6.12.06

சூரியன் 149

‘How was the day Dad?’

காலையில் படிக்க முடியாமற்போன ஃபைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்த மாதவன் நிமிர்ந்து ஒரு நொடி தன் மகளைப் பார்த்துவிட்டு மீண்டும் பத்திரிகையில் தன் கவனத்தைத் திருப்பினார். ‘One sec.. வத்ஸ்.. It’s an interesting story.. Let me complete that..’

தன் கையிலிருந்த ஆங்கில பெண்கள் மாத இதழை வாசித்துக்கொண்டிருந்த சரோஜா திரும்பி தன் மகளைப் பார்த்து தன் உதடுகளை பிதுக்கி மாதவனை நோக்கி கண்சாடைக் காட்டினாள், ‘பாத்தியாடி ஒங்கப்பா காட்டுற பந்தாவ?’ .

வத்ஸ்லா தன் தாயைப் பார்த்து வெறுமனே புன்னகை செய்துவிட்டு எழுந்து சென்று மாதவன் அமர்ந்திருந்த இருக்கையின் ஒரு கையில் அமர்ந்து அவர் வாசித்துக்கொண்டிருந்த பக்கத்தைப் பார்த்தாள்.

தனியார் வங்கிகளின் செயல்பாடு' என்ற தலைப்பில் மாதவன் தலைமையேற்றிருந்த வங்கியைப் பற்றியும் எழுதியிருந்ததைக் கவனித்தாள். ‘என்ன டாட்.. என்ன எழுதியிருக்காங்க.. சீக்கிரம் மூட வேண்டியதுதான்னா?’ என்றாள் கேலியுடன்.

மாதவன் பதிலளிக்காமல் வாசித்து முடித்து பத்திரிகையை மடித்து எதிரிலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு தன் மகளைப் பார்த்தார்.

‘என்ன டாட்.. how was the day today?’ என்றாள் வத்ஸலா மீண்டும்..

‘ஏன் கேக்கறே வத்ஸ்.. It was a hectic day.. Right from the minute I went and sat on the Chairman’s Chair..’ என்று துவங்கி அன்று அலுவலகத்தில் நடந்த எல்லாவற்றையும் சுருக்கமாக கூற அவர்களுக்கெதிரில் அமர்ந்திருந்த சரோஜா தன்னுடைய வாசிப்பை நிறுத்திவிட்டு வியப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

மாதவன் மும்பைக்கு குடிபெயர்ந்ததில்லிருந்து தன்னுடைய வேலையைப் பற்றியோ அல்லது அலுவலக நண்பர்களைப் பற்றியோ அவளிடமோ அல்லது அவருடைய குழந்தைகளிடமோ பேசியதில்லை என்பதை நினைத்துப்பார்த்தாள். அவளையுமறியாமல் அவளுடைய நினைவுகள் பின்னோக்கிச் சென்றன..

மாதவன் இதே வங்கியில் முன்பு பணியாற்றியபோது உதவி பொது மேலாளராக பதவியேற்றதும் வங்கி தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கென ஒதுக்கியிருந்த குடியிருப்புகளில் ஒன்றில் குடியேறியபோதுதான் அவருடைய வங்கியைப் பற்றியும் அவருடன் சம அந்தஸ்த்திலிருந்த பிற அதிகாரிகளைப் பற்றியும் லேசாக அவளுக்கு தெரியவந்தது.

ஆனால் அதுவரை தானுண்டு தன் குழந்தைகளுண்டு என்று இருந்த அவளுடைய வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது. மாதவனைத் தன்னுடைய பரம வைரியாக கருதியிருந்த சேதுமாதவனும் அவருடைய மனைவியும் அவளையும் அதே கோணத்தில் பார்க்க சரோஜா தானும் போட்டி என்று வந்தால் சளைத்தவளல்ல என்று கோதவில் இறங்க.. பாதிக்கப்பட்டது பிள்ளைகள் இருவரும்தான்.

சீனிவாசன் தன்னுடைய பள்ளியிறுதி தேர்வில் தோற்றுவிட்டு வந்து நின்ற நேரத்தில்தான் சரோஜா விழித்துக்கொண்டு போறும் இந்த போட்டி வாழ்க்கை என்று மாதவன் தடுத்தும் விடாப்பிடியாக வங்கி குடியிருப்பில் இனியும் தன்னால் வசிக்க முடியாது என்று தீர்மானித்து சென்னையிலேயே வேறொரு குடியிருப்புக்கு மாறிப் போனாள்.

அதற்குப் பிறகு மாதவன் ஒரு கட்டத்தில் சேதுமாதவனுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்பாமல் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு அப்போதுதான் துவக்கப்பட்டிருந்த மும்பையை தலைமை அலுவலகமாகக் கொண்டிருந்த ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக சென்றார்.

ஆனால் அதற்குப் பிறகும் சீனிவாசன் தன்னுடைய பள்ளிப் படிப்பையும் வத்ஸலா தன்னுடைய கல்லூரி படிப்பையும் முடிக்கும்வரை அவர்களுடன் சென்னையிலேயே இருந்தாள் சரோஜா. சீனிவாசன் அடுத்து வந்த அக்டோபர் தேர்வில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து படிப்பில் எவ்வித ஆர்வமும் இல்லாமல் தன் நண்பர்களுடன் உலா வருவதைக் காணச் சகியாத சரோஜா வேறு வழியின்றி வத்ஸ்லாவை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு மும்பைக்கு குடிபெயர்ந்தாள்.

ஆனால் மும்பையை அடைந்து சில தினங்களிலேயே தனித்திருந்த ஒரு வருடத்தில் மாதவன் அடியோடு மாறிப் போயிருந்ததை அவளால் உணர முடிந்தது. தினமும் நள்ளிரவு நேரத்தில் குடித்துவிட்டு வருவதே அவருக்கு வாடிக்கையாகிப் போனதைக் கண்டாள்.

தனக்கு குடும்பம் என்று ஒன்று இருந்ததே அவருக்கு மறந்துபோக அவருடைய நள்ளிரவு நேர வருகைக்கு காத்திருந்து சோர்ந்து போன சரோஜா அக்கம்பக்கத்திலிருந்த பெண்களுடன் பழக ஆரம்பித்தாள். அவர்களுடைய போலியான வாழ்க்கை நாளடைவில் அவளுக்கும் பிடித்துப்போக அதிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள.. குடும்பம் மீண்டும் சீரழியத் துவங்கியது.

மும்பையிலிருந்த Tata Institute of Social Science ல் சேர்ந்து மனிதவள மேம்பாடு மற்றும் சமூகசேவை பிரிவில் முதுகலைப் பட்டத்திற்கு சேர்ந்த வத்ஸலா தன்னுடைய பெற்றோர்களின் போக்கு பிடிக்காமல் அங்கிருந்த விடுதியிலேயே சேர்வதென தீர்மானிக்க சீனிவாசனைக் கேள்வி கேட்க யாருமே இல்லாமல் போனது.. நாளடைவில் அவன் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி.. பிறகு அந்தப் பெண் மைதிலியின் நட்பால் உடலும் மனமும் தேறி...

‘யார் டாட்.. நேத்து ஏர்போர்ட்ல ஒங்கள ரிசீவ் பண்ண வந்த அங்கிளா?’

வத்ஸ்லாவின் கேள்விக்கு பதிலளித்த மாதவனின் வார்த்தைகள் மீண்டும் சரோஜாவை நடப்புலகுக்கு இழுத்து வந்தன.

‘ஆமா வத்ஸ்.. அந்த சேது மாறவேயில்லை.. நேத்து ராத்திரிதான் ஏதோ குடிபோதையில மிஸ்பிஹேவ் பண்ணார்னு நினைச்சிருந்தேன்.. ஆனா இன்னைக்கி முழுசும் நான் கேட்ட வரைக்கும் He has gone from bad to worse.. He is also indulging in illegal activitiesனு ஒரு போலீஸ் ஆஃபீசரே வந்து வார்ன் பண்ணிட்டு போறார்னா பாத்துக்கயேன்..’

சரோஜா மவுனமாக மாதவனையும் தன் மகளையும் பார்த்தாள். இவர் எடுத்த இந்த விபரீத முடிவினால மறுபடியும் நம்ம லைஃப்ல பிரச்சினைகள் வருமோ தெரியலையே? வத்சுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்கணும்.. சீனிய ஒரு வழியா லைஃப்ல செட்டில் பண்ணணும்.. இதுவரைக்கும் சம்பாதிச்சது போறாதுன்னா மனுஷன் தெரிஞ்சும் இதே பேங்குல வந்து சேரணும்?

அந்த வங்கியில் சேர்மன் பதவிக்கு மாதவன் மனு செய்ததே அவளுக்கு தெரியாது. அவர் நேர்முகத் தேர்வுக்கு செல்ல தீர்மானித்தபோதுதான் மாதவன் அவளிடம் தெரிவித்தார்.

அப்போதே, ‘ஏங்க நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கீங்களா? ஏற்கனவே அங்க இருக்க பிடிக்காமத்தான இங்க வந்தீங்க? இப்ப மறுபடியும் எதுக்குங்க?’ என்று அவரைத் தடுக்கத்தான் பார்த்தாள்.

ஆனால் அப்போதுதான் மனிதர் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாதவராயிருந்தாரே.. அவரா.. இப்படி ஒரே வாரத்தில் அடியோடு மாறிப்போய்.. என்ன மாயமோ மந்திரமோ.. இல்ல இதுக்கு பின்னால ஏதாச்சும் சீக்ரெட் ப்ளான் இருக்கா?

‘என்னம்மா அப்படி அப்பாவ பாத்துக்கிட்டே இருக்கீங்க.. மறுபடியும் லவ்வா? நா வேணும்னா லாபி வரைக்கும் போய்ட்டு வரவா?’ என்ற வத்ஸலாவின் கேலி கலந்த குரல் கேட்டு திடுக்கிட்டு அவளைப் பார்த்தாள் சரோஜா..

அவளையுமறியாமல் முகம் சிவக்க.. ‘ஏய்.. லூசு.. போயும், போயும் ஒங்கப்பா மேலயா? அதுவும் இத்தனை வயசுக்கப்புறம்..’ என்று சிரித்தாள்.

மாதவனும் சேர்ந்து சிரித்தார். இன்னும் இவளுக்கு நம்ம மேல நம்பிக்கை வரலைன்னு நினைக்கேன். இதுக்கு பின்னால ஏதாவது மாஸ்டர் ப்ளான் இருக்கோன்னு நினைக்கா போலருக்கு..

நியாயந்தானே.. பத்து வருசமா குடும்பம்னா என்னன்னு ஞாபகம் இல்லாமத்தான் இருந்தோம்? சட்டுன்னு மாறுனா யாருக்குத்தான் சந்தேகம் வராது?

‘என்ன சரோ.. என்னடா இவன் சட்டுன்னு ஒரேயடியா மாறிட்டான்னு நினைக்கே.. இல்லை?’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தாள் சரோஜா.

வத்ஸ்லா இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். ‘இதுல என்னம்மா அதிசயம்? அப்பாவுக்கே தான் வாழற வாழ்க்கை ஒரு போலின்னு தெரிஞ்சிருக்கும். அதான் மாறிட்டார்.. என்ன டாட்?’

சரோஜா தன் மகளை முறைத்தாள். ‘ஏய் என்ன ஓவரா போறே?’

மாதவன் சிரித்தார். ‘வத்ஸ் சொல்றதும் ஒருவகையில உண்மைதான் சரோ.. நாம எல்லாருமே ஒருமாதிரியான போலி வாழ்க்கையத்தான மும்பையில வாழ்ந்துக்கிட்டிருந்தோம்.. அந்த வாழ்க்கையில நிம்மதி இல்லாமத்தான நான் குடிச்சிட்டு நடுராத்திரிக்கப்புறம் வந்துக்கிட்டிருந்தேன்.. நீ க்ளப்பு, பார்ட்டின்னு அலைஞ்சிக்கிட்டிருந்தே.. பிள்ளைங்க ரெண்டும் அதுங்க வழியில.. சீனியோட இந்த நிலைக்கு நானுந்தான் காரணம்.. ஏன் பாக்கப்போனா நீயுந்தான்.. இதெல்லாம் எனக்கு தெரியாம ஒன்னும் இல்ல சரோ.. என்னோட கடந்த கால தப்புங்களுக்கெல்லாம் பிராயச் சித்தம் பண்ணணும்னு நா நிறைய தடவ நினைச்சிருக்கேன். ஆனா அது நாம மும்பையிலருக்கற வரைக்கும் முடியாதுன்னு தெரியும்.. அங்கருந்து போனா போறுங்கற முடிவுக்கு நா வந்தப்போதான் இந்த பேங்கோட ட் (advertisement) வந்திருந்தது. ஆரம்பத்துல தயக்கமாருந்தாலும்.. சேது மாறியிருப்பார்.. பேங்கும் நா வெளியெ வந்தப்போ இருந்தத விட ரெண்டு மடங்கு பெரிசாயிருச்சி.. அதனால அத மேனேஜ் பண்றது ஒன்னும் பெரிய காரியமா இருக்காதுன்னு நினைச்சேன்..’

‘ஏன் டாட்.. ஃபர்ஸ்ட் டே எக்ஸ்ப்பீரியன்ஸ் அது இல்லேன்னு காட்டிருச்சா?’

மாதவன் இல்லையென்று தலையை அசைத்தார். ‘அப்படி சொல்ல முடியாது. ஆனா நா நெனச்ச மாதிரி இத ரன் பண்றது அவ்வளவ் ஈசியில்லேன்னு நினைக்கேன். நா இருந்தப்போ எக்ஸ்க்யூட்டிவ்ஸ் நடுவுலதான் போட்டி, பொறாமை எல்லாம் இருந்தது..அதுவும் இந்த சேதுவால மட்டுந்தான்.. I never had any ego clash with any of my other colleagues.. But.. இப்போ.. போர்ட்லயும் இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்கறதுதான் ஆச்சரியமா இருக்கு..’

‘போறுங்க.. பேசாம ராஜினாமா பண்ணிருங்க.. ஒங்களுக்குருக்கற எக்ஸ்ப்பீரியன்சுக்கு பேசாம ஒரு கன்சல்டன்சி ஆரம்பிச்சாக்கூட போறும்.. நமக்கு பணப் பிரச்சினைன்னு ஒன்னு இல்லேல்லே?’ என்றாள் சரோஜா.

‘என்னம்மா நீ? ஜாய்ன் பண்ண அன்னைக்கே ரிசிக்னேஷனா? சிரிக்கப் போறாங்க.. என்ன டாட்?’ என்றாள் வத்ஸலா.

ஆமாம் என்று தலையை அசைத்தார் மாதவன்..

‘சரி.. அது கெடக்கட்டும்.. ஒங்க ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சிருச்சா? இன்னும் எத்தன நாளைக்கு இந்த ரூம்ல இருக்கப் போறோம்?’

சரோஜா அவரையே பார்த்தார். என்னமோ சீரியசா நடந்துருக்கு.. அதான் இவ்வளவு டல்லாருக்கார்.. அது எனக்கு தெரிய வேணாம்னு பேச்ச மாத்தறார்.. சரி.. இத இப்ப இங்க வச்சி பேசி பிரச்சினையாக்க வேணாம்.. இன்னும் ஒரு நாலு நாள் போட்டும் பார்ப்போம்..

வத்ஸலா சிரித்தாள். ‘நீங்க பேச்ச மாத்த நினைக்கறது நல்லா தெரியுது டாட்.. If you don’t want to talk about that it’s ok with us.. ஆனா என்னோட ரெண்டு வருஷ ப்ராஜக்ட் எக்ஸ்ப்பீரியன்ஸ்ல சொல்றேன் டாட்.. Slumலயும் ஜோப்பட் பட்டியிலயும் வாழ்வறங்களோட டெய்லி பிராப்ளத்தோட கம்பேர் பண்றப்போ நம்ம பிரச்சினையெல்லாம் ஒன்னுமே இல்ல டாட்.. I used to be so amazed at the way they look at their life and its problems.. அத பார்த்து பார்த்தே I’ve become mentally strong Dad.. I feel that I can face any kind of problem in my life..’

மாதவன் கைகளை வத்ஸ்லாவின் தோள்களைச் சுற்றி வளைத்து லேசாக தன்னுடன் அணைத்தார். ‘You are right வத்ஸ்.. We have got a lot to learn from them.. ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம ஃபைனான்ஸ் மினிஸ்டர் சொன்னாரே Financial inclusionனு ஒரு கான்செப்ட்.. அத எங்க பேங்க்லயும்  ப்ராக்டிஸ் பண்ணணும்னு நினைச்சிருக்கேன்.. கொஞ்ச வருசத்துக்கு முன்னால இதையே ஒரு forceful exerciseஆ பூஜாரி பண்ணார்.. அத நாங்க பேங்கர்ஸ் எல்லாருமே எதிர்த்தோம்.. ஆனா அந்த எக்சர்சைஸ் ஒரு பத்து பதினஞ்சு பெர்சண்டேஜ் வில்லேஜர்சோட லைஃப் ஸ்டாண்டர்ட இம்ப்ரூவ் பண்ணியிருக்கங்கறது உண்மைதான்.. there is no doubt about that.’

‘உண்மைதான் டாட்.. நாம நம்ம வீட்டுக்கு குடிபோனதும் இங்க அடையார்லருக்கற theosophical societyல போய் அங்க ப்ராஜக்ட் coordinator பொசிஷன்ல ஏதாச்சும் வேக்கன்சி இருக்கான்னு பாக்கப் போறேன்.. With my experience in two WHO projects in Mumbai.. I am sure that I should easily land a coordinator’s job..’

‘ஆல் தி பெஸ்ட் வத்ஸ்.. சரி.. சொல்லுங்க.. ஒங்க ஷாப்பிங் நாளையோட முடிஞ்சுருமா.. புதன் கிழமைக்குள்ள நம்ம வீடு ரெடியாயிரும்னு நம்ம சுபோத் சொன்னார்.. நாளையோட வாங்க வேண்டியதெல்லாத்தையும் முடிச்சிட்டீங்கன்னா புதன் கிழமை காலைல ரூம வெக்கேட் பண்ணிரலாம்.. என்ன சொல்றீங்க?’

சரோஜா தன் மகளைப் பார்த்தாள்..  அவள், ‘சரிப்பா.. இன்னும் ஒரு ஆஃப டே ஷாப்பிங்தான்.. முடிஞ்சுரும்..’

‘அப்ப சரி வாங்க.. கீழ போய் டின்னர முடிச்சிக்கிட்டு வந்துருவோம்..’ என்றவாறு மாதவன் எழ சரோஜாவும், வத்ஸலாவும் எழுந்தனர்..

தொடரும்..




6 comments:

dondu(#11168674346665545885) said...

அடேடே சந்தடி சாக்கில் பூஜாரி ஓக்கேன்னு சொல்லிட்டீங்களே. அதுவும் அவராலத்தானே நீங்க ட்ரான்ஸ்ஃபரே ஆனீங்க.

என்னைக் கேட்டா பங்களாதேஷின் யூனுஸ்தான் சரியான தீர்வு தன்னோட நாட்டிலே இதுக்குக் கொடுத்திருக்கிறார். க்ராமீண் பேங்க் என்பதுபோல பெயர் இருக்குமே.

மற்றப்படி ஜனார்த்தன் பூஜாரியும் சரி அவங்க தலைவி இந்திரா காந்தியும் சரி அப்படி ஒண்ணும் ஏழைகளுக்காக உருகிப் போயிடலே. எல்லாமே வோட் அரசியல்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன் சார்,

எல்லாமே வோட் அரசியல்தான்.//

உண்மைதான் இல்லேங்கலே. ஆனா நோக்கம் எதுவாருந்தாலும் அதனால ஒரு பத்து விழுக்காடு மக்களாவது பயனடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை.

அரசு எத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் அதை அட்டையாய் உறிஞ்சுவதில் அரசியல்வாதிகளைவிடவும் கைதேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஐந்து வருட காலம் ஆட்சியில் ஊழல் செய்யும் அரசியல்வாதியைவிடவும் ஆபத்தானாவர் ஊழல் மனதுடைய அதிகாரி. ஏனெனில் அவர் தன்னுடைய அலுவலக ஆயுள் காலம் முழுவதும் அதிகாரத்தில் இருப்பாரே?

அமைச்சரே என்னுடைய மாற்றலுக்கு காரணமாயிருந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் அந்த நொடியே என்னை மறந்துப்போயிருக்கலாம். ஆனால் அவருடன் வந்த அரசு அதிகாரிகள்தான் இதற்கு காரணமாயிருந்திருப்பர்.

krishjapan said...

மிக மிக ச்த்தியமான வார்த்தைகள் சார் - அரசியல்வாதிகள விட, இந்த அதிகாரிகளால்தான், இந்த நாடு இப்படி சீரழியுது சார். மிஞ்சி, மிஞ்சி போனா, இட மாற்றம், அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான்...ம், எப்படித்தான் திருத்தப் போறமோ அவங்கள, எப்பத்தான் விடிவு காலம் வருமோ...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

எப்படித்தான் திருத்தப் போறமோ அவங்கள, எப்பத்தான் விடிவு காலம் வருமோ... //

நாம கவலைப்பட்டு என்ன பண்றது? ஆனா அவங்க மட்டும் எந்த கவலையுமில்லாம.. எதுலயும் மாட்டிக்காம.. இந்த தப்பித்தல்தான் பல அதிகாரிகளியும் இதே பாதையில் அழைத்துச் செல்கின்றது..

krishjapan said...

150ஆவது பதிவென்பதால், அடுத்தது, தாமதமாகிறதோ..

அய்யய்யொ, அடிக்க வர்றாருப்பா, விஞ்ஞானியா, வக்கீலான்னு....

டிபிஆர்.ஜோசப் said...

கிருஷ்ணா.. நேற்று ஒரு நாள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.

குழந்தை குறும்புவில் நீங்க போட்ட பின்னூட்டத்தோட பதில்ல இந்த தகவல போட்டிருந்தேன். நீங்க பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன்..

இன்னும் அரைமணியில வந்துரும் 150ம் பதிவு. இது வலைப்பூ உலகுல ஒரு சாதனையாம் தெரியுமா? அதாவது 150 நாளா ஒரே கதை வருவது!!