12.5.06

சூரியன் 76

சோமசுந்தரம் இணைப்பை துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார். சேதுமாதவனைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அவருடைய செயல்பாடுகளைக் குறித்தும் அவருடைய வாழ்க்கைமுறையைப் பற்றியும் அவர் பல தரப்பிலிருந்தும் கேட்டிருக்கிறார்.

அத்துடன் அவருக்கும் புதிய சேர்மன் மாதவனுக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டைக் குறித்தும் சாடைமாடையாகக் கேள்விப்பட்டிருந்தார்.

மாதவன் சேர்மன் பேனலில் (Panel) சேர்க்கப்பட்டதை அறிந்தவுடன் சேதுமாதவன் தன்னிடம் கூறியதை நினைத்துப்பார்த்தார்.

‘அந்த மாதவன் ஏற்கனவே நம்ம பாங்குலருந்து வெளியேறினவர் சார். அவரோட பழைய ஃபைல படிச்சி பார்த்தீங்கனாவே  அவர் எப்படிப்பட்ட ஆள்னு தெரியும். அவர பேனல்ல சேக்கறது எந்த அளவுக்கு சரின்னும் உங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.’

அப்போது அவருடைய உள் நோக்கத்தை அறிந்திராத சோமசுந்தரம் வங்கியின் எச்.ஆர். தலைவராயிருந்த வந்தனாவிடம் விசாரித்தபோதுதான் முழு விவரமும் தெரியவந்தது.

சேதுமாதவனின் கருத்துக்கு பின்னாலிருந்த தனிப்பட்ட விரோதத்தை அறிந்தவர் அவர் தன்னிடம் கூறியதை லட்சியம் செய்யாமல் பேனலை பரிந்துரைத்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தார்.

மூன்று பெயர்கள் அடங்கிய பேனலில் இருந்து ரிசர்வ் வங்கியால் தகுந்த விசாரனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மாதவன். அதற்கு பின்னால் அரசியல் இருக்கிறதென மீண்டும் சேதுமாதவன் அவரிடம் வந்து புகார் செய்தபோது தான் கூறிய மறுமொழியும் அவருக்கு நன்றாக நினைவிருந்தது.

‘இங்க பாருங்க மிஸ்டர் சேது. போர்ட் உறுப்பினர்களுக்கு உங்களுக்கும் மிஸ்டர் மாதவனுக்கும் இடையிலிருந்த கருத்து வேறுபாடுகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எங்களுடைய விசாரனையில் அவரைப் பற்றி எந்தவித குற்றமும் யாரும், முக்கியமாக அவருடைய இப்போதையே சேர்மனும் கூறவில்லை. We are satisfied about his credentials. It appears that RBI has also conducted a detailed enquiry about him. எல்லா விசாரனைகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்தான் மிஸ்டர் மாதவன். Therefore, accept the decision and try to get along with him. If, at any point of time, we were to choose between you and Mr.Madhavan, we would be forced to side with him.. Keep that in mind and act accordingly..’

அப்படியிருக்க இப்போது இவர் கூறிய குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு மாதவனிடத்தில் பேசுவது எத்தனை உசிதமாயிருக்கும் என்று யோசித்தார். மாதவனுக்கு இவரை விமானநிலையத்தில் சந்திக்க விருப்பமில்லாவிட்டால் அவரை யார் கேள்வி கேட்கமுடியும்? அதற்காக மட்டுமே அவர் வந்த விமானத்தில் வரவில்லை என்று தன்னுடைய காரியதரிசியிடம் கூறியிருக்கலாம். இதைக் குறித்து சற்று நேரம் யோசித்த சோமசுந்தரம் இவ்விஷயத்தில் தலையிடுவது தன்னுடைய வேலை அல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தார்.

இருப்பினும் சேதுமாதவன் கூறிய விஷயம் உண்மைதானா அறிய என்ன வழி என்று யோசித்தார். பிறகு சுந்தரலிங்கத்திடம் விசாரித்தாலென்ன என்று தோன்றியது. ஆனால் சுந்தரலிங்கம் நாம் அவரிடம் விசாரித்ததை மாதவனிடம் கூறி அது அவருக்கு பிடிக்காமல் போய்... எதற்கு வீணான மனஸ்தாபம் என்று தோன்றவே அடுத்த நொடியே அதுவும் சரியான அணுகுமுறையாகாது என்று தீர்மானித்தார்.

ஏன் நாமே மாதவனைக் கூப்பிடக்கூடாது? ஒரு புது சேர்மனை ஒரு போர்ட் மெம்பர் என்ற முறையில் அழைத்து நலம் விசாரிப்பதில் தவறில்லையே.. அப்படியே அவருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் இந்த விஷயத்தையும் கேட்டு வைக்கலாம் என்று நினைத்து ஹோட்டல் தாஜுக்கு டயல் செய்தார்.

ரிச்ப்ஷனில் எடுத்ததும் மிஸ்டர். மாத்வன் வந்துவிட்டாரா என்று விசாரித்தார். ‘Yes Sir. He has checked in about ten minutes back.’ என்று பதில் வரவே அவருடைய அறைக்கு தொடர்பு அளியுங்கள் என்றார்.

எதிர் முனையில் மாதவன் எடுத்ததும், ‘ஹலோ மிஸ்டர் மாதவன் நான் டாக்டர் சோமசுந்தரம்.’ என்றார்.

‘யெஸ் சார். ஹவ் ர் யூ? இப்பத்தான் செக் இன் செஞ்சோம். பத்து நிமிஷம் ஆச்சி.’

‘ஃப்ளைட் ஏதும் டிலே ஆச்சா? இப்பத்தான் வந்தேன்னு சொல்றீங்க? I was under the impression that you were coming by the afternoon flight?’ என்றார் கேஷ¤வலாக.

‘நோ.. நோ.. There was no delay. We landed here at 5.45 in the evening. ஏர்போர்ட்லருந்து அப்படியே பெசண்ட் நகர்வரைக்கும் போய் எங்களுக்கு ஃபிக்ஸ் பண்ணியிருந்த வீட்டை பார்த்தோம். அப்படியே அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கும் போய்ட்டு வந்தோம். அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சி.’ என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் மாதவன் பதிலளிக்க சோமசுந்தரம் பலே சாமிதான் இந்த மாதவன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

‘அப்படியா.. அதுவும் நல்லதுதான்.’ என்றவர் சட்டென்று, ‘ஏர்போர்ட்டுக்கு யாராச்சும் ரீசீவ் பண்ண வந்தாங்களா?’ என்றார்.

அதற்கும் தயங்காமல், ‘யெஸ் என்னோட பி.ஏ. வந்திருந்தார். அப்புறம் மிஸ்டர் சுந்தரலிங்கம்.. மிஸ்டர் பிலிப் அவங்க ரெண்டு பேரும் வந்திருந்தாங்க. I told them that we would be able to manage on our own.’ பதில் வரவே சரி இனி பேசி பயனில்லை என்று நினைத்து, ‘Ok Mr. Madhavan, we will meet tomorrow.’ என்று இணைப்பை துண்டித்தார்.

***

‘யாருங்க ஃபோன்ல.. வந்ததும் வராததுமா?’

மாதவன் நமட்டுச் சிரிப்புடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘ஒரு டைரக்டர். குசலம் விசாரிக்கறா மாதிரி கூப்டு.. எந்த ஃப்ளைட்டுல வந்தீங்கன்னு கேக்கறார். அந்த சேதுமாதன் பண்ண வேலையாத்தான் இருக்கும். பேசாம அவர மீட் பண்ணிட்டே வந்திருக்கலாம். எல்லாம் நீ பண்ண வேலை..’

சரோஜா கோபத்துடன் முறைத்தார். ‘எதுக்குங்க இன்னமும் பயந்து சாவறீங்க? யாராச்சும் கேட்டா அந்த ஆள பாக்க பிடிக்கலை, அதனாலதான் அவாய்ட் பண்ணேன்னு சொல்ல வேண்டியதுதானே. நீங்க இப்ப ஒரு சேர்மன். அத மறந்துராதீங்க.’

வத்ஸலா தன் தாயைப் பார்த்தாள் ‘அம்மா.. நீ நினைக்கறா மாதிரியெல்லாம் ஒரு ஆஃபீஸ்ல பண்ண முடியாதும்மா. அப்பா இன்னும் குறைஞ்சது நாலு வருஷமாவது அவர்கூட ஒர்க் பண்ணணும். அவரும் என்ன சாதாரணமான ஆளா? அப்பா நம்பர் ஒன்னுன்னா அவரு நம்பர் டூ. அதெப்படி அவர அவாய்ட் பண்ண முடியும்? அதுக்குத்தான் நா அப்பவே சொன்னேன். அவர பார்த்து சும்மா ஹலோன்னு சொல்லிட்டு வந்திரலாம்னு. நீ கேட்டாத்தானெ? இப்ப பார், வந்ததும் வராததுமா தேவையில்லாத பிரச்சினை.’ என்றவள் மாதவனைப் பார்த்தாள், ‘How are you going to solve this Dad?’

‘That’s what I am thinking வத்ஸ்.. I will have to do some firefighting ..’ என்ற மாதவன் இருவரையும் பார்த்தார். ‘அப்பா வெளியில போனா நீங்க ரெண்டு பேரும் மேனேஜ் பண்ணிக்குவீங்க இல்லே. டின்னர ரூமுக்கே வரவச்சி சாப்டுறுங்க.. I am planning to invite Sethu and those two executives for a dinner. என்ன சொல்றீங்க?’

சரோஜா முகத்தை சுளுக்கிக் கொண்டு, ‘என்னவோ செய்ங்க.’ பதிலளித்துவிட்டு எழுந்து குளியலறையை நோக்கி செல்ல வத்ஸலா தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்தாள். ‘That’s a good idea Dad. You go ahead. We will manage.’

****

தன் குடியிருப்பில் வந்தடைந்ததும் குளித்து முடித்த பிலிப் சுந்தரம் அன்று காலையில் தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் விவாதித்த விஷயங்களை சுருக்கமாக தன்னுடைய லேப் டாப்பில் பதிந்து வைத்தார்.

எல்லா ஞாயிற்றுக்கிழமை இரவிலும் எட்டு மணிக்கு மேல் அயல் நாட்டிலிருந்த தன்னுடைய மகளுடன் தொலைப்பேசியில் பேசுவது வழக்கம்.

லேப் டாப்பை மூடிவிட்டு எழுந்து ஹாலில் இருந்த தொலைப்பேசியை அணுகவும் அவருடைய செல் ஃபோன் சிணுங்கவே யாரென்று பார்த்தார். அவருக்கு அறிமுகமில்லாத தொலைப்பேசி எண். எடுத்து தயக்கத்துடன், ‘ஹலோ பிலிப் ஹியர்’ என்றார்.

‘மிஸ்டர் ஃபிலிப் நான் மாதவன் பேசறேன்.’ என்ற குரல் வந்ததும், ‘யெஸ் சார்.’ என்றார். ‘You need any help, Sir?’

மாதவன் சிரிப்புடன், ‘இல்லை மிஸ்டர் ஃபிலிப். நீங்க ஃப்ரீயா இருந்தா ஹோட்டல் வரைக்கும் வர முடியுமா? I thought we will meet for some time.’

பிலிப் சுந்தரம் ஒரு வினாடி என்ன பதிலளிப்பதென தெரியாமல் தடுமாறினார். இவர் தன்னை மட்டுமே அழைத்திருந்தால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்தார்.

வேறு வேலையிருக்கிறதென்று தட்டிக்கழித்தாலென்ன என்று நினைத்தபோது, ‘உங்கக் கிட்ட மிஸ்டர் சேதுவோட மொபைல் நம்பர் இருக்கா? Nobody is picking the landline at his house.’ என்று மாதவன் கேட்கவே, ‘Yes sir. I’ll give you.’ என்று பதிலளித்துவிட்டு தன்னுடைய செல் ஃபோனில் சேமித்து வைத்திருந்த எண்ணை தேடிப்பிடித்து கூறினார்.

‘Thank you Mr.Philip. I have invited Mr.Sundaralingam also. He said he will come to your house to pick you up in another ten minutes.’

"Ok Sir. I will be ready.' என்று பதிலளித்துவிட்டு அவர் இணைப்பைத் துண்டிக்கும்வரை காத்திருந்த பிலிப் உடனே சுந்தரலிங்கத்தை அழைத்து விவரத்தைக் கூறினார். ‘ஆமாம் பிலிப். அவர் கூப்டும்போது எப்படி வேணாங்கறது? அதுவுமில்லாம சேதுமாதவன pacify பண்றதுக்குத்தான் இந்த ஏற்பாடுன்னு நினைக்கிறேன். சரின்னு சம்மதிக்க வேண்டியதா போச்சி.. என்ன பண்றது நாய் வேஷம் போட்ட குறைச்சித்தான ஆவணும்..? நீங்க ரெடியாயிருங்க இன்னும் பத்து நிமைஷத்துல வரேன்.’  என்ற சுந்தரலிங்கத்தின் வேண்டுகோளை ஏற்று புறப்படத் தயாரானார்.

தொடரும்..



4 comments:

G.Ragavan said...

நாய அடிக்கிறது எதையோ சுமக்குறதும்பாங்க...அந்த மாதிரி ஆய்ப்போச்சே...ம்ம்ம்...இவரோட சமாளிச்சு சரியாப் போச்சான்னு பொறுத்திருந்து பாக்கலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இதைத்தான் உயர்மட்ட மோதல் என்போம். அடிக்கறா மாதிரி அடிக்கணும். ஆனா அடிபட்டவன தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது. மன்னிப்பு கேக்கறா மாதிரி நடிக்கணும் ஆனா மன்னிப்பு கேக்கக்கூடாது..

சுந்தரலிங்கம் சொன்னா மாதிரி நாய் குலைக்கறா மாதிரி நடிக்கணும்.. ஆனா அத பாக்கறவனுக்கு நாம நடிக்கறது தெரியக்கூடாது..

இத மலையாளத்துல வேஷங்கட்டறதும்பாங்க..

siva gnanamji(#18100882083107547329) said...

//i am planning to invite sethu/
raghavanukku unga pathil nalla irukku

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

raghavanukku unga pathil nalla irukku //

அப்படியா ஹி.ஹி..

நன்றின்னு சிம்பிளா சொல்றதவிட இந்த ஹி. ஹி நல்லாருக்கு இல்லே ஜி!