29.5.06

சூரியன் 85

ஜோ அப்போல்லோ மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்து வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தனா அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.சி.யூ வார்டை நோக்கி நடந்தான்.

சவக்குழிக்குள் இறக்குவதற்கு முன்பு இறுதியாக சவப்பெட்டியை மூடுவதற்குமுன் சவமாய் கிடந்த கமலியைப் பார்த்தவர்களுள் ஜோவும் ஒருவன். கமலியின் அமைதியான, அழகான முகம் வழி நெடுக அவன் கண்முன் தெரிய கலங்கிய கண்கள் பாதையை மறைக்க எப்படித்தான் எந்த விபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் தன்னால் இருபது கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தைக் கடக்க முடிந்தது என்று மனதுக்குள் நினைத்தவாறே வார்டை நோக்கி நடந்தவன் தன் எதிரில் வந்த மருத்துவர் மீது மோதிக்கொள்ள அவர் அவனை ஏற்கனவே சந்தித்திருந்ததால் புன்னகையுடன், ‘ஏதோ நினைவில இருக்கீங்க போலருக்கு?’ என்றார்.

திடுக்கிட்டு அவரை நிமிர்ந்து பார்த்த ஜோ, ‘I am sorry Doctor. I am coming from a funeral. I was thinking about that...’ என்றான்

மருத்துவர் அவனை அனுதாபத்துடன் பார்த்தார். ‘Yes, I know. Miss Vandana told me about that.’

ஜோ வியப்புடன், ‘அவங்க எப்படியிருக்காங்க டாக்டர், நான் போய் பார்க்கலாமா?’ என்றான்.

‘Yes. She has made a substantial recovery. She is OK now. You can go and see her. But don’t tire her too much. She needs some rest.’

‘OK. Doctor, I won’t talk much.’

மருத்துவர் அவனைக் கடந்து செல்ல ஜோ உடனே வந்தனா இருந்த அறையை நோக்கி விரைந்தான்.

அதிக கவன பகுதியினுள் இருந்த மெல்லிய விளக்கொளியில்  அறைக்குள்ளிருந்த ஒவ்வொரு படுக்கைகளை சுற்றிலும் வெண்மையான திரைகள் மறைத்திருந்ததைக் கண்ட ஜோ வந்தனா படுத்திருந்த கட்டிலைக் கண்டுபிடிக்க முடியாமல் ஒரு நொடி திணறி நின்றான்.

‘உங்களுக்கு யார பாக்கணும் மிஸ்டர்?’ என்ற மெல்லிய குரல் ஒரு பகுதியிலிருந்து வரவே கண்களை சுருக்கிக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.

அழகான புன்னகையுடன் அமர்ந்திருந்த நர்சிடம், ‘மிஸ் வந்தனா’ என்று இழுத்தான்.

‘பெட் நம்பர் எட்டு.. அந்த கோடியில இருக்கு. நீங்க மட்டுந்தான வந்திருக்கீங்க?’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்.

‘அவங்க இப்ப நார்மலாத்தான் இருக்காங்க. ஆனா அதிக நேரம் பேசிக்கிட்டிருக்காதீங்க. மேக்ஸிமம் பத்து நிமிஷம்’

ஜோ சரி என்று தலையையசைத்துவிட்டு நர்ஸ் கூறிய திசையை நோக்கி நடந்தான்.

வந்தனா தன்னுடைய மிடுக்கு நடைக்கு மிகவும் பெயர் பெற்றவர் என்பது அவனுக்கு தெரியும். மடிப்பு கலையாத சேலையுடனும், தோள்வரை குலுங்கும் பாப் தலையுடனும் அவர் அலுவலகத்தில் நடந்து செல்வதே தனியழகு என்று பலர் கூற கேள்விப்பட்டிருந்த ஜோவுக்கு அவர் களையிழந்த முகத்துடன் கட்டிலில் கண்களை மூடியவாறு கிடந்த கோலம் மனதை என்னவோ செய்ய கால்மாட்டில் தயங்கி நின்றான்.

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் அடுத்த சில நிமிடங்களில் கண்களைத் திறந்த வந்தனா அவனை அடையாளம் கண்டுக்கொண்டு மெலிதாக புன்னகைத்தார். ‘Thank you so much Mr.Joe’

ஜோ சங்கடத்துடன் நெளிந்தான். வந்தனா நிலையில் இருந்து பார்த்தால் அவன் ஒரு கடைநிலை அதிகாரி. அவனுடைய வங்கியின் எச்.ஆர் தலைவர் அவர். அவருடைய ஜி.எம் பதவி ஏழாவது கிரேட் என்றால் அவனிருந்ததோ முதல் க்ரேட்.. அவர்களுடைய பதவியில் அத்தனை இடைவெளியிருந்தது.. இருந்தும் அவர் தன்னை மிஸ்டர் என்று மரியாதையுடன் அழைத்தது அவனை வியப்பில் ழ்த்தியது. அதுதான் வந்தனாவின் தனித்தன்மை என்று ஏற்கனவே அவன் அறிந்திருந்திருந்தான்.

‘நான் ஒன்னும் பெரிசா செஞ்சிரலை மேடம். நீங்க மயங்கி விழுந்தப்போ நான் அங்க இருந்ததால என்னெ நம்ம சி.எம் சார் ஒடனே ஒங்களோட அனுப்பி வச்சார்.’

வந்தனா யாசத்துடன் தலையை அசைத்தார். ‘ஃப்யூனரல் முடிஞ்சிருச்சா?’

‘ஆமாம் மேடம். ஐநூறு பேருக்கும் மேல வந்திருந்தாங்க. எங்க சர்ச்சில இப்படியொரு ஃப்யூனரல் மாஸ் நடந்து நான் பார்த்ததே இல்லைன்னு ஃபாதரே எங்கிட்ட சொன்னார்னா பாத்துக்கங்களேன்.. மாணிக்கவேல் சார்க்குன்னு அவ்வளவு மதிப்பு இருக்கு மேடம் நம்ம பேங்க்ல..’

‘தெரியும்’ என்பதுபோல தலையை மெள்ள அசைத்த வந்தனா.. ‘ராணி இப்படி இருக்காங்க?’

ஜோ ஒரு நொடி என்ன சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றான். அவனுக்கு அவனுடைய மேலாளரின் மனைவியைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும் அவருக்கு வந்தனாவைக் கண்டால் அரவே பிடிக்காது என்பதை அன்றுதான் அவன் நேரில் கண்டான். வந்தனாவை மருத்துவமனையில் சேர்க்க அவன் புறப்பட்டுக்கொண்டு செல்லும் நேரத்திலும், ‘எம் பொண்ணெ எங்கிட்டருந்து பிரிச்சிட்டு இந்த சிறுக்கி நடிக்கறத பார்த்தீங்களாய்யா..’ என்று உரத்த குரலில் அழுததை அவன் இப்போது நினைத்துப் பார்த்தான். அத்தகையவரைப் பற்றி கவலைப்படும் வந்தனாவை ஒரு புது மரியாதையுடன் பார்த்தான்.

‘அவங்க பரவாயில்லை மேடம். நீங்க அதப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. உங்கள ரொம்ப டென்ஷனாக்க வேண்டாம்னு சொல்லித்தான் டாக்டர் என்னெ உள்ள விட்டாங்க. ஒங்களுக்கு வீட்லருந்து ஏதாவது கொண்டுவரணுமான்னு சொன்னீங்கன்னா நா போய் கொண்டு வரேன்.’ என்றான் பணிவுடன்.

வந்தனா அவனை தன்னருகில் வரும்படி சைகை செய்யவே அவன்  படுக்கையருகில் இருந்த இருக்கையில் சென்றமர்ந்தான். ‘சொல்லுங்க மேடம்.’

வந்தனா தலையணையருகில் இருந்த கைப்பையை திறந்து பார்க்குமாறு சைகை காட்டவே அவன் தயக்கத்துடன் அதை எடுத்து திறந்து அவரிடமே காட்டினான்.

வந்தனா புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘உள்ளருக்கற மொபைல எடுத்துக்குங்க. வெளியே வராண்டாவிலருந்து என்னோட பி.ஏவுக்கு ஃபோன் பண்ணி காலைல என்னெ இங்க வந்து மீட் பண்ண சொல்லுங்க.. தேவிகான்னு செல்லுல இருக்கும்.. அது போறும்.. she will take care of my needs. Then you can go home. மாணிக்க வேல்கிட்ட என்னெ பத்தி ஒன்னும் கவலைப்படவேண்டாம்னு சொல்லிருங்க.. I will call him when I return home on Tuesday..’

படுக்கையிலிருந்த நேரத்திலும் தெளிவாக சிந்தித்து தன்னை அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளாமல் நின்று நிதானித்து பேசியவரை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த ஜோ சுதாரித்துக்கொண்டு, ‘சரி மேடம்’ என்ற கைப்பையிலிருந்த செல் ஃபோனை எடுத்துக்கொண்டு கைப்பையை மூடி எடுத்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

‘நம்ம புது சேர்மன் சென்னைக்கு வந்திட்டாரான்னு தெரியுமா மிஸ்டர்.ஜோ?’ என்று வந்தனா தொடர்ந்து கேட்க அவன் பதிலளிக்கும் முன்பு அங்கு வந்த நர்ஸ்.. ‘ப்ளீஸ் மேடம். Don’t strain yourself..’ என்றவாறு ஜோவை நோக்கினார். ‘மிஸ்டர்.. if you don’t mind..’

ஜோ புரிந்துக்கொண்டு நகர நர்ஸ் வந்தனாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவளுடைய இருக்கையை நோக்கி சென்றாள்.

ஜோ வெளியே சென்று வந்தனாவின் காரியதரிசிக்கு ஃபோன் செய்து தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு விவரத்தை சுருக்கமாகக் கூறினான். அவர் பதட்டத்துடன், ‘என்ன மிஸ்டர் ஜோ காலைல நடந்துருக்கு.. சாவகாசமா இப்ப சொல்றீங்க. மேடம் இப்ப எப்படியிருக்காங்க?’ என்று கோபப்பட ஜோ பொறுமையுடன் நிலமையை விளக்கிவிட்டு இந்த நேரத்தில் வந்தாலும் யாரையும் வந்தனா மேடத்தை சந்திக்க விடமாட்டார்கள் என்றும் காலையில் வந்தால் போதும் என்றான். பிறகு திரும்பிச்சென்று வந்தனாவை சந்திக்க முடியாமல் நர்சிடமே செல் ஃபோனை கொடுத்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி விரைந்தான். அவன் வாகனத்தை நெருங்கவும் அவனுடைய செல்ஃபோன் சிணுங்கவே எடுத்து திரையைப் பார்த்தான். அவனுக்கு பழக்கமில்லாத எண்.. யாராயிருக்கும் என்ற யோசனையுடன், ‘ஹலோ.. ஜோ ஹியர்.’ என்றான்.

‘ஜோ.. நாந்தான் முரளி பேசறேன்.’

ஜோ சலிப்புடன் இவன் எங்க இந்த நேரத்துல, பேசினா விடமாட்டானே..

அன்று முழுவதும் நடந்திருந்த நிகழ்ச்சிகள் அவனுடைய உடலையும் உள்ளத்தையும் ஏற்கனவே சோர்வடையச் செய்திருந்தன. வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தால் போதுமென்றிருந்தது. அவன் மருத்துவமனையிலிருந்து வீட்டை சென்றடையவே எப்படியும் அரைமணி நேரத்திற்கும் கூடுதலாகும். இந்த நேரத்தில் இவன் வேறு..

‘என்ன ஜோ பதிலையே காணோம்.. எங்கருக்கீங்க?’

ஜோ தான் இருந்த இடத்தையும் வந்தனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷயத்தையும் சுருக்கமாகக் கூறினான். சில நொடிகள் எதிர்முனையிலிருந்து பதில் வராமல் இருக்கவே செல் ஃபோனில் தன் கால்சட்டைப்பையிலிருந்த ஹேண்ட் ஃப்ரீ கேபிளை எடுத்து இணைத்து மற்றொரு முனையை காதில் செருகிக்கொண்டு செல்ஃபோனை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.  வாகனத்தை முடுக்கி சாலையில் இறங்கினான்.

‘என்ன முரளி.. ஷாக்காயிட்டீங்களா? சீரியசா ஒன்னுமில்லை.. மேடத்துக்கு ஏற்கனவே ப்ளட் ப்ரஷர் இருந்திருக்கு.. அது நம்ம மாணிக்க வேல் சாரோட டாட்டர் திடீர்னு இறந்துட்டாங்கன்னு கேட்டதும் அது ஜாஸ்தியாயிருக்கு.. மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க..’

‘என்ன ஜோ.. ஒரே ஷாக்கான நியூசா சொல்றீங்க? நம்ம நந்தக்குமார் பகல்ல கூப்ட்டு சொன்னதும் எனக்கு சட்டுன்னு யாருன்னு புரியலை.. என்ன ஆச்சி.. அந்த பொண்ணு ரொம்ப சின்ன வயசுன்னு கேள்விப்பட்டிருக்கேனே..’

ஜோ பேசிக்கொண்டே தான் சென்னை அண்ணாசாலை போக்குவரத்து சந்திப்பில் நிற்பதையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காவலர் தான் பேசுவதையே கவனிப்பதையும் கண்டதும் பேசுவதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு தலையைக் குனிந்துக்கொண்டான். சந்திப்பைக் கடந்து சிறிது தூரம் சென்றதும், ‘ஹலோ சாரி முரளி. டிராஃபிக் சிக்னல்ல கான்ஸ்டபிள்  நான் பேசிக்கிட்டிருக்கறத கவனிச்சிட்டு என்னையே பார்த்தார். இந்த நேரத்துல அவர்கிட்ட மாட்டிக்கிட்டா வேலை கெட்டுப் போயிருமேன்னுதான் நீங்க பேசினப்போ சும்மா இருக்க வேண்டியதா போச்சி.. சொல்லுங்க என்ன விஷயமா கூப்ட்டீங்க?’ என்றான்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு மறுமொழியிலிருந்து பதில் வந்தது.. ‘ஒன்னுமில்லை ஜோ.. நாளைக்கு நம்ம புது சேர்மன் வராறே.. நம்ம சக்திய காட்றா மாதிரி ஒரு லஞ்ச் டைம் டெமோ வச்சா என்னென்னு.. ஒரு ஐடியா..ஆனா மேடம் இப்பருக்கற சூழ்நிலையில இது எந்த அளவுக்கு சரியாயிருக்கும்னு தெரியலை.. நாளைக்கி நம்ம நந்தக்குமார் வந்ததும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்.. குட்நைட் ஜோ.. நாளைக்கு தேவைன்னா கூப்டறேன்..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தை செலுத்துவதில் கவனம் செலுத்த முயன்றாலும் இந்த முரளி ப்ளான் பண்ணிருக்கற டெமோவுக்கு இப்ப என்ன அவசியம்? அதுக்கு என்னெ எதுக்கு கூப்ட்டான்.. ? நாந்த்தான் எந்த வம்பு தும்பும் வேணாம்னுட்டு ஒதுங்கி இருக்கேனே... என்பதை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை..

தொடரும்..

9 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

இன்றைய சங்கவாதிகளுக்கு முரளி
ஓர் அடையளம்[தொழிற்சங்கம் எனும் சொல்லை நான் பயன்படுத்தவில்லை]

G.Ragavan said...

ம்ம்ம்....வந்தனாவுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சா....கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலைக்கு வருவாங்கன்னு நம்பலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இன்றைய சங்கவாதிகளுக்கு முரளி
ஓர் அடையளம்//

உண்மைதான். வங்கித்துறையை எடுத்துக்கொண்டால் சங்கங்களின் ஆதிக்கம் சற்று அதிகம்தான். அதுவும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கேட்கவே வேண்டாம்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

அவர்கள் ஆணவம் பிடித்தவர் போன்ற தோற்றம் இருந்தது//

பார்வைக்கு ஆணவம் பிடித்தவர் போல் தோற்றமளிக்கும் எல்லோருமே உண்மையில் மென்மையானவர்கள்தான்.. எனக்கே ஆரம்பத்தில் சக அதிகாரிகள் மத்தியில் அப்படியொரு பட்டம் இருந்தது..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலைக்கு வருவாங்கன்னு நம்பலாம்//

நிச்சயமா.. அவங்களுக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கே..

அருண்மொழி said...

ஏன் சார் இதை ஒரு மெகா சீரியலாக எடுக்கலாம் போல் இருக்குதே!!. ஜாக்கிரதை, யாராவது சுட்டு விட போகிறார்கள்.

இதுக்கு என்ன Title வைக்கலாம்?.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க arunmoli,

நாம எல்லாருமே சேர்ந்து எடுத்தா போச்சி:)

இத யார் சுடுறது.. அதான் நீங்கல்லாம் இருக்கீங்களே விட்னஸ்..

சூரியன் டைட்டில் நல்லால்லையா?

அருண்மொழி said...

//சூரியன் டைட்டில் நல்லால்லையா?//

பார்த்து சார். ஏற்கனவே MKக்கு ஓட்டுன்னு சொன்னீங்க. இப்ப "சூரியன்"!!. முத்திரை குத்திவிட போகிறார்கள் :)

டிபிஆர்.ஜோசப் said...

ஏற்கனவே MKக்கு ஓட்டுன்னு சொன்னீங்க. இப்ப "சூரியன்"!!.//

அதுலயும் விஷயம் இருக்குங்க.. அப்பத்தான் சன் டிவியில ப்ரைம் டைம் ஸ்லாட் கிடைக்கும்:)