10.5.06

சூரியன் 74


‘டாட்..’ என்று தன்னுடைய சட்டையைத் தொட்ட மகளைத் திரும்பிப் பார்த்தார் மாதவன்.

‘அங்க பாருங்க டாட். இன்னைக்கி நாம ஏர்போர்ட்ல பார்த்த அங்கிள்..’ என்று வத்ஸ்லா கைகாட்டிய திசையில் பார்த்தார்.

சுந்தரலிங்கம் ஒரு சிறுமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்வதைப் பார்த்தார்.

‘மா வத்ஸ்.. ஃபேமிலியோட வந்திருக்கார் போலருக்கு. நாம டிஸ்டர்ப் பண்ண வேணாம்.. கமான் லெட் அஸ் கோ.’

சரோஜாவோ, ‘என்னங்க நீங்க? அவர பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியுதே.. ஒருவேள பக்கத்துலதான் இருக்காங்களோ என்னவோ.. அவர் வொய்ஃப் வந்திருந்தாலும் வந்திருப்பாங்க. பேசிவச்சா நமக்கும் ஒரு ஒத்தாசையா இருக்குமில்லே.. போங்க.. அவர் வெளிய வந்ததும்.. ஒரு ரெண்டு வார்த்தை பேசிட்டு போயிரலாங்க.’ என்று வற்புறுத்த, அரைமனதுடன்  கோவில் வாசலில் நின்று சுந்தரலிங்கம் வருவதற்காகக் காத்திருந்தார்.

அவரை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய மனைவி, மகள், மருமகன் புடைசூழ வெளியே வந்த சுந்தரலிங்கம் அவரைப் பார்த்துவிட்டு திகைத்து நின்றார். ‘உங்கள நான் இங்க எதிர்பார்க்கவேயில்லை சார். நீங்க நேரா ஹோட்டலுக்குத்தான் போயிருப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க சென்னைக்கு வந்ததும் பொறுப்பை ஏத்துக்கறதுக்கு முன்னால இங்க வரணும்னு நினைச்சீங்களே.. சந்தோஷமா இருக்கு சார்.. நான் எல்லா மாசமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கி குடும்பத்தோட வந்துருவேன்..’ என்றவாறு தன்னருகில் நின்ற குடும்பத்தாரை மாதவனுடைய குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்ய பெண்கள் எல்லோரும் சேர்ந்துக்கொண்டு ஆண்களை தனிமையாக்கிவிட்டனர்.

மாதவன், சுந்தரலிங்கத்தின் மருமகனைப் பார்த்து புன்னகையுடன் ‘ஹை!’ என்றார். அவரோ கூச்சத்துடன் தன் மாமனாரைப் பார்த்துவிட்டு.. ‘ஹை சார்.. நீங்களும் மாமாவும் பேசிக்கிட்டிருங்க நான் இப்ப வந்துடறேன்.’என்று கழண்டுக்கொள்ள இருவரும் தனித்து நின்று என்ன பேசுவதென தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சுந்தரலிங்கம் தயக்கத்துடன், ‘சார் உங்கக்கிட்ட ஒன்னும் சொல்லணும்னு தோணுது.. ஆனா தயக்கமா இருக்கு..’ என்று ஆரம்பித்தார்.

மாதவன் புன்னகையுடன், ‘எதுவாருந்தாலும் தயங்காம சொல்லுங்க. நீங்கதான இப்ப சேர்மன்?’ என்றார்.

‘நீங்க இன்னைக்கி நம்ம எம்.டிய அவாய்ட் பண்ணது எந்த அளவுக்கு சரின்னு எனக்கு தோணலை..’

மாதவன் புன்னகையுடன் தலையை அசைத்தார். ‘நீங்க சொல்றது சரிதான். அது ஒரு impulsive decision.. I should not have done that.. Anyway.. past is past.. கூடிய சீக்கிரம்.. அநேகமா இன்னைக்கி ராத்திரிக்குள்ளேயே இதுக்கு ஒரு நல்ல சொலுஷன கண்டுபிடிக்கணும்.. I will do that. Don’t worry.. Thanks for your concern..’

சில நிமிடங்களுக்குள் சரோஜாவும், வத்ஸலாவும் அவர்களை நெருங்க.. இரு குடும்பங்களும் பரஸ்பரம் கையசைத்து விடையளிக்க அவரவர் பாதையில் சென்றனர்.

‘உங்க ஃப்ரெண்டோட ஒய்ஃபும் டாட்டரும் ரொம்ப நல்ல மாதிரி தெரியறாங்கங்க.. மைலாப்பூர்ல இருக்காங்களாம். இங்கருந்து ட்வெண்டி மினிட்ஸ் ட்ரைவ்தானாம். நாளைக்கு வாங்க.. ஷாப்பிங் கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாங்க. நானும் சரின்னுட்டேன்..’ என்ற சரோஜாவைப் பார்த்து, ‘ஜமாய்.. என்ன வத்ஸ் உனக்கு எப்படி தோணுது?’ என்றார் மாதவன்.

வத்ஸலா வெறுமனே புன்னகைத்தாள். ‘She is OK. But I think she is not my type of girl..’

மாதவனுக்கு புரிந்தது..  பதில் பேசாமல் புன்னகையுடன் வாகனத்தை நோக்கி நடந்தார்.

***

சேதுமாதவனின் சொகுசுக் கார் போர்ட்டிக்கோவில் சென்று நின்றதும் இறங்கி கதவை அடித்து சாத்திவிட்டு விடுவிடுவென்று மாயா சென்றதை பொருட்படுத்தாமல் எஞ்சினை அணைத்துவிட்டு இறங்கி சாவகாசமாக வீட்டிற்குள் நுழைந்தார்.

மாயா தேவி ஹாலில் காணாமல் போகவே சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறு மாடியிலிருந்த தன்னுடைய அறையை நோக்கி படிகளில் ஏறினார்.

‘எந்தா.. மோள்லேக்கி பூவாராயோ?’ என்றவாறு அறைக்குள் இருந்து ஹாலுக்கு வந்த மாயா தேவியின் குரலைக் கேட்டு நின்ற படியிலிருந்தே திரும்பி பார்த்தார். ‘பின்ன என்னெ என்ன பண்ண சொல்றே?’

‘மீண்டும் அயாளெ விளிக்கான் போண்டே?’ மாயாவின் குரலில் இருந்த கேலியை கண்டுக்கொள்ளாமல்.. ‘போணம்.. தான் வருந்நுண்டோ..’ என்றார் கேலியுடன்.

மாயா தன்னுடைய ஸ்லீவ்லெஸ் தோள்களை ஸ்டைலாக குலுக்கி, ‘ஏய். ஞான் எந்துனா? எனிக்கி இன்னு க்ளப் வரைக்கும் போணம்..  மேடம் வந்நத குறிச்சி எண்டெ ஃப்ரெண்ட்ஸ் இடத்து பறயண்டே..?’ என்றார்.

‘பறயணும்.. பறயணும்.. இதொரு இண்டர்நேஷனல் ந்யூசல்லே.. பறயாதிரிக்யாம் பற்றோ?’

மாயா சேதுவின் குரலில் இருந்த கேலியைப் புரிந்துக்கொண்டு முறைத்தாள்.  சோபாவில் அமர்ந்து கால்களை டீப்பாயில் நீட்டினாள். உள்ளே திரும்பி, ‘திரூஊஊ’ என்றாள். யாரும் வரவில்லை. திரும்பி சேதுவைப் பார்த்தாள். ‘எந்தா, திரு இல்லே?’

சேதுமாதவனுக்கு சட்டென்று நினைவுக்கு வராமல், ‘திரு இல்லே..?’ என்றார். பிறகு நினைவுக்கு வந்தவராய், ‘நாந்தான் அவனெ ச்சோழா ஹோட்டல்ல போய் டின்னருக்கு வேண்டியத வாங்கி வரச்சொன்னேன்.. மறந்திருச்சி..’

மாயா சேதுமாதவனை வியப்புடன் பார்த்தாள். பிறகு, ‘ஓ! சேர்மன பார்ட்டிக்கி விளிக்காம்னு விஜாரிச்சிருந்நு, இல்லே?’ என்றாள் கேலியுடன்.

சேதுமாதவனுக்கு மாயாவின் மனநிலை புரிந்தது. அவள் மிக அதிகமாக அவமானப்படுத்தப்பட்டிருந்ததன் வெளிப்பாடே இந்த கேலியும் கிண்டலும் என்பதும் அவருக்கு புரிந்தது. மாதவனும் அவருடைய மனைவியும் வருவார்கள் அவர்களை அவமானப்படுத்தி பார்க்கலாம் என்று நினைத்திருந்தது நடக்காமல் போய்விட்டதே என்ற கோபம்..

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிரலையே.. இன்னும் ரெண்டு மணி நேரம்தானே.. மறுபடியும் கிளம்பி போயி நினைச்ச காரியத்த முடிச்சிட்டா நிம்மதியா ஒரு ரெண்டு பெக்க அடிச்சிட்டு தூங்கலாமே..

படிகளில் இருந்து இறங்கி ஹாலில் இருந்த தொலைப்பேசியை நோக்கி சென்றார்.

மாயா வியப்புடன், ‘என்ன பண்ண போறீங்க?’ என்றர்.

‘ஏர்போர்ட்டுக்கு ஃபோன் பண்ணி ஃப்ளைட்டு மறுபடியும் ஏதாவது லேட்டா கேக்கலாம்னுதான்.’

‘கேட்டு? மறுபடியும் ஓடப் போறீங்களா? நீங்க வேற. அந்த மாதவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? நீங்க யாரு? பேங்கோட எம்.டி.! ஏதோ நானும் ஊர்லருந்து வந்திருந்ததால நீங்க வந்தீங்க. அதான்  ரெண்டு சுந்தரன்மாரும் உண்டில்லே.. அவர் போயி விளிச்சோட்டே.. தாங்களு போண்டா..(போக வேண்டாம்).. வேணெங்கில் அயாளு வந்ததினெ சேஷம் ஹோட்டல்லேக்கி விளிச்சி ஹலோ பறஞ்சா மதி.. எனிக்கி வைய்யா (களைப்பாய் இருக்கிறது) ஞான் போயி குளிச்சிட்டு கெடக்யாம் பூவா(படுக்கப் போகிறேன்)..’ என்றவாறு எழுந்து சென்ற மாயாதேவியையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தார் சேதுமாதவன். மாயாவின் வாளிப்பான பின்புறம் போதையை உண்டாக்க தலையை சிலிர்த்துக்கொண்டு அதை உதறிதள்ளிட்டு ஃபோனை எடுத்து விமான நிலையத்துக்கு டயல் செய்தார்.

பேசி முடித்துவிட்டு, ‘சே.. இன்னும் ரெண்டு மணி நேரம் லேட்டா? வேணும்.. நட்ட நடுராத்திரியிலதான் வந்து சேரணும்னு இருந்தா அத மாத்தவா முடியும்..?’ என்று முனுமுனுத்தவாறு சோபாவில் அமர்ந்து மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். மணியைப் பார்த்தார். மணி 7.45..

சாதாரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நேரத்தில் தன் பணக்கார நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு சீட்டாட்ட கச்சேரியில் ஒரு அரை பாட்டிலையாவது உள்ளே தள்ளிவிட்டிருப்பார். எல்லாம் இந்த மாதவனால் வந்தது..

சரி.. இப்போதும் நேரம் இருக்கிறது.. சீட்டுக்கச்சேரி துவங்கியிருந்தாலும் இடையில் போய் சேர்ந்துக்கொண்டால் போயிற்று.. அதுக்கு முன்னால மாதவனுக்கு புக் பண்ண ஹோட்டல்ல கூப்ட்டு மெசேஜ் ஒன்னு குடுத்திருவோம். அப்புறம் பார்ட்டியிலருக்கறப்ப அவன்பாட்டுக்கு கூப்ட்டானா பிரச்சினையாயிரும்..

சிகரெட்டை ஆஷ் டிரேயில் வைத்துவிட்டு எழுந்து தாஜ் ஹோட்டல் நம்பரைத் தேடிப்பிடித்து டயல் செய்தார். சே.. இந்த திரு எங்க போய் தொலைஞ்சான்.. அவன் இல்லாம எல்லாத்தையும் நாமளே செய்ய வேண்டியிருக்குது...

எதிர் முனையில் தொலைபேசி எடுக்கப்பட்டதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மிஸ்டர் மாதவனுக்கு ஒரு மெசேஜ் கொடுக்க வேண்டும் எழுதிக்கொள்ளுங்கள் என்றார்.

‘யெஸ் சார்.’ என்று அவர் சொல்ல சொல்ல எழுதிக் கொண்ட ஹோட்டல் சிப்பந்தி, ‘Sir, We just now received a call from Mr.Madhavan. He is on the way to the Hotel Sir. He said he would be here at 9.10 or 9.15.’ என்று கூற ‘Are you sure? I am talking about Mr.Madhavan, Chairman of ------- Bank.’ என்றார் வியப்புடன். பிறகு எதிர் முனையிலிருந்த வந்த பதிலைக் கேட்டதும் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘Ok. Thanks. Just give him this message. I’ll call later.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு கடகடவென மாடிப்படிகளில் ஏறிச்சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து உயர் ரக மது பாட்டிலை எடுத்து அருகில் ஷெல்ஃபில் இருந்த வெளிநாட்டு கண்ணாடி கோப்பையில் விரலளவு மதுவை ஊற்றி ஒரே மூச்சில் குடித்துவிட்டு புரையேறி கண்களில் நீராய் வர.. ‘தெண்டி.. தெண்டி..’ என்று ஒரு பத்துமுறை மாதவனைத் திட்டித் தீர்த்தார்.

அத்துடன் அவருடன் சேர்ந்து சதிசெய்ததாய் அவர் நினைத்த மாதவனின் காரியதரிசி மற்றும் பிலிப் சுந்தரம், சுந்தரலிங்கம் ஆகியோரையும் வாயில் வந்த வார்த்தைகளால் அர்ச்சித்தார். அத்துடன் நிற்காமல் எதையாவது செய்ய வேண்டுமே.. செய்ய வேண்டுமே.. என்று அங்கலாய்ப்புடன் மண்டைய உடைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

இன்னைக்கி காலைலருந்து நான் செஞ்சதெல்லாமே வேஸ்ட்டா போச்சி.. எல்லாத்துக்கும் அந்த பாபு சுரேஷ்தான் காரணம்.. காலங்கார்த்தால என் பொண்ண காணோம்னு கூப்ட்டு.. சை.. இந்த மாதிரி அவமானம் என் லைஃப்லயே நடந்ததில்லே.. இப்பத்தைக்கு இது மாயாவுக்கு தெரிய வேணாம்.. நாமளே இத டீல் பண்ணுவோம்.. ஏதாச்சும் செஞ்சி திருப்பியடிக்கணும்.. என்ன பண்ணலாம்.. என்ன பண்ணலாம்.. ஆங்.. டாக்டர் சோமசுந்தரம்.. கரெக்ட் அவர்தான் சரியான ஆள்.. மாதவனுக்கு மட்டுமில்ல.. அந்த ரெண்டு பயல்களுக்கு ஒரு செக் மேட் வச்சா மாதிரி இருக்கும்.. அந்த பி.ஏ பொடியன நாமளே பார்த்துக்கலாம். ராஸ்கல். என்ன தைரியம்? ஒன்ன தண்ணியில்லாத காட்டுக்கு தூக்கறேண்டா.. பஞ்சாப்.. இல்லன்னா உ.பி.. வேணாம் ராஜஸ்தான்.. அதான் சரி.. மவனே இரு.. எது அடிச்சதுன்னு நீ தெரிஞ்சிக்கறதுக்குள்ள அடிக்கறேன்.. நீ இனி ஜென்மத்துக்கும் ஊர்பக்கம் திரும்பிக்க மாட்டே..

கோபத்தில் நடுங்கும் கைகளுடன் மேலும் ஒரு விரலளவு விஸ்கியை ஊற்றி குடித்தார். பிறகு தன்னுடைய செல்ஃபோனில் சேதுமாதவனின் எண்ணை டயல் செய்தார்..

****


9 comments:

G.Ragavan said...

ஆகா...அதுக்குள்ள குட்டு ஒடஞ்சிருச்சா....தப்பு செஞ்சாலும் சரியாச் செய்யனும். இப்பிடி அரைகொறையாப் பண்ணுனா இப்பிடித்தான்...போச்சு...இந்தாளு என்ன பண்ணப் போறாரோ......

cherankrish said...

ஐ...சூப்பரா இருக்கே..ம்..ம்... தொடர்ந்து எளுது நைனா

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இந்தாளு என்ன பண்ணப் போறாரோ......//

பெரிசா என்னத்த பண்ணப்போறாரு.. அதா போர்ட் மெம்பர்சுக்குள்ளவே ஒத்துமை இல்லையே.. இவர் டாக்டர்கிட்ட போனா மாதவன் வேற ஒருத்தர புடிப்பார்.. பொறுத்திருந்து பாருங்க.. இது ஒரு டக் ஆஃப் வார்தான்.. மேலிடத்துல இந்த மாதிரி petty ego clash நிறைய நடக்கும்..

siva gnanamji(#18100882083107547329) said...

"kettik karan poyyum purattum-
dakku mukku dakku thalam
ettu nalaikku mele varuma
dakku mukku dakku thalam....."

dondu(#11168674346665545885) said...

பிறகு தன்னுடைய செல்ஃபோனில் சேதுமாதவனின் எண்ணை டயல் செய்தார்..
அவ்வாறு செய்தால் சேதுமாதவனுக்கு எங்கேஜ்ட் டோன்தானே கிடைக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இந்தாளு என்ன பண்ணப் போறாரோ...... //

என்னத்த பெரிசா பண்ணப்போறார்?

மாதவன் சேர்மனாச்சே..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சேரன்க்ரிஷ்,

தொடர்ந்து எளுது நைனா //

சரி மகனே..:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

பாட்டு நல்லாருக்கு.. பழசுன்னாலும் ஆப்ட்டா (apt) இருக்கு.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

அவ்வாறு செய்தால் சேதுமாதவனுக்கு எங்கேஜ்ட் டோன்தானே கிடைக்கும்?//

ஹி.ஹி. சார் அவரே ஏற்கனவே குடிபோதையில் இருக்கார். சோமசுந்தரத்திற்கு டயல் பண்றேன்னு நினைச்சிக்கிட்டு...

சார் நான் நிதானமாத்தான் இருந்தேன்.. ஒரு வேளை தூக்கக்கலக்கமோ என்னவோ..

இன்னைக்கி கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதுனாலும் எழுதினேன்.. ஒரே பிசி..

இனிமேத்தான் நீங்க சுட்டிக்காட்டிய தவறை திருத்தணும்..