25.1.06

சூரியன் 12

மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் சத்யம் சினிமா வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலைக் காட்சி முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த கூட்டத்தோடு கூட்டமாக சிக்கித் தத்தளித்து வெளியே வந்த மாணிக்கவேல் (வேல் என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பர். ஆகவே இனிமேல் நமக்கும் அவர் 'வேல்' தான்) தன்னுடன் வந்த எழுபது வயதைக் கடந்த தன் தந்தை, மனைவி மற்றும் மகன், மகள் என்ற தன் குடும்பத்தார் வரட்டும் என்று பாதையை விட்டுத் தள்ளி காத்திருந்தார்.

ஒவ்வொருவராய் கசங்கி, கந்தலாகி வெளியே வருவதற்கே கால் மணி நேரம் பிடித்தது. மேல் மூச்சு வாங்க தன் அருகில் வந்து நின்ற தன் தந்தையைப் பார்த்து, ‘நான் அப்பவே சொன்னேன்ல.. பேசாம நீங்க வீட்லயே இருந்திருக்கலாம். நீங்கதான் கேக்கலே.. பாருங்க, எப்படி இளைக்கிது? சோடா எதுவும் குடிக்கீறீங்களாப்பா.. நாம கார தேடிப் பிடிச்சி எடுத்துக்கிட்டு வெளிய வர இன்னும் அரைமணி நேரமாவுது ஆவும் போல.. என்ன சொல்றீங்கப்பா?’ என்றார்.

மூச்சு விடாமல் தடுமாறிக் கொண்டிருந்த வேலின் தந்தை ஆறுமுகச்சாமி பதிலளிக்க முடியாமல் திணறியவாறு அவர் சொன்ன யோசனைக்கு சரி என்பதுபோல் தலையை ஆட்டினார்.

அப்போதுதான் வெளியே வந்த தன் மனைவி ராணி, மகன் சந்தோஷம், மகள் கமலியை வேல் பார்த்தார். எல்லோருமே கூட்டத்தில் சிக்கித் தவித்த களைப்புடன் காணப்பட்டனர்.

‘What a stupid management Dad? Really Stupid. They have a surch a large number of theatres in the same complex and still there is only one way to exit. How do they expect the crowd to get out? I am going to write a letter to that stupid theatre Manager. Idiot. They say it is the best theatre complex in the City. It is a real chaos.’

ஆங்கிலத்தில் பொறிந்து தள்ளியவாறு தன் தந்தையுடன் சென்ற இளைஞனைப் பார்த்து ‘Extactly’ என்றான் பதினெட்டு வயது நிரம்பிய சந்தோஷம்.

வேலின் மனைவி ‘டேய் சும்மா இர்றா, நீ வேற. அப்பா ஏதாச்சும் சொல்ல போறார்.’ என்றவாறே மூச்சு விட முடியாமல் தடுமாறும் தன் மாமனாரைப் பார்த்துவிட்டு கேலியுடன் தன் மகளைப் பார்த்து ‘பாத்தியா அவஸ்தை படறத’ என்பதுபோல் கண்ணால் சாடைக் காட்டினாள்.

‘சும்மா இருங்கம்மா. பாவம் தாத்தா.’ என்றாள் கமலி எரிச்சலுடன். உடனே சென்று தன் தாத்தாவின் தோள்களில் பாசத்துடன் கையிட்டாள். ‘என்ன தாத்தா, முடியலையா?’

வேல் தன் மகளைப் பார்த்தார். அம்மாவுக்கும் பொண்ணுக்கும்தான் எத்தன வித்தியாசம்? இவள மாதிரியே இவ அம்மாவும் இருந்துட்டா குடும்பத்துல எத்தன சந்தோஷம் இருக்கும்? எவ்வளவோ எதிர்பார்ப்புகளோட இவள கல்யாணம் பண்ணேன்..

தன் மகளைப் பார்த்து, ‘ஒன்னுமில்ல கமலி. தாத்தாக்கு ஒரு சோடா வேணுமாம்.’ என்றார்.

ராணி சிடுசிடுத்தாள், ‘இந்த கூட்டத்துல எங்க போயி சோடாவ வாங்குறது? சொல்றத கேட்டுக்கிட்டு வீட்லயே இயேசுவேன்னு இருந்திருக்கலாமில்லே.. நீங்க போயி முதல்ல கார எடுங்க.. போற வழியில வாங்கிக்கலாம்.. குளிர்ந்த காத்து மூஞ்சில பட்டா எல்லாம் சரியாயிரும்.’

சந்தோஷம் பரிதாபத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ‘காசு தாங்கப்பா. நான் தாத்தாவ கூட்டிக்கிட்டு போய் சோடா வாங்கி குடுத்துட்டு அந்த exit gateல வந்து நிக்கறேன். நீங்க போயி கார எடுத்துக்கிட்டு வெளியில வாங்க. நானும் தாத்தாவும் அங்க வந்து ஏறிக்கிறோம்.’

அதுவும் நல்ல யோசனைதான் என்று தோன்றவே தன் மனைவி தடுத்தும் கேளாமல் வேல் தன் மகனுடன் தன் தந்தையை அனுப்பிவிட்டு அவர்கள் இருவரும் பத்திரமாக சாலையைக் கடந்து செல்லும் வரைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

‘என்னத்த பாத்துக்கிட்டு நிக்கறீங்க? உங்கப்பாவ யாரும் கொத்திக்கிட்டு போயிரமாட்டாங்க. போய் கார எடுங்க.. மணி இப்பவே பத்தரையாச்சி. இந்த சின்னப் பசங்க படத்த பாக்கறதுக்கு உங்கப்பாவ கூட்டிக்கிட்டு வரணுமாக்கும்? நாம மட்டும் வந்திருந்தா போற வழியிலயே ராத்திர பலார வேலையையும் முடிச்சிக்கிட்டு போயிருக்கலாம். பொம்பள சொன்னா கேக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சா இப்படி அவஸ்தை படவேண்டியதுதான்.’
பதினைந்து வயது மகள் கமலியின் கையைப் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்தவாறே முன்னால் நடந்துச் சென்ற தன் மனைவியை பின் தொடர்ந்து தன்னுடைய பழைய மாருதி 800ஐ நிறுத்தி வைத்திருந்த இடத்தை நோக்கி நடந்தார் வேல்.

‘கிங்காங் அந்த டயனோசர்களோட போட்ட சண்டை சூப்பரா இருந்திச்சில்லப்பா.’ என்றாள் கமலி..

‘அதென்ன சண்டை கமலி.. உங்கம்மா வீட்ல வந்ததும் போடப் போறா பாரு அதவிட சூப்பர் சண்டை..’ என்று குனிந்து கிசுகிசுக்கும் குரலில் அவளிடம் வேல் கூற ‘களுக்’ என்று சிரித்தாள் கமலி.

‘என்னத்த அப்பாவும் மகளும் குசுகுசுன்னு பேசிக்கிட்டு. சீக்கிரம் போய் கார எடுங்கங்க. சே.. அந்த பையன் சொன்னா மாதிரிதான் இருக்கு இந்த தியேட்டரும்.. இப்படி கார்ங்கள கன்னாபின்னான்னு நிறுத்தி வச்சிருக்கானுங்களே இதுல நாம எப்படி நம்ம கார்கிட்ட போயி.. எப்ப எடுத்து.. பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. இப்ப சினிமா பாத்த சந்தோஷமே சுத்தமா போயிருச்சி..’

கமலிக்கு அவளுடைய அம்மாவின் சுபாவம் தெரிந்ததுதான். இருந்தாலும் அம்மா சொன்னது சரிதான் போலருக்குதே என்று தன் கண் முன்னே நூற்றுக் கணக்கில் நின்றுக் கொண்டிருந்த கார்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சாதா சைக்கிள்கள் என.. பார்க்கவே மலைப்பாயிருந்தது.. அவள் இத்தனைப் பெரிய தியேட்டருக்கு வருவது இதுதான் முதல் தடவை..
‘என்னப்பா பண்ணப் போறீங்க?’ என்றாள் தன் தந்தையைப் பார்த்து..
வேல் தன் மகளைத் திரும்பிப் பார்த்தார். ஐந்தடி இரண்டங்குலம் இருந்த அவருக்கு சம உயரத்தில் இருந்தாள் பதினைந்தே வயது நிரம்பிய மகள் கமலி. மகன் சந்தோஷம் அவனை விட அரையடிக்கும் கூடுதலாகவே உயரம்!
‘அதெல்லாம் இல்ல கமலி. பாக்கறதுக்குத்தான் அப்படி தெரியுது. நம்ம கார் அதோ இருக்கு பார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல போன ஷோவுக்கு வந்த காரெல்லாம் போயிரும். நாம நம்ம கார்ல போய் உக்கார்றதுக்குள்ள ஒவ்வொன்னா போயிரும் பார். உங்கம்மா எதுக்குத்தான் டென்ஷன் ஆவாம இருந்திருக்கா?’

அவர் கூறியதுபோலவே அவர்கள் மூவரும் அவர்களுடைய வாகனத்தை சென்றடைவதற்குள் ஒவ்வொரு வாகனமாக நகர ஆரம்பிக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களும் எவ்வித சிரமுமின்றி கையிலிருந்த சீட்டை வாசலில் கொடுத்துவிட்டு சாலையை அடைந்தனர். வாசலில் இருந்து பத்தடி தள்ளி நின்றிருந்த தன் மகனையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு வேகமெடுத்து அண்ணா சாலை போக்குவரத்துடன் கலந்தவுடன் Dashboardல் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு 11.00ஐ கடந்திருந்தது.
தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தைக் கடந்ததும் போக்குவரத்து குறைந்துவிடவே வாகனத்தின் வேகத்தை அதிகரித்தார். அங்கிருந்து தாம்பரத்தை அடைய சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் ஆகாது..

முன் இருக்கையில் தனக்கருகில் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த தன் தந்தையைப் பார்த்தார். ‘இப்ப எப்படி இருக்குப்பா?’

‘பரவாயில்லை’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தவரைப் பார்க்க பாவமாயிருந்தது.

அப்பா!

அந்த வார்த்தைக்கு முழுமை தந்தவர் அப்பா. வேலுவுடன் கூடப் பிறந்தவர்கள் நால்வர். எல்லோரும் ஆண் பிள்ளைகள். வேல் நடு..

அப்பா ஒரு தையற்காரர்..

அவருக்கு இப்போதும் நன்றாய் நினைவிருக்கிறது..

அவர்கள் குடியிருந்த வீட்டு வாசலிலேயே இருந்த ஒரு சிறிய கடையும், அதனுள் ஒற்றைத் தையல் இயந்திரத்துடன் அப்பா எப்போதும் போராடிக் கொண்டிருப்பதையும்.. அம்மா தான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதெல்லாம் அப்பாவுடன் அமர்ந்துக் கொண்டு சட்டை, டவுசரில் காஜா, பட்டனும் ஜாக்கெட்டில் ஊக்கு என கைவேலைகளில் மும்முரமாய் இருப்பதையும்... பார்த்திருக்கிறார்...

தீபாவளி, கிறீஸ்துமஸ்,ரம்ஜான் என்று பண்டிகைகள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் இரவு, பகல் என பாராமல் அம்மாவும் அப்பாவும் கடையிலேயே இருந்துவிடுவார்கள்..

காலையில் செய்து வைத்திருந்த பலகாரம், சாப்பாடுதான் இரவிலும்.. ஆறி அவலாய் போயிருந்தவற்றை சாப்பிடும் போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் கையொடிய வேலை செய்வதை நினைத்துக் கொண்டு சப்தம் போடாமல் அவனும் அவனுடைய இரண்டு தம்பிகளும் சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக் கொள்வார்கள்.

‘ஏங்க எங்க போய்கிட்டேயிருக்கீங்க? வண்டி ஓட்டும்போது எங்க இருக்கு உங்க கவனமெல்லாம்? தாம்பரம் லெவல் க்ராசிங் கேட் திறந்திருக்கிறதே அபூர்வம்.. நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருக்கீங்க? இப்ப, இப்படியே போய் ரவுண்டடிச்சிக்கிட்டுத்தான் வரணும். சீக்கிரம்.. கேட்ட மூடித் தொலைச்சிரப் போரான். நல்ல ஆளுதான் நீங்க.. ஸ்டீரிங்க புடிச்சது கூட நினைவில்லாம அப்படி என்னத்த தான் நினைப்பீங்களோ..’

சந்தோஷமும் கமலியும் நடுவிலிருந்த ராணியைப் பார்த்து முறைத்தனர்..
‘சும்மா இரும்மா.. எப்ப பாத்தாலும் எதையாச்சும் சொல்லிக்கிட்டு.. இப்ப என்ன? இன்னும் பத்தடி போன யூ டர்ன் இருக்குது.. அதுக்கு போயி.. நீ இந்த ராத்திரியில் வண்டிய ஓட்டி பாரு தெரியும்..’ என்ற மகளைப் எரிச்சலுடன் பார்த்தாள் கமலி. ‘ஏய், என்ன வாய் ரொம்ப நீளுது? இளுத்து வச்சி தச்சிருவேன்.. வாயாடி.. அப்பாவ ஒண்ணு சொல்லிரக் கூடாதே.. உடனே வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்திருவியே..’

வேல் ஆயாசத்துடன் ரியர் வியூ கண்ணாடி வழியாக பின் இருக்கையிலிருந்த மூவரையும் பார்த்தார். ராணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தார். அவரையுமறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.
சற்று முன்னாலிருந்த திரும்பு வளைவை நெருங்கியதும் எச்சரிக்கையுடன் எதிரே அசுர வேகத்தில் வந்த பேருந்து கடந்து செல்லும் வரை காத்திருந்து வண்டியை திருப்பினார்.

7 comments:

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க புதுவை..

நீங்க சொன்னது சரிதான். எடிட் பண்ணிட்டேன்.

நன்றி..

G.Ragavan said...

இன்னொரு குடும்பம். இவர்களும் வங்கியோடு தொடர்புடையவர்கள். இவர்களுக்கும் என்ன என்ன வேலைகள் இருக்கோ!

ஜோசப் சார். கதையில் வர்ர மாணிக்கவேல் இந்துவா கிருஸ்துவா...பேரப் பாத்தா இந்து மாதிரி இருக்கு. அவரோட அப்பா பேரும் கூட. ஆனா ராணி ஏசுவேன்னு சொல்றதும் மகனுக்கு சந்தோஷமுன்னு பேரு வைச்சிருக்கிறதும்....ம்ம்ம்...ஏதாவது சொல்ல வர்ரீங்களா? இல்ல தற்செயலா?

dondu(#11168674346665545885) said...

கதை சுவாரசியமாகப் போகிறது. ஆர்தர் ஹெயிலி ரேஞ்சுக்கு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன.

இப்போது சமூகவியல்சார் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

மாதவனை பற்றியோ, போர்ட் மெம்பர்கள் பற்றியோ எழுதும் போதெல்லாம் அவர் என்ற எழுவாய் உபயோகிக்கிறீர்கள். ஆனால் வேலுவை ஏன் அவன் என்று குறிப்பிடுகிறீர்கள்? பியூனாக இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருப்பவரை அவர் என்று குறிப்பிட விடாமல் உங்களை தடுத்தது எது?

அதே போல வந்தனாவையும் அவள் என்று ஏன் குறிப்பிட வேண்டும். அவர் என்று ஏன் குறிப்பிடக் கூடாது? பெண் என்பதாலா? இதை நீங்கள் உங்களை அறியாமல்தான் போட்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் நந்தகுமார் மற்றும் நளினியை முறையே அவன் மற்றும் அவள் என்று கூறுவது பாந்தமாகவே உள்ளது. ஏனெனில் இருவரையும் சமமாகவே நடத்துகிறீர்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் எனக்கும் அதே பிரச்சினை என்றுதான் தோன்றுகிறது. யோசிக்க வேண்டிய விஷயமே.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

கதையில் வர்ர மாணிக்கவேல் இந்துவா கிருஸ்துவா...பேரப் பாத்தா இந்து மாதிரி இருக்கு. அவரோட அப்பா பேரும் கூட. ஆனா ராணி ஏசுவேன்னு சொல்றதும் மகனுக்கு சந்தோஷமுன்னு பேரு வைச்சிருக்கிறதும்//

பயங்கரமான அப்சர்வேஷன் உங்களுக்கு. காரணமாத்தான். நாளைக்கு பாருங்க.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

அட! ராகவன்னு பேர் வச்சாலே போறும் போலருக்குதே.. அதே ஷார்ப் அப்சர்வேஷன்.

நீங்க சொன்னப்புறம்தான் எனக்கே தோனுது..

என்னையுமறியாம தற்செயலா நடந்ததுதான் இது!

இன்னைக்கி ராத்திரி இருந்து படிச்சி பார்த்துட்டு கரெக்ட் பண்றேன்.

சார், நீங்க எடிட்டரா போலாம் சார்..

சூப்பர் அப்சர்வேஷன்!!

dondu(#11168674346665545885) said...

ஜோசஃப் அவர்களே, வேலு அவர்களுக்கு அர் விகுதி கொடுக்கும் வேலையை நானே செய்துவிட்டேன். ஒரு முறை சரிபார்த்து காப்பி பேஸ்ட் செய்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நம் நட்பு தந்த உரிமையில் செய்துவிட்டேன். தவறாகப்பட்டால் மன்னித்துவிடவும். இப்பின்னூட்டத்தைக்கூட போடத் தேவையில்லை. இப்பின்னூட்டத்தின் நகலையும் என் தனிப்பதிவில் போடப்போவதில்லை.

உழைப்பில் உயர்ந்த வேலு அவர்களுக்கு ஏதோ என்னால் ஆனது.

கடைநிலை சிப்பந்தியாக (Peon) பணியில் சேர்ந்து முதல் நிலை மேலாளராக (Chief Manager) உயர்ந்த மாணிக்க வேல்.

****

மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் சத்யம் சினிமா வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மாலைக் காட்சி முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த கூட்டத்தோடு கூட்டமாக சிக்கித் தத்தளித்து வெளியே வந்த மாணிக்கவேல் (வேல் என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பர். ஆகவே இனிமேல் நமக்கும் அவர் 'வேல்' தான்) தன்னுடன் வந்த எழுபது வயதைக் கடந்த தன் தந்தை, மனைவி மற்றும் மகன், மகள் என்ற தன் குடும்பத்தார் வரட்டும் என்று பாதையை விட்டுத் தள்ளி காத்திருந்தார்.

ஒவ்வொருவராய் கசங்கி, கந்தலாகி வெளியே வருவதற்கே கால் மணி நேரம் பிடித்தது. மேல் மூச்சு வாங்க தன் அருகில் வந்து நின்ற தன் தந்தையைப் பார்த்து, ‘நான் அப்பவே சொன்னேன்ல.. பேசாம நீங்க வீட்லயே இருந்திருக்கலாம். நீங்கதான் கேக்கலே.. பாருங்க, எப்படி இளைக்கிது? சோடா எதுவும் குடிக்கீறீங்களாப்பா.. நாம கார தேடிப் பிடிச்சி எடுத்துக்கிட்டு வெளிய வர இன்னும் அரைமணி நேரமாவுது ஆவும் போல.. என்ன சொல்றீங்கப்பா?’ என்றார்.

மூச்சு விடாமல் தடுமாறிக் கொண்டிருந்த வேலின் தந்தை ஆறுமுகச்சாமி பதிலளிக்க முடியாமல் திணறியவாறு அவர் சொன்ன யோசனைக்கு சரி என்பதுபோல் தலையை ஆட்டினார்.

அப்போதுதான் வெளியே வந்த தன் மனைவி ராணி, மகன் சந்தோஷம், மகள் கமலியை வேல் பார்த்தார். எல்லோருமே கூட்டத்தில் சிக்கித் தவித்த களைப்புடன் காணப்பட்டனர்.

‘What a stupid management Dad? Really Stupid. They have a surch a large number of theatres in the same complex and still there is only one way to exit. How do they expect the crowd to get out? I am going to write a letter to that stupid theatre Manager. Idiot. They say it is the best theatre complex in the City. It is a real chaos.’

ஆங்கிலத்தில் பொறிந்து தள்ளியவாறு தன் தந்தையுடன் சென்ற இளைஞனைப் பார்த்து ‘Extactly’ என்றான் பதினெட்டு வயது நிரம்பிய சந்தோஷம்.

வேலின் மனைவி ‘டேய் சும்மா இர்றா, நீ வேற. அப்பா ஏதாச்சும் சொல்ல போறார்.’ என்றவாறே மூச்சு விட முடியாமல் தடுமாறும் தன் மாமனாரைப் பார்த்துவிட்டு கேலியுடன் தன் மகளைப் பார்த்து ‘பாத்தியா அவஸ்தை படறத’ என்பதுபோல் கண்ணால் சாடைக் காட்டினாள்.

‘சும்மா இருங்கம்மா. பாவம் தாத்தா.’ என்றாள் கமலி எரிச்சலுடன். உடனே சென்று தன் தாத்தாவின் தோள்களில் பாசத்துடன் கையிட்டாள். ‘என்ன தாத்தா, முடியலையா?’

வேல் தன் மகளைப் பார்த்தார். அம்மாவுக்கும் பொண்ணுக்கும்தான் எத்தன வித்தியாசம்? இவள மாதிரியே இவ அம்மாவும் இருந்துட்டா குடும்பத்துல எத்தன சந்தோஷம் இருக்கும்? எவ்வளவோ எதிர்பார்ப்புகளோட இவள கல்யாணம் பண்ணேன்..

தன் மகளைப் பார்த்து, ‘ஒன்னுமில்ல கமலி. தாத்தாக்கு ஒரு சோடா வேணுமாம்.’ என்றார்.

ராணி சிடுசிடுத்தாள், ‘இந்த கூட்டத்துல எங்க போயி சோடாவ வாங்குறது? சொல்றத கேட்டுக்கிட்டு வீட்லயே இயேசுவேன்னு இருந்திருக்கலாமில்லே.. நீங்க போயி முதல்ல கார எடுங்க.. போற வழியில வாங்கிக்கலாம்.. குளிர்ந்த காத்து மூஞ்சில பட்டா எல்லாம் சரியாயிரும்.’

சந்தோஷம் பரிதாபத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ‘காசு தாங்கப்பா. நான் தாத்தாவ கூட்டிக்கிட்டு போய் சோடா வாங்கி குடுத்துட்டு அந்த exit gateல வந்து நிக்கறேன். நீங்க போயி கார எடுத்துக்கிட்டு வெளியில வாங்க. நானும் தாத்தாவும் அங்க வந்து ஏறிக்கிறோம்.’

அதுவும் நல்ல யோசனைதான் என்று தோன்றவே தன் மனைவி தடுத்தும் கேளாமல் வேல் தன் மகனுடன் தன் தந்தையை அனுப்பிவிட்டு அவர்கள் இருவரும் பத்திரமாக சாலையைக் கடந்து செல்லும் வரைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

‘என்னத்த பாத்துக்கிட்டு நிக்கறீங்க? உங்கப்பாவ யாரும் கொத்திக்கிட்டு போயிரமாட்டாங்க. போய் கார எடுங்க.. மணி இப்பவே பத்தரையாச்சி. இந்த சின்னப் பசங்க படத்த பாக்கறதுக்கு உங்கப்பாவ கூட்டிக்கிட்டு வரணுமாக்கும்? நாம மட்டும் வந்திருந்தா போற வழியிலயே ராத்திர பலார வேலையையும் முடிச்சிக்கிட்டு போயிருக்கலாம். பொம்பள சொன்னா கேக்கக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சா இப்படி அவஸ்தை படவேண்டியதுதான்.’

பதினைந்து வயது மகள் கமலியின் கையைப் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்தவாறே முன்னால் நடந்துச் சென்ற தன் மனைவியை பின் தொடர்ந்து தன்னுடைய பழைய மாருதி 800ஐ நிறுத்தி வைத்திருந்த இடத்தை நோக்கி நடந்தார் வேல்.

‘கிங்காங் அந்த டயனோசர்களோட போட்ட சண்டை சூப்பரா இருந்திச்சில்லப்பா.’ என்றாள் கமலி..

‘அதென்ன சண்டை கமலி.. உங்கம்மா வீட்ல வந்ததும் போடப் போறா பாரு அதவிட சூப்பர் சண்டை..’ என்று குனிந்து கிசுகிசுக்கும் குரலில் அவளிடம் வேல் கூற ‘களுக்’ என்று சிரித்தாள் கமலி.

‘என்னத்த அப்பாவும் மகளும் குசுகுசுன்னு பேசிக்கிட்டு. சீக்கிரம் போய் கார எடுங்கங்க. சே.. அந்த பையன் சொன்னா மாதிரிதான் இருக்கு இந்த தியேட்டரும்.. இப்படி கார்ங்கள கன்னாபின்னான்னு நிறுத்தி வச்சிருக்கானுங்களே இதுல நாம எப்படி நம்ம கார்கிட்ட போயி.. எப்ப எடுத்து.. பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. இப்ப சினிமா பாத்த சந்தோஷமே சுத்தமா போயிருச்சி..’ கமலிக்கு அவளுடைய அம்மாவின் சுபாவம் தெரிந்ததுதான். இருந்தாலும் அம்மா சொன்னது சரிதான் போலருக்குதே என்று தன் கண் முன்னே நூற்றுக் கணக்கில் நின்றுக் கொண்டிருந்த கார்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சாதா சைக்கிள்கள் என.. பார்க்கவே மலைப்பாயிருந்தது.. அவள் இத்தனைப் பெரிய தியேட்டருக்கு வருவது இதுதான் முதல் தடவை..

‘என்னப்பா பண்ணப் போறீங்க?’ என்றாள் தன் தந்தையைப் பார்த்து..

வேல் தன் மகளைத் திரும்பிப் பார்த்தார். ஐந்தடி இரண்டங்குலம் இருந்த அவருக்கு சம உயரத்தில் இருந்தாள் பதினைந்தே வயது நிரம்பிய மகள் கமலி. மகன் சந்தோஷம் அவனை விட அரையடிக்கும் கூடுதலாகவே உயரம்!

‘அதெல்லாம் இல்ல கமலி. பாக்கறதுக்குத்தான் அப்படி தெரியுது. நம்ம கார் அதோ இருக்கு பார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல போன ஷோவுக்கு வந்த காரெல்லாம் போயிரும். நாம நம்ம கார்ல போய் உக்கார்றதுக்குள்ள ஒவ்வொன்னா போயிரும் பார். உங்கம்மா எதுக்குத்தான் டென்ஷன் ஆவாம இருந்திருக்கா?’

அவர் கூறியதுபோலவே அவர்கள் மூவரும் அவர்களுடைய வாகனத்தை சென்றடைவதற்குள் ஒவ்வொரு வாகனமாக நகர ஆரம்பிக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களும் எவ்வித சிரமுமின்றி கையிலிருந்த சீட்டை வாசலில் கொடுத்துவிட்டு சாலையை அடைந்தனர். வாசலில் இருந்து பத்தடி தள்ளி நின்றிருந்த தன் மகனையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு வேகமெடுத்து அண்ணா சாலை போக்குவரத்துடன் கலந்தவுடன் Dashboardல் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு 11.00ஐ கடந்திருந்தது.

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தைக் கடந்ததும் போக்குவரத்து குறைந்துவிடவே வாகனத்தின் வேகத்தை அதிகரித்தார். அங்கிருந்து தாம்பரத்தை அடைய சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் ஆகாது..

முன் இருக்கையில் தனக்கருகில் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த தன் தந்தையைப் பார்த்தார். ‘இப்ப எப்படி இருக்குப்பா?’

‘பரவாயில்லை’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தவரைப் பார்க்க பாவமாயிருந்தது.

அப்பா!

அந்த வார்த்தைக்கு முழுமை தந்தவர் அப்பா. வேலுவுடன் கூடப் பிறந்தவர்கள் நால்வர். எல்லோரும் ஆண் பிள்ளைகள். வேல் நடு..

அப்பா ஒரு தையற்காரர்..

அவருக்கு இப்போதும் நன்றாய் நினைவிருக்கிறது..

அவர்கள் குடியிருந்த வீட்டு வாசலிலேயே இருந்த ஒரு சிறிய கடையும், அதனுள் ஒற்றைத் தையல் இயந்திரத்துடன் அப்பா எப்போதும் போராடிக் கொண்டிருப்பதையும்.. அம்மா தான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதெல்லாம் அப்பாவுடன் அமர்ந்துக் கொண்டு சட்டை, டவுசரில் காஜா, பட்டனும் ஜாக்கெட்டில் ஊக்கு என கைவேலைகளில் மும்முரமாய் இருப்பதையும்... பார்த்திருக்கிறார்...

தீபாவளி, கிறீஸ்துமஸ்,ரம்ஜான் என்று பண்டிகைகள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் இரவு, பகல் என பாராமல் அம்மாவும் அப்பாவும் கடையிலேயே இருந்துவிடுவார்கள்..

காலையில் செய்து வைத்திருந்த பலகாரம், சாப்பாடுதான் இரவிலும்.. ஆறி அவலாய் போயிருந்தவற்றை சாப்பிடும் போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் கையொடிய வேலை செய்வதை நினைத்துக் கொண்டு சப்தம் போடாமல் அவனும் அவனுடைய இரண்டு தம்பிகளும் சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக் கொள்வார்கள்.

‘ஏங்க எங்க போய்கிட்டேயிருக்கீங்க? வண்டி ஓட்டும்போது எங்க இருக்கு உங்க கவனமெல்லாம்? தாம்பரம் லெவல் க்ராசிங் கேட் திறந்திருக்கிறதே அபூர்வம்.. நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருக்கீங்க? இப்ப, இப்படியே போய் ரவுண்டடிச்சிக்கிட்டுத்தான் வரணும். சீக்கிரம்.. கேட்ட மூடித் தொலைச்சிரப் போரான். நல்ல ஆளுதான் நீங்க.. ஸ்டீரிங்க புடிச்சது கூட நினைவில்லாம அப்படி என்னத்த தான் நினைப்பீங்களோ..’

சந்தோஷமும் கமலியும் நடுவிலிருந்த ராணியைப் பார்த்து முறைத்தனர்..

‘சும்மா இரும்மா.. எப்ப பாத்தாலும் எதையாச்சும் சொல்லிக்கிட்டு.. இப்ப என்ன? இன்னும் பத்தடி போன யூ டர்ன் இருக்குது.. அதுக்கு போயி.. நீ இந்த ராத்திரியில் வண்டிய ஓட்டி பாரு தெரியும்..’ என்ற மகளைப் எரிச்சலுடன் பார்த்தாள் கமலி. ‘ஏய், என்ன வாய் ரொம்ப நீளுது? இளுத்து வச்சி தச்சிருவேன்.. வாயாடி.. அப்பாவ ஒண்ணு சொல்லிரக் கூடாதே.. உடனே வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்திருவியே..’

வேல் ஆயாசத்துடன் ரியர் வியூ கண்ணாடி வழியாக பின் இருக்கையிலிருந்த மூவரையும் பார்த்தார். ராணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தார். அவரையுமறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.

சற்று முன்னாலிருந்த திரும்பு வளைவை நெருங்கியதும் எச்சரிக்கையுடன் எதிரே அசுர வேகத்தில் வந்த பேருந்து கடந்து செல்லும் வரை காத்திருந்து வண்டியை திருப்பினார்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணிருக்கீங்க எப்படி சார் ரிஜெக்ட் பண்ண மனசு வரும்?

எடிட் ஆப்ஷன்ல போயி நீங்க குடுத்தத அப்படி பேஸ்ட் பண்ணிட்டேன்..

ரொம்ப தாங்க்ஸ் சார்.