‘என்னம்மா நீ? திடீர்னு இப்படி சொன்னா அப்பா என்ன பண்ணுவார்?’ என்ற வத்ஸலாவை எரிச்சலுடன் பார்த்தாள் சரோஜா.
‘ஒனக்கு ஒன்னும் தெரியாது வத்ஸ்லா. அந்த ரெண்டு பேரும் பயங்கரமான ஆளுங்க. நாங்க போன தடவை மெட்றாஸ விட்டு போகும்போது எங்கள எப்படியெல்லாம் அவமானப்படுத்த அலைஞ்சாங்கங்கறது ஒனக்கு தெரியுமா? அதுமட்டுமில்லேடி, ஒங்கப்பா வேற ஒரு நல்ல வே¨லைய தேடிக்கிட்டு போகப் போறார்னு தெரிஞ்சதும் அது எந்த பேங்குன்னு துருவி கண்டுபிடிச்சி அந்த சேர்மனையே கூப்ட்டு உங்கப்பாவ பத்தி மோசமா போட்டுக் குடுத்தவர் இந்த சேதுமாதவன். நல்ல வேளை அந்த சேர்மன் வட நாட்டுக்காரரா இருக்கப்போயி அத எல்லாம் நம்பாம ஒதுக்கித் தள்ளிட்டாரு.. உங்கப்பா மறுபடியும் இதே பேங்குல சேர்மன் போஸ்ட்டுக்கு விளம்பரம் வந்திருக்கு அப்ளைப் பண்ணட்டுமான்னு கேட்டப்பக்கூட எதுக்குங்கன்னு கேட்டேனே ஞாபகம் இருக்கா? அது இதுக்குத்தான். இந்த மாதிரி மறுபடியும் ஒரு சிக்கல்ல வந்து மாட்டிக்க வேணாமேன்னுதான்.. ஒங்கப்பாதான் இப்ப இருக்கற பேங்குல இனி பெரிசா எதிர்காலம் இல்லேன்னு சொல்லி பிடிவாதமா அப்ளை பண்ணார்.. நானும் சரி இவருக்கு எங்க கிடைக்கப் போகுதுன்னு மெத்தனமா சரின்னுட்டேன்.. வந்து இறங்குன முதல் நாளே புருஷனும் பொண்டாட்டியுமா வந்து வரவேற்க வராங்களேன்னு நினைக்காதே. அதுக்கு பின்னால ஏதாச்சும் சூழ்ச்சி இருக்கும்..’
தன்னுடைய தாய் சிறிய விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர் என்பதை வத்ஸலா அறிந்துதான் வைத்திருந்தாள். ஆனால் இந்த அளவுக்கு அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்லை..
‘சரிம்மா.. I understand.. அதுக்காக இந்த அளவுக்கு excite ஆகணுமா.. Cool down.. Let Dad think about it..’ என்ற வத்ஸலா ஏதோ யோசனையில் இருந்த மாதவனைப் பார்த்தாள்.
அவர்கள் மூவரைத் தவிர அவர்களுடன் விமானத்தில் வந்த அனைவருமே தங்களுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டிருந்ததைப் பார்த்தார் மாதவன். I will have to come out with an immediate solution for this.. What Saro said could be true.. Both Sethu and his wife might have something up their sleeves.. என்ன பண்ணலாம் என்று யோசித்தவர் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவராய் திரும்பி தனக்கருகில் அமர்ந்திருந்த மனைவியையும் மகளையும் பார்த்தார்.
‘இப்ப நான் சொல்லப் போறதை கவனமா கேட்டுட்டு உங்க அபிப்பிராயத்த சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தாத்தான் நான் நினைச்சிக்கிட்டிருக்கறத செய்யணும். இதுல எந்தவித குழப்பமும் இருக்கக்கூடாது, சரியா?’
சரோஜாவும், வத்ஸலாவும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொள்ள மாதவன் மேலே தொடர்ந்தார். அவர் பேசி முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்ட சரோஜா கண்கள் விரிய திரும்பி தன் மகளைப் பார்த்தார். ‘ஏய் அப்பா சொல்ற ஐடியா நல்லாருக்கில்லே..’ என்றார்.
வத்ஸலா ஒன்றும் பேசாமல் தன் தந்தையைப் பார்த்தாள். ‘சரி டாட். நீங்க சொல்றா மாதிரியே சொல்றீங்கன்னு வச்சிக்குவோம். ஆனா அந்த சேது அங்கிள் ஒடனே புறப்பட்டு போயிருவார்னு என்ன நிச்சயம்?’
மாதவன் புன்னகையுடன், ‘That is a risk we will have to take.’ என்றார்.
‘ஆமாடி.. அது ஒரு ரிஸ்க்தான். ஆனா எனக்கென்னவோ அந்த சேது இனியும் மூனு மணி நேரம் ஏர்போர்ட்ல காத்திருக்கமாட்டார்னுதான் தோனுது. அவர் சம்மதிச்சாலும் அந்த மேனாமினுக்கி சம்மதிக்கமாட்டா. அவ சம்மதிச்சாலும் அவ போட்டுக்கிட்டு வந்திருக்கற மேக்கப் சம்மதிக்காது..’
மாதவனும் வத்ஸலாவும் ஒரு குறும்பு பார்வையுடன் படபடப்புடன் பேசிய சரோஜாவைப் பார்த்தனர்.
‘சரி மம்மி.. அவர் போய்ட்டார்னே வச்சிக்குவோம். அவர் போனதுக்கப்புறம் நாம வெளிய வர்றோம்.. அப்புறம் என்ன.. நேரா ஹோட்டலுக்குத்தானே போவணும்.. அவர் எதுக்காவது ஹோட்டலுக்கு ஃபோன் பண்ணி நாம வந்திருக்கோமா இல்லையான்னு கேட்டுட்டா? we will cut a sorry figure.. இது தேவையா மம்மி.. வந்த முதல் நாளே ஒரு controversyயோட ஆரம்பிக்கணுமா? என்ன டாட்?’
மாதவன் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார். Hey! you would be very good HR person என்று மனதுக்குள் தன் மகளைக் குறித்து பெருமிதம் கொண்டார். இப்படி ஒரு புத்திசாலிப் பொண்ண பெத்துட்டு கண்டுக்காமயே இருந்துட்டேனே.. How stupid!
‘சரோ.. வத்ஸ் கேள்விக்கு உன் பதிலென்ன?’
சரோஜா இருவரையும் மாறி மாறி பார்த்தார். ‘வத்ஸ்லா சொல்றதுல நியாயம் இருக்குங்க.. ஒத்துக்கறேன். எனக்கு ஒரு ஐடியா தோனுது.. சொல்றேன்.. சரியாருக்குமான்னு தெரியலை..’
‘சொல்லு..’ என்றார் மாதவன்.
‘நாம ஏர்போர்ட்லருந்து நேரா ஹோட்டலுக்கு போனாத்தானே பிரச்சினை..?’
‘பின்னே..’ என்றாள் வத்ஸலா முந்திக்கொண்டு..
‘நமக்கு ஒரு வீடு பார்த்து வச்சிருக்கோம்னு உங்க பி.ஏ சொன்னார்னு சொன்னீங்க இல்லே..?’
‘ஆமா? அதுக்கென்ன இப்போ?’
‘அது எங்க இருக்குன்னு சொன்னீங்க?’
‘அடையார் பெசண்ட் நகர்ல.. அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு பக்கத்துலன்னு சொன்னார்..’
சரோஜா உற்சாகமானார். ‘நல்லதா போச்சி. நாம மூனு பேரும் உங்க பி.ஏ. வோட நேரா அந்த வீட்ட போயி பார்ப்போம்.. மெட்றாஸ்க்கு வந்து இறங்கின முதல் நாளே அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு போற வாய்ப்பும் கிடைச்சிருக்கு பாருங்க. இன்னைக்கி காலைல பாம்பேய்லருந்து புறப்படறப்போ விநாயகர் கோவில். இங்க வந்து இறங்குனதும் அஷ்ட லக்ஷ்மி.. இதவிட வேறென்னங்க வேணும்.. பேசாம நீங்க சொன்னா மாதிரி உங்க பி.ஏ வ கூப்ட்டு ஃப்ளைட்ட மிஸ் பண்ணிட்டோம்னு சொல்லிருங்க.. அந்த சேதுமாதவன் ஏர்போர்ட்லருந்து போனதும் உங்க பி.ஏ. வ திருப்பி ஃபோன் பண்ண சொல்லுங்க. பத்திரம், அந்த ஆள் ஏதாச்சும் தத்துபித்துன்னு பண்ணி வச்சிரப்போறார்.’
நேரத்த போக்குறதுக்கு கோவிலுக்கு போய்ட்டு ஏதோ சாமி வரம் குடுத்தா மாதிரி சந்தோஷப்படறதப் பாரு என்று தனக்குள் நினைத்துக்கொண்ட மாதவன் வேறு வழியின்றி தன்னுடைய யோசனையை நிறைவேற்றுவதென தீர்மானித்து தன்னுடைய காரியதரிசியை அழைத்தார்..
***
மாதவனை பிலிப் சுந்தரமும் சுந்தரலிங்கமும் ஏற்கனவே அவர் சேர்மன் பதவிக்கான நேர்காணலுக்கு சென்னை வந்திருந்தபோது சந்தித்திருந்தனர்.
ஆகவே அவர்கள் அவரை வரவேற்க எளிதாயிருந்தது. தாங்கள் கொண்டுவந்திருந்த பூங்கொத்தை அவருடைய மனைவியிடம் வழங்கி.. ‘Welcome to Chennai Madam.’ என்றனர்.
சரோஜா மகிழ்வுடன் அதைப் பெற்றுக்கொண்டு ‘நன்றி’ என்றாள். பிறகு தனக்கருகில் நின்றுக்கொண்டிருந்த வத்ஸலாவை அறிமுகப்படுத்தினார். ‘I have one more Son.. He will be coming after about a week.’
மாதவன் சற்று தள்ளி ஒதுங்கி நின்ற இளைஞனைப் பார்த்தார். ‘Are you Mr. Subodh Mishra?’ என்றார்.. ‘Feel free young man. What is our programme for the evening?’
சுபோத் அவசர அவசரமாக தன்னுடன் கொண்டு வந்திருந்த குறிப்பேட்டை திறக்க முற்படுவதைப் பார்த்த வத்ஸலா புன்னகையுடன், ‘டாட் அவர எதுக்கு பாவம் வதைக்கறீங்க? நாம தீர்மானிச்ச மாதிரியே செய்வோமே..’ என்றாள்.
மாதவன் புன்னகையுடன்.. ‘Don’t get excited Subodh..’ என்று கூறிவிட்டு தன்னை வரவேற்க வந்திருந்த இரு அதிகாரிகளுடன் சேர்ந்து வாயிலை நோக்கி நடந்தார். ‘நீங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு ரொம்ப நன்றி.. நான் ஏற்கனவே சுபோத் கிட்ட சொல்லி ஒரு வண்டி அரேஞ்ச் பண்ணியிருக்கேன்.. You carry on.. I will meet you in the executives’ meeting tomorrow..’
பிலிப் சுந்தரமும் சுந்தரலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்களுக்கும் விட்டால் போதும் என்று இருந்தது.. ஒருவேளை சேதுமாதவன் எதையாவது தேடி விமானநிலையத்துக்கு திரும்பி வந்து எங்கே நம்மை இவருடன் பார்த்துவிடுவாரோ என்ற பயமும் இருந்தது அவர்களுக்கு..
‘Yes Sir.. We will do that..’ என்றனர் இருவரும் கோரசாக..
பிறகு அவருடைய மனம் மாறுவதற்குள் அங்கிருந்து அகல வேண்டும் என்ற முடிவுடன் மாதவன் மற்றும் அவருடை மனைவி, மகளுடன் விடைபெற்றுக்கொண்டு தங்களுடைய வாகனத்தை நோக்கி விரைந்தனர்..
மாதவன் அவர்களுடைய வாகனம் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்வரைப் பார்த்துவிட்டு தன்னுடைய காரியதரிசியிடம், ‘Mr. Subodh.. all three of us know Chennai very well.. you handover the address of the house your bank has fixed for our use to the driver. நாங்க மூனு பேரும் நேரா அங்க போய் வீடு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு ஹோட்டலுக்கு போயிடறோம். நீங்க ஹோட்டலுக்கு கூப்ட்டு நான் மொதல்ல சொன்னா மாதிரியே ஃப்ளைட் மிஸ் பண்ணுனதுனால ராத்திர ஒன்பது மணிக்குதான் செக் இன் செய்வோம்னு சொல்லிருங்க.. என்ன?’ என்றார்.
இதுவரைக்கும் சொன்ன ஒரு பொய்யே வெளிய தெரிஞ்சா சேதுமாதவன் தன்னை என்ன செய்யவும் தயங்கமாட்டார்.. இதுக்கு மேலயும் பொய்க்கு மேல பொய்யா சொல்லிக்கிட்டே போக வேண்டியதுதானா? இது எங்க போய் முடியுமோ தெரியலையே.. என்று தனக்குள் நொந்துக்கொண்ட சுபோத் மிஸ்ரா தன்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த அடையார் விலாசத்தை வேறொரு சீட்டில் எழுதி ஒட்டுனரிடம் கொடுத்தான். பிறகு, மாதவனும் அவருடைய குடும்பமும் வாகனத்தில் ஏறி செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு ப்ரீ பேய்ட் டாக்சிகள் கவுண்டரை நோக்கி நடந்தான் தன்னுடைய தலைவிதியை நொந்துக்கொண்டு.
தொடரும்..
7 comments:
ammalunga (not amma) aatta paattam
engey kondu vidap povudho...?
1) 'flight miss pannavanga appave phone panna mattangala? adhu enna correctaa landing time kku phone panrarnu" ninaikka mudiyadha alavirkku sedhu....... mhoom nambamudiyalle oru velai mayadeviyin mayakkamo?
2)airport outskirt le sethu wait pannittu irupparo? ethanukku ethan illeya?
ம்ம்ம்....முதல் கோணல் முற்றும் கோணல்....முதல் பொய் முற்றும் பொய்.....சுபோத்து உனக்குச் சபாத்து....
வாங்க ஜி!
ammalunga (not amma) aatta paattam
engey kondu vidap povudho...?
பொறுத்திருந்து பாருங்க..
oru velai mayadeviyin mayakkamo?//
அந்தம்மாதான் சேதுவை சிந்திக்கவே விடலையே.. நான் போறேன்னு கிளம்புனதும் அவரால ஒன்னும் பண்ண முடியாம பின்னாலேயே ஓடிட்டாரு.. ஆனா நீங்க சொன்னா மாதிரி அவர் எத்தனுக்கு எத்தந்தான்.. ஆனா சில சமயங்கள்ல இந்த மாதிரி ஆளுங்க எதிராளிய குறைச்சி மதிப்பு போட்டுருவாங்க..
அவருக்கு தெரிய வந்து அவர் பண்ணப்போற கலாட்டாவ பாருங்க..
பெண்புத்தி பின்புத்தின்னு சும்மாவா சொல்றாங்க.. மனைவி சொல்லே மந்திரம்னு மாதவன் செஞ்சிட்டு முழிக்கப்போறார் பாருங்க..
வாங்க ராகவன்,
முதல் கோணல் முற்றும் கோணல்....முதல் பொய் முற்றும் பொய்.....//
ரொம்ப கரெக்ட்.. பாவம் சுபோத்.. அவர் இந்த தனிமனித யுத்தத்துல ஒரு பகடைக்காயா ஆகி படப்போற அவஸ்தை..
சார், பின்னூட்டங்களால் உங்கள் கதை திசை மாற வேண்டாம். நீங்கள் நினைத்தபடியே கதையை எழுதவும்.
யாரென்று நினைவில்லை (ஜெயகாந்தன்?, பாலகுமாரன்?), ஒரு முறை அவரை பேட்டி காணும்பொழுது, அந்த பாத்திரம் ஏன் அவ்வாறு செய்தது, முடிவு சரியில்லையே என்று கேட்கிறார்கள், அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். மற்றவர்களுக்குத்தான், அந்தக் கதை, படிப்படியாக நடைபெற்று முடிவுக்கு வந்தது. ஆனால், நானோ அந்த முடிவு வரை யோசித்தே கதையை எழுத ஆரம்பித்தேன் என்றார்.
ஆனால், நானோ அந்த முடிவு வரை யோசித்தே கதையை எழுத ஆரம்பித்தேன் என்றார். //
உண்மைதான் கிருஷ்ணா..
முடிவு எப்படி இருக்க வேண்டும் என்று கற்பித்துக்கொண்டு எழுதாத எந்த கதையும் அலங்கோலமாகத்தான் முடியும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கதா பாத்திரமும் அவரவருடைய குணாதிசயங்கள்படிதான் நடப்பார்கள். அவர்களுடைய செயல்கள் சில முட்டாள்தனமாகவும் இருக்கும். நாமும் வாழ்க்கையில் அப்படித்தானே நடந்துக்கொள்கிறோம், சில சமயங்களில்!
Post a Comment