ஃபிலிப் சுந்தரம் இன்னும் அரை மணியில் துவங்கவிருந்த ஆடிட் கமிட்டிக்கு தயாரித்து வைத்திருந்த agenda கோப்புகளை எடுத்து ஒருமுறை வேகமாக படித்தார்.

அன்று விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் விஷயங்களில் முக்கியமாக ரவி பிரபாக்கரின் விசாரனைக்கு விசாரணை அதிகாரியை (enquiry officer) நியமிப்பது, அவருடைய சமீபத்திய ரிசர்வ் வங்கியின் விசிட், வங்கியின் ஈ.டி.பி இலாக்காவின் ஆண்டு ய்வு அறிக்கை என எல்லாமே பிரச்சினைக்குரிய விஷயமாகவே இருந்ததைப் பார்த்த அவருக்கு இன்றைக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முடியவேண்டுமே என்று கடவுளை பிரார்த்திக்கொண்டு தன்னுடைய காரியதரிசியை இண்டர்காம்மில் அழைத்தார்.

‘யெஸ் சார்’ என்ற ராஜியின் குரல் வந்ததும்

‘மிஸ் ராஜி, இன்னைக்கு முதல்ல நடக்கப்போற ஆடிட் கமிட்டியோட மெம்பர்ஸ் எல்லாரும் வந்துட்டாங்களான்னு கம்பெனி செக்கரட்டரிக்கிட்ட கேளுங்க. வந்துட்டாங்கன்னா agenda papers எல்லாருக்கும் கிடைச்சிருச்சிங்கறத கன்ஃபர்ம் பண்ணுங்க. கிடைக்கலேங்கறவங்களுக்கு ஒரு செட் குடுத்துருங்க. அப்படியே மீட்டிங் ரூம போய் ஒரு தடவை பார்த்துட்டு எனக்கு feedback குடுங்க.’ என்று ணைகளைப் பிறப்பித்தார் கடகடவென.

ஃபிலிப் சார் பாக்கறதுக்குத்தான் அமைதியான பூன மாதிரி இருப்பார். வேலைன்னு வந்துருச்சுன்னா அவ்வளவுதான், தானும் பம்பரமா சுத்தி நம்மளையும் ஆட்டிபடைச்சிருவார்' என்று தன்னுடைய தோழிகள் அவரைப் பற்றி கூறுவது சரிதான் என்று நினைத்து புன்னகையுடன் அவர் கடகடவென கூறியதைக் குறித்துக்கொண்டாள் ராஜி.

‘அப்புறம் நம்ம இன்ஸ்பெக்ஷன் ஏ.ஜி.எம் கிருஷ்ணன என் கேபினுக்கு வரச்சொல்லுங்க.' என்று மறந்துபோன ஆணையை பிறப்பித்துவிட்டு தன் முன்னிருந்த ஈ.டி.பி இலாக்காவின் ஆய்வு அறிக்கையில் தான் நேற்று வீட்டிலிருந்து படித்தபோது குறித்துவைத்திருந்த குறிப்புகளை மீண்டும் ஒருமுறை பார்த்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்க, ‘யெஸ் கமின்’ என்றார் உரக்க.

அறைக்குள் நுழைந்து, ‘குட் மார்னிங் சார். கூப்ட்டிங்கன்னு ராஜி சொன்னாங்க.’ என்றவரை நிமிர்ந்து பார்த்தார்.

இவருக்கு எத்தன முறை சொன்னாலும் புரியாது. இந்த மாதிரி கமிட்டி நாட்களிலாவது மனிதர் டை கட்டக் கூடாது? ஒரு ஏ.ஜி.எம் லெவல்லருக்கறவருக்கு இந்த பேசிக் கர்ட்டசியக்கூடவா சொல்லிக் கொடுக்கணும்.

முந்தைய  சேர்மன் இக்காரியங்களில் மிகவும் கண்டிப்பானவர். துணை பொது மேலாளர் (AGM) பதவிக்கு மேலிருந்த அதிகாரிகள் அனைவரும் அலுவலகத்தில் டை கட்ட வேண்டும் என்பதி நியதி. அப்படியும் யாரேனும் அதை அணியாமல் அவருடைய கேபினுக்குள் நுழைந்துவிட்டால் பார்வையாலேயே தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துவிடுவார்.

தலைமை அலுவலகத்திலிருந்த எல்லா இலாக்கா தலைவர்களும் துணைப் பொது மேலாளர் அந்தஸ்த்திலிருந்தவர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நியதியையும் அவர்தான் கொண்டுவந்தார். அத்துடன் இலாக்கா தலைவர்கள் அல்லாதோர் அவருடைய காபினுக்குள் நுழையவும் அனுமதியில்லை.

அவருக்கு பயந்தோ இல்லையோ அவர் அலுவலகத்திலிருந்த நாட்களில் எல்லா இலாக்கா தலைவர்களும் டை அணியாமல் வருவதில்லை. ஆனால் இந்த நாராயணன் மட்டும் விதிவிலக்கு. ‘இந்த கோவணத்த யார்யா களுத்துல கட்டிக்கிட்டு அலையறது?’ என்று அவர் தன் காதுபடவே தமாஷாக சலித்துக்கொண்டதை அவர் பலமுறை கவனித்திருக்கிறார்.  அதை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுவார்.

ஆனால் இன்று அப்படி இருக்கமுடியவில்லை. புது சேர்மன் பதவியேற்றிருக்கும் நாள் இன்று. இன்றாவது மனிதர் நியதியை மீறாமல் இருக்க வேண்டாமா என்ற எரிச்சலுடன் அவரைப் பார்த்தார். பிறகு தன்னுடைய இழுப்பில் எப்போதும் தயாராக வைத்திருந்த ஒரு புத்தம் புது டை அதனுடைய பாக்கிங்குடன் எடுத்து அவரிடம் நீட்டினார்.

‘என் பெர்சனல் ரெஸ்ட் ரூம்ல போயி இத கட்டிக்கிட்டு வாங்க.’

நாராயணன் முகத்தில் தோன்றிய மாறுதலை சட்டை செய்யாமல் அவர் தன் முன்னிருந்த ஆய்வறிக்கையை பார்க்கலானார்.

அடுத்த சில விநாடிகளில் அறையிலிருந்து வந்த நாராயணனையும் அவர் டை அணிந்திருந்த விதத்தையும் பார்த்தார். ஆனால் அதை விமர்சித்து சமயத்தை வீணாக்க விரும்பாமல், ‘ஒக்காருங்க. ஒங்கக்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.’ என்றார் சீரியசாக.

அவருடைய குரலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த நாராயணன் அவர் முன்னே இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தார் பவ்யமாக. ‘சொல்லுங்க சார்.’

ஃபிலிப் தன் முன்னிருந்த அறிக்கையை திருப்பி அவரிடம் தான் குறித்திருந்த பகுதியை காட்டினார். ‘இத படிச்சீங்களா?’

நாராயணன் இத்தகைய அறிக்கைகளை படிப்பதே இல்லை. ‘நான் இத படிச்சாலும் எனக்கு எந்த எளவும் புரியாதுங்க. நீங்களே படிச்சிட்டு என்ன செய்யணுமோ செஞ்சி தொலைங்க. இத படிச்சா ஏவும் புரியமாட்டேங்குது பியும் புரியமாட்டேங்குது.’ என்று தன்னுடைய இலாக்கா ஐ.டி. இள அதிகாரியிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை அப்படியே இவரிடம் கூறினால் வேறு வினையே வேண்டாம். ஆகவே, 'ஆமாம் சார்.’ என்றார்.

ஃபிலிப்புக்கு அவர் பொய் சொல்கிறார் என்பது தெரிந்துதானிருந்தது. அவருடைய தலைமையின் கீழ் இயங்கிவரும் இலாக்கா தலைவர்களில் இவர்தான் சொள்ளை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் இவரை வேறு எங்கும் அமர்த்த முடியாது என்பதால் வங்கியின் ஆய்வு இலாக்கா தலைவராக அமர்த்தியிருந்தார்.

‘சும்மா சொல்லாதீங்க நாராயணன். நம்ம ஏ.டி.எம் சர்வருக்கு  ஃபயர் வால் ப்ரொட்டக்ஷன் ஏதும் இல்லை. அதனால யார் வேணும்னாலும் சர்வர ஆக்சஸ் பண்ணமுடியும்னு இவ்வளவு டேமேஜிங்கா ஒரு எக்ஸ்டர்னல் ISO ஆடிட்டர் எழுதி வச்சிருக்கார். ஒங்க டிப்பார்ட்மெண்ட்லருந்து எந்த பதில் கமெண்டும் இல்லாம கமிட்டியில வச்சா ஆர்.பி.ஐ டைரக்டர் என்ன சொல்வார் தெரியுமில்ல? எல்லா ஏ.டி.எம் மையும் ஷட்டவுன் பண்ணுங்கம்பார்.. அதுக்கு என்ன பதில் சொல்வீங்க?’ என்றார் எரிச்சலுடன்.

‘சாரி சார்.’ என்றார் நாராயணன் தலையை குனிந்துக்கொண்டு.

‘ஒங்க சாரிய எல்லாம் கமிட்டி ஏத்துக்காது நாராயணன். நீங்க ஒன்னு பண்ணுங்க. ஒங்க டிப்பார்ட்மெண்ட்லருக்கற ஐ.டி ஆஃபீசர இண்டர்காம்ல கூப்ட்டு வரச்சொல்லுங்க. சீக்கிரம். கமிட்டிக்கு இன்னும் பத்து நிமிஷந்தான் இருக்கு.. க்விக்.’

நாராயணன் பதறியெழுந்து ஃபிலிப் சுந்தரத்தின் அறையிலிருந்து தன்னுடைய இலாக்கா அதிகாரியை அழைக்க அவர் அடுத்த நிமிடமே அறைக்குள் நுழைந்தார்.

ஃபிலிப் சுந்தரம் அவரை ஏறெடுத்து பார்த்தார். பிறகு நாராயணனிடம், ‘என்ன சார் பேசாம ஒக்காந்திருக்கீங்க? அவர்கிட்ட இத காமிச்சி கேளுங்க.’ என்றார்.

அந்த இளநிலை அதிகாரி தன்னுடைய குறிப்பைப் படித்துவிட்டு தன்னிடம் நேராகவே பேச முயன்று தயங்கி நிற்க, அவர் புன்னகையுடன், ‘கோ அஹெட்.’ என்றார்.

‘சார் ஃபயர்வால் நிச்சயமா இருக்கு. ஒன்னு ஆடிட்டர் கவனிச்சிருக்கமாட்டார் இல்லைன்னா நம்ம ஏ.டி.எம் செண்டர்லருக்கற டெக்னிக்கல் ஆஃபீசர் சரியா எக்ஸ்ப்ளைன் செஞ்சிருக்க மாட்டார். ஏ.டி.எம் ப்ராஜக்ட டேர்ன் கீ அரேஞ்மெண்ட்ல செஞ்சி குடுத்தது ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனி சார். ஃபயர்வால் இல்லாம அவங்க நிச்சயமா ப்ராஜக்ட இம்ப்ளிமெண்ட் செஞ்சிருக்கமாட்டாங்க.’

ஃபிலிப் சுந்தரம் தன் முன் நின்ற அதிகாரியைப் பார்த்தார். ஆக, இவரும் இதை சரியாக நிச்சயம் செய்துக்கொள்ளவில்லை. சட்டென்று எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘ஒங்க பேர் என்ன?’ என்றார் அவரைப் பார்த்து.

கேள்வியின் நோக்கம் புரியாமல், ‘சார்?’ என்றவரைப் பார்த்தார்.

‘Your Name?’

அதிகாரியின் முகம் கலவரமடைந்ததைப் பார்த்தார்.

‘சுரேஷ் சார்.’

‘மிஸ்டர் சுரேஷ்.. When I ask a question try to answer it truthfully. Don’t try to act smart. Do you understand?’

அதிகாரியின் இருளடைந்து போனது. ‘யெஸ் சார்.’

‘Now tell me. Did you confirm that the firewall is installed to protect our ATM Server? Could you give me the details?’

‘இல்லை சார். But I can furnish in ten minutes Sir.’

ஃபிலிப் சுந்தரம் கமிட்டிக்கான கோப்புடன் எழுந்து நின்றார். ‘Do that. I need it in ten minutes.. Mr. Narayanan, collect the details and come to the meeting. You may go.. make it fast.’ என்றவாறு அவர்களை கண்டுகொள்ளாமல் அறையை விட்டு மிடுக்குடன் வெளியேறினார்.

நாராயணன் தனக்கு பின்னால் அவருடைய அதிகாரியை வறுத்தெடுப்பது கேட்டது. புன்னகையுடன் தன்னுடைய காரியதரிசியின் கேபினை அணுகிய ஃபிலிப், ‘என்ன ராஜி.. எல்லாரும் வந்துட்டாங்களா? பார்த்தீங்களா?’ என்றார்.

ராஜி பதற்றத்துடன் எழுந்து, ‘எஸ் சார்.. They are in the Chairman’s cabin.. Company Secretary has said that the Audit Committee is deferred by thirty minutes. I came to your cabin to inform you. But Narayanan Sir was there.. that’s why..’ என்று தயங்கிய ராஜியை பார்த்து புன்னகைத்துவிட்டு, ‘It’s OK.. நான் கேபின்ல இருப்பேன். Call me over the intercom when they are ready.’ என்றவாறு தன் கேபினுக்கு திரும்பவும் அவருடைய செல் ஃபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

யார் என்று பார்த்தார். இயக்குனர் சோம சுந்தரம். இவர் எதுக்கு என்னைய கூப்டறார் என்ற யோசனையுடன் எடுத்து, ‘குட் மார்னிங் சார்.’ என்றார்.

‘மிஸ்டர் ஃபிலிப் are you free now? I am going to  the Chairman’s cabin. Could you come down for a minute?’

ஃபிலிப் சுந்தரத்தின் மனத்தில் ஏன் எதக்கு என்ற கேள்விகள் எழுந்தாலும், ‘யெஸ் சார்.. I will be there in a minute.’ என்று பதிலளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கையிலிருந்த கோப்புகளை மேசையின் மீது வைத்துவிட்டு திரும்பி தன்னுடைய காரியதரிசியை கடக்கும்போது, ‘Miss. Raji I will be in the chairman’s cabin. Inform the Company Secretary. I may be little late for the Audit Committee.’ என்று கூறிவிட்டு சேர்மனின் அறையிருந்த தளத்திற்கு செல்லும் லிஃப்ட்டை நோக்கி வேகமாக நடந்தார்.

சேர்மனின் சேம்பரில் நுழைந்ததுமே அவருடைய காரியதரிசி அவரை புன்னகையுடன் வரவேற்று, ‘நீங்க போங்க சார்.’ என்றவாறு சேர்மனின் அறைக்கதவை திறந்துவிட்டார்.

அறைக்குள் சேர்மன் தன்னுடைய மேசையிலமராமல் அறைக் கோடியிலிருந்த விருந்தினர்கள் அமரும் சோஃபாக்களில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி இயக்குனர்கள் சோமசுந்தரம், சிலுவை மாணிக்கம் நாடார் மற்றும் சென்னை கிளை மேலாளர்களில் ஒருவரான பாபு சுரேஷ்.. ஆகியோரைப் பார்த்ததும் என்ன இது? ஏதும் பிரச்சினையோ என்று ஒரு நொடி தயங்கி நின்ற ஃபிலிப் சமாளித்துக்கொண்டு புன்னகையுடன் இரு இயக்குனர்களுக்கும் வணக்கம் செலுத்திவிட்டு சேர்மனைப் பார்த்து, ‘யெஸ் சார்.’ என்றார்.

‘முதல்ல ஒக்காருங்க பிலிப்.’ என்ற மாதவன் அவர் அமர்ந்ததும் ‘There is a proposal to post Mr.Babu Suresh as the new H.R. Head.’ என பிலிப் வியப்புடன் அவரையும் பாபு சுரேஷையும் பார்த்தார்.

பாபுவைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். சோமசுந்தரத்தின் வலதுகை என்பதுடன் அவரைப் போலவே சகலவிதமான தில்லுமுல்லுகளுக்கும் பேர்போனவர் என்பது அவர் அறிந்திருந்ததுதான். அத்துடன் வந்தனா உடல் நலம் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு தெரியாமல் அவருடைய பதவியில் இவரை நியமிப்பது என்றால்...

‘What do you think Mr.Philip?’ என்ற மாதவனின் குரல் தன்னை அழைப்பதை உணர்ந்த பிலிப் ஒரு நொடியில் தீர்மானித்து, ‘Miss Vandana has been handling the department very efficiently. When she is in the hospital should we replace her without informing her?’ என்றார் சிலுவை மாணிக்க நாடாரை ஒரக்கண்ணால்  பார்த்தவாறு..

அவருடைய உதடுகளில் அரும்பிய புன்னகையே தன்னுடைய பதிலை ஆதரிப்பதாக இருந்ததை உணர்ந்த பிலிப் So.. இது சோமசுந்தரத்தின் பரிந்துரை போலிருக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்டார்..

மாதவனுக்கு இந்த உள் அரசியில் தெரிந்திருக்க நியாயமில்லை என்பது அவருடைய அடுத்த கேள்வியிலிருந்தே தெரிந்தது.

‘I understand your concern Mr.Philip. But is it necessary that we should inform her now.. especially when she is not well? I am told by Dr.Somasundaram that she would require rest for some more time.. maybe months. That’s why I feel that we should replace her at least for the time being. I am told Mr.Babu is the right choice, is it not Doctor?’

சோமசுந்தரம் ஒரு விஷமப் புன்னகையுடன்  நாடாரைப் பார்த்தவாறு, ‘Yes Mr.Chairman, he is the most apt person. What do you say Mr.Philip?’ என்றார்.

பிலிப் சுந்தரம் வேறு வழியில்லாமல் ஆமாம் என்பதுபோல் தலையை அசைக்க மாதவன் எழுந்து நின்றார். ‘It is settled then.. You can make a recommendation in today’s Management Committee Mr.Philip.. There is no need for a formal Note now.. You can make an oral presentation. The Committee will approve the posting.’

பிலிப் சுந்தரம் அறையை விட்டு வெளியேறுகையில் நாடாரை ஓரக்கண்ணால் பார்க்க அவருடைய முகம் இருண்டு போயிருந்ததை காண முடிந்தது. இன்னைக்கி ஆடிட் கமிட்டியில நம்ம பாடு திண்டாட்டந்தான் என்று நினைத்தவாறு தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்தார்.

தொடரும்..

4 comments:

நன்மனம் said...

// இன்னைக்கி ஆடிட் கமிட்டியில நம்ம பாடு திண்டாட்டந்தான் என்று நினைத்தவாறு தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்தார்.//

பாவங்க பிலிப் சுந்தரம். மத்தவங்க பண்ணதுக்கு இவரு மேல பாயறது....

பிலிப் சுந்தரத்தின் சவால் சமாளிக்கும் திறமையை எதிர் நோக்குகிறேன்...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க நன்மனம்,

பாவங்க பிலிப் சுந்தரம். மத்தவங்க பண்ணதுக்கு இவரு மேல பாயறது....//

நேர்மையானவங்களுக்கும், எல்லாத்துக்கும் பணிஞ்சு போறவங்களுக்கும் எப்பவுமே பிரச்சினைதான்.

பிலிப் சுந்தரத்தின் சவால் சமாளிக்கும் திறமையை எதிர் நோக்குகிறேன்...//

நிச்சயமா.. ஆனா அவரால நாடாரை எதுத்துக்கிட்டு நிக்க முடியாது.. அதான் பிரச்சினையே..

siva gnanamji(#18100882083107547329) said...

என்ன இது? மாதவன் இப்படி சறுக்குகின்றார்? சிபாரிசு செய்பவர் முன்னாலேயெ அது பற்றி ஒபீனியன் கேட்கின்றார்....ஒருவேளை இதுவும் ஒருவகை மேலாண்மையோ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஒருவேளை இதுவும் ஒருவகை மேலாண்மையோ? //

கரெக்ட். அதாவது இந்த தேர்வில் எனக்கு எந்த பங்கும் இல்லை.. நீங்க சொல்றதால போடறேன்.. என்கிற டெக்னிக்..

நாளிக்கு பாபு சுரேஷ் ஏதாவது செஞ்சி குழப்பமாயிருச்சின்னா இதுக்கு நீங்கதான் காரணம்னு சோமசுந்தரத்து மேலயே பழிய போடற டெக்னிக்..

அதாவது நேர்மையற்ற, தைரியமில்லாத தலைவர்கள் கையாளும் முறை..

ஆனால் மாதவனும் இப்படியான ஆளான்னு கேக்காதீங்க..
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏத்தா மாதிரி தன்னை மாத்திக்கற ஆளாவும் இருக்கலாம்..

போக, போகத்தான் தெரியும்..