19.5.06

சூரியன் 80

இடம்: கோல்டன் ட்ராகன், தாஜ் ஹோட்டல் சென்னை.

சென்னை மாநகரத்தின் மேல் மட்ட அதிகாரிகளும், செல்வந்த குடிகாரர்களும் நள்ளிரவு நேரத்தில் காணப்படும் பணக்காரத்தனமான உலகம்..

இது இந்தியாதானா என்று நினைக்க வைக்கும் ஆடம்பரம். கண்களைக் கிறங்கடிக்கும் மெல்லிய விளக்கொளி.. ..

பாலு மகேந்திரா படத்தில் வருவதுபோன்ற இருட்டு, குடித்து மகிழும் குடிமகன்களின் முகம் பிறருக்கு சரியாக தெரியக்கூடாது என்பதை நினைவில் வைத்து அமைத்தது போலிருந்தது..

மனதை மயக்கும் இந்த சூழலில் மாதவன் இருப்பு கொள்ளாமல் வெய்ட்டரை விரலைச் சொடுக்கி அழைத்தார். தன் முன்னே இருந்த மெனுவில் இருந்த உயர் ரக மேலை நாட்டு சரக்கை காண்பித்து ‘Get me one fast.. plain..’ என்றார்.

நட்சத்திர ஹோட்டலில் fast என்ற சொல்லுக்கு அரை மணி நேரம் என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. முக்கியமாக மும்பை ஹோட்டல்களில்..

ஆனால் அடுத்த பத்து நிமிடங்களில் பேரர் அவர் கேட்டதை ice cubes சகிதம் கொண்டு வந்து தன் முன்னே வைத்ததும்.. ‘Hi! It’s a pleasant surprise.. You’ve floored me!’ என்றார் உண்மையான சந்தோஷத்துடன்.

மேல் மட்ட குடிமகன் ஒருவரிடமிருந்து இத்தகயை பாராட்டை எதிர்பார்க்காத பேரர் வெட்கப் புன்னகையுடன் ‘Thank you Sir’ என்றவாறு வந்த சுவடு தெரியாமல் மறைய மாதவன் வாசலை பார்த்தவாறே உறிஞ்சத் துவங்கினார்..

மதுவின் soothing taste நுனி நாவில் பட்டதும் மாலையில் அனுபவைத்த மன இறுக்கம் லேசாக குறைவது போலிருந்தது..

சற்று முன் சேதுமாதவனுடன் தொலைப்பேசியில் பேசியதை நினைத்துப் பார்த்தார். What a cunning guy.. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கறது மாதிரி.. ஏர்போர்ட்டுக்கு வந்து அவமானப்பட்டு போயும் ஒன்னுமே நடக்காத மாதிரி பேசறார்னா இதுக்கு பின்னால வேற ஏதோ ப்ளான் இருக்குன்னுதான அர்த்தம்?

அது என்ன இருந்தாலும் கண்டுபிடிக்கணும்.. அது நிறைவேற முடியாம பார்த்துக்கணும்..

மங்கலான இருட்டில் வாசலில் இருவர் வந்து அறை முழுவதையும் பார்ப்பது தெரியவே எழுந்து அவர்களை நோக்கி நடந்தார். பிலிப் சுந்தரத்தின் முகம் முதலில் தெரியவர அகன்ற புன்னகையுடன் 'மிஸ்டர் பிலிப் திஸ் வே..' என்று தான் அமர்ந்திருந்த மேசையை நோக்கி கைகாட்டியவாறு அவரையும் அவருடன் வந்திருந்த சுந்தரலிங்கத்தையும் தன்னுடன் அழைத்து சென்றார்.

இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் மாதவன் அமர்ந்தார்.

இருவரும் அவர் முன் இருந்த கோப்பையை பார்ப்பதை உணர்ந்த மாதவன், ‘what would you like to have gentlemen?’ என்றார்.

இருவரும் தயக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிலிப் சுந்தரம், ‘Sir, both of us don’t...’ என்று இழுக்க.. மாதவன் ஓசையெழுப்பாமல் சிரித்தார். ‘Don’t worry, I understand’

பிறகு பேரரை அழைத்து, ‘Two fruit juices please..’ என்றவர் சுந்தரலிங்கத்தை பார்த்தார். ‘It’s OK for you, No?’

இருவரும் ஆமாம் என்று தலையை அசைக்க பேரரை பார்த்து, ‘Yes.. get two’ என்றார்.

‘Anything else Sir’ என்று பவ்யத்துடன் தயங்கி நின்ற பேரரிடம், ‘Nothing more for now. I’ll you tell you later.’ என்று அனுப்பிவிட்டு தன் முன்னே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார்..

‘Don’t mistake me. How do you manage being a teetotaler?’

பிலிப் சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். சுந்தரலிங்கம், ‘சென்னையில அது ஒரு பெரிய சங்கடமா தெரியலை சார். எந்த ஒரு பார்ட்டிக்கு போனாலும் எங்கள மாதிரியும் சிலபேர் இருப்பாங்க. மும்பை மாதிரி இங்க எங்கள மாதிரி ஆளுங்கள வினோதமா பாக்கவும் மாட்டாங்க.. So we never felt left out..’

பிலிப் சுந்தரமும் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார்.

‘Is it? That’s strange!’ என்றார் மாதவன் வியப்புடன். ‘நான் சென்னையிலருந்து போயி பதினைஞ்சு வருஷத்துக்கு மேல ஆவுது. நா இருக்கறப்போ இந்த ரூம் weekendsல கூட ல்மோஸ்ட் ஹாஃப் எம்ப்டியா இருக்கும். ஆனா இப்ப பாருங்க.. I just managed to get this table.. அதுவும் இந்த நேரத்துல.. சென்னை உண்மையிலயே ரொம்பவும் மாறிப் போயிருச்சி.. ஆனாலும் ஒங்கள மாதிரி ஆளுங்களும் இருக்கத்தான் செய்றாங்க.. It’s really strange..’

நம்மள விநோத பிறவிங்கன்னு சொல்லாம சொல்றார் பாருங்க என்பதுபோல் திரும்பி தன் நண்பரைப் பார்த்தார் சுந்தரலிங்கம்..

‘ஒங்க பழைய சேர்மன் ஏன் திடீர்னு ராஜிநாம செஞ்சார். Was there any specific reason?’
சட்டென்று எதிர்பாராத நேரத்தில் வந்து விழுந்த கேள்விக்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல் இருவரும் விழிக்க.. ‘Sir, I have the answer for your question’ என்ற குரல் இடைமறித்தது.  மூவரும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து தங்களுடைய மேசைக்கருகே நின்ற சேதுமாதவனைப் பார்த்தனர்.

பேச்சு மும்முரத்தில் அவர் வந்ததை மூவருமே கவனிக்க தவறிவிட்டனர். சேதுமாதவன் அவர்கள் அமர்ந்திருந்த மேசையில் மாதவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமராமல் அடுத்து 'reserved’ என்ற மேசையருகில் இருந்த ஒரு இருக்கையை அலட்சியமாக தன்னருகே இழுத்து அமர அறை வாசலில் நின்றிருந்த ஹோட்டல் அதிகாரி அவசர, அவசரமாக வந்து, ‘Sir, please. It is reserved for a group. They may come in any minute now.’ என்று கிசுகிசுத்தார். ஆனால் அதை கேட்டும் கேட்காததுபோல் சேது அலட்சியத்துடன் கைகளை அசைத்தார் ‘Go and find out someother chair for them.. I am not leaving.’

அவருடைய இந்த அநாகரீக செயலால் திடுக்கிட்ட மற்ற மூவரும் சிறிது நேரம் என்ன பேசுவதென தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

ஆனால் அவர்களை சட்டைசெய்யாத சேதுமாதவன் பேரரை நோக்கி கையை அசைத்து அருகில் வந்ததும், ‘A Scotch on rocks. Plain water. Large.. Quick’ என்றார் அதிகாரத்துடன்.

அவர் ஏற்கனவே அரை போதையில் இருப்பதை உணர்ந்த பேரர் மறுபேச்சு பேசாமல் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர் கேட்டதை கொண்டுவந்து வைத்தான்.

இதை எதிர்பார்க்காத சேதுமாதவன் தன் பர்சை எடுத்து ஆடம்பரமாக ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை உருவி பேரரின் கையில் திணித்தார்.. ‘Keep this.. Don’t leave this table. Whatever we order.. deliver it fast..’ சங்கடத்துடன் அவர் நீட்டியதைப் பெற்றுக்கொண்ட பேரர் நகர, ‘Hey wait.. Ask your captain to come.’ என்றார்..

அவர் என்ன செய்கிறார் என்பது விளங்காமல் மாதவனும் உடன் இருந்தவர்களும் விழிக்க அருகில் வந்து நின்ற ஹோட்டல் அதிகாரியிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார் ‘The entire bill of the evening.. Bill it on our Bank, Is it clear?’

அவர் நீட்டிய அட்டையைப் பெற்றுக்கொண்டு, ‘Yes Sir.’ என்றவாறு அதிகாரி நகர சேதுமாதவன் மாதவனை பார்த்து புன்னகைத்தார்.

மாதவனுக்கு சேதுமாதவனின் நடத்தையில் முற்றிலும் விருப்பம் இல்ல¨யென்றாலும் முதல் நாளாயிற்றே என்ன செய்வது என தெரியாமல் மவுனமாக இருந்தார். இருப்பினும் அவருக்கு கீழ் பணிபுரிந்த மற்ற இரு அதிகாரிகளின் முன்னால் மவுனமாக இருந்தால் சேதுமாதவனின் நடத்தையை அங்கீகரிப்பதுபோலாகிவிடுமே என்ற நினைப்பில் தன்னுடைய பர்சை திறந்து ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து சேதுமாதவனிடம் நீட்டினார்.

பிறகு, ‘I just don’t approve of your action Mr.Sedhu. This is my outing. I only called you.. I would only pay for it. Is that clear?’ என்றார் அடிக்குரலில்.. ‘Call the captain now and tell him to ignore what you told him..’

சேதுமாதவன் மாதவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லையென்பது வெளிறிப்போன அவருடைய முகத்திலிருந்தே தெரிந்தது.

மறுபேச்சில்லாமல் மாதவன் நீட்டிய பணத்தை பெற்றுக்கொண்டு ‘Yes Sir’ என்றவாறு அவர் எழுந்து கேப்டனை நோக்கி செல்ல  பிலிப் சுந்தரமும் சுந்தரலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்..

சேதுமாதவன் மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்து பேசாமல் இருக்க சில நிமிடங்கள் சங்கடமான ஒரு அமைதி அங்கு நிலவியது.

மாதவன் குரலை சரிசெய்வதுபோல் செருமிக்கொண்டு பேரரை அழைத்து, ‘Repeat for both of us.. ’ என்றார் புன்னகையுடன். ‘Now tell me Mr.Sethu, why did your Chairman leave?’

சேதுமாதவன் கோப்பையிலிருந்த மதுவை குடித்து முடித்து கைகளால காலி கோப்பையை உருட்டிக்கொண்டிருந்தார். மாதவனும் மற்ற இருவரும் அவராக பேசட்டும் என காத்திருந்தனர்.

சேதுமாதவன் நிமிர்ந்து பிலிப், சுந்தரலிங்கம் ஜோடியை அடிக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு மாதவனை நோக்கி திரும்பினார்.

‘He was an autocrat. He thought he could simply steamroll me. That’s where he went wrong.’

மாதவன் வியப்புடன் தன் முன் அமர்ந்திருந்த மற்ற இரு அதிகாரிகளையும் பார்த்தார். ‘What do you mean steamrolling you? Why should he? He was the Chairman, you were his No.2!’

சேதுமாதவன் ஆணவத்துடன் மேசையில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தார். ‘I was never No.2 for him.. In fact it was he.. When he realized that most of the Board members were behind me.. He left.’

அடப்பாவி, என்ன அபாண்டமா பேசறான் என்று நினைத்த சுந்தரலிங்கம் தான் இதை எதிர்த்து பேசினால் என்ன என்று வாயை திறக்க பிலிப் சுந்தரம் அவருடைய கைகளை மேசைக்கடியில் பிடித்து அழுத்தி வேண்டாம் என்று உணர்த்தினார்.

ஆனால் மாதவன் பிலிப் சுந்தரத்தின் செய்கையை கவனிக்க தவறவில்லை..

அவருடைய இதழ்களில் மர்மமான புன்னகையொன்று தவழ, ‘Why can’t we order food?’ என்றார். ‘It is almost midnight.. closing time for the bars in Chennai!’

தொடரும்..








8 comments:

G.Ragavan said...

என்னய்யா இது ரெண்டு பேரும் ஐநூறு ரூவாத் தாளோட வெளையாடுறாங்களா? இங்கருந்து ஒருத்தர் உருவுறாரு...அங்குட்டு ஒருத்தர் உருவுறாரு...உருவோ உருவுதான்....

இந்தியாவில் குடிக்காமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அது எளிதில் கை வரக்கூடியதுதான். ஆனால் வெளிநாடுகளில் அப்படியில்லை. அவர்களின் தட்பவெட்பநிலையும் ஒரு காரணம். இஸ்லாமில் குடிக்கவே கூடாது என்றே இருக்கிறது. வள்ளுவரும் கள்ளுண்ணாமை சொல்லீருக்காரு. மத்த தமிழ்ப் பெரியவங்களும் சொல்லீருக்காங்க. அவங்க குடிக்காதன்னு சொல்லாம...குடிச்சா என்னாகும்னு சொல்லீருக்காங்க தமிழ்ல.

குடிப்பது அவரவர் விருப்பம். அவரவர் செயலுக்கு அவரவரே பொருப்பு.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்..

அடடா.. ராகவன் ஒங்க வயசு.. இருபத்தியஞ்சு.. இல்லன்னா ஒரு ரெண்டு வயசு கூட.. சரியா?

மேல் மட்டத்துல இதெல்லாம் தேவைன்னு நினைக்கிற ஆளுங்களுக்கு நடுவுல பிலிப் (CSI ஆளுங்க நம் உடல் இறைவனின் ஆலயம்னு நினைப்பிலருக்கறவங்க.. ஆகவே குடிக்கறது ரொம்பவும் அபூர்வம்..) சுந்தரம், சுந்தரலிங்கம் போன்றவர்கள் மிக, மிக அபூர்வம்..

மாதம் ஒன்னிலிருந்து ரெண்டு வரை (லகரத்தை சொல்கிறேன்) ஊதியமாக ஈட்டுபவர்களுக்கு ஐந்நூறு நோட்டு பெரிய விஷயமா என்ன?

இத்தகைய நிகழ்ச்சிகளை கடந்த இரண்டாண்டுகளில் நான் நிறையவே சந்தித்திருக்கிறேன்.. அதன் வெளிப்பாடுதான் இந்த அத்தியாயம்..

டிபிஆர்.ஜோசப் said...

ஆமாம் அரவிந்தன்..

ஆனால் இது நேற்று நான் செய்த தவறு.. நேற்றைய பதிவை 80 என்று தவறுதலாக பதிந்தேன். பிறகு அதை 79 என மாற்றினேன்.

இன்று 80 என்று மீண்டும் பதிந்தபோது தமிழ்மண திரட்டி அனுமதிக்கவில்லை.. உங்கள் பதிவிலிருந்து திரட்ட் ஒன்றும் இல்லையென்றது. சரி என்று மீண்டும் பளாக்கரில் போய் 81 என மாற்றி திரட்டிக்கு அனுப்பினேன். ஏற்றுக்கொண்டது..

இப்போது மீண்டும் 81ல் இருந்து 80 என மாற்ற போகிறேன்.. நாளைய 81ம் பதிவை தமிழ்மண திரட்டி ஏற்றுக்கொள்ளுமா என்று பார்க்க வேண்டும்..

confusion தான்..

siva gnanamji(#18100882083107547329) said...

ஆமாமா! தண்ணி சீன் இல்லெயா?கன்பூஸன் - தள்ளாட்டம் இருக்கதான்
செய்யும்
தமிழ்மணத்திலெயெ வரவில்லை
url not found னு வருது....என்கதை
உலகத்திற்கு போய்தான் சூரிய நமஸ்காரம் நடந்தது

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

தள்ளாட்டம் இருக்கதான்
செய்யும்//

யாருக்கு எனக்கா? நிச்சயமா இல்லை..

அரவிந்தன் சொன்னாரேன்னு போய் 81 ஐ 80 ஆ மாத்தினேன்.. தமிழ்மண திரட்டி ஒத்துக்கலை போலருக்கு.. இப்ப மறுபடியும் போய் ரீ பப்ளிஷ் குடுக்கணும்..

confusionஓ கன்ஃப்யூஷன்..

இது தேவையா.. அப்படியே விட்டிருக்கலாம்னு தோணுது..

மை வேர்ல்ட் போனீங்களா..?

siva gnanamji(#18100882083107547329) said...

விடுவேனா? அப்பவே படிச்சுட்டேன்
பின்னூட்டம் போடுரதுக்குள்ளே ஓரு
வேலை........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

மை வேர்ல்ட் http://tbrjoe.blogspot.com ல் உள்ளது.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி ஜி!