18.1.06

சூரியன் கவிதைப் போட்டி!!

அதே சிச்சுவேஷனுக்கு நம்ம கோ.ராகவன் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கி  மலையாளத்தில் எழுதிய கவிதை..

இதப் பார்த்தா ஒரு கவிதைப் போட்டியே வச்சிரலாம் போலருக்கு..

இன்னும் வேற யாராவது எழுதறீங்களா?

மின்னஞ்சல் அனுப்பினால் தனித்தனி இடுகையாகவே போடறேன்..

அன்புடன்
டிபிஆர்


ப்ரிய நந்து,

கடிதமாயிட்டு எழுத
நினைச்சு
கவிதையாயிட்டு
வந்து விழுகுன்னு
பேப்பர் மேல்
பேனாவுக்குப்
பிரேமம்
பேப்பருக்கும்
அங்ஙனயோ
பேனா
சிந்துவதெல்லாம்
தாங்கியல்லே
நீங்ஙள்
தாங்கிட்டில்லா!

நிங்ஙளோடு
சம்சாரிக்க
ஞான் ஆச கொண்டு
சண்டை பிடிக்க அல்லா
ஞான் பறஞ்சது
மலையாள சம்சாரம்
அல்லா
தமிழ் சம்சாரம்

மனசின் ஆசையைப்
பறைஞ்சு போக வந்து
ஆனால் கடைசியில்
கரைஞ்சு போயி
நிங்ஙளோடு பிரேமம்
மனசில் உறஞ்சு போயி!

ஞான் செய்தது
தெட்டெங்கில்
க்ஷமிக்கணும்
இல்லெங்கில்
வரிக்கனும்!

ப்ரிய,
நளினி

8 comments:

G.Ragavan said...

இப்பிடி மானத்த வாங்கீட்டீங்களே சார். போச்சு..போச்சு....இராகவனுக்குக் கவிதை எழுத வராதுன்னு ஊருக்கே தெரிஞ்சி போச்சு. ஹா ஹா ஹா

டிபிஆர்.ஜோசப் said...

சேச்சே யார் சொன்னது ராகவன்?

கவிதை இப்படித்தான் இருக்கணும்னு யாராவது இலக்கணம் எழுதி வச்சிருக்காங்களா என்ன?

எனக்கு பிடிச்சிருக்கு.. அதான் முக்கியம்.. கச்சிதமா இருக்கு..
கவலையே படாதீங்க..

பழூர் கார்த்தி said...

நல்லா சொன்னீங்க ஜோசப், எனக்கும் உங்க கவிதை புடிச்சிருக்கு ராகவன், அதை அப்படியே மனப்பாடம் செய்து பக்கத்தில் இருக்கும் மலையாள பைங்கிளியிடம் சொல்லலாம் என்றோரு திட்டம் :-))

*****

ஜோசப், நம்ம கவிதையின் வரிகள் மாறி மாறி வருவதால் அதை திரும்பவும் இங்கே பின்னூட்டமிடுகிறேன் சரியான வரிகள் அமைப்புடன்

*****

சூரியன் முகம் பார்க்காது
தாமரை மலராது தெரியுமா
உன் முகம் பார்க்காமல்
நான் மலர மாட்டேன், தெரியுமா ?

தலைவனும், தலைவியும்
ஊடலோடு காதல் புரியும்
அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..
எதையேனும் தெரிந்திருப்பாயா ?

தெரிந்திருந்தால்
என்னை முழுமையாய்
புரிந்திருப்பாயோ ??

விளையாட்டாய் புரிந்த செயல்
வினையாய் முடிந்த வருத்தத்தில்
மனதார கேட்கிறேன், மன்னிப்பு
மலர்வாயா, மறப்பேன் என் தப்பு !

தலைவன் ஊரிலில்லாத பொழுது
பசலை நோயில் ஏங்கும் தலைவி
போல், ஏங்குகிறேன் நான்
உன் புறக்கணிப்பால்...

உன்னைக் காட்டிலும் எனக்கு
உன் திறமை பிடிக்கும்...
உன் கர்வம் பிடிக்கும்..
உன் திமிர் பிடிக்கும்..
உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..
உன் கோபம் பிடிக்கும்..
இத்தனையும் மீறி உன்
நற்குணம் பிடிக்கும்...

இத்தனையும் பிடித்ததாலேயே
உன்னை எனக்கு பிடித்தது...
உன்னையே எண்ணி தவிக்கும்
என்னை பிடிக்குமா, உனக்கு ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சோ.பையன்,

நானும் பப்ளிஷ் பண்ணிட்டுத்தான் பார்த்தேன். கவிதையோட அழகே போயிருந்தது. சரி பண்ணிட்டு அப்புறம் அனுப்பலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கும்போதே கை என்னையுமறியாம 'அனுப்பு' பொத்தான க்ளிக் பண்ணிருச்சி..

நீங்களே மறுபடியும் பின்னூட்டமா போட்டதுல ரொம்ப சந்தோஷம்.

நன்றிங்க..

கோ.ராகவன் சோ.பை. சொல்றத கேட்டீங்களா?

உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வீசிட்டேன்.. நீங்களும் எடுக்காமவே போயிரூங்க..

அன்புடன்
டிபிஆர்.ஜோ

G.Ragavan said...

// நல்லா சொன்னீங்க ஜோசப், எனக்கும் உங்க கவிதை புடிச்சிருக்கு ராகவன், அதை அப்படியே மனப்பாடம் செய்து பக்கத்தில் இருக்கும் மலையாள பைங்கிளியிடம் சொல்லலாம் என்றோரு திட்டம் :-)) //

இந்த மாதிரி விஷப் பரிச்சையெல்லாம் வேண்டாம் சோ.பை. அப்புறம் எக்குத் தப்பா ஆயிருச்சுன்னா...

// கோ.ராகவன் சோ.பை. சொல்றத கேட்டீங்களா?

உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வீசிட்டேன்.. நீங்களும் எடுக்காமவே போயிரூங்க..//

என்ன ஜோசப் சார்..நீங்கள் வீசுறீங்களா....ம்ம்ம்ம்...ஆனா நான் சோம்பேறிப் பையன் இல்லையே.

டிபிஆர்.ஜோசப் said...

நான் சோம்பேறிப் பையன் இல்லையே. .//

அது தெரிஞ்சிதானே எடுக்காமவே போயிருங்கன்னு கேட்டேன்.

அனுசுயா said...

அட தமிழில் எழுதவே திணருது நீங்க மலையாளத்திலயும் கலக்கறீங்க பராவாயில்லை.... தொடருங்கள்.

G.Ragavan said...

அனுசுயா...நீங்களுமா அத மலையாளம்னு நம்புறீங்க...நல்லாப் பாருங்க..தமிழ்தாங்க...கொஞ்சம் ங் ஞ் எல்லாம் சேத்துப் போட்ட அவியல். அவ்வளவுதான். இத மலையாளிகள் படிச்சா கொலையாளிகள் ஆக வாய்ப்பு இருக்கு. ஆண்டவா என்னக் காப்பாத்து.